Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. http://www.youtube.com/watch?v=NGE3yTKWMuo&feature=player_embedded#at=1061 http://www.youtube.com/watch?v=uVGLfmh1x3k&feature=related http://www.youtube.com/watch?v=aCyeqg_UVGc&feature=related http://www.youtube.com/watch?v=YKl8OUN02pA&feature=related http://www.youtube.com/watch?v=6UCdn8Us9Jw&feature=related http://www.youtube.com/watch?v=ZyMW-5GvIfU&feature=related http://www.youtube.com/watch?v=5d5iwjQC3BI&feature=related http://www.youtube.com/watch?v=ld0yG8ysGmk&feature=related http://www.youtube.com/watch?v=3NWUnXGiRpw&feature=related http://www.youtube.com/watch?v=xtZRSZT_19I&feature=related

    • 0 replies
    • 906 views
  2. பிரசுரித்தவர்: Sukkran June 1, 2011 கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களில் கடந்த சில நாள்களாக இராணுவத்தினர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் பிரதேசங்களிலும் இராணுவத்தினரின் இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை அடுத்தே இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. இந்த நடவடிக்கையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. source:Mykathiravan.

  3. சிங்கள இனவாதம் முப்பது ஆண்டுகளின் முன் நடந்திய மிகப்பெரும் படுகொலையாக... நூலகம் 1981 இல் எரிக்கப்படும் முன்னர் இருந்த தோற்றம் யாழ் பொது நூலகம் மே 31, 1981 எரியூட்டப்பட்ட பின்னரான தோற்றம் 31.மே.1981 அரைநூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருந்த தமிழர்தம் அறிவுச்சுரங்கமான யாழ்நூலகமானது சிங்களக்காடைத்தன அரசால் திட்டுமிட்டு நடாத்தப்பட்ட இனக்கருவறுப்பு நாசவேலையாகும். 30 ஆண்டுகளின் முன் இதே நாளில் எத்தனைபேர் இந்த நூலகத்தை தமது அறிவுத்தேடலுக்காகத் தழுவியிருப்பீர்கள். ஆசிய வட்டகையில் சிறந்ததொரு நூலகமாக இருந்த எமது பொக்கிசத்தைப் பொசுக்கியவர்கள் அதற்காக வருந்தியதே கிடையாது. தமிழினம் தனது வரல…

  4. பிரசுரித்தவர்: Sukkran June 1, 2011 கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுப் பதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமைகளை மீறும் வகையில் அதிகாரிகள் செயற்பட்டுள்ளார்களா என்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என ஆணைக்குழுவின் செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சி ஹோவா தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் குறித்த பிரிவுகளுக்கு ஆணைக் குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கட்டுநாயக்க ஆர்ப்பாட்டம் தொடர்பில், மனித உரிமை கள் ஆணைக்குழுவிற்கு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட தாகவும் அதன் செயலாளர் தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள மனித…

  5. பிரசுரித்தவர்: Sukkran June 1, 2011 எனது உயிருக்கும், எனது குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுமே ஏற்கவேண்டும்.இவ்வாறு இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத்பொன்சேகா நேற்று மேல்நீதிமன்றில் தெரிவித்தார். வெள்ளைக்கொடி விவகார வழக்கு மேல்நீதிமன்றில் நீதியரசர்களான தீபாலி விஜேசுந்தர, எச்.என். பி.பி. வராவௌ, சர்பிக் ரஷீக் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பிரதிவாதி சரத்பொன்சேகா தனது சாட்சியமளிப்பை நேற்றுடன் முடித்துக் கொண்டார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைய வரும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்புச் செயலாளர் க…

  6. 01 ஜூன் 2011 ஜனநாயகத்தை சவாலுக்கு உட்படுத்தி, அதிகாரமும், பலவந்தமும் தற்போது நாட்டில்.. சரியான ஜனநாயகம் இலங்கையில் செயற்படுத்தப்படுகிறதா என்பது கேள்விகுறியானது என ஜனாதிபதியின் சர்வதேச விவகார ஆலோசகரும் முன்னாள் அமைச்சருமான மிலிந்த மொரகொட சிங்கள பத்திரிகை ஒன்று வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை சவாலுக்கு உட்படுத்தி, அதிகாரமும், பலவந்தமும் தற்போது நாட்டில் பரவி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஆட்சியாளர்கள், பொது மக்கள் மற்றும் ஏனைய தரப்புகளுடன் இணைந்து, எதிர்கால பயணம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானங்களை எடுப்பதே உண்மையான ஜனநாயகம் எனவும் மிலிந்த மொரகொட சுட்டிக்காட்டியுள்ளார்.

