ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
கிழக்கில் 75 கடைகள் சீல் வைப்பு கிழக்கு மாகாண வர்த்தக நிலையங்களில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண பொது சுகாதார பரிசோதகர்களினால் கிழக்கு மாகாணத்தில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனை நடவடிக்கை ஒன்றின் போது இது கண்டறியப்பட்டுள்ளது. தேநீர்சாலைகள் வர்த்தக நியைங்கள் போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது காலாவதியான இனிப்பு பண்டங்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. மட்டக்களப்பு அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தில் இந்த சோதனை நடவடிக்கையின் போது சுமார் 75ற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 750 views
-
-
தமிழ் மக்களை காப்பாற்ற கடவுளாக வந்தவர்தான் நமது தேசியத் தலைவர்: நாடுகடந்த தமிழீழ அரசின் கனடிய பிரிவின் தலைவர் ராம் சிவலிங்கம் நமது தமிழ் மக்களின் விடுதலைக்காக தார்மீக வழியில் போராடினார் தந்தை செல்வா அவர்கள். பல ஆண்டு காலமாக பயனேதும் கிடையாது போகவே கடவுளால்தான் எம்மைக் காப்பாற்ற முடியும் என்று கூறினார் அவர். அந்தக் கடவுளாக வந்தவர்தான் நமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள். இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசின் கனடிய பிரிவின் தலைவர் ராம் சிவலிங்கம் கனடா உதயனுக்கு தெரிவித்துள்ளார். இலங்கை இந்தியா சம்பந்தப்பட்ட ஒரு விடயமாக இருந்த நமது பிரச்சனையை உலகளாவிய விடயமாக மாற்றியவர் நமது தேசியத் தலைவர் பிரபாகரனே ஆவார்" நமது தமிழ் மக்களின் விடுதல…
-
- 0 replies
- 719 views
-
-
யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியைச் சேர்ந்த 4 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிப் பதற்கு தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநாயக்க தடைவிதித்துள்ளார். இடம்பெயர்ந்த வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையாளர் அறிவித்திருந்தார். அதன் பிரகாரம், யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியைச் சேர்ந்த 4 ஆயிரம் வாக்காளர்கள் யாழ்ப்பாணம், புத்தளம் ஆகிய இரண்டு இடங்களிலும் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்ததை தேர்தல் திணைக்களம் கண்டுபிடித்துள்ளது. அதனை அடுத்து தேர்தல் விதிகளை மீறியதாக தெரிவித்து இவர்களின் வாக்குகளை ரத்துச்செய்வதாக தேர்தல் ஆணையாளர் தேர்தல் கண்காணிப்பாளர்களான "கபே" அமைப்புக்கு அறிவித்துள்ளார். குறிப்பிட்ட வாக்காளர்கள் வாக்களிப்பதை அனுமதிக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணை…
-
- 0 replies
- 565 views
-
-
சரத்பொன்சேகாவை ஆதரித்து இன்று எதிரணியினரால் ஒழுங்குபடுத்தப்பட்டு நடந்த தேர்தல் ஊர்வலத்தினை ஆளும்கட்சியினை சேர்ந்தோர் கல்வீசி தாக்கி துரத்தினர். கிரிபத்கொடவில் பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த இந்த ஊர்வலத்தின் மீது ஆளும் கட்சியினை சேர்ந்தவர்கள் வீதிபோக்குவரத்திற்கு இடைஞ்சல் இருப்பதாக கூறி தாக்குதல்களை மேற்கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். எனினும் வீதி இடைஞ்சல்கள் எதுவும் ஏற்படவில்லை என கூறிய பொலிசார் பின்னர் பாதுகாப்பு கொடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார். http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 754 views
