Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: VISHNU 01 OCT, 2023 | 10:55 AM கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினமாகும். இந்த சிறுவர் தினத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கண்டாவளை பச்சிலைப்பள்ளி பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மூவாயிரத்துக்கும் அதிகளவான சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது பொருட்களின் விலை ஏற்றம் தொழில் வாய்ப்பின்மை வறுமை உணவு பாதுகாப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் குறித்த சிறுவர்கள் போசாக்கு ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது 568க்கும் மேற்பட்ட ஐந்து வயதுக்க…

  2. திருமலை இலுப்பைக் குளம் பகுதியில் விகாரை அமைக்கப்படுவதை எதிர்த்து நாளை ஆர்ப்பாட்டம் 30 SEP, 2023 | 05:48 PM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை இலுப்பைக் குளத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் விகாரை அமைக்கப்பட்டுவரும் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஞாயிற்றுக்கிழமை (01) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரையின் கட்டுமானப் பணிகளுக்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், குறித்த பகுதியில் கட்டுமானப் பணிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநரினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருப்…

  3. நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில், 10 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய முள்கரண்டிகள், குழாய்கள், பிளாஸ்டிக் மாலைகள், பிளாஸ்டிக் இடியப்ப தட்டுகள் மற்றும் உணவுக் கொள்கலன்கள் என்பன தடை விதிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களில் உள்ளடங்குகின்றன. பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு என்பனவற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த தடைகளை மீறி பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கழிவு மு…

  4. இலங்கையில் 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற காலிமுகத்திடல் போராட்டத்தின் காணொளிகளைப் பகிர்ந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரித்தானிய பெண் தொடர்ந்தும், தாம் இலங்கையில் தலைமறைவாகவே இருப்பதாக தெரிவித்துள்ளார். பிரித்தானிய இணையம் ஒன்றுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13 மாதங்கள் இவ்வாறு தலைமறைவாக உள்ள நிலையில் தாம் நம்பிக்கையை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 35 வயதான கெய்லீ ஃப்ரேசர் (Kayleigh Fraser), தங்கியிருந்த இடத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை குடிவரவு அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது. இதன்போது அவர் சட்டவிரோத விசாவில் நாட்டிற்கு வருகை தந்ததாக கூறி அவரது கடவுச்சீட்டை அதிகாரிகள் கைப்பற்றினர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலிமுகத்திடல் போராட்டங்களின் காணொளிகளை ப…

  5. ஜனாதிபதித் தோ்தலில் தமிழா் தரப்பில் பொது வேட்பாளா் September 29, 2023 தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து வலுவாக பேரம் பேசும் உத்தியாக, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தரப்பின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் ஏனைய தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடுவதென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று(29) தீர்மானித்துள்ளது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் கள்ளியங்காடு, கட்டப்பிராயிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் வீட்டில் நடைபெற்றது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத் தலைவா் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத் தலைவா் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், ஈழமக்கள் புரட்சிகரிவிடுதில…

  6. பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மின்சார கட்டணத்தை அதிகரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இவ்வருடம் எதிர்பார்த்த அளவு நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போனமையினால், மின்சார உற்பத்திக்கு கூடுதல் செலவு ஏற்பட்டதாக அதன் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த வருடம் 4500 கிகாவாட் நீர் மின் திறன் எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், 3750 கிகாவாட் நீர் மின் திறனையே இவ்வாண்டு பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. இதற்கமைய, அனல் மின் நிலையங்களில் இருந்து 750 கிகாவாட் நீர் மின் திறனை கொள்வனவு செய்ய வே…

  7. 29 SEP, 2023 | 05:25 PM 13ஆவது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளிடம் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள மாகாணங்களுக்கு வழங்கும் முயற்சியில் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்ச்சியாக பேசி வருகிறோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவரது இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை (28) இடம்பெற்ற 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தமிழ் மக்களின் இருப்புக்களை தக்கவைத்துக்கொள்வதற்கு 13வது திருத்தம் செயற்படுத்தப்பட வேண்டும். இதன…

