ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களைக் கவரும் நோக்கில் அதிரடியான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயம் புனரமைக்கப்பட்டு ஆலயப் பிரதேசம் புனித நகராகப் பிரகடனம் செய்யப்படும் என மகிந்த அறிவித்துள்ளார். நேற்றைய தினம் மன்னாருக்குச் சென்ற மஹிந்த பொதுக் கூட்டமொன்றிலும் உரையாற்றினார். Source: http://seithi1.blogspot.com/2010/01/blog-post_5130.html
-
- 0 replies
- 477 views
-
-
தமிழ்மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு விடுதலை அமைப்பின் தலைவரை ஈன்றெடுத்தவர்:சுரேஸ் பிரேமசந்திரன் தமிழ்மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு விடுதலை அமைப்பின் தலைவரை ஈன்றெடுத்தவர் என்ற அடிப்படையில் அன்னாரின் மறைவு தமிழ் மக்கள் அனைவரையும் கவலையடையச் செய்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையின் முழுமையான வடிவம் வருமாறு: அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை இராணுவப் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மரணமான செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தோம். தமிழ்மக்களின் உரிமைக்காகப் போராடிய ஒரு விடுதலை அமைப்பின் தலைவரை ஈன்றெடுத்தவர் என்ற அடிப்படையில் அன்னாரின் மறைவு தமிழ் மக்கள் அனைவர…
-
- 0 replies
- 585 views
-
-
இலங்கைப் பிரச்னையில் துரோகத்தை மன்னிக்க முடியாது: பழ.நெடுமாறன் சென்னை, ஜன. 9: இலங்கைப் பிரச்னையில் எதிரிகளைக் கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை மன்னிக்க முடியாது என உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறினார். சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் காட்சியில் திரிசக்தி பதிப்பகம் சார்பில் புகழேந்தி எழுதிய இப்போது பேசாமல் எப்போது பேசுவது? எனும் நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அவர் பேசியது: இலங்கைப் பிரச்னையில் அந்நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக இந்தியா செயல்பட முடியாது என காங்கிரஸ்காரர்கள் கூறுகின்றனர். ஆனால், வங்க தேசம், பாகிஸ்தானுடன் இருந்தபோது அங்கு நடைபெற்ற போராட்டத்தை இந்திராகாந்தி ஆதரித்தார். அதனால் பாக…
-
- 0 replies
- 564 views
-
-
மெல்ல இறுகி வரும் மேற்குலகின் அழுத்தம் சிறீலங்கா அரசியலில் ஜனாதிபதித் தேர்தல் ஏற்படுத்தி வரும் சுழல்காற்றை விட வேகம் மிக்க சூறாவளி ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை கடந்த வியாழக்கிழமை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை இராணுவத்தினர் தமிழ் இளைஞர்களை சுட்டுக்கொல்லும் காட்சிகள் எனத் தெரிவித்து பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் கடந்த ஓகஸ்ட் மாதம் வெளியிட்ட வீடியோ உண்மையானது என ஐ.நா.வின் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான அதிகாரி பேராசிரியர் பிலிப் அல்ஸ்ரன் தெரிவித்துள்ளமை இலங்கை அரசாங்கத்தை மீளமுடியாத நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. அல்ஸ்ரனின் அறிக்கை வெளிவந்த சில மணிநேரங்களிற்குள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம அவசர அவசரமாக அல்ஸ்ரன் மீது மேற்கொண்ட குற்றச…
-
- 0 replies
- 518 views
-
-
யாழ்ப்பாணத்தில் காணப்படும் அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் இன்றைய தினம் அகற்றப்பட உள்ளதாகவும், இந்த அறிவிப்பினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதி உயர் பாதுகாப்பு வலயங்கள், பாதுகாப்பு முன்னரங்க வலயங்களாக மாற்றப்படவுள்ளன. குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்களை மீள் குடியேற்றும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். எறிகணைத் தாக்குதல் அச்சுறுத்தல்கள் இல்லாத காரணத்தினால் அதி உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுவதற்கு தீர்மானித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. மீள் குடியேற்றப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்க…
