Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஞாயிற்றுகிழமை, ஜனவரி 23, 2011 சுவிஸ் நாட்டில் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்களின் குறிப்புக்களில் இருந்து எடுக்கப்பட தகவல்களின் அடிப்படையில் இலங்கை அரச படை அதிகாரிகள் விடுதலைப்புலிகளிடம் ஊதியம் பெற்றுவருவதாக கூறப்படுகின்றது. இந்த படை அதிகாரிகள் இப்போதும் சேவையில் இருப்பதாக கூறபப்டுகின்றது. இதனால் சரத்பொன்சேகாவின் ஆதரவு படை அதிகாரிகளுக்கு மேலும் சங்கடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் படை நிர்வாகத்திர்குள் பீதியும் எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது. Add new comment My link

  2. இலங்கை காலி(Galle) இலக்கிய விழா – நம்பிக்கை தரும் எதிர்க்குரல்கள் : சபாநாவலன் உலகத்தின் அனைத்து ஜனநாயக விழுமியங்களையும் மனிதப்பிணங்களுள் புதைத்துவிட்டு தெற்காசியாவின் தென்கோடியில் அரசியல் தர்பார் நடத்திக்கொண்டிருக்கிறது இலங்கை அரச பாசிசம். அடிப்படை உரிமைகள் குறித்துச் சிந்திக்க முற்படுகின்ற மனிதனைக்கூட காணாமல் போனவனாக, தேசத் துரோகியாக மாற்றுகின்ற வல்லமை பெற்றிருக்கின்றது ராஜபக்ச அரசு. மூன்று தினங்களுள் ஐம்பதாயிரம் அப்பாவி மனிதர்களை, தமிழ்ப் பேசும் மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக நந்திக் கடலோரத்தின் கிராமங்களில் கனரக ஆயுதங்களோடு கொன்றுபோட்ட இலங்கை அரசு, உலகின் அனைத்து அரச பயங்கரவாதங்களையும் விஞ்சியிருக்கின்றது. ஜனநாய முகம்காட்டும் அனைத்து உலக வல்லரசுகளின் மௌன…

  3. குறிப்பு : மகிந்த ராஜபக்சவின் அமெரிக்க வருகையும் - தமிழர்களின் எதிர்ப்பும் ஒளிப்பதிவுத் திகதி : 23 சனவரி 2011 ( ஞாயிறு ) உருவாக்கம் : நாதம் ஊடகசேவை - தகவல்துறை அமைச்சு அமெரிக்காவின் மூன்று முக்கிய இடங்களில் ஒன்றுகூட தயாராகும் அமெரிக்க-கனடிய தமிழ் மக்கள் ! சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்கவின் அமெரிக்க வருகையை முன்னிட்டு, அமெரிக்காவின் மூன்று முக்கிய இடங்களில் ஒன்றுகூடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசுத்தலைவரின் வாசல்தளமான வெள்ளைமாளிகை, ஹிலரி கிளிங்டன் அவர்களுடைய திணைக்களம், போர் குற்றங்கள் தொடர்பிலான நீதிவிசாரணை திணைக்களம், ஆகிய பிரதான இடங்களுக்கு முன்னால் இந்த ஒன்றுகூடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட…

  4. மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் தொடக்க காலம் தொட்டே ஈழ விடுதலைக்காகவும் அம்மக்களின் துயரம் குறித்தும் பொதுக்கூட்டங்களிலும்,கட்டுரைகள்,நூல்கள் வாயிலாகவும் குரல் கொடுத்து வருகிறார்.தாய்த் தமிழகத்தில் எண்ணற்ற முறையில் எல்லா வழிகளிலும் போராட்டங்கள் நடத்திச் சிறைப்பட்டும் இருக்கிறார்.உலக நாடுகள் பலவற்றில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும்,ஐ.நா மன்றம்,மனித உரிமை அமைப்புகள் போன்றவற்றில் வாதிட்டும் தன்னுடைய கருத்துக்களை ஆணித்தரமாகப் பதிவு செய்திருக்கிறார். தற்போது 'ஈழத்தில் இனக்கொலை- இதயத்தில் இரத்தம்' என்கிற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றினைத் தயாரித்தும் இயக்கியும் வெளியிட்டுள்ளார்.இதில் தொடக்கம் முதல் ஈழத்தின் வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் அவர் முள்ளிவாய்க்கால் …

