ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143303 topics in this forum
-
May 7, 2011 / பகுதி: செய்தி / அரச அதிபரின் நிறைவேற்று அதிகாரத்தை மேலும் அதிகரிக்கும் 19வது திருத்தச் சட்டம். சிறீலங்காவில் 18வது திருத்த சட்டத்தைத் தொடர்ந்து 19வது திருத்தச் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறீலங்காவின் அரச அதிபருக்கான நிறைவேற்று அதிகாரத்தை மேலும் அதிகரிக்கும் வகையிலேயே இந்த சட்டமூலம் கொண்டு வரப்படவுள்ளது. நீதிமன்ற சேவை ஆணைக்குழுவின் செயலாளரை நியமிக்கும் அதிகாரத்தை அரச அதிபருக்கு வழங்குதல் மற்றும், பிரதம நீதியரசரின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு வரையறுத்தல் ஆகிய காரணிகளின் அடிப்படையிலேயே இந்த திருத்தம் முன்வைக்கப்படவுள்ளது. தற்போதைய அரசியல் அமைப்பின் 127ம் சரத்தின் அடிப்படையில் பிரத…
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ். பல்கலை மாணவர்களிடையே திடீர் மோதல் இன்று மாலை யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே திடீரென்று மோதல் வெடித்தது. இதனை அடுத்து பல்கலைக்கழகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இன்று மாலை 6.30 மணியளவில் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் கூடியிருந்த மாணவர்கள் இரண்டு அணியாகப் பிரிந்து திடீரென மோதலில் ஈடுபட ஆரம்பித்தனர். நாளை நடைபெறவுள்ள முகாமைத்துவ பீட சிரேஷ்ட்ட மாணவர்களுக்கான பிரியாவிடை வைபவம் தொடர்பான கருத்து முறண்பாடே கட்டிப்புரண்டு சண்டையிடும் அளவிற்குச் சென்றதாக கூறப்படுகிறது. ஒரு மணிநேரத்திற்கும் மேலாக சண்டை தொடர்ந்ததை அடுத்து யாழ். பொலிஸ் நிலையத்துக்கு தகவல் தெரிக்கப்பட்டதை தொடர்ந்து பெருமளவான பொலிஸார் பல்கலைக்கழகத்தில் குவிக்கப்பட்டனர். யாழ். பொலிஸ் நிலைய…
-
- 2 replies
- 1.3k views
-
-
சிறைகளில் நீண்டகாலம் விசாரணை இன்றி தடுப்பில் உள்ள ;தமிழ்க் கைதிகளின் விடுதலைக்காக கூட்டமைப்பு உயர்நீதிமன்றத்தில் மனு; மகஸின் சிறைக்கு எம்.பிக்கள் நேற்று திடீர் விஜயத்தை அடுத்து இலங்கை சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக எதுவித விசாரணைகளும் இன்றித்தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பால் தாக்கல் செய்யப்படவுள்ளது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் இந்த வழக்கைத் தாக்கல் செய்வதற்கான தீர்மானம் நேற்று எட்டப்பட்டது. நேற்றுக் காலை கொழும்பு புதிய மகஸின் சிறைச்சாலையில் இடம்பெற்ற தமிழ் அரசியல் கைதிகள் தமிழ்…
-
- 1 reply
- 530 views
-
-
நீதிமன்றக் கட்டடத்துக்கான அத்திபாரம் வெட்டும்போது எலும்பு எச்சங்கள் மீட்பு; மல்லாகத்திலுள்ள குறிப்பிட்ட இடத்தில் நேற்று விசாரணை மல்லாகம் நீதிமன்றக் கட்டடம் அமைக்கப்பட்டு வரும் காணியில் அத்திபாரம் வெட்டப்படும் போது அதிலிருந்து எலும்பின் எச்சங்கள் நேற்றுமுன்தினமும் நேற்றும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த காணியிலுள்ள கிணற்றிலிருந்து கடந்த மாதம் 24 ஆம் திகதி மண்டை ஓடு ஒன்றும் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.நேற்றுமுன்தினம் குறித்த பகுதியில் கட்டடம் அமைப்பதற்கான அத்திபாரம் வெட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது சிதைவடைந்த நிலையில் எலும்பின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இது தொடர்பாகப் தெல்லிப்பழைப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்து…
-
- 0 replies
- 917 views
-
-
