ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
08 DEC, 2023 | 05:43 PM (எம்.மனோசித்ரா) இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திர முறைமையின் கீழ் இலங்கை கடலுக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குமாறு இந்தியா யோசனையொன்றை முன்வைத்துள்ளது. எனினும் இது தொடர்பில் உடன்படிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் கடந்த ஆண்டு கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் வரையறுக்கப்பட்டளவில் அனுமதி…
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறும், தோட்டத் தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் ரூ.1700 வழங்குதல் அல்லது அதிகரிக்கப்படும் சம்பளம் குறித்து டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் அறியத்தருமாறு, ஜனாதிபதி தோட்டக் கம்பனி பிரதானிகளுக்கு பணிப்புரை வழங்கினார். பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் பிரகாரம் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் தமது வேலைத்திட்டங்களை எவ்வாறு தயாரிப்பது என்பதை அறிந்து கொள்வதற்காகவே இந்தக்…
-
- 5 replies
- 736 views
- 1 follower
-
-
உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிலைமாறுகால நீதி மற்றும் யுத்தத்திற்கு பின்னரான நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட ஆணைக்குழு பாராளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவப்படுவதோடு, சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்தாலோசித்து குறித்த சட்டமூலம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், சட்டமூலம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் இலங்கை பிரஜைகளி…
-
- 0 replies
- 146 views
- 1 follower
-
-
உள்நாட்டு கறுவாப்பட்டைக்கு சீன சந்தையில் அதிக கேள்வி நிலவுகின்றது. இதனால் வருடாந்தம் இரண்டு பில்லியன் டொலர் பெறுமதியான கறுவாவை சீனாவிற்கு அடுத்த வருட தொடக்கத்தில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இந்த ஏற்றுமதியானது நாட்டின் கறுவா சந்தைக்கு பெரும் அனுகூலமாகும் என கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜனக்க லிந்தர தெரிவித்துள்ளார். பல வருடங்களாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் பலனாக அண்மையில் ஜனாதிபதியின் சீன விஜயத்தின்போது இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/284112
-
- 0 replies
- 266 views
- 1 follower
-
-
பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் அண்ணன் உயிரிழப்பு, தங்கை படுகாயம்! பூசாரியொருவர் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு, மாங்கேணி பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியில் பேய்,பிசாசு, ஆவிகளை விரட்டியடிக்கும் நடவடிக்கைகள் இடம் பெற்றுவருவதாகக் கூறப்படும் ஆலயமொன்றிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. சம்பவ தினமான நேற்று முன்தினம் குறித்த பூசாரியிடம் அண்ணன், தங்கை என இருவர் சென்றுள்ள நிலையில் குறித்த பூசாரி இருவரையும் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் படுகாயமடைந்த அண்ணன் உயிரிழந்துள்ள நிலையில் தங்கை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனக் கூறப்படுகின்றது.…
-
- 36 replies
- 3k views
-
-
வடக்கிற்கு அனுப்பப்பட்ட 30,000 Kg சீனி திருப்பி அனுப்பப்பட்டது! வட மாகாணத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு 80,000 கிலோகிராம் சீனி அனுப்பப்பட்டிருந்த அதில் தரமற்றதாகக் கருதப்படும் 30,000 கிலோகிராம் சீனி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 320 ரூபாவிற்கு சீனி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வட மாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடற்தொழில் அமைச்சரிடம் உறுதியளித்திருந்தார். அத்துடன் கிடைக்கும் சீனியை கூட்டுறவு சங்கங்கள் மூலம் 280 ரூபாவிற்கு மக்களிற்கு வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில் சீன…
-
- 1 reply
- 390 views
-
-
