ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143255 topics in this forum
-
வீரவங்சவின் பேயாட்டமும் (தொவில) செய்தியும் ‐ சுனந்த தேசப்பிரிய ‐ GTNற்காக 22 July 10 12:41 am (BST) பேயாட்டமும் நிறைவடைந்துவிட்டது. அமைச்சர் விமல் வீரவங்சவின் 60 மணித்தியால தற்கொலை (உண்ணாநிலை) தாக்குதலின் பின்னர் இராப்போசனத்திற்காக அம்பியூலன்ஸ் வண்டியொன்றின் மூலம் அவர் இராணுவ வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த உண்ணாவிரதத்தினால் ஏற்படப் போகும் தனது மரணத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் என்பதையும் அவர் தொலைக்காட்சிகளுக்கு வழங்கிய இறுதி வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இது அற்புதமான இறுதி வாக்குமூலமாகும். எனது மரணத்திற்கு ஜனாதிபதி பொறுப்பல்ல. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகமே பொறுப்பு என விமல் வீரவங்ச கூறியிருந்தார். இதில் அற்புதம் என்…
-
- 0 replies
- 585 views
-
-
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் 51 ஆவது படையணியின் தலைமையாகமாக மாற்றம் திகதி: 22.07.2010 // தமிழீழம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லாம் ஸ்ரீலங்காப்படையின் 51 ஆவது படையணியின் தலைமையாகமாக மாற்றப்பட்டுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்த ஸ்ரீலங்கா படையினர் அங்கு படைமுகாம்களையும், ஸ்ரீலங்காப்படையினரின் நினைவு சின்னங்களையும் கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். இன்நிலையில்தான் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஸ்ரீலங்கா அரசு சிறைச்சாலை ஒன்றினை அமைக்க தீர்மானித்துள்ளதை அடுத்து அருகில் உள்ள பிரதேசங்களில் இருந்த மக்கள் ஸ்ரீலங்காப்படையினரால் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார்கள். …
-
- 0 replies
- 642 views
-
-
Jul 22, 2010 / பகுதி: செய்தி / யாதவன் கொழும்பு துறைமுகத்தில் கொரிய குடியரசின் கடற்படை போர்க்கப்பல் கொரிய குடியரசின் கடற்படை போர்க்கப்பல் ஒன்று மூன்று நாள் சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது. "வாங் ஜியோன்" என்ற போர்க்கப்பலே இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலயம் தெரிவித்தது. கொரியா மற்றும் இலங்கை கடற்படையினருக்கு இடையிலான நல்லுறவைப் பேணும் வகையிலேயே இந்த சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்த ஊடக மத்திய நிலையம், குறித்த கப்பல் கொழும்பில் தரித்து நிற்கும் நிலையில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளதாக கூறியது. சுமார் 149 மீற்றர் நீளமுடைய இந்த…
-
- 0 replies
- 441 views
-
-
உலகத்தமிழர்களின் நிலைத்த உறுதியான போராட்டத்தின் விளைவாக இப்போதுதான் நாகரீகத்தேசங்கள் என கூறிக்கொள்பவை, ஈழத்தொடர்பான தனது பிழையான புரிதல்களை மறுபரிசீலினைக்கு உட்படுத்த தொடங்கியிருக்கின்றன. பயங்கரவாத ஒடுக்கம் ,உள்நாட்டு சர்ச்சை என்ற பொருளிலே ஈழ சிக்கலை அணுகிய அவை, சிங்கள அரச பயங்கரவாத்திற்கு முண்டுகொடுத்து இனவழிப்பிற்கு தெரிந்தோ தெரியாமலோ துணைபோய் ஈழ பேரவலம் இனவழிப்பு தான் என இப்போது அம்பலப்படும்போது கையை பிசைந்துக்கொண்டு இருக்கின்றன. அவை ஈழ பேரவலத்தை போரியல் அறமீறல் ,மனித உரிமை மீறல் போன்ற மிக இலகுவான சொற்பதங்களை கொண்டு வர்ணித்து அதற்கான பரிகாரத்தைப்பற்றி தான் பேசுகின்றனவே ஒழிய , பூசிமொழுக முடியாத, புரையோடிப்போன இனவழிப்பு பற்றி வாய் திறக்கவே மறுக்க…
-
- 0 replies
- 875 views
-
-
யாழ்.மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழுள்ள நான்கு பிரதான வீதிகளை அகலமாக்கிப் புனரமைக்கும் பணிகளைச் சீன நிறுவனத்திடம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அடுத்த மாதம் கைச்சாத்திடப்பட்டு ஆரம்பமாகவுள்ள இப் பணிகளில் சீன நிறுவனத்தினால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள சீனக் கைதிகள் ஈடுபடுத்தப்படுவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழ்.மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழுள்ள யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்-பலாலி வீதி, யாழ்ப்பாணம்-கோப்பாய் சந்தி வரையான பருத்தித்துறை வீதி மற்றும் யாழ்ப்பாணம்-கண்டி வீதி ஆகிய நான்கு பிரதான வீதி அகலமாக்கப்பட்டு புனரமைப்புச் செய்யப்படவுள்ளன. இதில் யாழ்ப்…
