Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்னியில் இடம் பெற்ற இறுதியுத்தத்தில் உயிர்தப்பி, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளவர்கள் சிலர் காணமற் போயுள்ளதாகத் தெரியவருகிறது. தமிழகத்தில் ஈழத்தமிழர்களை தங்கவைக்கபட்டுள்ள, அகதிகள் முகாமிலிருந்தே மர்மமான முறையில் இவர்கள் காணமல் போயுள்ளதாக மேலும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னியிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்று, தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் தஞ்சமடைந்திருந்து வைத்தியர் ஒருவர் அண்மையில் இவ்வாறு மர்மமான முறையில் காணமற் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இறுதி யுத்தத்தின் போது, இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான பல விவரங்கள் இவருக்கு தெரிந்திருந்தது எனவும், அதன் காரணமாகவே இவர் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.…

  2. வணக்கம், நாட்டிலுள்ள எமது தமிழ் மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கு தேவையான ஆலோசனைகள் கோரப்படுகின்றன பண ரீதியில் மட்டுமல்லாது வேறு எந்தெந்த வழிகளில் நாங்கள் எமது மாணவர்களின் கல்வி மேம்பட்டிற்காக புலம்பெயர் தமிழர்கள் உதவலாம் ? தற்கால தொழிநுட்பம், அனைவருக்கும் கணணி அறிவு போன்ற விடயங்களை எவ்வாறு எமது மாணவர்களுக்கு எடுத்துச் செல்வது ? இணையவழியில் பாடம் நடத்தும் முறை எந்தளவுக்கு வடக்கு கிழக்கில் சாத்தியப்படும் ? தயவு செய்து உங்களின் கல்வி அபிவிருத்தி தொடர்பான மேலான ஆலோசனைகளை முன்வைக்கவும்.சிறப்பான ஆலோசனைகள் மேலும் எங்களின் திட்டங்களையும் செயற்பாடுகளையும் மெருகூட்டும். நன்றி. கல்வி அபிவிருத்தியின் மூலமாகவே எமக்கான தேசத்தினை நாம் கட்டி எழு…

  3. எல்லாப் பழியையும் புலிகள் மீது போட்டு: தமிழரின் பலத்தை சிதைத்த மேற்குலகின் கையாலாகத்தனம் எல்லாப் பழியையும் புலிகள் மீது போட்டு அவர்களைத் தண்டித்தது மேற்குலகம். அந்தத் தண்டனையை புலிகள் இயக்கம் மட்டும் அனுபவிக்கவில்லை- தமிழ் மக்களையே பெரிதும் பாதித்தது. இன்றைக்கும் அதே மேற்குலகத்தால் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுகவும் முடியவில்லை -அதேவேளை தாம் விரும்பிய ஒருவரை ஆட்சியில் அமர்த்தவும் முடியவில்லை. என தாய் நாடு இணைய ஏடு தனது அரசியல் களம் பகுதியில் தெரிவித்துள்ளது மேற்குலகின் பின்புல ஆதரவுடன் இலங்கையின் ஜனாதிபதியாக முடிசூடிக் கொள்ள ஆசைப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகா- இப்போது காற்றோட்டமில்லாத அறையொன்றுக்குள் சிறைவைக்கப்பட்டுள்ளார். அவரைப் பதவியில்…

  4. மட்டக்களப்பில் இருந்து கடல்வழியாக அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 22 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர். மட்டக்களப்பு நாவலடி கரையோர பகுதியில் வீடு ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்ட 22 பேரும் சிலாபம், உடப்பு, மட்டக்களப்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸ் கூறியுள்ளனர். இவர்களுடன் வான் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. கடலோடிகளின் வரைபடங்கள், உலருணவுகள்,திசை அறி கருவிகள், எரிபொருட்கள்,மருந்துப்பொருட்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் கூறியுள்ளது. http://www.thinamurasam.com/

