Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Jan 3, 2011 / பகுதி: செய்தி / வடபகுதி தொடரூந்துசாலை புனரமைப்பு – 90 மில்லியன் டொலர் ஊழல் - பின்னனியில் கோத்தா வடபகுதியில் காங்கேசன்துறையில் இருந்து பளை வரையிலுமான தொடரூந்து சாலை புனரமைப்புக்கு 60 மில்லியன் டொலர்களே செலவாகும் என கணிப்பிடப்பட்டபோதும், அதனை 150 மில்லியன் டொலர் ஒப்பந்த அடிப்படையில் சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா இந்தியாவுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் 90 மில்லியன் டொலர்கள் ஊழல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தொடரூந்துசாலை புனரமைப்பு ஒப்பந்த்தில் சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளரும், இந்திய பாதுகாப்புச் செயலாளர் பிரதீப்குமாரும் ஒப்பமிட்டுள்ளனர். இதனிடையே, காங்கேசன்துறை துறைமுகம் மற்றும பலால…

  2. Monday, January 3rd, 2011 | Posted by நிலா தமிழில் உரையாடிய இ.போ.ச. ஊழியர்கள் மீது தாக்குதல் கதிர்காமத்திற்கு வவுனியா இ.போ.ச.டிப்போ பேருந்தில் பயணம் செய்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த இ.போ.ச.ஊழியர்கள் மீது புத்தள பகுதியில் வைத்து சிலர் தாக்குதல் நடத்தியதுடன், அந்த பேருந்தின் கண்ணாடிகளை உடைத்தும் சேதப்படுத்தியுமுள்ளனர். இதுபற்றி தெரியவருவதாவது: வவுனியா டிப்போவில் புதிதாக திருத்தப்பட்ட இ.போ.ச.பஸ்ஸை கதிர்காமத்தில் ஆசீர்வதிப்பதற்காக அந்த டிப்போவின் 29 ஊழியர்கள் அங்கு சென்றிருந்தனர். டிசம்பர் 31 ஆம் திகதி இவர்கள் வவுனியாவுக்கு வரும்போது புத்தள பகுதியில் தேநீர் அருந்துவதற்காக பேருந்தை நிறுத்தி, உணவுக் கடையில் தேநீர் அருந்தச் சென்றனர். இவர்கள் தமிழில் …

  3. இலங்கையில் பொது இடங்களில் இளம் பெண்கள் பலர் குட்டை பாவாடை அணிந்து நடமாடுவதற்கு பலதரப்பு மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே, கலாசாரத்துறை அமைச்சகம் இந்த விஷயத்தில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. சுற்றுலா தலங்களுக்கு குறிப்பாக புத்த மடாலயங்களை பார்வையிட வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், கண்ணியமான உடைகளை அணியும் படி அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இதை முறைப்படி யாரும் பின்பற்றவில்லை. சமீபத்தில் வெளிநாட்டு பாப் இசை பாடகர் ஒருவர், ஆபாச உடை அணிந்த நடன மங்கைகள் புத்தர் சிலையை சுற்றி நடனமாடுவது போன்ற காட்சியை படமாக்கியிருந்தார். இதற்காக அவருக்கு இலங்கை விசா மறுக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் குட்டை பாவாடைகளுக்கு தடை விதிப்பது க…

  4. யாழ். குடாநாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற ஆட்கடத்தல்கள் படுகொலைகள், காணாமல் போனமை தொடர்பாக உயர்மட்ட மகாநாடு ஒன்றுக்கு தான் அழைப்பு விடுத்திருப்பதாக யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டிருந்தார். இதன் பிரகாரம் யாழ் மாவட்ட இராணுவத் தரப்பு மற்றும் யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸார் உள்ளிட்ட பல தரப்பினரும் இந்த மகாநாட்டுக்கு அழைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். புத்தாண்டை அடுத்து படையதிகாரிகள் மற்றும் பொலிஸார் தமது சொந்த இடங்களான தெற்கிற்கு சென்றிருக்கின்றார்கள். அவர்கள் கடமைக்கு திரும்பி வர வேண்டும். அவர்கள் வந்தவுடன் இந்த உயர்மட்ட மகாநாடு இடம்பெறும் எனுவம் அவர் ஊடகவியல…

