ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
இந்தியப் பிரதமரையும், தமிழக முதல்வரையும் தாக்க புலிகள் திட்டமாம்: இந்திய புலனாய்வுத்துறை தெரிவிப்பு இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முதல்வர் மு.கருணாநிதி போன்ற முக்கிய இந்திய அரசியல் பிரமுகர்களை தாக்க புலிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பல லட்சம் ஊழல் செய்துள்ளதால் பாராளுமன்றமானது எதிர்க்கட்சியினரால் முடக்கப்பட்டுள்ளது. நாள் தோறும் இந்திய ஊடகங்களில் திமுக காங்கிரஸ் அலைக்கற்றை ஊழல் தொடர்பான செய்திகளே பிரதான செய்திகளாக வந்து மக்களிடம் உண்மைகளை தெரிவித்துவருகின்றன. இத்தகைய சிக்கலில் சிக்கியிருக்கும் காங்கிரஸ், திமுக அரசானது ஊடகங்களின் பார்வையினையும் …
-
- 11 replies
- 1.5k views
-
-
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் சிலை வேலை குறைபாடு காரணமாக சிற்பக்கூடத்தில் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் சிலை சில வேலை குறைபாடுகளை முழுமை செய்ய சிற்பிக்கூடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பிரான்சிலிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றன. சிலை இருந்த இடத்தில் அவரது நிழற்படத்தினை வைத்துள்ளதாகவும், சிறீலங்கா அரச ஊடகங்கள் பொய்ப்பிரச்சாரத்தினை செய்து வருவதாகவும், எதிர்வரும் சனவரி திங்களில் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் சிலை வேலைப்பாடு முழுமையடைந்து நிரந்தரமாக நிறுவப்படும் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://meenakam.com/2010/12/16/16444.html
-
- 4 replies
- 998 views
-
-
சீன ஏகாதிபத்தியமும் ஈழத்தமிழர்களும் தமிழக தமிழர்களின் கடமையும் – சூரியதீபன் தமிழகத்தில் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான செயப்பிரகாசம் (சூரியதீபன்) அவர்கள் மீனகம் சிறப்பு விருந்தினர் சந்திப்பில் சமீபத்தில் சீனா சென்றுவந்த பயண அனுபவங்கள் பற்றியும் வரும் தமிழக தேர்தலில் தமிழர்களின் கடமை என்னவென்றும் நம்முடன் பகிர்ந்துகொண்டார். அக் காணொளியினை இங்கே காணுங்கள்… சந்திப்பு: மீனகம் எல்லாளன் http://meenakam.com/2010/12/16/16421.html
-
- 0 replies
- 462 views
-
-
நாம் யார்? நம் எதிரிகள் யார்? நமக்கும் அவர்களுக்கும் என்ன என்ன பேதம்? சென்னை மாகாணத்தில் பெருவாரியாய் இருக்கும் திராவிட மக்களாகிய – நமக்கு நம் ஸ்தாபனமாகிய ஜஸ்டிஸ்கட்சி என்னும் திராவிடர் கழகத்திற்கு இன்று என்ன கொள்கை, என்ன திட்டம் என்பது யாரும் அறியாததல்ல. என்றாலும் நம் எதிரிகளும், நம்முள் இருந்து நமக்குத் துரோகிகளாக ஆகி சுயநலம் காரணமாக விபீஷணாழ்வார்களாகவும் அனுமார்களாகவும் ஆனவர்களும் நமக்குக் கொள்கை இல்லை, திட்டம் இல்லை என்று சொல்லவதோடு மாத்திரம் அல்லாமல் ஸ்தாபனம் இல்லை, அங்கத்தினர்கள் இல்லை என்றும் சொல்லி எதிரிகளுக்கு அனுகூலமாகப் பிரசாரம் செய்து எதிரிகளுக்கு நல்ல பிள்ளைகளாகிக் கூலிபெறப் பார்க்கிறார்கள். இது ஆரியருடன் கலந்து போய்விட்டதாகக் கருதும் திராவிட மக்களு…
-
- 0 replies
- 839 views
-
-
மன்னாரில் மீன்பிடி வலையில் சிக்கிய கடல் பன்றிகள் மன்னார் கடலில் மீன்பிடிப்பதற்காக வீசியிருந்த வலையில் சுமார் ஆயிரம் கிலோ கிராம் நிறையுடைய இரண்டு கடற்பன்றிகள் உயிரிழந்த நிலையில் அகப்பட்டிருக்கின்றன. மன்னாரின் வடபகுதியான பேசாலையில் உள்ள வங்காலைப்பாட்டில் தங்கியிருந்து கடல்தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர் ஒருவரின் வலையிலேயே குறித்த கடற்பன்றிகள் அகப்பட்டிருக்கின்றன. குறித்த மீனவர் நேற்று முன்தினம் வழமை பிரகாரம் கடலுக்குச்சென்று மீன்பிடிவலைகளை வீசிவிட்டு கரைசேர்ந்து பின் மறுநாளான நேற்று காலை குறித்த மீன்பிடிவலையினை எடுப்பதற்காக சென்றிருக்கின்றார். இதன்போது மீன்பிடிவலைகள் வழமைக்கு மாறான எடையைக் கொண்டிருந்ததாகவும், மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் வலையை கடலில் இருந்து எடு…