2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில், கனிமொழியின் முன் ஜாமீன் மனு மீதான உத்தரவை, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மே 14-க்கு ஒத்தி வைத்தது. கனிமொழிக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி நேற்று வாதிட்ட நிலையில், அந்த மனுவை சிபிஐ தரப்பு இன்று எதிர்த்தது. ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் தாம் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக திமுக மாநிலங்களவை உறுப்பினரும், தமிழக முதல்வரின் மகளுமான கனிமொழி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று காலை மீண்டும் தொடங்கியது. இதற்காக, டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழியும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் இரண்டாவது நாளாக ஆஜராகினர். கனிமொழிக்கே முக்கியப் பங்கு! சிபிஐ சார்பில் தனது …
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்கவென ஐநா செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தருஸ்மான் தலைமையிலான மூவர் அடங்கிய நிபுணர் குழுவை ஐ.நா. செயலாளர் நாயகம் கடந்த வருடம் நியமித்திருந்தார். இக்குழு பல வழிகளில் சாட்சியங்களைப் பெற்று இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் பேரது இடம்பெற்ற விடயங்களை 192 பக்க அறிக்கையாக தயாரித்து அண்மையில் ஐநா செயலாளர் நாயகத்திடம் கையளித்ததோடு, அவர் அதனை அம்பலப்படுத்தியிருந்தார். அவ்வாறான நிலையில் நிபுணர் குழுவின் செயற்பாடுகள் முற்றுப்பெற்றுள்ளதால் நேற்று ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் அதனைக் கலைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நிபுணர் …
-
- 1 reply
- 1.9k views
-
-
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சரான பிள்ளiயானை (சிவனேசதுரை சந்திரகாந்தன்) சிறிலங்கா ஜனாதிபதி கடும் தொனியில் எச்சரித்துள்ளமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன. முதலமைச்சர்கள்; மாகாநாட்டில் கலந்து கொள்வதற்காக அண்மையில் கொழும்பு வந்திருந்த பிள்ளையானைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ரராஜபக்ஷ, ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் பகிரங்கமாக எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்றும் அது தொடர்பான கையொப்ப வேட்டைக்கு முழு ஆதரவையும் வழங்கிக் களத்தில் நிற்க வேண்டுமெனவும் கடுந்தொனியில் கேட்டுள்ளார். இவ்வாறு நடந்து கொள்ளாவிட்டால் கிழக்கு மாகண சபையை உடனடியாகவே கலைக்க வேண்டி வரும் எனவும் அவர் எச்சரித்தாராம். இதனால் வியர்த்து விறுவிறுத்துப் போன பிள்ளையான், ஐ.நா ந…
-
- 0 replies
- 915 views
-
-
உள்ளுராட்சி மன்றங்களின் நிர்வாகமும் இராணுவமயமாகிறது! Posted by admin On May 7th, 2011 at 11:09 am / No Comments உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவ அதிகாரிகளை ஈடுபடுத்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளார். அதன் முதற்கட்டமாக தற்போதைக்கு காலி மற்றும் மாத்தறை நகர சபைகளின் நிர்வாக கண்காணிப்பு அதிகாரிகளாக இரண்டு பிரிகேடியர் தர இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நகர சபைகளின் நிர்வாக நடவடிக்கை தொடக்கம் நகர ஆணையாளரின் அதிகாரங்கள் வரை அனைத்தையும் அவர்கள் கையில் எடுத்துள்ளனர். அத்துடன் நகர சபையின் நகர ஆணையாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளை அழைத்து கூட்டமொன்றையும் நடத்தியுள்ளடன், பாதுகாப்பு அமைச்சின் நேரடி உத்த…
-
- 1 reply
- 622 views
-
-
