ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி! யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி எதிர்வரும் 8ம் திகதி முதல் 12ம் திகதி வரை இடம்பெறவுள்ளது, ‘யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023’ என்ற தலைப்பில், யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தினால் நடாத்தப்படும் இந்த போட்டியில் 800க்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் சகல பாகங்களில் இருந்து மாத்திரம் அல்ல தமிழ்நாடு உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச தரத்தில் நடத்தப்படும் சதுரங்க போட்டியில் 150 இற்கு மேற்பட்டவர்களுக்கு பரிசு கிடைக்கும் விதமாக வரையறுக்கப்பட்டு…
-
- 1 reply
- 320 views
-
-
முல்லைத்தீவில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் தயாராகின்றன! November 12, 2023 முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களும் தயாராக ஆரம்பித்துள்ளது. இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் செய்வதற்கான சிரமதான பணிகள் தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினரால் இன்று (11) ஆரம்பிக்கப்பட்டது. முன்னதாக மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி மலர்வணக்கம் இடம்பெற்றதை தொடர்ந்து சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாண்டும் கார்த்திகை 27 மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக இடம்பெறும் எனவும் அனைத்து மாவீரர் பெற்றோர் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறும் முன்னாயத்த பணி…
-
- 0 replies
- 267 views
-
-
20 OCT, 2023 | 08:24 AM இன்று முதல் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க இலங்கை மின்சார சபைக்கு அனுமதிக வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மின்சார கட்டணத்தை அதிகரிக்க இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மின்சாரம் பயன்படுத்தப்படும் அலகுகளுக்கு ஏற்ப, மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் விதம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/167321
-
- 7 replies
- 584 views
- 1 follower
-
-
11 NOV, 2023 | 04:40 PM பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செத்தல் மிளகாயில் அஃப்லாடாக்சின் (Aflatoxin) கலந்துள்ளமையினால், அதை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் 25 மிளகாய் கொள்கலன்களும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர்கள் குழுவொன்று இந்த மிளகாயை இறக்குமதி செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, உணவின் தரம் தொடர்பான பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்கு சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.…
-
- 3 replies
- 535 views
- 2 followers
-
-
12 NOV, 2023 | 11:28 AM வவுனியா ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கோமரசங்குளம் பகுதியிலுள்ள குளமொன்று உடைப்பெடுத்தமையினால் அதன் கீழுள்ள 15 ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் முழ்கி பாதிப்படைந்துள்ளமையுடன் குளத்தின் நீர் தொடர்ந்தும் வெளியேறிய வண்ணமுள்ளது. மாவட்டத்தின் கடந்த சில நாட்களாக தொடரும் மழையுடனான காலநிலையினால் பல குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்து காணப்பட்ட நிலையிலேயே இவ் குளம் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) காலை உடைப்பெடுத்துள்ளது. ஊர் மக்கள் பல மணிநேரமாக குளத்தின் உடைபெடுத்த பகுதியினை மண்நிரப்பி கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவை பயனளிக்கவில்லை. கோமரசங்குளம் பகுதியிலுள்ள இவ் குளம் நீண்ட…
-
- 0 replies
- 265 views
- 1 follower
-
-
12 NOV, 2023 | 11:05 AM முதலாம் உலகப் போரில் இருந்து இன்று வரை தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்த் தியாகம் செய்த போர்வீரர்களை நினைவு கூர்ந்து கௌரவிக்கும் முகமாக, இலங்கை முன்னாள் பாதுகாப்பு படைவீரர்கள் சங்கம், ஆயுதப்படைகளுடன் இணைந்து ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் "ஆயுதப்படையினர் நினைவு தினம் - 2023" பிரதான வைபவமும் பொப்பி மலர் தின நிகழ்வும் நேற்று சனிக்கிழமை (11) பிற்பகல் கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் அமைந்துள்ள இராணுவ நினைவுத் தூபியின் முன்பாக முப்படைகளின் தளபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களை நினைவு கூரும் வகையில், கொழும்பு விஹார மகாதேவ…
-
- 0 replies
- 283 views
- 1 follower
-
-
