ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142976 topics in this forum
-
சரத் பொன்சேகாவின் விடுதலை வேண்டி போதி பூஜைகளை நடத்தும் பௌத்த விகாரைகள் மீதும் மகிந்த சகோதரர்கள் சீற்றம் கொண்டுள்ளதாகவும் அவற்றின் மீது தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள காவற்துறையினரை ஏவி விட்டுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு போதி பூஜைகளை நடத்திய கொட்டாஞ்சேனையிலுள்ள பௌத்த விகாரைக்குள் நேற்றைய தினம் பிரவேசித்த காவற்துறையினர் கடும் தேடுதலை நடத்தியதாகவும் அங்கு ஆயுதங்கள் பதுக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்தே தாம் அங்கு வந்ததாக அவர்கள் குறிப்பிட்டதாகவும் விகாரையின் பிரதம குரு தெரிவித்துள்ளார். SOURCE: http://www.eelamweb.com
-
- 1 reply
- 708 views
-
-
கிளி நொச்சி மாவட்டம், ஸ்கந்தபுரம், அக்கராயன் பகுதிகளில் பொது மக்களின் வீடுகளை உடைத்து அந்த ஓடுகள், கற்கள், மரங்களையே புதிய ஒப்பந்த கட்டிடங்களுக்கு பாவித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் உள்ள ஒப்பந்த வேலைகளை சிங்களவர்கள், சிங்கள ப்படைகளின் உறவினர்களே மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் புதிதாக பொருட்களை கொண்டுவராது அங்கு இருக்கின்ற பொது மக்களின் வீடுகளை உடைத்தே கட்டட வேலைகளை செய்து வருகின்றனர். இவ்வாறு ஸ்கந்த புரம் பகுதியில் கிராம சேவகர் மகேந்திரனின் வீடு, மருத்துவர் கோபால பிள்ளையின் வீடு ஆகியனவும் உடைக்கப்பட்ட வீடுகளில் அடங்கும். அரச அலுவலர்களுக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களின் வீடுகளுக்கு என்ன நிலை???? http://www.varudal.com
-
- 1 reply
- 673 views
-
-
தமக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாகப் போட்டியிடுவதற்கு அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் திருகோணமலை மாவட்டத்தில் சம்பந்தனை எதிர்த்துப் போட்டியிட முன்னாள் டெலோ இயக்க முக்கியஸ்தரும் மகிந்தவிற்கு ஆதரவாகச் செயற்பட்டு வருபவருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தயாராகி வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர் சுயேச்சையாகவோ அல்லது அரசாங்கத்துடன் இணைந்தோ போட்டியிடலாம் என நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் கிடைத்துள்ளன. சிங்களக் குடியேற்றங்கள் காரணமாக தமிழ் பிரதிநிதித்துவத்தைத் தக்க வைத்துக் கொள்வதே சிரமமான நிலையில் இது போன்ற செயற்பாடுகள் தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்படுவதற்கே காரணமாகும் என திருமலை மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். Source: http…
-
- 0 replies
- 1k views
-
-
யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் சற்று நேரத்திற்கு முன்னர் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் இரு மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தோர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துவரப்படுவதாக எமது பிராந்திய செய்டதியாளர் தெரிவித்தார். கொழும்புத்துறை இந்துக் கல்லூரியில் இந்தச் சமப்வம் இடம்பெற்றுள்ளது.அவ்வளாகத்தில் காணப்பட்ட பந்து போன்ற ஒன்றை எடுத்து பாடசாலை மாணவர்கள் விளையாடியபோது அது வெடித்துள்ளது. இதில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் வரை காயமடைந்துள்ளனர். மேலதிக விபரங்கள் விரைவில் http://www.thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=105:2010-02-15-12-29-13&catid=34:…
-
- 1 reply
- 590 views
-
-
கொழும்பு,பெப். 15 இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, இராணுவ நீதிமன்ற விசா ரணையை எதிர்நோக்கி யுள்ள முன்னாள் இராணு வத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ராஜ பக்ஷ குடும்பத்தினரிடம் கெஞ்சப்போவதில்லை என பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகா பதவி வகிப்பதை ராஜபக்ஷ குடும் பத்தினர் விரும்பாததே அவர்களுக்கும் முன்னாள் இராணுவத் தளபதிக்கும் இடை யிலான மனக்கசப்பிற்கு முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரின் "ஸ்ரெய்ட் ரைம்ஸுக்கு' அளித்துள்ள பேட்டியில் இதனைக் குறிப்பிட் டுள்ள அனோமா பொன்சேகா அப்பேட்டி யில் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு: கேள்வி: ராஜபக்ஷ குடும்பத்தின ருக்கும் உங்களுக்கும் இடையிலான உற வில் எப்படி…
