ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
இரா.சம்பந்தன் தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்படுகின்றாரென்று முத்திரை குத்த முயல்வது பொறுப்பற்றதனமான செயலே – ஈழப்பிரியன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்கள் பி.பி.சி. செய்தி சேவைக்கு வழங்கியதாக சொல்லப்படும் செய்தியினை உதாரணம் காட்டி சம்பந்தன் தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்படுகின்றார் என்று முத்திரை குத்த முயல்வது பொறுப்பற்றதனமான செயலாகும். “2005 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ்மக்கள் சார்பாக எடுக்கப்பட்ட தீர்மானமானது, தற்போது தமிழ் மக்களிற்கு இருக்கும் துன்பியல் சம்பவங்களிற்கான காரணமென்று” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்கள் பி.பி.சி செய்தி சேவைக்கு வழங்கிய…
-
- 3 replies
- 558 views
-
-
2008 ம் ஆண்டு நான் இரண்டு வாக்குறுதிகளை அளித்தேன் ஒன்று இந்த யுத்தத்தினை அடுத்த இராணுவ தளபதிக்கு விடமாட்டென் என்றேன் அடுத்ததாக புலிகளின் தலைவர் பிரபாகரனை 2009 மாவீரர் நாள் உரையினை நடத்த விடமாட்டேன் என கூறினேன். இந்த இரண்டு வாக்குறுதிகளையும் நான் நிறைவேற்றினேன். பயங்கரவாதத்தினை பூண்டோடு அளித்தேன். இவ்வாறு கூறினார் சரத்பொன்சேகா. இன்று காத்தான்குடியில் நடந்தெ தேர்தல் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சரத்பொன்சேகா இவ்வாறு கூறினார். இந்த யுத்தத்தில் கிழக்கு வாழ் இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் என்பதனை நான் அ|றிவேன். ஆனால் இனிமேல் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது காரணம் போர் ஓய்ந்துவிட்டது. ஆனால் மஹிந்த அரசு இப்போதும் போர் நடைபெறுவது போன்ற தோற்றப்பாட்டினை காட்டுகின்றத…
-
- 8 replies
- 1.5k views
-
-
இலங்கையின் வட-கிழக்குப் பகுதியிலிருந்து போரினால் வெளியேறிய சிங்களவர்களை அங்கு உடன் மீளக்குடியமர்த்த வேண்டும் என சிங்கள பொளத்த இனவாதக் கட்சி வலியுறுத்துகின்றது. http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdJ04a40mA45pL2cd2ePdZAA23dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 0 replies
- 413 views
-
-
சிவாஜிலிங்கம் என்ன யார் வந்தாலும் இத்தேர்தலில் வெற்றியீட்ட முடியாது: மனோகணேசன் வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் உட்பட நாலாபுறமும் ஐ.தே.முன்னணிக்கு மக்களின் ஆதரவு பெருகிவருவதால் சிவாஜிலிங்கம் என்ன யார் வந்தாலும் இத்தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக அண்மையில் இடம்பெற்ற ஐ.தே. முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைக் கூறினார். கண்டி மாவட்ட ஐ.தே.கட்சி அமைப்பாளரான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. தலைமையில் ஜெனரல் சரத் பொன் சேகாவை ஆதரித்து இடம்பெற்ற இந்தப் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மனோ எம்.பி. தொடர்ந்து கூறியவை வருமாறு: ச…
-
- 0 replies
- 489 views
-
-
சமூக மேம்பாட்டுக்கு அடிப்படையான, மக்களின் தகவல் அறியும் சுதந்திரத்தை நிலைநிறுத்துமாறு அரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் சிறிலங்கா ஊடகத்துறை வேண்டுகையை முன்வைத்துள்ளது. http://www.puthinappalakai.com/view.php?2bd4A4OXvd04a40amA45fPde4a43AYAQ6e2ce2acJdZBPZe2cd2eZPdnBdcae0dce60MmYA4ce0edPdZAAma0cd30dvlmAK4d0
-
- 0 replies
- 365 views
-
-
தமிழர் நில வளங்களைச் சூறையாட எடுக்கப்படும் திட்டமிட்ட செயற்பாடுகளைத் தடுக்க மூத்த தமிழ் குடிமக்கள், தொழிலதிபர்கள், கல்விமான்கள், ஊடகத்துறையினர் முன்வர வேண்டும் என்று யாழ்.மாநகரசபை உறுப்பினர் றெமிடியஸ் அவசரமாய் வேண்டுகின்றார். http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdz04a40mA45fT2cd2ePdZAA33dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 0 replies
