ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
இலங்கையில் பணியாற்றும் அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் தொடர்பான 1980 ஆம் ஆண்டின் சட்டத்தில் அரசு திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இதன்படி இதுவரை அரசிடம் பதிவு செய்து கொள்ளாத நிறுவனங்கள் உடனடியாக பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படி பதிவு செய்து கொள்ளும் நிறுவனங்கள் அரசால் எழுத்துபூர்வமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது அரசு கொண்டுள்ள சந்தேகத்தை வெளிப்படுத்துவதாகவே கருத வேண்டியுள்ளது என்று தன்னார்வ தொண்டு அமைப்புகள் கருத்து வெளியிட்டுள்ளன. அ…
-
- 0 replies
- 489 views
-
-
விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் சேதங்களை புனரமைக்க 1041 மில்லியன் ரூபா செலவு திகதி: 10.11.2010 விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலில் சேதமடைந்த உள்நாட்டு இறைவரித் திணைக்களக் கட்டடத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கு 1041 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது, கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் விடுதலைப் புலிகளின் இலகு ரக விமானம் கொழும்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களக் கட்ட்டத்தின் மீது மோதி வெடித்துப் பெரும் சேதம் விளைவித்தது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் சரத் அமுனுகம, உள்நாட்டு இறைவரித் திணைக்களக் கட்டடத்தைப் புனரமைக்க அரசாங்கம் 1041 மில்லியன் ர…
-
- 1 reply
- 778 views
-
-
Nov 10, 2010 / பகுதி: செய்தி / ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை சிறீலங்கா அரசு நிரந்தரமாக இழந்தது சிறீலங்காவுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறுத்திய பின்னர் அதனை பெறுவது தொடர்பில் சிறீலங்கா அரசு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என சிறீலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் பேர்னாட் சாவேஜ் நேற்று முன்தினம் (07) கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். வரிச்சலுகையை மீளப்பெறுவது தொடர்பில் சிறீலங்கா அரசு எந்த அணுகுமுறைகளையும் மேற்கொள்ளாததால் தாம் அந்த விடயத்தை மூடிவிட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும் வரிச்சலுகையை பெறுவது தொடர்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சிறிலங்கா தூதுவர் ரவிந…
-
- 3 replies
- 875 views
-
-
உங்கள் குழந்தைகளிற்கு கல்வியினை கொடுங்கள்.. நேசக்கரம் இணைப்பாளர் தீபச்செல்வன் நேசக்கரம் அமைப்பினால் 09.11.01 அன்று கிளிநொச்சி மாவட்டம் மணியன்குளம் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய குடும்பங்களிற்கான சுயஉதவித்தொழில் திட்ட அடிப்படையில் பதினைந்து குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா பத்தாயிரம் ரூபாய்கள் உதவிகள் வழங்கப்பட்டதுடன் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்குமான உதவியாக இலங்கைரூபா 170000ரூபா(ஒருஇலட்சத்து எழுபதாயிரம்ரூபா) இவ்வுதவிகளை நேசக்கரம் அமைப்பின் இணைப்பாளர் தீபச்செல்வன் அவர்கள் நேரடியாக அம்மக்களிடம் கொண்டு சென்று சேர்த்திருந்தார். இவ்வுதவிகள் வழங்கும் நிகழ்வின்போது த.தே கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு சிறீதரன் அவர…
-
- 2 replies
- 939 views
-
-
புலனாய்வு ஊடகவியலாளர் ஜெயராஜ் திட்டவட்டம் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பது வெறும் கட்டுக்கதையே! புலனாய்வு ஊடகவியலாளர் ஜெயராஜ் திட்டவட்டம் செவ்வாய், 09 நவம்பர் 2010 19:41 . .தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பது வெறும் கட்டுக்கதையே ஆகும் என்றும் இலங்கையின் பிரபல புலனாய்வு ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் தெரிவித்து உள்ளார். அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வாராந்தம் எழுதும் பத்தி ஒன்றிலேயே இவ்வாறு கூறி உள்ளார். அவர் அப்பத்தியில் தெரிவித்து உள்ளவற்றை தொகுத்து தருகின்றோம். ”முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த வருடம் மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு சமாதி கட்டப்பட்டது. இயக்கத்தின் தலைவ…