-
- 5 replies
- 1.5k views
-
-
Jul 22, 2010 / பகுதி: செய்தி / யாதவன் இஸ்ரேலின் யுத்தத்திற்கு இலங்கை ஆதரவு பலஸ்தீன பயங்கரவாதத்திற்கு எதிரான இஸ்ரேலின் யுத்திற்கு இலங்கை உறுதியான ஆதரவளிப்பதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவரான முன்னாள் படையதிகாரிகளின் பிரதான டொனால்ட் பெரேரா கூறியுள்ளார். அதேவேளை, நிபந்தனை எதுவுமின்றி நேரடி பேச்சுவார்ததைக்கு பலஸ்தீனர்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இரத்தம் சிந்தப்படுவதை எவரும் விரும்பவில்லை. அடுத்த (பலஸ்தீன) தரப்பு நிபந்தனையற்ற நேரடி பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வேண்டும். இப்பேச்சுவார்த்தைகள் இரு தரப்பினரும் உடன்படிக்கையொன்றில் கையெழுத்திடுவதில் கவனம் செலுத்தவேண்டும் என வைநெட்நியூஸுக்கு அளித்த செவ்வியொன்றில் டொனால்ட் பெரேரா கூறியுள்ளார். பய…
-
- 5 replies
- 757 views
-
-
சிறீலங்கா அரசத்தலைவர் மகிந்தவை கொலை செய்ய திட்டமிட்டவர்கள் மீது வழக்கு ஜனாதிபதி மகிந்தவை கொலை செய்ய திட்டம் தீட்டியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மூவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார். கடந்த வருடம் சுதந்திர தினத்தன்று அலரி மாளிகையில் இருந்து, ஜனாதிபதி செயலகத்திற்கு வரும் வீதியில் வைத்து அவரை கொலை செய்ய முயற்சி செய்யவிருந்ததாக பூர்வாங்க விசாரனைகளில் இருந்து தெரியவருகிறது கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது ;, புலனாய்வு பிரிவினர்; இது பற்றிய தகவலை நீதிமன்றில் தெரிவித்தனர். அதிசக்திவாய்த்த குண்டுகளை வெடிக்கவைத்து ஜனாதிபதியை க…
-
- 1 reply
- 447 views
-
-
மலையக கட்சிகள் இன்று ஒன்று கூடுகின்றன இந்திய வம்சாசழி மலையகத் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று இலங்கை மன்ற கல்லூரியில் பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி , ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட்ட கட்சிகள் பங்குபற்ற உள்ளன. இந்த சந்திப்பில் உத்தேச தேர்தல் முறைமைகள் மற்றும் அதனால் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக மேற்படி கட்சிகளின் பிரதிநிதிகன் தெரிவித்துள்ளன. இலங்கையில் அரசியல் அமைப்பு திருத்தம் மற்றும் தேர்தல் முற…
-
- 1 reply
- 584 views
-
-
கிரிகெட்டில் இருந்து ஓய்வு பெறும் முரளிதரன் முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு கிரிகெட் பயிற்சியளிக்க உள்ளார் தடுப்பு முகாமிலுள்ள போராளிகளுக்கு பிரபல நடிகை அனோஜா வீரசிங்க நடனப் பயிற்சியளித்து வருவதாகவும். நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனும் கிரிக்கெட் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளதாகவும் சிறீலங்கா அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார். 12 ஆயிரம் புலிப் போராளிகள் சிறீலங்கா அரசிடம் சரணடைந்தனர். இவர்களில் 3,038 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது 7,980 பேருக்கு மாத்திரம் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றது. 1,300 பேர் தீவிர புலி உறுப்பினர்கள் என இனம் காணப்பட்டுள்ளனர என தெரிவித் தார் அமைச்சர் டியூ குணசேகர. புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீர மைப்ப…
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராயும் ஐ.நாவின் நிபுணர்குழு கூட்டம் நியூயோர்க்கில் நடைபெற்று வருகின்றது. குறித்த விவகாரத்தினை கையாள்வதற்காக ஐ.நாவின் பொதுச்செயலரினால் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே பூட்டான் அதிபர் அல் பஷீர் போர்க்குற்றங்களை விசாரித்த உலக குற்றவியல் நீதிமன்றம், கருப்பின பழங்குடி மக்களை கொன்று குவித்ததற்கு அவரை கைது செய்ய ஆணையிட்டது. அதிபர் அல் பஷீர் வழக்கு தொடர்பாக உலகப்புகழ் பெற்ற வழக்கறிஞர் லூயிஸ் மொரீனோ அக்காம்போ, ‘’போர்க்குற்ற உண்மையை வெளியில் கொண்டு வந்துள்ளோம். அதிபர் அல் பஷீர் மறைக்க முயன்ற உண்மைகள் தற்போது வெளிப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கொலை மிரட்டல்கள் வந்தன. ஆனால் அவற்றை பொருட்படுத்தாது இந்…
