ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு காரணமாக, புது வருடத்தில் சம்பள உயர்வையோ வேறு சலுகைகளையோ வழங்குவதற்கு முடியாத நிலையில் அரசாங்கம் இருப்பதாக ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். இது தொடர்பாக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் எழுத்துமூலம் விளக்கமளிக்க வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க கோரினார். http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/14027-2010-12-31-09-08-02.html
-
- 1 reply
- 716 views
-
-
விக்கிலீக்கில் இலங்கைக்கான அமெரிக்க தூதர் புட்டின் அவர்கள் இலங்கை அரசைப்பற்றி விமரசனம் செய்தமை மஹிந்த குடும்பத்தை சூடேற்றியுள்ளது தெரிந்ததே. இதனை தணிக்க அமெரிக்க நிர்வாகம் பல நிவாரணங்களை வழங்கி வருகின்றது. அதில் ஒரு கட்டமாக நேற்று பசில் இராஜபக்ஷவை அழைத்து கோதுமை மாவு மூட்டைகளை வழங்கி தேற்றியுள்ளார் பற்றீசியா புட்டின். இதன் போது அவர் பேசுகையில்.. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கை கடந்து வந்த சவால்களை எவராலும் மறக்க முடியாது என தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் அவசர உணவு நிவாரண பொதிகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சரிடம் கையளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் இடம்பெற்று வரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்தும் தான்…
-
- 2 replies
- 1.8k views
-
-
நாட்டின் நிலைமை குறித்து சுதந்திரமான கருத்துக்களை செய்திகளாக வெளியிடுவது தொடர்பில் உள்நாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக அமைப்புக்கள் தாமாக மேற்கொண்ட சுயதணிக்கையை எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு கண்டித்துள்ளது. சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் ஊடகங்களுக்கு எதிரான போக்குகள் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக உள்ளுர் ஊடகவியலர்கள் மற்றும் ஊடக அமைப்புக்கள் சுயதணிக்கையை தாங்களாகவே மேற்கொண்டு வந்தனர். தேசிய கீதத்தை சிங்கள மொழியிலேயே பாடவேண்டும் என வலியுறுத்திய சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவு தொடர்பாக கண்டனம் தெரிவித்த யாழ் குடாநாட்டைச் சேர்ந்த கல்வி அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை இலங்கை ஊடகங்கள் பெரி…
-
- 0 replies
- 458 views
-
-
வடக்கில் சிங்கள மக்களை குடியேற்றுவது தொடர்பாக ஜாதிக ஹெலஉறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் கத்தோலிக்க பேராயர் வணக்கத்திற்குரிய மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் நிலைப்பாட்டை வேண்டி நிற்பது எவ்விதத்தில் நியாயமில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக தமிழ் சி.என்.என் செய்தி வலையமைப்பு அவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, அரசாங்கத்தின் பங்குத்தாரர்கள் என்ற ரீதியில் அவர்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே கேட்டறிந்து கொள்ள வேண்டும். அதை செய்ய முடியவில்லை. கத்தோலிக்க பேராயரிடம் கேட்டு மதப் பிரச்சினையொன்றை உருவாக்க ஜாதிக ஹெலஉறுமய முயற்சி செய்து …
-
- 1 reply
- 584 views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற தலைப்பில் அட்டைப் படம் கொண்ட புத்தகம் வெளியீடு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. புத்தகத்தின் முதல் பிரதியை பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கி வைத்தார். புத்தகத்தின் நூலாசிரியர் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய என்பது குறிப்பிடத்தக்கது. நிழற்படத்தை உற்று நோக்கினால் பொலிஸ் மா அதிபருக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலை என கேட்பதுபோல் உள்ளது மஹிந்தவின் முகம். http://www.eelanatham.net/story/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%…