- 496 views
-
-
சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும் பொன்சேகாவின் வாக்குமூலம் புலிகளுக்கு எதிரான போரின் கடைசி நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் இப்போது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி விட்டிருக்கின்றன. கடந்த வாரம் ஆங்கில வார இதழ் ஒன்றில் வெளியான பேட்டியொன்றில் எதிரணியின் பொதுவேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்து இந்தச் சர்ச்சையை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது. போரின் கடைசி நாட்களில் புலிகளின் சில தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ நேரடியாக வழங்கிய உத்தரவே காரணம் என்று சரத் பொன்சேகா கூறியிருந்தார். அப்போது சண்டையை வழிநடத்திக் கொண்டிருந்த பிரிகேடியர் சவீந்திர சில்வாவுக்கு சரணடையும் புலிகளை விட்டு வைக்காமல் கொன…
-
- 1 reply
- 797 views
-
-
விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கவச உடை கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கை ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:முல்லைத் தீவு பகுதியில், இறுதிக் கட்ட போர் நடந்த இடத்தில், பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இறுதிக்கட்ட போர் நடந்தபோது, ஏராளமான ஆயுதங்களை புலிகள், பூமிக்கு அடியில் புதைத்து வைத்தாக தகவல் வெளியானதை அடுத்து, அந்த பகுதி முழுவதும், விரிவான சோதனை நடத்தப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு மே 18 அன்று, ராணுவத்தால் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதற்குபின், தற்போது பிரபாகரன் பயன்படுத்திய துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தியாவை நாம் தந்திரமாக ஏமாற்றினோம்: சிறீலங்கா திகதி: 04.01.2010 // தமிழீழம் யுத்த காலததில் இந்தியாவுடனான உறவுகளை தந்திரோபாயமான முறையில் முன்னெடுத்த காரணத்தினால் அழுத்தங்களிலிருந்து மீள முடிந்ததாக சிறீலங்கா அறிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அழுத்தங்களை விடவும், இந்தியாவினால் யுத்தம் தொடர்பாக பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் மிகவும் அதிகம் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும், சூட்சுசமான முறையில் முறையில் இந்தியாவுடனான உறவுகளை இராஜதந்திர ரீதியில் அணுகியதனால் சிக்கல்கள் இன்றி யுத்தத்தை முன்னெடுக்க முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிவில் பாதுகாப்புப் படைவீரர்களுக்கு பதக்கம் அணிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக்…
-
- 4 replies
- 1k views
-
-
அம்பாரை மாவட்ட சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளரும் மறைந்த முன் நாள் அமைச்சர் காமினி திஸ்ஸ நாயக்க அவர்களின் மகனுமாகிய மாயாத திஸ்ஸ நாயக்க சரத்பொன்சேகாவை தாம் ஆதரிப்பதாக இன்று கூ|றியுள்ளார். இவர் கருணா மற்றும் கருணாவின் அம்பாரை மாவட்ட அடாவடி பொறுப்பாளர் இனியபாரதி ஆகியோர் இணைந்து சிறிலங்கா சுதந்திர கட்சியினை விஸ்தரிக்கும் வேலையினை செய்து வந்தனர். ஆனால் இப்போ மயந்த அவர்கள் சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என்பது இவர்களுக்கு தலையிடியாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. மாயத மஹிந்த கட்சியின் மாவட்ட அமைப்பாளராக கடந்த ஒருவருடத்திற்கு முன்பு நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே வேளை சிறிலங்கா சுதந்திர கட்சியினை சேர்ந்த நவின் திஸ்ஸ நாயக்கவும் சரத்பொன்சேகாவை ஆதரிப்ப…
-
- 1 reply
- 650 views
-
-