-
- 0 replies
- 619 views
-
-
தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை அவரின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் நடைபெறவுள்ளன. அவரது பூதவுடல் அன்று முற்பகல் 11 மணியளவில் ஊறணி மயானத்தில் தகனஞ்செய்யப்படும். அமரர் வேலுப்பிள்ளையின் பூதவுடல் வல்வை, பூச்சிவிட்டானில் உள்ள அவரது உறவினர்களில் ஒரு வரின் வீட்டில் வைக்கப்பட்டு கிரியைகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பூச்சிவிட்டான் பகுதி தீருவில் பன்னிருவர் மயானத்திற்குச் சமீபாக உள்ளது. அமரரின் பூதவுடல் இன்று சனிக்கிழமை நண்பகல் தொடக்கம் தீருவில் சதுக்கத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. யாழ். மாவட்டத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் அமரரின் பூதவுடலுக்கு அஞ்ச…
-
- 4 replies
- 896 views
-
-
பனாகொடை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளை, மரணமடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் தகனக் கிரியைகள் நாளை வல்வெட்டித்துறையில் நடைபெறவிருக்கின்றன. அன்னாருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவரது மனைவி பார்வதி வேலுப்பிள்ளையும் நேற்று விடுதலை செய்யப்பட்டார். திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடலுடன் இவரையும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பொறுப்பேற்று நேற்றிரவு யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளார். காலஞ்சென்ற திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரணம் தொடர்பாக மரண விசாரனை நடைபெற வேண்டும் எனத் தான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மரண விசாரனை நடைபெற்றதாகவும், பிரேதப் பரிசோதனை நடைபெற்று, சட்ட வைத்திய அறிக்கையின்படி இ…
-
- 4 replies
- 876 views
-
-
சிறிலங்காவில் சிறுபான்மை இனமென்று ஒன்றில்லையாம் – சொல்கிறார் மகிந்த மன்னார் பிரதேசத்தில் மீனவர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை தளர்த்தி சுதந்திரமாக மீன்பிடித்தலில் ஈடுபட சந்தர்ப்பம் அமைத்துக்கொடுப்பதாக அதிபர் மகிந்த ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார். நேற்று பிற்பகலில் மன்னாரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் புனரமைப்பு பணிகள் முடிவடைந்ததும் அப்பிரதேசத்தை புனித பிரதேசமாக அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதன்போது மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் சிறுபான்மை இனமென்று ஒன்று இல்லையென தான் உறுதியாக கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டுமக்களுக்கு தான் தொடர…
-
- 0 replies
- 574 views
-
-
சிறீலங்கா சபாநாயகர் சென்ற வாகனம் மீது செருப்பு வீச்சு – 11 பேர் கைது http://meenakam.com/?p=2664 தமிழ்நாட்டிலுள்ள மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சென்ற சிறீலங்கா சபாநாயகர் லோகு பண்டாரநாயக வாகனம் மீது செருப்பு வீசி எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதிமுக, பெரியார் திக, விடுதலைச்சிறுத்தைகள், இந்திய பொதுவுடைமைக் கட்சியினர் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். http://meenakam.com/?p=2664
-
- 10 replies
- 942 views
-
-
புனர்வாழ்வளிக்கப்பட்ட 700 புலிகள் உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்சவினால் விடுவிக்கப்பட்டதாக இன்றைய தினம் வெளியான செய்தி ஒரு போலி நாடகம் என்று தெரிவிக்கப்படுகிறது. இறுதி யுத்த காலத்தில் வன்னியிலிருந்து தமது குடும்பத்தினருடன் இணைந்து வந்த குறித்த வயதானவர்கள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு தனித்து அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இருந்திருக்கவில்லை. இவ்வாறு பிரித்து வைக்கப்பட்டிருந்தவர்களையே தேர்தல்களுக்காக அவர்களது குடும்பத்தினருடன் இணைத்து விட்டு புலிகளை விடுவித்ததாக நாடகமாடுவதாகக் கூறப்படுகிறது Source: http://seithi1.blogspot.com/2010/01/blog-post_655.html
