ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
வட, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்தவன் நானே. புலிகளின் பிடியிலிருந்து விடுவித்த தளபதி நானே. எனது தலைமையிலான ராணுவப் படையணியே களத்தில் இறங்கிச் செயற்பட்டு நாட்டுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளது என்று சொல்கிறார் பொன்சேகா. இலங்கை அதிபர் தேர்தலில் பொன்சேகாவை களத்தில் இறக்கி ராஜபக்சேவை விரட்ட எதிர்க்கட்சிகள் அணி திரண்டுள்ளன. ஆனால் இத் தேர்தலி்ல இருவருக்குமே வாக்களிக்கும் மன நிலையி்ல், வாழ வழியில்லாமல் பரிதவிக்கும் தமிழர்கள் இல்லை. இந்த நிலையில் தமிழர்களின் வாக்குகளைக் கவர எவ்வளவு இறங்கிப் போக முடியுமோ அவ்வளவுக்கு இறங்கி வந்து கொண்டிருக்கிறார்கள் சிங்களர்களான ராஜபக்சேவும், பொன்சேகாவும். ராஜபக்சேவுடன் …
-
- 1 reply
- 849 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் கூடி ஆராயவிருக்கின்றனர். நேற்று மாதிவெலையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில், கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இது தொடர்பாகக் கூடி ஆராயப்பட்ட போதிலும் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.இத்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தெடர்பாகவும் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கருத்துக்கள் பரிமாறப்பட்டன. கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற சந்திப்பு தொடர்பாகவும், இச்சந்திப்பில் சாதகமான முடிவுகள் எட்டப்படவில்லை என்பது குறித்தும் நாடாளுமன்ற…
-
- 1 reply
- 638 views
-
-
படையினர் அர்ப்பணிப்புடன் பெற்ற யுத்த வெற்றிக்கு பத்து ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாடுகளில் வாழ்ந்த ஒரு சிலர் உரிமை கோர முயல்வதாக சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்சவையே அவர் இவ்வாறு சூசகமாக குற்றம் சாட்டியுள்ளார். ஜெ.வி.பியினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தொழிற்சங்கக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தை முன்வைத்தார். கட்சியில் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையில் பொம்மைகள் போல இருந்து வரும் பல கட்சி முக்கியஸ்தர்கள் வெகு விரைவில் தமது கூட்டணியில் இணைய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மூலம் : http://www.tamilstar.org
-
- 0 replies
- 973 views
-
-
அண்மையில் நடைபெற்ற யுத்த நடவடிக்கையின் போது இலங்கை அரசாலும் படையினராலும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் குறித்து எதிர்வரும் ஜனவரி 14ம் 15ம் திகதிகளில் டப்ளினில் நடைபெற இருக்கும் மாநாட்டில் ஆராயப்பட இருக்கிறது. இலங்கை, இந்திய, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐ.நா பிரதிநிதிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் தனிப்பிட்ட நபர்களும் இந்த மாநாட்டிற்காக அழைக்கப்பட்டிருக்கிறார்கள் மூலம்: http://www.tamilstar.org
-
- 0 replies
- 549 views
-
-
