Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் நடந்த யுத்தக் குற்றம் விசாரிக்க நீதிமன்றம் அவசியம் - அமெரிக்கப் பல்கலைக்கழகம் வலியுறுத்து [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-26 06:19:56| யாழ்ப்பாணம்] இலங்கை தொடர்பில் யுத்தக் குற்ற விசாரணை நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என அமெரிக்காவின் வா´ங்க னைத் தளமாகக் கொண்ட பல்கலைக்கழகம் கோரிக்கை முன்வைத்துள்ளது. தமிழ் மக்கள் தொடர்ந்தும் சிங்கள இனத்தின் ஆதிக்கத்தில் இருக்காமல் தனித்த உரிமைகளுடன் வாழக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்கான சூழல் இலங்கையில் இது வரை ஏற்படுத்தப்படவில்லை. எனவே இது இலங்கையில் மீண்டும் இன முறுகல்களை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தைக் கொண்டுள்ள தாகப்பல்கலைக்கழகத்தின்அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இ…

  2. இலங்கையில் நடந்த இன அழிவை தடுக்கும் வல்லமை ஐ.நாவிடம் இல்லை - விரிவுரையாளர் டைனா பார்ஹட் விபரிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-26 07:21:53| யாழ்ப்பாணம்] உலகில் நடைபெறும் அழிவுகளை தடுப் பதில் ஐக்கிய நாடுகள் சபை செயற்திறன் அற்று உள்ளது. அதன் செயற்பாடுகள் இலங்கையில் உட்பட பல இடங்களில் தோல்வி கண் டுள்ளதாக த பமிலி செக்குரிட்டி மற்றேர்ஸ் எனப்படும் இணையதளத்தில் எழுதிய பத்தி யில் விரிவுரையாளர் டைனா பார்ஹட் கொல் ஸ்மன் தெரிவித்துள்ளார்.அதில் இலங்கை தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, இலங்கையில் கடந்த 26 வருடங்களாக இடம்பெற்ற போர் கடந்த வருடம் நிறைவு பெற்றிருந்தது. பெரும்பான்மை சிங்களவர் கள் அதில் வெற்றி பெற்றிருந்தனர்.போர் வலயத்திற்குள் தங்கியிருந்த தம…

  3. போர் நிறுத்த காலங்களில் அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கியதைக் கருத்திற்கொண்டு, பிணையில் செல்லவாவது அனுமதிக்க வேண்டும் ‐ தமிழ் அரசியல் கைதிகள் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் போர் நடைபெற்ற காலங்களில் ஏற்பட்ட போர்நிறுத்தங்களின்போது அரசியல் கைதிகளுக்கு அரசாங்கங்கள் பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்திருந்தன. இதனைக் கருத்திற் கொண்டு, நிரந்தர சமாதானம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற இந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவதற்காவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நல்லிணக்க ஆணைக்குழுவிடம் அனுராதப…

  4. 26.09.2001 அன்று ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் சங்கர் அவர்களின் 9ம் ஆண்டு நினைவு நாளும், 26.09.2006 அன்று திருகோணமலை மாவட்டம் இலுப்பைக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சுரேஸ் அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மாவீரர்களிற்கு வீரவணக்கங்கள்.

  5. விடுதலைப்புலிகளின் மீதான தடையால் இலங்கைத் தமிழர்களுக்கு கொடுந்துன்பமும், துயரமும் நேர்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாதிட்டார். மேலும், புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டிக்க நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறிய காரணங்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் அவர் குற்றம்சாட்டினார். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதற்கு தடை விதிக்கக்கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் உள்ள தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில், தன்னையும் ஒருதரப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மிக விரிவான விண்ணப்பத்தை தாக்கல் செய்தார். அதில், 'கு…