சிறீலங்கா அரசத்தலைவர் தேர்தல்: வேட்பாளர்கள், வாக்காளர்கள் விபரம் எதிர்வரும் சிறீலங்கா அரசத்தலைவர் தேர்தலில் மொத்தமாக 22 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக சிறீலங்கா தோ்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் வேட்பாளர்களின் பெயர்கள்,அவர்களின் சின்னங்கள் அடங்கிய விபரங்களையும் வெளியிட்டுள்ளது. சிறீலங்கா அரசத்தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள், சின்னங்கள் விவரம் 01. ஐதுருஸ் மொஹமட் இல்லியாஸ் – அன்னாசி 02. மொஹமட் ஹாசிம் மொஹமட் இஸ்மாயில் – கழுகு 03. விக்கிரமபாகு கருணாரத்ன – மேசை 04. உபாலி சரத் கோன்கஹே – கேட் 05. சன்ன ஜானக சுகத்சிறி கமகே – முயல் 06. சிறிதுங்க ஜயசூரிய – முச்சக்கர வண்டி 07. விஜே டயஸ் – கத்தரிக்கோல் 08. முத்துபண்டார தெமினிமுல்ல – …
-
- 0 replies
- 559 views
-
-
அரசியல் கைதிகளை விடுதலை செய் அல்லது விசாரணை செய் – க.தேவதாசன் சிறையிலிருந்து பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தமிழ் மக்களையும் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து வடக்கு – கிழக்கையும் விடுதலை செய்துவிட்டதாக சிறீலங்கா தனக்கு தானே புகழாரம் சூட்டி மகிழ்கிறது. ஆனால் மகிழும் நிலையில் தமிழ் தேசியம் இல்லை. இது தேர்தல் காலமாகையால் தமிழர் தாயகத்தைக் குறிவைத்து வாக்கு வேட்டைக்காக பேரினவாதிகள் படையெடுக்கின்றனர். வெற்றுவாக்குறுதிகளைச் சரமாரியாக அள்ளி வீசுகின்றனர். இத்தேர்தல் மூலம் வடக்கு- கிழக்கில் வாழும் தமிழர்களின் உரிமை உணர்வை உரசிப்பார்க்கப்போகிறார்களாம். இப்பொழுது பேரினவாதம் சமாதான சகவாழ்வு பற்றி பிரசங்கம் செய்கிறது. ஆண்டானுக்கும் அடிமைக்குமிடையில் சமாதான சகவாழ்வு ஒர…
-
- 0 replies
- 545 views
-
-
செங்குருதியில் நனையும் செம்மொழி மாநாடு – தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பு தோழமைக்குரிய இளம் ஆய்வாளர்களே, தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் சார்பில் உங்களுக்கு மனமார்ந்த வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இன்று தமிழினத்தை துன்ப இருள் கவ்விக் கொண்டிருக்கிறது. இந்நூற்றாண்டின் முதற் பத்தாண்டுகள் தமிழீழ மக்களின் கண்ணீராலும் குருதியாலும் நனைந்து கொண்டிருக்கின்றன. இந்த வன்கொடுமைகளுக்குக் காரணமான நம் அரசுகள் இப்பொழுது இது அயல்நாட்டுச் சிக்கல் என்கின்றன. நாம் நமது கவலை என்கிறோம். உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு எந்தப் பின்னணியில் கூட்டப்படுகிறது என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். ஒரு கட்சி மாநாட்டை அறிவிப்பது போல் உலகத்தமிழ் மாநாடு…
-
- 0 replies
- 582 views
-
-
வடக்கு தமிழர்கள் தேர்தலை பகிஷ்கரிக்கக் கூடாது என வணக்கத்திற்குரிய பேராயர் தோமஸ் சௌந்தரநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு தமிழ் மக்கள் இழைத்த தவறை மீண்டுமொருமுறை இழைத்துவிடக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த போது நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமக்கு விருப்பமான நபருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க முடியும் எனவும், தேர்தல்களை பகிஷ்கரிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் ஏற்பட்ட விளைவுகளினால் யாழ்ப்பாண மக்கள் இன்னமும் அவதியுறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந…
-
- 1 reply
- 624 views
-
-
அவசரகாலச் சட்டத்தை மீண்டும் நீடிக்கும் விடயத்தில் சிறிலங்காவின் எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdz04a40mA45fJ2cd2ePdZAA33dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 0 replies
- 566 views
-
-
சிறீலங்காவில் ஊடகவியலாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதான படுகொலைகளுக்கு பாதுகாப்பு செயலாளர் கோத்தபயா ராஜபக்சாவே காரணம் என எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று (4) கம்பல் பிளேஸ் பகுதியில் நடைபெற்ற பேரணியில் பேசும் போதே அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகளுக்கு கோத்தபயாவே பொறுப்பானவர் ஆனால் அவர் தற்போது என்னை குற்றம் சுமத்துகின்றார். படுகொலைகளை மேற்கொள்வதற்கென கோத்தபயா ஒரு குழுவை வைத்துள்ளார். அவர்கள் தான் போர் நடைபெற்ற காலப்பகுதியில் பெருமளவான படுகொலைகளை மேற்கொண்டவர்கள். நான் எனது சீருடையை துறந்த பின்னர் முதலில் களணியில் உ…
