ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
இரே நேரத்தில் கப்பலில் அடைக்கலம் கோரிய இலங்கைத் தமிழ் மக்களின் ஒரு பகுதியினருக்கு அடைக்கலம் வழங்கிவிட்டு மறுபகுதியினரை அவுஸ்திரேலிய அரசு ஈன கண்டும் காணாமலும் இருக்கின்றது என இந்தோநேசியா கேள்வி எழுப்பியுள்ளது . உங்கள் கருத்து source : http://www.eelamsoon...eelam.html
-
- 1 reply
- 867 views
-
-
திஸ்ஸநாயகம் சரீர பிணையில் இன்று விடுதலை வீரகேசரி இணையம் 1/11/2010 11:38:45 AM - யுத்தகாலத்தில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் சரீர பிணையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டார். நாட்டின் இறைமைக்கு எதிரான கட்டுரைக்கு உரித்துடையவர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது முன்வைக்கப்பட்டிருந்தன. திஸ்ஸநாயகத்தை விடுவிக்கக் கோரி கடந்த சில…
-
- 2 replies
- 731 views
-
-
பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதியாகப் புதிதாகப் பதவியேற்றுள்ள பேரருட்திரு ஜோசப் ஸ்பீற்றரி, மன்னார், வவுனியா மாவட்டங்களுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு, ஞாயிறன்று மாலை வவுனியாவை வந்தடைந்தார். இறம்பைக்குளம் பங்குத் தந்தை அருட்திரு. எமிலியாஸ்பிள்ளை மற்றும் புனித அந்தோனியார் ஆலயப் பங்கு குழுவினரின் தலைமையில் கூடிய பெருந்திரளான மக்கள் பாண்ட் வாத்தியம் சகிதம் அன்னாருக்கு வரவேற்பளித்தனர். இதில் வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பந்துல சி பெரேரா, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், வவுனியா நகரசபைத் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன், வவுனியா குடியிருப்பு பிள்ளையார் கோவிலின் பிரதம குருக்கள் க.கந்தசாமி மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள். ஊர்வலமாக அந்தோனிய…
-
- 0 replies
- 527 views
-
-
கிளிநொச்சியில் உள்ள தமிழர் தொல்பொருள் ஆய்வு மையம் ஸ்ரீலங்காப்படையினரால் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்டங்களில் காணப்பட்ட தொல்பொருள் ஆய்வுப்பொருட்கள் அனைத்தும் ஒருங்கேசேர்த்து மக்கள் பார்வைக்காக வைப்பதற்காகவும் வரலாற்று சின்னங்கள் அழிந்துவிடாமல் பாதுகாக்கும் பொருட்டும் தமிழ் மக்களினால் கட்டப்பட்டு வந்த தொல்பொருள் ஆய்வு மையம் ஸ்ரீலங்காப்படையினரால் முறுமுழுதாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கிளிநொச்சி சென்றுவந்த ஒருவர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியின் நகர்ப்பகுதியில் பண்பாட்டு மண்டபத்திற்கு அருகில் அமைக்கப்பெற்ற தமிழர் தொல்பொருள் ஆய்வு மையம் ஸ்ரீலங்காப்டையினரால் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுள்ளதை நேரில் காண…
-
- 0 replies
- 806 views
-
-
சுதந்திரத்திரமான வாழ்வுக்காக முன்னெடுக்கப்பட்ட தமிழர்களின் போராட்டத்திற்கு தற்காலிக பின்னடைவே ஏற்பட்டுள்ளது. உரிய தீர்வுகள் தமிழர்களுக்கு முன்வைக்கப்படாவிட்டால் மீண்டும் விடுதலைப் போராட்டம் தன்னெழுச்சியாக உருவாகுமென அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் பேச்சாளர் சாம்பவி தெரிவித்துள்ளார். இணையதளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் புலத்து தமிழர்களை பொறுத்தவரை தமிழர்களின் ஒட்டுமொத்த அரசியல் உரிமைகளுக்காக பெரும்பாலான தமிழர்கள் ஒன்றுதிரண்டிருப்பதாகவும் குறைந்த எண்ணிக்கையானவர்களே ஏனைய கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்ட அவர் அனைத்து சமூகங்களிலும் அவ்வாறானவர்கள் இருப்பது வழமைதான எனவும் குறிப்பிட்டுள்ளார். எதிர்கால அரசியல் முன்னெடுப்புகள் பற்றி விளக்கமளித்த அவர…