  7. Posted by சோபிதா on 01/06/2011 in செய்தி தனியார் ஓய்வூதிய திட்டத்துக்கு எதிராக கட்டுநாயக்க வானூர்தி நிலையத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு பொலிஸார் மீது பலி சுமத்தக்கூடாது எனவும், இதற்கு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே முழுமையாக பொறுப்பு கூறவேண்டும் எனவும் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வெள்ளைக் கொடி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச்சென்ற சரத் பொன்சேகா ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனை குறிப்பிட்டுள்ளார். அப்பாவி மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இதற்கு முழுமையாக பாதுகாப்பு அமைச்சும் பாதுகாப்பு செயலாளருமே பொறுப்பேற்க வ…

  8. தமிழீழ விடுதலை பற்றிய உங்களது தற்போதய மனநிலை என்ன? 31 may 20011 தமிழீழத்தில் ஈடுபாடு உள்ள தமிழர்களின் எண்ணிக்கை = 63 பார்வையாளர்களாக மட்டும் இருக்கவிரும்பும் தமிழர்களின் எண்ணிகை =2,435

  9. 2010 ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் இடாப்பு யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளரால் நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. இதில் யாழ். மாவட்டத்தில் மொத்தமாக 4 லட்சத்து 84 ஆயிரத்து 791 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதன்படி 2010 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 214 பேரினது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியில் 21 ஆயிரத்து 459 வாக்காளர்களும், வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியில் 44 ஆயிரத்து 196 வாக்களார்களும் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 67 ஆயிரத்து 898 வாக்காளர்களும் மானிப்பாய் தேர்தல் தொகுதியில் 49 ஆயிரத்து 280 வாக்காளர்களும் கோப்பாய் தேர்தல் தொகுதியில் 50 ஆயிரத்து 653 வாக்காளர்களும் உடுப்பிட்டி தேர்தல்…

  10. புதன், 01 ஜூன் 2011 20:30 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் கடந்த கால செயல்பாடுகளையும் கட்டமைப்பு வளர்ச்சியினையும் போற்றிப் புகழ்ந்து உரையாற்றினார் இலங்கை தேசிய பாதுகாப்பு பிரிவின் தற்போதைய பணிப்பாளர் நாயகமாக திகழும் முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் கபில கெந்தவிதாரண. தான் கடந்த 30 வருடங்களுக்கு முன்னார் சாதாரண ஒரு சிப்பாயாக இலங்கை படையில் இணைத்ததாகவும் இன்று இந்த பதவி உயர்வுகளை பெற்று பல ஜனாதிபதிகள், பல அமைச்சர்கள், பல பாராளுமன்ற உறுப்பினர்கள், பல அரசியல்வாதிகளை கடந்து தான் இந் நிலைக்கு வளர்ச்சியடைந்ததாகத் தெரிவித்தார். தனது இந்த அபார வளர்ச்சிக்கு மிகப் பெரிய காரணமாக அமைந்தது புலிகளின் வளர்ச்சியே என ஆணித்தரமாகத் தெரிவித்து தன்னிறைவடைந்தார். …

  11. நாலாவது வன்னிப்போரை நடத்துவதிலும், தமிழினத்தை அழிப்பதிலும் அவர்களுக்குள் இணைப்பு இருந்தது. ஆனால் அதன்பிறகு, அவர்கள் தங்களுக்குள்ளே “பனிப்போர்” நடத்தத் தொடங்கினர்.அதுவே ” பழிப்போர் ” ஆக மாறியது. ஒருவரை ஒருவர் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தாக்கிக் கொண்டனர். குடும்பக் கழகத்திற்குள்ளே இந்த” கூத்து ” நடந்தது. குடுமத் தலைவர் அவ்வப்போது, “பலியாடுகளுக்கு” வக்காலத்து வாங்கி வந்தார்.” பலியாடுகள் ” இரண்டும், ” பட்டி” யில் அடைக்கப்பட்டன. ” ஆடுகளைப் பார்க்க “ ஊடக பெருச்சாளிகள், தங்கள் குடும்ப ” ஓநாய்களை” அனுப்பி வைத்தன. ஓநாய்களும் பறந்து சென்று அங்கே ” பட்டியிலிருக்கும் ” ஆடுகளை, அதிலும் பெண் ஆட்டை பார்த்து, பார்த்து கண்ணீர் விட்டன. மனதிற்குள் ” பலியாடுகள் மூன்றும்” பழிவாங்கிய பெ…