-
- 2 replies
- 1.5k views
-
-
-
- 1 reply
- 868 views
-
-
Please Vote to "Arul Rathi" Please pass it to your network. Thank you To all, I have been partnering with PEER Servants for the last 10 years to improve people's life. Every year they choose 1 best entrepreneur amongst many and give a gift of $ 2000/- to improve their business. There are three finalist this year and by God's Grace one is from Jaffna. Please read the content and vote according to your conscious.Your vote counts....click on the vote online and vote.. http://www.peerservants.org/lydia_voting.php Ray ------------------- Meet the three 2010 Lydia Award semifinalists! Now it's your turn to vote online and send the link to y…
-
- 18 replies
- 2k views
-
-
11,000 சிறைக்கைதிகளை தடுத்து வைக்கும் வசதி கொண்ட சிறைச்சாலைகளில் இன்று 26,000க்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்தார். தலைநகரையும் பிரதான நகரங்களையும் அண்டியுள்ள பிரதான சிறைச்சாலைகள் அனைத்தையும் சகல வசதிகளுடன் கூடிய நவீன சிறைச்சாலையாக வெள்ளவாய பகுதியில் 40 ஏக்கர் பரப்பளவில் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர்பாக நிதியமைச்சின் அனுமதியை கோரியுள்ளதாகவும் அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார். சிறைச்சாலைகளில் நிலவும் இடநெருக்கடிகளைப் போக்க வேண்டும் என்ற மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் பரிந்துரைக்கு அமையவே அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு தொ…
-
- 0 replies
- 773 views
-
-
இராணுவத்தினரால் அண்மையில் விடுவிக்கப்பட்ட கால் இல்லாத போராளிகள் சிலர் சிங்களஒப்பந்தகாரர்களுக்கு கல் உடைத்தல் கல் அரிதல் வேலைகளை செய்து பிழைக்கின்றார்கள். நேற்று முந்தினம் தொடர்பு கொண்ட ஓர் போராளி (இவர் செயற்கை உறுப்பு பொருத்தும் பணியில் முன்னர் பயிற்சி பெற்றிருந்தவர்). தான் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு இப்போ கிளியில் வசிப்பதாகவும் தனக்கு கால் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். தானும் தம்மை போன்ற சிலரும் சைக்கிளில் தேங்காய் கட்டி வியாபாரம் செய்ய நினைத்ததாகவும் எனினும் சைக்கிள் ஓட காலில் புண்வருவதுடன் வியாபாரம் செய்ய போதிய முதல் இல்லை என்றதனால் சிங்கள ஒப்பந்தகாரர்களிடம் வேலைக்கு போனதாகவும் கூறினார். இப்போ கல்லுடைக்கும் வேலையும் , கல் அரியும் வேலையும் செய்வதாக…
-
- 0 replies
- 1.2k views
-
-
கிளி முன்னாள் அதிபரும் தற்போதைய வடமாகாண ஆளுனர் சந்திரசிறியின் பதில் செயலாருமான இராச நாயகம் சமூக சேவை அமைச்சின் கீழ்; கிளியில் உள்ள பொதுக்காணிகளை எடுத்து பண்ணைத்திட்டம் செய்யப்போவதாக அங்கிருப்போரை விரட்டி வருகின்றார். கிளி மாவட்டத்தில் காணிகள் இல்லாதோர் மற்றும் ஊனமுற்ற போராளிகுடும்பங்களிற்கு பொதுக்காணிகளை விடுதலைப்புலிகளின் அப்போதைய நிர்வாகப்பிரிவு கேட்டதற்கு அமைய இவரே வழங்கி இருந்தார். 05 வருடத்தின் பின்னர் பேர்மிற் தருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போ அங்கு மீழ் குடியேறியுள்ள மக்களை விரட்டும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். அண்மையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு கிளியில் வந்து தனக்கு வழங்கப்பட்ட காணியில் குடியேறியுள்ள ஒரு கால் இல்லாத போராளி குடும்பத்திற்கு…
-
- 0 replies
- 1.3k views
-
-