  5. விடுதலைப் புலிகளின் ஆயுதபல இழப்பிற்குப் பின்னர் தமிழ்த் தேசிய நிகழ்ச்சி நிரலை இந்தியா நோக்கி நகர்த்துவதற்குச் சிலர் முயற்சி செய்து வருகின்றனர். அதற்கு, 'இந்தியாவின் ஆதரவு இல்லாமல் எமது பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது' தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் தொடங்கிப் பலரும் நியாயம் கற்பிக்க முயன்று வருகின்றார்கள். 'இந்தியாவின் ஆதரவு இல்லாமல் எமது பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது' என்று அடித்துக் கூறி, தமிழீழ மக்களை மீண்டும் இந்தியப் புதைகுழிக்குள் கொண்டு செல்ல முயலும் இந்த இந்திய தாசர்களின் எண்ணக் கருத்துக்கள் உண்மையானவைதானா? இந்தியாவைத் தவிர்த்து ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாதா? என்று கேள்விகளுக்கு விடை தேட வேண்டிய அவசியம் எ…

  6. திருகோணமலையில் சம்பந்தனை தோற்கடிக்க அரசு திட்டம்! . .பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் இரா.சம்பந்தனை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கம் விசேட செயற்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாகவும் இந்த நடவடிக்கையில் சில பாதுகாப்பு அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் இவற்றில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் தலா ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுக்கு கிடைக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், தமிழ…

    • 8 replies
    • 1.3k views
  7. போரால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவின் வட பகுதியின் அபிவிருத்திப் பணிகளில் சீனா மிக முக்கிய பங்காளி என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தமிழர்களுக்கு இயங்கு விசையைக் கொடுக்கக் கூடிய வடக்குப் புனர்வாழ்வுத் திட்டங்களில் சீனப் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்து பாதுகாப்பு அமைச்சு நேற்று செவ்வாய்கிழமை விடுத்த அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளது. “வடக்கு அபிவிருத்தியில் பங்கெடுக்கும் முன்னணி அனைத்துலகப் பங்காளிகளில் ஒன்று சீனா. வடக்கின் புனர்வாழ்வு மற்றும் மீள் கட்டுமானப் பணிகளுக்கென 6,252 கூடாரங்களையும் 34 கனரக இயந்திரங்களையும் மேலும் பல உபகரணங்களையும் அது வழங்கி உள்ளது” என அமைச்சு அறிக்கை கூறுகின்றது. அதே வேளை, கண்ணி வெடிகளை அகற்றுவதற்குப் பயன்படு…

    • 1 reply
    • 730 views
  8. ஈழத்தமிழர், இலங்கைத் தமிழர், தாய்நாட்டுத் தமிழர்– இவர்களின் அரசியல் நிலை என்ன? ஈழத்தமிழரின் அரசியல் நிலைப்பாடும், அதனோடு சமாந்தரமாக வரப்போகும் பொதுத் தேர்தலும், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கக் காத்திருக்கும் எத்தனையோ அரசியற் கொக்குகளுக்கும், இனவாத நாரைகளுக்கும் கனவிலும் எதிர்பார்த்திருக்க முடியாத ஒரு தருணத்தை அளித்துள்ளன. இலங்கை பூராவும் தமிழரை ‘ஆதரிக்கும்’ தொனியில் வீட்டுக்கு வீடு ஒரு கட்சி உண்டாகுமா எனத் தோன்றுகிறது. ‘பனையால் விழுந்தவனை மாடேறி விழக்கியது’ போல சிங்கள பௌத்த தீவிரவாதத்தின் அணுகுமுறைகளும், ‘எரிகிற வீட்டில் புடுங்குவது ஆதாயம்’ எனச் சில சுயநலவாத தமிழ்த் துரோகக்கும்பல்களின் கூக்குரல்களும், பாராளுமன்ற இருக்கைகள் ஏதோ பரம்பரைச் சொத்து எனப் பாசாங்கு செய்யு…