-
- 0 replies
- 532 views
-
-
விசாரணை செய் அல்லது விடுதலை செய் என்ற கோரிக்கையை முன் வைத்து நாட்டின் பல்வேறு சிறைச் சாலைகளிலும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ள தமிழ் அரசியல் கைதிகளில் மேலும் நான்கு பேர் மயக்கமடைந்த நிலையில் சனிக்கிழமை ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதிய மகசீன் சிறைச்சாலைக் கைதிகள் இருவரும் யாழ்ப்பாண சிறைச்சாலைக் கைதிகள் இருவருமே உடல்நிலை மோசமடைந்த நிலையில் சனிக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் மீது ஏதாவது குற்றச்சாட்டுகள் இருப்பின் அது தொடர்பாக விசாரணை செய்யுங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள சிறைச்சாலைகளில் மிக நீண்டகாலமாக வாடும் 577 தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரை உண்ணாவி…
-
- 0 replies
- 632 views
-
-
30 வருடங்களாக நிலவிய பயங்கரவாதம் இன்றில்லை : மட்டக்களப்பில் ஜனாதிபதி by வீரகேசரி இணையம் "கடந்த 30 வருடங்களாக நாட்டில் நிலவிய பயங்கரவாதம் தற்போது இல்லை. எனினும் மீண்டும் ஆயுதக் கலாசாரம் தலைதூக்காது மக்கள் செயல்பட வேண்டும்" என்று ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஷ கேட்டுக் கொண்டார். தேர்தல் பிரசாரத்திற்காக நேற்று மாலை ஜனாதிபதி மட்டக்களப்பு சென்றிருந்தார். மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சுமார் 12 நிமிடங்கள் தமிழிலும் சிங்களத்திலும் இவர் உரையாற்றினார். மக்கள் பிரச்சினை குறித்து மட்டுமன்றி, அரசியல் தொடர்பாகவும் எதுவும் குறிப்பிடாமல் ஜனாதிபதி பொதுவாகவே உரையாற்றினார். குறிப்பாக யுத்தத்தினால் குடும்பங்களைப் பிரிந்து வாழ்பவர்களையும், யு…
-
- 5 replies
- 655 views
-
-
மெல்ல இறுகி வரும் மேற்குலகின் அழுத்தம் வேல்ஸிலிருந்து அருஷ் இலங்கை அரசியலில் ஜனாதிபதித் தேர்தல் ஏற்படுத்தி வரும் சுழல்காற்றை விட வேகம் மிக்க சூறாவளி ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை கடந்த வியாழக்கிழமை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை இராணுவத்தினர் தமிழ் இளைஞர்களை சுட்டுக்கொல்லும் காட்சிகள் எனத் தெரிவித்து பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் கடந்த ஓகஸ்ட் மாதம் வெளியிட்ட வீடியோ உண்மையானது என ஐ.நா.வின் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான அதிகாரி பேராசிரியர் பிலிப் அல்ஸ்ரன் தெரிவித்துள்ளமை இலங்கை அரசாங்கத்தை மீளமுடியாத நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. அல்ஸ்ரனின் அறிக்கை வெளிவந்த சில மணிநேரங்களிற்குள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம அவசர அவசர…
-
- 4 replies
- 749 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் நெருங்க, நெருங்க அரசுக்கு ஒருபுறம் மக்கள் செல்வாக்குப் பற்றிய பிரச்சினை. அந்தநேரம் பார்த்து அரசுத் தலைமைக்கு எதிரான சர்வதேச குற்றவியல் விசாரணை பற்றிய கோரிக்கை நெருக்கடியும் அழுத்தத் தொடங்கிவிட்டது. இலங்கையில் தமிழ் இளைஞர்கள் என்று கூறப்படும் ஒரு தொகுதியினர் நிர்வாண நிலையில், கைகள் பின்புறமும், கண்ணும் கட்டப்பட்ட நிலையில் சீருடை தரித்த படையினரால் தாக்கப்பட்டு சுட்டுப் படுகொலை செய்யப்படும் வீடியோக் காட்சியை பிரிட்டனின் “சனல்4″ தொலைக்காட்சி ஒளிபரப்பியமையை அடுத்து எழுந்த சர்ச்சை இப்போது சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் தமிழர் தாயகம் மீது தொடுக்கப்பட்ட கொடூர, குரூர, கோர யுத்தத்தின்போது அப்பாவித் தமி…
-
- 6 replies
- 880 views
-
-
