ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143281 topics in this forum
-
ஜனாதிபதி கைதானால் எதுவுமே செய்ய முடியாது - பிரிட்டன் கைவிரிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-11-21 08:38:27| யாழ்ப்பாணம்] நீதிமன்ற உத்தரவுக்கு அமைய போர்க் குற்ற அடிப்படையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கைது செய்தால், அந்த விவகாரத்தில் தலையீடு செய்ய முடியாதென பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் டிசம்பர் மாதம் ஜனாதிபதி மகிந்த ராஜபக் பிரிட்டனுக்கு விஜயம் செய்ய உள்ள நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார். பி.பி.சி. தொலைக்காட்சி சேவைக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல் கலைக்கழகத்தின் சிங்கள சங்கத் தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி பிரிட்டனுக்க…
-
- 2 replies
- 1k views
-
-
மூன்று கால்களை உடைய தெரு நாய்க்கு அடித்திருக்கும் ராஜ யோகம்! ஞாயிற்றுக்கிழமை, 21 நவம்பர் 2010 09:51 E-mail அச்சிடுக PDF கொழும்பு வீதிகளில் மிகவும் கேவலமான நிலையில் திரிந்து வந்த மூன்று கால்களை மாத்திரம் உடைய தெரு நாய் ஒன்றுக்கு அடித்திருக்கின்றது ராஜ யோகம். அமெரிக்காவை சேர்ந்த பெண் வர்த்தகர்களில் ஒருவர் Tracy Murphy. மிருகங்கள் மீது மிகுந்த காருண்யம் உடையவர். இவரின் வாழ் நாளில் பெரும்பகுதியை மிருகங்களுக்கு உதவி செய்கின்றமையிலேயே செலவு செய்து வருகின்றார். சில வாரங்களுக்கு முன் வர்த்தக விடயமாக கொழும்பு வந்திருக்கின்றார். அப்போது தெருவில் மூன்று கால்களை உடைய இந்நாயை கண்டு இருக்கின்றார். இதன் வயிறு ஒட்டிப் போய் இருந்தது. மிகவும் கேவலமான நிலையில் காட்ச…
-
- 2 replies
- 1.4k views
-
-
கடந்த வருடம் எந்தவித காரணமும் இன்றி கிழக்கில் செஞ்சிலுவை சங்கத்தின் அலுவலுகளை மூடச்சொன்ன சிங்களம், இப்பொழுது வடக்கிலும் அதே அணுகுமுறையை எடுத்துள்ளது போல் தெரியவந்துள்ளது. வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் அலுவலகங்களை கொண்டு இயங்கி வருகின்றது. இதற்கான தெளிவான காரணங்களை தெரிவிக்காமல் இந்த வாரத்தின் தொடக்கத்தில் சிங்களம் இதை தெரியப்படுத்தியுள்ளது. (கீழே உள்ள கட்டுரையில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டது) ICRC told to leave North By Leon Berenger The Government has told the International Committee of the Red Cross (ICRC) to shut down its operations in the Northern Province, a spokesperson said yesterday.“We have been told by the government to cease all…
-
- 1 reply
- 401 views
-
-
அரசுக்குள் பூகம்பம்! ஐ.தே.க ஆரவாரம் சனி, 20 நவம்பர் 2010 23:31 . . மஹிந்த அரசுக்குள் மிகப் பெரிய பூகம்பம் வெடித்துள்ளது என்று ஐ.தே.க பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அவர் 'இருச' சிங்கள பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அப்பேட்டியில் மேலும் தெரிவிக்கையில், அரசுக்குள் ஏற்பட்டு இருக்கும் பாரிய பிளவு காரணமாகவே அமைச்சரவை நியமனம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு எம்.பிகள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை, அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் ஒருவரோடு ஒருவர் சந்திக்கின்றபோது அவர்களுக்குள் குசுகுசுத்துக் கொள்கின்றமையை காண முடிகின்றது என்றார். http://tamilcn…
-
- 0 replies
- 990 views
-
-
