ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
இந்திய கடற்படைக்கு சொந்தமான INS Delhi எனும் யுத்த கப்பல் இன்று (01) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் 163 மீற்றர் நீளமுடையது. கப்பலில் வருகை தந்த கடற்படை வீரர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்லவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன், INS Delhi கப்பலை பார்வையிடுவதற்கு பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கப்பல் எதிர்வரும் 3 ஆம் திகதி வரையில் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும். இதன்போது, மேற்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படை கப்பலுடன் பயிற்சி நடவடிக்கைகளிலும் குறித்த கப்பல் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/271398
-
- 1 reply
- 209 views
- 1 follower
-
-
(நா.தனுஜா) இலங்கைக்கான இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சனிக்கிழமை (2) நாட்டை வந்தடைவார். இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் தொடர்புகள் குறித்து ஆராய்வதே அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயத்துக்கான நோக்கம் என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. நாட்டில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (3) வரை தங்கியிருக்கும் அவர் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவிருப்பதுடன், இதன்போது இலங்கையுடனான இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்புத் தொடர்புகள் குறித்து விரிவாக ஆராயவுள்ளார். அதுமாத்திரமன்றி, இந்திய பாதுகா…
-
- 9 replies
- 762 views
- 1 follower
-
-
இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி ஆனைவிழுந்தான் பிரதேச மக்கள் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைவிழுந்தான் பிரதேச மக்கள் சிலர் இன்றைய தினம் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி நகரப் பகுதியில் அமைந்துள்ள 55 ஆவது படைப்பிரிவின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், தமது பகுதியில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக்கூறி கவனயிர்ப்பில் ஈடுபட்டனர். தமது பகுதியில் அனைத்து விடயங்களிலும் இராணுவம் ஒத்தாசை புரிவதாகவும் தற்பொழுது ஏற்பட்டுள்ள வறட்சியான நிலைமையிலும் தங்களுக்கான குடிநீர் விநியோகத்தினையும் இராணுவத்தினரே மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர். தமது பகுதிகளில் நடைபெறும் எந்த ஒரு நிகழ…
-
- 8 replies
- 1k views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 01 SEP, 2023 | 03:33 PM இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை (01) காலை 10.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்ட நிறைவில் கடற்தொழிலாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு யாழ் மாவட்ட செயலரிடம் ஒப்படைக்கப்பட்டது. குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்டத்தில் 23,154 கடற்றொழில் புரியும் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் யாழ் மாவட்ட கடற் பகுதியில் …
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
31 AUG, 2023 | 08:36 PM (நா.தனுஜா) வட- கிழக்கில் குருந்தூர், தையிட்டி, செட்டிக்குளம், நாவற்குழி போன்ற இடங்களில் அரச அனுசரணையுடன் காணி அபகரிப்புக்கள் இடம்பெறுகின்றன என்ற உண்மை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கையின் ஊடாக வெளிக்கொணரப்படவேண்டும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரையான ஒருமாதகாலத்துக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்த…
-
- 0 replies
- 301 views
- 1 follower
-
-
31 AUG, 2023 | 10:38 PM எரிபொருள் விலைகள் இன்று வியாழக்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்ற நிலையில், அதன் புதிய விலை 361 ரூபாவாகும். 95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 42 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்ற நிலையில் அதன் புதிய விலை 417 ரூபாவாகும். ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்ற நிலையில், அதன் புதிய விலை 341 ரூபாவாகும். சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 01 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்ற நிலையில், அதன் புதிய வி…
-
- 2 replies
- 506 views
- 1 follower
-
-
கஜேந்திரகுமாருக்கு எதிரானஅச்சுறுத்தல்கள் - மனித உரிமை ஆணையாளர் கவனம் செலுத்தவேண்டும் என உருத்திரகுமாரன் வேண்டுகோள் 01 Sep, 2023 | 10:36 AM இலங்கை பாராளுமன்றத்தின் தமிழ் உறுப்பினரொருவருக்கெதிரான அவரது அரசியல் செயற்பாடுகள் காரணமான கடும் அச்சுறுத்தலொன்று தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் உயர்ஸ்தானிகருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இலங்கை பாராளுமன்றத்தின் தமிழ் உறுப்பினரொருவருக்கெதிரான அண்மைய அச்சுறுத்தலை உங்கள் கவனத்துக்கு கொண்டு வரும் வகையில் நான் இதை எழுதுகிறேன். வட மாகாணத்திலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரக…