தேசிய பிக்கு முன்னணி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேக்காவை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை ஆதரித்த இந்த முன்னணி தமக்கோ நாட்டு மக்களுக்கோ வழங்கிய உறுதி மொழிகளை மகிந்த நிறைவேற்றவில்லை என்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதி மொழியை சரத் பொன்சேக்கா நிறைவேற்றியுள்ளதாகவும் இந்த முன்னணியின் பேச்சாளர் அத்தனகல ரத்னசார தேரோ குறிப்பிட்டார். மூலம்: http://www.tamilstar.org
-
- 0 replies
- 579 views
-
-
ஈழத்தமிழர் அவலம் குறித்து இந்திய நாடாளுமன்றில் தமிழில் உணர்ச்சிகரமாய் பேசிய பா.ஜ.க. உறுப்பினர் சுஷ்மா ஈழத் தமிழர்களின் அவல நிலை குறித்து ராஜ்யசபாவில் தமிழில் பேசி வேதனையை வெளிப்படுத்தி உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார் பாஜக உறுப்பினர் சுஷ்மா ஸ்வராஜ். நேற்று ஈழத் தமிழர்கள் நிலை குறித்து மத்திய அரசை மிகக் கடுமையாக சாடி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். பாஜக, மதிமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக என அனைத்து எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை கடுமையாக சாடின. குறிப்பாக பாஜக மூத்த உறுப்பினர் சுஷ்மா ஸ்வராஜ் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். தனது பேச்சின்போது தமிழிலும் அவர் பேசியது அனைவரையும் வியப்படைய வைத்தது. கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, பாரதியா…
-
- 0 replies
- 702 views
-
-
இன்று காலை அவுஸ்திரேலியாவுக்கு படகில் செல்ல முற்பட்டதாக சந்தேகிக்கப்படும் தமிழ் மக்கள் மீது சிங்கள படையினரால் துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டது. மட்டக்களப்பு கல்குடா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருதமிழ் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தப்பிக்க முயன்ற ஒருவர் முதலை கடிக்கு இலக்காகி காயமுற்றார்.குறித்த கடலோரம் சந்தேகத்திற்கிடமான முறையில் வள்ளமொன்றுக்கு அருகில் சிலர் காணப்பட்டதாகவும் இராணுவத்தினரைக் கண்டு தப்பியோட முற்பட்ட வேளை துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலம் கல்லடி திருசெந்தூரைச் சேர்ந்த 22 வயதான கிறிஸ்டியன் ரொபின்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கே.கணேசன் (32 வயது) என்பவர் த…
-
- 0 replies
- 656 views
-
-
''சிங்கள ராணுவத்தின் ஹீரோ நானே!'' என்ற அறைகூவலோடு சேர்த்து, ''ராஜபக்ஷே கொடுக்கிற வாக்குறுதிகளைவிட அதிகப்படியான நன்மைகளை தமிழ் மக்களுக்கு செய்து காட்டுவேன்!'' என்று சொல்லி, தேர்தல் பிரசாரத்தை அட்வான்ஸாகவே தொடங்கிவிட்ட சரத் ஃபொன்சேகாவுக்கு... கெட்ட காலமும் கூடவே தொடங்கி விட்டது! அவருடைய மருமகன் தனுனா திலகரத்னே இப்போது அமெரிக்க போலீஸின் பிடியில். கப்பென்று அவரைக் கைது செய்திருக்கும் அமெரிக்க அதிகாரிகள், பகீர் ஆயுத வியாபாரக் குற்றச்சாட்டை அவர் மீது சுமத்தியிருக்கிறார்கள்!தனுனா திலகரத்னே அமெரிக்காவில் இருந்தபடியே இலங்கை ராணுவத்துக்கு ஆயுத சப்ளை செய்கிறார் என்பது கடந்த சில மாதங்களாக இலங்கைப் பத்திரிகையாளர்கள் மத்தியில் இருந்த கசப்பான குற்றச்சாட்டு. ''மாமனார் ராணுவத் தள…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையில் சனாதிபதி தேர்தல் சனவரி 26ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா சம்பந்தன் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை கடந்த புதன் சந்தித்து பேசியுள்ளார். ஐக்கிய தேசியகட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவையும் தான் சந்தித்ததாக கூறியுள்ள திரு சம்பந்தன், தேவைப்பட்டால் சனாதிபதி பொது வேட்பாளராக நிறுத்தப்படவுள்ள முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவையும் சந்திக்கபோவதாகவும் கூறியுள்ளார்.