தற்போதைய இராணுவத் தள பதியின் பதவிக்காலத்துக்கு முன்பாக அவரை ஓய்வுபெற வைத்து விட்டு யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங் கவை அடுத்த இராணுவத் தளபதி யாக்கும் வியூகங்களை பாதுகாப் பமைச்சு மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக மிக விரைவில் ஆரம்பிக்கப்படவிருக்கும் ஒருங் கிணைந்த புலனாய்வு அமைப்பின் முக்கிய பணிகளில் ஒன்றாக மகிந்த ஹத்துருசிங்கவின் புகழ்பாடும் பிரசார நடவடிக்கைகளை முன் னெடுக்கும் விடயம் அமையவுள் ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய இராணுவத் தளபதியாக அடுத்த வருட நடுப்பகுதியில் மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க பதவியேற்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டது. http://www.tamilthai.com/?p=5268 Sri Lanka's Jaffna Security Forces Comman…
-
- 0 replies
- 686 views
-
-
தேசியத் தவைரின் பிறந்ததினத்தில் தமிழ் மக்களுக்கு இந்தியா காணிகளை வழங்குகிறது – அரசை எச்சரிக்கின்றது கொழும்பு ஊடகம் நவ 19, 2010 எதிர்வரும் 26 ஆம் நாள் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்ததினம். அதனை தொடர்ந்து 27 ஆம் நாள் மாவீரர் தினத்தை உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்கள் கொண்டாடுகின்றனர். இந்த நிலையில் எதிர்வரும் 25 ஆம் நாள் கொழும்புவரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா தமிழ் மக்களுக்கு வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தில் வீடுகளை வழங்குகின்றார்.இந்தியாவின் இந்த மாற்றம் ஆபத்தானது என கொழும்பு ஊடகம் சிறீலங்கா அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த வருடம் மே மாதம் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற…
-
- 1 reply
- 906 views
-
-
ஞாயிற்றுகிழமை, நவம்பர் 21, 2010 ஈழநாதம் கார்த்திகை 27 கல்லறைத் திருநாள் ஆரம்பம். எங்கள் கண்மணிகள் பெருநாள் வாரத்தின் ஆரம்பம் இன்று. இல்லத்தை சுத்தம் செய்ய அவர் உறங்கும் இடம் இல்லையே எனினும் வீழ்ந்தவர் எண்ணத்தை சுமக்க இடம் தேவை இல்லையே எம் இதயம் போதுமே மக்களே. அவர்கள் உடலையா நாம் விதைத்தோம் இல்லையே அவர்களின் உயிரிலும் மேலான கனவையும் அல்லவா விதைத்தோம். கண்ணீராலும் செந்நீராலும் விதையிட்டு உரமிட்டோம். ஆண்டிற்கொருமுறைி இந் நாளில் இருந்து 27 வரை அவர்கள் நினைவுடன் கடமைகளைச்செய்வோம். கார்திகை 27: கல்லறைத் திருநாள், கண்மணிகள் பெருநாள் உதிர்ந்து போன உ…
-
- 1 reply
- 791 views
-
-
ஐ. நா. சபையினால் நியமிக்கப்பட்ட சிறீலங்கா அரசு மீதான போர்குற்ற விசாரணைக்குழு எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னதாக சாட்சியங்களை பதிவு செய்து சமர்ப்பிக்கும்படி கோரியிருந்த நிலையில், தமிழர்கள் வாழும் பல நாடுகளில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இவ்வேளையில் சுவிசில் உள்ள ஒரு மனிதநேய நிறுவனமான GfbV எனப்படும் Gesellschaft für bedrohte Völker அதாவது அழிக்கப்படும் இனங்களை பாதுகாக்கும் நிறுவனம் தமிழர்களின் சாட்சியங்களை பதிவு செய்து உதவ முன்வந்துள்ளது. (http://www.gfbv.de/ ) பல நாடுகளில் தமிழ் அமைப்புக்களாலும் தனி நபர்களாலும் சாட்சிப்பதிவு செய்யப்பட்டு வரும் வேளையில், சாட்சியங்கள் பக்கச்சார்பில்லாமல் சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைய பதிவு செய்யப்…
-
- 0 replies
- 724 views
-
-