இந்தியா, இலங்கைக்குத் துணை போகாமலாவது இருக்க வேண்டாமா? – சு.ப.வீரபாண்டியன் கேள்வி! Posted by admin On May 6th, 2011 at 1:10 pm / No Comments இந்தியா உதவக் கூட வேண்டாம். குறைந்த பட்சம் இலங்கைக்குத் துணை போகாமலாவது இருக்க வேண்டாமா? என்று திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர் படுகொலை பற்றி ஐ.நா. குழு அறிக்கையும் மத்திய அரசின் கடமையும் என்ற திராவிடர் கழக பொதுக்கூட்டம் அண்மையில் புரசைவாக்கம் தானா தெருவில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:- இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை ஐ.நா.மனித உரிமை குழு …
-
- 11 replies
- 1.2k views
-
-
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு கலைக்கப்பட்டது Saturday, May 7, 2011, 5:57 உலகம், சிறீலங்கா இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த ஐக்கிய நாடுகள் நிபுணர்குழுவை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் நேற்றுக் கலைத்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு தருஸ்மான் தலைமையிலான மூவர் குழுவை கடந்த வருடம் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்திருந்தார். அக்குழுவின் அறிக்கை கடந்த ஏப்ரல் மாதம் முதலில் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. அதன் பின் ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் பொதுமக்களுக்காக வெளியிடப்பட்டது. அவ்வாற…
-
- 1 reply
- 800 views
-
-
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் 1500 சீன ஊழியர்கள் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இலங்கை ஊழியர்களுடன் சுமார் 1500 சீன ஊழியர்கள் பணியாற்றுவதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேற்படி மின் நிலையத்தின் முதல் கட்டத்திற்காக உள்நாட்டில் 3500 மில்லியன் ரூபா பெறப்பட்டதாகவும் சீனாவிலிருந்து 455 மில்லியன் டொலர்கள் சீனாவிலிருந்து பெறப்பட்டதாகவும் அவர் கூறினார். இரண்டாவது கட்டத்திற்காக இலங்கையிலிருந்து 11,000 மில்லியன் ரூபாவும் சீனாவிலிருந்து 819 மில்லியன் அமெரிக்க டொலர்களும்பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில…
-
- 1 reply
- 877 views
-
-
வீதி விபத்து ஏற்படுத்தும் சாரதிகளுக்கு இனி சிறை; 30 வருடங்களில் 40 ஆயிரம் பேர் பலி news வீதி விபத்துகளை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு சிறைத் தண்டனை வழங்கக்கூடிய கடுமையான சட்டம் ஒன்று கொண்டு வரப்படவுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம நேற்றுக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு: 1977 முதல் 2007 வரையான 30 வருட காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துகள் காரணமாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மரணித்துள் ளனர் என்று ஆய்வு ஒன்று குறிப்பிடுகின்றது. இலங்கையில் ஒரு நாளைக்கு நிகழும் 150 வீதி விபத்துகளால் 5 முதல் 6 பேர் உயிரிழக்கின்றனர். இது சமூக, பொருளாதார மற்றும் சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளது. வீதி விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் கடுமை…
-
- 1 reply
- 681 views
-
-
