ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
சம்பந்தருக்கு மாற்றாக இன்னொரு தலைவரைத் தேடும் தமிழ்க் கூட்டமைப்பு தமிழ்க் கூட்டமைப்பினரின் ஒரு பகுதியினர் அதன் தற்போதைய தலைவர் சம்பந்தருக்கு மாற்றாக இன்னொருவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக சிங்கள நாளிதழான லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. சம்பந்தரின் நடவடிக்கைகளில் அதிருப்தியுற்றிருக்கும் தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களே இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும் அது தெரிவித்திருக்கிறது. இதுபற்றி செய்தியாளர்கள் அவரைத் தொலைபேசியூடாக வினவியபோது, " நீங்கள் அவங்களையே கேட்டுத் தெரிஞ்சுகொள்ளுங்கோ, அவங்கள்தானே உங்களுக்குச் சொன்னவங்கள்?" என்று காட்டமாகக் கூறிவிட்டுத் தனது தொடர்பைத் துண்டித்துக்கொண்டார். மூலம் : அவுஸ்த்திரேலிய எஸ்.பி.எ…
-
- 0 replies
- 749 views
-
-
ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 17, 2010 கொக்கொட்டிச்சோலை முனைக்ககாட்டில் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். யுத்தம் முடிவுற்று அமைதிச்சூழல் ஏறட்பட்டுள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்களால் மீண்டும் அச்சமான நிலைமை ஏற்படக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது. குறித்த தமிழ் இளைஞர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். My link
-
- 0 replies
- 542 views
-
-
ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 17, 2010 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொழும்பு அலுவலகம் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இன்று திறந்து வைக்கபட்டது. கொழும்பு பம்பலபிட்டி ரிட்ரிக் வீதியில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதற்கான நிகழ்வு இன்று காலை 9.30 அளவில் இடம்பெற்றது. நிகழ்வில் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், சுமந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இதேவேளை, அதன் பின்னர் தற்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கூட்டமைப்பின் புதிய கட்டடத்தில் இடம்பெற்று வருகின்றது. இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைம…
-
- 0 replies
- 439 views
-
-
ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 17, 2010 இன்று காலை வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் காணப்படாத இரு நபர்களது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரு சடலும் தற்போது களுபோவில வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தை பொலிஸார் கிடைக்கப் பெற்ற சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%…
-
- 0 replies
- 459 views
-
-
சிங்கபாகுவின் கொள்ளுப்பேரனுக்கு ஓர் உவகை மடல் - சேரமான் சிங்கத்தின் வழிவந்த சிங்கபாகுவின் கொள்ளுப்பேரன். அம்பலாங்கொடை மண் ஈன்றெடுத்த பீற்றர் – பியவதி பொன்சேகா தம்பதிகளின் வழித்தோன்றல். ஈழமண்ணில் தமிழ்க்குடியை நாசம் செய்யப் பிறந்த சிங்களத்துச் சிங்கம். ‘மகதா’ ஜெனரல் கார்டிஹேவ சரத் சந்திரலால் பொன்சேகா என்றழைத்த காலம்போய்... ‘தேசத்துரோகி... தூக்கிலிடப்பட வேண்டிய குற்றவாளி... சிங்களக் குடியை அழிக்கப் பிறந்த பேய், பிசாசு, முனி...’ என்றெல்லாம் துட்டகாமினியின் உறுகுணை இராச்சியத்தின் இரத்த வாரிசுகள் உம்மைத் தூற்றும் காலம் இது. ‘எனது வலது கை’ என்று உம்மை அன்று மகிந்தர் அழைத்தது உண்மைதான். ‘இவர்தான் உலகிலேயே மிகச்சிறந்த படைத்தளபதி’ என்று உம்ம…
-
- 4 replies
- 1k views
-
-
திருகோணமலைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலம் ஒன்றினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் சிவசுந்தர், கப்டன் ரூபன் மற்றும் கப்டன் சிவகாமி ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாய்நாட்டின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். படங்களைப் பெரிதாய்ப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்.
