ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்துலகத்தின் விதி முறைகளை மீறும் செயலாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பணியாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐ.நா. பணியாளர்கள் சிறிலங்கா அரசினால் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவது வருந்தத்தக்கது. ஐ.நா. பணியாளர்கள் சுதந்திரமாக நடமாடவும், அவர்களின் பணிகளை மேற்கொள்வதற்கும் அனுமதிகள் வழங்கப்பட வேண்டும். ஐ.நா.வின் பணியாளர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்துலகத்தின் விதிமுறைகளை மீறும் செயலாகும். ஐ.நா. பணியாளர்களை குற்றம் சுமத்தப்படா…
-
- 1 reply
- 390 views
-
-
அனைத்துலக வெளியீட்டுப் பிரிவின் வெளியீடான "இது இனப்படுகொலையா? இல்லையா?" ஆவணப்படம் நாளை சென்னையில் வெளியிடப்பட உள்ளது. இது தொடர்பாக இயக்குனர் கௌதமன் விடுத்துள்ள அழைப்புக் கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது, "இது இனப்படுகொலையா? இல்லையா?" சென்னையில் நாளை வெளியாகும் கௌதமனின் புதிய ஆவணப்படம் இலங்கையில் தமிழினம் படும் அவலங்கள் குறித்து இதுவரை பத்திற்கும் மேற்பட்ட ஆவணப் படங்களை இயக்கிய இயக்குனர் கௌதமன் அவர்களின் படைப்பாக்கத்தில் "இது இனப்படுகொலையா? இல்லையா?" என்கிற புதிய ஆவணப்படம் சென்னையில் நாளை வெளியிட்டு வைக்கப்பட உள்ளது. உலகத் தமிழர் பேரமைப்பின் ஏற்பாட்டில் நாளை 13.05.2015 புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டூடியோவில் (கமலா திரையரங்கம் …
-
- 0 replies
- 464 views
-
-
அனைத்துலகச் சைவ மாநாடு யாழ். பல்கலையில் ஆரம்பம்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை சமூகத்தினர் சிவாகமங்களும், திருமுறைகளும் புலப்படுத்தும் சைவப் பண்பாட்டுக் கூறுகளும் சமூக நல்லிணக்கச் சிந்தனைகளும் என்ற கருப்பொருளை முன்னிலைப்படுத்தியும், இந்து நாகரிகத்துறை சமூகத்தை நோக்கி பயணிக்கின்றது என்பதைத் தெளிவுபடுத்தும் விதமாகவும் ஏற்பாடு செய்துள்ள முதலாவது அனைத்துலகச் சைவ மாநாட்டின் ஆரம்பநாள் நிகழ்வுகள் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் நேற்று இடம்பெற்றன. இந்து நாகரிகத்துறை பேராசிரியர் மா.வேதநாதன் தலைமையில் இடம்பெற்ற ஆரம்பநாள் நிகழ்வுகளின் போது பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஷ்ட பேராசி…
-
- 2 replies
- 588 views
-
-
http://www.tamilnaatham.com/pdf_files/2009...ft_20090122.pdf
-
- 1 reply
- 1.4k views
-
-
அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு நிறுத்தம். திகதி: 08.05.2009 // தமிழீழம் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்படும் அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2009, தாயக உறவுகளின் அவலநிலை காரணமாக 30.05.2009 அன்று நடைபெறமாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம். - தமிழர் மேம்பாட்டுப் பேரவை நன்றி - சங்கதி
-
- 1 reply
- 908 views
-
-
திங்கள் 05-11-2007 03:30 மணி தமிழீழம் [சிறீதரன்] அனைத்துலகத் தொடர்பகம் வெளியிட்ட அறிக்கை04.11.2007 அனைத்துலகத் தொடர்பகம் தமிழீழம் தேசியத்தலைவர் அவர்களின் வலதுகரமாகத் திகழ்ந்த அரசியற்றுறைப்பொறுப்பாளரும் பெரும் படைத்துறைத் தளபதியும் அனைத்துலகமட்ட இராஐதந்திரியுமாகிய பிரிகேடியர் தமிழ்ச்செல்வனை இழந்துவிட்டோம். நயம்பட உரைத்த நா ஓய்ந்துவிட்டது. புன்னகை குன்றா சிரிப்பின் செல்வன் இன்று வரலாறாகிவிட்டார். எமது ரணத்திற்கு நாமே மருந்தாவோம், குறி தவறோம். நாம் நலிந்து விட்டோம் என்று எண்ணக்கூடாது. நாம் வீழமாட்டோம், துணிவை இழக்கமாட்டோம், இலட்சியப் பாதையிலிருந்து விலகமாட்டோம். எமது போராட்டம் வலிமையானது. மலை போன்ற எம்மவர் மறைந்துவிட்டார் என்பதற்காக நாம்…