சனாதிபதி தேர்தலில் தமிழ்மக்கள் யாரை ஆதரிக்கபோகின்றனார்கள் என்ற நிலையில் சந்திப்புக்கள் நடைபெற்றுள்ளது. சனாதிபதி மகிந்தராஜபக்ஷ தமிழ்மக்களுடைய ஆதரவை கேட்டுள்ளார். சனாதிபதி தேர்தலுக்கு இன்றுவரை ஏழு பேர் கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளதாக தேர்தல் திணைக்களம…
-
- 2 replies
- 747 views
-
-
இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு வந்து நீண்ட காலமாக வாழும் தமிழர்களின் நலனை பாதுகாக்க முதல் அமைச்சர் கருணாநிதி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.அவர்களுடைய அடிப்படை பிரச்சினைகளையும், வாழ்வாதாரத்தையும் மையமாக வைத்து அண்மையில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்தார். அந்த நிதியில் இருந்து தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் பல பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இலவச டி.வி.க்கள் வழங்க ரூ. 4 கோடியே 54 லட்சத்து 49 ஆயிரம், ஒதுக்கப்பட்டு ள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகளுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பெருமாள்புரத்தில் அமைச்சர் மைதீன்கான் வண்ண தொலைக்காட்சி வழங்கும் சேவையை துவக்கி வைத்தார். http:/…
-
- 0 replies
- 812 views
-
-
பல கேள்விகளுக்கு பதில் தரவேண்டிய பொறுப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு...! அண்மையில் எனது பழைய நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் சமூக அரசியல் விடயங்களில் அதிக அக்கறையும் அவற்றை ஆழ்ந்து நோக்கும் தன்மையும் கொண்டவர். இருவரும் தற்போதைய இலங்கை அரசியல் நிலைமை பற்றி ஒரு சிறிய அரசியல் அலசல் நடத்தினோம். எமது உரையாடலிடையே ஒரு கூற்றினை அந்நண்பர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் தொடர்ச்சியாக இருந்து வரும் சாபக்கேடு அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைமைகளும் தான். அவற்றின் அடிப்படைகளையும் இருப்பையும் அரசியல் ரீதியில் மக்கள் உரியவாறு அடையாளம் காணாதவரை இந்நாட்டில் எவருக்கும் விமோசனம் வரப்போவதில்லை என்பதே அவரது கூற்றாக இருந்தது. ஆழமான அரசியல் அர்த்தமுடைய அக்கூற்றுடன் தற்போதைய அரச…
-
- 0 replies
- 959 views
-
-
வாழைச்சேனை கடற்கரை பகுதியிலின்று மதியம் துப்பாக்கி சூடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த துப்பாக்கி சூட்டு சத்தங்களை கேட்ட மக்கள் ஆங்காங்கே சிதறி ஓடியதுடன் ஆங்காங்கே வெளியில் குழுமியும் இருந்தனர். ஆனால் இதுவரை எவரும் காயமடைந்த, கொல்லப்பட்டமை தொடர்பாக தகவல்கள் இல்லை என்று தெரிவித்துள்ளனர் பொலிசார். தொடர்ந்து அங்கு இருப்பவர்களிடமும், சூட்டு சத்தம் கேட்டதுடன் சிதறி ஓடி தஞ்சமடைந்தவர்களிடமும் விசாரணைகள் இடம்பெறுகின்றன என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
-
- 2 replies
- 710 views
-
-