-
- 3 replies
- 857 views
-
-
அவசரகாலச்சட்டம் மேலும் நீடிப்புhttp://meenakam.com/?p=2134 தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான காரணம் என்னவென தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இன்று சிறிலங்கா பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்பந்தன் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். அவர் இவ்விவாதத்தில் கலந்துகொண்டு மேலும் உரையாற்றுகையில், உலகில் எந்தவொரு நாட்டிலும் இதுபோன்றதொரு அவசரகாலச்சட்டம் இல்லையெனத் தெரிவித்தார். அவசரகாலச்சட்டம் நீடிக்கப்பட்டால் நடைபெறப்போகும் அதிபர் தேர்தல் எவ்வாறு நீதியாகவும் ந…
-
- 0 replies
- 370 views
-
-
நிபந்தனையின்றி தம்மை விடுவிக்க வேண்டுமென கோரி நாடு முழுவதில் உள்ள அரசியல் கைதிகள் இன்று அதிகாலை முதல் சாகுவரையான உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.கொழும்பு களுத்துறை, யாழ்ப்பாணம், அனுராதபுரம், மட்டக்களப்பு உள்ளிட்ட சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ், சிங்கள, முஸ்லீம் அரசியல் கைதிகள் இணைந்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கனேடிய பிரஜையான ரோய் மனோஜ் குமார் என்ற கைதியும் இந்த உண்ணாவிரதத்தில் இணைந்து கொண்டுள்ளார். இது குறித்து சிறைச்சாலை திணைக்களத்தின் பேச்சாளர் கென்னத் பெர்ணான்டோவிடம் கேட்ட போது, புதிய மெகசீன் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மாத்திரமே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருப்பதாகவும் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள 9…
-
- 0 replies
- 533 views
-
-
. இந்திய அரசின் அழுத்தங்களின் மத்தியிலும் போரைத் தொடர்ந்தவர் ஜனாதிபதி : லலித் வீரதுங்க இறுதி கட்ட மோதலின்போது உடனடியாக யுத்த நிறுத்தம் மேற்கொள்ளுமாறு இந்திய அரசாங்கம் மிகக் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்தது. எனினும் அதற்கு அடிபணியாது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே யுத்தத்தை தொடர்ந்தார் என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார். திருகோணமலை, இராணுவத்தின் 22 ஆவது படையணியினரின் முகாமில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத பிற்பகுதியில் வடக்கில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றன. அதன்போது யுத்தத்தை நிறுத்துமாறு இந்திய அரசாங்கம் மிகக் கடுமையான அழுத்தங்களை…
-
- 3 replies
- 633 views
-
-
வவுனியாவில் படைப்புலனாய்வாளர்கள் குவிப்பு!! கண்காணிப்புப் பிரதேசமாக வவுனியா மாறியுள்ளது!! யாழ்ப்பாணத்துக்கான தரை வழிப்பாதை திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் வவுனியா மிக முக்கிய பிரதேசமாக மாறியுள்ளது. அதாவது தென்னிலங்கையையும் தமிழர் தாயகத்தையும் இணைக்கும் பகுதியாக இது இருந்து வருகின்றது. இதை தொடர்ந்து சிறீலங்கா படைப்புலனாய்வாளர்களின் மிக முக்கிய கண்காணிப்பு பிரதேசமாகவும் அவர்கள் அதிகம் பேர் பணியில் ஈடபடுத்தப்பட்டுள்ள பிரதேசமாகவும் இது காணப்படுகின்றது. குறிப்பாக வன்ன்pயில் போர் முடிவடைந்த பின்னர் சிறீலங்கா படையின் தமிழ் மக்கள் மீது தொடுத்துள்ள மறைமுகப்போருடன் புலனாய்வு துறையினர் பெரும் தொடர்பு கொண்டுள்ளனா.; இவ் அடிப்படையில் தப்பியுள்ளதாக சிறீல…
-
- 0 replies
- 517 views
-
-