  12. Wednesday, June 1, 2011, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மோதல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் பொலிஸார் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனியார் ஓய்வுதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த 30 ஆம் திகதி கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன் போது பொலிஸாருக்கும் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்களும்; 11 பொலிஸ் உத்தியோகத்தர்களும் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 11 பேர் வீடு திரும்பியுள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலையின் உதவிபணிப்பாளர் சனத் கல்கமுவ தெரிவித்தார். இதேவேளை இச் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதோடு நீதிமன்றில் ஆஜ…

  13. [Wednesday, 2011-06-01 15:23:20] இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேயின் டெல்லி பயணம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அறிக்கை. இலங்கை முன்னாள் பிரதமரும், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கே இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்து விட்டுச் சென்றுள்ளார். இந்திய அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் ஆகியோரை சந்தித்துப் பேசியதாகக் கூறியுள்ள ரணில் விக்கிரமசிங்கே, அவர்களுடன் என்ன பேசினார் என்ற விவரம் எதையும் வெளியிடவில்லை. இந்திய அரசின் அழைப்பின் பேரில் டெல்லி வந்த ரணில் விக்கிரமசிங்கேயுடன் தாங்கள் நடத்திய பேச்சுவார்த்தை என்ன என்பதை அயலுறவு அமைச்சரும் வெளிப்படுத்தவில்லை.…

  14. போரினால் பாதிக்கப்பட்ட யாழ் மாவட்டத்தின் தொழிலாளர் சந்தை ஒரு புரியாத புதிராக இருப்பதாக அபிவிருத்திக்கான பருத்தித்துறை ஆய்வகத்தின் தலைவரான கலாநிதி முத்துக்கிருஷ்ண சர்வானந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையின் ஏனைய பகுதிகளில் வேலையில்லாதவர்களின் வீதம் கிட்டத்தட்ட 5 வீதமாக மாத்திரம் இருக்கும் நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட யாழ் மாவட்டத்தில் அந்த வீதம் இருமடங்காக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொழில் வாய்ப்புகளுக்கான போதுமான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறுகிறார். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை அங்கு போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வுகள், அழிவுகள் போன்றவை தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதில் பெரும் தாக்கத்தை ஏற்பட…

  15. ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை அரசியல் அடிப்படையிலானது: இஸ்ரேல் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கை, மனித உரிமை பற்றிய அக்கறையால் உருவானதல்ல. அது முற்றுமுழுதான அரசியல் நோக்கம் கொண்டது என இலங்கை மற்றும் இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் மார்க் சோபர் இன்று புதன்கிழமை கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். இதேபோன்று தான் காஸா மோதல்பற்றி 2009 இல் ஐ.நா. வெளியிட்ட கிளாஸ்ரன் அறி;க்கை, இஸ்ரேல் யுத்த குற்றம் இழைத்ததாக கூறியது. ஆயினும் அறிக்கையின் பிரதான பகுதியை கிளஸ்ரன் பின்னர் வாபஸ் பெற்றுக்கொண்டார் என இந்தியாவை தளமாக கொண்ட மார்க் சோபர் கூறினார். நாடுகளுக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுக்கள் அரசியல் பின்னணியில் தான…

    • 0 replies
    • 578 views
  16. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான இணையத்தளத்திலிருந்தும் விடுதலைப் புலிகள் சார்ந்த வேறு மூலங்களிலிருந்தும் பெறப்பட்ட தரவுகளே தருஷ்மன் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதனால் தகவல் உட்கட்டமைப்பு ஒன்றை ஆக்கிக்கொள்வதன் மூலம் இலங்கை பற்றிய உண்மை நிலைமைகளை உலகறியச் செய்வது அவசியமாகவுள்ளது என பயங்கரவாதம் தொடர்பான சர்வதேச புகழ்பெற்ற நிபுணரும் பேராசிரியருமான ரொஹான் குணரத்ன தெரிவித்தார். நாட்டில் செல்வாக்குள்ள தமிழ் அரசியல் தலைமைத்துவம் ஒன்று உருவாகுவது முக்கிய தேவையாகவுள்ளது என சுட்டிக்காட்டிய பேராசிரியர், யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையிலும் மடிக்கணினிகளைப் பயன்படுத்தி யுத்தம் செய்ய வேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். ய…