-
- 0 replies
- 989 views
-
-
Colombo airport infested with intelligence sleuths Posted by Sri Lanka Guardian news 11:54:00 PM (December 29, Colombo, Sri Lanka Guardian)Following the debacle visit of the President Mahinda Rajapakse to speak at the prestigious Oxford Union, the Defence Secretary Gotabaya Rajapakse has ordered heavy screening of inbound passengers to the airport. In addition to passengers being screened at the immigration desks, large number of Defence Ministry intelligence officials are stopping and interviewing passengers. The intelligence officials are seen at the lobby and outside the airport. They were seen holding airline passenger lists. The passengers are stoppe…
-
- 0 replies
- 1.1k views
-
-
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கமாகும். என அமெரிககாவிலிருந்து வெளிவரும் த பொஸ்ரன் குளோப் எனும் சஞ்சிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. அந்த சஞ்சிகையில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு, விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்த இலங்கை தொடர்பான தகவல்கல்களின் அடிப்படையில் நோக்கும்போது, உலகில் மிகவும் மோசமான தலைவராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவே கருதப்படுகிறார். யுத்தக் குற்றம் தொடர்பான விசாரணைக்கு முகம்கொடுப்பதனை அவர் தவிர்த்து வருவதும் இவ்வாறு அவர் அடையாளப்படுத்தப்படுவதற்கு ஒரு காரணம். யுத்த இறுதி நாட்…
-
- 0 replies
- 877 views
-
-
கடந்த முப்பது வருட காலமாக இடம்பெற்று வந்த யுத்தத்தினை முடிவு செய்து தமிழ் மக்கள் குறிப்பாக குடா நாட்டு மக்கள் தற்போது சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கும் அமைதியை நேசிப்பதற்கும் வழியமைத்துக் கொடுத்த அதியுத்தம ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவை பாராட்டுகின்றோம் என்று யாழ்ப்பாணத்திற்கு அடிக்கடி வருகை தருகின்ற அமைச்சர்கள் வாயார புகழ்ந்து நெஞ்சார வாழ்த்துத் தெரிவித்துச் செல் கிறார்கள். "யுத்தம் முடிவடைந்துள்ளது இனி மேல் எந்தத் தமிழ் மகனும் துப்பாக்கி யால் சாகமாட்டான்" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்ததும் இந் தச் சந்தர்ப்பத்தில் நினைவு கூரப்பட வேண்டும். ஆனால் கள நிலைமைகள் அப்படி யில்லை.தற்போது குடாநாட்டில் மீண்டும் துப்பாக்கி முனைகள் நீட்டப் பட்டு உயிர் களைத் துவம்சம் செ…
-
- 14 replies
- 1.5k views
-
-
வன்னியை சொந்த இடமாகக் கொண்ட பல்கலைக்கழக மாணவர்களின் விபரங்களை இராணுவத்தினர் சேகரித்து வருகின்றனர். வன்னிப் பகுதி பாடசாலைகளில் கல்வி பயின்று நாட்டில் பல்கலைக் கழகங்களிலும் கல்வி பயிலும் மாணவர் களின் விபரங்களையே இராணுவத்தினர் திரட்டி வருகின்றனர். க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் கற்ற ஆண்டு, சித்தியடைந்த பாடங்களையும், கல்வி பயிலும் பல்கலைக்கழகம், கற்கும் துறை போன்ற விபரங்களையும், குடும்ப உறுப்பினர் விபரம் முதலானவற்றையும் திரட்டி வருகின்றனர் என வன்னி பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பல்கலைக்கழக மாணவர் மற்றும் பெற்றோர் மத்தியில் ஒரு வித அச்ச நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது http://meenakam.com/2010/12/31/17496.html
-
- 0 replies
- 858 views
-
-
பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் பணிகள் மிகவும் விரிவானவை. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக் குழுவுடன் கலந்துரையாடுவதற்காக மட்டும் நாம் இலங்கை செல்ல வேணடிய அவசியமில்லை. என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்த்துக்கான ஆணைக் குழுவைச் சந்திப்பதாயின் மட்டும் இலங்கை வர அனுமதிக்கப்படும் எனவும் உள்ளுர் விசாரணைகளில் ஈடுபட ஒரு போதும் அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்றுத் தெரிவித்திருந்தார். இது குறித்து இன்ன சிட்டி பிரஸ் விடுத்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் இவ்வாறு த…