-
-
நான் வடக்கில் யுத்தத்தில் ஈடுபட்டேன் அதேபோல் தெற்கிலும் இதனையே செய்திருப்பேன் யாழ்.நகரில் நேற்று நடந்த கூட்டத்தில் பொன்சேகா தெரிவிப்பு நான் இராணுவ அதிகாரியாக இங்கு இருந்த போது யுத்தத்தில் ஈடுபட்டேன் அது எனது கடமை. அதே சமயம் நான் தெற்கில் இருந்தாலும் இதனையே செய்திருப் பேன். எனது கடமையைத் தவறவிட்டி ருக்கமாட்டேன். இவ்வாறு தெரிவித்தார் எதிர்க்கட்சிப் பொதுவேட்பாளரான ஜெனரல் சரத் பொன் சேகா. நேற்று மாலை யாழ்.வீரசிங்கம் மண்ட பத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமது தேர்தல் வாக்குறுதிகளை விவரித்து உரையாற்றுகையில் அவர் மேலும் கூறிய தாவது: யாழ்ப்பாணத்தை நன்கு அறிந்தவன், நான் இங்குள்ள மக்களாகிய உங்களின் பாதுகாப்புக்காக நான் கடமையாற்றியுள்ளேன். உங்களின் அன்பு, கலாசாரம் என்…
-
- 1 reply
- 787 views
-
-
நாட்டை சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பில் விரைவில் அம்பலப்படுத்தப்படும் ‐ அரசாங்கம் ‐ இராணுவத்தின் விசேட பிரிவின் ரகசிய தகவல்கள் புலிகளுக்கு கசிவு? நாட்டை சீர்குலைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பில் விரைவில் அம்பலப்படுத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு நாட்டை சீர் குலைக்க முயற்சிகளை மேற்கொண்ட சக்திகளே தற்போதைய சதித் திட்டங்களின் பின்னணியிலும் இயங்கி வருவதாக அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலித் தலைவர் பிரபாகனுக்கு ஒத்துழைப்பு வழங்கிய நபர்களே நாட்டுக்கு எதிரான வகையில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள…
-
- 0 replies
- 898 views
-
-
தமது உறவுகளை மீட்டுத்தரக் கோரி கதறி அழுதவாறு மனோகணேசனைச் சூழ்ந்து கொண்டனர் சொந்தங்கள் எமது பிள்ளைகள் எங்கே? எமது உறவுக்கு என்ன நேர்ந்தது ? அவர்களை மீட்டுத் தாருங்கள் என்று கதறி அழுதபடி காணமற்போனோரின்.. உறவினர்கள் பல நூற்றுக்கணக் கானோர் மனோகணேசனைச் சூழ்ந்து கொண்டனர். எமது உறவுகளின் கொலைகளுக்குப் பொறுப்பான கொலை யாளிகள் யார்? எம் உறவுகள் தொடர் பான உண்மை நிலை யைப் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் என்றெல்லாம் மனோ கணே சனிடம் அவர்கள் கவலை கட்டுக் கடங்காமல் கண்ணீர் சிந்தியபடி கேள்விகளை எழுப்பினர். நேற்று மாலை வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், காணாமற்போனோர்…
-
- 0 replies
- 619 views
-
-
எவருக்கும் தலை வணங்காத கூட்டமைப்பினர் சரியான முடிவு எடுத்து தமிழரைக் காக்க வேண்டும் சாதகமான சமிக்ஞை தெரிகிறது என்கிறார் ஹக்கீம் எவருக்கும் தலை வணங்காத, சரணாகதி அடையாத தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பு , இந்தத் தருணத்தில் சரியான முடிவை எடுத் து தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டும். யாழ்ப்பாணம் வந்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மேற் கண்டவாறு தெரிவித்தார். நேற்று மாலை வீரசிங்கப் மண்டபத்தில் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற கூட்டத் தில் உரையாற்றிய ரவூப்ஹக்கீம் மேலும் கூறியதாவது : வடக்கு, கிழக்கில் நடைபெற்ற போராட் டத்தைப் பயங்கரவாதம் எனக்கூறி அடக்கிய அரசு, இன்று அரச பயங்கரவாதத்தை மக்கள் மீது திணித்து வருகின்றது. இந் நிலையில் கொச்சைப்படுத்தப…
