ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
"போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் அனைத்துலக நியமங்களுக்கு அமைவாகவே அமைக்கப்பட்டுள்ள. அங்கு பாதுகாப்புக்காகவே முட்கம்பி வேலிகள் போடப்பட்டுள்ளன" என சிறிலங்கா அரசுக்கு சான்றிதழ் வழங்கியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், உடனடியாக தாம் மீள்குடியேற்றப்பட வேண்டும் என அவர்கள் கோருகின்றார்களே தவிர வேறு எதனையும் கோரவில்லை எனவும் தெரிவித்திருக்கின்றார். போரினால் இடம்பெயர்ந்த மக்களுடைய நிலை தொடர்பாக நேரில் பார்வையிடுவதற்காக கொழும்பு வந்த தமிழக காங்கிரஸ் - திமு.க. அணியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணம் சென்றிருந்தார்கள். யாழ்ப்பாண பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்ற பொதுமக…
-
- 0 replies
- 395 views
-
-
சிறிலங்காவிற்கு ஐந்து நாள் பயணம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று அரச தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேசி உள்ளது. வன்னி வதை முகாம்களில் உள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போது இந்தியக் குழுவினர் வலியுறுத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 328 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்றை ஒஸ்லோவில் நடத்த அனுமதித்தமை குறித்து நோர்வே மீது சிறிலங்கா அரசு சீற்றம் கொண்டுள்ளது. கொழும்பில் உள்ள நோர்வேத் தூதுவரை இன்று வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்த அமைச்சர் ரோகித போகொல்லாகம அரசின் அதிருப்தியைப் பதிவு செய்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 657 views
-
-
தழிழர்களின் உணர்வாளர் திருமாவின் குரலை காணவே இல்லை வன்னி முகாமில் கண்டு வந்ததை ஏதாவது ஒரு இந்தியன் பத்திரிகைக்கு அவர் சொல்ல வேண்டும் அல்லது சொல்விக்க படவேண்டும். பேட்டி எடுப்பதற்கு சரியான ஆள் சாத்திரி அல்லது இந்கு உள்ள யாராவது இதை செய்து அவர் என்ன கண்டு வந்தார் என்பதை இந்திய மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் . டி.ஆ.ர் பாலுவுக்கு என்ன துணிவு எங்கள் மண்ணில் போய் எங்களின் பெண்ணை அழ வைப்பதற்கு?
-
- 3 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவில் அரச தலைவர் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக ஒரே நேரத்தில் நடத்தப்படும் என அரச வானொலி அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 474 views
-
-
அவுஸ்திரேலியாவில் அகதி நிலை அடைக்கலம் கோரும் நோக்குடன் சென்றுகொண்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் சிறிலங்காவைச் சேர்ந்த பலர் தமது கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என இந்தோனேசியா தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 335 views
-
-
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களிடம் மிரட்டிப் பணம் பறித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் 22 தமிழர்கள் மீது நேற்று திங்கட்கிழமை விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 451 views
-
-