-
- 0 replies
- 1.1k views
-
-
படுகொலைகள் நிறைந்த பகுதியாக யாழ்ப்பாணம் மாற்றமடைந்துவிட்டது. ஒரு மாத காலத்தில் குமாநாட்டில் இடம்பெற்ற 3 படுகொலைகளும், ஆயுதபாணியிலான இளைஞர்களின் கொள்ளைகளும் குடாநாட்டில் பெரும் அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளது. போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறப்பட்டாலும் மக்களுடைய வாழ்க்கை நிச்சயமற்றதாகவே உள்ளது என்ற உணர்வையே இச்சம்பவங்கள் ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தப் படுகொலைகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படும், குற்றவாழிகள் நீதியின் முன்பாக நிறுத்தப்படுவார் என அரசாங்கத் தரப்பிலும் இராணுவத் தரப்பிலும் சொல்லப்பட்டாலும் கூட, மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாக இந்த வாக்குறுதிகள் எதுவும் அமைந்திருக்கவில்லை என்பதே உண்மையாகும். அதேவேளையில் இந்தப் படுகொலைகள் கொள்ளைச் சம்பவங்களின் பின்னணியில் பட…
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கையின் வடக்கே வவுனியா நகருக்கு அருகேயுள்ள அகதிகள் முகாம்களில் உள்ளவர்களுக்காக கொடுக்கப்படும் உணவுப்பொருட்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளன. இது குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட முகாம்வாசி ஒருவர், உணவுப் பொருட்கள் இரவு நேரத்தில் எடுத்துச் செல்லப்படுவதை மக்கள் பலர் பார்த்திருப்பதாக கூறினார். இதனால் தமக்குறிய உணவு கிடைக்காமல் இருப்பதாகவும் அவர் கூறினார். இது பற்றியும், அனாதைப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்காக, தொண்டு நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள பாதணிகள், தொப்பிகள், பைகள் போன்றவற்றில் சொற்ப அளவே பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் மற்றவை கடத்தப்பட்டதாகவும் தமக்கு புகார் வந்துள்ளதாக வவுனியா நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்…
-
- 0 replies
- 455 views
-
-
இந்திய கடலோர காவற்படையின் (Indian Coast Guard - ICG) கிழக்குக் கரைத் தளபதியாக இருந்த தலைமை ஆய்வாளர் ஏ.இராஜசேகர், நேற்று தனது பதவிப் பொறுப்பை புதிய தளபதியாக பொறுப்பேற்ற சத்யா பிரகாஷ் சர்மாவிடம் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறிய சில விடயங்கள் சிந்திக்கத் தக்கதாகும். “சிறிலங்க கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்களுக்கு போதுமான பாதுகாப்பை அளிப்பதில் இந்திய கடலோர காவற்படை உறுதியாகவுள்ளது. இது குறித்து அரசிடம் பேசியுள்ளோம்” என்று ஏ.இராஜசேகர் கூறியுள்ளார். இது பல பத்திரிக்கைகளில் செய்தியாக வந்துள்ளது. தமிழக கடலோரம் மட்டுமின்றி, மேற்கு வங்கம் வரை நீளும் இந்தியாவின் கிழக்குக் கரை முழுவதையும் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்த கடலோர காவற்படையின் த…
-
- 0 replies
- 415 views
-
-
பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிள்ளைகளை முன்னணி பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கு அங்கீகாரம் கோரி, உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் இது தொடர்பாக ஆராயப்பட்டபோது, இவ்வாறு அனுமதி வழங்கினால் ஏனைய அரசாங்க நிறுவனங்களிலுள்ள உயரதிகாரிகளும் இத்தகைய சலுகையை கோருவர் என ஜனாதிபதி தெரிவித்தார். எனினும் 150 வெளிநாட்டு மாணவர்களுக்கு இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான புலமைப் பரிசில் வழங்கும் திட்டத்திற்கு அனுமதிகோரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவை அங்கீகரித்தது. இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தா…
-
- 0 replies
- 616 views
-
-