    • 2 replies
    • 1.3k views
  5. சிங்கள ராணுவத்துடன் சேர்ந்தியங்கும் மாத்தையா குழு ?! அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்ற கடத்தல் மற்றும் படுகொலைகளின் பின்னணியில் சிறிலங்கா படைத்தரப்பினருடன் சேர்ந்து இயங்கும் மாத்தையா குழுவினரும், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான துணைக்குழுவும் இருப்பதாக கொழும்பு ஊடகமான சிறிலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இரண்டாம் நிலைத் தலைவராக இருந்த மாத்தையா என அழைக்கப்பட்ட கோபாலசாமி மகேந்திரராஜா, இந்திய புலனாய்வுத் துறையான றோவுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், 1994ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தால் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். இது தொடர்பில், மாத்தைய…

    • 3 replies
    • 2.5k views
  6. அனோமா பொன்சேக்காவை கொழும்பு மாநகர சபை முதல்வர் பதவிக்கு போட்டியிட வைக்க முயற்சி! [ பிரசுரித்த திகதி : 2011-01-03 05:57:39 PM GMT ] அனோமா பொன்சேக்காவை எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபை முதல்வர் பதவிக்கு போட்டியிடுமாறு யோசனை முன்வைக்க உள்ளதாக ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேக்கா அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் ஜனநாயக ரீதியிலான செயற்பாட்டின் ஓரங்கமாக அனோமா பொன்சேக்காவை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வைக்கும் இந்த யோசனை முன்வைக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த யோசனையை அனோமா பொன்சேக்கா நிராகரிக்க மாட்டார் என தாம் நம்புவதாகவும் அவர் கூற…

  7. நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தைப் பிரதநிதித்துவப்படுத்தி கொழும்பு மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் போட்டியிடவுள்ளதாக அந்தக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் உறுப்பினர்கள் மனோ கணேசன் தேர்தலில் போட்டியிடுவதை விரும்புவதாகவும், அதன் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமது கட்சி எதிர்வரும் 7ம் திகதி கூடி முடிவெடுக்கும் எனவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் குமரகுருபரன் தெரிவித்தார். இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை தமது கட்சியில் இணைத்து கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். …

    • 0 replies
    • 834 views
  8. சிறீலங்காவின் சுற்றுலாப்பயணத்துறையில் முதலீடுகளை மேற்கொள்ள திட்டமிட்ட இந்திய நிறுவனம் ஒன்று, 80 மில்லியன் டொலர்கள் லஞ்சமாக தர வேண்டும் என சிறீலங்கா அதிகாரிகள் கேட்டதால் தனது முயற்சிகளை கைவிட்டு ஓடியதாக தெரிவிக்கப்படுகின்றது. டுபாய் நாட்டை தளமாகக் கொண்ட சிக்ஸ் சென்ஸ் என்ற இந்திய நிறுவனம் சிறீலங்காவில் முதலீடுகளை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது. ஆனால் கல்பிட்டி பகுதியில் 147 ஏக்கர் நிலத்தை வழங்குவதற்கு 80 மில்லியன் டொலர்கள் லஞ்சமாக தரவேண்டும் என சிறிலங்கா சுற்றுலாத்துறை திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த தொகை சிறீலங்கா அரச தலைவர் சகோதரர் பசில் ராஜபக்சாவுக்கு வழங்குவதற்காக எனவும் அவர் தெரிவித்திருந்தார். அதிகாரியின் இந்த நடவடிக்கையால்…