-
- 3 replies
- 1.7k views
-
-
நாட்டில் எந்த நிலைமை தோன்றினாலும் நான் அனைத்துலக சமூகத்திடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தி செல்லப்போவதில்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 16 replies
- 2.2k views
-
-
அனைத்துலகத்தின் அசைவுகளும் உக்கிரமடைந்துவரும் களமுனையும் - வேல்ஸிலிருந்து அருஷ் வன்னியில் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்ற அதேசமயம் இராணுவம் அதிக படையினரை புதுக்குடியிருப்பு களமுனையை நோக்கி நகர்த்தி வருகின்றது. 40,000 படையினரை புதுக்குடியிருப்பு மீதான தாக்குதலுக்கு நேரடியாக களமிறக்கியுள்ள அரசாங்கம், வன்னியின் பின்னணி நிலைகளை தக்கவைக்கும் பொருட்டு 30,000 படையினரை நிறுத்தியுள்ளது. அதாவது வன்னி நடவடிக்கையின் தற்போதைய படை பலம் 70,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கடந்த வாரம் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தி ருந்தார். இருந்த போதும் அங்கு மோதல்கள் உக்கிரமாக நடந்து வருகின்றன. இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து புதுக்குடியிருப்பு மீது 10 தடவைகளுக்கு ம…
-
- 3 replies
- 1.3k views
-
-
சிறீலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான போர் தற்போது களமுனை நகர்வுகளை விட இரஜதந்திர நகர்வுகளில் அதிகம் சிக்கி கொண்டுள்ளது. சிறீலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான போர் தற்போது களமுனை நகர்வுகளை விட இரஜதந்திர நகர்வுகளில் அதிகம் சிக்கி கொண்டுள்ளது. உலகின் இந்த நகர்வுகளில் சிக்கிக்கொள்ளாமல் விரைவாக போரை நிறைவு செய்து விடவே சிறீலங்கா அரசும், இந்திரா காங்கிரஸ் தலைமையிலான இந்திய மத்திய அரசும் கடும் முயற்சிகளை கடந்த வாரமும் இந்த வாரத்தின் ஆரம்பத்திலும் மேற்கொண்டிருந்தன. எனினும் விடுதலைப்புலிகளின் எதிர்த்தாக்குதல்கள், அனைத்துலகத்தில் தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் காரணமாக அவர்களின் இந்த திட்டம் கைகூடவில்லை. பாதுகாப்பு வலையத்தின் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத…
-
- 0 replies
- 1.4k views
-
-
சனிக்கிழமை 18 ஓகஸ்ட் 2007 06:45 ஈழம் அ.அருணாசலம் இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு திரும்பி ஒரு அரசியல் தீர்வை காணவேண்டும் என்ற அமெரிக்கா உள்ளிட்ட அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் எதனையும் சாதிக்கவில்லை என்று "லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ்" நாளேடு தெரிவித்துள்ளது. அந்த நாளேட்டுக்காக கடந்த வியாழக்கிழமை (15.08.07) ஹென்றி சூ எழுதிய ஆய்வுக்கட்டுரையின் தமிழ் வடிவம் வருமாறு: மிகச்சிறிய ஆனால் பல கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு சொல்லில் ஏன் நாகமுத்து நாகலிங்கம் (வயது 80) தனது வீட்டைவிட்டு வெளியேறினார். ஏன் அவர் அங்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்பதற்கான விளக்கம் இருந்தது. அவர் கூறிய தயக்கமான வார்த்தை "அச்சம்" என்பது தான். மக்களுக்கு காரணம் தெரியாத காணாமல் போதல் நடவடிக…
-
- 1 reply
- 1k views
-
-
