Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விளையாட்டில் விளையாடப்போகும் அரசியல்! ஒரு வழியாக தமிழர்களை கருவறுத்த நாடும் துணைபோன நாடும் விளையாடப்போகும் உலகக் கோப்பை மட்டையாட்டப் போட்டியில் இரு நாட்டு அரசியலும் சேர்ந்து விளையாட தயாராகின்றது. இக்கோப்பையை வெல்வதால் இந்தியாவுக்கு என்ன நன்மை? சிறீலங்காவுக்கு என்ன நன்மை ? இந்தியாவுக்கு கௌரவம், சிறீலங்காவுக்கு வியாபாரம். ஆம் சிறீலங்கா வென்றால் உலக மட்டத்தில் பொருளாதாரத்தை சற்று தூக்கி நிறுத்த முடியும். சுற்றுலாத்துறையை சற்று ஆசுவாசப்படுத்தவும் முடியும் என நம்புகின்றது சிறீலங்கா அரசு. அதே நேரம் அவப்பெயருக்கு உள்ளாகியிருக்கும் சிறீலங்காவுக்கு இவ் வெற்றி சற்று ஆறுதலாக அமையவும் வாய்ப்புள்ளதாக கருதுகின்றது. அதன் ஒரு கட்டமாகத்தான் நியூசிலாந்து அதிபருக்கு …

  2. நாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம். (படங்கள் இணைப்பு) தஞ்சைமாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர்கட்சியினரின் தீவிரமான பிரச்சாரத்தினால் விறுவிறுப்பும், பரபரப்பும் கூடியுள்ளது. தேர்தல்அறிவிக்கப்பட்டவுடன் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கும்பகோணம் ஒன்றிய அமைப்பாளர்களில்ஒருவரான அ. தமிழ்ச்செல்வன் சுயேட்சை வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அவருடைய வேட்புமனுவும்ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட நிலையில் கடந்த 30-03-2011 அன்று காலை 10 மணி அளவில் கட்சியின்மாநில இளைஞர் பாசறை அமைப்பாளர் வழக்கறிஞர் மணி செந்தில் என்ற திலீபன் தலைமையில் பாபநாசம்அண்ணாசிலை அருகில் இருந்து தாயக விடுதலைப்போரில் வித…

    • 0 replies
    • 1.5k views
  3. விடுதலைப் புலிகளை அழிப்பதில் முன்னின்று திட்டம் தீட்டி செயல்படுத்திய அமெரிக்கா! வெள்ளி, 01 ஏப்ரல் 2011 16:26 தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்பு மற்றும் ஆயுதக் கொள்வனவு என்பனவற்றை முறியடிப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேசச் செயற்பாடுகள் 2006ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கப்பட்டன என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் யுத்தநிறுத்த உடன்படிக்கை முடிவுக்குவந்து யுத்தம் தொடங்கப்பட்ட காலப்பகுதியிலேயே அமெரிக்கா இத்திட்டத்தை முன்னின்று தொடங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் சட்டவிரோத நிதி சேகரிப்பு மற்றும் சட்டவிரோத ஆயுதக் கொள்வனவை ஆகியவற்றை தடுக்கும்முகமாக இரண்டு சர்வதேச தொடர்பாடல் குழுக்கள் அமைக்கப்பட்டன. இத்த திட்டத்திற்கு இலங்கை விர…

    • 0 replies
    • 1.5k views
  4. தமிழர் பூமியில் சிங்களவர்கள் தாராளமாகக் குடியேறட்டும்: தடுப்போர் மீதுதான் நடவடிக்கை எடுப்பேன். மீள்குடியேற்றப் பிரதியமைசச்ர் கூறுகிறார் [Friday, 2011-04-01 02:15:38] சிங்களவர்கள் மட்டக்களப்பில் குடியேறுவதை தடுக்கக் கூடாது என்றும் அங்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயககமூர்தி முரளிதரன், அவ்வாறு தடுப்ப முயங்சிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடபடும் எனவும் எச்சரித்துள்ளார். மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கெவிளியாமடு பகுதியில் கால்நடை மேச்சலுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிங்களவர்கள் அத்துமீறி காணிகளை அபகரித்து அதில் விவசாயம் செய்து வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்துஅத…