-
- 0 replies
- 619 views
-
-
வவுனியாவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க போடா ராஜபக்ச, போடா கோத்தபாய, போடா றிசாத்” என்று தமிழில் நகைச்சுவையாகக் கூறினார். இந்தப் பேச்சு நீண்ட நாள் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராகவிருந்து தற்போது மகிந்தவுடன் ஒட்டிக் கொண்டுள்ள அஸ்வருக்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பிரதான கட்சியின் தலைவர் இப்படி நாகரீகமற்ற முறையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. அவர் நாகரீகம் தெரிந்த ஆசிரியரிடம் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சாடியிருக்கிறார். Source:http://seithi1.blogspot.com/2010/01/blog-post.html
-
- 0 replies
- 646 views
-
-
எதிர்வரும் தேர்தலின் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பது குறித்து அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் கருத்துக் கணிப்புகளை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் பிரசித்தி பெற்ற நிறுவனம் ஒன்றின் துணையுடன் அரசாங்கமும் பல்கலைக்கழக மாணவர்களின் துணையுடன் எதிர்க்கட்சிகளும் இவ்வாறான கருத்துக் கணிப்புகளை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கருத்துக் கணிப்புகளின் படி தென்னிலங்கையில் மகிந்த ராஜபக்ச மற்றும் சரத் பொன்சேக்கா ஆகிய இருவரும் சம பலத்துடன் இருப்பதாகவும் மலையகப் பகுதிகளில் சரத் பொன்சேக்கா முன்னிலை வகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆறுமுகம் தொண்டமானின் இதொக மற்றும் மலையக மக்கள் முன்னணி என்பன அரசுக்கு ஆதரவு வழங்கி வரும் நிலையிலும் மலையகப் பகுதிகளில் சரத…
-
- 0 replies
- 698 views
-
-
மூலம் பதிவு... வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு அமைவாக சனநாயக ரீதியாக வழங்கிய ஆணை - பிரித்தானியா 09 சனவரி 2010 ஊடக அறிக்கை சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்தின் வீச்சை பிரித்தானியாவில் பதிவு செய்யும் வரலாற்று வாக்குக் கணிப்பில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம்! பெருவாரியான மக்கள் பங்களிப்பை உறுதிசெய்வோம்!! ஈழத்தமிழர்கள், பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் சகல உரிமைகளையும் பெற்று வாழ்வதற்கு, எமது அரசியல் அபிலாசையான சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசா? அல்லது அதைத் தமிழர்கள் கைவிட்டுவிட்டார்களா? என்பதை, பிரித்தானியாவிலுள்ள ஈழத் தமிழர்கள் எதிர்வரும் சனவரி 30, 31 ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கும் சனநாயக கருத்துக்; கணிப்…
-
- 0 replies
- 532 views
-
-
நான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் அடுத்த 48 மணி நேரத்தினுள் ஊழல் செய்தவர்களை பிடித்து உள்ளுக்கு போடுவேன் என சரத்பொன்சேகா கூறியுள்ளார். கொழும்பில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜே.வி.பி ஏற்பாடு செய்த தேர்தல் பிரச்சார கூட்டத்திலேயே இவ்வாறு கூறியுள்ளார். இன்று நாட்டில் ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சியே நிலவுகின்றது அதனை ஒழிப்பதே எனது நோக்கம். இன்று இலங்கை மக்களிற்கு சொந்தமான நிறுவனங்கள் அரசாங்க உயர் பதவிகளில் உள்ளவர்கள் தமது அதிகாரத்தை பயன்படுத்தி பொய்குற்ற சாட்டினை பங்குபரிவர்த்தனை ஊடாக வெளி நாட்டு நிறுவனங்களுக்கு கை மாறுகின்றன. இதனால் பெருமளவு நிதிகள் உயர்பதவிகளில் உள்ள குடும்பங்களுக்கு போகின்றன. இவை மக்களுக்கு புரியப்போவதில்லை. மக்கள் உண்மையில் ஏமாற்றப்படுகின்றார்கள். ஆ…
-
- 4 replies
- 776 views