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஏனைய உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களும் விரைவில் நடத்தப்படும் என சிறிலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்திருக்கின்றார். யாழ். மாநகரசபைக்கு அண்மையில் நடத்தப்பட்ட தேர்தலிலின் மூலம் மேயராகத் தெரிவு செய்யப்பட்ட திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவின் பதவியேற்பு வைபவம் அரசுத் தலைவரின் செயலகத்தில் நடைபெற்ற போது நிகழ்த்திய உரையிலேயே இதனை மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முன்னுரிமை அடிப்படையில் மீள்குடியேற்றப்படுவார்கள் எனவும் இங்கு குறிப்பிட்ட அரசுத் தலைவர், இந்த மண்ணில் இனவாதம் எந்த வடிவத்திலாவது மீண்டும் தலையெடுப்பதற்குத் தான் அனுமதிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார். யாழ் மாவ…
-
- 0 replies
- 935 views
-
-
தமிழர்களை சந்திப்பதற்கு இலங்கை அரசு எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை: டி.ஆர்.பாலு இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களை சந்திப்பதற்கு அந்நாட்டு அரசு எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார். கடந்த 10ஆம் தேதி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் இலங்கை சென்றுள்ள திமுக கூட்டணி எம்.பி.க்கள் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணம் சென்றனர். அங்கு பொதுமக்களை சந்தித்து பேசியதுடன் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர். பின்னர் வவுனியாவில் உள்ள பெனிக்பார்ம் அகதிகள் முகாமுக்கு சென்று குறைகளை கேட்டறிந்தனர். ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் குறித்து டி.ஆர்.பாலு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வவுனியா பெனிக் பார்ம…
-
- 3 replies
- 1.7k views
-
-
இன்றைய சன் பத்திரிகை இப்படி கூறுகிறது! http://www.thesun.co.uk/sol/homepage/news/...l#ixzz0TQlFLnFF இது பற்றிய உண்மைகளை யாராவது தருவார்களா? வன்னியில் மிகப்பெரும் அவலம் நடந்து கொண்டிருக்கையில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராடினர். அவர்கள் தங்கள் சக உறவுகளுக்காகத் துடித்தனர். பரமேஸ்வரன் சுப்பிரமணியத்தின் உண்ணாவிரதப் போராட்டம் பிரித்தானிய அரசு வழங்கிய இரகசிய உறுதிமொழியை அடுத்தே தனது போராட்டத்தை கைவிட்டதாகத் தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது ஸ்கொட்லன்ட் யாட் விடயத்தை அம்பலப்படுத்தி உள்ளது. லண்டனில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் சுப்பிரமணியம் (28) உண்ணாவிரதம் இருந்த காலத்தில் மக்டோனால்ட் சாப்பிட்டுள்ளதை ஸ்கொட்லன்ட் யாட் பொலிஸார் தங்கள் நு…
-
- 98 replies
- 12.6k views
-
-
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழக பாராளுமன்றக் குழுவினர் செய்தியாளர்களைச் சந்திப்பதைத் தவிர்க்கின்றனர். அவர்கள் பார்வையிட்ட அகதி முகாம்களின் நிலைவரங்கள் மற்றும் அவர்களின் கருத்துக்கள் குறித்து அறிய முயற்சித்த போதிலும், அது சாத்தியமான பயனை அளிக்கவில்லை. தமிழக எம்.பி.க்களின் தூதுக் குழுவிற்குத் தலைமை தாங்கிய முன்னாள் அமைச்சர் ஆர்.தங்கபாலுவை சந்தித்து பேச முயற்சித்த போதிலும் அது கிட்டவில்லை. தமிழக முதல்வரின் மகளும் எம்.பி.யுமான கனிமொழியை அணுகியபோது அவர் "நோ கொமன்ட்ஸ்' என்று கூறி ஒதுங்கிக் கொண்டார். இலங்கை விவகாரத்தில் தமிழ் மக்களுக்காக தமிழகத்தில் அதிகம் குரல் கொடுத்தவரும் விடுதலை சிறுத்தைகள் அணியின் தலைவருமான திருமாவளவனைச் சந்தித்தபோது அவரும் செவ்வியளிக்க மறுத்ததுடன், ஓர…
-
- 0 replies
- 793 views
-
-