-
- 0 replies
- 792 views
-
-
வடமாகாண கலாசார விழா ஜனவரியில் யாழ்ப்பாணத்தில்! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-16 07:44:00| யாழ்ப்பாணம்] வடக்கு மாகாண கலாசார விழாவை எதிர் வரும் ஜனவரி மாத இறுதியில் யாழ்ப்பா ணத்தில் நடத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி அதிகாரிக ளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 2011 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண கலாசார விழா நடத்துவதற்கான கலந்துரை யாடல் நேற்று வடக்கு மாகாண ஆளுநருக் கும், வடக்கு மாகாண கலாசாரத் திணைக்கள அதிகாரிகளுக்குமிடையில் நடைபெற்றது.இதில் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்ட லுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் மற்றும் வடக்கு மாகாண கலாசாரத் திணைக் கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர். …
-
- 1 reply
- 562 views
-
-
குழையைக் காட்டி ஆட்டை கூட்டிச் செல்லும் கலாசாரம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-16 07:45:27| யாழ்ப்பாணம்] தமக்குப் பின்னால் வரமறுக்கின்ற ஆடுக ளுக்குக் குழையைக் காட்டி அதனைக் கூட்டிச் செல்லும் வழக்கம் ஒன்று நம் ஊர்களில் உண்டு. குழைக்கு ஆசைப்பட்ட ஆடுகள் அழைப்பவர் யாரென்று தெரியாமல்- குழை இன்னதென்று அறியாமல் பின்னால் செல்லும். ஆடு குழையைச் சாப்பிட எத்தனிக்கும்போது குழையை இழுத்துக் கொள்வது ஆட்டைக் கூட் டிச்செல்பவரின் நுட்பமாக இருக்கும். எனினும் சில ஆடுகள் நிலைமையை உணர்ந்துகொண்டு குழைக்குப் பின்னால் செல்ல மறுக்கும். இச் சந்தர்ப்பத்தில் ஆட்டுக்குக் குழையைக் காட்டியவர் சற்று இறங்கி குழையை ஆட்டுக்குச் சாப்பிடக் கொடுப்பார். குழை சாப்பிடும் நேரத்தில் குழையைக் கையி…
-
- 2 replies
- 750 views
-
-
டில்லி காங்கிரஸ்காரர்களை கண்டிக்க வக்கற்ற கருணாநிதி அவர்களைக் குஷிப்படுத்தவும், மக்களின் கவனத்தில் இருந்து பிரச்சனையை திசை திருப்பவும் விடுதலைப்புலிகள் தங்களை கொல்ல திட்டமிட்டிருப்பதாக காவல்துறையை ஏவி அறிக்கை வெளியிடுவதாக நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருக்கிறார். ஜனவரியில் சென்னைக்கு வருகை தரும் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும், தமிழக முதல்வர் கருணாநிதியையும் விடுதலைப்புலிகளின் ஒரு குழுவினர் கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத் துறையின் எச்சரிக்கையின் அடிப்படையில் தமிழக டி.ஜி.பி லத்திகாசரண் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இன்றைய நிலையில் இலங்கையின் சூழலும் இந்தியாவின் சூழலும் பதட்டம் நிறைந்ததாக இருக்கிறது. இந்த இரு …
-
- 0 replies
- 689 views
-
-
