Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கோத்தபாய ராஜபக்க்ஷவை அமரிக்க பிரதி இராஜாங்க செயலர் சந்திக்க மறுப்பு? அமெரிக்காவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை ராஜாங்க செயலாளர் றொபர்ட் ஒ பிளேக்கை சந்திக்க முயற்சித்த போதிலும் கோத்தபாயவுடன் தொலைபேசியில் உரையாடுவதைக்கூட பிளேக் நிராகரித்துள்ளார். பிளேக் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றி வந்துள்ளார். அவர் இலங்கையில் தூதுவராக பணியாற்றிய போது, கோத்தபாய, அவரை பயங்கரவாதியொருவரை போன்றே கருதியே செயற்பட்டு வந்தார். ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, தனது சகோதரான கோத்தபாய ராஜபக்ஷவை சந்திக்குமாறு, றொபர்ட் ஒ பிளேக்கிடம் பணிவுடன் கோரிக்கை விடுத்திருந்த நிலையே…

    • 0 replies
    • 1.5k views
  2. வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாமில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட பலர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு சிறிலங்கா அரசை ஐ.நா. கேட்டுக்கொண்டிருக்கின்றது. போரினால் இடம்பெயர்ந்த சுமார் மூன்று லட்சம் மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள முகாம்களின் நிலை தொடர்பாக மனித உரிமை அமைப்புக்கள் தொடர்ச்சியாக முறைப்பாடுகளைத் தெரிவித்து வந்திருக்கின்றன. கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய மெனிக் பாம் முகாமின் ஒரு வலயத்தில் இருந்து மற்றொரு வலயத்துக்குச் செல்ல முயற்சித்த முகாம் வாசிகளைத் தடுத்து நிறுத்துவதற்கு படையினர் முற்பட்டபோது ஆத்திரமடைந்த முகாம் வாசிகள் படையினரைத் தாக்கியதாக ஐ.நா. வின் அறிக்…

    • 5 replies
    • 783 views
  3. விக்ரம், கொழும்பு 01/10/2009, 12:55 தேர்தல் களத்தில் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் நமால் ராஜபக்ச அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இடம்பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தனது புதல்வர் நமால் ராஜபக்சவை களமிறக்குவதற்கு சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோன்று மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரர் சமால் ராஜபக்சவின் புதல்வர் சசீந்திர ராஜபக்சவும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவார் என்று தெரிய வருகின்றது. இதனிடையே, தற்பொழுது சிறீலங்கா பாதுகாப்புத்துறை செயலராகப் பதவி வகிக்கும் கோத்தபாய ராஜபக்சவும் இம்முறை தேர்தலில் போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பதிவு

  4. பிரித்தானியா செல்லும் மாணவர்களுக்கான விசா வழங்கும் நடைமுறையில் மாற்றம் பிரித்தானியாவுக்கு கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு விசா வழங்கும் நடை முறையில் இன்று முதல் மாற்றம் கொண்டு வரப்படுகின்றது என்று கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் அறிவித்துள்ளது. குறிப்பாக பிரிட்டனுக்குக் கல்வி கற்கச் செல்லும் மாணவர்கள் வங்கிக் கணக்கில் காட்டவேண்டிய பணத்தொகை சம்பந்தமான விடயங்களில் இம் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது இம்மாணவர்கள் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு குறைந்தது 28 நாள்களுக்கு முன்பாக தமது வங்கிக் கணக்கில் அல்லது பெற்றோர் / பாதுகாவலர் வங்கிக் கணக்கில் குறித்த பணத் தொகையைக் கட்டாயம் வைப்பிலிட்டிருக்க வேண்டும் என இம்மாற்றத்தின்…

  5. பிரித்தானியாவின் தொழிற்கட்சியின் மாநாட்டில் சிறிலங்காவிற்கு எதிராகக் கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் முன்னாள் கொறடா சொப்கைன் மக்டொனா இந்த விமர்சனங்களை முன்வைத்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 611 views
  6. 'நாடு கடந்த தமிழீழ அரசு' அமைப்பதற்கான செயற்குழுவின் அனைத்துலக ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் சிறப்பு பொதுக்கூட்டம் நோர்வேயில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 617 views
  7. ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு மக்களை மாற்றும் நடவடிக்கை நிறுத்தப்படவேண்டும்: அங்கிலிக்கன் ஆயர் சிறிலங்கா அரசாங்கம், ஒரு முகாமில் உள்ள தமிழ் மக்களை வேறொரு முகாமுக்கு மாற்றும் நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும் என அங்கிலிக்கன் தேவாலய தலைவர் வணக்கத்துக்குரிய ஆயர் டுலிப் டி சிக்கேரா கோரிக்கை விடுத்துள்ளார். இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களை உடனடியாக மீள் குடியேற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அங்கலிக்கன் திருச் சபையின் பேராயர் துலிப் டி சிக்கேரா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் இடம் பெயர் முகாம்களுக்குச் செல்ல அனுமதியளிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளை துரிதப்படுத்தி மக்களை த…