  6. ஈழக்கலைஞர்களை ஊக்குவிப்பீர் நமது பிரச்சினையை உலக அரங்கிற்கு எடுத்துச்செல்லும் கடமையில் ஈடுபட்டுள்ள தாயக கலைஞர்களை ஊக்குவிப்பீர்… அன்பிற்கினிய தமிழ் பேசும் உறவுகளே நம் இனத்தின் நிலையினை ஆவணப்படுத்தும் தமிழ் தேசியக்கலைஞர்களுக்கு உங்களின் ஆதரவினை அளிப்பீர். வணிக நோக்கத்தோடு பொழுதுபோக்குக்காக எடுக்கப்படும் திரைப்படங்கள் வெளியாகும் இக்காலத்தில் நம் மக்களின் நிலையினையும் வலியினையும் தேவையினையும் உரக்கச்சொல்லி ஆவணப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவரும் தமிழகத்தில் திரைப்படக்கல்வி பயின்றுவரும் ஈழத்துக்கலைஞர் நிரோசன் அவர்களால் 35 நிமிடங்கள் ஓடும் “மண்ணும் சிவந்தது” படமானது எடுக்கப்பட்டுள்ளது. நம் தேசத்தைப்பற்றி எடுக்கப்பட்ட …

  7. வரம் நீயானாய்; மீனகமே!!- பாவலர் வித்யாசாகர் ஈழத்து சுவடுகளை முகத்திலெழுதி உண்மை நிகழ்வுகளை செய்தியாக்கி உணர்வு பிழம்புகளுக்கு உயிர் தந்து எளியோரையும் கவர்ந்தாய்; இமயம் தொட்டாய்! தமிழர் நிலையை காட்சியாக்கி தமிழின் வளமையை உலகின் விழிகளிலெழுதி உனை படிப்பதை எங்களுக்கு – தலையெழுத்தாக்கினாய் உலகின் தெருவெல்லாம் மீனக பெயரெழுதினாய்! ரகசியம் உடைத்தும் – சமரசம் செய்தாய் அரசர் ஆண்டியாயினும் நீதியுரைத்தாய் தவறென்று வந்தாலோ முகம் பாராமல் மன்னிக்கவும் சொன்னாய், பண்பில்; மாண்பு பெற்றாய்! வரலாற்றினை பதிவுகளாக்கி - அரசியலுக்கு அடிபணிய மறுத்து - தரத்தில் குன்றிடாத உழைப்பினால், தரணி முழுக்க வளம் வந்தாய்; வரம் நீயானாய்! செய்ய இரண்டென்றும், பேச…

  8. தியாகதீபத்தின் 23 ஆம் ஆண்டு நினைவில் அனைத்து மக்களையும் திலீபனின் கனவை நினைவாக்க அணிதிரளுமாறு தமிழீழ விடுதலைப்புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.அனைவரும் ஒன்றுபட்டு தாயகத்தில் முற்றுமுழுதாக இன அழிவிற்குள்ளாகி இருக்கும் எம் மக்களையும் மண்ணையும் காக்க வேண்டும்; எமக்கான காலத்தை நாமே உருவாக்க வேண்டும். தியாகி திலீபன் அவர்களின் கனவும் அதுவே. எழுச்சிகொண்ட மக்களின் அணிதிரள்வையும் அவர்களின் போராட்டத் தொடர்ச்சியையுமே அவர் வேண்டி நின்றார். “மக்கள் புரட்சி வெடிக்கட்டும்; சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்பதே அவரின் அவாவாக இருந்தது. அந்த அடிப்படையில் எமது இலட்சியத்தை அடைவதற்காக நாம் ஒன்றுபட்டுப் பயணிப்போம் என தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நாளான இன்று உறுதி எடுப்போமாக.இவ்வாறு அ…