தமிழர் தாயகத்தில் அவலப்படும் தமிழ்மக்களுக்கு ஒரு விடிவு கிட்டும்வரை தனது சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தெரிவித்துள்ள சுப்பிரமணியம் பரமேஸ்வரன், அனைத்துலக சமூகத்தின் கவனத்தை தனது உயிரை மாய்த்தே ஈர்க்கும் நிலை வந்தால் அதற்கும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். பிரித்தானியாவில் 11 ஆவது நாளாக சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் வீதியின் ஓரத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தில் இருக்கும் அவர், தனது போராட்டம் குறித்து புதினத்துக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் மேலும் தெரிவிக்கையில்: எமது மக்களுக்கு ஏதாவது என்னால் முடிந்தவற்றை செய்ய வேண்டுமென நீண்ட நாட்களாக நான் எண்ணியிருந்தேன். அதற்கான சந்தர்ப்பம் சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டமாக எனக்கு கிடைத்திருக்கிறத…
-
- 0 replies
- 642 views
-
-
தமிழர் தாயகத்தில் அவலப்படும் தமிழ்மக்களுக்கு ஒரு விடிவு கிட்டும்வரை தனது சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தெரிவித்துள்ள சுப்பிரமணியம் பரமேஸ்வரன், அனைத்துலக சமூகத்தின் கவனத்தை தனது உயிரை மாய்த்தே ஈர்க்கும் நிலை வந்தால் அதற்கும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 356 views
-
-
அனைத்துலகத்தின் சட்டவிதிகளையும் மனிதாபிமான விதிகளையும் உலகத்தின் கருத்துக்களையும் புறம் தள்ளியவாறு தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் நடத்திய போர் தொடர்பாக பத்து கேள்விகளை இந்திய ஊடகமான 'கௌண்டர் கரண்ட்ஸ்' முன்வைத்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 575 views
-
-
அனைத்துலக நாடுகள் கடைப்பிடித்து வரும் சிறிலங்கா எதிர்ப்பு நிலைப்பாட்டை தமிழர் சார்பு நிலைப்பாட்டாக மாற்றுவது அவசியமானது என்று சுவிசில் இருந்து வெளிவரும் "நிலவரம்" மாதம் இருமுறை ஏடு வலியுறுத்தியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை (30.05.08) வெளிவந்த "நிலவரம்" ஏட்டின் ஆசிரியர் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவின் செயற்குழுவில் மீள் நியமனம் பெற சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட பகீரதப் பிரயத்தனம் தோல்வியில் முடிந்திருக்கின்றது. ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளுள் 101 நாடுகளே சிறிலங்காவின் மீள் நியமனத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. ஏனைய 91 நாடுகளும் ஆதரவு தெரிவிக்கத்தவறியதால் சிறிலங்கா தனது பிரதிநிதித்துவத்தை இழந்திருக்கின்றது. …
-
- 0 replies
- 549 views
-
-
வன்னி பகுதியில் இருந்து வரும் மக்கள் அனைத்துலகத்தின் தராதரத்திற்கு ஏற்ப பராமரிக்கப்பட வேண்டும். அவர்களை பராமரிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என நோர்ட்டிக் நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 524 views
-
-
அனைத்துலகத்தின் முன் வலிய அம்பலப்படும் சிறிலங்கா சுவிஸ் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 6 ஆவது கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஐ.நா. உறுப்பு நாடுகளால் பாரிய அழுத்தங்களுக்கு சிறிலங்கா உள்ளாக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உள்ள சிறிலங்காவின் பிரதிநிதி, தனியான சந்திப்புக்களையும் அரங்கக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார். ஐ.நா. உறுப்பு நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை அவர் தனியே சந்தித்து வருகிறார். இருப்பினும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் பல்வேறு தரப்பினரது அழுத்தங்களினால் இப்போது ஏதேனும் ஒரு அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பு நடவடிக்கையை இலங்கையில் ஏற்படுத்துவது குற…