-
- 7 replies
- 816 views
-
-
பொதுநலவாயத்தை மனிதவுரிமை விழுமியங்களிலிருந்து விலக்கி வழிநடத்திச் செல்லும் இந்திய செயலாளர் நாயகம் சர்வதேச அமைப்புக்களிலிருக்கும் முக்கிய புள்ளிகள் சர்வதேச மனிதவுரிமை விழுமியங்களுக்கு எதிராகச் செயற்படும் மற்றுமொரு கைங்கரியத்தை கடந்த வெள்ளியன்று வெளிவந்த கார்டியன் பத்திரிக்கை உறுதிப்படுத்தியிருக்கிறது. இம்முறை பொதுநலவாய நாடுகள் அமைப்பின் இந்தியாவைச் சேர்ந்த அதன் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா அவர்கள் , "54 அங்கத்துவ நாடுகளினதும் மனிதவுரிமை பற்றிக் கவலைப்படுவதோ அல்லது நடவடிக்கை எடுப்பதோ தமது வேலையல்ல" என்று கூறியிருப்பதன் மூலம் முக்கிய சர்வதேச அமைப்பொன்றினை மனிதவுரிமை விழுமியங்களுக்கெதிராக வழிநடத்திச் செல்ல முற்பட்டிருக்கிறார். பொதுநலவாய அமைப்பின் அங்கத்துவ நாடுகளில் நடைப…
-
- 0 replies
- 633 views
-
-
காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபட்சவை அழைத்தது அவர் இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்ததற்கு அளித்த பரிசு போல உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வெள்ளிக்கிழமை ஒசூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. மணல், கிரானைட் உள்ளிட்ட கனிமங்கள் வருவாய்த் துறையினர் உதவியோடு வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுகின்றன. இதை காவல்துறையும் கண்டுகொள்வதில்லை. கோயில் நிலங்களும், அரசு புறம்போக்கு நிலங்களும் அதிக அளவில் ஆக்கிரமிக்கப்படுகின்றன. நெய்வேலியில் 20 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளர்களாக உள்ள தாற்காலிகத்…
-
- 1 reply
- 815 views
-
-
எழுதி நீண்ட நாட்கள் ஆகி விட்டது. மீண்டும் எழுத வேண்டும் என்று அடிக்கடி நினைப்பேன். மீண்டு எழ முடியாத ஒரு நிலை தமிழனித்திற்கு வந்து விட்டதை எண்ணி சோர்ந்து போய் மீண்டும் எழுதுகின்ற எண்ணத்தை கைவிடுவேன். உண்மையை சொன்னால் எதை எழுதுவது என்று எனக்குத் தெரியவில்லை. எழுதுவது என்றால் உண்மையை, சரி என்று நம்புவதை எழுத வேண்டும். அது முடியவில்லை என்றால் வாயை மூடிக் கொண்டு பேசாது இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். ஆனால் எழுதாது இருக்கவும் முடியவில்லை. புலம்பெயர் அரசியல் மிகவும் ஒரு கேவலமான நிலையில் இருக்கின்றது. யாரிடம் போய் முறையிட முடியும் என்கின்ற திமிரும் இன்றைக்கு புதிதாக சேர்ந்து விட்டது. ஈழத்து அரசியலிலும் சரி, புலத்து அரசியலிலும் சரி யாரையும் ஆதரிக்க முடியாத ஒ…
-
- 16 replies
- 2.2k views
-
-
மட்டக்களப்பு பிரதேசத்தில் காணாமற் போனவர்களை கண்டுபிடித்து தருவதாக ஏமாற்றி இலட்சக்கணக்கான பணம் அபகரித்த பெண்ணொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பெண்ணின் வங்கிக்கணக்கில் இலட்சக்கணக்கான ரூபாய் பணம் புழக்கத்தில் இருந்ததை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளில் கண்டுபிடித்துள்ளனர். மட்டக்களப்பு வைத்தியசாலை உபதபாலகத்தில் கடமையாற்றிய ஊழியர் ஒருவரின் குடும்பத்தாரிடம் இருந்து குறித்த ஊழியரை கண்டுபிடித்து தருவதற்கு வங்கி மூலமும் நேரடியாகவும் நான்கு இலட்சத்து முப்பத்தாராயிரத்து இருநூறு ரூபாய் பணம் கப்பமாக பெற்றுக் கொண்டதாக மட்டக்களப்பு சின்ன ஊறணி எல்லை வீதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு எதிராக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 593 views