கவலைக்கிடமான நிலையில் ஹம்பாந்தோட்டை துறைமுகம்! அம்பலமான அரசின் பொய் வேஷம் சனி, 07 மே 2011 06:39 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கற்பாறைகள் காணப்படுவதனால் பொருட்களை ஏற்றிவரும் கப்பல்களை நிறுத்தி வைக்கமுடியாது என்று விமர்சிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி கொள்கலன்களை ஏற்றிக் கொண்டு கப்பலொன்று துறைமுகத்தை வந்தடைந்தது. சிங்கப்பூர் நிறுவனத்தைச் சேர்ந்த கப்பல் ஒன்று மலேசியாவிலிருந்து கொழும்பு நோக்கி வந்ததாகவும், குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டையில் ஓய்வெடுப்பதாகவும் அரசு ஊடகங்களில் பிரச்சாரம் செய்தது. இந்தக் கப்பல் ஏற்றிக்கொண்டு வந்த 2 ஆயிரம் கொள்கலன்களும் வெற்றுக் கொள்கலன்கள் எனத் தற்போது தெரியவந்துள்ளது. வன்கை -502 என்ற அழைக்கப்பட்ட இந்தக் கப்பல் கொழும்…
-
- 1 reply
- 1.4k views
-
-
தென்னங்கன்றில் அம்மனின் முகம் உரும்பிராயில் அதிசயம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-04 07:56:46| யாழ்ப்பாணம்] உரும்பிராய் வைத்தீஸ்வரா பகுதியில் உள்ள வீடொன்றில் நின்ற தென்னங் கன்றில் அம்மனின் முகம் தோன் றிய அதி சயம் இடம் பெற்றுள்ளது.அழகன் ரமேஸ்வரன் என்பவரது வீட்டி லேயே இந்த அதிசயம் இடம்பெற்றுள்ளது. இந்துக்களின் தாய்த் தெய்வ மாக போற்றப்படும் அம்மனின் முகம், ஆறு வருடங்களேயான தென்னங்கன்றில் தோன்றியுள்ளது. குறித்த வீட்டு உரிமையாளர் இது தொடர்பாக தெரிவிக்கையில், இந்த தென்னங்கன்றுகளுடன் வைத்த அனைத்துக் கன்றுகளும் காய்க்கத் தொடங்கிவிட்டது ஆனால் இந்தக் கன்று மட்டும் பழுதடைந்து வளர்ச்சியும் குன்றிக் காணப்பட்டது. இதையடுத்து கடந்த முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10…
-
- 11 replies
- 2.2k views
- 1 follower
-
-
ஐநா நிபுணர் குழு அறிக்கை கூறாது விட்ட முக்கிய விடயங்கள். Posted by: on May 6, 2011 இருபதாம் நூற்றாண்டு ஜேர்மனியில் நடந்த யூத இனப் படுகொலை காரணமாக ஜெனோசைற் (Genocide) என்ற புதிய சர்வதேசச் சட்டம் ஜநாவால் உருவாக்கப்பட்டது. இனப் படுகொலைத் தடுப்புத் தண்டனைச் சட்டம் (The Convention on the Prevention and Punishment of Genocide) டிசம்பர் 1948ல் நிறைவேற்றப்பட்டு இன்று நடைமுறையில் உள்ளது. இந்தச் சட்டத்தின் முதலாம் சரத்து (Article 1) மிகவும் முக்கியமானது. ஒரு தேசிய, இன, வகுப்பு, மதம் சார்ந்தோரை முற்றாகவோ, பகுதியாகவோ அழிக்கும் நோக்கில் செய்த குறிப்பிட்ட வன்செயல்களை இனப் படுகொலையாக இந்தச் சட்டம் கணிப்பிடுகிறது. இனப்படுகொலை போர்க் காலத்தில் செய்யப்பட்டாலும் அமைதிக் கால…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின், நிபுணர் குழுவின், இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான அறிக்கையில் இனப்படுகொலை என்ற சொல்லை உள்ளெடுக்காமல் விட்டுள்ளனர். இலங்கையில் கடந்த 30 வருடகாலமாக இனப்படுகொலை நடைபெற்றுவருகின்றமை பலரது கருத்தாக இருந்து வருகின்றது. ஏன் டப்ளினில் கூடிய மா நாடும் இலங்கையில் இனபப்டுகொலை நடந்துள்ளதாக வாதிட்டுள்ளது. பொஸ்னியாவில் 7000 முஸ்லிம்கள் சேர்பிய இனத்தவரால் 1995 இல் கொல்லப்பட்டனர். இதனை 2007 ஆம் ஆண்டு 26 ஆம் நாள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இனபப்டுகொலை என தீர்ப்பளித்தது. அதுமட்டுமல்ல சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இந்த தீர்ப்பினை கூறும் போது குறிப்பிடுகையில் இனப்படுகொலை ஒன்று நடப்பதற்க்கோ அல்லது அதனை ஏற்றுக்கொள்வதற்கோ 60 இலட்சம் மக்களை கொல்ல வேண்டிய அவசியம் …
-
- 1 reply
- 1.1k views
-
-