11 NOV, 2023 | 08:20 PM ஆர்.ராம் அடுத்துவரும் புத்தாண்டின் முற்பகுதியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி.விஜயதாஸ ராஜாபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துவெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சம்பந்தமாக சிவில் மற்றும் இதர தரப்புக்களுடன் கலந்துரையாடும் செயற்பாடுகளுக்காக அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் செயற்பாடுகள் தாமதப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது அந்…
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
11 NOV, 2023 | 10:34 AM இலங்கை ஆயர் பேரவையினர் திருத்தந்தை பிரான்சிசை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஐந்தாண்டுக்கு ஒருமுறை உரோமை சென்று திருத்தந்தையை சந்திப்பது வழக்கமாக மாகும். இதன் அடிப்படையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இம் முக்கியத்துவம் வாய்ந்த திருப் பயணத்தில் இலங்கையின் வடக்கு - கிழக்கு ஆயர்களும் இணைந்து கொண்டுள்ளனர். இதன் போது இலங்கை கிறிஸ்தவ திருச்சபையின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால விவகாரங்கள் குறித்து பாப்பரசருக்கு தெரிவிக்கப்பட்டதுடன், பரிசுத்த பாப்பரசரின் ஆலோசனைகளையும் பெற்றார். இந்த திருப்பயணமானது ‘Ad Limina Visit’ என திருச்சபையால் அழைக்கப்படுகிறது…
-
- 1 reply
- 504 views
- 1 follower
-
-
ஓர் இனம் அழிவதை பாற்சோறு கொடுத்து கொண்டாடும் மனநிலையில் தமிழர்கள் இல்லை! ”காசா போலவே வடக்கும் கிழக்கும் சுடுகாடாக மாற பேரினவாதம் விரும்புகின்றது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். பலஸ்தீனுக்கு ஆதவாக கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” காசா சுடுகாடாக மாறுகிறது! வடக்கையும் கிழக்கையும் சுடுகாடாக வைத்துக் கொள்ளவே பேரினவாதம் விரும்புகின்றது. சுடுகாடாக ஆக்கப்படும் நேரத்தில் மௌனம் காத்தவர்கள் பலர். எம்மால் தமிழராக மக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏன் எனில் அதன் …
-
- 42 replies
- 3.4k views
-
-
175,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 15ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 75 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 65 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. https://thinakkural.lk/article/280963
-
- 0 replies
- 420 views
- 1 follower
-
-
தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி போராட்டம்! November 11, 2023 முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்க கோரி இன்று (11.11.23) காலை 9.30 மணியளவில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள துயிலும் இல்லம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணியில் பாரிய பிரதேசத்தை இலங்கை இராணுவத்தின் 14 SLNG படைப்பிரிவு கையகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கு இடவசதி இன்றியும் தமது உறவுகளை புதைத்த இடத்தில் அஞ்சலி செலுத்த முடியாத நிலை உறவுகளுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மாவீரர் துயிலும் இல்லக் காணியி…
-
- 1 reply
- 398 views
- 1 follower
-
-
11 NOV, 2023 | 04:03 PM சீன மக்கள் குடியரசினால் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 26 ரனொமொடோ (RANOMOTO) வகை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 100 LENOVO டெஸ்க்டொப் கணனிகள் ஆகியவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோரின் ஒருங்கிணைப்புடன், பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஷென் ஹொங்விடம் (Qi Zhenhong) விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பணிகளை இலகுவாக்க இந்த நன்கொடையை வழங்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 564 views
- 1 follower
-
-
சீனாவின் கோரிக்கைக்கு ஜனாதிபதி மறுப்பு. இலங்கைக்கு அடுத்த வருடம் எந்தவொரு வெளிநாட்டுக் கப்பலும் ஆராய்ச்சி மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக வருவதற்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிவிவகார அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார். அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளதால், பிராந்திய ஒத்துழைப்புக்கு பிரச்சினையான கப்பல்கள் நாட்டுக்கு வருவதை நிறுத்துவதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஜனாதிபதியின் இந்த உத்தரவின் பிரகாரம், வெளிநாட்டுக் கப்பல்கள் அடுத்த வருடம் இலங்கைப் பெருங்கடல் பகுதியில் ஆராய்ச்சிக்காக உள்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டால் அவை இரத்து செய்யப்படும் என்ற…
-
- 1 reply
- 354 views