  5. வியாழக்கிழமை, மார்ச் 31, 2011 http://www.eelanatham.net/story/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D வடமராட்சி கிழகு சுண்டிகுளத்தில் நான்கு கடற்படையினர் காணாமல் போயுள்ளனர். இவர்கள் முலைத்தீவில் இருந்து வினியோக நடவடிக்கைக்காக சுண்டுக்குளம் கடற்படை முகாமிற்கு சென்று கொண்டிருந்த வேளை காணாமல் போயுள்ளனராம். இவர்கள் சென்ற படகு, ஆயுதங்கள் உட்பட எவையும் காண…

  6. யாழ்.சிறையில் இருந்து கைதிகள் மூவர் தப்பி ஓட்டம்! Posted by admin On April 1st, 2011 at 9:50 am / No Comments யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து நேற்று வியாழக்கிழமை அதிகாலை மூன்று கைதிகள் தப்பியோடியுள்ளனர். இவ்வாறு தப்பி ஓடியுள்ள மூவரையும் பிடித்துள்ளதாக யாழ். பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை வவுனியா சிறையிலிருந்து வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர் சிறைக் காவலர்களிடமிருந்து தப்பித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மாலை இடம்பெற்றுள்ள தெரிவிக்கப்படும் இச்சம்பவத்தினையடுத்து வவுனியாவின் பல பகுதிகளிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்ப…

  7. வவுனியா மேரியகுளம் புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் தற்கொலை முயற்சி! வெள்ளி, 01 ஏப்ரல் 2011 00:30 வவுனியா மேரியகுளம் மருதமடு புணர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 வயதுடைய ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் அதிக எண்ணிக்கையான மாத்திரைகளை உட்கொண்டதாகவும் பின்பு இவரை வவுனியா மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது உடல்நிலை தேறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தமிழ் இளைஞன் திருமணமாகி சில மாதங்களின் பின் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாலேயே கவலை தாங்கமுடியாமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் மேலும் அறிய முடிகின்றது. tamilenn

  8. முள்ளிவாய்க்கால் முதல் பென்காசிவரை – சர்வதேசத்தின் இரட்டை வேடங்கள்! – இதயச்சந்திரன்! பாரசீகக்குடாவில் கடந்த ஒரு வாரமாக மக்களின் எழுச்சிப் போராட்டங்கள் கொதி நிலையை அடைந்துள்ளது. பூகம்பம், சுனாமியும் ஜப்பானைத் தாக்கி அணு உலைகளில் கசிவினை ஏற்படுத்தி இரண்டாம் உலக மகாயுத்த காலத்து ஹிரோசிமா, நாகசாக்கி அழிவுகளை நினைவுபடுத்துகிறன. எரிசக்தித் தேவையின் 70 வீதத்தை அணு சக்தி ஊடாகப் பெறும் ஜப்பான், அணுஉலை வெடிப்பினால் மோசமாகப் பாதிக்கப்படுவதோடு மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளினால் நிமிர முடியாத அளவிற்கு முடக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து மீண்டெழக்கூடிய பொருளாதார பலம் ஜப்பானிற்கு இருக்கும் அதேவேளை, மன்னராட்சி மற்றும் சர்வாதிகார ஆட்சிகளினால் நீண்டகால பாதிப்பிற்குள்ளான …

  9. தமிழ் இளம் யுவதியை வன்புணர்வு செய்து கொன்ற 3 சிப்பாய்களுக்கு மரண தண்டனை: ரஜனி கொலை வழக்கில் 15 ஆண்டுகளின் பின் தீர்ப்பு 1996ஆம் ஆண்டு உரும்பிராயில் தமிழ் இளம் பெண்ணைக் கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட் படுத்திக் கொலை செய்த இராணுவத்தினர் மூவ ருக்கு உயர் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து மேன் முறையீடு செய்யும் உரிமை குற்றவாளிகளுக்கு ரத்துச் செய்யப்பட்டுள்ளதால் ஜனாதிபதி கையெழுத்திட்டதும் இவர்களுக்கான மரண தண்டனை நிறைவேற்றப்படும். உரும்பிராயைச் சேர்ந்தவரான வெற்றி வேலாயுதம் ரஜனி அல்லது ரஞ்சனி என்ற 24 வயதான இளம் பெண்ணை கோண்டாவிலில் வைத்துக் கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொலை செய்தார்கள் என்று, இராணுவச் சிப்பாய்கள் மூவ…