-
- 0 replies
- 541 views
-
-
கடந்த காலத்தில் இடம்பெற்ற கசப்புணர்வுகளைத் தூக்கி வைத்துவிட்டு, காலம் காலமாக, பரம்பரை பரம்பரையாக அரசாள முற்படும் ராஜபக்ஷ குடும்பத்தை வீட்டுக்கு அனுப்புங்கள். இன்று புதுப்பிரகாசத்துடன், ஆளுமையுடன் ஜனநாயக அரசியலுக்குத் தன்னை அர்ப்பணித்து வந்துள்ளார் பொன்சேகா. தெற்கு, வடக்கு, கிழக்கு என்று வாக் களித்த காலம் மாறி, சுயநிர்ணயம் வேண்டும் என்று வாக்களித்த காலம் மாறி, சுதந்திரத்துக்கு எந்த விதமான அரசு எமக்கு வேண்டும் என்ற நிலைமாறும் காலகட்டத்தில் நன்கு சிந்தித்து புத்திஜீவிகளாக இருக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்என்றார் ஹக்கீம். ஆகவே இனி சுதந்திரத்தினை எந்த சிங்கள அரசு தரவேண்டும் என்றுதானாம் வாக்களிக்கவேண்டும் என கூறுகின்றார். தமிழர்கள் தங்கள் சுதந்திரத்தை பெறுவதற்கோ…
-
- 0 replies
- 498 views
-
-
சிறிலங்கா அரசுக்கெதிரான போர்குற்றச்சாட்டு செய்மதி படச்சான்றுகளுடன் சமர்ப்பிக்கபடவுள்ளது சிறிலங்கா அரசாங்கம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்கான செய்மதி படங்களுடனான சான்றுகள் அமெரிக்காவை தளமாகக்கொண்ட குழுவினால் சர்வதேச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அமெரிக்காவை தளமாகக்கொண்ட தமிழர் படுகொலைகளுக்கு எதிரான அமைப்பு இந்த முனைப்பில் ஈடுபட்டுள்ளது.எதிர்வரும் 14 ஆம் 15 ஆம் திகதிகளில் டப்ளினில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் கூடவுள்ளது. இதன்போது, கடந்த வருடம் மாசி மற்றும் பங்குனி மாதங்களில் வன்னியில் வைத்தியசாலைகளின் மீது நடத்தப்பட்ட எறிகணை தாக்குதல்கள் தொடர்பிலான நான்கு செய்மதிப்படங்களை அமெரிக்கக்குழு சமர்ப்பிக்கவுள்ளது. 1907 ஆம் ஆண்டின் ஹேக் உடன்படிக்கை 1948…
-
- 1 reply
- 634 views
-
-
நேற்று யாழ்ப்பாணத்தில் சரத்பொன்சேகா கூறிய ஊடகவியலாளர் மா நாட்டில் சில வாக்குறுதிகள் கூறினார் அவை வருமாறு.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் வெற்றிபெற்றவுடன் அவசரகாலச்சட்டம் உடன் நீக்கப்படும் என கூறினார். ( எவ்வாறு? பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை ஆகவே அதனை கலைக்கவேண்டும் கலைத்து காபந்து அரசாங்கம் ஒன்றினை அமைக்கவேண்டும் அதற்கு 3-6 மாதம் தேவை ) *யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் அனைத்தும் முற்றாக அகற்றப்படும். ( எப்போது பாராளுமன்ற தேர்தலிற்கு முன்பா அல்லது அதற்கு பின்பா கால அட்டவணை என்ன?) * காணாமற்போனோர் மற்றும் கைது செய்யப்பட்டோர் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ( எவ்வாறு? சர்வதேச அல்லது ஐ. நா விசாரணையாளர்கள் ஊடாகவா? அல்லது …
-
- 0 replies
- 523 views
-
-
சிறிலங்காவில் சிறுவர் திருமணம் அதிகரிப்பு சிறுவயதில் மேற்கொள்ளப்படும் திருமணங்கள் காரணமாக சிறிலங்காவில் தற்போது பாரிய சமூகப்பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக நன்நடத்தைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் தெரிவிக்கின்றது. சிறுவயதில் ஏற்படும் திருமணங்கள் காணரமாக ஏற்படும் பிரச்சனைகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து காணப்படுவதாக மேற்படி திணைக்களம் தெரிவிக்கின்றது. குறிப்பாக குழந்தைகள் வீதிகளின் கைவிடப்படுகின்றமை ,குழந்தைகள் விற்கப்படுகின்றமை மற்றும் சிசுக்கொலைகள் போன்றவை சிறுவயது திருமணங்களினாலேயே அதிகம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்டுகின்றது. சிறிலங்காவின் சட்டத்தின் பிரகாரம் 18 வயது பூர்த்தியானவுடனேயே திருமணம் செய்துகொள்ளமுடியும் என்றிருந்தபோதிலும் சிலர் அதன…