  8. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் சிறந்த உடல்நிலையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். செய்தியாளர்களின் கேள்வியொன்றிற்கு பதிலளித்துள்ள அவர் நான் நல்ல உடல்நிலையுடன் உள்ளேன் சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களிற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார். உங்களால் நான் நோய்வாய்ப்பட்டுள்ளேனா அல்லது நல்லநிலையில் உள்ளேனா என்பதை பார்க்க முடியும் சமூக ஊடகங்களில் வெளியாகும் விடயங்களிற்கு முக்கியத்துவம் அளிக்ககூடாது என அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தலைவராக இருக்கவிரும்பவில்லை இளையவர் ஒருவருக்கு அந்த பொறுப்பை வழங்கவேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை சமூக ஊடகங்க…

    • 1 reply
    • 294 views
  9. 2024ஆம் ஆண்டுக்கான டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக்கழகம் தரவரிசைகளில் கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின் சிறந்த பல்கலைக்கழகங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழக தரவரிசையில் 1,001 முதல் 1,200ஆம் இடங்களுக்குள் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகம் இடம்பெற்றுள்ளன. கொழும்பு பல்கலைக்கழகம் கற்பித்தலில் 25.4 புள்ளிகளுடன் உள்நாட்டு தரவரிசையில் முதலிடத்திலும், பேராதனை பல்கலைக்கழகம் சர்வதேச கண்ணோட்டத்தில் 39.8 புள்ளிகளுடன் இலங்கையின் சிறந்த பல்கலைக்கழகமாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டுக்கான டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசையில் 20வது ஆண்டில் 1904 பல்கலைக்கழகங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டன. …

  10. தமிழ் சமூக ஆர்வலரிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை! ThivaSeptember 29, 2023 இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பை மீள கட்டியெழுப்ப பாடுபடுகிறீர்களா என கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் சமூக ஆர்வலர் ஒருவரிடம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு பிரிவினர் நீண்ட நேரம் கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பிட்ட காரணத்தை தெரிவிக்காமல் வியாழன் 21 ஆம் திகதி காலை 9 மணிக்கு திருகோணமலை பிராந்திய அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு பிரிவினர் பால்ராஜ் ராஜ்குமாருக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தனர். பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் (CTID) வாக்குமூலம் அளித்த பின்னர்இ பால்ராஜ் ராஜ்குமார் தனது பேஸ்புக் பதிவில் அரசுக்கு எதிரா…

  11. 28 SEP, 2023 | 08:24 PM (இராஜதுரை ஹஷான்) சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வகையில் சட்டமியற்றுவது பிரச்சினைக்குரியது. பேச்சுரிமை அனைவருக்கும் உண்டு என்பதை நினைவில் வைத்துக் கொண்டு சகலரும் பொறுப்புடன் செயற்பட்டால் முரண்பாடுகள் தோற்றம் பெறாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மீரிகம பகுதியில் வியாழக்கிழமை (28) மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கேள்வி - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படவுள்ளதாக குறிப்பிடப்படுவது உண்மையா ? பதில் - அவ்வாறு ஒன்றும் நான் அறியவில்லை. தலைம…

  12. Published By: VISHNU 28 SEP, 2023 | 09:08 PM (இராஜதுரை ஹஷான்) அரச கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனையை அரசாங்கம் செயற்படுத்தவில்லை. இந்த நிபந்தனையை நிறைவேற்றினால் அரச நிர்வாகத்தில் இடம்பெறும் ஊழலை தடுக்க முடியும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். மஹரகம பகுதியில் வியாழக்கிழமை (28) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொ…

  13. Published By: RAJEEBAN 28 SEP, 2023 | 08:15 PM குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தவை வருமாறு, குருந்தூர்மலை வழக்கில் நீதிபதி வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக அரச தரப்பால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மற்றும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும், பாராளுமன்றிற்க…

  14. 28 SEP, 2023 | 08:18 PM 2024 ஆம் ஆண்டு உலகளாவிய சவால்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வலுவான சர்வதேச திட்டமிடலுக்காக மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய சங்கமும் சீனாவுடன் தீர்மானமிக்க கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். அதேபோல் "ஓரே தீர்மானம் - ஒரே பாதை" என்ற கூட்டு வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை போன்ற நாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதோடு, இதனால் உலக பொருளாதார நெருக்கடிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும் இலங்கை போன்ற நாடுகள் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வரும் நெருக்கடிகளுக்கு முக…