-
- 0 replies
- 317 views
-
-
யாழில் கைத்தொழில் கண்காட்சி ஆரம்பம் ! யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் கைத்தொழில் கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது. கைத்தொழில் அமைச்சும், கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து இன்று முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளன. குறித்த கண்காட்சி கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ்பத்திரனவின் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் கலாசார மையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது, முதலீடு, வர்த்தக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தல்களும் வழங்கப்படவுள்ளதாக, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பொறியியல்துறை பணிப்பாளர் நிஷாந்த வீரதுங்க தெரிவித்தார். வட மாகாணம் பாரிய நிலப்பரப்ப…
-
- 5 replies
- 563 views
- 1 follower
-
-
37 கண் சத்திரசிகிச்சை: 2 பேர் முற்றாக பார்வையை இழந்தனர் ரஞ்சித் ராஜபக்ஷ நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நடத்தப்பட்ட 37 கண் சத்திரசிகிச்சைகளில் 17 பேர் பகுதியளவில் பார்வையிழந்துள்ளதுடன் இருவர் பூரண பார்வை இழந்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வைத்தியசாலையில் வியாழக்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது கண் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் கனிஷ்க மேற்குறிப்பிட்ட விடயத்தை குறிப்பிட்டார். சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வந்தாலும் உண்மை நிலவரத்தை இங்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற அவர், கண்களுக்கு செலுத்தப்பட்ட மருந்துகள் வைத்த…
-
- 1 reply
- 290 views
-
-
15 ஏக்கர் அரச காணியை இரவோடு இரவாக துப்பரவு செய்ய முயன்ற நபர்கள் adminSeptember 1, 2023 மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் குளம் பகுதியில் சுமார் 15 ஏக்கர் அரச காணியை சட்ட விரோதமான முறையில் இனம் தெரியாத நபர்கள் நேற்று வியாழக்கிழமை (31) இரவு ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி துப்பரவு செய்த நிலையில், காவல்துறையினா் மற்றும் இராணுவத்தினர் குறித்த பகுதிக்குச் சென்ற நிலையில் ,இயந்திரங்கள் கைவிட்ட நிலையில் தப்பிச் சென்றுள்ளனர். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் குளம் பகுதியில் உள்ள அரச காணியை இனம் தெரியாத நபர்கள் சிலர் ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி காடுகளை அழித்து காணியை துப்புரவு செய்து கொண்டு இருப்பதாக இலுப்பைக்கடவை காவல்த…
-
- 4 replies
- 767 views
-
-
அமெரிக்க தூதுவர் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுகின்றார் - வெளிவிவகார அமைச்சிடம் அமைப்புகள் கடிதம் 31 AUG, 2023 | 05:38 PM இலங்கையில் அமெரிக்க தூதுவரின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவிக்கும் கடிதமொன்றை தேசிய அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலர் வெளிவிவகார அமைச்சிடம் கையளித்துள்ளனர். தேசிய அமைப்புகளின் பிரதிநிதிகளே இந்த கடிதத்தை வெளிவிவகார அமைச்சிடம் கையளித்துள்ளனர். அமெரிக்க தூதுவர் அதிகளவில் இலங்கையின் உள்விவகாரங்களில் செல்வாக்கு செலுத்துகின்றார் எனவும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அரசியல் செயற்பாடுகள் அமைந்துள்ளன எனவும் தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் நுவான் பலண்டுவாவ தெரி…
-
- 4 replies
- 436 views
-
-
31 AUG, 2023 | 05:27 PM குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது நிர்மானப் பணிகள் இடம்பெற்றுள்ளன, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளைகளை மதித்து நடைமுறைப்படுத்தவில்லை என முல்லைத்தீவு நீதிமன்று கட்டளை வழங்கியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலே அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை உள்ளிட்ட கட்டுமான பணிகள் தொடர்பிலான வழக்கின் கட்டளைக்காக இன்று வியாழக்கிழமை (31) திகதி யிடப்பட்டிருந்தது. அந்த வகையிலே இன்றைய தினம் (31) குருந்தூர் மலை தொடர்பிலான AR/673/18 என்கின்ற வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. …
-
- 11 replies
- 633 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 31 AUG, 2023 | 03:09 PM திருகோணமலை வெருகல் - நாதனோடை பகுதியில் மணல் அகழ்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெருகல் மக்கள் இன்று வியாழக்கிழமை (31) நாதனோடை பகுதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். வெருகல் - நாதனோடை பகுதியில் 1000 கியூப் மணல் அகழ்வதற்கான அனுமதி தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவ்விடத்தில் மணல் அகழப்பட்டால் அது வெருகல் ஆற்றின் அணைக்கட்டை உடைக்கும் அபாயம் இருப்பதாகவும், இதனால் மக்களுடைய உடமைகள், வாழ்வாதாரம் என்பன பாதிக்கும் என்பதனால் அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினமும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 28…