  9. மும்பைத் தாக்குதலுக்கு நீதி தேடிய காந்தி தேசம் எமக்கான நீதியை நாம் தேடும்போது பயங்கரவாதம் என்கிறது. இந்தியத் துரோகத்திற்கு நேர்கண்ட சாட்சிகளாக இலட்சக்கணக்கானவர்கள் உள்ளோம். எப்போதும் கைகட்டி வாய் பொத்தி மௌனமாக இருப்போம் என்று கருதிவிடாதீர்கள். இந்திய ஆட்சியாளர் முதற்கொண்டு குடிமக்கள் வரை ஒற்றை மனிதனிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதை நினைத்து நினைத்து மகிழ்வுற்றுக் கொண்டு இருக்கின்றனர். பெயர் அப்துல் கசாப்பாம். பாக்கித்தானை சேர்ந்தவனாம். இந்திய முக்கிய நகரமான மும்பை மீது தாக்குதல் தொடுத்த அணியில் உயிருடன் அகப்பட்டவன். 166 பேரை கொன்றுகுவித்த தாக்குதலில் ஈடுபட்டதுதான் அவன் செய்த குற்றமாம். அதற்கு நேர்கண்ட சாட்சிகளும் காணொளி ஆதாரங்களும் இருந்த போதும் ஒன்றரை வருடங்கள் ந…

  10. எதிர்வரும் மார்ச் மாதம் நடை பெறவுள்ள உள்ளூராட்சி சபை களுக்கான தேர்தலில் கட்சிகளுடன் இணைந்தா? தனித்தா? போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை கொழும்பில் கூடுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் மேற்கண்ட தகவலை தெரிவித்தார். உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்த இறுதித் தீர்மானம் நாளை கூடும் கட்சியின் உயர்மட்ட கூட்டத் தின் பின்னர் முடிவு செய்யப்படும். வடக்கு, கிழக்கிலுள்ள மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கல்முனை மாநகர சபைகள் உட்பட அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் போட்டியிடும் எனத் தெரிவித்த அவர் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது…

  11. யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் என சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை 03 ஜனவரி 2011 Bookmark and Share யாழ்ப்பாண மக்கள் சுதந்திரமாக வாழ்ந்து வருவதாகவும் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் என சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என காவல்துறையினரும், இராணுவத்தினரும் மறுப்பு வெளியிட்டுள்ளனர். விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனவும், தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானது எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜயகொடி மற்றும் இராணுவப் பேச்சாளர் உபய மெதவல ஆகியோர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத…

    • 0 replies
    • 717 views
  12. இலங்கை அதிபர் ராஜபக்சவின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிய மறுத்த தலைமை நீதிபதி , தமது பதவி விலகல் கடிதத்தை வழங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதித்துறை தொடர்பாக ராஜபக்ச விடுத்த சில கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நீதித்துறையின் வருட இறுதி நிலவரங்கள் குறித்து விவாதிப்பதற்காக, அதிபர் ராஜபக்சவுக்கும், தலைமை நீதிபதி அசோக டி சில்வாவுக்கும் இடையே அண்மையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது பொன்சேகாவின் வழக்கில் அவருக்கு எதிரான தீர்ப்பளிக்குமாறு ராஜபக்ச கோரியுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி, தற்போது கூட சரத் பொன்சேகாவின் வழக்கு நீதி முறைகளை மீறி…

    • 0 replies
    • 719 views
  13. அமெரிக்காவினால் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற ஜி.எஸ்.பி. வரிச் சலுகையும் இந்த வருடத்துடன் ரத்தாவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆடை உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதி மற்றும் மூலப்பொருட்களின் இறக்குமதிக்காக, அமெரிக்க அரசினால் இலங்கைக்கு இந்த வரிச்சலுகை வழங்கப்படுகிறது. கடந்த வருடம், இலங்கையின் தொழிலாளர்களின் உரிமைகள் மீறப்படுவதாக அமெரிக்க தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்புகள், அமெரிக்க வர்த்த சம்மேளனத்துக்கு புகார் தெரிவித்திருந்தன. இதனையடுத்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வர்த்தக பிரதிநிதிகள், இலங்கையின் தொழிலாளர் உரிமை தொடர்பாக ஆய்வுகளை நடத்தி சென்றனர். இந்நிலையில், கடந்த வருடம் டிசம்பர் மாதத்துடன் நீடிக்கப்பட வேண்டிய இந்த வரிச்சலுகை,…