-
- 0 replies
- 1.1k views
-
-
அடையாளம் தெரியாதவர்கள் அறிக்கை விடுகிறார்கள். தமிழீழ மக்களாகிய நாம் நொந்து நூலாகிப் போய் இருக்கும் இவ்வேளையில் அறிக்கை போர் நடத்தி வரும் சிலரில் அடையாளம் தெரியாதவர்களே. பல அறிக்கைகளை இப்படியானவர்கள் விடுக்கும் போது சிரிப்பதோ அழுவதோ என்று கூட தோண்றுகிறது. இன்று கூட சிறிலங்காவின் துணை இராணுவக் குழுத்தலைவர்களில் ஒருவரான பிள்ளையான் எனும் ஒரு நபர் தமிழீழ தேசியத் தலைவரையும் மக்களையும் தவறாக வழிநடத்தியது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். தமிழீழத்தில் இருக்கும் வரை எனக்கு இவர் யார் என்றே தெரியாது. அதுமட்டுமல்லாது தமிழீழத்தில் இருக்கும் எனது உறவுகளிற்கும் இவர் யார் என்று தெரியாது. இப்படியான ஒருவரின் அறிக்கையாக வெளியிடப்பட்டவை வருமாறு ” “…
-
- 3 replies
- 1.8k views
-
-
மீண்டும் தமிழ் மக்கள் களை எடுப்பு - சிறீலங்காப்படையின் உதவியுடன் ஒட்டுக்குழுவின் நடவடிக்கை திகதி: 02.01.2010 // தமிழீழம் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் களை எடுப்பினை சிறீலங்காப்படையினரின் உதவியுடன் ஒட்டுக்குழுவினார் மேற்கொண்டுள்ளனர். தமிழ் மக்களை மர்மமான முறையில் படுகொலை செய்கின்ற நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. அண்மையில் யாழ்ப்பாணத்தில் சிறீலங்காப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழ் மக்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுவருகின்றமை அதிகரித்துள்ளது. இதிலும் குறிப்பாக மீள்குடியேற்றம் என்ற பெயரில் கொண்டுசெல்லப்பட்ட மக்களே பெரும்பாலும் இவ்வாறான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். அண்மையில் நான்குக்கும் மேற்பட்ட மீள்குடியேற்ற மக…
-
- 0 replies
- 762 views
-
-
பிரபாகரனின் ஆதரவாளர்களினால் நாட்டுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் ‐ இராணுவத் தளபதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆதரவாளர்களினால் நாட்டுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் நிலவுவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். பிரபாகரனின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தவர்களினால் நாட்டின் பௌதீக ஒருமைப்பாடடுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத் தளபதி புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார். படைவீரர்களின் அர்ப்பணிப்புடன் ஈட்டப்பட்ட யுத்த வெற்றிகளை பலவீனப்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும், அதற்கு படைவீரர்கள் இடமளிக்கக் கூடாது எனவுமு; அவர…
-
- 2 replies
- 1.2k views
-
-