சுதந்திர இந்திய அரசியல் சரித்திரத்தில், எதிர்க்கட்சிகளால் பிரதமர்கள் விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இதுவரை மன்மோகன் சிங்கைப்போல எந்தப் பிரதமரும் உச்ச நீதிமன்றத்தால் செயல்திறன் கேள்வி கேட்கப்பட்டு அவமானப்பட்டதாகத் தெரியவில்லை. கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்று கருதப்பட்டவர் கறுப்பு ஆடுகளின் காவல்காரர் என்று அடையாளம் காணப்பட்டிருக்கும் கபட நாடகம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. "ஸ்பெக்ட்ரம்' ஊழல் ஒருபுறம் இருக்கட்டும். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடந்தேறியிருக்கும் முறைகேடுகளும், ஊழல்களும் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. இந்த ஊழல்களிலும், முறைகேடுகளிலும் தொடர்புடையவர்கள் பலரும் பிரதமர் மன்மோகன் சிங்கின் நம்பிக்கைக்குப் பாத்திரமான…
-
- 2 replies
- 940 views
-
-
கிளிநொச்சி வீழ்ந்தவுடன் மக்களை விட்டிருந்தால் 40.000 பேருடைய உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்… சி. கா. செந்திவேல் 18 November 10 05:28 am (BST) சிறீலங்காவின் இன்றைய சீத்துவக்கேடுகள் என்ன… சீரழிந்து போன தமிழர்கள் எப்படி சீர் பெறலாம்.. சிறீலங்கா இனவாத அரசு – இந்தியா – புலிகள் – புலம் பெயர் தமிழர் விட்ட தவறுகள் என்ன.. சுமார் 50 வருடங்களுக்கு மேலாக இலங்கையின் கம்யூனிச பாரம்பரியத்தில் வந்த , புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி.கா.செந்திவேல் நேற்று சனி 13.11.2010 அன்று டென்மார்க் வந்திருந்தார். வயன் நகரத்தின் இலக்கிய மன்றத்தினரால் நடாத்தப்பட்ட கருத்தரங்கில் அவர் கூறிய கருத்துக்களில் முக்கியமானவை இங்கு தரப்படுகின்றன. ந…
-
- 24 replies
- 2.9k views
-
-
நடைமுறை சாத்தியமற்ற போர்க்குற்ற விசாரணைப் பரபரப்பு சி.சந்திரமௌலிசன் இனப்படுகொலையை தடுக்க வலியுறுத்தி ஐ.நா கடிதங்கள் அமைய வேண்டும் நடைமுறைச் சாத்தியம் அற்ற போர்குற்ற விசாரணையில் நாம் தீவிரமாக “பரபரப்பு” அடைந்து வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. “கல்லில் நார் உரிக்க வேணும் என்று சிலர் சொல்ல, ஓமோம் கல்லில் இருந்து உரிக்கும் நார் நல்லதாக இருக்கும். அதை நாம் திட்டமிட்டு ஒன்று சேர்ந்து உரிக்க வேண்டும்” என்று மேலும் சிலர் எழுதவும் சொல்லவும் ஆரம்பித்து விட்டனர். இதில் கவலைக்கு உரிய விடயம் என்னவென்றால் இவர்களில் எவர் ஒருவரும் மேற்படி வழக்கை எந்த சட்டத்தின் கீழ்? எங்கே? யாரால்? பதிவு செய்ய முடியும் என்று புலமைசார் திறன் கொண்டு ஆராய்ந்ததாகத் தெரியவில…
-
- 7 replies
- 1.5k views
-
-
இன்று முக்கியத் தேவை தெளிவான சிந்தனையும் திட்டமிட்டச் செயல் பாடும். இதில் கொள்கை ஒரு முகமாகவே இருந்தாலும் சிந்தனைத் தெளிவு இல்லாமல் பலமுகச் சிந்தனைக் கருத்துக்கள் உலவி வருகின்றன, ஐந்து விரல்கள் ஒன்றாக இருக்க வேண்டியதில்லை,ஆனால் அவை ஒன்றாக மூடி இணையும் போது உள்ள ஆற்றல் தனித்தனியே வருமா? ஒரு முறை நன்றாக விரல்களை மூடி, இருக்கமாக மூடிப் பார்த்து விட்டு உருக்கமாகச் சிந்திப்போம். தமிழ் ஈழத்திலே மக்களின் துன்பங்கள்,வேதனைகள் நம்மை வெட்கத்திற்கும்,சொல்ல முடியாத துன்பத்திற்கும் ஆளாகி விட்டுள்ளது. ஒவ்வொருவரும் ஏதவது செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் செயல் பட வேண்டுமே தவிர ந்ம்மால் என்ன முடியும் என்று சோர்வடைவதிலோ, செய்பவர்களை அது சரியில்லை,இது சரியில்லை என்று குறை பேசுவ…
-
- 0 replies
- 602 views
-
-
