ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
புதன்கிழமை, 12, ஜனவரி 2011 (23:13 IST) துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் பலி இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த பாண்டியன் என்ற மீனவர் மரணம் அடைந்தார். ஜெகதாப்பட்டினதைச் சேர்ந்த 4 மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குண்டு பாய்ந்ததில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த பாண்டியன் படகிலேயே உயிரிழந்தார். உயிரிழந்த பாண்டியனின் வயது 25. இந்த சம்பவத்தால் ஜெகதாப்பட்டினம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங…
-
- 16 replies
- 1.4k views
-
-
ஐ.நா நிபுணர் குழுவின் தவணைக் காலம் நீடிப்பு! வெள்ளி, 14 ஜனவரி 2011 10:40 E-mail அச்சிடுக PDF ஐ.நா நிபுணர் குழுவின் தவணைக் காலத்தை பெப்ரவரி மாதம் இறுதித் திகதி வரை நீடிக்கப் போவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இலங்கை நிபுணர் குழுவின் தவணைக்காலம் பெப்ரவரி மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது என செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்டீன் நெசர்கி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் ஜனவரி 15ஆம் திகதி வரை காலம் வரையறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. tamilcnn.com
-
- 0 replies
- 419 views
-
-
வடக்கு கிழக்கு அபிவிருத்திக்காக லிபியா 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி 14 ஜனவரி 2011 வடக்கு கிழக்கு அபிவிருத்திப் பணிகளுக்காக லிபிய அரசாங்கம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கத் தீர்மானித்துள்ளது. வடக்கு கிழக்கு பெருந்தெருக்களை அபிவிருத்தி செய்தல், தொடர்பாடல் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதற்காக இந்த நிதி உதவி பயன்படுத்தப்படவுள்ளது. குறித்த திட்டங்களை முன்னெடுப்பதற்காக இரு நாடுகளுக்கும் இடையில் விரைவில் மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது. யுத்தத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த உதவிகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. லிபியாவின் கறுப்புத் தேயிலைத…
-
- 0 replies
- 393 views
-
-
புலிகளின் தாக்குதலில் தப்பியவரே புதிய கடற்படைத் தளபதி * Friday, January 14, 2011, 3:44 17வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரியர் அட்மிரல் எஸ்.திஸாநாயக்க தமிழீழ விடுதலைப் புலிகள் 1995ஆம் ஆண்டு மேற்கொண்ட தாக்குதல் ஒன்றில் உயிர் தப்பியவர் எனத் தெரிய வருகிறது. 1995ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த “ரணசுறு” என்ற சீனத் தயாரிப்புப் பீரங்கிப் படகின் மீது கடற்கரும்புலிகள் மேற்கொண்ட தாக்குதலின் போதே இவர் உயிர் தப்பியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது இவர் அப்பீரங்கிப் படகில் இருந்தார். இவருடன் இருந்த பல கடற்படை அதிகாரிகளும் மற்றும் கடற்படையினரும் இத்தாக்குதல் ச…
-
- 0 replies
- 669 views
-
-
இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு மின்சாரம் தமிழக சட்டப் பேரவையில் காரசார விவாதம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-14 08:15:36| யாழ்ப்பாணம்] இராமேஸ்வரத்தில் இருந்து கேபிள்கள் மூலம் இலங்கைக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருவதாகச் சட்டப் பேரவை இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் வை.சிவபுண்ணியம் குற்றம் சாட்டியுள்ளார். சட்டப் பேரவையில் நேற்றுமுன் தினம் நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் அவர் உரையாற்றுகையில், இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கேபிள்கள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழர்களைக் கொன்றுகுவித்த இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் கொடுமையை என்னவென்று சொல்வது? மீதமுள்ளவர்களையும் கொல்வதற்…
-
- 0 replies
- 599 views
-
-