கியுபாவும் ஆல்பாவும் ஈழத்தமிழர்கைக் கைவிட்டதேன்? – ரான் ரெட்னூர் பதிந்தவர்_ரமணன் on December 31, 2009 பிரிவு: கட்டுரைகள், செய்திகள் மார்க்சிய அறிஞர் ரான்ரெட்னூர் ஈழத்தமிழர் இனப்படுகொலையை வரலாற்று வழியில் விளக்கி தொடராக ஐந்து கட்டுரைகளை எழுதி, 2009 நவம்பரில் வெளியிட்டார். இதன்வழி இலத்தீன் அமெரிக்க இடதுசாரி அரசுகளின் கடமைகளைச் சுட்டிக்காட்டினார். இவற்றில் முதல் கட்டுரையின் சுருக்கம் இங்கு தமிழில் தரப்படுகிறது. முழுக்கட்டுரைகளுக்கும் காண்க: http://www.ronridenour.com/. தமிழில்: அமரந்தா “உலகெங்கிலுமுள்ள சுரண்டப்படும் மக்கள் எங்கள் தோழர்கள்; உலகெங்கிலுமுள்ள சுரண்டுபவர்கள் எங்கள் எதிரிகள்… எங்கள் நாடு இப்பரந்த உலகை உள்ளடக்கியது; உலகெங்கிலுமுள்ள புரட்சியாளர்கள் …
-
- 7 replies
- 1.8k views
-
-
கடந்த தசாப்தத்தில் அரங்கேறிய மிக மோசமான ஊடக அடக்குமுறை இன்று புது வருடப்பிறப்பு மட்டுமல்ல. புதிய தசாப் தத்தின் பிறப்பும் கூட. 2000 ஆம் ஆண்டு ஜனவரி முத லாம் திகதி மிலேனியம் ஆண்டுப் பிறப்போடு ஆரம் பித்த இந்த மிலேனியத்தின் முதலாவது தசாப்தம் நேற்று 2009 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது. புதிய தசாப்தம் இன்று ஆரம்பிக்கிறது. இலங்கையில் ஈழத் தமிழினம் மிக மோசமான மிகக் கொடூரமான மிகக் கோரமான மிகக் குரூரமான அழிவுகளைச் சந்தித்த இந்தத் தசாப்தத்தில்தான், இலங் கையின் ஊடகத்துறையும் அதுபோன்ற மிகக் கோரமான அழிவுகளையும், அடக்குமுறைகளையும் சந் தித்தது. அதுவும் தமிழ் ஊடகத்துறை குறிப்பாக உங்களின் "உதயன்', "சுடர் ஒளி' நாளிதழ்கள் மிகமிக மோசமாக அழிவுகளையும் நாசங்களையும…
-
- 0 replies
- 360 views
-
-
சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத்பொன்சேகா தனது தேர்தல் பரப்புரைகளுக்காக இன்று யாழ்ப்பாணம் வந்தடைந்தார். http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdp04a40mA45Lf2cd2ePdZAA32dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 17 replies
- 1.6k views
-
-
கிழக்கு மாகாணத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைப்பதாக பொன்சேகா தேர்தல் ஓப்பந்தம்: இனியபாரதி தகவல் . .அம்பாறை மாவட்டத்தை உள்ளடக்கியதாக முழுக் கிழக்கு மாகாணத்தையும் முஸ்லிம்களிடம் ஒப்படைப்பாரென ஜெனரல் சரத் பொன்சேகா இரகசிய தேர்தல் ஒப்பந்தமொன்றை செய்திருக்கிறார். இது ஒட்டு மொத்த தமிழனத்தையும், தமிழினத்தின் இருப்பையும் கேள்விக்குறியாக்குகின்ற சதிவேலைக்கு ஒப்பானதாகும் என்று அரசதலைவர் மகிந்தவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் அமைச்சர் முரளிதரனின் கிழக்குமாகாண பொறுப்பாளருமான கு. இனியபாரதி காரைதீவு பிரதேச சபையின் பொதுச்சந்தைத் திறப்பு விழா மற்றும் 5 ஆவது வித்ய சாகித்திய விழா ஆகியவற்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோது தெரிவித்தார். எதிர்வரும் அரசதலைவர் தேர்தல் மஹிந…
-
- 4 replies
- 936 views
-
-
தமிழ், முஸ்லிம் மக்கள் மகிந்தவையும்,சரத்தையும் நிராகரிக்க வேண்டும்.விக்கிரமபாகு Tamils, Muslims should reject both Mahinda and Sarath - Wickremabahu Karunaratne [TamilNet, Saturday, 02 January 2010, 04:37 GMT] Tamils and Muslims should not cast their votes either to Mahinda Rajapakse or Sarath Fonseka in the presidential election so that niether of them poll more than 50% of the votes cast, as a clear message to both, Dr. Wickremabahu Karunaratne, leader of the New Left Front (NLF), contesting the forthcoming presidential election said in a press meet held Friday in Jaffna Bastian Hotel. The defeat of Liberation Tigers has also affected the lives of the poor amo…