  9. ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற்வர்களுக்கென தமிழரின் தாயகமான வடக்குக் கிழக்கில் நிரந்தர வதிவிடங்கலை அமைக்கும் பணியில் சிறிலங்கா அரசு மும்முரமாக இறங்கியிருக்கிறது. இதற்கென சீனா பெருமளவு நிதியுதவியைக் கடந்த ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது. தமிழர் தாயகத்தினைக் கூறுபோடவும், இன்னொரு சுதந்திரக் கிளர்ச்சியை அடக்கவுமென ராணுவ மயப்படுத்தப்படும் எமது பாரம்பரிய தாயகத்தில் இந்தியாவும் தன் பங்கிற்கு தொலைத்தொடர்பு மற்றும் இலத்திரணியல் வலையமைப்புக்கலை சிங்கல ராணுவத்திற்காக நிர்மாணித்து வருகிறது. அதற்கும் மேலதிகமாக சர்வதேச ரீதியிலிருந்து சிறிலங்கா மீது கொண்டுவரப்படும் அழுத்தங்கலைக் குறைப்பதிலும் இந்தியா பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறது. இவ்வாறு இந்தியாவும் சீனாவும் தமிழர் தாயகத்தில் அவர்கள…

  10. இலங்கை அகதிகளின் பேச்சாளர் கடத்தப்பட்டுள்ளதாக சந்தேகம் இந்தோனேஷியாவின் மெரேக் துறைமுகத்தில் உள்ள படகில் உள்ள இலங்கை அகதிகளின் பேச்சாளர் அலெக்ஸ் இந்தோனேஷிய அதிகாரிகளினால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 244 இலங்கை அகதிகளின் பேச்சாளராக முன்வந்த அவர் தமது கப்பலை சுற்றி ரோந்து வரும் படகுகள் தொடர்பிலான சர்ச்சைக்குரிய தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட்டு வந்தார்.இதனால்தான் அவர் இந்தோனேஷிய அதிகாரிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது . அவர் படகில் இருந்து தப்பிசென்றுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. எனினும் படகை சுற்றிலும் பாரிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரால் தப்பிச்செல்வதற்கு ஏதுவான சூழ்நிலை …

  11. புலம்பெயர் தமிழ் மக்களை புரிந்து கொள்ளும் மேற்குலகு புலம்பெயர் தமிழர்கள் பரந்து வாழும் தேசம் எங்கும் ஒரு நடவடிக்கை இப்போது மேற்கொள்ளப்பட்டு வரு கின்றது. இலங்கைத் தமிழர்களின் தனித்துவத்தை எடுத்து ரைக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான வாக் களிப்பே அந்த நடவடிக்கையாகும். இந்த வரிசையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன் னர் டென்மார்க்கில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்களிப்பில் பங்குகொண்ட இலங்கையரில் 98 வீதத் துக்கும் அதிகமானோர், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அங்கீகரித்துத் தமது முடிவை ஒப்புவித்திருக்கின்றார்கள் என்று கூறப்படுகின்றது. 1976 மே 14 ஆம் திகதி வட்டுக்கோட்டைத் தொகு தியில் உள்ள பண்ணாகத்தில் இடம்பெற்ற தமிழர் விடு தலைக் கூட்டணியின் முதலாவது தேசிய மாந…

    • 3 replies
    • 1.1k views
  12. கற்பிட்டி பிரதேசத்திலுள்ள 14 தீவுகள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விற்பனை! .முல்லைத்தீவின் கரையோரப்பிரதேசத்தின் முக்கிய இடங்கள் மற்றும் புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பிரதேசத்திலுள்ள 14 தீவுகள் ஆகியவற்றை சில வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விற்பனை செய்வதற்கு சிறிலங்கா அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 99 வருட குத்தகை அடிப்படையில் இந்தத் தீவுகள் விற்பனை செய்யப்படவுள்ளதுடன் இந்த தீவுகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் சுற்றுலா விடுதிகளை அமைப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விற்பனையின் பின்னணியில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலர் இருப்பதாகவும் பெரும் தரகு வர்த்தகம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது. முக்கியமான இந்தத…