  10. ஒரு தொகுதி முன்னாள் போராளிகள் நாளை விடுதலை! புனர்வாழ்வளிக்கப்பட்ட 206 முன்னாள் போராளிகள் நாளை வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க- தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.இவர்களில் 205 ஆண் முன்னாள் போராளிகளும் ஒரு பெண் முன்னாள் போராளியும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார். முன்னாள் போராளிகள் சமூகத்தோடு இணைக்கும் நிகழ்வு வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளதுடன் இந்நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளதாக பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார். இதேவேளை, இதனை விட அதிகமான இன்னுமொரு தொகுதி புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போர…

    • 0 replies
    • 761 views
  11. மன்னாரில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தேடுதல் வேட்டை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மாவட்டத்தின் பல இடங்களிலும் இன்று(31-03-2011) பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தேடுதல் வேட்டை ஒன்றை மேற்கொண்டுள்ளதோடு இன்று(31-03-2011) காலை முதல் படையினர் வீடு வீடாகச்சென்று குடும்ப விபரங்களை திரட்டி வருகின்றனர் என குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஒவ்வெரு வீட்டிற்கும் செல்லும் இராணுவத்தினரும் பொலிஸாரும் குடும்பத்தில் உள்ளவர்களைத்தவிர வேறு யாரும் வருவதா?என்ற கேள்வியினையும் கேட்கின்றனர்.இதனால் வீட்டில் உள்ள பெண்கள் அச்சத்தில் உள்ளனர். மன்னாரில் உள்ள அனைத்து வீதி சோதனைச்சாவடிகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. பஸ்,துவிச்சக்கர வண்டி,முற்சக்கர வண்ட…

  12. இலங்கையின் வடபுலத்தில் திடிரென ராணுவ நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ளன: இலங்கையின் வடபுலத்தில் இன்று திடீரென அதிகரித்துள்ள ராணுவ நெருக்குவாரங்கள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கையின் வடபுலத்தில் இன்று திடீரென அதிகரித்துள்ள ராணுவ நெருக்குவாரங்கள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் என்றுமில்லாதவாறு கடந்த யுத்த காலத்தில் இருந்ததைப் போன்று படைத்தரப்பு செயற்பட்டுக் கொண்டிருந்தாக குளோபல் தமிழ்ச்செய்தியாளர் தெரிவித்துள்ளார். வன்னிப் பகுதியில் இரணைமடு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உத்தியோகப் பற்றற்ற ஊரடங்கு போன்று மக்கள் எவரையுமே முழுமையாக வெளிவர விடாது முழுமையான சோதனை நடவடிக்கைகள் இட…

  13. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை நேற்று இரவு ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன் மூலம், அ.தி.மு.க., - ம.தி.மு.க.,வுடனான ஊடல் நேற்று முடிவுக்கு வந்தது. சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கும் வைகோ, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற வேண்டுமென, ம.தி.மு.க., தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கவுள்ளார் என, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த ம.தி.மு.க.,வுக்கு 21 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என வைகோ விடுத்த கோரிக்கையை ஜெயலலிதா ஏற்கவில்லை. 9 தொகுதிகள் வரை மட்டுமே வழங்க முடியும் என அ.தி.மு.க., தெரிவித்ததால், தேர்தலைப் புறக்கணிக்க ம.தி.மு.க., முடிவு செய்தது. இந்த அறிவிப்பை வெளியிட்ட…

    • 1 reply
    • 2.3k views
  14. கொழும்பு மகசின் சிறைச்சாலையின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்துள்ளது! வெள்ளி, 01 ஏப்ரல் 2011 00:45 கொழும்பு மகசின் சிறைச்சாலையின் ஒரு பகுதி நேற்றுறு இடிந்து விழுந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த மகசின் சிறைச்சாலையின் சமையலறை கட்டிடம் நேற்று இடிந்து விழுந்துள்ளதாகவும் அவ்வேளையில் சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கைதிகள் 15 பேரும் மயிரிழையில் உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகிறது. சமையலறை முற்றாக இடிந்து விழுந்துள்ளதால் கைதிகளுக்கான உணவு வினியோகத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அத்துடன் கைதிகளை தடுத்து வைத்துள்ள சிறைச்சாலையின் ஏனைய பகுதிகளும் இடிந்து விழலாம் என்ற அச்சத்துடன் கைதிகள் காணப்படுவதாகவும் அறிய முடிகின்றது. tam…