    • 0 replies
    • 531 views
  14. அரசியல் சட்டத்தையோ அமைச்சரவைத் தீர்மானத்தையோ அங்கீகரிக்க முடியாத நாடாக இலங்கை உள்ளது. தேசிய கீதத்தை சிங்களத்தில் மாத்திரம் பாட வேண்டும் எனச் சொல்லப்பட்டது. ஆனால் தமிழில் பாடலாம் என அரசாங்கம் கூறியது. அரசியல் சட்டத்தில் தேசிய கீதம் தமிழில் பாடலாமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நூற்றுக்கு நூறுவீதம் தமிழர்கள் வாழ்கின்ற யாழ்ப்பாணத்தில் நாட்டின் இரண்டாவது இடத்திலுள்ள பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வில் சிங்களத்தில் தேசிய கீதம் பாடப்பட்டது. அப்படியானால் அரசியல் சட்டத்தையோ அமைச்சரவைத் தீர்மானத்தையோ அங்கீகரிக்காத நாடாகவே இலங்கை உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா குற்றஞ்சாட்டியுள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உர…

    • 0 replies
    • 566 views
  15. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு இலங்கை வருவதற்கு நுழைவு அனுமதி வழங்கினால் அரசாங்கம் வீடு செல்ல நேரிடும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர எச்சரித்துள்ளார். சிறிலங்காவுக்கு எதிரான சர்வதேச நாடுகளின் போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், அவரது அரசாங்கமும் சாதகமாக செயற்பட முயற்சிக்கக் கூடாது என அவர் கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட ஆதரவாளர்கள் மூவருள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவினை நாட்டிற்குள் வர அனுமதிக்கப் போவதில்லை என்ற கொள்கையில் ஜனாதிபதி தொடர்ந்தும் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இல்லையெனில், வேலியில் ஓடிய ஓணானைப் …

    • 0 replies
    • 703 views
  16. இலங்கைத் தமிழர்களும் அலைந்து திரிந்து அழியும் நிலையும். பேராசிரியர் இரா.சிவசந்திரன் இலங்கை பல்லினமக்கள் வாழும் நாடு. ஒவ்வொரு இனத்திற்கும் தனித்துவமான சமூக பொருளாதார மத பின்னணி உண்டு எனினும் இவர்கள் மொழி அடிப்படையில் தமிழ்பேசும் மக்கள் எனவும் சிங்களம் பேசும் மக்கள் எனவும் பாகுபடுத்தப்படுகின்றனர். தமிழ் பேசும் மக்கள் இலங்கைத் தமிழர், இந்தியத்தமிழர், இலங்கை சோனகர், இந்தியசோனகர் என நான்காக வகைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இலங்கையில் 1981 ஆம் ஆண்டு பெறப்பட்ட கணிப்பீடே இன்றுவரை இறுதியாக இடம்பெற்ற உத்தியோக பூர்வமான முழு இலங்கைக்குமான குடித்தொகை கணிப்பீடாகும். 1991 இல் இடம்பெற்றிருக்க வேண்டிய கணிப்பீடு யுத்த சூழ்நிலைகளால் நாடு முழுவதும் இடம்பெறவில்லை. 2011 ஆம் ஆண்டு ந…

