ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
சிறிலங்கா அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவிருந்த சந்திப்பை சிறிலங்கா அரசாங்கம் பிற்போட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கதத்தின் இம் முடிவு குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளதாகவும் இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான மூன்றாவது கட்டப் பேச்சுவார்த்தையையே சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறு பிற்போட்டுள்ளது. சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடக ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது இச் சந்திப்பு எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறும் எனக் கூறியிருந்தார். …
-
- 1 reply
- 594 views
-
-
1987ஆம் ஆண்டு இந்திய - இலங்கை சமாதான ஒப்பந்தத்திற்கு புத்துயிர் கொடுப்பதற்கு இந்தியா கொழும்புக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கொள் காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சமாதான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில சரத்துக்களை சிறிலங்கா அரசாங்கம் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என இந்தியா சுட்டிக்காட்டியுள்ளதாக இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து இவ்வூடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 'இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சரத்துக்கள் சிலவற்றை நடைமுறைப்படுத்தாமல் விடுவதன் மூலம் தமது அதிகாரத்தை கொழும்பு அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதாக இந்தியா கருதுகின்ற…
-
- 0 replies
- 699 views
-
-
கே.பி எங்கே? வெள்ளி, 25 பெப்ரவரி 2011 19:23 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் இலங்கையில்தான் உள்ளாரா? என்று சந்தேகப்படுகின்றது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பேச்சாளரான அசாத் மௌலானா இச்சந்தேகத்தை வெளியிட்டு உள்ளார். இவர் இது குறித்து தெரிவித்து உள்ளவை வருமாறு:- "கே.பி எங்கு உள்ளார்? என்பது எமக்கு தெரியாது. நாம் இவரை ஒருபோது காணவே இல்லை. இவருடன் பேசியமையும் இல்லை. இவரை பற்றி பத்திரிகைகளில் மாத்திரமே வாசிக்க முடிகின்றது. இவர் இலங்கையில்தான் உள்ளாரா? என்பதுகூட எமக்கு தெரியாது. கே.பியால் முன்னெடுக்கப்படுகின்றன என்று கூறப்ப…
-
- 24 replies
- 5.1k views
-
-
பேரன்னை பார்வதி அம்மாளுக்கு அஞ்சலி செலுத்தும் தீர்மானத்தை நிறைவேற்ற மாநகரசபை முதல்வர் ஏற்றுக் கொள்ளாமையினால் இன்று மாநகர சபை பொதுக்கூட்டம் குழப்பகரமானது. பரஸ்பரம் ஆளும்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மாநகர சபையில் எந்தவொரு தீர்மானமும் முன்னெடுக்கப்படவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பிலான மாநகர உறுப்பினரான சங்கையா என்பவர் பார்வதி அம்மாவின் சிதை சேதமாக்கப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்களைக் கண்டித்தும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற முற்பட்டார். எனினும் இது மாநகர சபைக்கு அப்பாற்பட்டது. இந்த விடயம் தொடர்பில் பின்னர் பார்க்கலாம். இப்போது ஆராய முடியாது என மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் தெரிவித்துள்ளார். இத…
-
- 1 reply
- 899 views
-
-
போர்க் குற்ற விசாரணைகளுக்கு மீண்டும் ஐ.நாவிடம் வலியுறுத்தல் - சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவிப்பு வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற் கொள்ளப்பட்ட போர் நியமங்களுக்கு எதிரான போர்க்குற்றங் கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து சுயாதீனமான சர் வதேச விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி சர்வ தேச மன்னிப்பு சபை ஐக்கிய நாடுகள் சபையிடம் மனுவொன்றை கையளித்துள்ளது. நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் வைத்து சர்வதேச மன்னிப்புச் சபையால் கடந்த 22 ஆம் திகதி இம் மனு கையளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை தொடர்பான ஆய்வாளரான யூலன்டா பொஸ் டரும் 2006ஆம் ஆண்டு இலங்கை படையினரால் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாண…
-
- 0 replies