- 1 follower
-
-
வடக்கு கிழக்கு வேலை வாய்ப்பு – அந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை! November 11, 2023 அரசாங்க நிறுவனங்களில் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்ற போது, அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த அரசாங்க பிரதிநிதிகளுக்களையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் (09) ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில் உள்வாங்கப்பட்ட தென்னிலங்கையை சேர்ந்தவர்களை வடக்கு – கிழக்கு பகுதியில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கான முன்னெடுப்புக்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது கருத்தினை வெளி…
-
- 0 replies
- 183 views
-
-
10 NOV, 2023 | 08:09 PM (எம்.மனோசித்ரா) இலங்கையில் 2024 காலாண்டுக்குள் விளையாட்டு தொடர்பான பல்கலைக்கழகத்தை அமைக்கும் பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம். அரச மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் வருமானத்தையும் நோக்கமாகக் கொண்டு இந்த பல்கலைக்கழகம் நிறுவப்படும் என்று விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் விளையாட்டு தொடர்பான பல்கலைக்கழகமொன்றை அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பட்டப்படிப்புக்களை நிறைவு செய்யக் கூடிய வகையில் இந்த பல்கலைக்கழகத…
-
- 0 replies
- 209 views
- 1 follower
-
-
04 NOV, 2023 | 10:29 AM மாத்தறை ஹக்மான தெனகம பிரதேசத்தில் இடம்பெற்ற விசேட சுற்றுவளைப்பின் போது 7,140 மில்லிகிராம் பெறுமதியான 34 ஹெரோயின் போதைப்பொருள் பொதிகளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 9 பேர் சந்தேகத்தின் பேரில் வெள்ளிக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் தெய்யந்தர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவராவார். ஹக்மன பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் தெனகம பிரதேசத்தில் நேற்றைய தினம் விசேட சுற்றுவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் 3,150 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், ஏனைய சந்தேக நபர…
-
- 1 reply
- 331 views
- 1 follower
-
-
10 NOV, 2023 | 04:39 PM பங்களாதேஷ் மருந்துக் கைத்தொழில் சங்கத்தினால் இலங்கை சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்ட ஆயிரம் கிலோகிராம் எடையுள்ள மருத்துவ நன்கொடைகள் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் நாட்டுக்கு எடுத்துவரப்பட்டது. “ பல ஆண்டுகளாக நாம் உலகம் முழுவதிலுமிருந்து மருந்துகளை அனுப்பியுள்ளோம். விமானம் மூலம் சரியான நேரத்தில் மருந்துகள் விநியோகம் செய்வதன் மூலம் மருந்துகளை இலங்கையில் கிடைப்பதற்கு நாங்கள் தொடர்ந்து எம்மால் முடிந்த பங்களிப்பை வழங்குவோம்” என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தலைவர் சமிந்த பெரேரா கூறினார். இந்த மருந்துகள் டாக்காவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL 190 விமானத்தில் கடந்த நவம்பர் 4 அன்று கொழும்புக்கு கொண்டுவர…
-
- 3 replies
- 378 views
- 1 follower
-
-
10 NOV, 2023 | 05:53 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கை கிரிக்கெட்டுக்குள் இனப்பாகுபாடு காட்டப்படுகிறது. இது கிரிக்கெட் அணியல்ல. இது ஒரு சிங்கள அணி என்ற நிலையே உள்ளது. இந்நிலைமை மாற்றப்பட்டு இலங்கை கிரிக்கெட் அணிக்குள் சகல இனங்களும் உள்வாங்கப்பட வேண்டும். எல்.பி.எல். போட்டியில் பிரகாசித்துக்கொண்டிருக்கின்ற வியாஸ்காந்துக்கு உரிய பயிற்சிகள் வழங்கி அவரை இலங்கை கிரிக்கெட் அணிக்குள் இணைத்துக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற கலஹா பத்ரவதி தேசிய பிக்குமார் பராமரிப்பு நிலைய நம்பிக்கைப் பொறுப்பு சட்டமூலம் மீதா…
-
- 1 reply
- 505 views
- 1 follower
-
-
வடக்கு – கிழக்கில் சீனாவின் முதலீடுகளை அனுமதிக்கக் கூடாது : செல்வம் அடைக்கலநாதன்! தமது இலாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்படும் சீனாவின் எந்த முதலீட்டு நடவடிக்கைகளையும் வடக்கு கிழக்கில் அனுமதிக்கக்கூடாதென நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில். “இலங்கையிலே அபிவிருத்தி என்ற போர்வையிலே சீனாவினால் வீதிகள் போடப்பட்டன. ஆனால் வட்டி வீதம் கூடிய நிலையிலேயே தன்னுடைய லாபம் கருதியே இலங்கை அரசாங்கத்திற்கு சீன அரசாங்கம் இந்த வேலைகளை செய்து கொடுத்தது. அதேபோல் போர்ட் சிட்டியும் …
-
- 8 replies
- 455 views
-
-