  15. பிளவுப்பட்டு வருகிறதா ராஜபக்ஸ சகோதர நிறுவனம்... வியாழக்கிழமை, 31 மார்ச் 2011 16:54 ராஜபக்ஸ சகோதர நிறுவனம் வெடித்து பிளவுப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜபக்ஸ நிறுவனத்தின் இரண்டு சகோதரர்கள் ஒன்றாக சேர்ந்து, மற்றுமொரு சகோதரான பசில் ராஜபக்ஷவை ஓரங்கட்டி வருவதால், அவர்களுக்குள் இந்த பிளவு ஏற்பட்டுள்ளதாக அலரி மாளிகை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பசில் ராஜபக்ஸ பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற போதிலும், அவரது அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி கொள்ள முடியாத நிலைமை அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அபிவிருத்தி திட்டங்களை முன்வைத்தவர்கள் மற்றும் புதிய திட்டங்களுடன் வருபவர்களை, சந்திப்பதை, பசில் தவிர்த்து வருகிறார். நிதியமைச்சில், அமைச்சர் பசில் ரா…

  16. கைது செய்யப்பட்ட பென்னட் ரூபசிங்க இலங்கை அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் இணைய தளம் ஒன்றின் ஆசிரியர், மிரட்டல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கிறார். லங்கா ஈ நியூஸ் என்னும் செய்தி இணைய தளத்தின் செய்தி ஆசிரியரான பென்னட் ரூபசிங்கவே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இந்த இணைய தள அலுவலகம் முன்னர் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரின் தமயனை பென்னட் ரூபசிங்க தொலைபேசியில் மிரட்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்டு செயற்படுகின்ற எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பைச் சேர்ந்த கில்ஸ் லோர்டட் அவர்கள் இந்த கைதைக் கண்டித்துள்ளார். அந்தச்…

  17. இறுதி போட்டியை காண இந்தியா வருகிறார் ராஜபக்ஷே மாற்றம் செய்த நாள் : மார்ச் 31,2011,11:00 IST இலங்கை : இந்தியா - இலங்கை அணிகள் மோதும் உலககோப்பை இறுதிப் போட்டியை காண இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியா வருகிறார். இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் செய்தி தொடர்பாளர் பந்துலா ஜெயசேகரா இதை தெரிவித்துள்ளார். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=216290

    • 2 replies
    • 1.2k views
  18. இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ண போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று படையினரும் காவல்துறையினரும் இன்று பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பிரார்த்தனை இன்று நல்லூர் ஆலயத்தில் இடம் பெற்றுள்ளது. யாழ் நகரத்தைச் செர்ந்த படையினரும் காவல்துறையினரும் அடங்கிய குழு ஒன்று இன்று நல்லூர் ஆலயத்திற்குச் சென்று வழிபாட்டில் இடுபட்டார்கள். வழிபாடுகளை முடித்துக் கொண்டு அவர்கள் குழுவாக நிற்பதைப் படத்தில் காணலாம். இவர்கள் நடைபெற்று வரும் கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டியில் இலங்கை அணி உலகக்கிண்ணத்தை கைப்பற்ற வேண்டும் என்று பிரார்த்தித்துள்ளார்கள். globaltamilnews

  19. புதன்கிழமை, மார்ச் 30, 2011 2ஜி ஸ்பெக்ரம் அலைக்கற்றை ஊழலில் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சுப்பிரமணியசாமி புரளியை கிளப்பியுள்ளார். இந்த பெரும் ஊழலில் எயர்செல் எனப்படும் தொலைத்தொடர்பு கம்பனிகளில் ஒன்றான எயர் செல் கம்பனியும் சிக்கியுள்ளது. இந்த கம்பனிக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றே சுத்துமாத்து சுவாமி புகார் செய்துள்ளார். இதற்கு ஆமா போட்ட இந்திய மத்திய புலனாய்வு பணியகமும் சுவாமியை முறையாக குற்றசாட்டை பதியுமாறு கேட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு மாதிரி ஸ்பெக்ரம் ஊழலையும் புலிகள் தலையில் போட்டு வழக்கை முடிக்க சிபிஐ திட்டம் போடுகின்றதா? http://www.eelanatham.net/story/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%…