-
-
இலங்கையின் அறிவுசார் வளர்ச்சிக்கு உதவுகிறது இந்தியா-குழு அனுப்புகிறது டெல்லி: இலங்கை [^]யின் அறிவுசார் வள்ச்சிக்கு இந்தியா [^] உதவுகிறது. இதற்காக ஒரு குழுவை அங்கு அனுப்பி வைக்கவுள்ளது. இந்தியா வந்திருந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் [^] பெரீஸும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபலும் சந்தித்துப் பேசினர். அப்போதுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே பல்கலைக்கழகங்கள் அளவில் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது. உயர் கல்வி தொடர்பாகவும் இரு நாடுகளிடையிலான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளனவாம். இலங்கையின் அறிவு சார் வளர்ச்சிக்குத் தேவையானதை அறிய விரைவில் அங்கு ஒரு உயர்மட்டக் குழு அனுப்பி வைக்கப்…
-
- 0 replies
- 593 views
-
-
சனிக்கிழமை , அக்டோபர் 16, 2010 தமிழ் பேசும் சிறுபான்மை சமூகங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு இலங்கையை இந்தியா நேற்று வெள்ளிக்கிழமை வலியுறுத்தியுள்ளது.அதேவேளை, இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உதவுவதாகவும் புதுடில்லி கொழும்புக்கு உறுதியளித்திருக்கின்றது. "அதிகாரப்பகிர்வு விவகாரத்தை நான் எழுப்பியிருந்தேன். இப்போது பாராளுமன்றத் தேர்தல்கள் முடிவடைந்துவிட்டன. தமிழ் பேசும் இலங்கையரை வெற்றிகொள்வதற்கு உறுதியுடன் செயற்படுவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு இதுவே தருணமாகும். தமிழ்பேசும் இலங்கையரின் கவலைகள், ஆட்சேபனைகள் தொடர்பாக கவனத்திற்கு எடுப்பதற்கு இதுவே வேளையாகும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா புதுடில்லியில…
-
- 2 replies
- 614 views
-
-
பாட்டும் நானே! பாவமும் நானே! ஆணவச் செருக்கறுத்த சர்வதேசம் [ வலம்புரி ] - [ Oct 16, 2010 04:00 GMT ] கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க மூன்று சர்வதேச அமைப்புகள் மறுத்தமை இலங்கை அரசுக்கு விழுந்த முதலாவது சர்வதேச அடியயன்று கூறலாம். யுத்தம் தொடர்பில் விசாரணை நடத்தும் மேற்படி ஆணைக்குழுவானது சர்வதேச மனித உரிமைகள் கண்காணிபகம், சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச நெருக்கடிகள் குழு ஆகிய அமைப்புக்களை சாட்சியமளிக்க அழைத்திருந்தது. ஆனால் அந்த அழைப்பை மேற்படி சர்வதேச அமைப்புகள் அடியோடு நிராகரித்து விட்டன.இலங்கையில் யுத்தம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக அந்நாட்டு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குறித்த ஆணைக்குழு மீது எமக்கு நம்பிக்கைய…
-
- 2 replies
- 1.1k views
-
-
தாய்லாந்தில் ஈழ தமிழர்களின் துயரம் தற்பொழுது தாய்லாந்தில் அகதிகளாக, புகலிடம் தேடுபவர்களாக UNHCRயில் பதிவு செய்து விட்டு வாழ்ந்து வரும் இலங்கைத்தமிழரின் நிலை மிகவும் மோசமாகவுள்ளது. அவர்கள் அனைவரும் தாம் எந்த நேரத்தில் கைது செய்யப்படுவோமோ என்ற பயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பாங்கொக் இல் சபான்மை (SaphanMai) என்ற இடத்தில் இருந்து சிறிவர், பெண்கள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளடங்கலாக 136 பேர் 11.10.2010 அன்று அதிகாலையில் அவரவர் இருப்பிடங்களில் வைத்துக் கைது செய்யபட்டிருக்கிறார்கள். தாய்லாந்தின் குடியகல்வு அதிகாரிகள்,கனடா நாட்டைச் சேர்ந்த சில அதிகாரிகள், மற்றும் இராணுவத்தினரும் சென்று கைது செய்திருக்கின்றார்கள் யென கூறப்படுகிறது.கைது செய்யப்பட்ட அனைவரும் த…