-
- 0 replies
- 704 views
-
-
சிறிலங்காவின் ஏற்றுமதிகளுக்கான புதிய சந்தை வாய்ப்புகளை பாதுகாத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்துமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdp04a40mA45Lz2cd2ePdZAA32dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 4 replies
- 896 views
-
-
யாழ்ப்பாணத்தில் மீள்குடியமர்த்தப்படுபவர்கள் பணத்துக்காக கடத்தப்படுகின்றனர்! .யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டவர்கள் காணாமல் போவதாகவும் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தருவதாகக் கூறி இனந்தெரியாத குழுவொன்று சம்பந்தப்பட்ட நபர்களின் உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் அறிவித்து லட்சக் கணக்கான ரூபாவைக் கப்பமாக பெற்றுவருவதாக தெரியவந்துள்ளதாகவும் இது தொடர்பாக தாம் விசாரணை நடத்திவருவதாகவும் சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. இதுசம்பந்தமான முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் அதுகுறித்து விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக காவல்துறையின் ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரத்ன தெரிவித்துள்ளார். இந்தக் கப்பம் பெறும் சம்பவங்களுடன் இராணுவப் புலனாய்வுப் பிரி…
-
- 0 replies
- 657 views
-
-
வடபகுதி மக்களை மிருகங்களைப் போல் வைப்பதே பொன்சேகாவின் விருப்பம் Friday, 01 January 2010 22:53 வட பகுதி தமிழ் மக்களை மிருகங்களைப் போன்று வைத்திருப்பதற்கு விரும்பும் மனப்பான்மை கொண்டவரே சரத் பொன்சேகா என்று எஸ். பி. திஸாநாயக்க நேற்றுத் தெரிவித்தார். கொழும்பு 7 யிலுள்ள மகாவலி நிலையத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இச்செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் கூறியதாவது, சரத் பொன்சேகா தனது பதவியிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கடிதமொன்றை எழுதி இருந்தார். அக்கடிதத்தில், வட பகுதி…
-
- 2 replies
- 876 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் உதவிகளை வழங்கிய சீனா போன்ற நாடுகளுடனேயே இனி தான் நெருக்கமான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளப் போவதாக தனது புத்தாண்டுச் செய்தியில் ராஜபக்ச கூறியிருக்கிறார் http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdp04a40mA45Lp2cd2ePdZAA32dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 0 replies
- 631 views
-
-
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமா வளவன் கொழும்பிற்கு இன்று வந்தடைந்தார். மறைந்த மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் அவர்களின் இறுதி கிரியைகளில் பங்குபற்றுவதற்காகவே இவர் கொழும்பு வந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்த கிரியைகளில் பங்குபற்றிய பின்னர் வவுனியா தடுப்பு முகாம்களுக்கு செல்லும் எண்ணம் உள்ளதா என கேட்டபோது அது பற்றி இன்னமும் முடிவு இல்லை எனவும் கூறியுள்ளார். ஆனால் மலையகம் செல்லவுள்ளதாக கூறியுள்ளார்.http://www.eelanatham.net/news/important
-
- 3 replies
- 1.5k views
-