  9. Sep 25, 2010 / பகுதி: செய்தி / இவரது உறவினர்களைத் தொடர்பு கொள்ளக் கோரிக்கை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உளநலப்பிரிவில் 12.08.2010 அன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றக் கட்ட ளையின் பிரகாரம் உளநல சிகிச்சைக்காக 13 வயது முதல் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கொழும்பு பம்பலப்பிட்டியிலிருந்து கொண்டு வந்ததாக கருதப்படும் இவர் தனது பெயரை மட்டும் லக்ஸன் எனக் கூறிக் கொள்ளும் இவ்வேளையில் தமிழ்ச்சொற்களையே பயன்படுத்தி வருவதனால் தமிழ் சிறுவனாக கருதப்படுவதுடன் இவர் தொடர் பாக மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே இவருடன் தொடர்புடையவர்கள் 0212263261, 0212263262 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு வைத்திய அத்தியட்சகருடன் தொடர்புகொள்…

  10. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நிபுணர் குழு தொடர்பாக பான் கீ மூன் எதுவும் பேசவில்லை: இன்னர் சிற்றி பிரஸ். [sunday, 2010-09-26 01:29:21] ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் தான் நியமித்த நிபுணர் குழு தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தபோது பேசவில்லை என ஐ.நா.வைத் தளமாகக் கொண்ட ஊடகமான இன்னர் சிற்றி பிரஸ் கூறியுள்ளது.இது தொடர்பாக இன்னர் சிற்றி பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஐ.நாவின் பான் கீ மூன் வெள்ளிக்கிழமை சந்தித்தபோது, மெதுவாக ஆரம்பிக்கப்பட்டுள்ள போர் குற்றம் தொடர்பான ஐ.நா நிபுணர் குழு விவகாரத்தை பான் கீ மூன் கிளப்பவில்லை. இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் சுருக்க விபரம் இச்சந்த…

  11. புலிகளின் மீதான தடையால் இலங்கைத் தமிழர்கள் பாதிப்பு : வைகோ வாதம் விடுதலைப்புலிகளின் மீதான தடையால் இலங்கைத் தமிழர்களுக்கு கொடுந்துன்பமும், துயரமும் நேர்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாதிட்டார். மேலும், புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டிக்க நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறிய காரணங்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் அவர் குற்றம்சாட்டினார். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதற்கு தடை விதிக்கக்கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் உள்ள தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில், தன்னையும் ஒருதரப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று ம.தி.மு.க. …

  12. இந்திய பிரதமருக்கு ஈழத்தமிழர்கள் கடிதம் http://meenakam.com/2010/09/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4.html இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு ஈழத்தமிழர்களின் சார்பில் கனடா தமிழர் இணையம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். September 21, 2010 Mr.Manmohan Singh The Honourable Prime Minister of India Prime Ministers’ Office NEW DELHI, INDIA Honored Sir, PLEASE FIND HEREWITH A HUMBLE REQUEST ON BEHALF OF THE TAMILS FROM THE NORTHEAST SRI LANKA 1. Although we, the T…

    • 5 replies
    • 1.4k views
  13. துணை இராணுவக்குழுவின் தலைவர் பிள்ளையானை உயிருடன் புதைக்க அரசு தயாராகின்றது கிழக்கு மாகாணத்தில் இயங்கிவரும் பிள்ளையான் குழு எனப்படும் துணைஇராணுவக்குழுவின் தலைவரும், கிழக்கு மாகாணசபை முதலமைச்சலுமான பிள்ளையானை இல்லாது ஒழிக்கும் பணிகளை சிறீலங்கா அரசு திரைமறைவில் மேற்கொண்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிழக்கு மாகாணசபையின் முதலைமைச்சராக உள்ள பிள்ளையானை அதில் இருந்து துரத்த அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மாகாணசபையின் நிதியை பிள்ளையான் கையாடியுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுமாறு அரசு உயர் அதிகாரிகளை பணித்துள்ளது. பிள்ளையானின் ஊழல்களை ஊடகங்கள் மூலம் வெளிக்கொண்டுவருமாறு…