    • 3 replies
    • 849 views
  13. புதன், மார்ச் 3, 2010 22:05 | நிருபர் கயல்விழி சிறிலங்காவிற்கு இராணுவத் தளபாடங்கள் அன்பளிப்பு. சிறிலங்கா இராணுவத்துக்கு சீன அரசாங்கம் இராணுவத் தளபாடங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்த இராணுவத் தளபாடங்களை இலங்கை அரசிடம் கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று காலை கொழும்பில் இலங்கை பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய உள்ளிட்ட உயர் இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர். நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்ற பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவிடம் இலங்கைக்கான சீனத் தூதுவர் யங் சூபிங், இராணுவ தளபாடங்களை சம்பிரதாயபூர்வமாக கையளித்தார். அதேவேளை சீனா வழங்கியுள்ள இராணுவ தளபாட உதவிகளில் …

    • 1 reply
    • 625 views
  14. தடுப்புக் காவலிலுள்ள போராளிகளை உடனடியாக விடுதலை செய்ய முடியாது - சிறீலங்கா அறிவிப்பு திகதி: 01.03.2010 // தமிழீழம் சிறீலங்கா படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 10,000 இற்கும் மேற்பட்ட போராளிகளை உடனடியாக விடுதலை செய்ய முடியாது என, சிறீலங்கா படையினர் உத்தியோகபூர்வமாக மீண்டும் அறிவித்துள்ளனர். போராளிகளையும், பொதுமக்களையும் சிறீலங்கா அரசு முற்றாக விடுதலை செய்ய வேண்டும் என்ற பன்னாட்டு சமூகத்தின் அழுத்தத்திற்கு அடி்பணியாத அரசு, அவ்வப்பொழுது ஒவ்வொரு காரணங்களைக்கூறி, இவர்களின் விடுதலையை இழுத்தடிப்புச் செய்து வருகின்றது. கைது செய்யப்பட்டுள்ள போராளிகள் அனைவருக்கும் புனர்வாழ்வு அளித்து, அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இன…

    • 18 replies
    • 1.5k views
  15. வன்னி யுத்தத்தின் பின்னர் கைது செய்யப்பட்டு வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் தொடர்ந்தும் இலங்கை படையினரால் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் அண்மையில் வவுனியா செட்டிக்குளம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, அதிக அளவிலான பெண்கள், தனிமையான இடம் ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இரண்டு மாற்றுடைகளே தரப்பட்டுள்ளன. இந்தநிலையில் அவர்களை தென்னிலங்கையின் காலி பூஸா முகாமிற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளுக்குள் திருமணம் முடித்தவர்களும் இதே மாதிரியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்…

  16. வவுனியா நெளுக்குளம் தொழில் நுட் பக் கல்லூரி தடுப்பு முகாமில் இருந்து 100 இளைஞர்கள் மேலதிக விசாரணை என்ற பெயரில் தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர். மேற்குறிப்பிட்ட தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில், 100 பேர் பூஸா தடுப்பு முகாமிற்கு கடந்த 26ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டனர். அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக வரு மாறு: கிளிநொச்சி35, யாழ்ப்பாணம்26, முல் லைத்தீவு13, வவுனியா15, மன்னார்07, மட்டக்களப்பு03, திருகோணமலை01. இவ்வாறு பூஸாவிற்கு அனுப்பப்பட் டவர்களின் விவரங்களை இன்று புதன் கிழமை முதல் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ்.அலுவலகத்தில் பார்வையி டலாம் என்று இணைப்பதிகாரி த.கனகராஜ் தெரிவித்தார். இதேவேளை …

  17. சிறுவர்களுக்கு புத்திமதி கூறிய குடும்பஸ்தர் தாக்கப்பட்டு யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் ஆறுகால் மடல் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த எஸ். சூரிய குமார் (வயது 46) என்பவரே காயமடைந்த வராவார். இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது.கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில் ஓட்டுமடம் சந்தியில் 9 வயது மதிக்கத்தக்கன்று சிறுவர்கள் புகைபிடித்துக் கொண்டிருந்தார்கள். இதனைக் கண்ட குடும்பஸ்தர் இந்த வய தில் புகைபிடிக்கக்கூடாது என புத்திமதி கூறியுள்ளார். இதனைக் கூறியபோது அந்த ன்று சிறுவர்களும் குடும்பஸ்தரைத் தாக்கியதுடன் தொலைபேசி மூலம் வேறு இளைஞர்களையும் அழைத்து தாக்கியுள்ளார்கள். சம்பவத்தில் படுகாயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டு சி…