தீவகத்தில் 4 இடங்கள் இராணுவத்திடம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-14 08:49:49| யாழ்ப்பாணம்] தீவகத்தில் இதுவரை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த நான்கு இடங்கள் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவெல தெரிவித்தார். ஊர்காவற்றுறை, புங்குடுதீவு, மண்டைதீவு, காரைநகர் ஆகியனவே இராணுவத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை தரைவழிப் பாதைத் தொடர்பில்லாததால், நெடுந்தீவு தொடர்ந்தும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. valampurii.com
-
- 0 replies
- 371 views
-
-
இந்திய ஒத்துழைப்புக்கு வரவேற்பு; தீர்வை நாங்களே முன் வைப்போம்! ஜனாதிபதி மகிந்த தெரிவிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-14 08:36:01| யாழ்ப்பாணம்] தேசிய பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நடவடிக்கைகளின் போது இந்தியாவின் ஒத்துழைப்பு வரவேற்கப்படும். ஆனால் இலங்கை தனக்கு அமைவான தீர்வுத் திட்டத்தையே முன்வைக்கும். இவ்வாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் நன்மதிப்பிற்குக் களங்கம் ஏற்படுத்துவதற்கு எவரும் முயற்சி செய்யக்கூடாது. சர்வதேச ரீதியில் நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையிலான கருத்துக்களை…
-
- 0 replies
- 495 views
-
-
திருமலையில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்ற நடவடிக்கை.. வியாழக்கிழமை, 13 ஜனவரி 2011 16:59 4444திருகோணமலை நகரை அண்மித்த தமிழர் குடியிருப்புப் பிரதேசங்கள் சிலவற்றுக்கு இன்று திடீரெனச் சென்ற கடற்படையினர், வீடுகளைவிட்டு, வேறு இடங்களுக்குச் செல்வதற்கு தயாராகுங்கள் என குடியிருப்பாளர்களுக்கு அறிவித்துள்ளனர். திருகோணமலை நகரை அண்மித்த நோத் குறொஸ் வீதி, காபர் றோட், பெரியகடைப் பக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற கடற்படையினர் குடியிருப்பு பகுதிகளை படம் பிடித்துள்ளனர். அத்துடன், வீடுகளின் உரிமையாளர்களின் விபரம், காணி உறுதிகள், குடியிருப்போரின் விபரங்கள் என்பவற்றையும் பெற்றுச் சென்றுள்ளனர். இவ்வாறு குறித்த பிரதேசங்களுக்குச் சென்ற கடற்படையினர் குடியிருப்பாளர்கள் வேறுபகுதி…
-
- 1 reply
- 951 views
-
-
நீங்கள் ஸ்ரீலங்கா போனால் பிரச்சனை வரும் என்று அஞ்ச வேண்டாம். மனம் திறந்து உண்மையை கூறுங்கள். இன்று சுவிஸ் அரச குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருடன் தொடர்புகொண்டு பேசியதன் அடிப்படையில். இப்போது நடைபெற்று வரும் வழக்கு சுவிஸ் நாட்டின் சட்டத்தை மீறிய குற்றங்களின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. எனவே சாட்சியம் அளிக்க விரும்புவோர் எந்த வித அச்சமும் இன்றி தாராளமாக முன்வந்து உண்மையான விபரங்களை கூறலாம். நீங்கள் ஸ்ரீலங்கா போனால் பிரச்சனை வரும் என்று அஞ்ச வேண்டாம். இது எந்த வித அரசியல் பின்னணியுமற்ற விசாரணை. எனவே நீங்கள் கூறும் தகவல்கள் எதுவும் ஸ்ரீலங்கா அரசுக்கு எக்காலத்திலும் தெரியப்படுத்தப்பட மாட்டாது. நீங்கள் எதற்கும் அஞ்சாமல் மனம் திறந்து உண்மையை கூறுங்கள். செயற்பாட்டாளர…
-
- 4 replies
- 2.1k views
-
-
யாழ்ப்பாணத்திற்கும் பூநகரிக்குமான போக்குவரத்துப் பாலம் பூரணமடையும் நிலையில் உள்ளது. அதன் வீடியோ தங்களுக்காக thx http://www.newjaffna.com/
-
- 8 replies
- 959 views
-
-
கிழக்கில் தொடரும் இன்னல்கள்: தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்குவதில் அக்கறை காட்டவில்லை கிழக்குப்பகுதி உட்பட இலங்கையில் பெய்துவரும் கடும் மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரையில் 27 உயிரிழப்பக்கள் இடம்பெற்றுள்ளன. 11பேரை காணவில்லை எனவும் 47பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று ஓய்ந்திருந்த மழை மீண்டும் இன்று காலை பெய்யத் தொடங்கியுள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக மூன்றரை இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் 10 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கவும் பட்டுள்ளார்கள். இடம்பெயர்ந்தவர்கள் 363 நல்ன்புரி நிலையங்களில் தங்கியுள்ளார்கள. இதுமாத்திரமல்லாத மழையினை அடுத்து தற்போது நிலவிவருகின்ற மிகக்கடுமையான குளிர்கா…
-
- 0 replies
- 712 views
-
-