கடந்த காலங்களில் சிறிலங்காவில் விசேடமாகத் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொலிஸாராலும் முப்படையினராலும் சட்ட விரோதக் கைதுகள் இடம்பெற்றமையை நாம் மறந்துவிட முடியாது. சில நாட்களில் இந்த இரு மாகாணங்களிலும் வலைபோட்டு மீன் பிடிப்பதற்கு ஒப்பான கைதுகளும் இடம்பெற்றன. அவ்வாறு வகை தொகை இன்றிக் கைது செய்யப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை கூட இன்றுவரை தெரியாத நிலையில் எஞ்சிய நூற்றுக் கணக்கானோர் இன்னும் சிறிலங்கா சிறைகளில் வாடி வதங்கிக் கொண்டிருக்கின்றனர். . இவர்களில் பெரும்பாலானோர் எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவிகள் என்பதே உண்மை. ஒரு சிலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டாலும் அவர்கள் மீது இதுவரை எந்தச் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இது ஒரு வேதனையான விடயம்.…
-
- 0 replies
- 804 views
-
-
முன்னாள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சாந்த கோட்டேகொட தாய்லாந்து நாட்டுக்கான தூதுவராக சிறிலங்கா ஜனாதிபதியினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, ஜெர்மன் நாட்டுக்கான இலங்கைத் தூதுவராக சிறிலங்கா ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவரான சரத் ஹோங்காகே நியமிக்கப்பட்டுள்ளார். ரூபவாஹினியின் ‘ஐ’ தமிழ் அலை வரிசையில் செய்தி வாசிக்கும் தமிழ்ப் பெண்கள் குங்குமமோ பொட்டோ வைக்கக் கூடாதென உத்தரவு பிறப்பித்திருந்தவரே இந்தச் சரத் ஹோங்காகே ஆவார்;. Bookmark/Search this post with ஈழ நாதம்
-
- 0 replies
- 581 views
-
-
ஈழத் தமிழனும் ஈனத் தமிழனும்! தங்கர் பச்சான் ஓர் இனம் அழிவதையும், அந்த இனத்தைச் சார்ந்தவர்களே அவர்கள் அழிவதற்குக் காரணமாக இருந்ததையும், பின் அவர்களே அனைத்தையும் வேடிக்கை பார்த்ததும், உலகில் வேறு எங்காவது கண்டது உண்டா? ஒரு நிமிடம்கூட தன் மொழியைப் பிற மொழிக் கலப்பு இல்லாமல் பேசத் தெரியாதவனும், அதை அவமானமாகக் கருதாமல், நாகரிகமாக நினைத்துப் பெருமைப்படும் பிழைப்புவாதக் கூட்டத்துக்கு இனப்பற்று மட்டும் எப்படி வரும்? 52 ஆண்டு கால விடுதலைப் போராட்டம்... சூழ்ச்சிகளாலும் துரோகங்களாலும் ஒடுக்கப்பட்டு... அழித்தொழிக்கப்பட்டு, நம் எதிரிகளால் மகிழ்ச்சியோடு கொண்டாடப்பட்டபோது... என்ன செய்தோம் நாம்? சொந்த இனம் அழிவதைத் தடுக்காமல், அதற்குக் காரணமாக இருந்தவர்களுக்க…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழர் பகுதியைச் சூரையாடும் அமைச்சர் ஆதாவுல்லா! சனி, 07 மே 2011 06:01 அம்பாறை அக்கரைப்பற்றில அமைச்சர் அதாவுல்லா தமிழர்களுக்கு எதிரான அட்டகாசத்தின் ஒன்று நகர்மணிக்கூட்டு கோபுரத்தை தனது வாப்பாவின் சொத்து என நினைத்து பொதுக்கட்டிடமான இந்த மணிக்கூட்டு கோபுரத்தை சுற்றி தனது குடும்பத்தின் நிழல் படங்களை வைத்து ஆக்கிரமித்து வருகின்றார் இவ் மணிக்கூட்டு கோபுரத்தின் ஒரு பகுதி ஆலையடிவேம்பு பிரதேசசபையான தமிழ் மக்களுக்கும் ஒரு பகுதி அக்கரைப்பற்று மாநகரசபையான முஸ்லிம் மக்களுக்கும் உரியது. இருந்தபோதும் மணிக்கூடடுக் கோபுரத்தின் முழுப்பகுதியையும் ஆக்கிரமித்து தனது நிழல்படங்களையும் மணிக்கூடு அமைந்திருந்த பகுதியில் அவரின் மகனான மேயர் சகியின் நிழல்படங்களை வைத்து பொதுமக்கள் நே…
-
- 0 replies
- 812 views
-
-
May 7, 2011 / பகுதி: செய்தி / பிளேக் – கோத்தா சந்திப்பு – மீண்டும் பொய்யான வாக்குறுதிகள் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் துணைவெளிவவாகரச் செயலாளருக்கும், சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் 04ம் திகதி இடம்பெற்ற பேச்சுக்களின் போது, சிறீலங்கா அரச தரப்பு மேலும் பல பொய்யான வாக்குறுதிகளை வழங்கியுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு கோத்தபாயா தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு: போரில் இம்பெயர்ந்த மக்களின் வேலை வாய்ப்புக்கள், போரில் கொல்லப்பட்டவர்களுக்கான மரண அத்தாட்சிப் பத்திரம், வடக்கு கிழக்கில் இயங்கிவரும் ஆயுதக்குழுக்கள் போன்ற பல விடயங்கள் தொடாபில் பிளேக் கேள்வி எழுப்பியிருந்தார். …