  15. 28 SEP, 2023 | 03:52 PM கடந்த 2022ஆம் ஆண்டில் மாத்திரம் 400 சிறுவர்கள் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் பிரதிநிதி பேராசிரியர் சமத் தர்மரத்ன தெரிவித்தார். வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபையினால் “வேகமாக அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள்" என்ற தலைப்பில் இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் நேற்று புதன்கிழமை (27) இடம்பெற்ற ஊடக விழிப்புணர்வு சபை கூட்டத்தில் கலந்துகொண்ட உரையாற்றுகையிலேயே இலங்கை மருத்துவ சங்கத்தின் பிரதிநிதி பேராசிரியர் சமத் தர்மரத்ன இவ்வாறு தெரிவித்தார். வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இலங்கையில் 30 வருட கால யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும் எனவும…

  16. 28 SEP, 2023 | 05:19 PM நுவரெலியா கிரேண்ட் ஹோட்டலில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸுக்கும் மலையக மக்கள் முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (28) வியாழக்கிழமை இடம்பெற்றது. மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன், மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான இராஜாராம், மலையக தொழிலாளர் முன்னணியின் பதில் பொதுச் செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு இச்சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், நுவரெலியா கிரேண்ட் ஹோட்டலுக்கு வருகை தந்திருந…

  17. 28 SEP, 2023 | 11:03 AM யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தாத 800 முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று புதன்கிழமை (27) மாலை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன், மாவட்ட செயலர், பொலிஸார் உள்ளிட்டோர் நடாத்திய சந்திப்பின் போதே பொலிஸார் அவ்வாறு தெரிவித்துள்ளனர். குறித்த சந்திப்பில், யாழ்ப்பாணத்தில் தற்போது அறிமுகமாகியுள்ள தனியார் போக்குவரத்து சேவையை வழங்கும் நிறுவனம் ஒன்றின் ஊடாக சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் குறைந்தளவு கட்டணங்களை வசூலிக்கின்றன. அதனால் நீண்ட காலமாக …

  18. 28 SEP, 2023 | 06:50 AM பதினைந்து வருடங்களாகத் தொடரும் நிலைமையை அங்கத்துவ நாடுகள் உற்றுநோக்கினால் இலங்கை அரசினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டிய அவசியம் புலப்படும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். ஐநா மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது அமர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் கவனம் தேவைப்படும் மனித உரிமைகள் சூழ்நிலைகள் தொடர்பில் புதன்கிழமை (27-09- 2023) இடம்பெற்ற விடயம் 4 ன் கீழான பொது விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். அவருடைய உரையில் குறிப்பிட்டதாவ…

  19. கேட்டும் கிடையாததால் வீட்டே செல்கிறார்..! Vhg செப்டம்பர் 27, 2023 மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா சேவைகால நீடிப்பு இன்று புதன்கிழமை (27-09-2023) மறுக்கப்பட்டு கடிதம் பொது உள்நாட்டு அமைச்சு அறிவித்ததையடுத்து அவர் எதிர்வரும் 29 ஆம் திகதி 60 வயதில் ஓய்வூதியம் பெற்றுச் செல்கின்றார். மட்டக்களப்பைச் சேர்ந்த அரசாங்க அதிபர் கடந்த ஜனவரி 18 ம் திகதி மாவட்ட அரசாங்க அதிபராக கடமையை பெறுப்பேற்று கடமையாற்றிவரும் இவர் எதிர்வரும் 29 ம் திகதி 60 வயதை பூர்த்தியடைந்த நிலையில் அரச சேவையில் இருந்து ஓய்வூதியம் பெற்றுகின்றார். இந்த நிலையில் தனது ஓய்வூதிய காலத்தின் பின்னர் தொடர்ந்து அரச சேவையில் கடமையாற்றுவதற்கு பொது உள்நாட்டு அமைச்சி…