நான் சாகலாம் நாங்கள் சாகக்கூடாது - பாகம் 8 பசிக்கத் தொடங்கிவிட்டது. சாப்பிட மாங்காய் மட்டும்தான் இருந்தது. மாங்காயை எடுத்துக் கடித்துக் கொண்டு நடந்தேன். நிலம் தண்ணீரும், சேறும், சுரியுமாக இருந்தது. நிறையத் தூரம் நடந்துவிட்டேன். அப்படியே ஒரு பெரிய வரம்பில் கொஞ்ச நேரம் இருந்தேன். நித்திரையும் வந்தது. அலட்சியமாக நித்திரை கொண்டால் விடிந்துவிடும் என்று நினைத்து, உடனே எழுந்து நடந்தேன். கண்ணெதிரே நடந்த ஒவ்வொரு விடயத்தையும் நினைத்துப் பார்க்கும் போது, வேகத்தைக் கூட்டியது. ஒருமுறை அம்பகாமத்தில் எங்களது லைனுக்கு முன்னுக்கு, எனது தலைமையில் மூன்று பேர் வேவுபார்க்கப் போனோம். மூன்றாம் நாள் பகல், ஆமி ஒரு பொசிசனை உடைத்து முன்னேற முயற்சி செய்தான். எங்களுடைய போராளிகளின் …
-
- 0 replies
- 924 views
-
-
திருச்சியில் இலங்கைத் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தமிழக பொலிஸார் தேடுதல் வேட்டை! வியாழன், 13 ஜனவரி 2011 19:50 கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழீழ விடுதலைப்புலிகளால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் பதுங்கி உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருச்சி மாநகர இணை கமிஷனர்கள் ரூபேஸ்குமார் மீனா, தமிழ்சந்திரன் மேற்பார்வையில் 400 க்கும் மேற்பட்ட பொலிஸார் கே.கே.நகர், உடையாளிப்பட்டி, மின்வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர். வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கிருப்பவர்கள், இலங்கை தமிழ…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கை வெள்ளம்: ஐநா கவலை இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மற்றும் கல்முனைப் பகுதிகளில் மழை பெய்வது தற்போது நின்றுவிட்டாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் சந்திக்கும் அபாயங்கள் அதிகமாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேயப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மழை வெள்ளம் காரணமாக 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். ஐ நாவின் சிறார்கள் நல அமைப்பான யுனிசெப்பின் கொழும்பு அலுவலகப் பேச்சாளர் மெர்வின் பிளெச்சர் இந்த வெள்ளம் கிழக்கு மக்கள் தமது வாழ்ககையில் கண்டிராத ஒன்று என்று தெரிவித்துள்ளார். வெளியுலகத் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கும் பலருக்கு இன்னமும் உரிய வகையில் உதவியேதும் கிடைக்கவில்லை. அவசர அவசரமாக அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்கள் பல…
-
- 0 replies
- 990 views
-
-
கிழக்கு மக்களிற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் மக்கள் உதவி கிழக்கில் இயற்கை அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ள மக்களிற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் அத்தியாவசியப் பொருளுதவி செய்வதற்கு யாழ் மக்கள் முன்வந்துள்ளனர். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தன்னெழுச்சியாக மேற்கொண்ட முயற்சியின் விளைவாக இன்று (புதன்கிழமை) அரை நாளுக்குள் ஒன்றரை மில்லியன் (15 இலட்சம்) ரூபா பெறுமதியான உடனடித் தேவைப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு பொதி செய்யப்பட்டுள்ளன. கிழக்கில் தொடரும் அடை மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பல இலட்சம் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளார்கள். அவர்களின் உடனடித் தேவகைள் சிலற்றை பூர்த்தி செய்யும் முகமாக யாழ் பல்கலைக்கழக மாணர்கள் ஒருங்கிணைப்புடன் யாழ் …
-
- 0 replies
- 773 views
-
-