-
-
British Minister for International Development Gareth Thomas said that despite the fact there was no more war in Sri Lanka the culture of impunity is still prevailing and that is why the British government supported the EU resolution to withdraw the GSP plus trade tariff concessions. He said that his government has been consistently expressing concerns to Sri Lanka, through diplomatic channels, over allegations of war crimes committed in the country during the final stages of the war. Speaking at an event in London to mark the first death anniversary of journalist Lasantha Wickramatunga, the British Minister said war crimes allegations in Sri Lanka as wel…
-
- 0 replies
- 584 views
-
-
விடுதலைப்புலிகளுடனான போரின்போது, அரச தலைவர் மகிந்த சகோதரர்களின் மிஹின் எயார் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானங்கள் மூலம் சிறிலங்காவுக்கு ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டதாக அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம வெளியிட்டுள்ள தகவல்கள் பாரதூரமானவை எனவும் இது குறித்து பல சர்வதேச நாடுகளும் அமைப்புகளும் தம்மிடம் கருத்து கேட்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அரசதலைவர் மகிந்த ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளார். கடந்த 2 ஆம் திகதி கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய சரத் அமுனுகம, இதுவரை வெளிவராத தகவல் ஒன்றை வெளியிடுவதாக கூறி, மிஹின் எயார் நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்கள் விடுதலைப்புலிகளுடனான போருக்கு தேவையான ஆயுதங்களை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக தெ…
-
- 0 replies
- 809 views
-
-
தமிழீழ விடுதலைப்போரினை புதியவடிவத்தில் மாவீரன் பிரபாகரன் முன்னெடுத்துசெல்வார்:-உழவர் திருநாளாம் தைத்திருநாள் தைப்பொங்கல் வாழ்த்து செய்தியில் மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக்கழக செயலாளர் வைகோ. தமிழினத்தை மீட்க அண்ணாவின் தம்பிகளாக தொடர்ந்தும் உழைப்போம் என்று வைகோ தெரிவித்துள்ளார். உழவர் திருநாளாம் தைத்திருநாள் தைப்பொங்கல் வாழ்த்து செய்தியில் அவர் இதனைத்தெரிவித்துள்ளார். கரும்பும் சக்கரைப்பொங்கலும் தமிழர் திருநாளில் நாவுக்கு சுவைதரும் எனினும் நம் இதயத்தில் இனிப்பு இல்லை உப்புக்கரிக்கிறது, நெஞ்சில் வடித்த கண்ணீரால், கடந்த ஆண்டு நம் தமிழினம் ஈழத்தில் கொலைக்களத்தில் வதைக்கப்பட்டது. சிங்களக் கொடியோர் நடத்திய கோரக்ககொலைக்கும் நம் தொப்புள்கொடி உறவுகள் பலியான பெருந்துயர…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 4 replies
- 1.4k views
-
-
புத்திரசிகாமணி அவர்கட்கு, தமிழ் அரசியல் கைதிகளினதும் மனிதநேய அமைப்புகளினதும் பகிரங்கமடல்: நீதி மற்றும் சட்டமறுசீரமைப்பு பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி அவர்கட்கு, தமிழ் அரசியல் கைதிகளினதும் மனிதநேய அமைப்புகளினதும் பகிரங்கமடல்: தங்களால் 07.01.10 அன்று வீரகேசரிப்பத்திரிகைக்கு தமிழ் அரசியல் கைதிகள் (பயங்கரவாத தடுப்பு மற்றும் அவசரகால சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளது ) விடுதலை தொடர்பில் கூறப்பட்ட கருத்துசம்பந்தமாக எமது நிலைப்பாட்டை பதிவு செய்யவிளையும் இவ்வேளையில் தங்கள் கருத்துச் சம்பந்தமாக நாம் எந்தவித எதிர்பார்ப்புக்கும் உட்படாத நிலையிலும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு இப்பதிவை பதிவு செய்ய முற்பட்டுள்ளோம். தொடர்ந்து வாசிக்க.... http://www…
-
- 0 replies
- 385 views
-
-
தேசிய விடுதலைப்போராட்ட வரலாற்றில் என்றும் பதியப்படும் போற்றுதற்குரிய பெருந்தகை அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கான இந்த நினைவு வணக்க நிகழ்வில் கலந்து அவருக்கான வணக்கத்தை செலுத்துமாறு வேண்டுகின்றனர். . மேலும் http://eelamso...10-01-2010