  17. தமிழர் பாரம்பரியப் பிரதேசம்: விவசாய அபிவிருத்தியும் நீர்வளப் பயன்பாடும். பேராசிரியர் இரா.சிவசந்திரன் முகவுரை:- தமிழர் பாரம்பரியப் பிரதேசம் வரலாற்று ஆதாரங்களின் படி இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாண எல்லைப்பரப்பை விடப் பரந்ததெனினும் இங்கு ஆய்வு நோக்கம் கருதி இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணம் என்றே சொல்லப்படுகின்றது. வடகீழ் மாகாணம் 18,333 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பையும் 558 சதுரகிலோமீற்றர் உள்நாட்டு நீர்ப்பரப்பையும் உள்ளடக்கிய பிரதேசமாகும். இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் இது 28.8 வீதமாக அமைகின்றது. இவை எட்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு என்பன வடமாகாணத்தினுள்ளும், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை என்பன கி…

    • 0 replies
    • 874 views
  18. எமக்கான அபிவிருத்திக்கு எம் பங்கு அவசியம். பேராசிரியர் இரா.சிவசந்திரன். தமிழ்ப் பிரதேச அபிவிருத்தி எவ்வாறு நிகழ வேண்டும் என்பதை அம்மக்களே தீர்மானித்தல் முக்கியம். எமக்கான அபிவிருத்தியை நாமே செய்தல் வேண்டும் என மக்கள் கருதுகிறார்கள். முதலில் தமிழ்ப் பிரதேசத்தில் மக்கள் கருதும் அபிவிருத்தி என்ன? என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். அது கிராமம் சார்ந்த சூழல்நட்பார்;ந்த நிலைத்து நிற்கத்தக்க அபிவிருத்தியா? அல்லது சிங்கப்பூர், யப்பான் மேற்கு நாடுகள் போன்ற உயர் தொழிநுட்பம் சார்ந்த அபிவிருத்தியா? அல்லது இதற்கு இடைப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் அபிவிருத்தியா? என்பது பற்றி தமிழ் மக்களிடம் வினாவ வேண்டும். மேலும் இவ் அபிவிருத்தி யாரைச் சென்றடைய வேண்டும் என்பதும் முக்கிய…

    • 0 replies
    • 830 views
  19. நாடு முழுவதுமான சனத்தொகை கணக்கெடுப்பு இலங்கையில் 30 வருட கால யுத்தத்தின் பின்பு முதற் தடவையாக நாடு முழுவதுமான சனத்தொகை கணக்கெடுப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் முழுமையான சனத்தொகை கணக்கெடுப்பிற்கு வாய்ப்பு கிட்டவில்லை என புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், இலங்கையில் 1991 ஆம் ஆண்டும் 2001 ஆம் ஆண்டும் சனத்தொகை கணக்கெடுப்பு இடம் பெற்ற போதும் யுத்தம் காரணமாக கணக்கெடுப்பு நாடளாவிய ரீதியில் இடம்பெறவில்லை என திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய கணக்கெடுப்பானது 2011 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு பகுதியில் இடம்பெறவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இறுதியாக இடம்பெற்ற கணக்கெடுப்பின் போது 22 மாவட்டங்களில் …

    • 0 replies
    • 628 views
  20. நாளைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவென யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு சென்று மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கொலை கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பிலான தரவுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் கேட்டபோது மானிப்பாய் பொலிஸ் நிலைய அதிகாரி, உயரதிகாரிகளின் அனுமதியின்றி தரவுகளை வழங்க மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. Eelanatham.Net

    • 0 replies
    • 861 views
  21. மஹிந்த் தலைமையின் கீழ் பெரும் வெற்றிகளை பெற்ற உள்ளூராட்சி சபைகள் வரவு செலவுத்திட்டதில் தோல்விகளை முகம்கொண்டு வருகின்றன. அந்தவகையில் அநுராதபுரம் மாநகரசபையின் வரவு செலவு திட்டம் மறுபடியும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டம் தொடர்பாக இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது ஆதராவாக 6 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மூவரும், மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் மூவரும், அரச தரப்பு உறுப்பினர் ஒருவரும் எதிராக வாக்களித்துள்ளனர். கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அநுராதபுரம் வரவு செலவுத்திட்டமும் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டமும் …