அரச வைபவங்களில் சிங்களத்தில் மட்டும்தான் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதுவரை காலமும் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது சட்டவிரோதமான ஒன்றாகும் எனக் குறிப்பிட்டிருக்கும் ஜாதிக ஹெல உறுமய, தேசிய கீதம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி கருத்து வெளியிட்டிருப்பது உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் ஒரு செயற்பாடாகும் எனவும் கண்டித்துள்ளது. அரச வைபவங்களில் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படுவதில்லை. எனவே, இதுவரை காலமும் தமிழ்ப் பாடசாலைகளில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளமை நாட்டின் சட்டத்தை மீறிய செயலாகும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் வண. எல்லாவெல மேதானந்த தேரர் இது தொடர்பாக இன்று தெரிவித்தார். …
-
- 3 replies
- 1.3k views
-
-
சூட்டுக்கு இலக்கான பிரதம குரு மரணம் [16 டிசம்பர் 2010, வியாழக்கிழமை 7:05 மு.ப இலங்கை] யாழ்ப்பாணம், டிச.16 சங்கானையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாய மடைந்த நிலையில் யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சங்கானை இலுப் பைத்தாழ்வு முரு கமூர்த்தி ஆல யப் பிரதமகுரு நித்தியானந்த குருக்கள் (வயது 55) நேற்றிரவு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். கடந்த சனிக்கிழமை இரவு 8.40 மணியளவில் முகமூடி அணிந்த இனந்தெரியாத ஆயுத தாரிகள் குருவின் வீட்டினுள் புகுந்து அவரையும் அவரது இரு மகன் மாரையும் சுட்டும் வெட்டியும் காயப்படுத்தியதோடு, மோட்டார் சைக்கிளையும் இரண்டு மோதிரங்களையும் கைச்சங்கிலியையும் பறித்துவிட்டுத் தப்பிச்சென்றனர். இச்சம்பவத்தில் காயமடைந்த மூவரும் யாழ். வைத…
-
- 1 reply
- 601 views
-
-
வியாழக்கிழமை, டிசம்பர் 16, 2010 இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை கொலை செய்வதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் திட்டமிடுவதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் நேற்று எச்சரிக்கை விடுத்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புலிகள் மீண்டும் ஒன்றிணைவதற்கு முயற்சிப்பதுடன் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி ஆகியோரை இலக்குவைத்து பாரிய தாக்குதல்களை தொடுப்பதற்கும் திட்டமிடுவதாக அச்செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் வரவிருந்த நிலையில், புலிகள் அவரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியிருந்தனர் என தெரியவந்துள்ளது. தமிழக கடலோரப் பகுதி வழியாக புலிகள் தம…
-
- 0 replies
- 553 views
-
-
விக்கிரமபாகுவைத் தாக்கியவர் முக்கிய அமைச்சரின் மகனே! வியாழன், 16 டிசம்பர் 2010 12:47 லண்டனிலிருந்து இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துத் தாக்குதலுக்கு இலக்கான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மீது தாக்குல் நடத்திய பிரதான நபர் தற்போது இனங்காணப்பட்டுள்ளனர். இவர் மீது தாக்குதல் நடத்திய கும்பலில் அமைச்சர் குமார குணரத்னவின் மகனான சுரேஷ் குணரத்னவும் காணப்பட்டார் என்ற தகவல் தற்போது வெளியாகியுளள்ளது. இதேவேளை, விக்கிரமபாகு கருணாரத்ன தாக்கப்பட்ட நேரடிக் காட்சிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள கமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனால், இது தொடர்பில் பொலிஸாரோ உயர் மட்டத்தினரோ எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்…
-
- 0 replies
- 522 views
-
-
இலங்கை மத்திய வங்கியில் விமானப் படையினர் ஒத்திகை _ வீரகேசரி இணையம் 12/16/2010 10:52:21 AM இலங்கை மத்தியவங்கியின் மீது மீண்டுமொரு தாக்குதல் மேற்கொள்ளப்படுமாயின் அதனை எதிர்கொள்வது குறித்து இலங்கை விமானப்படையின் தீயணைப்புப் படைப்பிரிவினர் தற்போது ஒத்திகையில் ஈடுபட்டுள்ளார்கள். விமானப்படைக்குச் சொந்தமான விமானங்கள் மற்றும் தீயணைப்புக் கருவிகளுடன் பெரும் எண்ணிக்கையிலான படைவீரர்கள் இந்த ஒத்திகையில் ஈடுபட்டிருப்பதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் சற்றுமுன் தெரிவிக்கிறார். _