-
- 0 replies
- 655 views
-
-
'இலங்கை விடயத்தில் பான் கி மூன் மெத்தனம்' இலங்கை தொடர்பாக கேள்விகளை கேட்கும் போது ஐ.நா. செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர், தாமதமான பதில்களை வழங்குவதாக ஐ.நா. செயல்பாடுகள் குறித்த செய்திகளை வெளியிடும் "இன்னர் சிட்டி பிரஸ்" பத்திரிகை குற்றம் சாற்றியுள்ளது. செய்தியாளர் சந்திப்பின் போது இலங்கை தொடர்பாக தாங்கள் கேட்ட கேள்விக்கு, 24 மணி நேரம் கடந்தும், பான் கீ மூனின் பேச்சாளர் அதற்கு உரிய பதில் வழங்கவில்லை என "இன்னர் சிட்டி பிரஸ்" குற்றம் சாற்றியுள்ளது. இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பக அமைக்கப்பட்டுள்ள, பான் கீ மூனின் நிபுணர்கள் குழு, தென்சூடானில் இடம்பெற்றதை போன்று, இலங்கை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கு ஏன் பேச்சாளர் ஒருவர் நியமிக்கப்படவில்லை? …
-
- 0 replies
- 608 views
-
-
விடுதலைப்புலிகள் இயக்கம் விற்பனைக்கு – மொத்தமாக வாங்கினால் ஒட்டுக்குழு ஒன்று இலவசம் அக் 16, 2010 விடுதலைப்புலிகள் வீழ்ந்து விட்டார்கள் என சிறீலங்கா அரசு கடந்த வருடம் அறிவித்த பின்னர் அனைத்துலகிலும், தாயகத்திலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன, நிகழ்ந்து வருகின்றன. அதில் முதன்மையானது, புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களின் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கும் சிறீலங்கா – இந்திய அரசுகளின் கூட்டு முயற்சியாகும். அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த பிரதான ஆயுமாக தமிழ் ஊடகங்கள் மாற்றம் பெற்றுள்ளன. கடந்த வருடத்தின் பின்னர் பல தமிழ் ஊடகங்கள் முடப்பட்டுவிட்டன, பல இணையத்தளங்கள் அதன் போக்குகளை மாற்றி விட்டன, மேலும் பல புதிய இணையத்தளங்கள் உருவாகியுள்ளன. இவர்களில் யார் …
-
- 4 replies
- 1.1k views
-
-
இலங்கையில் தேர்தல் வெற்றியையும், புலிகள், தமிழின அழிப்பு வெற்றியையும் ஒருமுகமாக கொண்டாடிய கையோடு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் அதிரடியாக வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கை என்னவென்றால் தமிழ், முஸ்லீம், சிங்கள பாகுபாடின்றி இனிவரும் காலத்தில் ‘இலங்கையர்கள்‘ என்ற குடையின்கீழ் அனைவரும் ஓரினமாகவே வாழவேண்டும் என்பதாகும். ஓரினமாக இலங்கையர்கள் என்ற போர்வையில் வாழுவதில் எவருக்குமே தாழ்வுச் சிக்கல் இருக்காது. ஆனால் அரசின் தந்திரோபாயமானது தமிழினம் என்று ஒரு இனம் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதும் அப்படி இருந்தாலும் சிங்கள இனத்தினுள் தமிழினம் சமிபாடடைந்த இனமாக இருக்கவேண்டும் என்பதும் ஆகும். விடுதலைப்புலிகளின் பின்னடைவு, எந்த அளவு சறுக்கலையும் தமிழினத்தின் சுயநிர்ணயத்…
-
- 0 replies
- 680 views
-
-