-
- 3 replies
- 1k views
-
-
மனதை விட்டகலாத மாமேதை [09 நவம்பர் 2010, செவ்வாய்க்கிழமை 9:30 பி.ப இலங்கை] பேராசிரியர் ப.சிவநாதன் தலைவர், பொருளியல்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, யாழ்ப்பாணச் சராசரி மனிதர்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்தவர் பேராசிரியர் துரைராஜா. இளமையில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் கல்விகற்று பின் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கணிதம் கற்று பல்கலைக்கழகத்திற்கு முதல் மாணவனாகத் தெரிவாகி பொறியி யல் விஞ்ஞானப் பட்டம் பெற்று பின் பிரித்தானியாவில் கலாநிதிப்பட்டம் பெற்றவர். பேராதனைப் பல்கலைக் கழ கத்தில் விரிவுரையாளராக, பேராசிரிய ராக, பீடாதிபதியாக சேவையாற்றி யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றி…
-
- 3 replies
- 782 views
-
-
மக்கள் கண்காணிப்புக் குழுவின் இணை ஸ்தாபகரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தனது நண்பருமான நடராஜா ரவிராஜ் படுகொலைச் செய்யப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவு பெறுகின்றது. இந்த நான்கு வருடங்களுக்குள் இந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பில் எத்துனை பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தாலும் அவை அனைத்தையும் வெற்றிகொண்டு ரவிராஜின் இலட்சியங்களை முன்னெடுப்போம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் இணை ஸ்தாபகருமான நடராஜா ரவிராஜின் நினைவு தினம் தொடர்பில் …
-
- 1 reply
- 533 views
-
-
யுத்த காலத்தில் “சுடப்பட்டது’ என்ற வார்த்தையையும் “கொல்’ என்ற சொல்லையும் ஒரே விதமான கருத்துப்படவே ஊடகங்கள் பயன்படுத்தியதாக வெள்ளைக்கொடி விவகார வழக்கு விசாரணையின் போது முதலாவது சாட்சியான சன்டே லீடர் பிரதம ஆசிரியர் பிரட்ரிகா ஜான்ஸ் நேற்று மேல்நீதிமன்றத்தில் தெரிவித்தார். பிரதிவாதியின் சட்டத்தரணி நளின் லத்துவஹெட்டி கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே பிரட்ரிகா ஜான்ஸ் மேற்கண்டவாறு பதிலளித்தார். வெள்ளைக் கொடி விவகார வழக்கு விசாரணை நேற்று செவ்வாய்க்கிழமை 11 ஆவது நாளாக மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. மேல் நீதிமன்ற நீதிபதிகளான தீபாலி விஜேசுந்தர, எச்.என்.பி.பீ. வராவௌ, சுர்பிக் ரஸீன் ஆகியோர் முன்னிலையில் ட்ரயல் அட்பார் முறையில் விசாரணை நடைபெற்றது. நேற்றைய தினமும் பிரதிவ…
-
- 1 reply
- 975 views
-
-
ஒபாமாவின் மனித உரிமை பேச்சும் இந்தியாவின் சங்கடமும் புதன், 10 நவம்பர் 2010( 17:22 IST ) இந்திய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டுக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உரையாற்றியபோது பல நேரங்களில் அவருடைய உரைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கையொலி அவையை அதிரச் செய்தது. இப்படிப் பலமுறை நடந்தது. ஆனால் ஒரே ஒரு முறை, ஒபாமா தனது உரையை முடிக்கும் தருவாயில் குறிப்பிட்ட ஒரு விடயம், அவையில் எதிர்பாராத அமைதியை ஏற்படுத்தியது. PIB அது மனித உரிமைகள் தொடர்பானது. இந்தியாவில் மனித உரிமை நிலை பற்றிக் குறிப்பிட்டு ஒபாமா எதுவும் பேசவில்லை என்றாலும், அண்டை நாடுகளில் மனித உரிமைகளும், ஜனநாயக நெறிமுறைகளும் அந்த நாட்டு அரசுகளால் மிதிக்கப்பட்டபோது இந்தியா அதனை கண்டிக்கா…
-
- 2 replies
- 766 views
-
-
தலைவனின் சொல்லுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்த மாவீரர்களின் வழித் தோன்றல்களான போராளிகள் இன்று திக்குச்திசை தெரியாமல் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல இந்தப் போராட்டத்தைத் தாங்கிப்பிடித்த மக்கள் வாழ்வதற்கு வழிதெரியாமல் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் அடிப்பைட வாழ்விற்கான தேவைகளை நிறைவேற்றுவதே எமது தற்போதைய தலையாய கடமை என்றும், இவர்கள் புலம்பெயர்ந்த உறவுகளை தங்கள் வாழ்வின் விடிவெள்ளிகளாக நினைத்துக் காத்திருக்கும் இவ்வேளையில், நாம் இவர்களது அன்றாட வாழ்விற்குத் திரும்ப உதவி செய்யாவிட்டால் நாம் தமிழராய் பிறந்ததில் பலனேயில்லையென நேற்று நடைபெற்ற நேர்டோக் கனடாக் கிளையின் அங்குரார்பனக் கூட்டத்தில் திரு. இன்பம் பேரின்பநாயகம் குறிப்பிட்டார். …