  14. சிறைச்சாலையில் குழந்தைகளுடன் அல்லல்படும் எங்களது கண்ணீரைத் துடைத்து எதிர்காலத்திற்கு ஒளியேற்ற நடவடிக்கை எடுங்கள் எனத் தெரிவித்து வெலிக்கடை பெண்கள் பிரிவு சிறைச்சாலையில் குழந்தைகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளான தாய்மார் ஜனாதிபதியின் பாரியாரும் மகளிர் மற்றும் சிறுவர்களுக்கான அமைப்பின் இயக்குனருமான சிராந்தி ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர். எப்போது விடுதலை என்று தெரியாது தினம் தினம் கண்ணீரும் கவலைகளுமே சொந்தமாகிப் போன நிலையில் நாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம். எமது குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் வாழ்கின்றோம் என்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மகளிர் …

  15. மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட காவற்துறை அதிகாரங்கள்; மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்படும்? 13வது அரசியலமைப்புத் திருத்தம் மூலம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட காவற்துறை அதிகாரங்கள் அடுத்த அரசியலமைப்புத் திருத்தம் மூலம் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்படும் என நம்பதகுந்தத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டத்துறை பிரிவுகள் இதற்கு தேவையான சட்டத்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாக அறியமுடிகிறது. தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின்படி காவற்துறை அதிகாரங்களில் ஒரு பகுதி மாகாண சபைகளுக்கும், ஒரு பகுதி மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. எனினும் எந்த மாகாண சபைக்கும் இதுவரை காவற்துறை அதிகாரங்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை. அதேவேளை மாகாண சப…

  16. சீனாவின் ஆதிக்கம் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிகரித்துள்ளமையை அடுத்து இந்தியா, இந்த பகுதிகளில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் முதல் கட்டமாகவே இந்தியா, வடக்கு, கிழக்குக்கு 50 ஆயிரம் வீடுகளை கட்டிக்கொடுத்து அங்குள்ள மக்களின் மனங்களில் இடம்பிடிக்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், பல்வேறுகட்ட சுற்றுலாத்துறை முதலீடுகளை இந்தியா இலங்கையின் வடக்குகிழக்கு பகுதிகளில் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.அண்மையில் கரடியனாற்றில் இடம்பெற்ற வெடிவிபத்து சம்பவத்தை அடுத்து இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் இலங்கை தொடர்பாக கவனம் தீவிரமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் சீனாவை வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி பணிகளில் இருந்து தவிர்…

  17. மலரவிருக்கும் தமிழீழமானது உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு ஆதரவாக போராடும் – ஜெயசங்கர் முருகையா(நா.க.தமிழீழ அரசு) மலரவிருக்கும் தமிழீழமானது சர்வதேச அளவில் உலக வறுமைக்கும், கொடுங்கோலர்களுக்கும், இனப்படுகொலைகளுக்கும், அடக்குமுறையாளர்களுக்கும், பயங்கரவாதத்திற்க்கும் எதிராகவும்; உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு ஆதரவாகவும் உலக நாடுகளு-டன் தோளோடுதோள் நின்று பாடுபடும் என்று நாடு கடந்த தமிழீழ அரசின் ஜெயசங்கர் முருகையா தெரிவித்துள்ளார். அன்பான ஈழத்தமிழ் உறவுகள் அனைவருக்கும், வணக்கம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களுள் ஒரு-வனாகிய ஜெயசங்கர் முருகையா (பிரித்தானியா) ஆகிய நான், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பிற்காக, கீழ்க்காணும் …