இலங்கை தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு ஐ.நா. செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்டின் நெசர்கி மிகவும் தாமதமாக பதில்களை வழங்கி வருகின்றார் என்று ஐ.நா. செயல்பாடுகள் குறித்து செய்திகளை வெளியிடும் "இன்னர் சிட்டி பிரஸ்" பத்திரிகை குற்றம் சாட்டியுள்ளது. செய்தியாளர் சந்திப்புக்களின்போது இலங்கை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 24 பதில் அளிக்க பேச்சாளர் 24 மணித்தியாலங்கள் கூட தாமதிக்கின்றார் என்று அது சுட்டிக்காட்டி உள்ளது. ஆயினும் உரிய பதில்களை வழங்காமல் சமாளிக்கின்றார் என்று சாடி உள்ளது. http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=12295:2010-10-16-13-42-53&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410
-
- 0 replies
- 622 views
-
-
இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது சரண் அடைந்து காணாமல் போனோர் விபரம் அமெரிக்காவிடம்! சனி, 16 அக்டோபர் 2010 06:51 இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது அரச படையினரிடம் சரண் அடைந்த பின் காணாமல் போனோர் என்று கூறப்படுவோர் தொடர்பான விபரங்கள் அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'இனச் சுத்திகரிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு' என்கிற ஸ்தாபனம் இவ்விபரங்களை அமெரிக்க வெளிவிவகார அமைச்சில் யுத்தக் குற்ற விவகாரங்களைக் கையாளும் பிரிவுக்கு சமர்ப்பித்துள்ளது. படையினரிடம் சரண் அடைந்து காணாமல் போனோர் என்று கூறப்படுபவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் ஆகியோருடைய வாக்குமூலங்கள், சாட்சிய…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள 103 ஆற்று வடிநிலங்களில் வட மாகாணத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததும் மிகப் பெரியதுமான ஆற்று வடிநிலம் கனகராயன் ஆற்று வடிநிலமாகும். இந்த ஆறு 90 கிலோமீற்றர் நீளமானதும் 906 சதுர கிலோமீற்றர் நீரேந்து பரப்பையும் (Catchments area) கொண்டுள்ளது. (Arjuna’s Atlas of Sri Lanka page 26). இது சேமமடுக் குளத்தில் உற்பத்தியாகி வடக்கு நோக்கி ஓடி தட்டுவன்கொட்டி ஊரியான் பகுதியை அண்டிய ஆனையிறவு கிழக்கு கடனீரேரியில் சங்கமிக்கின்றது. இதன்மூலம் வருடம் ஒன்றிற்கு சராசரி 24 மில்லின் கனமீற்றர் நீர் வெளியே செல்கின்றது எனக்கணிப்பிடப்பட்டுள்ளது. (The National Atlas of Sri Lanka – 1989). கனகராயன் ஆற்றின் வடி நிலப்பரப்பில் சேமமடுக்குளம், கனகராயன்குளம், இரண…
-
- 0 replies
- 1.3k views
-
-
கொப்பேகடுவ, விஜய விமலரட்ன ஆகியோரின் அர்ப்பணிப்பினாலேயே போர் வெற்றி கொள்ளப்பட்டது - கோத்தபாய ராஜபக்ச அக் 16, 2010 Font size: Decrease font Enlarge font ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் பிரிகேடியர் விஜய விமலரட்ன ஆகியோரின் அர்ப்பணிப்பினாலேயே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்டதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். குறித்த இராணுவ படையதிகாரிகளின் வலுவான அடித்தளமே முப்பது ஆண்டுகால போரை வெற்றிகொள்ள வழிகோலியதாக அவர் தெரிவித்துள்ளார். பனாகொடை இராணுவ முகாமில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரின் இராணுவத் தளபதி…
-
- 0 replies
- 486 views
-
-