உண்ணாவிரதத்தை முடித்தார் மகசின் சிறைச்சாலை கைதி தேவதாசன் : குமரகுருபரன் வீரகேசரி இணையம் 11/20/2010 2:24:31 PM வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தக் கோரி, கடந்த ஐந்து நாட்களாக உண்ணாவிரதம் இருந்த, கொழும்பு மகசின் சிறைச்சாலைக் கைதியான கனகசபை தேவதாசன் (வயது 53), இன்று பிற்பகல் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டுள்ளார். இதனை, ஜனநாயக தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நல்லையா குமரகுருபரன் சற்றுமுன் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் நிலுவையில் இருக்கும் வழக்கை மேல் நீதிமன்றுக்கு மாற்றுமாறும் வழக்கை துரிதப்படுத்துமாறும் கோரி தேவதாசன் உண்ணாவிரதம் இருந்தார். இவரது உடல் நிலை மோசமாகி வந்ததைத் த…
-
- 0 replies
- 435 views
-
-
Nov 20, 2010 / பகுதி: செய்தி / கல்குடாவில் சிங்களக் குடும்பங்களை குடியேற்ற திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்குடா பிரதேசத்தில் 73 சிங்கள குடும்பங்களை குடியமர்த்தும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு விரைவாக முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கடந்த 16 ஆம் நாள் வாழைச்சேனை உதவி அரச அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் காணி ஆணையாளர் தர்மதாசா, வாழைச்சோனை பௌத்த ஆலயத்தின் பிரதமகுரு வண நவநி அபயவன்சலங்காரா தேரர், சிறப்பு அதிரடிப்படை அதிகாரி விமலசேனா, கல்குடா காவல்நிலைய பொறுப்பதிகாரி சமரசிங்கா, வாழைச்சேனை உதவி அரச அதிபர் இரிதரன் ஆகியோர் பங்குபற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது. பதிவு
-
- 0 replies
- 533 views
-
-
நமல் ராஜபக்சவிற்கும் பசில் இராஜபக்சவிற்கும் பனிப்போர் நடைபெறுவது அனைவருக்கும் தெரியும். வடக்கின் வசந்தம் நிகழ்ச்சி திட்டத்தில் நாமலின் தலையீடு பற்றி பல தடவை மஹிந்தவிற்கு பசில் எடுத்துக்கூறியுள்ளார். ஆனால் மஹிந்தவின் துணைவியார் நாமல் ராஜபக்ஷவை, தன் கணவர் மஹிந்தவிற்கு அடுத்த நாட்டின் அதிகாரம் உள்ளவர் நாமல்தான் என அதிகாரிகளை அச்சுறுத்தி வருகின்றார். கடந்த வாரத்தில் கிளிநொச்சியில் காணி சுவீகரிப்பு கூட்டத்திற்கு நாமல் ராஜபக்ஷ ஜி.எல்.பீரிஸ் அவர்கலை அழைத்து வந்து கூட்டத்தை நடத்தினார். இதனால் பசில் ஆத்திரமடைந்தார். இதற்கு பதிலாக நாமலின் மாவட்டமான ஹம்பாந்தோட்டை அபிவிருத்தி கூட்டத்திற்கு பசில் அழையா விருந்தாளியாக போய் குந்தினாராம். இவ்வாறு கருத்து மோதல்கள் வலுத்து வரும் நி…
-
- 1 reply
- 1.2k views
-
-
நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எந்த அறிகுறியும் இலங்கை அரசிடம் இல்லை என்று சர்வதேச நெருக்கடி குழு குற்றம் சாற்றியுள்ளது. யுத்தத்தால் சின்னாபின்னமடைந்த நாட்டுக்கு பொருளாதார ரீதியில் மறுவாழ்வை ஏற்படுத்தும் உறுதிமொழியுடன், 65 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடிய இலங்கை அதிபர் ராஜபக்ச அடுத்த 6 வருடத்திற்கான இரண்டாவது பதவிக்காலத்தை இன்று ஆரம்பிக்கிறார். இந்நிலையில்,யுத்தத்தினால் பல வருடங்களாகப் பாதிக்கப்பட்டிருந்த சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்துக்குத் தேவைப்படும் எந்தவொரு விடயங்களிலும் எந்தவொரு ஆர்வத்தையும் வெளிப்படுத்துவதற்கான அறிகுறி எதுவும் அரசாங்கத்திடம் காணப்படவில்லை என்று சர்வதேச நெருக்கடிக்குழுவின் இலங்கைத் திட்டத்திற்கான பணிப்பாளர் அலன் கீனன் குற்றம் சாற்றியுள்ளார். …
-
- 1 reply
- 590 views
-
-
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கனடாவும் இந்தியாவும் பேச்சுவார்த்தை 20 November 10 02:06 am (BST) இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கனடாவும் இந்தியாவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் கனடா நோக்கி சட்டவிரோதமான முறையில் பிரவேசிப்பது குறித்து இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கனடா மற்றும் இந்திய புலனாய்வுப் பிரிவு உயரதிகாரிகளுக்கு இடையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. கனேடிய புலனாய்வுப் பிரிவின் ரொபர்ட் பி பெடனும், இந்திய புலனாய்வுப் பிரிவின் ராஜீவ் மாதூர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக்…