-
- 1 reply
- 1.2k views
-
-
அனைத்துலகத்தைப் பகைத்துக் கொள்ள முடியாது என்பதால் தான் உள்ளக விசாரணை – மங்கள சமரவீர FEB 21, 2015 | 2:15by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அனைத்துலக சமூகத்தைப் பகைத்துக் கொண்டு நாம் செயற்பட முடியாது என்பதால், அவர்களின் இணக்கப்பாட்டுடன், உள்ளகப் பொறிமுறையின் ஊடாக போர்க்குற்ற வவிசாரணைகளை முன்னெடுப்போம் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். போர்க்குற்ற விசாரணை தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் எழுதிய கடிதத்தை நாடாளுமன்றத்தில் வெளியிட வேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிலங்கா டி சில்வா விடுத்த கோரிக்கைக்குப் பதிலளித்து நேற்று உரையாற்றிய போதே மங்கள சமரவீர இவ்வாறு குறிப்பிட்டார். 2009 ஆம்…
-
- 0 replies
- 346 views
-
-
அமெரிக்காவின் அச்சுறுத்தல் குறித்து சிறிலங்கா அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றும், பிளேக் எச்சரித்துள்ளது போன்று சிறிலங்கா தொடர்பான அனைத்துலகப் பொறிமுறை ஒன்றைக் கொண்டு வருவது சாத்தியமில்லை என்றும் சிறிலங்கா அமைச்சர் டியு. குணசேகர தெரிவித்துள்ளார். போர்க்கால உரிமைமீறல்கள் குறித்து நம்பகமான- சுதந்திரமான விசாரணையை சிறிலங்கா நடத்தத் தவறினால், அனைத்துலக விசாரணைப் பொறிமுறை அமைக்கப்படுவது தவிர்க்க முடியாததாகி விடும் என்று அமெரிக்காவின் உதவி இராஜாங்கச்செயலர் றொபேட் ஓ பிளேக் எச்சரித்திருந்தார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அமைச்சர் டியு.குணசேகர, “எமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வுகாண வேண்டும். அதற்கு அனைத்துலகத் தலையீடு தேவையில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைக்…
-
- 0 replies
- 255 views
-
-
அனைத்துலகப் பொறிமுறை என்று பூச்சாண்டி காட்டுகிறாராம் பிளேக் [ புதன்கிழமை, 27 மார்ச் 2013, 01:04 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] அமெரிக்காவின் அச்சுறுத்தல் குறித்து சிறிலங்கா அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றும், பிளேக் எச்சரித்துள்ளது போன்று சிறிலங்கா தொடர்பான அனைத்துலகப் பொறிமுறை ஒன்றைக் கொண்டு வருவது சாத்தியமில்லை என்றும் சிறிலங்கா அமைச்சர் டியு. குணசேகர தெரிவித்துள்ளார். போர்க்கால உரிமைமீறல்கள் குறித்து நம்பகமான- சுதந்திரமான விசாரணையை சிறிலங்கா நடத்தத் தவறினால், அனைத்துலக விசாரணைப் பொறிமுறை அமைக்கப்படுவது தவிர்க்க முடியாததாகி விடும் என்று அமெரிக்காவின் உதவி இராஜாங்கச்செயலர் றொபேட் ஓ பிளேக் எச்சரித்திருந்தார். இது குறித்து கருத்து வெளியிட…
-
- 0 replies
- 487 views
-
-
எமது பிரதேசத்தின் உண்மை நிலைகள் வெளிவந்து விடும் என்பதற்காக இங்கு செயற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களையும் அமைப்புக்களையும் சிங்களம் வெளியேற்றும்போது எவரும் கண்டுகொள்ளாதது போல இருந்துவிட்டு இன்று இங்கு வெளியாகும் செய்தியின் உண்மைத் தன்மையை சந்தேகிக்கின்றனர். இது எந்தளவு பெரிய நாடகம் என்னும் கேள்வியை எழுப்புகின்றது வன்னியில் இருந்து எழுதப்பட்ட ஒரு கடிதம். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 418 views