    • 0 replies
    • 442 views
  17. புதன், 01 ஜூன் 2011 08:31 . இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், ராஜீவ் கொலை வழக்கின் மர்மங்கள் விலகாது போலும்! ராஜீவ் சர்மா என்பவர் எழுதிய 'விடுதலைப் புலிகளுக்கு அப்பால் - ராஜீவ் கொலைப் பின்னணி - காலடிச் சுவடுகள்’ என்ற புத்தகம் ஆங்கிலத்தில் வெளியாகி பலத்த சர்ச்சைகளைக் கிளப்பியது. அதை ஆனந்தராஜ் என்பவர் தமிழ்ப்படுத்தி உள்ளார். ''ராஜீவ் காந்தி படுகொலை என்பது நம்புவதற்கு அப்பாற்பட்ட ஒரு கொடூரம் என்பது வெளிப்படை. இதில் புலிகள் வெறும் கைகள் மட்டுமே. தனுவும் சிவராஜனும் அதில் வெறும் விரல்களே. இந்தக் கொலையின் பின்னணியில் உள்ள மூளை இதுவரை மறைந்தே உள்ளது. ராஜீவ் படுகொலை, இந்தியாவின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கவும் வலுவிழக்கச் செய்யவுமான சர்வதேசச் சதி என்ற சக்கரத்தின் …

  18. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக நாளை ஜெனிவாவில் ஆரப்பாட்டம் ஐ.நா.சபை நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக நாளை ஜெனிவா நகரில் ஊர்வலம் ஒன்றை நடாத்த அங்குள்ள இலங்கையர்கள் ஏற்பாடு தெரிவிக்கப்படுகின்றது. இத்தாலி, சுவிச்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள இலங்கையர்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள உள்ளனர். இந்நாடுகளில் குறிப்பிட்டளவு சிங்கள மக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=31963

  19. யாழ். நூல் நிலைய எரிப்பின் 30ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெல்பேர்ண் தமிழ்க்குரல் வானொலியில் “யாழ்ப்பாண நூல் நிலையமும் சிங்கள நாசிகளும் ” என்ற தலைப்பில் ஒலிபரப்பாகிய சபேசனின் ஆய்வு: ஆய்வைக் கேட்க இங்கே சொடுக்கவும்

  20. கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு கருணா குழு அல்லது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பு குறித்து இலங்கை இராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது. கருணா குழுவினர் இராணுவ நடவடிக்கைகளுக்கு நேரடியாக பயன்படுத்தப்படவில்லை எனவும் ஆனால் அவர்கள் வேறொரு விதத்தில் பயன்படுத்தப்பட்டதாகவும் மேஜர் ஜெனரல் சகி கலஹே தெரிவித்துள்ளார். இலங்கை தீவிரவாத ஒழிப்பு அனுபவங்களை சர்வதேசத்தின் மத்தியில் பகிர்ந்து கொள்ளும் மாநாட்டில் இன்று உரையாற்றிய போதே சகி கலஹே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கிழக்கின் விடுதலைக்காக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட போது விடுதலைப் புலிகள் தப்பிச் சென்று பதுங்கக்கூடிய பகுதிகளில் கருணாவின் குழுவினர் நி…

  21. 01 ஜூன் 2011 உள்நாட்டு யுத்தம் தொடர்பான சர்வதேச சட்டங்களில் திருத்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பயங்கரவாத இல்லாதொழிப்பு குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இரண்டு நாடுகளுக்கு இடையிலான யுத்தம் தொடர்பான சர்வதேச சட்டங்களே தற்போது அமுலில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், உள்நாட்டில் அரசாங்கமொன்றுக்கும், மற்றுமொரு தரப்பினருக்கும் இடையிலான யுத்தம் தொடர்பில் எவ்வாறான நியதிகள் பின்பற்றப்பட வேண்டும் குறித்த தெளிவான சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததுடன் இராணுவத…

