ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
05 DEC, 2023 | 03:19 PM உலங்கு வானூர்தியொன்றை வாடகைக்கு அமர்த்தி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நேற்று திங்கட்கிழமை (04) நெடுந்தீவுக்கு விஜயம் செய்து பார்வையிட்டு திரும்பியுள்ளனர். நெடுந்தீவில் உள்ள தனியார் சுற்றுலாத்துறை நிறுவனமொன்றின் ஏற்பாட்டிலேயே குறித்த சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். நெடுந்தீவின் சுற்றுலாத்துறையின் இது முதன்மையாக ஒரு சிறந்த முன்னேற்ற படிக்கல்லாக இவ் வருகை அமைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/171024
-
- 0 replies
- 600 views
- 1 follower
-
-
Published By: VISHNU 05 DEC, 2023 | 03:24 PM தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் டாக்டர் நளின் ஆரியரத்தின தலைமையிலான தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (5) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தனர். மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள பொலிஸ் நிலையம், பொலிஸ் அத்தியாச்சகர் பணிமனை, சமுர்த்தி வங்கி,மட்டக்களப்பு மாநகர சபை,மட்டக்களப்பு மங்கள ராம விகாரை உட்பட அரச மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பணியாக அதிகாரிகள், மற்றும் பொதுச் சுகாதார பரிசோதரர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் டெங்கு சுற்றி வளைப்பு தேடுதலின் போது 45…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் அகிலத்திருநாயகியை ஏன் கண்டுகொள்ளவில்லை? பாடகி யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற `National Masters & Seniors Athletics` போட்டியில் 2 தங்கப் பதக்கங்களை வென்ற 71 வயதான அகிலத்திருநாயகியை ஏன் கண்டுகொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்“ மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டில் திறமையானவர்கள் பலர் உள்ளனர். எனவே கிரிகெட், காற்பந்து, வலைப்பந்து போன்ற அனைத்து விளையாட்டுகளுக்குமான மைதானங்களை புனரமைப்பு செய்வதற்கு நிதி தேவைப்…
-
- 7 replies
- 858 views
-
-
பாடசாலைக் கல்வித் தரங்களில் ஏற்படவுள்ள மாற்றம் : கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு! பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சபை முதல்வாரன, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் அண்மையில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சின் வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் முன்னேற்றங்கள் மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம், ஒவ்வொரு பிள்ளையும், 17 ஆண்டுகளில் பாடசாலைப் படிப்பை ம…
-
- 6 replies
- 527 views
-
-
யாழில் DJ nightக்கு அனுமதி மறுப்பு! adminDecember 5, 2023 யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பிரபல விடுதியில் ஒன்றில், வருட இறுதியை முன்னிட்டு (Year End) இரவு இசை நிகழ்வுக்கு (DJ night) யாழ்.மாநகர சபையிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில் மாநகர சபை அனுமதி மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் கடந்த நவம்பர் மாதம் 4ஆம் திகதி விடுதி ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்வில் (DJ night) கலந்து கொண்ட இளையோர் மது அருந்தியதாகவும் , அதில் சிலர் போதைப்பொருளை பாவித்ததாகவும் செய்திகள் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அது குறித்து , காவற்துறையினரோ , நிகழ்வுக்கு அனுமதி வழங்கிய மாநகர சபையோ கவனம் செலுத்தவில்லை என காவற்துறை மற்றும் மாநகர சபையினர் மீதும் கடும…
-
- 1 reply
- 568 views
-
-
யாழில். அதிகரிக்கும் போதைப் பாவனை – நுரையீரல் , இருதய நோய் தொற்றுக்கு உள்ளாகும் இளையோர்! adminDecember 5, 2023 அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால், நுரையீரல் மற்றும் இருதய “வால்வு” ஆகியவற்றில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி யாழ்,போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. அதில் பெருமளவானோர் 25 வயதிற்கும் குறைந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு செல்வதற்காக, இளையோர் பலர் மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்காக வருகின்றனர். அவ்வாறானவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது , நுரையீரல் மற்றும் இருதய வால்வு ஆகியவற்றில் கிருமி…
-
- 1 reply
- 232 views
-
-