இந்திய மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக வும் அதற்கு விளக்க அறிக்கை கேட்டும் கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகரகத்துக்கு இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது என இந்திய ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதில் எதுவித நியாயமும் இல்லை எனவும் இலங்கை பிரதிநிதிகள் இவ்வாறான கடற்படையினரது நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்க முன்வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் புரிந்துணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதேவேளை இலங்கை கடற்படையினருக்கு ரோந்து மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் எவ்வாறு நடந்து கொள்வது என்பது தொடர்பில் பயிற்சி வழங…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கை கடற்படை நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்-இந்தியா 'அறிவுரை'! வியாழக்கிழமை, ஜனவரி 13, 2011, 15:42[iST] டெல்லி: இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இதுகுறித்து இந்தியா கண்டனம் தெரிவிக்கவில்லை. மாறாக, இனிமேல் இதுபோல நடக்கக் கூடாது, நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை கூறியுள்ளது. தமிழக மீனவர் பாண்டியன் என்ற 19 வயது இளைஞரை இலங்கைக் கடற்படை ரவுடிக் கும்பல் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளது. குருவியைப் போல சுட்டுக் கொன்ற இந்த சம்பவத்தால் தமிழர்கள் கொதிப்படைந்துள்ளனர். ஆனால் இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவிக்கிறோம் என்று ஒரு வார்த்தை கூட கூறாத இந்திய அரசு மாறாக, இலங்கைக்கு அறிவுரைகளை அடுக்கியுள்ளது. இதுதொடர்பாக இலங்கைப் ப…
-
- 6 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் இனக்குரோதங்களை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை வெளியிட வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று சந்தித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார். அங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் கூறியதாவது, பிரபாகரன் எதிர்பார்த்த ஈழத்தை யாருக்கும் கொடுக்க முடியாது. நாட்டில் இன சமத்துவத்தைப் பேண ஊடகங்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும். இனங்களுக்கு இடையில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டும். அரசாங்கத்தை விமர்சிக்கவும் ஆனால் சர்வதேசத்திற்கு முன…
-
- 1 reply
- 1k views
-
-
இலங்கை ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷவுக்கு கடந்த மாதம் இலங்கை சட்டக் கல்லூரியில் நடந்த தேர்வின் போது விசேட சலுகைகள் வழங்கப்பட்டதாகக் கோரி முன்வைக்கப்பட்ட ஒரு புகார் மீதான விசாரணை கொழும்பில் துவங்கியது. இந்தப் புகாரை விசாரிக்க கொழும்பு சட்டக் கல்லூரியால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி உதித இகலஹேவ தலைமையிலான ஒரு நபர் ஆணையம் சட்டக் கல்லூரி வளாகத்தில் ஒன்றரை மணி நேரம் விசாரணையை நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விசாரணையின் போது புகார்தாரர் டி எம் துஷார ஜெயரத்ன விசாரணைக் குழு முன் நேரில் ஆஜராகி, இந்த விசாரணை தொடர்பாக தனது ஆட்சேபணையை முன்வைத்தார். தற்போது கல்லூரி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவுக்கு இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்…
-
- 2 replies
- 1.5k views
-
-
லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழர் வெள்ளை வேனில் கடத்தல் * Thursday, January 13, 2011, 4:25 மகிந்த ராஜபக்சவிற்கெதிராக லண்டனில் ஹித்ரு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாகக் கூறப்படும் தமிழர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சூழலில் வைத்து வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. ஜனாதிபதி மகிந்த ஒக்ஸ்ட்பேர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவதற்காக சென்றபோது அதற்கு தடை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற முதலாவது ஆர்ப்பாட்டம் லண்டன் ஹித்ரு விமான நிலையத்தில் நடைபெற்றது. அதில் மாணவர் அமைப்பின் சார்பில் கலந்துகொண்டவர் என சந்தேகிக்கப்படும் தமிழ் மாணவர் ஒருவரே கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறிய பின்னர் விமான நிலைய சூழலில் வைத்த…
-
- 3 replies
- 881 views
-
-