-
- 1 reply
- 462 views
-
-
வவுனியாவில் ஒரு வாரத்தில் 2 யுவதிகள் மர்மமான முறையில் காணாமல்போயுள்ளனர் . மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் * Thursday, December 16, 2010, 2:15 வவுனியாவில் ஒரே வாரத் தில் இரு தமிழ் யுவதிகள் மர்ம மான முறையில் காணாமற் போனதையிட்டு அப்பிரதேசத் திலுள்ள மக்களிடையே பெரும் பதற்றம் நிலவுகிறது. 4 நாள்களுக்கு முன்னர் வவுனியா சேமமடு பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவர் வவுனியா பஸ் நிலையத் தில் வைத்து காணாமற் போயி ருந்தார். இந்த நிலையில், வவுனியா கச்சேரியில் கணக்கீட்டுப் பிரிவில் தொழில்புரிந்துவந்த வைரவ புளியங்குளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட குறும்பன்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய யுவதி ஒருவர் நேற்று முன்தினம் காலை தொழிலுக்குச் சென்றபோது காணாமற் போயுள்ள…
-
- 0 replies
- 518 views
-
-
கொழும்பிலிருந்து பருத்தித்துறை சென்ற இ.போ.ச.பஸ் மீது தாக்குதல் முயற்சி கட்டானையில் நேற்றிரவு சம்பவம் * Thursday, December 16, 2010, 2:38 கொழும்பிலிருந்து நேற்று புதன்கிழமை இரவு பருத்தித்துறை நோக்கிச் சென்ற இ.போ.ச. பஸ்ஸை கட்டானை பகுதியில் வழிமறித்த இனம்தெரியாதவர்கள் பயணிகளைத் தாக்க முயன்றதுடன் அவர்களை மிக மோசமான வார்த்தைகளால் எச்சரித்துமுள்ளனர். கொழும்பு புறக்கோட்டை பஸ் நிலையத்திலிருந்து நேற்றிரவு 9 மணியளவில் பருத்தித்துறை நோக்கிப் புறப்பட்ட இந்த இ.போ.ச. பஸ்ஸில் பெருமளவு பயணிகள் பயணம் செய்தனர். இரவு 10 மணியளவில் கட்டானை (நீர்கொழும்புக்கு சமீபமாக) பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பஸ்ஸை முந்திச் சென்ற ஆட்டோ ஒன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் திடீரென பஸ்…
-
- 0 replies
- 643 views
-
-
வித்தியாதரன் மீது புலனாய்வு பிரிவினர் 3 மணித்தியாலங்கள் விசாரணை * Thursday, December 16, 2010, 3:43 சிங்கப்பூர், மலேசியாவுக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டு நேற்று இரவு நாடு திரும்பிய மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனை பண்டாரநாயக்க விமானநிலையத்தில் தேசிய புலனாய்வு பிரிவினர் 3 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தியதாக வித்தியாதரன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் வித்தியாதரன் மேலும் குறிப்பிடுகையில்… ‘சிங்கப்பூர், மலேசியாவுக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டுவிட்டு நேற்று புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தபோது உங்களை விசாரிக்க வேண்டும் என்று கூறிய தேசிய புலனாய்வு பிரிவினர் என்னை அழைத்துச் சென்றனர். சுமார…
-
- 0 replies
- 653 views
-
-
கண்ணிவெடிகள் மற்றும் மிதிவெடிகளைத் தடைசெய்யும் அனைத்துலக உடன்பாட்டில் சிறிலங்காவும் கையெழுத்திடும் வியாழக்கிழமை, 16 டிசம்பர் 2010 04:21 போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் கண்ணிவெடிகளுக்கு எதிரான ஒட்டாவா உடன்பாட்டில் சிறிலங்காவும் கையெழுத்திடும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. கண்ணிவெடிகள் மற்றும் மிதிவெடிகளைத் தடைசெய்யும் அனைத்துலக உடன்பாடு ஒட்டாவாவில் 1997ல் கையெழுத்திடப்பட்டது. இந்த உடன்பாட்டில் சிறிலங்கா, அமெரிக்கா, இஸ்ரேல், சீனா உள்ளிட்ட சுமார் 40 நாடுகள் கையெழுத்திடவில்லை. கண்ணிவெடிகளைப் பயன்படுத்துதல், களஞ்சியப்படுத்தி வைத்திருத்தல், தயாரித்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றை இந்த உடன்பாடு தடைசெய்கிறது. புலிகளுக்கு எதிரான போர் நடைபெறுவதைக் காரணம் க…