கோட்பாய ராஜபக்ச தனது மனைவியை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார் ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோட்பாய ராஜபக்ச தனது மனைவியை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பார் என்ற அச்ச நிலை காரணமாகவே கோட்டபாய தனது மனைவியை வெளிநாட்டிற்கு அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. அதேசமயம் தமிழ் வாத்தகர்களிடம் கப்பமாக பெற்ற பெரும் தொகையான பணம் மற்றும் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை பாகிஸ்தானிற்கு விற்பனை செய்தமை மூலம் கிடைத்த பணம் ஆகியவற்றை கோட்டபாய மனைவியன் பெயரில் வெளிநாட்ட வங்கிகளில் வைப்பிலிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது…
-
- 1 reply
- 981 views
-
-
சுவரொட்டிகளை அகற்றாத பொலிஸார் மீது நடவடிக்கை : திணைக்களம் பணிப்பு வீரகேசரி இணையம் 1/11/2010 11:11:59 AM - தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றாத பொலிஸ் அதிகாரிகள் 15 பேர் தொடர்பாக தேர்தல்கள் திணைக்களத்துக்குப் பொதுமக்களின் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க பொலிஸ் திணைக்களத்துக்குத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க பணித்துள்ளார் எனச் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர்களது பதாகைகள், சுவரொட்டிகளைக் கடந்த ஜனவரி 7ஆம் திகதிக்கு முன்னர் அப்புறப்படுத்துமாறு திணைக்களம் கடுமையான உத்தரவினை பொலிஸ் மா அதிபருக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-
- 0 replies
- 475 views
-
-
வன்னியில் இடம்பெற்ற படை நடவடிக்கையின் பின்னர் தடுப்பு முகாம்களில் வைத்து கைது செய்யப்பட்ட 712 தமிழ் இளைஞர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர்.வவுனியா மெனிக்பாம் தடுப்பு முகாமுக்கு நேற்றுப் பிற்பகல் விஜயம் மேற்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ, அவரது படைகளால் ஆயுத முனையில் பிடிக்கப்பட்ட 1000 கணக்கான தமிழ் இளைஞர்களுள் தேர்தல் அரசியலுக்காக 15 பேரை விடுத்து உறவினர்களிடம் ஒப்படைத்தார். பிரதி நிதிஅமைச்சர் எஸ். புத்திரசிகாமணி, மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத் பதியுதீன், வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜென ரல் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோரும் கலந்து கொண்டனர். சரண் அடைந்தோரை மஹிந்த விடுவித்ததைத் தொடர்ந்து ஏனைய 697 பேரும் பூந்தோட்டம் மற்றும் பம்பைமடு நலன் புரிநிலையங்களில் இருந்து …
-
- 3 replies
- 1.2k views
-
-
தேசியத் தலைவரின் தாயார் ஊறணி மருத்துமனையில் அனுமதி! தமிழீழத் தேசியத் தலைவரின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை அவர்கள் சுகையினம் காரணமாக வல்வெட்டி ஊறணி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவனின் இறுதி வணக்க நிகழ்வுகளில் பங்கேற்ற இவர், மன அழுத்தம் மற்றும் உடல் பலவீனம் காரணமாக மருத்துமனையில் இன்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறீலங்காப் படையினர் இவரைத் தடுத்து வைத்திருந்து விடுவித்தபோது அவர் உடுத்திருந்த புடவையோடு வட்வெட்டித்துறைக்கு வந்தபோது, அக்காட்சி பார்ப்பதற்கே மனதை உருக்குவதாய் இருந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எம்மிடம் கருத்துரைத்துள்ளார். வயது போனவர்களுக்கே இவ்வாறான நிலை என்றால்? சிறப்பு முகாங்களில் தடுத்து வைக…
-
- 1 reply
- 663 views
-
-
சிறிலங்கா அரசால்,மகிந்தவின் புதல்வரால் யாழ்ப்பாணத்தில் நாடாத்தப்பட்ட நிகழ்ச்சியில் இராச்சுடன் ,விஜேய் அன்டனி.