எனது மகனின் மரணத்திற்கான நீதியை சிறீலங்காவில் பெற்றுக்கொள்வது பூச்சியமானது: கலாநிதி மனோகரன் திகதி: 04.01.2010 // தமிழீழம் "எனது மகனின் மரணத்திற்கான நீதியை சிறீலங்காவில் பெற்றுக்கொள்வது பூச்சியமானது. எனினும் எனது மகனின் மரணத்திற்கு காரணமானவர்களை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தும் வரை நான் ஓயப்போவதில்லை" என 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரின் தந்தையான கலாநிதி காசிப்பிள்ளை மனோகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்கா அரச படையினரால் திருமலையில் கடந்த நான்கு வருடங்களிற்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்கள் தொடர்பில் எமக்கு அரசிடம் இருந்து நீதி கிடைக்கப்போவதில்லை என இந்த…
-
- 0 replies
- 693 views
-
-
கொல்லச் சொன்னவனுக்கல்ல கொன்றவனுக்தே தமிழரின் வாக்காம்.. வடக்கே யாழ்ப்பாணம் முதல் மன்னார் வவுனியா மக்கள் சனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க தீர்மானித்துள்ளார்கள் என்பது எங்களுடைய வடக்கு விஜயத்தின் போதும் நாம் அறிந்துகொண்டோம். இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் சனநாயகமக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் நேற்றுமாலை ஞாயிற்றுக்கிழமை வவுனியா நகர சபை மைதானத்தில் நடைபெற்ற சனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசியபோது தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் பேசுகையில் குறிப்பிட்டதாவது: இந்த ஆட்சியாளர் காலத்தில்தான் தமிழ்மக்கள் பலர் காணாமல் போனார்கள். அவர்களுடைய கலாச்சாரம் பண்பாடு கல்வி காணாமல் போனது. இந்த ஆட்சியாளரைபோ…
-
- 6 replies
- 1.1k views
-
-
பிள்ளையான் குழுவினரில் முக்கியமான உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தர முடிவெடுத்துள்ளனர். இப்போது அவர்களின் பெயர்களை கூறினால் அது ஆபத்தில் முடியும் எனவும் கூறியுள்ளார் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் திஸ்ஸ அத்தனாயக்க. அரசாங்க தரப்பில் இருந்து பிள்ளையான் கட்சிக்கு அச்சுறுத்தல்களும் ஆபத்துக்களும் இருக்கின்றன. இதனால் பெயர்களை வெளியிடுவதன் மூலம் அவர்களுக்கு உயிர் ஆபத்து உள்ளது. ஆகவே அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுத்தபின்னர், தேர்தல் தினத்திற்கு ஒரு கிழமைக்கு முன்பாக உத்தியோகபூர்வமாக ஆதரிப்போர் பெயர் விபரம் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார் திஸ்ஸ அத்தனாயக்க. http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 601 views
-
-
சிறிலங்கா அரசுத் தலைவர் பதவிக்கான ஆளும் கட்சியின் வேட்பாளர் மகிந்த ராஜபக்சவுக்கான பரப்புரைக் கூட்டம் ஒன்று சிலாபம் நகரில் நேற்று நடைபெறவிருந்த நிலையில், நகரிலுள்ள தமிழர்கள் அனைவரையும் வெளியேறுமாறு காவல்துறை உத்தரவிட்டதால் அங்கு பெரும் குழப்பமும் பதற்றமும் ஏற்பட்டது. சிலாபம் நகரிலுள்ள தமிழர்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகளுக்கு நேற்று திங்கட்கிழமை காலை சென்ற காவல்துறை அதிகாரிகள் சிலரே இந்த அவசர உத்தரவைப் பிறப்பித்ததையடுத்து அங்கு பெரும் அச்சநிலை உருவாகியது. அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ளும் பொதுக் கூட்டம் ஒன்று நகரில் நடைபெறவிருப்பதால் தமிழர்கள் அனைவரும் தமது வீடுகளையும், வியாபார நிலையங்களையும் மூடிவிட்டு உடனடியாக நகரைவிட்டு வெளியேற வேண…
-
- 3 replies
- 1.2k views
-
-
. வட.- கிழக்கு காலநிலை மாறினால் முடிவுகள் வெளியாவதில் தாமதம் : தேர்தல் ஆணையாளர் தேர்தல் தினத்தன்று வடக்கு, கிழக்குப் பகுதிகளில் காலநிலை மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகக் குறிப்பிட்ட தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க, அவ்வாறாயின் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் எனத் தெரிவித்தார். தேர்தல்கள் செயலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் தினமான எதிர்வரும் 26 ஆம் திகதி இரவு 8.30 மணிமுதல் தபால்மூல வாக்கெடுப்பு முடிவுகளை அறிவிக்கக் கூடியதாக இருக்கும். 26 ஆம் திகதி வாக்களிப்புகள் அனைத்தையும் அன்றைய தினம் 8.00 மணிமுதல் கணக்கெடுப்பதற்க…
-
- 0 replies
- 706 views
-