    • 3 replies
    • 1.6k views
  18. "60 வருட காலமாக தொடரும் தமிழ் மக்க ளின் போராட்ட வரலாற்றில் நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் எமது மக்கள் ஒரு நியாயமான தீர்வை வலியுறுத்தும் வகையிலேயே வாக்களித்து வந்துள்ளனர்.'' இன்றைய கால கட்டத்தில் இப்பாராளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியமானது. ஆயு தப் போராட்டம் மெளனிக்கப்பட்ட நிலையில் சர் வதேசம், இந்தியா போன்றவை தெளிவான ஒரு நிலைப்பாட்டில் இருக்கின்றன. இந்த சூழலில் எமது நீண்ட போராட்டத்தின் கோரிக்கையை மிகவும் அழுத்திச் சொல்ல வேண்டிய நேரம் இது. எனது எமது கோரிக்கையை அழுத்திச் சொல்வதற்கான அதிகாரத்தை உங்களுடைய வாக்குப் பலத்தின் மூலம் மிகவும் உச்சமாக நீங்கள் வழங்க வேண்டும். அப்போது தான் நா·மும் உள்நாட்டிலும் இந்தியா உட்பட்ட சர்வதேசத்திற்கும் எமது கோரிக்கையை அழுத்தமாக துணிந்து தெரிவிக…

    • 33 replies
    • 2.2k views
  19. எமது கொள்கையுடன் ஏற்பட்ட இணைக்கப்பாடே த.தே.கூட்டமைப்பினர் இணையக் காரணம் எமது கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பிணர்கள் பலர் தெற்கின் தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து தமது அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையிலேயே எம்முடன் இணைந்து போட்டியிட முன்வந்துள்ளனர் என இடதுசாரி விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. அக் கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இடதுசாரி விடுதலை முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன மேற்படி தெரிவித்தார். தற்போது நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற பிரச்சனைகள் அனைத்தும் மறைக்கப்பட்டும், மறக்கப்பட்டும் உள்ளன …

    • 1 reply
    • 1.2k views
  20. தமிழ்க் கூட்டமைப்பில் இருந்திருந்தால் போராளிகளைக் காப்பாற்றியிருப்பேன் - தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் நேற்றுத் தெரிவிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நான் இருந்திருந்தால் விடுதலைப்புலிகளைக் காப் பாற்றியிருப்பேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பல கஷ்டங்கள், துன்பங்க ளிலிருந்து மீண்டு இன்றுதான் எட்டிப்பார்த்து மூச்சு விடக் கூடிய நிலையில் நிம்மதியைத் தேடி நிற்கும்போது; பல கட்சிகள்,சுயேட்சைக் குழுக்கள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இவ்வாறுகளத்தில் உள்ள சில கட்சிகள், சுயேட்சைகள் தவிர்ந்த ஏனையவற்றுக்கு ஏதோ ஒரு சக்தி தூண்டுதல் அளிப்பதாக அவர் கூறியுள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ். அலுவல…

    • 8 replies
    • 2.2k views
  21. புதிய அரசாங்கத்துடன் பேச்சு நடத்த தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்? நாடாளுமன்றத் தேர்தல் முடிபடைந்த பின்னர் புதிய அரசுடன் உயர்மட்டப் பேச்சுக்களை மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆவலாக உள்ளதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பேர்னாட் சாவேஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இடை நிறுத்தப்பட்ட ஜி.எஸ்.பி. பிளஸ் வர்த்தக வரிச்சலுகை தொடர்பில் இலங்கை அரசுடன் உயர் மட்டப்பேச்சுக்களை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் ஆவலாக உள்ளது. எனினும் நாடாளுமன்ற தேர்தலின் பின்னரே அது மேற்கொள்ளப்படும். வர்த்தக வரிச்சலுகை தொடர்பில் ஐரோப் பிய ஒன்றியம் இலங்கைக்கு விதித்த நிபந்தனைகள் தொடர்பில் இந்தப் பேச்சுக்களின் போது ஆராயப்படும். ஐரோப்பிய ஒ…