-
- 20 replies
- 3.2k views
-
-
வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே .பிரபாகரன் அவர்களின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளைய ஐயாவின் பூதவுடலுக்கு நேற்று 1000க் கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர் கூடவே நேற்றிரவு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர். தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் , மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்ச்நதிரன் ,சொலமன் சிறில் ,பத்மினி சிதம்பரநாதன் ,செல்வம் அடைக்கலநாதன் ,சிவசக்தி ஆனந்தன் , வினோ நோகதாரலிங்கம், கே .துரைரட்ணசிங்கம் ,டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை மற்றும் பா.அரியநேத்திரன் ஆகியோர் கூட்டாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இறுதி அஞ்சலி ச…
-
- 8 replies
- 1.5k views
-
-
ஏ-9 வீதியில் அனுமதியின்றி தனியார் பேருந்து சேவை ஏ-9 வீதியில் அனுமதிப்பத்திரம் இல்லாத தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டுள்ளதாக தனியார் பேருந்துஉரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.இந்த பேரூந்து சேவைகளில் பொதுமக்களிடமிருந்து அதிக கட்டணம் அறவிடுவதாக அச்சங்கத்தினர் தலைவர் குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கும் - கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் இந்த 8 பஸ்வண்டிகள் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சில பேருந்துவண்டிகளில் இரட்டிப்பு கட்டணம் அறவிடுவதாகவும் அவர் தெரிவித்தார். இது சம்பந்தமான முறைப்பாடு ஒன்றை கடந்த 28ம் திகதி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு முறையிட்டதாகவும் இச்சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இர…
-
- 0 replies
- 676 views
-
-
எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று வவுனியாவில் பெரும் பணச்செலவில் “கோலாகலமாக’ தேர்தல் பொங்கலை நடத்துவதற்கு மகிந்த அரசு ஆயத்தங்களைச் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் வவுனியாவிலுள்ள மக்களையும் நலன்புரி நிலையங்களிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களையும் திரட்டி தமிழ் மக்களின் ஆதரவு தம் பக்கமே உள்ளது என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு மகிந்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் பிரமாண்டமாக நடத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பொங்கல் தேர்தல் சட்டத்திற்கு முரணானதாக இருப்பதால் இதனைத் தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையாளர் முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. மூலம்: http://seithi1.blogspot.com/2010/01/blog-post_8529.html
-
- 1 reply
- 621 views
-
-
எதிர்வரும் அரச தலைவர் தேர்தலை முன்னிட்டு உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குவதற்கான அறிவிப்பை மகிந்த ராஜபக்ச வெளியிடவுள்ளார். வலிகாமம்-வடக்கு பிரதேசங்கள், பளை, தனங்கிளப்பு அரியாலை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தொடர் காவலரண்களை உடைத்து அகற்றும் பணி இன்று ஆரம்பிக்கப்படவிருக்கிறது. அதற்கான பாரிய இயந்திரங்கள் யாழ்ப்பாணத்திற்கு ஏற்கனவே வரவழைக்கப்பட்டுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கிறது. உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டாலும் இராணுவத்தினர் நிலைகொண்டிருக்கு முன்னரங்க பாதுகாப்பு வேலிகள் தொடர்ந்தும் பேணப்படவுள்ளது. அதாவது உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டாலும் இராணுவத்தினரின் பிரசன்னம் இருக்கும். பொதுமக்கள் தமது வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். இதன் மூலம் உயர் ப…