  22. சனல் 4 ஐ.நா மன்றில் வெளியிடவிருக்கும் ஒரு மணி நேர போர்க்குற்ற ஒளிப்பதிவு 2009 மே மாதத்தில் சிங்களப் பயங்கரவாத ஆக்கிரமிப்பாள்ர்களால் மேற்கொள்ளப்பட்ட பாரிய போர்க்குற்றங்கள் அடங்கிய ஒரு மணிநேர ஒளிப்படமொன்றை சனல் 4 ஐ.நா மன்றில் இம்மாதம் 14 ஆம் தேதி வெளியிடவிருக்கிறது. அதேநேரத்தில் தனது செய்திப் பிரிவிலும் இதே ஒளிநாடாவை மக்களின் பார்வைக்கும் ஒளிபரப்பவிருக்கிறது. தான் இதுவரை பார்த்த போர்க்குற்ற சாட்ச்சியங்களிலேயே மிகவும் கொடூரமானதும், பயங்கரமானதுமான காட்சிகளை சிங்கள ராணுவத்தினர் தமது கைதிகளுக்குச் செய்தத்தை தமது கைய்யடக்கத் தொலை பேசியில் பதிவு செய்து வெற்றிக் கேடயங்களாக வைத்திருக்கிறார்கள். இவற்றில் சிலவே தமது கைக்கு எட்டியுள்ளதாக இந் நாடாவை ஒருங்கமைத்த தொகுப்பாளர் கூறுகிற…

  23. சனல் 4 வெளியிடவுள்ள புதிய ஆதாரமான இராணுவத்தின் யுத்தக் குற்றக் காணொளி! புதன், 01 ஜூன் 2011 08:04 இலங்கை இராணுவத்தின் மற்றுமொரு கொடூரக் காட்சிகள் அடங்கிய வீடியோவை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை போர்குற்றம் தொடர்பான பல காணொளிகளை வெளியிட்டுவரும் சனல் 4 தொலைக்காட்சி எதிர்வரும் 14ம் திகதி புதிய யுத்தக்குற்ற காணொளி ஒன்றை வெளியிடவுள்ளது. போரில் காயமடைந்து, மற்றும் வான்படையின் குண்டு வீச்சில் காயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கும் பெண்போராளிகளை செத்த உடலங்களோடு தூக்கிப் போடும் கொடூரக் காட்சிகள் அடங்கிய காணொளியை சனல் 4 வெளியிடவுள்ளது. இம்மாதம் 14ம் திகதி வெளியிடவுள்ள புதிய யுத்தக்குற்றக் காணொளி வெளியீடு சுமார் 1 மணித்…

    • 2 replies
    • 2.5k views
  24. 01 ஜூன் 2011 சுயாதீன விசாரணைகளை நடத்த வேண்டியது இறைமையான நாடொன்றின் பொறுப்பாகும் - மார்டின் நெசர்கீ யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், நம்பகரமானதும் சுயாதீனமானதுமான விசாரணைகளை நடத்த வேண்டியது இறைமையான நாடொன்றின் தார்மீகப் பொறுப்பாகும் என ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்hளர். இலங்கை விவகாரம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை பரிந்துரைகளை எவரும் பார்வையிடக் கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இறைமையுடைய நாடொன்று சு…

  25. Posted by சோபிதா on 01/06/2011 in பிரதான செய்தி (செய்தி தொகுப்பு – இளந்தி -01/06/2011) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இழந்த செல்வாக்கை மீளப்பெற புதிய உத்தியைத் தூக்கியுள்ளார். அவருக்கு எப்போது மக்கள் செல்வாக்கு இருந்தது என்ற நியாயமான கேள்வியில் அர்த்தமுண்டு. இராணுவத்தின் அனுசரணை அருகி வரும் இந்தக்காலத்தில் அவர் மக்கள் ஆதரவைத் தேடுவது காலம் கடந்த செயலாகும். அண்மையில் சுதுமலை என்ற ஈழத்தமிழர்களின் விடுதலை வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த கிராமத்தில் டக்ளஸ் தேவானந்தா ஒரு பொதுக் கூட்டம் நடத்தி மக்கள் சந்திப்பை மேற்கொண்டார். அவருடைய தொண்டர் என்று சொல்லப்படும் அடியாட்கள் வீடு வீடாகச் சென்று கூட்டத்திற்கு வரும்படி அச்சுறுத்தினர். இதைத் தட்டிக்கழிக்க முடியாத அப்பாவிகள் அழைப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.