    • 0 replies
    • 1k views
  22. தாயகம் திரும்பும் தமிழர்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா திகதி: 24.02.2010 // தமிழீழம் பன்நாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் மக்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா புலனாய்வுப் படையினர் ஈடுபட்டுள்ளார்கள். சிறீலங்காவின் கட்டுநாயக்கா விமானநிலையத்தின் ஊடாக தாயகம் செல்லும் பன்நாட்டு மக்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் சிறீலங்காவின் புலனாய்வுத்துறையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்நாடுகளில் இருந்து தாயகம் செல்லும் மக்களை கண்காணித்து விசாரணைகளுக்கு உட்படுத்துவதுடன் பணம்பறிக்கும் நடவடிக்கையிலும் சிறீலங்காப்படையினரின் புலனாய்வு அணியினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பன்நாடுகளில் இருந்து வரும் தமிழ் மக்களிடம் பெருமளவான பண…

    • 25 replies
    • 1.7k views
  23. மேற்குலகில் புலிகளின் வலையமமைப்பை உடைக்கும் முயற்சி தோல்வி – கோட்டபாய தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பபை உடைக்கும் முயற்சியில் தமது அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளதாக ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் வெற்றிகரமான நடவடிக்கைகள் இலங்கைக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலாகவே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வலையமைப்பபை உடைப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு மேற்குலக நாடுகள் போதிய ஒத்துழைப்பை வழங்காதமையினால் தமது முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். சில நாடுகளில் விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறித்து தக…

    • 9 replies
    • 1.2k views
  24. இறுதி யுத்த உயிரிழப்புக்களை கூறவேண்டாம் என கட்டாயப்படுத்தப்பட்டேன் - கோர்டன் வைஸ் WRITTEN BY EDITOR TUESDAY, 02 MARCH 2010 13:51 இலங்கையின் இறுதிக்கட்ட போர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது எடுக்கப்பட்டதாக கூறி சேனல் 4 வெளியிட்ட வீடியோக்கள் தொடர்பில் கட்டாயமாக போர்க்குற்ற விசாரணை இடம்பெற வேண்டும் என ஐ.‍நாவின் இரு அதிகாரிகள் மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளனர். அவர்களில் ஒருவர், ஐ.நாவின் சட்டவிரோத படுகொலைகள் தொடர்பான விசேட‌ அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்டன்.‍அவர் சமீபத்தில் அவுஸ்த்திரேலியாவின் எஸ்.பி.எஸ் தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள செவ்வியில், சேனல் 4 வெளியிட்ட வீடியோ உண்மையானது எனவும் இது போல சரணடைய வந்த வி.புலிகள் சுடப்பட்டிருந்தால், அதுவும் பாரதூரமான விடயம் …

    • 3 replies
    • 975 views
  25. தன்னை முறையற்ற முறையில் பந்தை வீசுவதாகக் குற்றம் சாட்டியிருந்த அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஜோன் ஹொவார்டை தான் மன்னித்து விட்டதாகவும் எனினும் இந்தியக் துணைக் கண்டத்தைச் சேர்ந்தவர்களின் நன்மதிப்பை அவர் பெறுவது அவ்வளவு இலகுவானதல்ல என்றும் முத்தையா முரளிதரன் தெரிவித்திருக்கிறார். ஜோன் ஹொவார்ட் 2012ம் ஆண்டில் உலக கிறிக்கெற் சபைத் தலைவர் பதவியை பெற இருப்பது குறித்துக் கருத்துத் தெரிவித்த போதே முரளிதரன் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். முரளீதரன் பந்தை வீசியெறிவதாக அவுஸ்திரேலியாவில் வைத்து பல முறை அறிவிக்கப்பட்டிருந்ததும் அதைத் தொடர்ந்து 2004ம் ஆண்டில் முரளீதரன் அவுஸ்திரேலியத் தொடரைத் தவிர்த்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. SOURCE: http://eelamweb.com…

    • 5 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.