-
- 0 replies
- 447 views
-
-
அவசரகால விதிகளைத் தளர்த்துமாறு இலங்கையை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அத்துடன் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் ஏற்கெனவே விடுதலை செய் வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை வெளியிடுமாறும் அமெரிக்கா கோரியுள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேகக் தமிழ் மிரரின் சகோதர ஆங்கில நாளிதழான டெய்லி மிரரிடம் பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பெரும்பாலான இடம்பெயர்ந்தோர் ஏற்கெனவே விடுதலையாகியுள்ளதாக அவர் ஏற்றுக்கொண்டார். எனினும் குற்றம் சுமத்தப்படவுள்ளவர்களின் விபரங்கள் அவர்களின் குடும்பத்தினரின் நிம்மதிக்காக தெரிவிக்கப்படுவது அவசியம் எனவும் அவர் கூறினார். அவசரகால விதிகளையும் உயர் பாதுகாப்பு வலயங்களையும…
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கையில் உள்ள தமிழ் மக்களை உடனடியாகக் காப்பாற்ற இந்தியா முன்வர வேண்டும் என்று பிரான்ஸைத் தளமாகக் கொண்டு இயங்கும் தமிழர் மனித உரிமைகள் மையம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளது என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அமைப்பின் பொதுச் செயலாளர் விசுவலிங்கம் கிருபாகரன் அனுப்பியுள்ள அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, 62 ஆவது சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் உங்களை வாழ்த்துவதில் மிகப் பெருமை அடையும் அதேவேளை இலங்கைத் தீவில் குறிப்பாக, வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் படும் அவலங்களை உங்கள் அவசர கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம். இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்கள் விஷயத்தில் 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவும் இலங்கை…
-
- 4 replies
- 586 views
-
-
சங்கானையில் நடந்தது என்ன? கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு கொள்ளையர்கள் கைகளில் துப்பாக்கியா- அது சாத்தியமா? இரவு எட்டுமணி. குப்பென்ற இருட்டு. எவரும் எதிர்பாராத வேளையில் மிகப் பெரும் திகில் சம்பவம் நடந்தேறியது. சங்கானை முருகமூர்த்தி ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ நித்தியா னந்தக் குருக்கள் ஆலய பூசையை முடித்துக்கொண்டு வீடு திரும்பியிருந்தார்.அவரின் வீடும் கோவிலும் மிகவும் அண்மித்த தூரங்களைக் கொண்டவை. ஆலயத்தில் இருக்கக்கூடிய சில பணிகளை முடித்துக் கொண்டு அவரது இளைய மகன் ஜெகானந்த சர்மா (வயது 28) இரவு எட்டுமணியளவில் வீடு நோக்கி நடந்துசெல்கிறார். ஆலயத்தைத்தாண்டி வீட் டை அண்மிக்கும் வேளை யாரோ இருவர் அவரின் நெற் றியில் துவக்கை வைக்க இன் னொருவன் அவரின் கழுத் தில் கிடந்த சங்கிலியை அறு…
-
- 2 replies
- 659 views
-
-
ஐ. நா. பிரேரணை குழுவுக்கு "கிளிக்" செய்து விசாரணைக்குழு அமைக்க கோருங்கள் இங்கே சொடுக்கவும்: http://www.congressweb.com/cweb2/index.cfm/siteid/PEARL/action/TakeAction.Contact/lettergroupid/105 அனுப்பும் செய்தி ( Message ) I hope you will hear my story. I have family and friends that were wounded or killed by the Sri Lankan military offensive during the first five months of 2009. For decades, stories of Tamil suffering have been silenced by Sri Lanka's state oppression and intimidation. Due to Sri Lanka's culture of impunity and the international community's indifference to the plight of the Tamils, the deaths of my loved ones remain unaccounted for. I am urg…