  18. பள்ளி சென்றுகொண்டிருந்த 21 மாணவர்கள் உடல் சிதறி இறந்தனரே: மறப்போமா? அதிகாலைப் பொழுதொன்று குருதியில் உறைந்தது அன்று, அந்த நாளை நாம் மறப்போமா? தலைவாரி, பொட்டுவைத்து, பள்ளி சென்று வா என்று அம்மா அனுப்பிவைக்க, பத்திரமாக படித்துவிட்டு வீடு திரும்பி வா என அப்பாவும் சொல்லி அனுப்ப, வெள்ளை நிற பள்ளிக்கூட ஆடைகளை அணிந்து உல்லாசமாக, உற்சாகமாகச் சென்ற அந்த பிஞ்சுக் குழந்தைகள் மீது குண்டுபோட சிங்கள இனவெறியனுக்கு எப்படித் தான் மனம் வந்ததே தெரியவில்லை. பாவம்! பள்ளிக்குச் செல்லும் பிள்ளை அன்று வீடு திரும்ப மாட்டாள் என அம்மாவுக்கு முன்னரே தெரியாமல் போய்விட்டது. பாடசாலை சென்ற பையன் இனி வீட்டிற்கு பிணமாகத் தான் வருவான் என அப்பா நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ராட்சஷக் கழுகாக பறந்துவ…

  19. அமெரிக்காவில்மகிந்தவிற்கு எதிரான பதாகையுடன் குட்டி விமானம் பறப்பு: அதிர்ச்சியில் மகிந்த பட்டாளம்! திகதி:25.09.2010 ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது மாநாட்டில் உரையாற்றுவதற்கு நேற்று முன்தினம் புறப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுக்கு அதிர்ச்சி தரும் வகையிலான பதாகையொன்று கண்ணில் பட்டது. "இலங்கை சர்வாதிகாரி ராஜபக்ஷ, ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய்" என்ற வசனங்களுடனான பதாகையொன்று வானத்தில் காணப்பட்டதாக இணையதளமொன்று செய்தி வெளியிட்டதுடன் பதாகையின் புகைப்படத்தையும் வெளியிட் டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை அலுவலகக் கட்டடத்துக்கு கிழக்குப் புறமாக வானத்தில் குட்டி விமானமொன்று இந்தப் பதாகையுடன் வலம் வந்துகொண்டிருந்தது. ஜனாதிபதியுடன் சென்ற பரி வாரங்கள் தாம் தங்க…

  20. போர்கள் நடத்தப்பட வேண்டிய முறை குறித்த சர்வதேசச் சட்டங்களில் பெரும் பிரச்சினைகள் இருப்பதாக ஐ.நா.மன்றப் பொதுச்சபையில் உரையாற்றுகையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இந்தச் சட்டங்கள் இரு நாடுகளுக்கிடையிலான போர்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை என்று கூறிய ராஜபக்ஷ அவர்கள், ஆனால், இப்போது பயங்கரவாதக் குழுக்கள் மரபுசாரா வழிகளில் மோதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரச்சினைகள் பெரிதாக வழி செய்கிறார்கள் என்றார். அதனால், இன்றைய தேவைகளை சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் எந்தளவுக்கு எதிர்கொள்ளும் வல்லமை கொண்டவையாக இருக்கின்றன என்பதை பரிசோதனை செய்வது நல்லது என்றும் அவர் கூறினார். இது தொடர்பில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்…

  21. "இனப் பிரச்சினை தொடர்பில் உரியவர்களுடன் பேசியுள்ளோம்":- தமிழோசைக்கு அளித்த செவ்வியில் சம்பந்தன் தெரிவிப்பு! [Friday, 2010-09-24 03:14:57] இலங்கை அரசோடு தற்போதைக்கு மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் எண்ணம் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு இல்லை என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசை எவ்வாறாவது ஒரு வழிக்கு கொண்டுவந்து தமிழர் நலன் குறித்த விடயங்களை நிறைவேற்றவே தாங்கள் எண்ணிக்கொண்டிருப்பதாகவும் சம்பந்தன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார். இலங்கை அரசு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்த விடயங்கள் குறித்து அரசுடன் இணைந்து இயங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கோரியிருப்பதாகவும் , இது குறித்து அர…