-
- 0 replies
- 596 views
-
-
பொன்சேகாவின் ஏழு கோடி ரூபா பணம் காவல்துறையினரால் மீட்பு? . .தனது உறவினர் ஒருவரின் பெயரின் கீழ் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் சரத் பொன்சேகா வைத்திருந்த ஏழு கோடி ரூபாவை சிறிலங்கா காவல்துறையினர் மீட்டுள்ளனர் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. சரத் பொன்சேகாவின் மகளின் கணவரது தாயாரது பெயரின் கீழ் இந்த பணம் தனியார் வங்கி ஒன்றில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் இந்த பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்கப்பட்ட பணத்தின் தொகை தற்போதைக்கு வெளியிடப்படமாட்டாது என்றும் இது தொடர்பாக அறிவிப்பதற்கு விரைவில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்று நடத்தப்படும் என்றும் காவல்தறையினரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது…
-
- 2 replies
- 991 views
-
-
இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜி.எஸ்.பி சலுகையை தற்காலிகமாக ரத்துச் செய்வதாக ஐரோப்பிய ஒன்றியம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை நன்கு ஆராய்ந்த பின்னரே தாம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை தற்காலிகமானது என்றும் மனித உரிமை குறித்த விடயங்களில் சிறிலங்கா அரசாங்கம் திருப்திகரமான விதத்தில் செயற்படும் பட்சத்தில் தமது நிலை மீளாய்வு செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை பிரசல்சில் உள்ள இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்கவும் உறுதிப்பட…
-
- 1 reply
- 631 views
-
-
“விடுதலைப்புலிகள் அமைப்பினை முற்று முழுதாக அழித்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் கூறிக் கொள்கின்ற போதிலும், அரசாங்கத்திற்கும் அதன் பாதுகாப்புப் படைகளுக்கும், இதுவிடயத்தில் கலக்கம் இருப்பதை காணக்கூடியதாகவுள்ளது. தமிழர்களை ஆயுதப்போராட்டதில் குதிக்க வேண்டிய நிலைக்கு தள்ளிய அடிப்படை பிரச்சனைகளான, நாட்டின் வளங்களை சமமாகப் பங்கீடு செய்யாமை, கல்வி, வேலை வாய்ப்பில் காட்டப்படும் பாரபட்சம், போதிய பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. இப்பிரச்சனைகள் தீரக்கப்படாவிடத்து, விடுதலைப்புலிகள் அமைப்பு மீளக்கட்டமைக்கப்படும் சாத்தியம் இருக்கிறது” என அமெரிக்கப் பேராசிரியர் அடேல் பார்க்கர் குறிப்பிட்டிருக்கிறார். 2001-2002 ஆண்டுகள…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஜெனரல் சரத் பொன்சேக்கா பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு தடுத்துவைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது புலம்பெயர் இலங்கைவாழ் சிங்களவர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனிடையே இவ்வாறான ஒரு ஆர்ப்பாட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக நடத்தப்பட்டுள்ளது. இலங்கை ஜனநாயகத்திற்கான அமெரிக்க வாழ் இலங்கையர்கள் என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். http://www.thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=106:2010-02-15-12-50-50&catid=34:2010-02-09-12-34-07&Itemid=53
-
- 3 replies
- 722 views
-
-
தேர்தலில் தனித்து போட்டி; முஸ்லிம் காங்கிரசுக்கு தார்மீக ஆதரவு: தமிழர் கூட்டமைப்பு முடிவு [ ஞாயிற்றுக்கிழமை, 14 பெப்ரவரி 2010, 23:55 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் அரசியல் வேட்கையையும் தனித்துவத்தையும் வெளிக்காட்டும் வகையில் தனித்துப் போட்டியிட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. தற்போது கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்த தகவல்களைத் தெரிவித்துள்ளார். …