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
ஜனாதிபதி தெரிவிக்கும் நகைச்சுவையான கருத்தை நிறுத்தவும் இந்த நாட்டில் காணாமல் போனவர்கள் என்று ஒன்று இல்லை எனவும் அவர்கள் வெளிநாடுகளில் இருப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். எனவே நீங்கள் ஜனாதிபதி தானே அவர்களை வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரமுடியும், இவ்வாறான நகைச்சுவையை நிறுத்துங்கள். காணாமல் போனவர்களுக்கு இந்த நாட்டில் என்றுமே நீதியை பெற்றுக் கொள்ள முடியாது என சந்தியா பிரதீப் எக்கினா கொட தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (30) சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தையிட்டு இடம்பெற்று சர்வதேசமே எமக்கு நீதிவேண்டும் என கோரிய ஆர்பாட்ட ஊர்வலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போன…
-
- 1 reply
- 572 views
-
-
காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மூடப்படுகிறது! 31 AUG, 2023 | 03:08 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காத்தான்குடி புராதன நூதனசாலை தற்போது உரிய பராமரிப்பின்றி, குப்பைகள் தேங்கிய நிலையில் காணப்படுகிறது. இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை, வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இந்த பூர்வீக நூதனசாலைக்கு நாடெங்கிலும் இருந்து பெருமளவினர் அன்றாடம் சென்று பார்வையிடுகின்றனர். இந்த நூதனசாலையை பார்வையிடுபவர்களுக்கான நுழைவுச்சீட்டுகளும் அங்கே வழங்கப்படுகின்றன. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் இலங்கை முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட ஆன்மிகம், அறிவியல், வர்த்தகம், வழிபாடு…
-
- 9 replies
- 713 views
-
-
இந்தியாவின் அதானி நிறுவனத்திடம் மேலும் ஒரு திட்டம் கையளிக்கப்படவுள்ளது! written by adminAugust 31, 2023 மன்னாரிலும் கிளிநொச்சி – பூநகரியிலும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டமொன்றையும் மின் விநியோகக் கட்டமைப்பொன்றையும் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக, அண்மையில் தயாரிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரமொன்றை மேற்கோள்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார். 442 மில்லியன் டொலர் முதலீட்டில் மன்னாரிலும் பூநகரியிலும் 500 மெகாவாட் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்களை அமைப்பதற்காக இலங்கைக்கும் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை 2022 ஆம் ஆண்…
-
- 0 replies
- 435 views
-
-
பௌத்த மதத்திற்கே முன்னுரிமை வழங்குவேன் : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க! பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க தேரர்களான, ஆணமடுவே தம்மதிஸ்ஸி தேரர் மற்றும் வெடருவே உபாலி தேரர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், “நாட்டின் பொருளாதார நிலைமையை பார்க்கும் போது, வங்குரோத்து நாடு என்ற நிலையிலிருந்து நாம் மீண்டு வருகிறோம். வெளிநாட்டு கடன் நீடிப்பு வேலைத்திட்டத்தின் தொடர்ச்சியாக நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமான வேலைத்திட்டங்கள் பலவற்றையும் ஆரம்பித்துள்…
-
- 0 replies
- 525 views
-
-
31 AUG, 2023 | 09:11 AM 28 ஆம் திகதி முதல் இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்கின்றமையால் நாட்டின் பலப் பிரதேசங்களில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும், எதிர்வரும் 07 ஆம் திகதி வரை இந்த காலநிலை தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று வியாழக்கிழமை (31) மதியம் 12.11 மணியளவில் அடப்பங்குளம் (வவுனியா மாவட்டம்), தூதுவெவ (அநுராதபுரம் மாவட்டம்) மற்றும் நிலாவெளி (திருகோணமலை மாவட்டம்) ஆகிய பிரதேசங்களில் சூரியனின் உச்சம் மிகவும் அதிகமாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த நாட்களில் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்…
-
- 0 replies
- 338 views
- 1 follower
-
-
30 AUG, 2023 | 09:07 PM (நா.தனுஜா) இலங்கை படையினருக்கு அவசியமான பயிற்சிகளை வழங்குவதில் இந்தியா எப்போதும் மிகவலுவான உந்துசக்தியாகத் திகழ்வதாகப் பாதுகாப்புச்செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கும் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான தொடர்புகளின் 50 வருடப்பூர்த்தியைக் கொண்டாடும் வகையிலான நிகழ்வு கடந்த திங்கட்கிழமை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்புச்செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் இருநாடுகளினதும் இராணுவத்தினருக்கு இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு என்பன நினைவு…
-
- 2 replies
- 297 views
- 1 follower
-
-