கலைஞரின் திரைக் கதை வசனத்துடன் மீண்டும் ஒரு ‘இந்தியத் துரோகம்’ - பாரிஸ் ஈழநாடு சிங்களத்திற்குப் பலி கொடுக்க வெள்ளாடுகள் தனது பட்டியில் இருக்கவேண்டும் என்ற இந்தியாவின் எண்ணத்தை நிறைவேற்றவே கலைஞர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதி மீண்டும் ஒரு இந்தியத் துரோகத்திற்குத் துணை போயுள்ளார். இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு இன்றைய பத்திரிகை தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- ஈழத்தமிழ் மக்கள் மீதான சிங்கள தேசத்தின் இன அழிப்பு உச்சக் கட்டத்தை அடைந்திருந்த வேளையில், தமிழகத்தின் தமிழுணர்வாளர்கள் பொங்கி எழுந்தார்கள். ஈழத்தில் தமிழர்கள் ஒட்டு மொத்தமாக அழிந்தாலும் பரவாயில்லை, தன் ஆட்சியைத் தக்க வைப்பதற்காக காங்கிரஸ் கட்சியைப் ப…
-
- 2 replies
- 1.5k views
-
-
எனக்கு இன்றுதான் இந்த ஈமெயில் வந்தது. என்ன செய்யலாம் இவன்களை? Dear Friends, You are cordially invited to the Lunch & Meeting with Mr P.M.Amza Deputy High Commissioner for Sri Lanka in the United Kingdom Hosted by The Human Rights Action Group H-RAG ( UK ) Venue: Palm Beach Restaurant 17. Ealing Road Wembley Middlesex. HA0 4AA Date: Sunday, 11th October 2009 Time: 12.00 Noon to 3.00 PM Topics for Discussion: Peace and reconciliation among Sri Lankans Free Movements of IDPs Respect for Human Rights Implementation of Rule of Law and Separation of Powers Please join us for …
-
- 2 replies
- 1.7k views
-
-
''தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். நாகப்பட்டிணத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்குக் குடியிருப்பு உரிமை வழங்கலாம் என மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்திருப்பது நியாயமானதல்ல. இந்தியாவில் ஓராண்டு காலம் தங்கியிருந்து, எவ்வித குற்றத்திலும் ஈடுபடாமல் இருந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கலாம் என சட்டம் உள்ளது. எனவே, இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க எந்தத் தடையும் இல்லை. இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை …
-
- 0 replies
- 717 views
-
-
கைதடி தடுப்பு முகாமில் விடுவிப்பதற்காக வவுனியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாணவிகள் இன்று காலை இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக படைத்தரப்பில் இருந்து செய்திகள் தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் 20 திகதி வவுனியாவிலரந்து இந்த மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களுடன் 57 மாணவர்கள் கொண்டு செல்லப்பட்டு அவர்கள் கடந்தமாதம் 28ஆம் தகதி விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இரண்டு தொகுதி மாணவர்கள் விடுவிக்கப்பட்டபோதும் குறித்த மாணவிகள் விடுவிக்கப்படாது இருந்தனர். இன்றைய தினம் 47 மாணவர்கள் உட்பட முடும்பத்தினருடன் 57போ விடுவிக்கப்பட்டபோது இன்று காலையில் குறித்த மாணவிகள் இராணுவத்தால் கொண்டு செல்லப்பட்டள்ளனர். இவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைப் பற்றியு…
-
- 10 replies
- 2k views
-
-
சென்னையில் தமிழினப் பாதுகாப்பு மாநாடு; ஐ.நா.விற்கு கோரிக்கைப் பேரணி திங்கள், 12 அக்டோபர் 2009( 16:04 IST ) இலங்கையின் வன்னி முகாம்களில் வதைபடும் ஈழத்தமிழர்களை விடுவிக்கவும், தமிழீழ விடுதலை குறித்து பொது வாக்கெடுப்பு நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஐ.நா.-வின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னையில் இன்று காலை பிரமாண்ட பேரணி நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து பங்கேற்ற இந்தப் பேரணி சென்னை அண்ணா சாலை மன்றோ சிலையில் இருந்து காலை 11 மணியளவில் புறப்பட்டது. கோவை கு. இராமகிருட்டிணன் பேரணிக்குத் தலைமை தாங்கினார். ஹென்றி டிஃபேன், ஓவியர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி. த…