-
- 9 replies
- 808 views
-
-
அமெரிக்காவிடம் பொன்சேகா சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணம் ஒன்றை கையளித்தார்: அதிரடி தகவல் . .சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கடந்த ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி அமெரிக்காவுக்கு சென்றிருந்த சமயம் அந்நாட்டு இராஜாங்க திணைக்களத்திற்கு சென்று சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் உட்பட இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை அமெரிக்க அதிகாரிகளிடம் சமர்ப்பித்திருந்தார் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்கள வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் கசிந்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி சரத் பொன்சேகா தனது அமெரிக்க பிரஜா உரிமைக்கான பத்திரத்தை காலநீடிப்பு செய்வதற்காக அங்கு சென்றிருந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டி…
-
- 6 replies
- 1.5k views
-
-
புதிய அரசியல் கூட்டணிக்கு ஜெனரல் சரத் பொன்சேகா தலைமை வகிப்பார்: � ஜே.வி.பி அறிவிப்பு. [sunday, 2010-02-14 15:15:51] புதிய அரசியல் கூட்டணிக்கு ஜெனரல் சரத் பொன்சேகா தலைமை தாங்குவார் என ஜே.வி.பி கட்சி அறிவித்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்படும் எனவும், இந்த கூட்டமைப்பிற்கு ஜெனரல் சரத் பொன்சேகா தலைமை தாங்குவார் எனவும் குறிப்பிடப்படுகிறது. ஐக்கிய தேசிய முன்னணியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததனைத் தொடர்ந்து புதிய கூட்டணி ஒன்றின் மூலம் தேர்தலில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாக ஜே.வி.பி கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். புதிய கூட்டணிக்கான பெயர் மற்றும் சின்னம் இதுவரையில் …
-
- 4 replies
- 638 views
-
-
ராணுவப் போலீசால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிக்குமாறு இலங்கையில் பல ஆர்ப்பாட்ட பேரணிகள் நடந்துவரும் நிலையில் கனடா ஒட்டாவாவிலும் ஆர்பாட்டம் ஒன்று நடந்துள்ளது. அங்கு வசித்துவரும் இலங்கையர்கள் ஒன்றுகூடி நேற்று முந்தினம் வெள்ளிக்கிழமை இந்த அமைதிப் பேரணியை நடத்தியுள்ளனர். இந்த பேரணியை ஒரு குறிப்பிட்ட அமைப்பும் ஏற்பாடு செய்யவில்லை. இந்தப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் அனைவரினது கையொப்பங்களும் அடங்கிய மனுவொன்று இலங்கை தூதரக பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முகவரியிடப்பட்ட இந்த மனுவில், சரத் பொன்சேகாவின் கைதுக்கு தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளதோடு அவரை விடுவிக்குமாறும் கேட்கப்பட்டு…
-
- 10 replies
- 1.4k views
-
-
அமெரிக்காவைச் சீண்டும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அரசாங்கம் கடும் விசனம் இலங்கை அரசாங்கத்தின் அமெரிக்காவைச் சீண்டும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அரசாங்கம் கடும் விசனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை நேரில் அழைத்து தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை இராஜாங்க செயலாளர் ரோபேர்ட பிளே தமது அரசாங்கத்தின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது ரோபேர்ட் பிளேன் அமெரிக்க அரசாங்கத்தின் கண்டனத்தை எழுத்த மூலம் இலங்கை தூதுவரிடம் கையித்து அதனை ஜனாதிபதியிடம் சமர்பிக்குமாறும் கோரியுள்ளார். அமெரிக்க பிரஜையான சரத் பொன்சேகாவின் கைது மற்றும் சரத் பொன்சேகாவின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க …
-
- 5 replies
- 1.2k views
-
-
வவுனியாவில் உள்ள தமிழ் மாணவர்கள் மரங்களின் கீழிருந்து படிக்கும் காட்சி புலம்பெயர் தமிழர்களாகிய நாம், எம் மக்கள் மூச்சு விடக்கூடிய ஒரு சூழலைக் கூட தோற்றுவிக்காது,அவர்களின் அடிப்படைக் கட்டுமானங்களை கட்டியெழுப்ப விருப்பின்றி வசதியாக இருந்து கொண்டு இன்னும் வெற்று வீரம் பேசிக்கொண்டே இருக்கப் போகின்றோமா? நன்றி: டெய்லி மிரர்