இலங்கை அரசாங்கம் தாம் முழு தமிழ் அகதிகளுக்கும் நடமாட்ட சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறுகின்றது. ஆனால் இன்னமும் 11,000 தமிழ் இளைஞர்களையும், சிறுவர்களையும் அடைத்து வைத்திருக்கின்றது. புனர்வாழ்வு முகாம் என்ற பெயரில் இவர்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கூட பார்க்க முடியாத அளவிற்கு தடுத்து வைத்திருக்கின்றது. இந்த சிறுவர்களும் இளைஞர்களும் பெண்களும் உண்மையாக புலி உறுப்பினர்கள் என கருத முடியாது. அத்துடன் சந்தேகத்தின் பேரிலும் முகாம்களில் கைது செய்யப்பட்டவர்களும் இங்கு இருக்கின்றார்கள். தவிர முக்கிய விடுதலைப்புலிகள் யாருமே பார்க்கமுடியாத இடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தலைவர் பிரபாகரனின் பெற்றோர்கள் கூட இலங்கையின் சித்திரவதை கூடமான 4ம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன…
-
- 0 replies
- 511 views
-
-
இலங்கை அரசாங்கமும் இராணுவமும் தமிழ் மக்களுக்கு எதிரான போரில் மனித உரிமை மீறல்களிலும், யுத்த குற்றங்களிலும் ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டை விசாரணை செய்வதற்கான அமர்வு ஒன்று அயர்லாந்து, டப்ளினில் நடைபெறவுள்ளது. ஜனவரி 14, 15 இல் இடம்பெறும் இந்த விசாரணையில் ஜனவரி 16 இல் முடிவுகள் வரலாம்.சுயாதீனமாக மக்கள் மன்றம் ஒன்றினால் இந்த விசாரணை நடாத்தப்படுகின்றது.இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கையினை கண்டித்துள்ளதுடன் ஜனாதிபதி தேர்தல் வரும் வேளை இந்த விசாரணை இடம்பெறுவது அரசியல் உள் நோக்கம் கொண்டது எனவும் தெரிவித்துள்ளது. போரில் பாதிக்கப்பட்ட தனிநபர்களின் சாட்சியங்களை அடிப்படையாக வைத்து இலங்கை மற்றும் வெளிநாட்டு மனித உரிமைகள் அமைப்புக்கள் ஆகியன இணைந்து இந்த நடவடிக்கையினை மேற்கொள்வதாக கூறப்படு…
-
- 0 replies
- 742 views
-
-
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியில் உள்ள மருதனார்மடம், சுன்னாகம் மற்றும் மல்லாகம் பகுதிகளில் இராணுவத்தினர் பயணிகளை சோதனையிடும் நடவடிக்கையில் நேற்றுக் காலையில் ஈடுபட்டனர். பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் மற்றும் தமது கடமைகளுக்காக யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றவர்கள் அனைவரும் வாகனங்களில் இருந்து இறக்கப்பட்டு அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டன. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இத்தகைய சோதனை நடவடிக்கைகள் இடம் பெற்றன. இதனால் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
-
- 0 replies
- 595 views
-
-
வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம் மக்களுக்கு நடமாடும் சுதந்திரம் வழங்கப்பட்ட முதல் மூன்று நாட்களில் 22 ஆயிரத்து 443 பேர் முகாமிலிருந்து வெளியில் சென்றிருப்பதாகவும் இவர்களில் 9142 பேர் மட்டுமே திரும்பவும் முகாம்களுக்கு வந்திருப்பதாகவும் மனித உரிமைகள் மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான விசேட மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், "வெளியேறிச் செல்லும் மக்களுக்கு நாம் எந்தவித கட்டுப்பாடுகளையும் விதிப்பதில்லை. வராதவர்களைத் தேடிப் பாதுகாப்புத் தரப்பினர் செல்ல மாட்டார்கள். அவர்கள் விரும்பியபோது மீண்டும் வரலாம்.என்று கூறியுள்ளார் மஹிந்த சமரசிங்க.