12 ஆயிரம் போராளிகள் அரசிடம் சரணடைந்தனர் எனவும் இவர்களில் 3,038 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் அரசாங்கம் கூறியுள்ளது. தற்போது 7,980 பேருக்கு மாத்திரம் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றது. 1,300 பேர் தீவிர புலி உறுப்பினர்கள் என இனம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் டியூ குணசேகர. ஆனால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இராணுவ தளபதி உட்பட பல அதிகாரிகள் 15, 000 பேர் வரையில் புலி உறுப்பினர்கள் என தாம் அடையாளம் கண்டிருப்பதாகவும் இதில் சரணடைந்தவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் உள்ளடங்குவர் எனவும் கூறி இருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் விடுவிக்கப்பட்டவர்களில் பல போராளிகளை மீண்டும் புலனாய்வுத்துறையினரும் படை…
-
- 0 replies
- 793 views
-
-
ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யாவிட்டால் ராஜபக்ஷ ஆட்சியை ரத்து செய்ய நேரிடும் – ஜே.வி.பி ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யாவிட்டால் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆட்சியை ரத்து செய்ய நேரிடும் என ஜே.வி.பி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனநயாகத்தை உறுதி செய்து, ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு இந்த போராட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடும்ப அரசியலை மேம்படுத்தும் அரசியலமைப்பு திருத்தங்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார் http://meenakam.com/?p=3110
-
- 1 reply
- 737 views
-
-
விமல் வீரவன்சவின் உண்ணாவிரத நாடகத்தினால் சர்வதேச உறவுகளுக்கு விரிசல் என்கிறார் லக்ஸ்மன் கிரியெல்ல தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவினால் அண்மையில் அரங்கேற்றப்பட்ட உண்ணாவிரத நாடாகம் சர்வதேச உறவுகளுக்கு விழுந்த பேரிடியாக கருதப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். விமல் வீரவன்சவின் நாடகத்தினால் ஆலோசனைக் குழுவின் எண்ணிக்கை பத்தாக உயர்த்தப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மூவரடங்கிய ஆலோசனைக் குழுவிற்கு உதவி வழங்கும் நோக்கில் மேலும் ஏழு பேரை பான் கீ மூன் நியமித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையா…
-
- 0 replies
- 608 views
-
-
நீல் பூஹ்னேயும், ரொபட் ஓ பிளக்கும் இலங்கைக்கான பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பினர் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி நீல் பூஹ்னே இன்று அதிகாலை நியூயோக்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்திற்கு திருப்பியுள்ளார். எமிரோட்ஸ் ஈ ஜே 349 என்ற வானூர்தி மூலம் நிவ்யேர்க் திரும்பியுள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீமூனின் விசேட செய்தியுடன் அவர் நேற்று முனதினம் இலங்கை வந்தார் இந்த நிலையிலேயே இன்று அவர் நிவ்யோர்க் திரும்பியுள்ளார். இதனிடையே, ஒருநாள் நவலெண்ண விஜயமாக நேற்று இலங்கை வந்த அமரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளக் இன்றுகாலை 9 மணியளவில் நாடுதிரும்பவுள்ளதாக தெரியவருகிறது …
-
- 0 replies
- 489 views
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் கனபதி கனகராஜ் இணையவிருக்கின்றார் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செய்லாளரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான கனபதி கனகராஜ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிடன் இணையவிருக்கின்றார். இதற்கானஇறுதி பேச்சுவார்தை இன்று இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானுடன் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இவருடன் முன்னணயின் நிதிச்செயலாளரும்; அம்பகமுவ பிரதேசசபை உறுப்பினர் செல்லையா சிவசுந்தரமும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்து கொள்ளவுள்ளவுள்ளதாக தெரியவருகிறது இதுத்தொடர்பில் கனபதி கனகராஜிடம் மீனகத்திற்காக தொடர்பு கொண்டு கேட்டபோது , அவர்கள் இருவரும் இலங்கை தொழிலாளர் கங்சிரஸிடன் இணைவதை உறுத…
-
- 0 replies
- 594 views
-
-