  5. குச்சவெளி பிரதேசத்தில் இன்று சிறிய நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. [1/23/2011 ] [cmr news bulletin ] திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தில் இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குச்சவெளி, கலப்பையாறு சுனாமி வீடமைப்பு திட்டத்துக்கு பின்னால் அமைந்துள்ள களப்பு பகுதிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தினை காணச்செல்லும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதனால் குறித்த பிரதேசத்திற்குள் பொதுமக்கள் பிரவேசிக்காதவாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, இது தொடர்பாக ஆராய்வதற்காக கொழும்பிலிருந்து அனர்த்த முகாமைத்துவ நில…

  6. சிறிலங்கா அரசும் விடுதலைப்புலிகள் அமைப்பும் போர்க்குற்றங்களைப் புரிந்திருப்பதாக தென்னாபிரிக்க நீதிபதி கூறியுள்ளார் [1/23/2011 ] [cmr news bulletin ] சிறிலங்கா அரசும் விடுதலைப்புலிகள் அமைப்பும் போர்க்குற்றங்களைப் புரிந்திருப்பதாக தென்னாபிரிக்காவின் சர்ச்சைக்குரிய நீதிபதியான ரிச்சர்ட் கோல்ட்ஸ்ரோன் (Richard Goldstone) தெரிவித்திருக்கிறார். எனினும், சிறிலங்கா விவகாரம் ஒரு உள்நாட்டு பிரச்சினை என சீனா கருதியதன்; காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை அமைப்பு சிறிலங்காவின் போர்க்குற்ற விசாரணையை எடுத்துக்கொள்ளவில்லை என கூறினார். 2008 – 2009 ஆம் ஆண்டு இஸ்ரேலினால் காசா பகுதியில் இடம்பெற்ற போர்க்ககுற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட இவர், ‘யுத…

  7. கடந்த ஒருவாரகாலமாக சுவிசர்லாந்திலிருந்து வெளிவரும் அனைத்து ஊடகங்களும் தமிழ் மக்கள் தொடர்பான செய்தியை- அவர்கள் தொடர்பாக ஏனைய இனத்தவர்களுக்கு ஒரு காட்சியை வெளிப்படுத்தியிருந்தார்கள். ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு நடக்கும் அநீதிகள் வெளிநாட்டு ஊடகங்களில் வெளிவராதா என ஏங்கியிருக்கும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு கடந்த ஒருவாரகாலமாக சுவிசர்லாந்திலிருந்து வெளிவரும் ஊடகங்கள் மட்டுமன்றி அனைத்து சர்வதேச ஊடகங்களும் வெளியிட்ட செய்திகள் பெரும் அதிர்ச்சியை அல்லது அவமானத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அண்மையில் சுவிசர்லாந்தில் உள்ள 10தமிழர்கள் கைது செய்யப்பட்டு நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த கைது பற்றி நாம் இங்கே பெரிதாக பேச முடியாது. அது சுவிசர்லாந்து…

    • 0 replies
    • 1.1k views
  8. இலங்கை தொடர்பில் ஐ.நா. நிபுணர் குழுவின் 900 பக்கங்கள் கொண்ட அறிக்கை மார்ச்சில். ஞாயிற்றுக்கிழமை, 23 ஜனவரி 2011 19:19 ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனில் நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஐ.நாவின் மனித உரிமை ஆணைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அமர்விலேயே இது சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறிப்பிட்ட இந்த அறிக்கை 900 பகக்ங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. tamilcnn