  20. மோதலினால் இடம்பெயர்ந்து பின்னர் வட பகுதிக்கு திரும்பிச் சென்றவர்களில் ஆயிரக்கணக்கான முதியவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் மருத்துவப் பராமரிப்பு தேவைப்படுபவர்களாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த மக்களுக்கு உதவுவதற்கான எந்தவொரு நிகழ்ச்சித்திட்டங்களும் இல்லையென்று கெல்ப் ஏஜ் சிறிலங்காவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சமந்த லியன வதுகே கூறியுள்ளார். வயது முதிர்ந்த இந்த மக்களுக்கு உதவியளிக்கும் சில அமைப்புகளில் ஒன்றாக இந்த கெல் ஏஜ் சிறிலங்கா காணப்படுகிறது. நிராதரவான நிலையிலுள்ள முதியவர்களின் எண்ணிக்கை தொடர்பாக உத்தியோகபூர்வமான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆயினும் வன்னியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 60 வயதைத் தாண்டியவர்களாக இருப்பதாக மதிப்பீடுகள் தெரிவிப…

  21. வடமராட்சியில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட சில பகுதிகளில் இன்று அதிகாலை முதல் 31 மார்ச் 2011 மக்கள் அண்மையில் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட உடுத்துறை உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று அதிகாலை முதல் படைத்தரப்பு பெரும் எடுப்பிலான தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. ஆயிரக் கணக்கில் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் உள்ளேயோ வெளியேயோ செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. வீடுகள் தோறும் படையினர் தமது பதிவுகளை சரி பார்த்த வண்ணம் இருக்கின்றனர் என குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறிப்பாக மக்கள் அண்மையில் குடியேறிய வடமராட்சியின் உடுத்துறையிலும் முல்லைத்தீவின் சில பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் இந்தத் தேடுதல்கள் இடம்பெறுகின்றன. ராணுவப் பவர…

  22. இலங்கை அகதி தற்கொலை முயற்சி! அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் சம்பவம்!! வியாழன், 31 மார்ச் 2011 08:49 அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக மேற்கு அவுஸ்திரேலிய செய்தி முகவரகம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த இலங்கையர் நேற்று அதிகாலையிலேயே பூங்காவிற்கு உலாவச் சென்றுள்ளதாகவும், அங்குள்ள மரத்தில் தூக்கில் தொங்கியிருப்பதை கண்டுள்ள தடுப்புமுகாம் அதிகாரிகள் உடனடியாக அவரை காப்பாற்றியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த நபருக்கு சிறு காயங்களே ஏற்பட்டுள்ளதாகவும் மேலதிக பரிசோதனைகளுக்கு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இச்சம்பவம் நடைபெற்று …

  23. சூரியன் அடுத்த மாதம் இலங்கைக்கு மேலாக பயணிக்கவுள்ளது வியாழன், 31 மார்ச் 2011 01:07 சூரியன் அடுத்த மாதம் இலங்கைக்கு மேலாக பயணிக்கவுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் குறிப்பிடுகின்றது. இதன் காரணமாக இலங்கையில் சூரிய வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் பி. பீ. சமரசிங்க தெரிவித்தார். ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி நாட்டின் தென் பகுதியில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக அவர் கூறினார். அத்துடன் சூரியனில் இருந்து வெளியாகும் கதிர்களின் வீரியம் அதிகரித்துள்ளதாக பணிப்பாளர் நாயகம் பி பீ சமரசிங்க குறிப்பிட்டார். இதேவேளை அதிக வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு வெளி இடங்களுக்குச் செல்லும் போது குளிர்மையான கண்ணாடிகளை அணியும…

  24. வியாழக்கிழமை, மார்ச் 31, 2011 நாட்டில் இடம்பெற்ற யுத்தம் நிறைவு பெற்றது உண்மையே. ஆனால் யாழ்.குடாநாட்டு மக்கள் சமாதானம் கிடைத்ததாகக் கூறும் மனநிலைக்கு இன்னும் வரவில்லை என சர்வமதத் தலைவர்களிடம் மக்களின் பிரதிநிதிகளாகக் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். தேசிய கிறிஸ்தவ திருச்சபையினரின் ஏற்பாட்டில் சர்வமதத் தலைவர்கள் அடங்கிய குழுவொன்று நேற்று யாழ்.வருகைதந்தது. இதன்போது யாழ்ப்பாணம் ரிம்மர் மண்டபத்தில் இன்றுகாலை 8 மணிக்கு கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே யாழ்ப்பாண மக்களின் பிரதிநிதிகளால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. அங்கு மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, யாழ்.குடாநாட்டில் உள்ள மக்கள் சமாதான சூழலில் வாழவில்லை. தினந்தோறும் பயந்த மனநிலையிலேயே வாழ்ந…

    • 0 replies
    • 651 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.