-
- 3 replies
- 697 views
-
-
புதன்கிழமை, நவம்பர் 10, 2010 அண்மைக்காலமாக இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீது உருவாக்கப்படும் கருத்துருவாக்கத்திற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் பதில் அளித்துள்ளனர். இந்திய உள்துறை அமைச்சருக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் எழுதியுள்ளதாக கூறப்படும் கடிதம் அவர்களது உத்தியோகபூர்வ தளத்தில் இடப்பட்டுள்ளது. முழுமையான கடிதத்தினை பார்க்க இதனை அழுத்துக: http://www.viduthalaipulikal.net/index.php?option=com_content&view=article&id=58:letter-to-indian-gov&catid=28:report&Itemid=2 அதன் தமிழாக்க சுருக்கம் வருமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய நாம் எம் ஆயுதப்போராட்டத்தினை 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 அம் திகதி மெளனிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து இன…
-
- 4 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணத்தில் அரச ஆதரவுடன் சுமார் 30 சிங்கள குடும்பங்கள் நேற்று இரவோடு இரவாக தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட நாவற்குழி வீடமைப்புத் திட்டத்தில் குடியேற்றப்பட்டுள்ளன. 1983 களில் குடா நாட்டில் சொந்த காணிகள், வீடுகள் ஆகியவற்றுடன் வாழ்ந்தவர்கள் என்றும் பயங்கரவாத அச்சத்தால் இடம்பெயர்ந்து சென்றிருந்த நிலையில் இன்றைய யுத்தமற்ற இன்றைய சூழலில் திரும்பி உள்ளனர் என்றும் தெரிவித்து யாழ்ப்பாணம் வந்திருக்கும் 400 சிங்கள குடும்பங்களுக்குள் இவையும் அடங்குகின்றன. 30 குடும்பங்களும் யாழ். புகையிரத நிலையத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு இராணுவத்தின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இக்குடியேற்றம் இடம்பெற்றுள்ளது. அடுத்து வரும் நாட்களில் படிப்படியாக ஏனைய சிங்கள குட…
-
- 0 replies
- 840 views
-
-
விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிப்பை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர் ஜெயரத்தினம் சிவநேசன். விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த இவர் மத்திய தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை தீர்ப்பாயம் விசாரித்து தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிப்பை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்த மனுவை அவர்கள் தள்ளு…
-
- 0 replies
- 785 views
-
-
புலிகளால் கைவிடப்பட்ட 189 கொள்கலன்கள் வட பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஆளுநர் சுமார் ஆறரை கோடி ரூபா பெறுமதியான இந்த கொள்கலன்கள் வட மாகாணத்திலுள்ள விவசாய அமைப்புக்களுக்கும் கூட்டுறவுச் சங்களுக்கும் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஆளுநர் நேற்று செவ்வாய்க்கிழமை கொள்கலன்களை கையளித்தார்;. இந்நிகழ்வு கிளிநொச்சி புள்ளியம் பொக்கனையிலுள்ள அரிசி ஆலை களஞ்சியத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழிலாண்மை அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவாநந்தா மற்றும் பாராளுமன்ற குழுவின் பிரதி தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர். வட மாகாணத்திலுள்ள பெருமளவிலான களஞ்…
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ் அரச அதிபருக்கு கொலை அச்சுறுத்தல் ‐ இன்று முதல் திடீரென ராணுவ பொலிஸ் பாதுகாப்பு ‐ ஜீரிஎன் செய்தியாளர் 10 November 10 09:02 am (BST) யாழ் அரச அதிபருக்கு இன்று முதல் திடீரென ராணுவ பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை அவருக்கு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கொலை அச்சுறுத்தலை அடுத்தே இந்த ராணுவ பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அவரது வாசஸ்தலம் அமைந்திருக்கும் பழைய பூங்காவிற்கு படையினரின் பூரண பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதைக் காணக் கூடியதாக இருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் இடைவெளியின் பின்னர் இன்று யாழ்ப்பாணத்திற்கு திரும்பியுள்ள இமெல்டா சுகுமார் தனது கடமைகளை யாழ் மாவட்ட செயலகத்…