  9. மீனவன் செத்துக் கொண்டிருக்கும் போது தேர்தல் சீட் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார் கருணாநிதி-சீமான் இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஜெயக்குமார் மற்றும் இருவர் நேற்று கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, சிங்களக் கடற்படையினர் ஜெயக்குமாரை தாக்கிக் கொலை செய்துள்ளனர்.மற்றும் இருவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.இந்த மாதத்தில் மட்டும் இலங்கை ராணுவம் செய்துள்ள இரண்டாவது கொலை இது.இது போக பலமுறை மீனவர்களின் படகுகள் தாக்கப்பட்டும் அவர்களின் வலை அறுக்கப்பட்டும்,மீன்கள் கொள்ளையடிக்கப்பட்டும்,இன்னும் சொல்ல முடியாத பல சித்திரவதைக…

  10. ஜனாதிபதியின் உத்தியோகப்பற்றற்ற அமெரிக்க விஜயத்தின் புதிய திடுக் தகவல்! சனி, 22 ஜனவரி 2011 16:18 இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்காவிற்கு சென்றமை குறித்து பல்வேறு தரப்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அரசாங்கம் அந்த விஜயத்தினை ஜனாதிபதியின் தனிப்பட்ட விஜயம் என கூற பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது. எனினும் அனேகாரின் கருத்து, அது அமெரிக்காவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோள் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த திடீர் விஜயம் இடம்பெற்றது என்பது. இதுதொடர்பாக நேற்றைய தினம் வொஷிங்டனிலுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அன்றாட ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதுகுறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்க…

    • 7 replies
    • 1.4k views
  11. இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்க்கு எதிராக தாக்குதல் நடத்தியவர். இவர் 1945 ஓகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. அவர் ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு சன்னியாசியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆம் வருடம் ஓகஸ்ட் 14 முதல…

    • 0 replies
    • 1.3k views
  12. ஞாயிற்றுகிழமை, ஜனவரி 23, 2011 மாவோயிஸ்டுக்களுக்கு எம்.எஸ்.எவ் எனும் தொண்டர் அமைப்பு உதவி வருவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. மாவோயிஸ்ட்களின் செயற்பாடு பரவி வருவதற்கு இப்படியான சர்வதேச தொண்டர் அமைப்புக்களின் ஒத்துழைப்பும் காரனம் என இந்தியா கூறுகின்றது. ஆனால் தாம் மாவோயிஸ்டுக்கள் பிரதேசங்களில் உள்ள மக்களிற்கே மருத்துவ சேவை ஆற்றுவதாக எம்.எஸ்.எவ் எனும் அமைப்பு கூறியுள்ளது. My link

  13. ஞாயிற்றுகிழமை, ஜனவரி 23, 2011 ஈழநாதம் தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவிக்கப்படும் இராணுவச் சிப்பாய் ஒருவர் நேற்று யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிக்கைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். பளை இயக்கச்சிப் பகுதியில் உள்ள காவலரணில் கடைமையில் இருக்கும் போது அதிகாரிகளினால் வலுக்கட்டயமாக பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்டதினால் மனமுடைந்து சஸித்த தினேஸ் என்ற இராணுவ வீரரே கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு கழுத்தில் சுற்றிக்கட்டப்பட்டுள்ள நிலையில் அழைத்துவரப்பட்ட இவர் யாழ் போதனா னைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். My link

  14. தனது படுக்கையில் அமர்ந்து சுபையா மூசா அபு ரஹ்மே அவரது சமீபத்திய இழப்பைப் பற்றி புலம்பிக் கொண்டிருக்கிறார். இறந்து போன அவரது மகனை நினைவுபடுத்தும் விளம்பர அட்டைப்படங்கள் அவரைச் சூழ்ந்திருக்கின்றன. புத்தாண்டு தினத்தன்று அவரது சொந்த கிராமத்தில் நடந்த‌ இஸ்ரேல் தடுப்புச் சுவருக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் அவரது 35 வயது மகள், ஜவஹர் இறந்து போனார். இஸ்ரேல் ராணுவம் உறுதியாக மறுத்தாலும், கண்ணீர் புகையை அளவுக்கதிகமாக சுவாசித்ததாலேயே அவர் இறந்து போனதாக ஜவஹரின் குடும்பத்தினர் உறுதிபட‌க் கூறுகிறார்கள். “எனக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?” என்கிறார் வலுவற்ற குரலில் அபு ரஹ்மே. தலையில் ஒரு வெண்ணிறத் துணியை சுற்றியிருக்கிறார். கண்களில் வெறுமை படர்ந்திருக்கிறது.அவரது குடும்பத்…