இலங்கையில் உள்ள விவாகரத்துச் சட்டங்களின் வரம்பு தொடர்பான ஒரு முக்கிய தீர்ப்பில், மற்றொரு நாட்டில் தகுதிவாய்ந்த நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட விவாகரத்தை, நிரூபிக்கும் மற்றும் செல்லுபடியாகும் ஆவணத்தை இலங்கையில் சமர்ப்பித்தால், இலங்கையில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றத்தால் அது ஏற்றுக்கொள்ளப்பட தடையில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது. எவ்வாறாயினும், இந்த ஏற்பு நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் சான்றுகள் தொடர்பான சட்ட விதிகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியது. அத்தகைய ஒரு நாட்டின் சட்டம், வெளிநாட்டில் நிகழும் திருமணங்களை ரத்து செய்வதற்கான அதிகார வரம்பை அந்தந்த நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ளதா என்பத…
-
- 0 replies
- 438 views
-
-
காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி கண்டாவளை மக்கள் 04 DEC, 2023 | 06:49 PM கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுநகர் கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட ரங்கன் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் மக்கள் குடியிருப்புகள் புகுந்து பயிர்செய்கையை சேதமாக்கியுள்ளது . நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) இரவு இடம்பெற்றுள்ளதுடன் வாழ்வாதாரத்துக்காக வைக்கப்பட்டிருந்த மரவள்ளி மற்றும் பயன்தரக்கூடிய நிலையில் இருந்த வாழை என்பனவற்றை முற்றும் முழுதாக சேதப்படுத்தியுள்ளது . யானையை துரத்துவதற்காக முற்பட்டவர்களையும் யானை அவர்களை மீண்டும் துரத்தியுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர் . …
-
- 0 replies
- 327 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தமது பிள்ளைகளின் நிர்வாண படத்தை வைத்து உழைக்கும் நிலைக்கு சமூக நிலை பலவீனமடைந்துள்ளது. இதற்கு ஆட்சியாளர்கள் பொறுப்புக் கூற வேண்டும். இந்த அரசாங்கத்துடன் பேசி பயனில்லை. பாராளுமன்றத்தில் இடம்பெறும் விவாதங்களினால் மக்களுக்கு பயனேதுமில்லை,ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (8) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரங்கள் அமைச்சு மற்றும் மகளிர்,சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.…
-
- 11 replies
- 1.3k views
-
-
Published By: VISHNU 04 DEC, 2023 | 10:01 PM டுபாயில் நடைபெற்ற COP 28 மாநாட்டுடன் இணையாக ஈஷா அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான சத்குரு ஜக்கி வாசுதேவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஞாயிற்றுக்கிழமை (03) சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார். https://www.virakesari.lk/article/170976
-
- 6 replies
- 949 views
- 1 follower
-
-
04 DEC, 2023 | 06:38 PM யாழ் மாவட்டத்தில் இந்த வருடத்தின் இறுதிவரையான காலப்பகுதியில் 2203 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டதுடன் இரண்டு இறப்புக்களும் பதிவாகியுள்ளன. யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்தி குறிப்பில்,யாழ் மாவட்டத்தில் இந்த வருடத்தின் செப்ரெம்பர் மாதத்தில் 110 டெங்கு நோயாளிகளும், ஒக்டோபர் மாதத்தில் 118 டெங்கு நோயாளிகளும் நவம்பர் மாதத்தில் 427 டெங்கு நோயாளிகளும் டிசம்பர் மாதத்தின் முதல் மூன்று நாட்களில் 82 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். நவம்பர் மாதத்தில் கூடிய ட…
-
- 1 reply
- 406 views
- 1 follower
-
-
04 DEC, 2023 | 08:25 PM யாழ் தெல்லிப்பழை பகுதியில் ஹயஸ் வானில் வந்த இனந்தெரியாத குழு மோட்டார் சைக்கிள் வந்த இளைஞர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குறித்த வன்முறை சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை 5.30 இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் சிலர் தெல்லிப்பழை பகுதியில் பயணித்துள்ளனர். இதன்போது ஹயஸ் வானில் வந்த வாள்வெட்டு குழுவினரை பார்த்து மோட்டார் சைக்கிளில் வந்த ஏனையவர்கள் தப்பித்து செல்ல ஒருவர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதலை நடாத்திவிட்டு கும்பல் மருதனார்மடம் நோக்கி தப்பிச் சென்றுள்…
-
- 5 replies
- 685 views
- 1 follower
-
-
இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்ட மலையகத்தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும்! சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ”சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் உள்ள விடயங்களை முழுமையாக அமுல்படுத்துவதில் இந்திய அரசு தவறிழைத்துவிட்டதாக” சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்கும் விதமாகவே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இழைக்கப்பட்டுள்ள வரலாற்றுத் தவறை சரி செய்வதற்கு த…
-
- 12 replies
- 1.2k views
-
-
சுமந்திரன் மன்னிக்கத் தயாரா? : அமைச்சர் விஜேதாச ராஜபக்ச கேள்வி! நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்ப்பவராயின் அவரை கொலை செய்ய வந்த ஐந்து இளைஞர்களையும் விடுதலை செய்யுமாறு அவர் கூற வேண்டும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நீதி அமைச்சர் தொடர்பில் கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றில் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் இந்த நாட்டின் நீதி அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்பட வேண்டும் என்று சுமந்திரன் கூறுகின்றார். மட்டக்களப்பிலுள்ள விகாராதிபதி தமிழ் மக்களுக்கு எத…
-
- 4 replies
- 840 views
-
-
04 DEC, 2023 | 11:02 AM (இராஜதுரை ஹஷான்) தேசிய ரீதியில் நடைபெறும் அடுத்த தேர்தலில் விழிப்புலன் அற்ற வாக்காளர்களுக்காக ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் தொட்டுணரக்கூடிய விசேட வாக்குச் சீட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். விசேட தேவையுடையவர்களுக்கு விசேட அடையாள அட்டை ஒன்று வழங்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்தார். இயலாமையுடைய நபர்களுக்கான சர்வதேச தினம் டிசம்பர் 03ஆம் திகதி நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் இதனை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள், இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங…
-
- 0 replies
- 153 views
- 1 follower
-
-
Published By: VISHNU 04 DEC, 2023 | 02:36 PM சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு AHRC நிறுவனத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை, வெருகல் பிரதேச சிவில் அமைப்புகளினால் திங்கட்கிழமை (04) வட்டவன் பகுதியில் கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் மனித உரிமைகள் தின வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது வெருகல் பகுதியில் மீறப்பட்டு வருகின்ற மனித உரிமைகள் தொடர்பாக மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர். குறிப்பாக தமது பிரதேசத்தின் மணல் வளம் சுரண்டப்படுகின்றமை, காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளமை, பொலிஸ் நிலையத்தில் தமிழ் மொழியில் முறைப்பாடுகளை பெறுவதற்கு மறுப்பு தெரிவிக்கப்படுகின்றமை உட்பட பல மனித உரிமை மீறல் தொடர்பான விடயங்களை தெரிவித்ததோடு அது தொடர்பான மகஜ…
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
தமிழர்களுக்கெதிரான காட்டுச்சட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும் : செல்வராசா கஜேந்திரன்! தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமைகளை மறுப்பதும் தமிழ் மக்களுக்கு எதிராக காட்டுச் சட்டங்களை பயன்படுத்துவதும் நிறுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமைகளை மறுப்பதும் தமிழ் மக்களுக்கு எதிராக காட்டுச் சட்டங்களை பயன்படுத்துவதும் தமிழர்கள் மீது ஈவிரக்கம் இல்லாத…
-
- 0 replies
- 272 views
-
-
காங்கேசன்துறையில் பெருமளவான இராணுவ அங்கிகள் மீட்பு! இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை – மாங்கொல்லை பகுதியில் பெருமாளான இராணுவ அங்கிகள் (Flak jacket) கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதியில், காணி ஒன்றினை அதன் உரிமையாளர் துப்பரவு செய்து, கிணற்றினை இறைத்த போது கிணற்றினுள் இருந்து பெருமளவான இராணுவ அங்கிகள் மீட்கப்பட்டுள்ளன. அது தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவித்ததை அடுத்து இராணுவத்தினர், தாம் அதனை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இவை யுத்தத்தில் ஈடுபடும் இராணுவத்தினர், தமது உயிரை பாதுகாத்து கொள்வதற்காக அணிந்து…
-
- 0 replies
- 287 views
-
-
போதகருக்கு ஒருசட்டம் – தேரருக்கு ஒரு சட்டமா? : சாணக்கியன் கேள்வி! தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் எனக் கருத்துத் தெரிவித்த அம்பிட்டியே சுமண தேரருக்கு ஒரு சட்டமும் அண்மையில் கைதுசெய்யப்பட்ட மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு இன்னுமொரு சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் கைதான போதகர் ஜெரோம் பெர்ணான்டோ ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 13 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த ICCPR சட்டம் சிறுபான்மை தமிழ் பேசும் மக்களுக்கும், எண்ணிக்கையில் சிறுபான்மையான மக்களுக்கும் மாத்திரமே பயன்படுத்தப்ப…