-
- 1 reply
- 933 views
-
-
யாழ்ப்பாணத்தில் ரயில் நிலையங்களில் காத்திருந்த சிங்கள குடியேற்றவாசிகளில் ஒரு தொகுதியினர் நேற்றிரவு நாவற்குழியில் குடியமர்த்தப்பட்டுள்ளனர் ‐ ஜீரிஎன் செய்தியாளர் 10 November 10 10:12 am (BST) யாழ்ப்பாணத்தை தமது பூர்வீக இடம் எனக் கூறி ரயில் நிலையங்களில் காத்திருந்த சிங்கள குடியேற்றவாசிகளில் ஒரு தொகுதியினர் நேற்றிரவு நாவற்குழியில் குடியமர்த்தப்பட்டுள்ளதாக முதற்கட்டத்தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அங்கு பிரவேசிப்பதற்கு உள்ளுர் ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாவற்குழியிலுள்ள வீடமைப்புத்திட்டப் பகுதியில் உள்ள தென்னந்தோப்புக் காணிகள் இவர்களுக்காக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக எமது ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்டுச் சொல்லக் கூடியத…
-
- 0 replies
- 685 views
-
-
சிறீலங்காவில் விமான நிறுவனத்தை ஆரம்பிக்கிறார் மகிந்தாவின் தமிழ் நண்பர் நவ 9, 2010 சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் மிகவும் நெருங்கிய நண்பராக விளங்கும் நோயல் செல்வநாயகம் சிறீலங்காவில் உள்நாட்டு விமான சேவை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: நோயல் செல்வநாயம் சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கா ஆகியோரின் நெருங்கிய நண்பராவார். அண்மையில் ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்ற மகிந்தாவுடன் பிரித்தானியா, ஜேர்மன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு செல்வநாயகமும் கூடச் சென்றிருந்தார். ஜேர்மன் அரச தலைவரை மகிந்தா சந்திப்பதற்கான ஏற்பாடுகளையும் அவரே முன்னின்று மேற்கொண்டிருந்தார…
-
- 4 replies
- 639 views
-
-
-
- 0 replies
- 967 views
-
-
BANGALORE - Sri Lanka's first family appears to be at war with itself. With its grip over power tightening substantially and the stakes increasing, feuds between family members are said to be growing. The meteoric rise of President Mahinda Rajapaksa's 24-year old son Namal is reported to have irked several cousins, aunts and uncles. Plump, baby-faced Namal is a neophyte in politics. He was elected this year as Sri Lanka's youngest parliamentarian. "A future leader with a friendly spirit, possessing good values ... the dashing and smashing, young Namal Rajapaksa," as he is described on his web site, is among a large number of Rajapaksas who sit in …
-
- 1 reply
- 576 views
-
-
மாவீரர் நினைவுகளை கார்த்திகைப் பூ அணிந்து கனடாத் தமிழர் நினைவுகூரல் நவம்பர் 9, 2010 தமிழர்களின் தேசியப்பூவாக, தமிழீழத்தின் தேசியப் பூவாக கார்காலத்தில் மலர்ந்திடுவதும், தமிழீழ தேசியக்கொடியின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதும், தமிழீழத் தேசியத் மாவீரர் நாள் வருகின்ற நாட்களில் தமிழீழ தேசமெங்கும் கொடிபரப்பி பூத்துக் குலுங்கும். கார்த்திகைப் பூச் சின்னம் கனடா தமிழ் இளையோர் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது. தாய் மண்ணிற்காக மரணித்த மாவீரர்களின் உயரிய தியாகங்களே தமிழீழத்தின் உரமாக, தொடரும் போராட்டத்தை முன்னெடுக்கும் இளையோரின் உயிருக்குள் உறைந்திருக்கின்றன. இவ்வாறு எம்முயிர் காக்க தம்முயிர் நீர்த்து இன்று மலரப்போகும் தமிழீழத்தின் விதைகளாகி எமது இதயத்தில் வீற்றிர…
-
- 1 reply
- 519 views
-
-