    • 0 replies
    • 504 views
  15. சிறிலங்கா குறித்து சர்ச்சைக்குரிய தென்னாபிரிக்க மனிதவுரிமை நீதிபதி ரிச்சர்ட் கோல்ட்ஸ்ரோன் கருத்து வெளியிட்டிருக்கிறார். சிறிலங்கா அரசும் விடுதலைப்புலிகள் அமைப்பும் போர்க்குற்றங்களைப் புரிந்திருப்பதாக தென்னாபிரிக்காவின் தர்க்கத்திற்குரிய நீதிபதியான ரிச்சர்ட் கோல்ட்ஸ்ரோன் தெரிவித்திருக்கிறார். எனினும், சிறிலங்கா விவகாரம் ஒரு உள்நாட்டு பிரச்சினை என சீனா கருதியதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை அமைப்பு சிறிலங்காவின் போர்க்குற்ற விசாரணையை எடுத்துக்கொள்ளவில்லை என கூறினார். 2008 – 2009 ஆம் ஆண்டு இஸ்ரேலினால் காசாப் பகதியில் இடம்பெற்ற போர்க்ககுற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட இவர், ‘யுத்த களத்தில் பொதுமக்கள்’ என்னும் தலைப்பில், ஸ்ரன்போர்ட் (Stanford…

    • 0 replies
    • 870 views
  16. விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்த நிறுவனங்களின் சொத்துகள் ரத்து 23 ஜனவரி 2011, ஞாயிறு 7:35 மு.ப தமிழீழ விடுதலைப்புலிகளுக்காக கனடாவில் நிதி சேகரித்த உலக தமிழர் பேரவை உள்ளிட்ட அரசார்பற்ற நிறு வனங்களின் சொத்துக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கான தீர்மானத்தை கனடா அரசு மேற்கொண்டுள்ளது. 9 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பயனாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்ராரியோ மற்றும் கியூபெக் பிராந்தியங்களில் இயங்கின வந்த உலக தமிழர் பேரவை மூலம் வருடம் ஒன்றிற்கு 7 லட்த்து 63 ஆயிரம் டொலர் நிதி சேகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேகரிக்கப்பட்ட நிதியில் பெரும்பாலான நிதி தமிழீழ விடுதலைப்புலிக்காக மலேசிய கணக்கு ஒன்றில் வைப்பு செய்ததாகவும் த…

  17. திருகோணமலையில் நில வெடிப்பு!! [ பிரசுரித்த திகதி : 2011-01-23 06:31:06 AM GMT ] திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தில் இன்று அதிகாலை நில வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குச்சவெளி, கலப்பையாறு சுனாமி வீடமைப்பு திட்டத்துக்கு பின்னால் அமைந்துள்ள களப்பு பகுதிலேயே நிகழ்வு இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது. அப்பகுதியில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தினை காண மக்கள் அதிகரித்து வருவதனார் பொதுமக்களை பிரவேசிக்காதவாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இது தொடர்பில் ஆராய்வதற்காக கொழும்பிலிருந்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் திருகோணமலைக்கு பயணமாகி…