இமயமலைப் பிரகடனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிப்பு! இமயமலைப் பிரகடனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் உறுப்பினர்களினாலேயே இது கையளிக்கப்பட்டது. இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மறுசீரமைப்பு, சமூக நலன் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மையமாகக் கொண்ட 06 முக்கிய விடயங்களை இமயமலைப் பிரகடனம் உள்ளடக்கியுள்ளது. இந்த பிரகடனத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததன் பின்னர் இது தொடர்பாக மூன்று நிகாயக்களின் தலைமைத் தேரர்களுடன் கலந்துரையாடுவதாகவும், ஏனைய மதத் தலைவர்களுக்கும் இது குறித்து அறிவிக்கவுள்ளதாகவும் சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தே…
-
- 12 replies
- 1.4k views
-
-
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ஆறு புதிய பாரந்தூக்கிகளைப் பயன்படுத்தி கொள்கலன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர தெரிவித்தார். கிழக்கு முனையத்தின் 80 வீதமான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார். 825 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கட்டுமானத்திற்காக செலவிடப்படுகிறது. கிழக்கு முனையமானது வருடாந்தம் 2 மில்லியன் கொள்கலன்களை இயக்கும் திறன் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/284102
-
- 0 replies
- 168 views
- 1 follower
-
-
இரண்டு இந்திய மற்றும் இலங்கை நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சிக்காக தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான அனைத்து பண்ணைகளையும் குத்தகைக்கு வழங்குவதற்கான திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அதன்படி, தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான 32,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட32 பண்ணைகள் குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன. மேலும் விலங்குகள் மற்றும் நிலங்களின் மதிப்பீடு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவின் அமுல் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று கண்காணிப்புச் சுற்றுப்பயணத்திற்காக சம்பந்தப்பட்ட பண்ணைகளுக்குச் சென்றதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இந்நாட்டில் கால்நடை உற்பத்தியை அதிகரிப்பதற்காக NLDB மற்றும் Milco ஆகிய நிறுவனங்கள் பல வருடங்களுக்கு முன்னர் ஸ்…
-
- 5 replies
- 407 views
- 1 follower
-
-
சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை கருத்தில் கொண்டு “லன்ச் ஷீட்” பயன்பாட்டிற்கு தடை விதிக்க மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையில் அண்மையில் கூடிய சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவில் இந்தப் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் லன்ச் ஷீட் பாவனையால் ஏற்படும் சுற்றுச் சூழல் கேடு குறித்தும், “phthalates” என்ற புற்று நோய் மனித உயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நீண்ட விவாதம் நடைபெற்றது. இதன்படி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை கருத்தில் கொண்டு, லன்ச் ஷீட்ட…
-
- 0 replies
- 479 views
- 1 follower
-
-
08 DEC, 2023 | 12:14 PM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கு மாகாணம் நெடுந்தீவுக்கு வருகை தருவதாக போக்குவரத்து அமைச்சர் குறிப்பிடுவது முக்கியமானது. அவ்வாறு வருகை தரும் போது அவர் கடற்படையின் படகை பயன்படுத்த கூடாது. பொதுமக்கள் பயன்படுத்தும் படகை பயன்படுத்த வேண்டும். அதேபோல் நெடுந்தீவுக்கு சென்றதன் பின்னர் முச்சக்கர வண்டியை பயன்படுத்த வேண்டும். அப்போது தான் உண்மை பிரச்சினை அவருக்கு விளங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் போக்குவரத்து அமைச்சரிடம் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது எஸ்.ஸ்ரீதரன் முன்வ…
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
நிதி வேண்டாம் – நீதியே வேண்டும்! வடக்கு கிழக்கில் போராட்டத்திற்கு அழைப்பு! adminDecember 8, 2023 குறுகிய காலத்துக்குள் ராஜபக்சக்களுக்கு தீர்ப்பளித்த நீதித்துறை சாட்சியங்களோடு உள்ள தம்மை கண்டுகொள்ளவில்லை எனவும், நீதி பெற்று தருவதை வலியுறுத்தி 10ம் திகதி மனித உரிமை தினத்தன்று நடைபெறும் போராட்டத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்து போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 13 வருடங்களிற்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி வருவதுடன்,…
-
- 0 replies
- 169 views
-
-