-
- 1 reply
- 667 views
-
-
"தாய்நாட்டில் நிரந்தர சமாதானத்தையும் தேசிய ஐக்கியத்தையும் உறுதிப்படுத்துவதன் மூலம் உலகின் உன்னத தேசங்களின் மத்தியில் சிறப்பு மிக்க நாடாக இலங்கையை மிளிரச் செய்வதே தமது முதலாவது இலக்கு' என்று தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ "அணிசேராமையே' அரசாங்கத்தின் கொள்கையென திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி செயலக முன்றிலில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இரண்டாவது பதவிக்காலத்துக்கு பதவிப்பிரமாணம் செய்து கொண்ட மகிந்த ராஜபக்ஷ எமக்கு பகைநாடுகள் என்று எதுவும் இல்லை. அந்த மாதிரியான குழுக்களையோ, அணிகளையோ நாம் கொண்டிருக்கவில்லை. தேசிய பாதுகாப்புக்காக பலநாடுகளுடன் நாம் உடன்படிக்கை செய்துகொண்டிருந்தோம். நட்புறவு கொண்டிருந்தோம்.இப்போது அபிவிர…
-
- 0 replies
- 711 views
-
-
வரவு செலவுத்திட்டம் மீதான விவாதங்கள் நடைபெறும் காலப்பகுதியில் அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி எம்.பி. க்கள் வெளிநாடுகளுக்கான பயணங்களை தவிர்க்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின்தின் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கடவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் வரவு செலவுத்திட்டம் மீதான விவாதங்கள் நடைபெறும் காலப்பகுதியில் அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி எம்.பி. க்கள் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளவேண்டும் என்று உயர்மட்டத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளும…
-
- 0 replies
- 612 views
-
-
கூட்டமைப்பின் குழப்பங்களும் வித்தியாதரனின் முதலமைச்சர் கனவும் முத்துக்குமார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் உடைகின்றதா என்ற சந்தேகம் அரசியல் ஆர்வலர்களிடையே இன்று எழுந்துள்ளது. இறுதியாக கொழும்பில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளே இச் சந்தேகங்களை எழுப்பியுள்ளன. அக்கூட்டத்தில் கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் ஏனைய கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே பலத்த வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றதாகவும் ஒரு கூட்டத்தில் அது முற்றி வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கும் மாவை சேனாதிராஜாவிற்கும் இடையே கைகலப்பு இடம்பெறும் அளவிற்கு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்…
-
- 4 replies
- 1.1k views
-
-
”ஆண் பிள்ளைகளுக்கு முன்னால் அம்மணம் ஆக்கி எஜமானியம்மா என்னை சோதனை செய்தார்” (படம் இணைக்கப்பட்டுள்ளது) சவூதி அரேபியாவில் எஜமானர்களின் கொடுமைக்கு பலிக் கடா ஆக்கப்பட்டிருக்கும் தமிழ் பெண் ஒருவரின் கதை இது. பெருமாள் ராஜகுமாரி (வயது -35). கொழும்பில் கொஸ்கம பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர். இவரது தந்தைக்கு வயது-75. தாய்க்கு வயது 65. 13 வருடங்களுக்கு முன்பே கணவனால் கைவிடப்பட்டு விட்டார். மூன்று குழந்தைகள். ஒரு குழந்தைக்கு கண் பார்வை குறைவு. பெற்றோரையும், பிள்ளைகளையும் பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம் இவருக்கு. எனவே கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி சவூதி அரேபிய வீடு ஒன்றுக்கு பணிப்பெண்ணாகச் சென்றார். எஜமானர், எஜமானரின் மனைவ…
