ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து இந்திய மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்திருந்தார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற குற்றச் செயல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார். இலங்கை விவகாரம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை அமைச்சர் சிதம்பரம் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளத…
-
- 2 replies
- 434 views
-
-
பூநகரியில் டோக்கியோ சீமெந்து நிறுவனம் ஆய்வு – தொழிற்சாலை நிறுவ திட்டமா ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பூநகரி பகுதியில் சீமெந்து தொழிற்சாலை ஒன்று நிறுவப்பட உள்ளதாக வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் இன்றைய அமர்வின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , பூநகரி பொன்னவழி விநாயகர் ஆலயத்திற்கு அருகில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று சீமெந்து தொழிற்சாலையை நிறுவ ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த ஆய்வுகளுக்காக நிலங்களில் பாரிய துளையிட்டு பாரிய இயந்திரங்களை பொருத்தி நீரினை இறைக்கின்றார்கள். அவ்வாறு இறைக்க…
-
- 7 replies
- 1.1k views
-
-
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அம்மான் பெண்களுடன் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை பாராளுமன்றத்தில் படம் எடுத்த மற்றுமொரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அழகுப் பெண்களுடன் அமைச்சரை கிளிக் செய்த அமைச்சர் கருணாவை மற்றுமொரு செய்தியாளர் கிளிக் செய்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது தெற்கு ஊடகங்களில் அதிகப் பிரதிகளை விற்பனை செய்துகொள்வதற்காக பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. http://www.tamilworldtoday.com/
-
- 1 reply
- 1.2k views
-
-
மஹிந்தவின் பாரியார், மகன்களுக்கு எதிரான விசாரணைகள் தீவிரம் ஷிரந்தி,யோஷித்த சி.ஐ.டி.க்கு;ரோஹித்த எப்.சி.ஐ.டி.க்கு (எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக் ஷ மற்றும் அவர்களது புதல்வர்களான யோஷித்த ராஜபக் ஷ, ரோஹித்த ராஜபக் ஷ ஆகியோருக்கு எதிரான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி இன்று மஹிந்தவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவும், இளைய மகனான ரோஹித்த ராஜபக்ஷவிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவும் விசாரணைகளை நடாத்தவுள்ளதாகவும் நாளை இரண்டாவது மகனான யோசித்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நட…
-
- 10 replies
- 934 views
-
-
வவுனியாவில் பொலிஸாரின் ஏற்பாட்டில் மாபெரும் சிரமதானம்! வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் டி .தம்மிக்க விஜயசிறியின் ஆலோசனைக்கு அமைவாக தைத்திருநாளை முன்னிட்டு நகரில் மாபெரும் சிரமதானம் ஒன்று இன்று (செவ்வாய்க்கிழ்மை) காலை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது . தைத்திருநாளை முன்னிட்டு நகரைத் தூய்மையாக வைத்திருப்போம் எனும் கருப் பொருளில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டுள்ள சிரமதானமானது கண்டிவீதி ,ஹொறவப்பொத்தான வீதி , புகையிரத வீதி , மன்னார் வீதி போன்ற வீதிகளிலிருந்து ஆரம்பமாகி இடம்பெற்றது . வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி , வவுனியா வர்த்தகர் சங்கத்தினர், …
-
- 0 replies
- 363 views
-
-
மஹிந்த சிந்தனை2இன்று வெளியிடப்படும் வீரகேசரி நாளேடு 1/11/2010 9:31:31 AM - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனமான மஹிந்த சிந்தனை2 இன்று திங்கட்கிழமை வெளியிடப்படும். 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெளியிடப்பட்ட மஹிந்த சிந்தனையில் இதுவரைக்கும் நிவர்த்திசெய்யப்படாத செயற்திட்டங்களை உள்ளடக்கியே தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவிருக்கின்றது என்று கூட்டமைப்பு தேர்தல் பிரசார நிலையம் அறிவித்துள்ளது. தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு விழா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைப்பார்.. இந்த வைபவத்தில் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிய…
-
- 2 replies
- 1.3k views
-
-