10 NOV, 2023 | 04:39 PM கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய குளம் பகுதியில் உள்ள பெரும் காடுகளுக்குள் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை (10) தர்மபுரம் பகுதியில் 6 பரல் கோடாவை கிளிநொச்சி பொலிஸார் கண்டுபிடித்து கைப்பற்றியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தர்மபுரம் பொலிஸாரால் பாரியளவு கசிப்பும் கோடாக்களும் கைப்பற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து இன்றைய தினமும் அதே பகுதியில் கசிப்பு உற்பத்திக்காக குளத்தின் நடுப்பகுதியில் தண்ணீருக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆறு பரல் கோடாவை கிளிநொச்சி பொலிஸார் மற்றும் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவி…
-
- 2 replies
- 416 views
- 1 follower
-
-
பாக்.உயர்ஸ்தானிகர் கொலை முயற்சி : 16 வருடங்களின் பின்னர் மூவரும் விடுதலை ! இலங்கைக்கான பாகிஸ்தானின் முன்னாள் உயர்ஸ்தானிகர் பசீர் அலி மொஹமட் கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் பிரதிவாதிகள் மூவரும் 16 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பகுதியில் வாகனப்பேரணியாக சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் உயர் ஸ்தானிகரை கொலை செய்ய முயற்சி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக முதலாவது பிரதிவாதியாக யோகராஜா நிரோஜனும் இரண்டாம் பிரதிவாதியாக சுப்பிரமணியம் சுரேந்திரராஜாவும் மூன்றாம் பிரதிவாதியான கனகரெத்தினம் ஆதித்தன் ஆகிய மூவரும் …
-
- 1 reply
- 236 views
- 1 follower
-
-
10 NOV, 2023 | 07:14 PM கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கி பயணிக்க ஓடுபாதையில் தயாரான விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான கறுப்பு நிற மர்மப் பொதி ஒன்று காணப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விமானம் புறப்பட தயாராக ஓடுபாதையில் பயணித்த போதே இந்த மர்மப்பொதி கழிவறையில் அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தியன் விமான சேவைக்கு சொந்தமான AI 272 விமானம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கி இன்று (10) பிற்பகல் 01.35க்கு பயணத்தை ஆரம்பித்தது. ஓடு பாதையில் விமானம் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், விமானத்தின் கழிவறைக்குள், சந்தேகத்திற்கிடமான மர்…
-
- 0 replies
- 168 views
- 1 follower
-
-
தீபாவளிக்கு விசேட விடுமுறை. தீபாவளியை முன்னிட்டு பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி கொண்டாடப்படுகின்றமையால் மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ்மொழிமூலமான சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, மத்திய மாகாண கல்வியமைச்சின் செயலாளர் மேனக ஹேரத்துக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். 13ஆம் திகதி வழங்கப்படும் விசேட விடுமுறைக்கு, அந்த வாரத்தில் விடுமுறை தினத்தன்று பாடசாலையை நடத்துமாறும் ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார். https://athavannews.com/2023/1357825
-
- 3 replies
- 508 views
- 1 follower
-
-
10 NOV, 2023 | 01:18 PM யாழ்ப்பாணம் - அல்வாய் பகுதியில் கடந்த மாதம் மூதாட்டி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட 3 பேர் நெல்லியடி பொலிஸாரினால் நேற்றைய தினம் வியாழக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - அல்வாய் பகுதியில் கடந்த ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி வீடொன்றில் இருந்து மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அல்வாய் கிழக்கை சேர்ந்த பழனிப்பிள்ளை தில்லைராணி (வயது 84) என்ற மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து, அவரது உடற்கூற்று பரிசோதனையின்போது சந்தேகங்கள் இருந்தமையால் அவரது உடற்பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனையடுத்து, கொழும்பில் மேற்கொள்ள…
-
- 0 replies
- 237 views
- 1 follower
-
-
கிளிநொச்சி நீதிமன்றில் முதல் மரண தண்டனை யது பாஸ்கரன் கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் பெண்ணொருவரை கொலை செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஒன்பது வருடங்களின் பின்னர், வியாழக்கிழமை (09) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. மாத்தளை பகுதியைச் சேர்ந்த இராஜசுலோஜனா என்ற பெண்ணை, 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ம் திகதி கத்தியால் குத்திக் படுகொலை செய்து கிணற்றுக்குள் தள்ளிவிட்டுள்ளார். அதன்பின்னர் அப்பெண் சடலமாக மீட்கப்பட்டார் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சி பொலிஸார் மற்றும் CID யினர் சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு அயலில் உள்ள சிவில் பாதுகாப…
-
- 1 reply
- 295 views
-