- 689 views
-
-
கூட்டமைப்புடன் கஜேந்திரகுமாரை இணைப்பதில் என்ன தவறு இருக்கிறது - அரியநேத்திரன் எம்.பி. கேள்வி[ தமது கொள்கையில் பற்று உறுதியுடன் இருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைப்பது குறித்து கூட்டமைப்பு சாதகமாக பரிசீலனை செய்ய வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் 13ஆவது திருத் தச் சட்டத்தின் கீழான தீர்வினை ஏற் றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிக்கு மானால் கூட்டமைப்பினரோடு இணை ந்து செயற்படுவதற்குத் தயாராக இருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கடந்த புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தது. இந்நிலையில…
-
- 0 replies
- 979 views
-
-
கிளிநொச்சி மக்களின் நிலங்களை அரசு அபகரிப்பு... சனிக்கிழமை, 26 பிப்ரவரி 2011 05:40 கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மக்களுக்குச் சொந்தமான ஆயிரத்து 300 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை அரசு அபகரித்துள்ளதாக பிரதேசவாழ் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இந்த நிலப்பரப்பை ராஜபக்ஸ குடும்பமும் அவர்களுக்கு நெருங்கியவர்களும் பங்கு போடுக் கொண்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். முருகண்டி, இந்துபுரம் மற்றும் சாந்திபுரம், ஆகிய பிரதேசங்களே அபகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த பிரதேசங்களில் வாழ்ந்த மக்களுக்கு காட்டுப் பிரதேசங்களை வழங்குவதாக ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 40 வருடங்களாக வாழ்ந்து வந்த தம…
-
- 2 replies
- 727 views
-
-
அரசு - புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் சந்திப்புக்கு கே.பி ஏற்பாடு! ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011 00:46 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரமுகர்களில் ஒருவராக இருந்த குமரன் பத்மநாதன் என்று அழைக்கப்படும் கே.பியின் ஏற்பாட்டில் அரசுக்கும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளில் ஒரு சாராருக்கும் இடையில் அடுத்து வரும் வாரங்களில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது. மேலைத்தேய நாடுகளில் இலங்கை தொடர்பாக நின்று நிலவி வரும் எதிர்மறையான அபிப்பிராயங்களை இல்லாமல் செய்வதற்கும், நாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்கும் ஆக ஒழுங்கு பண்ணப்பட்டு உள்ளது. வேற்றுமைகளை களைந்து …
-
- 2 replies
- 1.5k views
-
-
மீனகத்தின் சிங்களச் சிந்தனையும், தேசிய விடுதலைப் போர்க் களமும்! Posted by: on Feb 26, 2011 ஒரு தேசிய ஆனாமாவைச் சிதைக்க வேண்டுமானால், அதற்கான தளத்தை உருக்குலைக்க வேண்டும். அந்தத் துரோகங்களைச் செய்வதற்கான அடியாட்களாக இப்போது புலம்பெயர் இணைய ஊடகங்கள் சில தம்மை அடையாளப்படுத்தி வருகின்றன. முள்ளிவாய்க்கால் பேரவத்தின் பின்னர் புலம்பெயர் தமிழர்களைப் பல்வேறு அணிகளாக உருவாக்க முயன்று தோல்வியைத் தழுவிய இத்தகைய ஊடகங்கள், தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்கள்மீது போர் தொடுக்கும் அணிகளாகத் திரண்டு வருகின்றன. இத்தகைய ஊடக இணையங்களை அடையாளம் காணவேண்டிய அவசியம் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமாகவே உள்ளது. விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டு, தேசியத் …
-
- 0 replies
- 878 views
-
-
புலம்பெயர் நாடுகளிலும் வெற்றி பெறுகின்றதா, சிங்கள தேசியவாதம்? முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் சிறிலங்கா அரசு தனது அத்தனை கவனத்தையும் புலம்பெயர் தமிழர்கள் மீது திருப்பியது. யுத்த பேரழிவுகளாலும், இராணுவ வன்முறைகளாலும் அச்சத்திற்குள் அடக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் மத்தியிலிருந்து தற்போதைக்கு எந்த எதிர்க்குரலும் எழப் போவதில்லை என்ற நிலையில், சிறிலங்கா அரசு மீது போர்க் குற்ற விசாரணை கோரியும், ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரியும் தொடர் போராட்டங்கள் நடாத்திவரும் புலம்பெயர் தமிழர்களது பலம் சிங்கள தேசத்தை அச்சுறுத்தியதால், அதற்கு எதிரான நடவடிக்கைகளில் சிறிலங்கா புலனாய்வாளர்களும், ஒட்டுக் குழு உறுப்பினர்களும் களம் இறக்கப்பட்டனர். சிறிலங்காவின் இந்த நகர்வுகளுக்குப் பின்னணியில் இந்…