மீன் பாடும் தேனாடாம் மட்டக்களப்பின் மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன், ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்த விவகாரம், கிழக்கு அரசியலில் புதிய உதயத்தை தோற்றுவித்துள்ளது. முழு நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களோடு இணைந்திருப்பவர், எதிர்க்கட்சி வேட்பாளரை ஆதரிப்பதற்கு மிகுந்த துணிச்சல் தேவை. மக்களின் உணர்வலைகளைப் புரிந்து கொண்ட ஒருவரால் தான் இத்தகைய முடிவினை மேற்கொள்ள முடியும். சரத்திற்கு ஆதரவு தெரிவித்தவுடன் இவருக்கு வழங்கப்பட்ட சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் அரசால் நிறுத்தப்பட்டுள்ளன. இத்தகைய பழிவாங்கல் நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் மேற்கொள்வார்களெனத் தெரிந்திருந்தும் தனது முடிவினை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இவரை அரசியலிற்குள் அழைத்து வந்தவர்கள்…
-
- 5 replies
- 724 views
-
-
தெஹிவளை பள்ளிவாசல்கள் மூடுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த முயற்சிக்கு இடமளிக்கக் கூடாது எனவும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் டி.எம். ஜயரட்னவிடம் கோரியுள்ளனர். அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசீ, ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியூதீன், பிரதி அமைச்சர்களான பைசர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி ஆகியோர், சமய விவகார அமைச்சரும், பிரதமருமான டி.எம். ஜயரட்னவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தெஹிவளையில் அமைந்துள்ள சில பள்ளிவாசல்களை மூட முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். தெஹிவளையில், மூன்று பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர். பள்ளிவாசல்களை மூடும் முனைப்புக்களின் பின்னணியில் கடும்போக்குடைய சக்திகள் இயங்கி …
-
- 0 replies
- 353 views
-
-
தொடருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு! – சுன்னாகத்தில் சம்பவம்!! காங்கேசன் துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து சற்று முன்னர் சுன்னாகம் தொடருந்து நிலையத்துக்கு அருகில் நடந்துள்ளது. இளைஞர் சம்பவ இடத்திலேயே தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் சுன்னாகம் தொடருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. http://newuthayan.com/story/22626.html
-
- 1 reply
- 286 views
-
-
உயிரை கொடுத்தும் நாட்டின் மக்களை காப்பாற்றுவேன். நாட்டின் ஐக்கியத்திற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவிக்கின்றார்.மாத்தறை சனத் ஜெயசூரிய மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்த சரத் பொன்சேகாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக் கப்பட்டது.ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கும் கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரத்நாயக்க மற்றும் தென்மாகாண எதிர்க்கட்சித் தலைவர் புத்திக பத்திர ஆகியோர் உள்ளிட்ட பலர் இந்தத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண் டனர். தாம் நாட்டை நேசிப்பதுடன் நாட்டின் இறை மையை பாதுகாப்பதாகவும்…
-
- 3 replies
- 1k views
-
-
சட்டத்தைக் கொண்டு மட்டும் போதைப் பொருள் வர்த்தகத்தை தடுக்க முடியாது என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். போதைப் பொருள் பயன்பாடு மற்றும் வர்த்தகத்தை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். பாடசாலைகளிலேயே மாணவர்களின் நல்லொழுக்கத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறும் சட்டங்களைக் கொண்டு மட்டும் அரசாங்கத்தினால் போதைப் பொருள் வர்த்தகத்தை தடுக்க முடியாது என பிரதமர் தெரிவித்துள்ளார். களுத்துறையில் நடைபெற்ற சுனாமின நினைவு நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=100023&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 390 views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண ஒன்றிணைய அழைப்பு யுத்தத்தின் கோரத்தழும்புகளாக மாறியிருக்கும் காணாமல்போனோர் பிரச்சினை, நீண்டகாலமாக சிறைகளில் வாடிக்கிடக்கும் அப்பாவி இளைஞர்களின் விடுதலை, காணிகளைப் பறிகொடுத்து வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களின் அவலம் போன்ற இன்னோரன்ன தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக கட்சி, பிரதேச, இனவேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அழைப்பு விடுத்துள்ளார். உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக செயற்படுத்தப்படும் ‘நிலமெவகர’ ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டம், முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதே…