-
- 0 replies
- 666 views
-
-
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையை இலங்கை இராணுவத் தளபதி கண்டித்தார். ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையை இலங்கை இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய கண்டித்தார். வெலிக்கந்தையில், பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், சுமார் இரண்டாயிரம் படையினர் மத்தியில் இன்று உரையாற்றியவேளை, இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார். ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை முற்றிலும் தவறானதென ஜகத் ஜெயசூரிய குறிப்பிட்டார். அது, இலங்கைப் படையினரிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார். அந்தவேளை, வன்னிப் படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாகத் தாம் பணியாற்றியதன் காரணமாக, அறிக்கை தவறானதெனத் தனக்குத் தெரியுமெனவும், படையி…
-
- 0 replies
- 670 views
-
-
பெருமளவான புலி உறுப்பினர்கள் இன்னும் கைது செய்யப்படவுள்ளனர் - நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரிவிப்பு விடுதலைப்புலிகள் அமைப்பைப் பற்றிக் குறிப்பிடாமல் நாட்டின் பாதுகாப்புக் குறித்து பேச முடியாத நிலை இன்னும் தொடர்வதாக பிரதமர் டி.எம்.ஜயரத்தின தெரிவித்துள்ளார்.விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து விட்டு வெளிநாடு சென்றுள்ள மற்றும் இன் னும் பாதுகாப்புப் படையினரிடம் சிக்காது மறைந்து வாழ்கின்ற புலனாய்வு மற்றும் தாக்குதல் படை உறுப்பினர்கள் முன்னைய விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முயல்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும்பிரேரணையில் கலந்து கொண்டு நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே…
-
- 4 replies
- 994 views
-
-
ரட்ணசிறியின் சிங்கள இன உணர்வை தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்[ சிங்கள மக்களின் உணர்வுகளை பிரதி பலித்த ரட்ணசிறி விக்கிரமநாயக்கபோல் எம் மிலுள்ள பச்சோந்தி தமிழ் அரசியல்வாதிளும் தமது தமிழ் உணர்வுகளை வெளிக்காட்ட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு கதிரவன் கலாமன்றம் தனது 35ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி நடத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்று கையில் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் இடம் பெற்ற பேச்சுவார்த்தைகளின் ப…
-
- 0 replies
- 796 views
-
-
''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' உருத்திரகுமாரன் உருக்கம் சமஸ் விசுவநாதன் உருத்திரகுமாரன். நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர். இவர் மீதும் விமர்சனங்கள் உண்டு. ஆனால், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின், பிரபாகரனுக்கு அடுத்த நிலையில், எஞ்சி இருக்கும் நம்பிக்கையாக இவரைத்தான் இலங்கைத் தமிழர்கள் பார்க்கிறார்கள். இலங்கை அரசு எப்படியாவது இவரைக் கைது செய்து, நாடு கடந்த தமிழீழ அரசமைப்பை முடக்கிவிடத் துடிக்கிறது. ஆனால், அமெரிக்கக் குடியுரிமை பெற்ற வழக்கறிஞரான உருத்திரகுமாரன், சட்ட ரீதியிலான காய் நகர்த்தல்களில் கில்லாடி. நியூயார்க்கில் இருந்தபடியே தன்னுடைய அமைப்பை இயக்குகிறார். முள்ளிவாய்க்கால் பேரழிவின் இரண்டாம் ஆண்டு நிறைவு, இலங்கை இறுதிப் போர் தொடர்பான ஐ…
-
- 10 replies
- 2.3k views
-