  20. சர்வதேச சைகைமொழி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும் இலங்கை தமிழ் செவிப்புலனற்றோர் அமைப்பும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. செவிப்புலனற்றவர்கள் எங்கு வேண்டுமானாலும் சைகைமொழியை பயன்படுத்தக்கூடிய உலகம் என்னும் தொனிப்பொருளில், இன்றைய சர்வதேச சைகைமொழி தினம் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலனற்றோர் சங்க அலுவலகத்திலிருந்து விழிப்புணர்வு பேரணியானது ஆரம்பமானதுடன், மட்டக்களப்பு நகர் ஊடாக மட்டக்களப்பு மாநகரசபை மண்டபம் வரையில் நடைபெற்று அங்கு விசேட நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டன. குறித்த பேரணியில் இலங்கையின் 10 மாவட்டங்…

  21. இலவசக் கல்வியைக் கொண்ட உலகின் ஒரு சில நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறி, முதலாம் ஆண்டு முதல் பல்கலைக்கழகம் வரை இலவச கல்வி வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் அதே வேளையில், நான்கு வயதை எட்டும் அனைத்து குழந்தைகளுக்கும் சிறுவயது கல்வி கட்டாயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகளின் சார்பில் அரசு தலையிட்டு, தேவையின் அடிப்படையில், இடவசதி உள்ள ஆரம்ப பாடசாலைகளில் குழந்தை பருவ வளர்ச்சி மையங்களை நடத்தலாம். மூடப்படும் சவாலை எதிர்கொள்ளும் பாடசாலைகளுக்கு இது ஒரு தீர்வாக இருக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த நாட்டில் குழந்தைகளின் முறையான ஆரம்ப குழந்தை பருவ வளர்ச்சியே கல்வி மாற்ற சீர்திருத்தங்களில் வெற்றி ப…

  22. இலங்கையில் பாலியல் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன என பெண்கள் கூட்டமைப்பொன்று குற்றம்சாட்டியுள்ளது. சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்படுதல் இரக்கமற்ற மனிதாபிமானமற்ற அவமானகரமாக நடத்தப்படுதல் போன்ற அடிப்படை உரிமை மீறல்களை இலங்கையின் பாலியல் தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ளனர் என அபிமானி என்ற பெண்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்டதும் பாலியல் தொழிலாளர்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதை அடிக்கடி எதிர்கொள்கின்றனர் என தெரிவித்துள்ள அபிமானி பெண்கள் கூட்டமைப்பு நியாயமாக நடத்தப்படுவதற்கான உரிமைகள் உரிய நடைமுறைகள் மனிதாபிமானற்ற மற்ற விதத்தில் நடத்தப்படுவதிலிருந்து பாதுகாப்பு போன்றவை மீறப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளது. தங்களை கைதுசெய்த பின…

    • 3 replies
    • 690 views
  23. கிளிநொச்சி திருவள்ளுவர் வித்தியாலயத்தின் இயங்குநிலையை உறுதிப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். மலையாளபுரம் கிராம மக்களின் கோரிக்கைக்கு அமைவாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் அப்பகுதி மக்களுடனான சந்திப்பொன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக தாம் எதிர்கொள்ளும் அடிப்படை இடர்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்துக்குக் கொண்டுவந்த மலையாளபுரம் மக்கள், அக்கிராமத்தில் இயங்கும் ஆரம்பப் பாடசாலையான திருவள்ளுவர் வித்தியாலயத்தை நிரந்தரமாக மூடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டியிருந்தனர். அன்றையதினமே குறித்த பாடசாலையை நேரில்சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்…

  24. யாழ்ப்பாணம் நெடுந்தீவில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரும் இன்று புதன்கிழமை (27) விடுதலை செய்யப்பட்டனர். இராமேஸ்வரம் - ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 17 மீனவர்களும் கடந்த 13ஆம் திகதி, நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவேளை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது அவர்களது மூன்று விசைப் படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கானது ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் திரு.கஜநிதிபாலன் அவர்கள் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது, மீனவர்கள் 17 பேரையும் 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.