-
- 0 replies
- 211 views
-
-
(எம்.ஆர்.எம். வசீம்,இராஜதுரை ஹஷான்) நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டதை தொடர்ந்து மருந்து பொருட்கள் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் மருந்து தட்டுப்பாடு தீவிரமடைந்து, பல நோயாளிகள் மருந்தில்லாமல் உயிரிழக்க நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தும் அதிகார சபை சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். தற்போதைய சூழ்நிலைமையில் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளது. அத்தியாவசிய உணவு பொ…
-
- 1 reply
- 283 views
- 1 follower
-
-
யாழ் சிறைச்சாலையில் பெண்ணொருவர் செய்த செயலால் வசமாக மாட்டுப்பட்டார்! சவர்க்காரத்திற்குள் வைத்து கஞ்சா கொண்டு சென்ற குடும்பப் பெண்ணொருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்ணொருவரே சிறைச்சாலை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள தனது கணவரைப் பார்க்கச் சென்றபோது சிறைச்சாலை அதிகாரிகளின் பரிசோதனைக்கு முகம்கொடுத்துள்ளார். இதன் போது அவர் கொண்டுவந்த சவர்க்காரத்தினுள் கஞ்சா இருப்பது சிறைச்சாலை அதிகாரிகளுக்குத் தெரியவந்துள்ளது. இதனால் குறித்த பெண், சிறைச்சாலை அதிகாரிகளினால் கைதுச…
-
- 21 replies
- 1.7k views
- 1 follower
-
-
இனிமேலும் அமைதியாக இருக்கமாட்டேன் – கோத்தா எச்சரிக்கை நாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் போது நான் தொடர்ந்தும் அமைதியாக இருக்கமாட்டேன் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார். பொரலஸ்கமுவவில் நேற்று, எலிய என்ற அமைப்பை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கோத்தாபய ராஜபக்ச தலைமையில், ‘எலிய- ஒளிமயமான அபிலாசைகள்’ என்ற பெயரிலான புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பொரலஸ்கமுவவில் உள்ள விடுதி ஒன்றில் நேற்றுமாலை இந்த அமைப்பின் தொடக்கவிழா இடம்பெற்றது. இந்த நிகழ்வில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர்களான சமல் ராஜபக்ச, பசில…
-
- 3 replies
- 587 views
-
-
சக்தி டிவி செய்திகள் 11 09 2017 , 8PM
-
- 0 replies
- 306 views
-
-
உழவர் திருநாளாம் தைத்திருநாளை வெடி ஓசை வானைப்பிளக்க மிகவும் உற்சாகத்துடன் மக்கள் பொங்கல் பானை ஏற்றி பொங்கல் பொங்கியமையை இன்று பல்வேறு பகுதியிலும் காணக்கூடியதாக இருந்தது. விவசாயிகள் அனைவரும் வயலில் விளைந்த அரிசியில் இன்றைய தினம் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு படையலிட்டு நன்றி செலுத்துவர். அதன்படி வீடுகள், ஆலயங்கள்,வியாபார நிலையங்கள், வேலைத்தளங்கள் மற்றும் பொது இடங்களிலும் மக்கள் பொங்கல் செய்வது வழக்கம். அதற்கமைய இன்றைய தைத்திருநாளிலும் பல்வேறு இடங்களிலும் கோலாகலமாக பொங்கல் விழா இடம்பெற்றது. இதேவேளை, ஆலயங்களிலும் விசேடவழிபாடுகளும் ரதோற்சவமும் இடம்பெற்றன. மேலும் வழமைக்கு மாறாக இம்முறை வெடி ஓசை வானைப்பிளக்க மிகவும் உற்சாகமாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. …
-
- 6 replies
- 942 views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 02.03.2010 அன்று ஒலிபரப்பாகிய யாழ்ப்பாணச் செய்தியாளரின் கருத்தாய்வு http://www.yarl.com/articles/files/100302_eraa_thurairatnam.mp3
-
- 0 replies
- 700 views
-
-
யாழ் உதயன் பத்திரிகையில் இளைய தளபதி விஜய்யின் ஜில்லா படத்திற்கான விமர்சனம் தவறான முறையில் எழுதப்பட்டிருந்தது. இதைக் கண்டித்து இன்றைய தினம் யாழ். உதயன் பத்திரிகை காரியாலத்திற்கு முன் கூடிய விஜய் ரசிகர்கள் யாழ்ப்பாண மாப்பிள்ளை விஜய்யிடம் உதயன் மன்னிப்பு கேட்குமாறு கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊடகவியலாளர்கள் தங்களது சுய விருப்பு வெறுப்புக்களை கருத்தில் கொள்ளாமல் நேர்மையான கருத்துக்களை வெளியிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=101898&category=EntertainmentNews&language=tamil
-
- 37 replies
- 4.4k views
-
-