30 AUG, 2023 | 09:46 PM நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பெரும் சேவையாற்றிவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் ஆனமடுவே தம்மதிஸ்ஸி தேரர் தெரிவித்தார். துரதிஷ்டவசமான நெருக்கடிக்கு முகம்கொடுத்த இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி முன்னெடுக்கும் முயற்சிகள் தெடர்பில் சிலருக்கு புரிதல் இல்லாமல் இருப்பது கவலைக்குரியதாகும் என்றும், நாட்டிற்காக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்திற்கு மகா சங்கத்தினரின் ஆசிர்வாதம் உறுதியாக கிட்டும் என்றும் அவர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 224 views
- 1 follower
-
-
இலங்கையின் எரிபொருள் விநியோக சந்தையில் புதிதாக இணைந்த சினோபெக் (Sinopec) நிறுவனம் தனது முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகளை நேற்று முதல் (30) ஆரம்பித்துள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கி வந்த மத்தேகொட எரிபொருள் நிரப்பு நிலையம் நேற்று முதல் Sinopec என பெயர் மாற்றப்பட்டுள்ளது. எரிபொருள் இறக்குமதி கடந்த மே மாதம் 22 ஆம் திகதி நாட்டின் எரிபொருள் விநியோக சந்தையில் பிரவேசிப்பதற்கான ஒப்பந்தத்தில் சீனாவின் Sinopec நிறுவனம் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, 20 ஆண்டுகளுக்கு எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்க Sinopec நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிபெட்கோ மற்றும் ஐ.ஓ.சியின் விலைக்க…
-
- 23 replies
- 1.4k views
- 2 followers
-
-
சீனக்கடன்களை மீளச்செலுத்துவதற்கே அமெரிக்க நிதியுதவியைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் : அதனை தமது மக்கள் விரும்பமாட்டார்கள் என்கிறார் அமெரிக்க செனெட் சபை உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலென் 30 AUG, 2023 | 09:03 PM (நா.தனுஜா) இலங்கையுடனான கடன்மறுசீரமைப்புக்கு சீனா இணக்கம் தெரிவிக்காமை பிரச்சினைக்குரிய விடயமாக இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்க செனெட் சபை உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலென், எனவே இலங்கைக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்கும் பட்சத்தில், அந்த நிதியை சீனாவின் கடன்களை மீளச்செலுத்துவதற்கே பயன்படுத்தவேண்டியிருக்கும் என்றும் அதனை அமெரிக்க மக்கள் விரும்பமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்ற…
-
- 0 replies
- 177 views
-
-
Published By: RAJEEBAN 30 AUG, 2023 | 06:11 PM வலிந்து காணாமலாக்கப்படுதல் குறித்த பாரம்பரியத்திற்கு தீர்வை காண்பது வெறுமனே நீதியுடன் தொடர்புபட்ட விடயம் மாத்திரமில்லை முன்னேற்றம் பேண்தகு அபிவிருத்தி போன்ற பாதையை இலங்கை உருவாக்குவதற்கும் மிகவும் அவசியமானது என ஐக்கியநாடுகளின் இலங்கைக்கான நிரந்தரவதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ரூ பிரான்ஸ் தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உலகம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை குறிக்கும் நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை இந்த ஈவிரக்கமற்ற குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் - தங்கள் அன்புக்குரியவர்கள் எப்படி உள்ளனர் அவர்களுக்கு என்ன நடந்தது என…
-
- 5 replies
- 305 views
- 1 follower
-
-
30 AUG, 2023 | 01:22 PM வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற சிறுதொழில் முயற்சியாளர்களுக்கென ஒரு சபை அமைக்கப்பட்டு, அது அங்கீகாரம் பெறப்பட்ட ஒரு நிறுவனமாக மாற்றப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். 'யாழ் முயற்சியாளர் –2023' விற்பனைக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை (29) ஆரம்பமானது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே மாவட்ட செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கூறுகையில், கடந்த மூன்று மாதங்களாக இந்த சுற்றாடலிலே பிரதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான ஒரு சந்தைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. …
-
- 1 reply
- 308 views
- 1 follower
-
-
இலங்கையின் இரண்டு நீதிமன்றங்களினால் விமானப் பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடியகல்வு கருமபீடத்திற்கு தெரியாமல், பதுங்கி இந்தியாவிற்கு தப்பிச் சென்றிருந்த நிலையில், குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் மீண்டும் அவரை அழைத்து வந்துள்ளனர். அவர் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 45 வயதானவரே இவ்வாறு மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக யாழ்.மாவட்டத்தின் காங்கேசன்முறை மற்றும் மல்லாகம் நீதவான் நீதிமன்றங்களால் விமான பயணத் தடைகள் விதிக்கப்பட்டு, அவர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடைசெய்திருந்தது. இருந்த போதிலும், செவ்வாய்க்கிழமை (29) இரவு 11.45 மணியளவில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான…
-
- 0 replies
- 307 views
-