தமிழ் பாடசாலைகளில் ஆசிரியர்கள் போதுமானளவு இருக்கிறார்களா? பாராளுமன்றத்தில், தமிழ் பாடசாலைகளில், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை கடுமையாக நிலவுகிறது என்று சொன்னேன். மலையக பல்கலைகழகம் கட்டாயம் வேண்டும். ஆனால், அதற்கு முன் நமது மாணவர் பல்கலை செல்வதற்கான ‘கல்வி பாதையை’ வெட்டுவோம் என்றும் சொன்னேன். அதுதான் மேலே சொன்ன பாட விதானங்களுக்கான விசேட தமிழ் மொழிமூல ஆசிரியர் பயிற்சி கலாசாலை என்றும் சொன்னேன். எனது கருத்துகள் சரியா? பிழையா? என தமிழ் பாடசாலை அதிபர்கள் முதலில் பதில் சொல்லட்டும். அதையடுத்து, அரசாங்க பாடசாலைகளுக்கு தம் பிள்ளைகளை நம்…
-
- 0 replies
- 175 views
-
-
Published By: VISHNU. 07 DEC, 2023 | 07:22 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) புலம்பெயர் அமைப்புக்களிலும், சர்வதேச சமூகத்திலும் ஒருசிலர் பிரிவினைவாதத்தை தூண்டிவிடுகிறார்கள். பிரிவினைவாதத்தை தாம் ஆதரிப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள். இவ்வாறான கொள்கையுடன் எம்மால் இணங்க முடியாது என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியத…
-
- 3 replies
- 481 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையிலுள்ள சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்திருக்கிறார். நேற்று (புதன், டிசம்பர் 6) இலங்கை நாடாளுமன்றத்தில் சிறப்பு உரையொன்றை நிகழ்த்திய போது அவர் இதனைக் குறிப்பிட்டார். அநுராதபுரம் மாவட்டத்தில் மாத்திரம் 117 சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அத்துடன், பொலன்னறுவை நகரில் சோழர்களினால் நிர்மாணிக்கப்பட்ட சிவன் ஆலயத்தை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறிய அவர், தமிழர் பகுதிகளில் பௌத்த விக…
-
- 0 replies
- 693 views
- 1 follower
-
-
மத்தள சர்வதேச விமான நிலையம் இந்தியாவிடம் ஒப்படைப்பு? ஹம்பாந்தோட்டை – மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய – இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன் சந்திர கூறியுள்ளார். அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் குறித்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில் மத்தள விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் குறித்த நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளது. அங்கு பணியாற்றும் விமான நிலைய ஊழியர்களுக்கான சம்பளமும் அந்நிறுவனத்தின் ஊடாக வழங்க திட்டமிட்டுள்ளது மேலும் இந்த திட்டத…
-
- 9 replies
- 1.1k views
-
-
கல்முனையில் உள்ள சிறுவர் தடுப்பு நிலையத்தில் வைத்து அண்மையில் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில் சம்பவம் தொடர்பில் விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது. இந்த வார தொடக்கத்தில், சிறுவனின் மரணம் தொடர்பாக குழந்தைகள் தடுப்பு மையத்தின் பாதுகாவலர் டிசம்பர் 15 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிறுவனைத் தாக்கியதாகக் கூறி கல்முனைப் பொலிஸில் சரணடைந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்ட…
-
- 1 reply
- 272 views
- 1 follower
-
-
அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட ரோபோ தொழில்நுட்ப தேசிய மட்ட போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரியை சேர்ந்த மாணவன் கிருபாகரன் கரல்ட் பிரணவன் தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்தை பெற்றுள்ளார். அத்துடன் மாகாணம் மற்றும் வலய மட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார். இவரது கண்டுபிடிப்பான Relief attempt monitoring system கிளிநொச்சி மத்திய கல்லூரியில் பொருத்தப்பட்டு வெற்றி கரமாக செயல்படுத்தபடுகின்றது. https://thinakkural.lk/article/283958
-
- 0 replies
- 383 views
- 1 follower
-
-
யாழில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் யாழ் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு நேற்றைய தினம் (06) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், சிறப்பு விருந்தினர்களாக சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் அகல்யா செகராசா, தினகரன் நாளிதழின் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர் சிவகெங்காதரன், சங்கவி பிலிம்ஸ் & சங்கவி தியேட்டர் பணிப்பாளர் Dr.துரைராசா சுரேஸ், வட மாகாண கைத்தொழில் அபிவிருத்தி சங்கத் தலைவர் தம்பிரா…
-
- 0 replies
- 382 views
-
-
வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் எமது வளங்களை நாட்டுக்கு மீண்டும் கொண்டுவர பொறிமுறை ஏற்படுத்த வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டு வளங்களை திருடி வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சொத்துக்களை நாட்டுக்கு மீண்டும் கொண்டுவர முடியுமான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் தொழிலட மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் …
-
- 2 replies
- 315 views
-
-
புலிகள் பற்றி பேச சாணக்கியனுக்கு உரிமையில்லை - சாமர சம்பத் (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றி பேசுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் 9 எம்.பிக்களுக்கு மாத்திரமே உரிமையுண்டு. சாணக்கியனுக்கு உரிமையில்லை. ஏனெனில், அவரது செயற்பாடுகளும் உறவுகளும் சிங்களவர்களுடன் தொடர்புபட்டுள்ளது. இவர் சிங்கள பெண்ணை மணக்கவுள்ளார் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (07) இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய சாணக்கியன் இராசமாண…
-
- 2 replies
- 423 views
-
-
இருதரப்பு பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் இலங்கையும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தை இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் சர்வதேச தகவல் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெற்றதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தலைமையில் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு சபையின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ் மற்றும் நீதி, சிறைச்சாலை விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர். அலெக்சாண்டர் நிகோலாவிச் மற்றும் துணைச் செயலாளர் ஒலெக் விளாடிமிரோவிச் ஆகியோர் அடங்கிய ரஷ்ய…
-
- 0 replies
- 265 views
-
-
Published By: RAJEEBAN 07 DEC, 2023 | 11:26 AM 1983 முதல் 2009 வரையான உள்நாட்டு போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தமைக்காக இலங்கை அதிகாரிகள் நாட்டின் துஸ்பிரயோக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 9 தமிழர்களை தடுத்துவைத்துள்ளனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தனது சர்வதேசசகாக்கள் வர்த்தக சகாக்கள் ஐக்கியநாடுகள் ஆகியவர்களுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடப்போவதாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவித்து வந்துள்ளதுஇஎன சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இந்த சட்டம் நீண்டகாலமாகசிறுபான்மை சமூகத்தினர் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை தடுத்துவைத்து சித்திரவதை செய…
-
- 2 replies
- 474 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 07 DEC, 2023 | 02:40 PM (லியோ நிரோஷ தர்ஷன்) நல்லிணக்க செயல்முறைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவும் வகையில் சுரேன் சுரேந்திரன் தலைமையிலான உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் சுரேன் சுரேந்திரன் குழுவினர் சந்தித்து கலந்துரையாட உள்ளனர். அத்துடன், அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மஹா நாயக்க தேரர்களையும் சந்தித்து கலந்துரையாட உள்ளதுடன், சிவில் சமூகத்தினைரையும் சந்திக்க உள்ளனர். இதன் பிரகாரம் தேசிய சமாதான பேரவையுடனான சந்திப்பு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. இதேவேளை வடக்குக்கு …
-
- 131 replies
- 11.7k views
- 2 followers
-
-
07 DEC, 2023 | 02:17 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் ஜஹ்ரான் குழுவினர் ஒத்திகை தாக்குதலொன்றை மேற்கொண்டனர், இந்த ஒத்திகை குறித்து சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளிற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்வியொன்றிற்கு பதில் அளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்பாக ஏப்பிரல் 16 ம் திகதி ஜஹ்ரான் குழுவினர் தாழங்குடாவில் ஒத்திகையில் ஈடுபட்டனர். இது குறித்து சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளிற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது என அமைச்சர் தெரிவித்துள்ளார். தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜயவர்த்தன இது குறித்து அப்போதைய…
-
- 1 reply
- 223 views
- 1 follower
-