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஒரு நல்ல தேசபக்தர் மற்றும் தனது நாட்டை மிகவும் நேசிக்கிறார், பிரச்சினை என்னவென்றால், அவரது நாடு இலங்கை அல்ல அமெரிக்கா என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மஹரகம ஜனசபையில் உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “எங்களுக்கு ஒரு பிரச்சினை உள்ளது. நிதியமைச்சரின் சகோதரர் ஜனாதிபதி மற்றும் மற்றொரு சகோதரர் பிரதமர். நிதியமைச்சர் வேண்டுமென்றே இந்த நாட்டை ஏன் வீழ்த்துகிறார்? தன் சகோதரர்களை சிக்கலில் தள்ளுகிறார்? பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது. “இலங்கையில் சோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமெரிக்கா முயற்சித்தது. சாலையில் சென்று நின்றோம். எம்.சி.சி ஒப்பந்தத்தில் கைச்…
-
- 0 replies
- 335 views
-
-
தடுத்துவைக்கப்பட்டோர் மீது சித்திரவதை! தமிழ் நாட்டுக்கு தப்பிவந்த மூன்று பேர் கடந்த வருடத்தில் தாயகத்தில் நடைபெற்ற பேரழிவு நடைபெற்று நீண்ட நாளைக்கு பின்னர் மூன்று தமிழ் அகதிகள் இந்தியாவுக்கு இன்று சென்றடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத்தினரின் கொடுமையான சித்திரவதைகளை தாங்கமுடியாமல் தப்பியோடி வந்ததாக இவர்கள் தெரிவித்துள்ளனர். சுமித்குமார் கஜன் தர்மசீலன் ஆகிய யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்ட மூன்று பேரே இவ்வாறு படகு மூலம் தமிழ்நாட்டை சென்றடைந்தனர். தமிழ்நாட்டு காவல்துறையினரின் விசாரணைகளின் பின்னர் இவர்கள் மண்டபம் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சிறிலங்கா இராணுவத்தினரின் தாங்க முடியாத சித்திரவதைகள் காரணமாகவே தாம் தப்பியோடி வந்துள்ளதாகவும்,…
-
- 3 replies
- 992 views
-
-
ஸ்ரீலங்காவில் தொடரும் சித்திரவதை : யாழ். சிறையில் கைதி மீது தாக்குதல் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மீது சிறைச்சாலை அதிகாரிகள் கடுமையாக தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட கைதியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சிறைச்சாலை அதிகாரிகளினால் தாக்கப்பட்ட கைதி புத்தளத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. குற்றச் செயல் ஒன்றிற்காக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த கைதி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்…
-
- 0 replies
- 766 views
-
-
இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் நிலவும் உள்ளக முரண்பாடு ஒன்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்பாக வெளிப்பட்ட சுவாரஸ்ய சம்பவம் நடந்தது. ஜனாதிபதி கோட்டாபயவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான தமிழ் அரசு கட்சி, புளொட் என்பனவற்றிற்கும் இடையில் நேற்று நடந்த கலந்துரையாடலில் இந்த சம்பவம் நடந்தது. இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் நடக்கும் கலந்துரையாடல்கள் பலவற்றில், எம்.ஏ.சுமந்திரனின் சில நடவடிக்கைகளை, அணுகுமுறைகளை சுட்டிக்காட்டி, கண்டித்து வருபவர் சி.சிறிதரன். குறிப்பாக, தன்னை மையப்படுத்திய சுமந்திரனின் நடவடிக்கைகள், தானே அனைத்தையும் செய்வதை போன்ற தோற்றத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை கட்சியின் உள்ளக கூட்டங்களில் சிறிதரன் சுட்டிக்காட்டி வந்…
-
- 0 replies
- 284 views
-
-
சமூக வலைத்தள முடக்கத்தை... நீக்குமாறு, இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு கோரிக்கை! சமூக வலைத்தள முடக்கத்தை நீக்குமாறு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. மின் துண்டிப்பு தொடர்பில் நுகர்வோருக்கு தகவல்களை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் உடன் அமுலாகும் வகையில் சமூக வலைத்தளங்கள் மீதான முடக்கத்தை நீக்கி, செயற்பாட்டை மீள ஆரம்பிக்குமாறு தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் அனைத்து கைப்பேசி சேவை வழங்குநர்களிடம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க சமூக வலைத்தளங்களின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் இன்று காலை அறிவித்திருந்தா…
-
- 0 replies
- 168 views
-
-
திங்களும்... நாடாளுமன்றை கூட்டுங்கள் – ரணில் கோரிக்கை நாடாளுமன்றத்தை எதிர்வரும் திங்கட்கிழமை கூட்டுமாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் தீர்மானங்களை எடுப்பதில் நாடாளுமன்றம் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் என குறிப்பிட்டார். அவரது இந்த கருத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜயதாச ராஜபக்ஷ மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். https://athavannews.com/2022/1275827
-
- 0 replies
- 124 views
-