  18. பூநகரி கௌதாரி முனைப் பகுதியில் மிகப் பழமை வாய்ந்த கோயில் கண்டுபிடிப்பு * Sunday, January 23, 2011, 2:27 பூநகரி கௌதாரி முனைப் பகுதியில் அழிவுண்ட நிலையில் மிகப்பெரிய இந்து ஆலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பிரதேச மக்களின் தகவல்களை அடுத்து யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் க.புஸ்பரட்ணம் தலைமையிலான குழுவினரே இந்த ஆலயத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.பூநகரி,மண்ணித் தலையை அடுத்துள்ள கௌதாரிமுனைக் காட்டுப்பகுதியில் உயர்ந்த மண் மேடுகளும் பெரிய ஆலமரமும், பனைமரங்களும் நிறைந்த பகுதியில் அழிவுண்ட நிலையில் இந்த ஆலயம் காணப்படுகிறது.சிறிய கர்ப்பக்கிரகத்தையும், முன்மண்டபத்தையும் கொண்டு ஏறத்தாள 50 அடி நீளமும், 15 அடி அகலமும் கொண்டு காணப் படுகின்றது. விமானத்தின் ஒரு ப…

  19. சிறீலங்கா வான்படையின் ஆளில்லாத உளவு விமானம் வீழ்ந்து நொருங்கியது * Sunday, January 23, 2011, 2:23 இஸ்ரேல் பொறியியலாளர்களால் திருத்தப்பட்ட சிறீலங்கா வான்படையின் ஆளில்லாத வேவு விமானம் வானில் பறந்த மறு நிமிடம் வீழ்ந்து நொருங்கியதால் இஸ்ரேல் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. [More...] சேர்ச்சர் மார்க் -2 (lunayasa urinasa aayasama ஐஐ Rnayannena ) எனப்படும் ஆளில்லாத உளவு விமானத்தின் திருத்தப் பணிகளுக்காக சிறீலங்கா வான்படையினர் இஸ்ரேல் அதிகாரிகளை அதிக செலவில் வரவைத்திருந்தனர். கடந்த வியாழக்கிழமை (20) வவுனியா வான்படைத்தளத்தில் அதனை திருத்தியமைத்த இஸ்ரேலிய அதிகாரிகள் சிறீலங்கா வான்படையினரிடம் ஒப்படைத்திருந்தனர். ஆனால் சிறீலங்கா …

  20. இலங்கை அரசியவல்வாதிகளின் சுவிஸ் வங்கிக் கணக்கு விபரங்கள் அம்பலப்படுத்தப்படும் : 23 ஜனவரி 2011 இந்தத் தகவல்களினால் சில அரசியல்வாதிகள் அதிர்ச்சி.. இலங்கையின் முன்னணி அரசியல்வாதிகள் சிலர் சுவிஸ் வங்கிகளில் பேணி வரும் கணக்கு விபரங்கள் விரைவில் அம்பலப்படுத்தப்பட உள்ளதாக தி சண்டே லீடர் தகவல் வெளியிட்டுள்ளது.சர்ச்சைக்குரிய விக்கிலீக்ஸ் இணையம் விரைவில் இந்தத் தகவல்களை வெளியிட உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகின் முன்னணி அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களின் இரகசிய கணக்கு விபரங்கள் இவ்வாறு அம்பலப்படுத்தப்பட உள்ளதாகத் தெரவிக்கப்படுகிறது. இந்த கணக்கு விபரங்களில் இலங்கையின் முன்னணி அரசியல்வாதிகள் சிலரின் கணக்கு விபரங்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. …

  21. ஞாயிற்றுக்கிழமை, 23, ஜனவரி 2011 (9:56 IST) பிரபாகரனின் தாயார் கண்ணில் இருந்து கண்ணீர் மட்டும் வடிந்தது: சென்னை திரும்பிய பெண் வக்கீல் இலங்கையில் நடைபெற்ற போருக்கு பிறகு, அங்கு வாழும் ஈழத்தமிழர்களின் நிலை குறித்து அறிந்து வருவதற்காக சென்னை ஐகோர்ட்டு பெண் வக்கீல் அங்கயற்கண்ணி, நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த திருமலை ஆகியோர் கடந்த வாரம் சென்றனர். அங்கு, சிங்கள ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். கடும் போராட்டத்திற்கு பிறகு நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர். சென்னை திரும்பிய பெண் வக்கீல் அங்கயற்கண்ணி கூறியதாவது, தமிழர்கள் வீடுகள் எல்லாம் வானம் பார்த்த வீடுகளாக உள்ளன. ராணுவச் சிறையில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். வல்வெட்டுத்துறையில் விடுதலைப்புலிகள் த…