திருமாவிற்கு ஒரு கடிதம்.. இன்னும் நம்பிக்கை இருக்கிறது.. – செல்வராஜ் முருகையன் திருமாவளவன் – இவரை பற்றி நான் இந்த காணொளியை பார்க்கும் வரை ஒரு நல்ல மதிப்பு வைத்திருந்தேன். என்ன தான் இருந்தாலும், இலங்கை சென்று ராஜபக்ச – வை சந்தித்தாலும் அவர் ஒரு தமிழ் ஆர்வலர், ஈழ ஆதரவாளர், போராளி என்று தான் நினைத்திருந்தேன்.. தி.மு.க கூட்டணியில் இருந்தாலும், செம்மொழி மாநாட்டில் தமிழீழம் பற்றி பேசினார், ஊர் முழுக்க பிரபாகரன் படம் வைத்திருந்தார், முத்துக்குமார் பாசறை என்று தொடங்கினார் என்று நினைத்திருந்தேன்.. இவருக்காக நிறைய பேரிடம் வாதிட்டும் இருக்கிறேன்.. இவர் ராஜபக்ச விடம் சிரித்து பேசியதை கூட சபை நாகரீகம் என்று கருதி விட்டு விடலாம். ஆனால் இப்படி ஒரு அரசியல் அடி வருடியாக மா…
-
- 0 replies
- 771 views
-
-
புரட்சிப் புயல் வை.கோ. அவர்களுக்கு ஒரு திறந்த மடல். தாழ்த்தப் பட்டவர்களைத் தலை நிமிரச் செய்தார் வைக்கம் பெரியார்! தந்தையின் வாரிசாக வந்த வை.கோ. தீரர் வீழ்த்தப்பட்ட இனம் வீறுகொண்டு எழ வினையாற்றுகின்றார்! அவர்தம் விவேகத்திற்கும் வேகத்திற்கும் எமது விழுமிய வணக்கங்கள். தீர்த்துக்கட்ட வேண்டும் தீவினையாளரை என்றால் தீரத்தோடு செழுங்கிளைகள் சேரவேண்டும் ஒன்றாக! நீர்த்துவிடாது ஐயா, தங்கள் நெடுநாள் தொடர்பணி! நிச்சயமாய் வெற்றி தந்து நிலையான புகழே சேர்க்கும். நேர்த்தியாய் நிலவுலக நீண்ட சரித்திரத்தை நிரம்பச் சொல்லும் நேயரே, தங்கள் நினைவுக்கு ஈர்த்திட வீரும்புகின்றோம் அமெரிக்க விடுதலையில் ஈடுபட்ட சாமுவேல் ஆடம்ஸின் சாமர்த்திய வியூகத்தை: ஆர்த்தெழுந்த ம…
-
- 0 replies
- 686 views
-
-
17வயது மாணவி 76 பேருடன் பாலியல் தொடர்பு! யாழில் அதிர்ச்சி! பெருமளவானோர் படையினராம்! 17வயதேயான யுவதி ஒருத்தி தன்னுடன் 76 பேர் பாலியல் ரீதியான தொடர்புகளை மேற்கொண்டிருந்ததாக தெரிவித்த தகவல் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எச்ஐவி தொற்றலுக்கு உள்ளாகி இருப்பதாக நம்பப்படுகின்ற இந்த பாடசாலை மாணவியின் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அண்மையில் கொழும்பில் வைத்தியசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த படைச்சிப்பாயின் மீது நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது அவர் எச்ஐவி தொற்றலுக்கு உள்ளாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே குறித்த பாடசாலைச் சிறுமியுடன் தான் தொடர்பு கொண்டிருந்த…
-
- 32 replies
- 4.8k views
-
-
இலண்டனில் அமைந்துள்ள பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதரகத்தின் அதிகார மட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவின் ஓக்ஸ்போர்ட் ஒன்றியத்தில் உரையாற்றுவதற்காக கடந்த நவம்பர் மாத இறுதியில் இலண்டனுக்கு விஜயம் செய்திருந்தார். அப்போது பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நடத்திய தீவிர தொடர் போராட்டங்களால் இந் நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டிருந்தது. இந் நிலையில், சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தரவின் பேரில் வெளிவிவகார அமைச்சு பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதரகத்தின் அதிகார மட்டங்களில் மாற்றங்கள…
-
- 0 replies
- 927 views
-
-
ஈழநாதம் வியாழக்கிழமை, டிசம்பர் 30, 2010 அமெரிக்காவில் நேற்று பெற்றோல் நிரப்பு நிலையத்தில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டவர் ஈழத்தமிழராவார். 25 வயதை உடைய சுஜேந்திரன் அமரசிங்கம் என்ற இளைஞரே கொல்லப்பட்டார். அமெரிக்காவின் கன்சாஸ் மானிலத்தில் 59 வது வீதியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் அதிகாலை 4.30 மணியளவில் அவர் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது ஆயுதம் தரித்த கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். கொள்ளையர்கள் ஆயுத முனையில் பணத்தினை பறிக்க முயன்றபோது இவர் போராடியுள்ளார். இதனால் கொள்ளையர்கள் சுட்டுக்கொன்று விட்டு, பணத்தினை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். சூட்டுக்காயங்களுடன் இருந்த சுஜேந்திரனை சிறிது நேரத்தின் பின் வந்த வாடிக்கையாளர்கள் கண்டதுடன் பொலிசாருக்கு தொட…