-
- 0 replies
- 1k views
-
-
Invitation for a discussion with Professor Tissa Vitarana - Minister of Science and Technology & Chainman of All Party Representative Committee (APRC). You are invited for a discussion with Professor Tissa Vitarana regarding the recent political development in Sri Lanka and the current state of the APRC. Please note we intend to give more time for discussion rather than a speech. Date : Sunday 18th October 09 Time : 3.30 PM - 6.30 PM Venue Star Lounge 32 Station Approach Harrow Weald Middlesex HA3 5AA…
-
- 2 replies
- 1.7k views
-
-
http://epaper.dinamani.com/epaperimages/12...-01/3557828.JPG
-
- 0 replies
- 1.3k views
-
-
சனீஸ்வரன் தலைமையில் இலங்கை வந்த தமிழக எம்.பிக்கள் குழு – யாழ்.வலம்புரி நாளிதழ் இலங்காபுரிக்கு முன்பு அனுமன் வந்தான்! இப்போ சனீஸ்வரனும் வந்துவிட்டார் என தமிழக பாரளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் யாழ்ப்பாண விஜயம் தொடர்பில், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி நாளிதழின் ஆசிரியர் தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் வலம்புரி நாளிதழின் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- தமிழக எம்.பிக்கள் குழு நேற்று யாழ்ப்பாணத்திற்கு வந்தது. வழக்கப்படி மங்கள வாத்தியம், பொன்னாடை, மலர்மாலை, வரவேற்ப்பு பாடல், நினைவுப் பரிசு என தடல் புடலான ஏற்பாடு. இவை எதுவுமே வேண்டாம்.தமிழர் பிரச்சினையை கூறுங்கள் என அவர்கள் தெரிவித்த போதிலும், அதனை எம்மவர்கள் ஏற…
-
- 3 replies
- 1.3k views
-
-
இந்தியா நீங்கள் கெளரவமாக வாழ உதவும் என டி.ஆர்.பாலு கூறியிருக்கின்றமை அவரது கட்சியின் குரலா அல்லது காங்கிரஸ் இன் குரலா அல்லது பாலுவின் குரலா?இலங்கை சென்றுள்ள இந்திய குழு இந்திய அரசாங்கம் சார்பாக செல்லவில்லை அவர்கள் கட்சி சார்பாக சென்றுள்ளது என ஒவ்வொரு நாளும் தமிழக முதலமைச்சர் அறிக்கைவிட்டுக்கொண்டுள்ளார
-
- 1 reply
- 1.7k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் ஐந்து மாதங்களுக்கு முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கனடிய நாட்டு குடிமகனான இரத்தினராஜா துஷ்யந்தன் (வயது 35) இதுவரையில் விடுதலை செய்யப்படவில்லை என கனடிய தமிழ் காங்கிரஸ் தெரிவித்திருக்கின்றது. உலக வங்கியின் நிதி உதவியில் செயற்படும் செயற் திட்டம் ஒன்றில் இணையத் தொழில்நுட்ப ஆலோசகராகப் பணியாற்றும் இவர், அவரது அலுவலகத்துக்கு முன்பாக கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் நாள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 1989 ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயர்ந்த துஷ்யந்தன், 2002 ஆம் ஆண்டில் மீண்டும் கொழும்பு திரும்பியிருந்தார். ஐந்து மாத காலத்துக்கு முன்னர் கைது செய்யப்பட்ட இவர் மீது குற்றச்சாட்டுக்கள் எதுவும் தெரிவி்க்கப்படாத ந…
-
- 0 replies
- 588 views
-
-