-
- 1 reply
- 848 views
-
-
போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஐ.நா.விடம் சர்வதேச மன்னிப்புச் சபை மனு கையளிப்பு வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர் நியமங்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி சர்வதேச மன்னிப்புச் சபை ஐக்கிய நாடுகள் சபையிடம் மனுவொன்றைக் கையளித்துள்ளது. நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் வைத்து சர்வதேச மன்னிப்புச் சபையால் கடந்த 22ஆம் திகதி இம் மனு கையளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை தொடர்பான ஆய்வாளரான யூலன்டா பொஸ்டரும், 2006ஆம் ஆண்டு சிறிலங்காப் படையினரால் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து …
-
- 1 reply
- 768 views
-
-
களுத்துறை கடலில் மூழ்கி பிரான்ஸ் பிரஜை பலி பொலிஸ் விசாரணை தொடர்கிறது [saturday, 2011-02-26 02:54:00] களுத்துறை கடலில் நீராடச் சென்ற பிரான்ஸ் நாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி இறந்துள்ளார். வடக்கு களுத்துறை ஹோட்டலொன்றில் தங்கியிருந்த இவர், ஹோட்டலுக்கு பின்பக்கமாக உள்ள கடலில் நீராடிய போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 52 வயதான சார்ள்ஸ் ரொபட் என்பவரே இவ்வாறு இறந்துள்ளதோடு, பிரேத பரிசோதனையின் பின்னர் இவரின் சடலம் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது. இறந்தவரின் சடலத்தை பிரான்ஸ் நாட்டுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணை ந…
-
- 1 reply
- 578 views
-
-
சிறிலங்க அரசின் இனவெறி முகம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும், ஈழத் தமிழர்களால் தங்களின் தேசியத் தலைவராக மதிக்கப்படுபவருமான வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் சடலம் எரிக்கப்பட்ட சிதையில் நாய்களை கொன்று போட்டு எரித்த சிறிலங்க இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை, சிறிலங்க அரசின், சிங்கள அரசியலின் இனவெறி முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. மறைந்த பார்வதி அம்மாளின் உறவினர்கள், சிதையில் இருக்கும் சாம்பலைக் கொண்டு இறுதிச் சடங்கை செய்ய வந்து பார்த்தபோது, அதில் கொல்லப்பட்ட நாய்களின் எரிந்த சடலங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றுள்ளனர். சிறிலங்க இராணுவத்தின் இந்த ஈனச் செயல் ஈழத் தமிழர்கள் மட்டுமின்றி, உலகத் தமிழர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்ப…
-
- 0 replies
- 959 views
-
-
உலகின் மிக மோசமான தலைநகரம் கொழும்பு! பிரித்தானிய சஞ்சிகை கணிப்பு செவ்வாய், 22 பெப்ரவரி 2011 00:52 உலகில் மிக மோசமான நிலையில் உள்ள பத்து தலைநகரங்களில் கொழும்பும் ஒன்று என்று பிரித்தானிய தலைநகர் லண்டனில் இருந்து வெளியாகின்ற் The Economist சஞ்சிகை தெரிவித்து உள்ளது. இச்சஞ்சிகை சுகாதாரம், கலாசாரம், சுற்றாடல், கல்வி, தனி நபர் பாதுகாப்பு ஆகியன உட்பட 30 அம்சங்களின் அடிப்படையில் மிகவும் சிறந்த பத்து தலைநகரங்களையும், மிகவும் மோசமான நிலையில் உள்ள பத்து தலைநகரங்களையும் தெரிவு செய்து வைத்து உள்ளது. மிக மோசமான நிலையில் உள்ள 10 தலைநகரங்களுக்குள்ளும் மிகவும் கேவலமான நிலையில் இலங்கை உள்ளது என்கிறது இச்சஞ்சிகை. மிகவும் மோசமான நிலையில் உள்ள தலைநகரங்கள் என்று இச்சஞ்சிக…
-
- 18 replies
- 2.8k views
-
-
மதபோதகர்கள் மூவர் பிள்ளையானின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு இராணுவப் புலனாய்வாளர்களால் சிறைப்பிடிப்பு! Posted by admin On February 25th, 2011 at 1:45 pm / மட்டக்களப்பில் வெள்ளநிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த மதபோதகர்கள் மூவர் பிள்ளையான் குழுவினரால் அழைக்கப்பட்டு இராணுவப் புலனாய்வாளர்களால் நான்காம் மாடிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,கடந்த வெள்ள அனர்தத்தின் போது கிழக்கில் பாரிய அவலங்களை எதிர்கொண்டு வந்த மட்டக்களப்பு மக்களுக்கு உதவி புரிந்த சிவானந்தம் லூப் பாஸ்ரர் கணேசமூர்த்தி,சிவகுமார் யோனத் ஆகிய மூவருமே பிடிக்கப்பட்டவர்களாவர் கடந்த 22 ஆம் திகதி தமது அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறு கிழக்குமாகாண முதலமைச்சர் பிள்ளையான் அலுவலகத்தி…