-
- 0 replies
- 605 views
-
-
சிறிலங்காவின் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் விடயத்தில் அதற்கு உதவுவதற்கு - ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தயாராக இருக்கிறது என ஐ.நா.வின் பேச்சாளர் மார்ட்டின் நெசெர்ஸ்கி தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdT04a40mA45TT2cd2ePdZAA33dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 1 reply
- 537 views
-
-
தமிழர் பிரச்சினைக்கு எவ்வாறான நிரந்தர அரசியல் தீர்வுத் திட்டங்களை முன்வைக்கின்றார்கள் என்பதனை ஜனாதிபதி வேட்பாளர்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும் என கூறியுள்ளார் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை. தங்களது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் மக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் எனவும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கடவுள் வழங்கியுள்ள அறிவைக் கொண்டு யார் இந்த நாட்டுக்கு தலைமை தாங்கப் பொருத்தமானவர்கள் என்பதனை மக்கள் தாமாகவே தீர்மானிக்கவேண்டு மென அவர் கூறியுள்ளார். தேர்தல் சுதந்திரமானதும், நியாயமானதுமாக நடைபெறுவதற்கு அனைத்து வேட் பாளர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். செல்வந்தர்களுக்கும், ஏழைகள…
-
- 5 replies
- 632 views
-
-
சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான தமிழ் இளைஞர்களை இலங்கை ஆயுதப்படையினர் படுகொலை செய்யும் காட்சிகள் உண்மையானவை என்பது நிரூபணமாகியுள்ளதாக அல்ஸ்டன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தார். இது குறித்து நேற்று கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, அல்ஸ்ரனின் செயல் இராஜதந்திர நடைமுறைகளை மீறுவதாக அமைந்தள்ளது என்று கூறியுள்ளார். நியூயோர்க்கில் வெளியிடப்பட்ட பகிரங்க அறிக்கை ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்தின் சகல நடைமுறைகளுக்கும் நீதி நியாய விதிமுறைகளுக்கும் முரணானது என்பதை விசேட அறிக்கையாளருக்கும் ஐக்கியநாடுகள் செயலகத்திற்கும் சுட்டிக்காட்டியுள்ளோம். இந்த விவகாரத்தை பகிரங்கப்படுத்துவதற்கு முன்னர், இலங்கை அரசாங்கத்தினால் உத்திகோகபூர்வ பதில் ஒன்றை அனுப்பிவைக்…
-
- 1 reply
- 591 views
-
-
கூட்டமைப்பின் தீர்மானத்தினால் கிடைத்துவரும் சாதகங்கள் இவை கொழும்பு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு வினர் செய்தியாளர் சந்திப்பை நடத்திய சமயம், அங்கு கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தர் "யார் சுட் டாலும் பலகாரம் எமக்குக் கிடைத்தால் சரி" என்று குறிப் பிட்டிருந்தார். யார் குத்தினாலும் அரிசியானால் சரி என்ற மாதிரி, இப்போது விடயங்கள் இவ்வளவு விரைவாக நடந்தேறுவது மிகவும் வியப்புக்குரியதுதான்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் தீர்மானத்தை எடுத்ததோ, இல்லையோ மறுபுறத்தில் விடயங்கள் மளமளவென்று நடந்தேறு கி…
-
- 3 replies
- 638 views
-
-
தேசிய தலைவரின் தந்தையாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி வல்வெட்டித்துறையில்! .தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிக் கிரியைகள் இந்துசமய முறைப்படி அவரது சொந்த ஊரான யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலஞ்சென்ற வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகளை நடத்துவதற்காக அவரது நல்லுடலை யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் கையளிக்குமாறு கனடாவிலுள்ள அவரது சகோதரி வினோதினி ராஜேந்திரன் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். இறுதிக் கிரியைகளை நடத்துவதற்கான சட்ட அதிகாரம் சிவாஜிலிங்கத்திற்கு இருப…
-
- 3 replies
- 948 views
-