-
- 5 replies
- 764 views
-
-
போர் முடிந்தாலும் அங்கு பாரபட்சங்களும் ஏற்ற தாள்விகளும் கொண்ட நிலமை காணப்படுகின்றது. போருக்கு காரணமான பிரச்சினை தீரவில்லை ஆகவே தான் நாம் ஜி.எஸ்.பி மீழப்பெற ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவு தெரிவித்தோம் என்றார் பிரிட்டிஸ் வெளி நாட்டு உதவிகளுக்கான துணை அமைச்சர் கரத் தொமஸ். நேற்று தமிழர்களிற்கான சட்ட ஆலோசனை அமைப்பின் ஆதரவில் லசந்தவின் ஓராண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் மேலும் தனது உரையில்.. இலங்கையில் போரின் இறுதிப்பகுதியில் நடந்துள்ளதாக கூறப்படும் போர்குற்றம் தொடர்பில் வெளிப்படையான நடுனிலைமையான விசாரணைகளை நாம் வலியுறுத்துகின்றோம் அத்துடன் லசந்தவின் கொலை தொடர்பாகவும் நடு நிலைமையான விசாரணை வேண்டும். என்றார் அமைச்சர் கடத் தோமஸ். இதே வேளை இலங்கைக்…
-
- 0 replies
- 582 views
-
-
எதிர்வரும் அரச தலைவருக்கான தேர்தலில் மகிந்த ராசபக்சவுக்கு சாதகமான முடிவுகள் வரும் என்ற நம்பிக்கைகள் அரச தரப்பில் குறைந்து வருவதால் சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோததபாயாவின் மனைவி அதிகளவு பணத்துடன் வெளிநாடு ஒன்றுக்கு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்கா அரச தலைவருக்கான தேர்தல் எதிர்வரும் 26 ஆம் நாள் நடைபெறவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கன ஆதரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றன. இதனை தொடர்ந்து அரச தரப்பில் உள்ள பலரும் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முயன்று வருகின்றனர். அரச ஊடகங்களின் தலைவர்கள் பலர் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல நுளைவு அனுமதிகளை பெற்றுள்ள அதே சமயம் பாதுகாப்ப…
-
- 28 replies
- 3.2k views
-
-
போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கான நீதிமன்றத்தை அமைக்க பிரான்ஸ் திட்டம் உள்நாட்டிலும், அனைத்துலகிலும் போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்கள் மீது விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக நீதிமன்றம் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரான்ஸ் கடந்த புதன்கிழமை (6) தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வொசிங்டன் போஸ்ட் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளதாவது: உள்நாட்டிலும், அனைத்துலகத்திலும் போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்கள் மீது விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கான தண்டணைகளை வழங்கும் பொருட்டு நீதிமன்றம் ஒன்றையும், நீதியாளர் குழு ஒன்றையும் அமைப்பதற்கு பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் இந்த முடிவு பிரான்ஸ் இற்கும் சிறீலங்கா போன்ற போர்க்குற்றங்களை மேற்கொண்ட நாடுகளிற்கும் இடை…
-
- 0 replies
- 549 views
-
-