-
- 3 replies
- 1.2k views
-
-
Feb 24, 2011 / பகுதி: செய்தி / யுத்தக்குற்றங்கள் தொடர்பாக ஆராய நாம் இங்கு வரவில்லை ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக்குழுத் தலைவி! இலங்கையில் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக ஆராய தாம் இங்கு வரவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றக்குழுத் தலைவி வவுனியாவில் தெரிவித்துள்ளார். தமது வருகையின் நோக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வடக்கு மக்களுக்காக வழங்கப்பட்ட நிதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அவற்றின் மூலம் மக்களுக்குக் கிடைக்கும் பலன்கள் குறித்து ஆராய்வது மட்டுமே என்பதாகவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளா…
-
- 3 replies
- 690 views
-
-
அடிப்படை வசதிகளின்றி கிளிநொச்சி மத்திய கல்லூரி! Posted by admin On February 26th, 2011 at 2:38 am கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஒரேயொரு மத்திய கல்லூரியான கிளிநொச்சி மத்திய கல்லூரி இதுவரை கல்வித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படாத காரணத்தால் எதுவித அபிவிருத்தியும் இன்றி சீரழிந்த நிலையில் காணப்படுகின்றது என கிளிநொச்சி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.கிளிநொச்சி பரவிபாஞ்சான் பகுதியில் குடியிருந்த 28 குடும்பங்கள் இதுவரை மீள்குடியமர்த்தப்படாமல் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தங்கியுள்ளன. இதன் காரணமாகவே இக்கல்லூரி கல்வி திணைக்களத்திடம் ஒப்படைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயில்கின்றனர். இருந்தும் இக்க…
-
- 1 reply
- 643 views
-
-
அரச - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சந்திப்பில் PLOT, TULF, EPDP என்பன இணைய வாய்ப்பு! [ Sat, Feb 26, 2011, 11:15 am ] அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்று வரும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்த கலந்துரையாடலில் தமிழீழ மக்கள் விடுதலை கழகம்(PLOT), தமிழர் விடுதலைக் கூட்டணி(TULF), ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(EPDP) உள்ளிட்ட கட்சிகளையும் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான அடுத்தக் கட்ட சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ளது. இதுகுறித்து தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினக் தலைவர் சித்தார்த்தனுடன் நாம் தொடர்பு கொண்டு வினவியபோத…
-
- 1 reply
- 599 views
-
-
நாய்களைச் சுட்டுக் கொல்வது அல்லது அடித்துக் கொல்வது தண்டனைக்குரிய குற்றம் - இலங்கை ஜனாதிபதி பகிரங்க அறிவிப்பு [saturday, 2011-02-26 03:05:59] மான், மரை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, யானைகள், சிறுத்தை, கரடி, மயில் போன்ற மிருகங்கள் நாட்டின் தேசிய வளங்களாக இருப்பதனால், அவற்றை இறைச்சிக்காக அல்லது வேறு ஏதாவது இலாபமடையும் நோக்கத்திற்காக சுட்டுக் கொல்வது இலங்கைச் சட்டத்தின்படி ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும். அது போன்றே மனிதனின் நெருங்கிய நண்பனான நாயும் சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ள ஒரு மிருகமாகும். நாய்களை துப்பாக்கியால் சுட்டு அல்லது அடித்துக் கொல்வது ஒரு தண்டனைக்குரிய குற்றமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆகவே, நாய்களை கொல்லுதல் அ…
-
- 3 replies
- 1.4k views
-
-
வடக்கில் 1,202 தனியார் வீடுகள், காணிகளில் படையினர்: அரசாங்கம் வட மாகாணத்தில் தனியாருக்கு சொந்தமான 1,202 வீடுகள், காணிகள் மற்றும் நிறுவனங்களில் பாதுகாப்பு படையினர் தங்கியிருப்பதாக அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அரசாங்க பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தெரிவித்தார். தனியாருக்கு சொந்தமான 1,129 வீடுகள், காணிகள் மற்றும் நிறுவனங்களை இராணுவத்தினர் பயன்படுத்துவதாகவும் 35 தனியார் காணிகளை கடற் படையினர் பயன்படுத்துவதாகவும் இரண்டு அரிசி ஆலைகள் மற்றும் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள 32 வீடுகளையும் காணிகளையும் விமான படையினர் பயன்படுத்துவ…
-
- 1 reply
- 488 views
-
-