சிறிலங்காவுக்கான ஐந்து நாள் பயணம் மேற்கொண்டு வந்துள்ள தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, வடபகுதியில் உள்ள முகாம்களுக்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிடுவதையிட்டு வரவேற்பு தெரிவித்திருக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், தமக்கு சாதகமான அறிக்கை ஒன்றை இவர்களின் பயணத்தின் மூலமாகப் பெற்றுக்கொள்வதுதான் சிறிலங்கா அரசின் நோக்கமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். இவ்வாறு நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்த மனோ கணேசன், உண்மை நிலைமைகளை மூடிமறைப்பதற்கே அரசு முயற்சிக்கலாம் எனவும் சுட்டிக்காட்டினார். அதனால் இடம்பெயர்ந்த முகாம்கள் தொடர்பாக ஆராய்ந்து, அங்குள்ள உண்மையான நிலை தொடர்பாக சுயாதீனமான அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் எனவும் மனோ கணேசன்…
-
- 0 replies
- 854 views
-
-
தமிழக மீனவர்கள் மீதான சிறீலங்கா கடற்படையின் தாக்குதல்களின் மர்மம் என்ன? – காந்தன் சிறீலங்கா கடற்படையினால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும் காயப்படுத்தப்படுவதும் மீன்கள் கொள்ளையிடப்பட்டு துரத்தப்படுவதும் நிர்வாணமாக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுவதும் தமிழகத்தில் வழக்கமான செய்திகளாகி விட்டன. சிறீலங்காயில் விடுதலைப்புலிகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு வடக்கு கிழக்கு கடலில் அமுல்ப்படுத்தப்பட்டு இருந்த மீன்பிடித் தடைகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசே தெரிவித்துவரும் நிலையில் தமிழக மீனவர்கள் மீதான சிறீலங்கா கடற்கடையின் தாக்குதல்கள் தெரிவிக்கும் செய்திதான் என்ன? இந்திய பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத ஊடுருவலை தடுப்பதற்காக இந்தியாவினால் மேற்கொள்…
-
- 0 replies
- 831 views
-
-
சொல்கிறேன் உறுதி கொண்ட நெஞ்சையுடைய தமிழனாக நிமிர்ந்து நில் துணிந்து செயற்படு விரைந்து செல் சுமார் நாலரை நூற்றாண்டுகள் ஆட்சி செய்த ஜரோப்பியர்கள் இவ்விலங்கைத் தீவிலிருந்து வெளியேறிய பின்னர், ஆட்சியதிகாரத்தைத் தாம் கையகப்படுத்திய சிங்களவர்கள், தமிழர்களாகிய எம்மை இத்தீவிலிருந்து அழித்தொழிப்பதற்காகக் கையாண்ட வழிமுறைகள் எதுவுமே இரகசியமானவையல்ல. பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் வாழ்ந்து வரும் எமது மரபுவழித் தாயகத்தை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் மூலம் வன்கவர் செய்து எமது மக்களைத் துப்பாக்கி முனையில் அவ்வாழ்விடங்களிலிருந்து விரட்டுதல், எமது கல்வி வளங்களை அழித்தல், 1956, 1958, 1965, 1977, 1983 ஆகிய ஆண்டுகளில் அரச ஆதரவுடன் நடந்தேறிய தமிழருக்கெதிரான தமிழினப் படுகொலைகள் மூ…
-
- 0 replies
- 1.3k views
-
-
தொல்பொருள் சாஸ்திரம் என்ற பெயரில் யாழ் டச்சுக் கோட்டை தொல்பொருள் சாஸ்திர திணைக்களத்தினரால் புனரமைக்கப்படவுள்ளது. இது யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் உயர் அதிகாரிகள் மற்றும் சிங்கள பௌத்த யாத்திரிகர்களின் தங்குமிடமாக அமையப்போவதாக அறிக்கைகள் கூறுகின்றன. யாழ் கோட்டையானது உண்மையில் போர்த்துக்கேயரால் கட்டப்பட்டபோதும், பின்னர் டச்சுக் காரர்களால் மாற்றியமைக்கப்பட்டது. இப்போது உள்ள கட்டடம் டச்சுக் காரர்களால் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கட்டடமாகும். யாழ் மக்களை கொடுங்கோலர்கள் ஆட்சி செய்ததற்கான அடையாளமே அது என்பதை எப்போதும் மறுக்க முடியாது. ஆனால் அக்கோட்டைக்கு செந்தக்காரர்களான தமிழர்களின் நாகரிக சொத்தாக என்றுமே அது ஆகமுடியாது. சுதந்திரம் கொடுக்கப்பட்டது எனக் கூறப்படும் கா…
-
- 0 replies
- 926 views
-