இந்தியாவின் அழுத்தத்துக்கு அடிபணிந்தே ஜனாதிபதி மஹிந்தவின் அரசாங்கம் புலிகளுடனான யுத்தத்தை முன்னெடுத்திருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன சுட்டிக் காட்டியுள்ளார். அத்துடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் ஒரு போதும் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிந்ததில்லை என்று கூறுவது அப்பட்டமான பொய் என்று வலியுறுத்தியுள்ளார். ஒரு காலத்தில் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இந்திய அரசாங்கம் செயற்பட்டதன் காரணமாக ஜயவர்தன மற்றும் பிரேமதாச போன்றோர் ஜனாதிபதியாக இருந்த காலங்களில் புலிகளுக்கு எதிரான போரை தீவிரமாக நடத்த முடியாமற் போனதாக சுட்டிக் காட்டும் அவர், பின் வந்த காலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் அடிப்படையில்…
-
- 5 replies
- 1.2k views
-
-
Oct 16, 2010 / பகுதி: செய்தி / சீனாவின் ஆதிக்கம் - ஐ.தே.க எதிர்ப்பு - மஹிந்தவுக்கு பாரிய சங்கடம் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளமையானது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பாரிய சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிங்கள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற துறைமுகப் பணிகளில், பல சீன கைதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். இது சீனாவின் ஆக்கிரமிப்பை எடுத்துக் காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை நகரை அழகுப்படுத்துவதாக கூறி, சுமார் 60ஆயிரம் குடும்பங்களை பலவந்தமாக கொழும்பில் இருந்து வெளியேற்றி சுமார் 13 ஏக்கர் நிலப்பரப்பை…
-
- 0 replies
- 505 views
-
-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய இடங்களில் விசைப் படகு துறை முகங்கள் உள்ளன. இந்தத் துறைமுகங்களில் உள்ள சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப் படகுகளின் மூலம் இந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்கின்றனர். இதன்மூலம் 3 ஆயிரம் தொழிலாளர்களும், 500க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளும் பயன் அடைந்து வருகின்றனர். இப்பகுதி மீனவர்கள் இந்தியா இலங்கை எல்லையில்தான் மீன்பிடிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்நிலையில், தற்போது இலங்கைக் கடற்படையினர் இந்திய எல்லைக்குள்ளேயே வந்து தமிழக மீனவர்களை விரட்டி அடிக்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 800 விசைப் படகுகளில் சென்று கடலில் மீன்பிடித்து வந்தனர். இலங்கைக்…
-
- 0 replies
- 651 views
-
-
மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் எஸ்.விஜயகுமாரன் மாரடைப்பு காரணமாக இன்று 16 ஆம் திகதி தனது 55 வயதில் காலமானார். நேற்று காலையில் இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதன்போது இவரை உறவினர்கள் உடனடியாக டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.45 மணியளவில் இவர் உயிரிழந்ததாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். ஆரம்பத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரியாக செயற்பட்ட இவர் 1989 ஆம் ஆண்டு முதல் மலையக மக்கள் முன்னணியுடன் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டார். மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழுவிலும் பின்னர் கவுன்சிலிலும் அங்கத்துவம் பெற்ற இவர், கடந்த 6 வருடங்களுக்கும் அதிகமா…
-
- 0 replies
- 638 views
-