-
-
அனைத்துலகமும் எமது அழிவை விரும்புகின்றதா?: வன்னியில் இருந்து எழும் குரல் எமது பிரதேசத்தின் உண்மை நிலைகள் வெளிவந்து விடும் என்பதற்காக இங்கு செயற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களையும் அமைப்புக்களையும் சிங்களம் வெளியேற்றும்போது எவரும் கண்டுகொள்ளாதது போல இருந்துவிட்டு இன்று இங்கு வெளியாகும் செய்தியின் உண்மைத் தன்மையை சந்தேகிக்கின்றனர். இது எந்தளவு பெரிய நாடகம் என்னும் கேள்வியை எழுப்புகின்றது வன்னியில் இருந்து எழுதப்பட்ட ஒரு கடிதம். எட்டாவது இடப்பெயர்வாக முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் பகுதியில் துன்பத்துடன் வாழும் நா.தயாபரன் என்பவர் எழுதியுள்ள கடிதம் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தின் முழுமையான விபரம் வருமாறு: நா.தயாபரன். இரட்டைவாய்க்கா…
-
- 0 replies
- 499 views
-
-
அனைத்துலக சமூகத்தின் எதிர்பார்ப்புக்களை பெருமளவுக்கு ஏற்படுத்தியிருக்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் உரை இன்று மாலை இடம்பெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 758 views
-
-
அனைத்துலகம் தமிழரின் உரிமைப்போரை விரைவில் புரிந்து கொள்ளும்: "விடுதலைப் புலிகள்" ஏட்டின் ஆசிரியர் தலையங்கம் [சனிக்கிழமை, 05 யூலை 2008, 01:09 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] தமிழ் மக்கள் மீது சிங்கள அரசானது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது என்ற உண்மைக்கு அருகில் உலக சமூகம் வந்துள்ளது என்று ஊகிக்க முடிகின்றது. அவ்வாறு உணர்ந்த அவர்கள் எமது உரிமைப்போரை புரிந்துகொள்ளும் நாள் தொலைவில் என்று நம்பிக்கை வெளியிட்டு "விடுதலைப் புலிகள்" ஏட்டின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (04.07.08) வெளியான "விடுதலைப் புலிகள்" ஏட்டின் 141 ஆவது குரலில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சிறிலங்கா அரசைத் தனிமைப்…
-
- 0 replies
- 828 views
-
-
தமிழ் மக்கள் மீது சிங்கள அரசானது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது என்ற உண்மைக்கு அருகில் உலக சமூகம் வந்துள்ளது என்று ஊகிக்க முடிகின்றது. அவ்வாறு உணர்ந்த அவர்கள் எமது உரிமைப்போரை புரிந்துகொள்ளும் நாள் தொலைவில் இல்லை என்று நம்பிக்கை வெளியிட்டு "விடுதலைப் புலிகள்" ஏட்டின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 490 views
-
-
செவ்வாய் 24-07-2007 23:25 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] அனைத்துவித போரியல் யுத்திகளையும் தளபாடங்களையும் பயன்படுத்துவோம் - இளந்திரையன் தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கு அனைத்து வித போரியல் யுத்திகளையும் படைத்துறைத் தளபாடங்களையும் பயன்படுதப் போவதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இன்று அமெரிக்காவில் வெளிவரும் '' புளும் பேர்க் ''' செய்தி நிறுவனத்திற்கு வழங்கி செவ்வியில் விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் இதனைத் தெரிவித்துள்ளார். தென் தமிழீழத்தை சிறீலங்காப் படைகள் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கும் கருத்துக்கள் முற்றிலும் அரசியல் நலன் சார்ந்தது எனச் சுட்டிக்காட்டினார். குடும்பிமலையை சிறீலங்காப் படைகள் ஆக்கிரமித்த போதும் தென…
-
- 0 replies
- 2.6k views
-