-
- 0 replies
- 622 views
-
-
தமிழ் மக்கள் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மிகமுக்கியமாக கருத்திலெடுக்க வேண்டியவை 1. தமிழினப் படு கொலையை செய்த அரசு தூக்கி எறியப்பட வேண்டும் 2. ஒரு அரசு தூக்கி எறியப்படும் போது உலகம் தமிழர்களது நிலையினைப் புரிந்து கொள்ள உதவும். இல்லாவிடில் நடந்து முடிந்த யுத்தத்தம் சரியானது என்பதை தமிழர்கள் ஏற்றுக்கொண்டள்ளனர் என்பதாகிவிடும் 3. வடகிழக்கு பிரிந்திருப்பதை தமிழர்கள் விரும்புகிறார்கள் என்றாகிவிடும் 4. எதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்கள் ஆகவே துரோகிகளின் கூடாராமாக இருக்கும் மகிந்த அரசு தூக்கியெறியப்படவேண்டும். 5. சரத்பொன்சேகா இராணுவத்தின் தளபதியாக இருந்தாலும் அவரையும் வழிநடத்திய மகிந்த குடும்ப அதிகாரத்தைப் பறிக்க வேண்டும் 6. எங்களது பாராளுமன்ற உறுப…
-
- 8 replies
- 927 views
-
-
. ஜனாதிபதி தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு ? கருத்துக்கணிப்பு !!! ஸ்ரீலங்காவில் வரும் தைமாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருப்பதால் , யாழ் களத்தில் அண்மைய அநேகமான பதிவுகளும் , கருத்துக்களும் ....... யாருக்கு வாக்களிப்பது ....., என்னும் குழப்பநிலையில் உள்ளதை காணமுடிகின்றது. வரும் ஜனாதிபதி தேர்தலில் , உங்கள் வாக்கு யாருக்கு என்பதை மேல் உள்ள இடத்தில் போட்டுவிடுங்கள். முக்கிய குறிப்பு ; நீங்கள் இரு வாக்குகளை போடலாம். ஏற்கெனவே ஒரு வாக்கு அளித்தவர்கள் , உங்கள் வாக்கை அழித்துவிட்டு (Delete My Vote) மீண்டும் இரு வாக்குகளை போடவும். .
-
- 25 replies
- 3k views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமிழ் மக்கள் மீது திடீர் அக்கறையும் அன்பும் ஏற்பட்டுள்ளதாக கூறும் இடதுசாரி முன்னணி அந்த அக்கறையும் அன்பும் தேர்தலை நோக்காக கொண்டதேயன்றி உண்மையானதல்ல எனவும் தெவித்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதில் எமக்கும் உடன்பாடு உண்டு. ஆனால், அதன் மூலம் மாத்திரம் ஜனநாயகம் மலரப்போவதில்லை. மாறாக தமிழ் மக்களுக்கு சுயநிர்ணயத்துடன் கூடிய நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். அதன் மூலமே அனைத்து மக்களும் ஐக்கியத்துடன் வாழும் ஜனநாயகம் மலரும் என்று இடதுசா முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெவித்தார். நிப்போன் ஹோட்டல் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் ம…
-
- 0 replies
- 584 views
-
-
சீருடை மாறியதும் பேச்சுக்களும் மாறுகின்றன என்று மனித உமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். குறித்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் சமரசிங்க அகதி மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான விபரங்களை ஊடகங்களுக்கு தெவித்தார். இதன்போது கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர் ஒருவர் அரசாங்கம் நிலக்கண்ணிவெடிகளை முறையாக அகற்றாமல் மக்களை மீள்குடியேற்றம் செய்வதாக ஜெனரல் சரத் பொன்சேகா அண்மையில் தெவித்திருந்தார் என்றும் அது தொடர்பில் உங்கள் கருத்து என்ன என்றும் வினவினார். எனினு…
-
- 0 replies
- 610 views
-
-
களுத்துறை நகரில் அமைக்கப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேக்காவின் புகைப்படத்துடன் கூடிய கட்அவுட்டுக்கள் கடந்த 29ம் திகதி இனந்தெரியாத சிலரினால் அகற்றப்பட்டமைக்கு எதிராக களுத்துறை நகரில் நேற்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. சரத் பொன்சேக்காவின் புகைப்படத்தை ஏந்திய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் விஜேமான, மாகாண சபை உறுப்பினர் பி.டி.அபேரத்ன தலைமையில், களுத்துறை நகரில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், பொன்சேக்காவின் படத்தைத் தாங்கியவாறு களுத்துறை நகரில் பேரணியொன்றையும் நடத்தியுள்ளனர். இங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுபபினர் லக்ஸ்மன் விஜேமான, யுத்தத்தின் மூலம் நாட்டைக் காப்பாற்றிய இராணுவத்தினரின் படங்களை அழிப்பதற்…