தமிழ் கூட்டமைப்பு எம்.பி யோகேஸ்வரனுக்கு ஒரு சபாஷ்! வெள்ளி, 25 பெப்ரவரி 2011 20:31 மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அம்மன் ஆலயங்களில் நேர்த்திக் கடன்களின் பொருட்டு மக்களால் வழங்கப்பட்ட நிலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக் கணக்கான சேலைகளை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட எம்.பியுமான சீனித்தம்பி யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்து உள்ளார். இவர் இவ்வாலயங்களின் தர்ம கர்த்தாக்களுக்கு இக்கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் அனுப்பி உள்ளார். இவர் இக்கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பவை வருமாறு:- "இந்து சமயம் சனாதன தர்…
-
- 4 replies
- 995 views
-
-
Feb 24, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / தாயகன் போர்க்குற்ற நபர்களை பான் கி-மூன் இரகசியமாகச் சந்திக்க காரணம் என்ன? வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரச தரப்பினரை, ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான் கி-மூன் நேற்று (23-02-2011) இரகசியமாகச் சந்தித்துள்ளமை புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபை, மற்றும் நோர்வே, பிரித்தானியா போன்ற நாடுகளின் ஏற்பாட்டில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான அங்கத்தவர்களை சுட்டுப்படுகொலை செய்திருந்த, முன்னாள் படைத்தளபதியும், ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறீலங்காவின் இந்நாள் நிரந்தர துணை வதிவிடப் பிரதிநிதியுமான சவேந்திர சில்வா, மற்றொ…
-
- 2 replies
- 842 views
-
-
The European Union (EU) has re-listed the Liberation Tigers of Tamil Eelam (LTTE) following a comprehensive review of listed terrorist groups, according to the Ministry of External Affairs. The announcement was made through the Council Implementing Regulation on the 31st of January this year and published in the Official Journal of the European Union. The EU terrorist listings made in terms of article 2(3) of Council Regulation (EC) No. 2580/2001 of 27 December 2001 on specific restrictive measures directed against certain persons and entities with a view to combating terrorism, proscribes organizations listed operating in EU member countries and freezes thei…
-
- 3 replies
- 1k views
-
-
நாய்களை சுட்டுப்போடும் செயற்பாடு தான் ஜனநாயகமா?: செல்வம் February 25, 2011 பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகச் சென்ற மக்களை மிரட்டி அவர்களை அச்சுறுத்துவதும், அவரது இறுதிச் சடங்கு இடம்பெற்ற இடத்தில் நாய்களை சுட்டுப் போடுகின்ற மிலேச்சத்தனமான செயற்பாடுகள் தான் இந்நாட்டிலுள்ள ஜனநாயகமா? இதற்காகத்தான் அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றதா என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார். அரசாங்கத்தின் அரசியல் இலாபத்துக்கான அவசரகாலச் சட்டமானது சிறைகளிலுள்ள தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலைக்கும் தடையாக இருப்பதாகவும் கூறிய அவர், தமிழ் மக்களை அடிமையாகவே வைத்திருக்க வேண்டும் என்பதுதான்…
-
- 2 replies
- 897 views
-
-
மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் வாழும் முதலாம் தர மோசடிக்காரத் திருடன்: சோமவங்ச அமரசிங்க! வெள்ளிக்கிழமை, 25 பிப்ரவரி 2011 14:30 அபிவிருத்தி என்ற மாயையை மக்களுக்கு காட்டிக் கொண்டே மோசடியான முறையில் நாட்டை ஏமாற்றிக் கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் வாழும் முதலாம் தர மோசடிக்காரன் மற்றும் திருட்டுப் போ்வழி என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவங்ச அமரசிங்க குற்றம் சாட்டுகின்றார். வெறுமனே பகட்டுக்காக மாத்திரம் பெளத்த நம்பிக்கைவாதியாக தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் மஹிந்த ராஜபக்ஷ பௌத்தத்தின் எந்தவொரு கொள்கை, கோட்பாடுகளையும் கடைப்பிடிப்பதேயில்லை என்று குற்றம் சாட்டும் சோமவங்ச அமரசிங்க, அந்த வகையில் இலங்கையின் முன்னணி மோசடிக்காரத் திருடன் என்று மஹிந்த ராஜபக்ஷவை குறிப்பிடலாம…
-
- 3 replies
- 1k views
-