கற்பிட்டி பகுதியில் குண்டு வெடிப்பில் ஒருவர் மரணம் கற்பிட்டி பள்ளிவாசல்துறை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 32 வயதுடைய ஒருவர் பலியானதாக சிறிலங்கா காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். பலியானவர் பள்ளிவாசல்துறை பிரதேசத்தில் உள்ள இலங்கை வான்படை பயிற்சி மைதானத்தில் வெடிக்காத நிலையில் இருந்த ஒரு அடி நீளமான குண்டை கண்டெடுத்து அதனை இளநீர் உரிப்பதற்கு முற்பட்டவேளையிலேயே இந்த வெடிவிபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவத்தின் போது காயமடைந்த இருவர் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://meenakam.com/?p=3087
-
- 0 replies
- 464 views
-
-
Jul 22, 2010 / பகுதி: செய்தி / யாதவன் இலங்கை விவகாரம் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு நவநீதம்பிள்ளையின் அலுவலகத்தின் கீழ் இயங்கும் ஐ.நா இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பாக ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட நிபுணர்குழுவுக்கு தேவைப்படும் அதிகாரிகளை வழங்கும் விவகாரம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையின் அலுவலகத்தினால் கையாளப்படுவதாக ஐ.நா.பேச்சாளர் மார்ட்டின் நீசேர்கியை மேற்கோள் காட்டி இன்னர்சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இதேவேளை, நேபாளத்தில் தற்போது ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் பிரதிநிதியாக பணியாற்றி வந்த ரிச்சர்ட் பென்னெற் நிபுணர் குழுவின் தலைமை அதிகாரியாக பணியாற…
-
- 0 replies
- 327 views
-
-
இது யாழ்ப்பாணம் அல்ல ராமநாதபுரம்...! இது முல்லைத்தீவு அல்ல நாகப்பட்டினம்! 'தரை மேல் பிறக்க வைத்தான் எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்...' என்று எம்.ஜி.ஆர். பாடிய காலத்தில்கூட மீனவனுக்கு இத்தனை கஷ்டங்கள் இருந்ததில்லை. ஆனால், இப்போது அவர்களது வாழ்க்கையே கண்ணீரால் குளிப்பாட்டப்படுகிறது. நாட்டுக்கு ஓரமாகக் கடல் இருப்பதால், தங்கள் கஷ்ட நஷ்டங்கள் எதுவும் ஊருக்குத் தெரியாமல் வாழ்ந்து வந்த மீனவர்களின் கதறல்தான் இன்று நாட்டுக்குள் அதிகம் கேட்கிறது. சிங்களக் கடற்படையால் தொடர்ந்து தாக்கப்பட்டு வந்த சோகத் தொடர்கதையில் இதுவரை 450 இந்திய மீனவர்கள் இறந்துபோய் இருக்கிறார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்புகளை இழந்து வாழ வழியில்லாமல் நிற்கிறார்கள். சிங்களக் கடற் படையால் பாதிக்…
-
- 7 replies
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பாலகுமாரன், யோகி படுகொலை - உறுதிப்படுத்துகிறார் சிறிலங்கா அமைச்சர் [ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 03:26 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப்போரின் போது சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்த, விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் வே.பாலகுமாரன் மற்றும் மூத்த உறுப்பினர் யோகரட்ணம் யோகி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிறிலங்கா அமைச்சர் டியூ.குணசேகர இதனை மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு இறுதிப்போரின் போது விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரும், ஈரோஸ் அமைப்பின் முன்னாள் தலைவருமான க.வே. பாலகுமாரன் மற்றும் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், சமராய்வுப் பொறுப்பாளராக இருந்தவருமா…
-
- 29 replies
- 4.6k views
-
-
ஐநா செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழுவிற்கு எதுவித எல்லைகளும் இல்லை ‐ நியூயோர்க்கில் பணிகள் ஆரம்பம் ‐ 20 July 10 05:52 am (BST) ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தொடர்பி;ல் தமக்கு ஆலோசனை வழங்க, நியமித்துள்ள நிபுணர் குழு நேற்று ஜுலை 19ஆம் திகதி முதல் தடவையாக கூடியுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ஐநா அலுவலகத்தில் இந்தக்குழு முதற்தடவையாகக் கூடியதாக இன்னர் பிரஸ் சிற்றி செய்தி வெளியிட்டுள்ளது. இது நேற்றிலிருந்து நான்கு மாதத்திற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். அதற்கேற்ற வகையில் வகையில் இந்தக்குழுவின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. …
-
- 4 replies
- 1.1k views
-