-
- 7 replies
- 919 views
-
-
கொழும்பு, டிச. 4- இலங்கையில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. ராஜபக்சேயின் தம்பி பசில் ராஜபக்சே கம்பகா மாவட்டத்தில் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் மகன் விமுக்தியை நிறுத்த திட்டமிட்டுள்ளனர். விமுக்தி தற்போது லண்டனில் கால்நடை மருத்துவராக உள்ளார். http://www.maalaimalar.com/2009/12/04155622/CNI0300401209.html
-
- 3 replies
- 1.3k views
-
-
புலம்பெயர் தமிழர்களின் பலத்தைச் சிதைப்பதற்கான பல சதித் திட்டங்கள் அரங்கேறுவதற்கு ஆயத்த நிலையில் துரோகத் தமிழர்கள் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகை தகவல் தெரிவித்துள்ளது. ஈழநாடு பத்திரிகை தனது கட்டுரையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- தமிழீழ மக்கள் வரலாறு காணாத சோகத்தைச் சுமந்து, அழுவதற்கும் விதி அற்றவர்களாக, அடிமைப்படுத்தப்பட்டு, அடக்கப்பட்டுள்ளார்கள். அந்த சோகத்தைப் புலம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பான்மையினர் இதயத்தில் சுமந்து வகை தேடி அலைகின்றார்கள். ஒன்றிணைந்து போராடுகின்றார்கள். தமிழீழ விடுதலைப் போரின் இன்றைய பின்னணிக்கு எதிரிகள் மட்டும் காரணமல்ல. சிங்கள இனவாத அரச படைகளை தமிழர் தரப்பில் விடுதலைப் புலிகள் தனி…
-
- 3 replies
- 976 views
-
-
மகிந்த தோல்வியடைந்த பின்னர் அவர் செல்வதற்கு நாடொன்று இருக்கின்றா என்று ஆராய்வதற்கே நான் வெளிநாடு சென்றேன் - சோமவங்ச ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸ தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் செல்வதற்கு நாடொன்று இருக்கின்றா என்பதை ஆராயவே தான் வெளிநாடு சென்றதாக ஜே.வி.பி.யின் தலைவர் சோமவங்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். இதன்போது தான் ஆறு நாடுகளுக்குச் சென்றதாகவும் அந்த நாடுகளில் எந்த நாடும் மகிந்தவை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லையெனவும் சோமவங்ச கூறியுள்ளார்.ஆத்துடன், பொது வேட்பாளர் சரத் பொன்சேக்கா ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றவுடன் இலங்கைக்கு ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகைக் கிடைக்கும் என்பது உறுதி எனவும் கூறியுள்ளார். வெளிநாட்டுப் பயணத்தின் பின்னர் நேற்று நாடு திரும்பிய அமரசிங்க கட்டுந…
-
- 4 replies
- 846 views
-
-
விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி. என்ற குமரன் பத்மநாதனிடமிருக்கும் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குக்களை அரச உடமையாக்க அனுமதி வழங்குமாறு சர்வதேச இணக்கச் சபையிடம் அரசாங்கம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கே.பி.யிடமிருக்கும் சகல சொத்துக்களும் அவரது உண்மையான தகவலின் அடிப்படையில் இல்லாமை மற்றும் இந்தப் பணம் வியாபார நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட பணம் என்பதால் அது ஒருநாட்டிற்குரிய சொத்து எனத் தீர்மானிப்பது சிரமம் என்பதாலேயே இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், இதற்கு முன்னர் சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்டிருக்கும் கே.பி.க்குரிய பணத்தைப் பெற்றுக்கொள்ள அந்த வங்கியிடம் அரசாங்கம் விடுத்த …
-
- 3 replies
- 1.9k views
-