-
- 6 replies
- 754 views
-
-
திங்கட்கிழமை, 15, பிப்ரவரி 2010 (13:13 IST) இலங்கை பிரதமர் தேர்தல் பொன்சேகா மனைவி போட்டி? இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்ட ராணுவ முன்னாள் தலைமை தளபதி சரத்பொன்சேகா தோல்வி அடைந்தார். இதை தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக இலங்கை ராணுவ போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இலங்கையில் வருகிற ஏப்ரல் மாதம் பராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், வெற்றி பெற்று பிரதமர் பதவியை பிடிக்க எதிர்க்கட்சிகள் தீவிரமாக உள்ளன. இந்த தேர்தலில் சரத் பொன்சேகாவின் மீது ராஜபக்சே அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மக்களிடத்தில் எடுத்து கூறி வாக்குகளை பெற திட்டமிட்டுள்ளனர். அதற்கு சரியான வேட்பாளர் பொன்சேக…
-
- 1 reply
- 819 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முறை பொதுத் தேர்தலிலும் வீட்டுச் சின்னத்தில் தனித்தே போட்டியிடும் என அதன் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமது கட்சி வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் வேலைகள் ஆரம்பித்து விட்டதாகவும் இந்த வேலைகள் அடுத்த வாரமளவில் பூர்த்தியாகும் எனவும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை இணைத்துக் கொண்டு கூட்டாகப் போட்டியிடலாம் என உடகங்கள் ஹேஸ்யம் தெரிவித்திருந்த நிலையிலேயே சம்பந்தனின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. SOURCE: http://www.eelamweb.com/
-
- 9 replies
- 942 views
-
-
தமிழ் மக்களின் கலாச்சாரப் பூமியாகவும் சுற்றுலா பூமியாகவும் விளங்கும் நிலாவெளிப் பகுதியில் பிரமாண்டமான இராணுவ குடியிருப்பொன்றை நிறுவும் பணி ஆரம்பிக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கான நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. விடுதலைப் புலிகள் இலங்கையில் அழிக்கப்பட்டு விட்டாலும் வெளிநாடுகளில் வாழ்பவர்களால் அதனை உயிர்ப்பிக்கும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் இதனைத் தடுப்பதற்கு இது போன்ற இராணுவத்தினரின் பிரசன்னம் அவசியமாகின்றது எனவும் இராணுவத் தளபதி ஜகத் பாலசூரியா குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் பாரம்பரியமான தமிழ் கிராமங்கள் பல சிங்கள மயமாக்கப்பட்டுள்ள நிலையில் நிலாவெளியும் சிங்கள மயமாக்கப்படப் போகிறதென திருமலை மக்கள் அச்சம் த…
-
- 2 replies
- 707 views
-
-
நவநீதம் பிள்ளையின் கோரிக்கைக்கு அரசாங்கத்தினால் பதிலளிக்க முடியாது: யாப்பா திகதி: 15.02.2010 // தமிழீழம் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை விடுத்துள்ள கோரிக்கைக்கு பதிலளிக்க முடியாது என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாகக்கூ றப்படும் போர்போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இது தொடர்ப…
-
- 2 replies
- 544 views
-
-
திங்கட்கிழமை, 15, பிப்ரவரி 2010 (11:43 IST) விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்த்துக்களோடு முத்துக்குமார் திருமணம் வீரப்பன் விவகாரத்தில் சிறை சென்ற முத்துக்குமார் திருமணம் வரும் 21.2.2010 அன்று புதுக்கோட்டையில் நடைபெறுகிறது. புதுக்கோட்டை முன்னாள் திராவிட கழக மாவட்ட தலைவர் கரு.காளிமுத்துவின் மகளை கைப்பிடிக்கிறார். இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி, பேராசிரியர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் இத்திருமணம் நடைபெறவுள்ளது. முத்துக்குமார் திருமண அழைப்பிதழில், ‘’உலகத்தமிழர்களின் உலகத்தலைவர் மேதகு வே.பிராபாகரன் நல் வாழ்த்துக்களோடு இத்திருமணம் நடைபெறுகிறது’’ என்று அச்சிடப்பட்டுள்ளது. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=26873
-
- 0 replies
- 2.1k views
-
-