மன்னாரில் சிறீலங்காப் படைகளால் தமிழ்ப் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் மன்னார் அடம்பனை சொந்த இடமாக கொண்ட இவர்கள் சிறீலங்காப் படையினரின் போர்காரணமாக இடம்பெயர்து முள்ளிவாய்க்கால் வரைசென்று அங்கிருந்து சிறீலங்காப் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் செட்டிகுளம் வதைமுகாமில் அடைக்கப்பட்டிருந்து பின்பு சிறீலங்கா அரசின் மீள்குடியேற்றம் என்ற பெயரில் மன்னாரில் கொண்டு சென்று விடப்பட்டுள்ள 61 அகவையுடை செல்லையா பாக்கியம் என்ற வயோதிப பெண் கடந்த ஒருவாரங்களுக்கு முன் மன்னார் அடம்பனில் கால் நடைகளை மேய்த்துக்கொண்டிருந்த வேளை அங்குவந்துள்ள 5ற்கு மேற்பட்ட சிங்கப்படைகளால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அடம்பன் பிரதேசத்தில் கொண்டு சென்று…
-
- 0 replies
- 834 views
-
-
மன்னார் மறைமாவட்டத்திற்கு போப் பிரதிநிதி விஜயம் போப்பாண்டவரின் இலங்கையின் பிரதிநிதியாகப் புதிதாகப் பதவியேற்றுள்ள அதிவணக்கத்திற்குரிய ஜோசப் ஸ்பீட்டரி அவர்கள் மன்னார், வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய மன்னார் மறைமாவட்டத்திற்கு முதற் தடவையாக விஜயம் செய்திருக்கின்றார். மன்னார் நகருக்குச் சென்ற அவர், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை மற்றும் மறைமாவட்டத்தின் முக்கிய குருமார்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். பின்னர், அவர் மன்னார் மாவட்டத்தின் பல இடங்களுக்கும் விஜயம் செய்து, பொதுமக்களையும், குருமார்களையும் சந்தித்துள்ளார். மன்னாரிலிருந்து வவுனியாவுக்கு வருகை தந்த அவர், வவுனியா பிரதேசத்தில் பராமரிக்கப்பட்டு வருகி;ன்ற போரினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்…
-
- 0 replies
- 509 views
-
-
நாடாளுமன்றத்தில் மேல்சபை உருவாக்கப்படும் - இலங்கை ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அங்கு உரையாற்றிய பொதுச் கூட்டத்தில் இலங்கை அரசியலமைப்பின் கீழ் மேல்சபை(செனட்) ஒன்று உருவாக்கப்படும் என்றும், அதில் மாகாண சபையின் உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் மக்களுக்கு நியாயமான கெளரவமான அரசியல் தீர்வு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் எவ்வகையான அரசியல் தீர்வு என்று அவர் விளக்கமளிக்கவில்லை. இதன் பின்னர் மட்டக்களப்பிற்கு சென்ற அவர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றினார். ஆனால் இனப் பிரச்சினை தொடர்பாக மட்டுமன்றி அரசியல் தொடர்பாகவோ எதுவும் குறிப்பிடாமல் பொதுவாகவே ஜனாதிபதி உரையாற்றினார…
-
- 0 replies
- 502 views
-
-
செய்த பாவங்கள் எல்லாம் போக்கி வெற்றி தருவாயாக இந்த நாட்டில் இனி தமிழர் சிங்களவர் முஸ்லிம்கள் என்ற பேதம் இல்லை. நாம் ஒரு தாயின் பிள்ளைகள்; குலபேதம் இன்றி வாழ்வோம். சிங்களவர் தேசம் பதமிழர் தேசம் என்று இல்லை எமது தேசம் சிறிலங்கா. என்று யாழில் கூறினார் மஹிந்த. இதே வேளை கொழும்பில் பேசும்போது இந்த நாட்டினை சிங்கள சிங்க கொடிக்கு கீழ் ஒன்று படுத்தியவன் நான் என்று பேசியமை குறிப்பிடத்தக்கது. பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை மீட்டு ஐக்கியப்படுத்தியவன் நான். ஆகவே இந்த நாட்டை பிளவு படாமல் உங்கள் எல்லோரினதும் பங்களிப்புடன் அபிவிருத்தி செய்ய எனக்கு வாக்களியுங்கள் என்று மேலும் கூறினார். நல்லூரில் பிரார்த்தனை முடித்த கையோடு துரயப்பா விளையாட்டரங்கிற்கு செல்கின்றார் மஹிந்த.…
-
- 8 replies
- 1.2k views
-