-
- 10 replies
- 23.5k views
-
-
ஈழத் தமிழர்கள் மீது போர் குற்றம் இழைக்கப்பட்டிருக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அந்த போர்க் குற்றங்களின் நோக்கம் இன அழிப்புத்தான் என்பதனை ஐ.நாவுக்கு அனுப்பும் ஒவ்வொரு கடிதங்களிலும் வலியுறுத்தவேண்டும். போர்க்குற்ற விசாரணையை (War Crimes) மட்டும் முன்னிலைப் படுத்தாமல் இனப் படுகொலையையும் (Genocide) முன்னிலைப் படுத்துவதாக அனைத்து செயல் பாடுகளும் அமைய வேண்டும். போர்குற்ற விசாரணை என்பது குற்றமிழைத்தவருக்கு தண்டனை என்பதுடன் இருந்துவிடுகின்றது. போர்குற்ற விசாரணை பாதிக்கப்பட்டவர்களின் நலன் காக்கும் நடவடிக்கை அல்ல. அது குற்றவாளிக்கு தண்டனை என்பதனை முதல் நோக்கமாக கொண்ட வடிவமைப்பு. இதற்கு முற்றிலும் எதிராக இனப்படுகொலை விசாரணை பாதிக்கப்பட்ட இனத்தை, இன…
-
- 6 replies
- 1.2k views
-
-
நேர்த்தி செய்ய முறிகண்டி சென்ற நல்லூர் தம்பதியினர் விபத்தில் பலி [20 நவம்பர் 2010, சனிக்கிழமை 8:00 மு.ப இலங்கை] கிளிநொச்சி,நவ.20 கிளிநொச்சி, முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் நேர்த் திக் கடன் செலுத்தச் சென்ற நல்லூரைச் சேர்ந்த தம்பதியர் விபத்தில் அந்த இடத்திலேயே மரணமானார்கள். மாங்குளத்தில் இருந்து வந்த படையினரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவத் தி லேயே தம்பதியினர் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக் கப்பட்டது. நேற்றுக்காலை 7.30 மணிய ளவில் இடம்பெற்ற இந்த விபத் தில் நல்லூர் செட்டித்தெரு வைச் சேர்ந்த பவுண்ராஜா செல்வராஜா(வயது 52), அவ ரது மனைவியான செல்வராசா நகுலேஸ்வரி(வயது 48) ஆகி யோரே உயிரிழந்தவர்கள் ஆவர். இச்சம்பவத்தில் 8 படையி னர் கா…
-
- 0 replies
- 720 views
-
-
புனித மக்காவில் இலங்கையர் ஐவர் மரணம் வீரகேசரி இணையம் 11/20/2010 9:51:06 AM இலங்கையிலிருந்து இம்முறை புனித ஹஜ் கடமைக்காக மக்கா சென்ற 5 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவிக்கின்றது. இம்மரணங்கள் இயற்கையானவை எனவும் அவ்வமைச்சு தெரிவிக்கின்றது. இவர்களில் கொழும்பு மற்றும் மாத்தறையைச் சேர்ந்த இருவர் கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளனர். மற்றைய இருவரின் சடலங்கள் இதுவரை அடையாளங் காணப்படவில்லை. அடையாளங் காணப்பட்ட பின்னர் ஜனாஸாக்களை கூடிய விரைவில் இலங்கை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அவ்வமைச்சு தெரிவிக்கின்றது. ஏற்கனவே காத்தான்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் மரணமடைந்து, அவரது ஜனாஸா அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டதாகத் தெர…
-
- 0 replies
- 534 views
-
-
சண்டிலிப்பாயின் வடக்கே அழகும் செழிப்பும் மிக்க ஒரு சிறிய கிராமமே ஆலங்குலாய் ஆகும். பல போராட்ட வடுக்களைச் சுமந்து நிற்கும் இக் கிராமம், முன்னேறிப்பாய்சல் காலப்பகுதியில் பாரிய சேதங்களை தாங்கியும் அழிந்து விடாமல் நிமிர்ந்து நிற்கிறது என்று சொன்னால் அதற்குக் காரணமானவர்கள் அந்தக் கிராமத்தில் இருக்கின்ற ஊர்ப்பற்று மிக்க இளைஞர்களும், மக்களும் தான் என்று சொல்லலாம். அவர்களின் ஒருங்கிணைப்பு மையமாக திகழ்வதும், ஆண்டாண்டு காலமாக தலை முறைகளாக கட்டி காத்து வரப்பட்டது இந்த நூலகம் தான். புலம் பெயர் தமிழர்களின் உதவியாலு மற்றும், குழந்தைகளுக்கான மாதாந்த மருந்துவ முகாம், மரணசடங்கிற்கான தள்ளுவண்டில் சேவை என இது தற்போது சிறிது சிறிதாக முன்னேறி வரும் நிலையில்.. கடந்த 16.11.2010 ம் திகதி இர…
-
- 2 replies
- 841 views
-