-
- 1 reply
- 350 views
-
-
சர்வதேச மனக்கணித போட்டியில் யாழைச் சேர்ந்த சிறுவன் சாதனை! 2023ம் ஆண்டிற்கான சர்வதேச மனக்கணித போட்டியில் யாழைச் சேர்ந்த மாணவரொருவர் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். UCMAS இன் திருநெல்வேலி கிளை மற்றும் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த சுதர்சன் அருணன் என்ற மாணவனே ஆறு வயதுக்குட்பட்ட ஏ1 பிரிவு போட்டியிலேயே இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் நடைபெற்ற போட்டியில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1361896
-
- 1 reply
- 269 views
-
-
04 DEC, 2023 | 10:58 AM அரசியல்வாதிகள் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்யும் கலாச்சாரத்தை உருவாக்குவேன் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். கேகாலையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஏனைய நாடுகளில் அரசியல்வாதிகள் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் மக்களுடன் சேர்ந்து பணியாற்றுவதை பார்த்திருப்பீர்கள் எங்களுக்கு அவ்வாறான அரசியல் கலாச்சாரம் இங்கு தேவையா என கேள்வி எழுப்பியுள்ள அவர் நாங்கள் அந்த மாற்றத்தை அரசியல்கலாச்சாரத்தை உருவாக்குவோம் என அவர் தெரிவித்துள்ளார். வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை பொறுப்பேற்பதற்கான ப…
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
இலங்கை சிறைச்சாலைகளில் 1206 மரண தண்டனை கைதிகள் ! நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் மொத்தமாக 1206 மரண தண்டனை கைதிகள் உள்ளார்கள். இவர்களில் 744 பேருக்கான மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுகளுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது, மரண தண்டனை, ஆயுள் தண்டனை கைதிகள் தொடர்பில் அமைச்சர் சுட்டிக்காட்டியதாவ…
-
- 0 replies
- 186 views
-
-
ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குபவர்களுக்கு மாதாந்தம் செலவிடப்படும் தொகை ஜனாதிபதி ஆலோசகர்களாக பணியாற்றும் பதினைந்து பேருக்கான மாதாந்த செலவு இருபத்தி இரண்டு இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தினால் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொடுப்பனவுகள் உட்பட இவ்வாறு செலுத்தப்பட்ட தொகை இருபத்தி ஒரு இலட்சத்து தொண்ணூற்று எட்டாயிரத்து எண்ணூற்று முப்பத்தேழு ரூபாயாகும். பொருளாதார நிலைப்படுத்தல், மீட்சி மற்றும் வளர்ச்சி ஆகியன தொடர்பான ஆலோசகருக்கு மூன்று லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய். ஊடகம் மற்றும் தொடர்பாடல் ஆலோசகருக்கு இரண்டு இலட்சத்து பதின்மூன்றாயிரம் ர…
-
- 2 replies
- 333 views
-
-
80 பில்லியன் கடனை செலுத்தாத உயர்மட்ட வர்த்தகர்கள் இலங்கையில் உள்ள இரண்டு பிரதான அரச வங்கிகளில் கடன் பெற்ற பத்து உயர்மட்ட வர்த்தக வாடிக்கையாளர்கள் 80 பில்லியன் ரூபா கடனை செலுத்தத் தவறியுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியல் பாதுகாப்பு பெறும் அந்த பத்து வாடிக்கையாளர்களை நாட்டிற்கு வெளிப்படுத்த பாராளுமன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் நேற்று (02) நடைபெற்ற மாநாட்டில் அவர் குறிப்பிட்டார். மேலும் கருத்துத் தெரிவித்த இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர், "இந்த வங்கிகள் நாட்டின் மறுமுனையில் உள்ள விவசாயிகள் முதல் கொழும்பில் உள்ள பெ…
-
- 1 reply
- 506 views
-
-
ஜனாதிபதி மற்றும் பில்கேட்ஸூக்கும் இடையில் சந்திப்பு காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக பில் மற்றும்மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் (BMGF) இணைத் தலைவர் பில் கேட்ஸ் (Bill Gates) தெரிவித்தார். டுபாயில் நடைபெறும் COP 28 மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் (BMGF) இணைத் தலைவர் பில்கேட்ஸ்க்கும் இடையிலான சந்திப்பு இன்று (03) இடம்பெற்றது. காலநிலை மாற்றத்தைக் குறைக்கும்உலகளாவிய சவால் மற்றும் வெப்பவலயப் பிராந்தியத்தில் இலங்கையின் பங்களிப்பை மேம்படுத்துவது குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் காலநிலை மாற்றத…
-
- 2 replies
- 527 views
-