புலிகள் – கருணா பிரிவின் மர்மங்கள், விக்கிலீக்ஸ் பரபரப்புத் தகவல் [ பிரசுரித்த திகதி : 2011-01-13 10:48:50 AM GMT ] தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக செயற்பட்ட கருணா அம்மான் 2004 ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்த போது அவ் விஷயத்தில் நோர்வே அரசை தலையிட வேண்டாம், இது உள்வீட்டுப் பிரச்னை என புலிகளின் தலைமைத்துவம் நோர்வேயின் இலங்கைக்கான சமாதானத் தூதுவராக செயற்பட்ட எரிக் சொல்ஹெய்மிடம் கூறியதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. இதேவேளை, கருணாவுக்கும் புலிகளுக்கும் இடையிலான உள்விவகார பிரச்னைகளில் தான் தலையிட மாட்டேன் என்று அன்று பிரதமராக இருந்த ரணில் நோர்வேயின் எரிக் சொல்ஹெய்மிடம் உறுதியளித்துள்ளார் என்று அத் த…
-
- 1 reply
- 2.6k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மகிந்த ராஜபக்க்ஷ அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பெரும் எதிர்பார்ப்புக்களின் மத்தியில் இந்தப் பேச்சுக்கள் ஆரம்பமாகியிருக்கின்ற போதிலும், இந்தப் பேச்சுக்களில் நம்பிக்கை வைக்க முடியுமா என்பதுதான் இப்போது எழும் கேள்வியாகவுள்ளது. கூட்டமைப் புடன் பேச்சுக்களை நடத்தி இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு ஒன்றைக் காண வேண்டும் என்ற அக்கறையினால் அன்றி, சர்வதேச மற்றும் இந்திய அழுத்தங்களைச் சமாளிப்பதற்காகவே அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது என்பது தான் உண்மை. திங்கட்கிழமை ஆரம்பமான பேச்சுக்கள் சுமூகமாக இடம்பெற்றது எனவும், தொடர்ந்தும் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு இரு தரப்பு…
-
- 1 reply
- 837 views
-
-
எமது மக்களின் மனிதாபிமான உதவிகளுக்கு ஒன்றாய் அணிதிரள்வோம் எமது தாயகத்தின் கிழக்கு மாகாணத்தில் பெரும் வெள்ளப்பெருக்கால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளது யாவரும் அறிந்ததே. எமது தாயக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனையைப் போக்கும் பாரிய கடமை எம்முன் காத்துநிற்கிறது. மட்டக்களப்பில் இதுவரை மூன்று லட்சத்து 22 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 2 லட்சம் மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நலன்புரி மையங்களில் தஞ்சமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதேபோன்று, 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நெற் காணிகள் வெள்ளத்தினல் நாசமடைந்துள்ளதாகவும் அறியப்படுகிறது. அம்பாறை மாவட்டத்திலும் இதுவரை 3 லட்சத்து 36 ஆயிரம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக அறிகிறோம். இலங்கை அரசு ஒதுக்கும…
-
- 1 reply
- 873 views
-
-
பிரான்சில் கேணல் கிட்டு உட்டப வீரகாவியமாகிய பத்து மாவீரர்களின் நினைவேந்தல் நாள் ஈழவிடுதலைப் போராட்டத்தின் வரலாற்று நாயகர்களான கேணல் கிட்டு உட்டப பத்து வேங்கைகளின் 18ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் நடுவம் பிரான்சினால் வெகுசிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தலைநகர் பாரிசில் தமிழர் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள மையப்பகுதிக்கு அருகைமையுள்ள Salle Max Dormoy, 50 Rue Du Torcy . 75010 Paris எனும் இடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 3மணிக்கு இடம்பெறவுள்ளது. மாவீரர்களுக்கான இசையாஞ்சலியுடன் ஆரம்பமாகும் இவ்வணக்க நிகழ்வில் சமாகால சமூக-அரசியல் பதிவு செய்யும் "செந்நீர் விட்டு வளர்த்தோம்...." எனும் கையேடும் வெளியிடப்படவுள்ளது. சிறப்பாக ந…
-
- 0 replies
- 860 views
-
-
கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு இரகசிய விஜயம்! [ பிரசுரித்த திகதி : 2011-01-13 10:18:49 AM GMT ] இஸ்ரேலுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அங்கிருந்து தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு அமெரிக்க சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சின் தகவல்களை மேற்கோள் காட்டி, லங்கா எவ்ரிதிங் என்ற சிங்கள இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளரின் அமெரிக்காவுக்கான பயணத்தை பாதுகாப்பு அமைச்சு ரகசியமாக பேணி வருகிறது. அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு லண்டனில் ஏற்பட்ட நிலைமை, பாதுகாப்பு செயலாளருக்கும் ஏற்படலாம் என்ற அடிப்படையில் இந்த பயணம் இரகசியமாக பேணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கன…
-
- 0 replies
- 1.2k views
-