  22. Monday, January 3rd, 2011 | Posted by நிலா தமிழீழ விடுதலைப்புலிகளுக்கெதிரான போரின்போது சிறீலங்காவுக்கு இந்திய அரசு வழங்கிய உதவிகள் புலிகளுக்கு எதிரான போரைத் தனித்து நின்றே நடத்தினோம் என்று சிறீலங்கா அரசு அவ்வப்போது பெருமைப்பட்டுக் கொள்ளும் நிலையில், இந்தப் போர் உலகநாடுகளின் ஆதரவுடன் நடத்தப்பட்டது என்ற உண்மை இப்போது மெல்ல, மெல்ல வெளியே வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்தப் போருக்கு இந்தியா கணிசமான உதவிகளை வழங்கியுள்ளது. கடந்த வாரம், இந்தியாவின் பி.ரி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த ஒரு செய்தியில் புலிகளுக்கு எதிரான போரின்போது இந்தியா ராடர்களையும், விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும், கடற்படைக் கப்பல்களையும் வழங்கியதை உறுதிப்படுத்தியது. விடுதலைப்புலிகளின் …

  23. Monday, January 3rd, 2011 | Posted by நிலா கடல் விமான தளத்திட்ட இடமாற்றம் நீர்கொழும்பில் கடற்பரப்பில் அமைக்கப்படவிருந்த கடல் விமானத் தள திட்டத்தினை தண்டுகம் ஓயாவிற்கு மாற்ற அரசு தீர்மானித்துள்ளதாக மேல் மகாண சபை அமைச்சர் தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு மீனவ சமூகத்தினரது வேண்டுகோளுக்கு இணங்கவே இந் கடல் விமானத் தள திட்டமானது தண்டுகம் ஓயாவிற்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண சபை அமைச்சர் நிமால் லான்ச தெரிவித்துள்ளார். இருப்பினும், இறுதிக் கட்ட முடிவு இன்னமும் எடுக்கப்டவில்லை எனவும், மீனவர் சமூகத்திற்கு பாதகம் இல்லாதவாரு தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இதுகுறித்து இவ்வாரம் பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்படும் எனவும் அவ…

  24. போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கைக்கு விழப்போகும் அடுத்த சாட்டையடி ஜன 2, 2011 Font size: இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடுத்த நெருக்கடி எதிர்வரும் மார்ச் மாதம் பெரும் சாட்டையடியாக மாறவுள்ளதாக ஊர்ஜிதமான தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வின் போது இலங்கைக்கு எதிரான பிரேரணையொன்றை முன்மொழிவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக நம்பகமான தகவல் வட்டாரங்கள் மூலம் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. அதற்கென ஆதரவு திரட்டும் நோக்கில் ஐரோப்பாவின் பலம் பொருந்திய சிலநாடுகளின் உயர்மட்ட அமைச்சர்களுடனான கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்க…

  25. யாழ்.குடாவில் இடம்பெறும் கொலை,கடத்தல் சம்பவங்கள் பாரதூரமானவையல்ல: என்கிறார் பிரதிப் பொலிஸ்மா அதிபர் திங்கட்கிழமை, 03 ஜனவரி 2011 04:52 E-mail அச்சிடுக PDF யாழ்.குடாவில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் கொலை, கொள்ளை, கடத்தல் போன்றனவற்றைப் பாரிய சம்பவங்களாகக் கருத முடியாது. எனினும், சில அரசியல்வாதிகள் இவற்றினைப் பாரிய சம்பவங்களாக காண்பிப்பதற்கு முயற்சிக்கின்றனத் என யாழ். மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி அமரசேகர தெரிவித்தார். யாழ். குடாவில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற சம்பவங்கன் தொடர்பில் கொழும்பிலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்றுக்கே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, யாழ். குடாவி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.