  22. கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் நீண்டதொரு சாட்சித்தை வழங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, வன்னி யுத்தத்தின் பின்னரான நிலைமைகள் தொடர்பாக தன் கவலைகள் பலவற்றை வெளியிட்டிருக்கிறார். பத்தாயிரம் தொடக்கம் பதினோராயிரம் பேரைப் போராளிகளாக முத்திரை குத்தி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை பாரதூரமான குற்றமாகும் என வலியுறுத்துவதாகக் ஆனந்தசங்கரி கூறியிருக்கிறார். 20, 30 ஆண்டுகளுக்கு முன் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஜே.வி.பி போராளிகள் அக்கராயனில் அமைக்கப்பட்ட புனருத்தாரன முகாமில் வைத்து ஆறுமாத காலத்தில் புணர்வாழ்வளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். தடுப்புக் காவலிலுள்ள தமிழர்கள் ஜே. வி. பி. காலத்தி…

  23. கச்சதீவு மட்டுமல்ல; கடலும் மீனவருக்கே சொந்தம்–TSS Mani இப்போது கச்சதீவை இந்த்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு, இலங்கை தீவை ஆண்டுவரும் சிங்கள அரசுக்கு தாரை வார்த்து கொடுத்ததற்காக, கடும் விமர்சனங்களை மத்திய அரசு எதிர்கொண்டுவரும் வேளை. இந்த கைமாற்றி கொடுக்கப்பட்ட தீவு பிரச்சனை ஒரு அரசியல் முடிவாக எதிர்க்கப்படுவதைவிட, ஒரு சமூகத்தின் வாழ்நிலை பிரச்சனையாக இப்போது பார்க்கப்படுகிறது. அதாவது சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கச்சதீவு இந்தியாவால் திரும்பப்பெறபடவேண்டும் என்று ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதை கொண்டுவந்தவர் தி.மு.க. நாடாளுமன்ற கட்சியின் தலைவரான டி.ஆர்.பாலு. தி.மு.க. கொடுத்த தீர்மானத்தில், அ.இ.அ.தி.மு.க., இடது சாரிகள் உட்பட அனைவரும் கலந்து கொண்ட…

  24. இரத்தக்கறை படைந்த போர்க்குற்ற தலைவரின் மனைவியும் உலகத்திலே சுதந்திரத்திற்காக பாடுபடும் கறுப்பினத்தின் புதிய தலைவரின் மனைவியும் தமது கரங்களை பிடித்துக்குலுக்கிக்கொண்டனர். உணவு மற்றும் மரக்கறிகள் கண்காட்சி வளாகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் 39 நாட்டு தலைவர்களின் துனைவியர்கள் ஒபாமாவின் துணைவியாருடன் போஸ் கொடுத்தனர். 50 ஆயிரத்திற்கு மேலான தமிழீழ பெண்களின் தாலிகளை அறுத்த மஹிந்தவின் மனைவியார் இலங்கையின் முதற்பெண்மணியாம். அவரது கரங்களை பற்றி வாழ்த்து பரிமாறும் ஒபாமாவின் பாரியார் என்ன சொல்லி இருப்பார்.

  25. சனிக்கிழமை , செப்டம்பர் 25, 2010 யாழ். மாவட்டத்தில் விவாகரத்துக்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்துள்ளது என நீதிமன்றப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. விவாகரத்துப் பெறுபவர்களில் அரச ஊழியர்களே அதிகளவானவர்களாக இருக்கின்றார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கவலையுடன் சுட்டிக் காட்டுகின்றார்கள். இந்த ஆண்டில் இதுவரை விவாகரத்துக்கோரி 46 பேர் யாழ். மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 123 ஆக இருந்தது. 30 வயதுக்குட்பட்ட இளம் தம்பதியினரே விவாகரத்துக் கோருவதில் முன்னணியில் திகழ்கின்றனர் எனப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. புரிந்துணர்வின்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இன்மை, பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.