-
- 6 replies
- 2.7k views
-
-
உடனே எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு வெளிக்கிட்டேன். பற்றைக்காடுதானே அவதானித்து நகருவமென்று. நகர்ந்து கொண்டு இருந்தேன். அப்போது நேற்று சம்பவம் நடந்த பக்கம் சத்தம் கேட்டது. நான் நிற்கிற பக்கமும் கேட்டது. ஆமி ‘கிளியறிங்’ செய்து கொண்டு போற சத்தம் அது. நான் காட்டுக்குள்ளால் வந்து கொண்டிருந்தேன். பெரிய அருவியின் கிளைகள் நிறைய இருந்தது. முதல் அருவியிலும் மரம் ஒன்று விழுந்து கிடந்தது. அது மெல்லியமரம் கொடியொன்று தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு தடியை எடுத்து ஆழம் பார்த்தேன். இதுவும் ஆழமாகத்தான் இருந்தது. தடியை ஊன்றிக் கொண்டு மெதுவாக மரத்தில் காலை வைத்துப் போனேன். கொடிக்குக் கிட்டப் போக மாறி மாறி உருளப் பார்த்தது. நான் உடனே இடது கைக் கமக்கட்டுக்குள் தடியை வைத்துவிட்டு மற்றக…
-
- 0 replies
- 1.1k views
-
-
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் சிறீலங்கா அரசு துணை இராணுவக்குழுக்களான ஈ.பி.டி.பி, பிள்ளையான் குழு உட்பட பல குழுக்களை பயன்படுத்தி படுகொலைகளில் ஈடுபட்டுவந்ததை விக்கிலீக்ஸ் இணையத்தளம் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்காவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் 2007 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் அமெரிக்க அரசுக்கு அனுப்பிய தகவலில், சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா இந்த கொலைக் கும்பலை பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடவடிக்கைகளில் மட்டுமல்லாது, கொழும்பின் பாதுகாப்புக்கும் மகிந்தா இந்த குழுக்களை பயன்படுத்தி வந்துள்ளார். கொழும்பில் தங்கியிருப்பவர்களில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவா…
-
- 1 reply
- 1.6k views
-
-
இந்த நடிகனின் உண்மை முகம் தெரியாத மக்கள் கூட்டமா அல்லது ஆடு மாடு கூட்டங்களா இது ? மேலும் படங்களுக்கு நாடகம் 1 மேலும் படங்களுக்கு நாடகம் 2
-
- 29 replies
- 4.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளிடம் நல்லிணக்க ஆணைக்குழு சாட்சியங்களை பதிவு செய்து கொண்டுள்ளது. இன்று காலை 10.30 முதல் மாலை 4 மணிவரை சாட்சியங்களை பதியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஷ்மன் விக்ரமசிங்க தமிழ் சி.என்.என் க்கு தெரிவித்தார். 20 தமிழ் அரசியல் கைதிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. அவர்கள் அந்த ஆணைக்குழுவிற்கு கூறியதாவது, 'எங்கள் மீது உள்ள விசாரணைகளை துரிதப்படுத்துங்கள், எங்களுக்கு அது மிகுந்த நன்மையாக இருக்கும்' என கேட்டுக் கொண்டுள்ளார்கள். அத்துடன் நலிணக்க ஆணைக்குழு வடக்கில் விஜயம் செய்த வேளையில் தமிழ் அரசியல் கைதிகள…
-
- 0 replies
- 776 views
-
-
எல்லா நாடுகளும் ஆயுதங்களை வைத்திருப்பதனாலேயே யுத்தம் ஏற்படாமல் இருக்கிறது”. இவ்வாறு சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் பிரிட்டனின் பிரதமராக இருந்த மாக்கிரட் தட்சர் கூறியிருந்தார். அவர் கூறிய செய்தியைப் பத்திரிகையில் பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது. நாடுகள் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு தட்சர் ஊக்குவிக்கின்றாரா? என்ற கேள்வி நம் சிறுவயதில் ஏற்பட்டதில் ஆச்சரியம் இல்லையாயினும் தட்சரின் இந்தக் கூற்றின் நியாயத்தை – யதார்த்தத்தைத் தற்போது உணர முடிகிறது. எல்லா நாடுகளும் ஆயுத வல்லமையைக் கொண்டிருக்கும் போது யுத்தம் என்பது இல்லாது போகும். ஒருவரிடம் ஆயுதம், இன்னொருவர் நிராயுதம் என்றால் அங்கு ஒரு தரப்பின் பலம் ஓங்கும். நிராயுதபாணி ஆயுததாரிக்கு என்றும் அஞ்சுபவனாக இருப்பத…
-
- 1 reply
- 1.2k views
-