பொன்சேகாவுக்கு எதிராக இதுவரை குற்றச்சாட்டுக்கள் எதுவுமில்லை திகதி: 15.02.2010 // தமிழீழம் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இதுவரையில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை. அவருக்கு எதிராக சாட்சிகளை நெறிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் சிறீலங்கா இராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைச்சும் தற்போது ஈடுபட்டுள்ளன என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். சாட்சிகள் நெறிப்படுத்தப்பட்ட பின்னரே ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இராணுவ நீதிமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளன எ…
-
- 0 replies
- 463 views
-
-
2016ல் அரசியல் புரட்சியை உருவாக்குவேன் - சீமான் February 14th, 2010 | Author: editor (புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணித்த) மே 18 ம் தேதி நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் இயக்கமாக அறிவிக்க இருக்கிறேன். அதன் பின்னர் 2016 ல் மாபெரும் அரசியல் புரட்சியை ஏற்படுத்துவேன் என்று கூறியுள்ளார் சீமான். ஈழ தமிழர்களுக்காக உயிர் நீத்த முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் சேலம் போஸ் மைதானத்தில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளரும், டைரக்டருமான சீமான் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். அப்போது சீமான் பேசுகையில், வரும் மே 18 ம் தேதி நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் இயக்கமாக அறிவிக்க இருக்கிறேன். இதுதான் எனது…
-
- 0 replies
- 789 views
-
-
பொன்சேகாவை விசாரிக்க குழு நியமிப்பு: வாய்திறப்பதில்லை என்று அவர் விடாப்பிடி! தடுப்புக்காவலிலுள்ள பொன்சேகா தன்னை இராணுவ நீதிமன்றில் விசாரிக்கமுடியாது என்றும் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற தான் சாதாரண பொதுமகன் என்றும் வலியுறுத்திவரும் அதேவேளை, அவரை மூவர் அடங்கிய இராணுவ நீதிபதிகளின் முன்னால் விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பொன்சேகா மீதான விசாரணைகளை மேற்கொண்டு ஆதாரங்களை சேகரிக்கும் பொறுப்பை படைகளின் பிரதானி தயா ரத்நாயக்கவிடம் ஒப்படைத்துள்ளார் இராணுவ தளபதி ஜகத் ஜெயசூரியா. ஆனால், இராணுவ விசாரணைகளுக்கு தான் முகம் கொடுக்கப்போவதில்லை என்றும் தான் சாதாரண பொதுமகன் என்ற வகையில், தன்னை சிவில் நீதிமன்றிலேயே…
-
- 0 replies
- 618 views
-
-
அவுஸ்த்திரேலியாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள் வாக்கெடுப்பு. ஈழத்தமிழர் புல்ம்பெயர்ந்து வாழும் தேசமெங்கிலும் அதிகரித்துவரும் மக்கள் எழுச்சியுடன் நடைபெற்றுவரும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள்வாக்கெடுப்பூக்கள் இங்கு அவுஸ்த்திரேலியாவிலும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சிட்னி, மெல்பேன், பிறிஸ்பேன், கன்பரா, பேத் மற்றும் அடெலெயிட் போன்ற முக்கிய நகரங்களில் வாக்குச் சாவடிகள் மூலமாகவும், தபால் வாக்குப்பதிவு மூலமாகவும் இக்கருத்துக்கணிப்பு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வருகிற சித்திரை மாதம் 17 ஆம், 18 ஆம் தேதிகளில் இவ்வாக்கெடுப்பு நடைபெறுவதற்கான ஏற்பாடுகளில் இதன் அமைப்பாளர்கள்…
-
- 1 reply
- 889 views
-
-
தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு : தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்காது - கருணாநிதி ஞாயிறு, 14 பிப்ரவரி 2010( 10:43 IST ) இலங்கையில் மீண்டும் அதிபராக பொறுப்பேற்றுள்ள மகிந்த ராஜபக்ச, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு குறித்து அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் தி.மு.க. அரசு அதனை வேடிக்கை பார்க்காது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை வருமாறு : கேள்வி : இலங்கை அதிபர் ராஜபக்ச, அதிபர் தேர்தலில் தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வருவரா? பதில் : தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை தேர்தல் முடிந்தபின் நிறைவேற்றுவதுதான் நியாயமான - நாணயமான ஜனநாயகமாக இருக்க முடியும். அதிலும் கு…
-
- 12 replies
- 943 views
-