Aljazeera English will be running a news story every hour starting from 0200 GMT on Wednesday, 10 November 2010 covering some of the alleged war crimes committed in Sri Lanka. Father Emmanuel of GTF has contributed a short sound bite along with Amnesty International and others. Dr. Sampavi of ATC is also scheduled to be interviewed live during the day as this report is scheduled to run every hour. We anticipate that the Sri Lankan High Commissioner to Malaysia who was a General in the Army previously and possibly even the Foreign Minister G.L.Peries will be interviewed at some point during the day. It is also possible that the report may be postponed …
-
- 2 replies
- 1.2k views
-
-
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 9, 2010 தமக்கெதிரான போர்குற்றச் சாட்டுக்கள் எவை என்பதை தெளிவு படுத்துமாறு இலங்கை பிரிட்டனைக் கேட்டுள்ளது.இலண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் இதுதொடர்பான கோரிக்கையை பிரிட்டன் அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதில் இலங்கை அரசு எந்தவகை யான போர்க் குற்றங்களை இழைத்தது, அதில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ எவ்வகையான தவறு செய்துள்ளார் என்ற விடயங்களைத் தெளிவுபடுத்துமாறு பிரிட்டனுக்கான இலங்கைத் தூதுவர் திகால ஜெயசிங்க கேட்டுள்ளார். போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டனில் வைத்துக் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் பிரிட்டனுக்கான பயணத்தை அவர் ஒத்தி வைத்தார்.என செய்திகள் வெளியான பின்னர் இலங்கைத் தூதரகத்தின் கோரிக்கை பிரிட்டன் அரசுக்கு சமர்ப…
-
- 9 replies
- 1.1k views
-
-
புதன்கிழமை, நவம்பர் 10, 2010 தம்மை விடுவித்த போதும் வீட்டிற்கு சென்றவுடன் ஒரு கிழமைக்குள் அந்த பகுதி இராணுவ முகாமிலும் கூடவே சிவில் நிர்வாக அலுவலகத்திலும் பதிவுகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் வற்புறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளின் சுதந்திரமான நடமாட்டம் தொடர்பில் அமைச்சர்களும், அதிகாரிகளும் வெவ்வேறான கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். முன்னாள் போராளிகளை சமூகத்தில் எவ்வாறு இணைத்துக் கொள்வது என்பது தொடர்பில் பொதுமக்களுக்கும் அரச அதிகாரிகளுக்கு மதத் தலைவர்களுக்கும் இராணுவம் பாடம் நடத்தி வருகையில் இந்த முரண்பாடு வெளிவந்துள்ளது. மட்டுமன்றி விடுவிக்கப்படும் போராளிகளும் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளனர். விடுதலை ச…
-
- 0 replies
- 435 views
-
-
புதன்கிழமை, நவம்பர் 10, 2010 யாழ். நகரப் பகுதியில் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட இடங்களில் சீன உதவியுடன் புதிய இராணுவ முகாம்களை அமைக்கும் பணிகள் முனைப்புப் பெற்றுள்ளன. பலாலி இராணுவத் தலைமையக ஊடகப் பிரிவு இதனை உறுதிப்படுத்தியது."குடாநாட்டில் படையினர் தமது நிலைகளை வேறு இடங்களுக்கு இடம்மாற்றவிருக்கின்றனர். அவ்வாறு இடம்மாற்றப்படும் இடங்களில் தயார் நிலையில் உள்ள கட்டடங்களை அமைக்க சீனா உதவி வழங்குகின்றது.'என்று தெரிவித்தது பலாலி தலைமையக ஊடகப் பிரிவு. நகரில் உள்ள படைத்தலைமை முகாம்களும் விரைவில் மாற்றப்பட உள்ளனவாம் .இதற்கென புதிய முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. புதிய இடங்களில் முகாம்களையும் இரா ணுவக்குடியிருப்புக்களையும் அமைக்க சீனா உதவிகளை வழங்க முன்வந்துள்ளது' என்று மே…
-
- 0 replies
- 369 views
-
-
புதன்கிழமை, நவம்பர் 10, 2010 2009 தை மாதத்தில் முல்லைத்தீவை விட்டு வெளியேறிய அரச அதிபர் இமெல்டா சுகுமாரினால் 2009 மே மாதம் 18 ஆம் திகதிவரையில் அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் எவ்வாறு நேரில் கண்டதைப் போல் தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியளிக்க முடியும். இவ்வாறு பொய்களைக் கூறுகின்ற அரச அதிகாரிகளினால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளும் கிடையாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. யான எஸ்.சிறிதரன் நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசர காலச்சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவிதார். சிறிதரன் எம்.பி இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்: யாழ் குடாநாடாடில் அதியுயர் பா…
-
- 0 replies
- 636 views
-