-
- 1 reply
- 458 views
-
-
இலங்கைக்கு இவ்வாண்டு 6 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை வீரகேசரி இணையம் 12/14/2010 5:10:47 PM இலங்கைக்கு இவ்வாண்டு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 6 லட்சமாக உயர்வடைந்துள்ளது. ஆறு லட்சம் என்ற எண்ணிக்கையைத் தொடும் தம்பதியர் இருவரை வரவேற்க இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட வைபவம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவுஸ்திரேலிய தம்பதியர் இருவரே இந்த அதிர்ஷ்டசாலிகள் என எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார். இவர்கள் லண்டனிலிருந்து யு.எல் 501 என்ற விமானத்தின் மூலம் இன்று மாலை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்களை வரவேற்க சுற்றுலாச் சபையின் உயரதிகாரிகள் விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்
-
- 6 replies
- 554 views
-
-
விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கமாண்டராகவும் இருந்தார். பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்தார். தற்போது அவர் இலங்கை அரசின் மறு சீரமைப்பு துறை துணை மந்திரியாக உள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- இறுதி கட்ட போரின் போது நடந்த உண்மைகளை கண்டறியும் குழுவையும், பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு சீரமைக்க கமிஷனையும் இலங்கை அரசு அமைத்துள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை விடுலைப்புலிகள் கொலை செய்தது மிகப்பெரிய தவறு. அதுதான் அவர்களுக்கு எதிராக திரும்பிவிட்டது. அவரது …
-
- 6 replies
- 1.5k views
-
-
இலங்கையின் தேசிய மலர் தொடர்பில் புதிய சர்ச்சை (பட இணைப்பு) _ 12/15/2010 7:58:36 PM 8Share இலங்கையில் தேசிய மலராக நீல அல்லி (நீலோற்பலம்) என சரியாகப் பெயர் குறிபிடப்பட்டாலும் அதற்கெனப் பயன் படுத்தப்படும் மலரின் படம் பிழையானது என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. இச் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளவர் பேராதனைப் பல்கலைக்கழக தாவரவியல் பேராசிரியை தீப்தியகன்தாவலயும், வயம்ப பல்கலைக்கழகத்தின் தாவரவியல் சிரேஷ்ட விரிவுரையாளர் கபில யகன்தாவலயுமாகும். இலங்கையின் தேசிய மலராக 1986 ஆம் ஆண்டு முதல் பிரகடணப்படுத்தப்பட்ட நீல அல்லி மலருக்கு பதிலாக இலங்கையின் அரச இணையத் தளங்களிளும் பாடசாலை பாடப் புத்தகங்களிலும் ஏனைய அரச ஆவனங்களிலும் பிழையான ஒர் காட்டு மலர் காட்டப் பட்டுள்ளதாக…
-
- 2 replies
- 3.5k views
-
-
சம்பூர் மக்களுக்கு வாக்கு பதிவு மறுப்பு: மாவை சேனாதிராஜா _ 12/15/2010 6:43:25 PM அதி உயர் பாதுகாப்பு பிரதேசமாக பிரகடணப்படுத்தப்பட்டு அங்கிருந்த வெளியேற்றப் பட்ட மக்களுக்கு வாக்கு பதிவு வழங்க மறுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். சம்பூர் பிரதேசம் அரசினால் அதி உயர்பாதுகாப்பு பிரதேசமாக பிரகணப்படுத்தப்பட்டு அங்கிருந்து 16 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் அவர்களின் வாக்கு பதிவு மறுக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக தேர்தல் ஆணையாளரை சந்தித்து கலந்துரையாட உள்ளதாகவும் தெரிவித்தார்.
-
- 0 replies
- 411 views
-