  22. யாழ். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடவடிக்கை _ வீரகேசரி இணையம் 1/23/2011 10:49:52 AM யாழ். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்ககும் நடைமுறைப்படுத்துவதற்கும் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடவடிக்கையெடுக்கவுள்ளனர். கடந்த இரண்டு மாத காலத்தில் யாழ் மாவட்டத்தில் பல்வேறு கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல், கொள்ளைகள், கொலைகள் அதிகரித்துள்ள நிலையில் இது சம்பந்தமான கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் இடம் பெற்றது. இந்த கலந்துரையாடலில் யாழ் மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட மற்ற…

  23. ஈழத் தமிழருக்காக போராடிய கன்னடர்கள்! பெங்களூருவில் கிளம்பிய புதிய படை கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற ஆயுர்வேத மாநாட்டில் கலந்துகொள்ள வந்த இலங்கை அமைச்சர் சலின்டே திச நாயகாவுக்குக் கறுப்புக் கொடி காட்டிய 44 பேரைக் கைது செய்தார்கள். சிறையில் இருந்து வெளியே வந்தவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பெங்களூரு அம்பேத்கர் பவனில், பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக நடந்த கூட்டத்​தில் எழுச்சி இன்னும் அதிகமாகவே இருந்தது! கர்நாடக மாநில பெரியார் திராவிடக் கழகத்தின் பழனி தான் முதலில் பேசினார். ''இனி இலங்கையில் நடக்கின்ற போர் சிங்களவனுக்கும் ஈழத் தமிழனுக்குமான போராக இருக்கக் கூடாது. உலகத் தமிழனுக்கும் சிங்களவனுக்குமான போராக இருக்க வேண்டும்!'…

    • 3 replies
    • 1.2k views
  24. இன்னும் இரண்டு வருடங்களில் யாழில் ”லக்க்ஷபான” மின்சாரம் 2011-01-22 11:52:51 இன்னும் இரண்டு வருடங்களில் யாழ்ப்பாணத்துக்கு ”லக்க்ஷபான” மின்சாரம் கிடைக்கும் என, இலங்கை மின்சார சபையின் வடபிராந்திய பொதுமுகாமையாளர் வி.கே.பி.எஸ். குணதிலக தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் யாழ் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (21.1.2011) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். வடபகுதிக்கு “லக்க்ஷபான” மின்சாரம் வழங்குவதற்கான திருத்த வேலைகள் நடைபெற்று வருவதாகவும், இதற்காக ஜப்பானின் ஜெமிக்ஸ் வங்கியும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் இணைந்து 7 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். வவுனியாவில் இருந்து கிளிநொச்சிக்கும், கிள…

  25. Jan 21, 2011 / பகுதி: செய்தி / தமிழக வழக்கறிஞர் கயல்விழி ஓமந்தையில் கைது மனித உரிமைப் போரளியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான கயல்விழி மற்றும் அவரது உதவியாளர் திருமலை ஆகியோர் சிறிலங்கா ராணுவத்தால் ஓமந்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். முறையான கடவுச் சீட்டு, சிறிலங்கா அரசினால் வழங்கப்பட்ட விசா ஆகியவற்றுடன் சென்று இருந்த வேளை இச் சம்பவம் இடம் பெற்று இருக்கிறது. முகாம்களில் வாழும் தமிழர்களின் அவல நிலைமையை அறிந்து திரும்பும் வழியில் ஓமந்தை பாதுகாப்பு அரணில் வைத்து சிங்கள இராணுவத்தினால் கைது செய்யப்பட்டனர். இவர் தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் அவர்களின் பேத்தியும், தமிழறிஞர் இறைக்குருவனாரின் மகளும் ஆவர் pathivu

    • 3 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.