  8. சிறிலங்காப் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கி வந்த ஏற்றுமதி வரிச் சலுகை, நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை அடுத்து நீக்கப்பட்டு விட்டதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் எல்.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 648 views
  9. சிறிலங்கா அரச படையினரிடம் சரண் அடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்குப் புனர்வாழ்வு நடவடிக்கைகளை வழங்குவது தொடர்பாக டென்மார்க் நாட்டின் நீதித்துறை அமைச்சர் ஈ.எம்.எச்.கிர்ச் பாலினை சிறிலங்கா நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்புத் துறை அமைச்சர் மிலிந்த மொறகொட சந்தித்துப் பேசி உள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 582 views
  10. தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்கள் என வரையறுக்கப்பட்ட இயக்கங்களுக்கு அமெரிக்கக் குடிமக்கள் தார்மீக ஆதரவு வழங்குவதைத் தடை செய்யும் சட்டத்தின் செல்லுபடித்தன்மை குறித்து விசாரணை செய்வதற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் தயாராகி உள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 441 views
  11. இந்திய எதிர்ப்பு அரசியலும் ஈழத் தமிழர் போராட்டமும் - பிரம்மா இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டு அல்லது இந்தியா இலங்கை அரசியலில் நேரடியா தலையீட்டு 22 வருடங்கள் ஆகின்றன. இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் ஜந்து அம்ச கோரிக்கைகளை முன்நிறுத்தி சாத்வீக ரீதியாக போராடி உயிர்நீத்த தியாகி தலீபனின் 22வது வருடத்தை நினைவு கொள்ளும் இந்த சந்தர்ப்பத்தில் நமது அரசியல் முன்னெடுப்புகளில் நாம் தவிர்த்துச் செல்ல முடியாத சக்தியாக உருவெடுத்திருக்கும் இந்தியாவின் அணுகுமுறைகள் குறித்தும் இதில் நமது நிலைப்பாடு எவ்வாறு அமையலாம் என்பது குறித்தும் சிறிது அவதானிப்பதே இந்த கட்டுரையின் நோக்கம். இன்று நாம் ஒரு மிகவும் இக்கட்டான முட்டுச் சந்தியில் நிற்கிறோம் என்பதில் எவ…

  12. எனது விசா இரத்துக்கு இந்தியாவின் மத்திய அமைச்சில் இருக்கக்கூடிய தமிழ் அமைச்சர் ஒருவரே காரணம் என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைப் போராளி மருத்துவர் எலின் ஷான்டர் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 425 views
  13. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டு ஆயுத வர்த்தக நடவடிக்கைகளுக்கு தரகராகச் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சிங்கப்பூரைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 663 views
  14. கொழும்பில் உள்ள நோர்வேயின் தூதுவரை உடனடியாக வெளியேற்றுமாறு அரசை கோரியுள்ள தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் செயலாளர் விமல் வீரவன்ச, நோர்வேயுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் சிறிலங்கா துண்டித்துக்கொள்வதுடன், நோர்வேயின் தூதரகத்தையும் மூடிவிட வேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நோர்வே ஆதரவளித்தது என்பதும், சீனாவில் இருந்து எரித்திரியா ஊடாக சொல்ஹெய்மின் ஆதரவுடன் ஆயுதங்கள் கடத்தப்பட்டன என்பதும் இப்போது நிரூபணமாகியுள்ளது என கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் தெரிவித்த அவர், தொடக்கம் முதலே சமாதான முயற்சிகளில் நோர்வேயின் சம்மதத்தையிட்டு தான் சந்தேகித்ததாகவும் சுட்டிக்காட்டினார். விமல் வீரவன்ச நேற்று புதன்கிழமை நட…

    • 0 replies
    • 678 views
  15. இலங்கையின் வடபகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் சிறிலங்கா அரசின் செயற்பாடுகளுக்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரகம் 5 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கி உள்ளது. கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் இந்த உதவி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கு இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. ஜெனீவாவில் சிறிலங்கா மனித உரிமைகள் மற்றும் பேரிடர் நிவாரண அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கும் அகதிகளுக்கான ஐ.நா. தூதுவர் அன்டனியோ கட்டரஸ் ஆகியோருக்கு இடையே நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுக்களில் இந்த நிதி உதவிக்கான இணக்கம் காணப்பட்டது என ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது. அகதிகளுக்கான ஐ.நா. தூ…

    • 0 replies
    • 565 views
  16. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இன்னும் இறக்கவில்லை, அவர் 8 பேர் பாதுகாப்புடன் பத்திரமாக உள்ளார் என உளவுத்துறையினரிடம் அகதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள முகாம்களில் கியூ பிரிவு போலீசார் மற்றும் மாநில உளவு போலீசார் இலங்கைக்கு செல்ல விரும்பும் அகதிகள் விபரம், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றிய விவரம் உட்பட பல தகவல்கள் குறித்து கருத்து கேட்டுள்ளனர். இதற்கு அகதிகள் பதிலளிக்கையில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு தான் உள்ளார். அவர் 8 பேர் பாதுகாப்பில் பத்திரமாக உள்ளார். பிரபாகரன் இறந்ததாக இலங்கை அரசு நாடகம் ஆடுவதாகவும், பிரபாகரன் விரைவில் இலங்கையில் தோன்றுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இவர்களின் கருத்து அரசுக்கு அறிக்கையாக அ…

    • 9 replies
    • 1.7k views
  17. விழ விழ எழுவோம் என்னும் ஆவணத் திரைப்படம்(30 நிமிடம்) மறுமலர்ச்சிப் பாசறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மிகச் சுருக்கமாக தமிழன் வரலாற்றைக் கூறி, முள்ளிவாய்க்கல் அவலங்களைச் சித்தரித்து, பின்னர் இனி என்ன செய்யப்போகிறோம் என்றதை தெளிவுபடுத்தியுள்ள இந்த காணொளி பார்ப்பவர்களை கண் கலங்கவைக்கிறது, "விழ விழ எழுவோம் நாம் விழ விழ எழுவோம் ஒன்று விழ நாம் ஒன்பதாய் எழுவோம்" என்ற பாடல் வரிகள் உணர்ச்சிமிக்கதாக அமைந்துள்ளது. இந்த 30 நிமிட ஆவணப்படம் விரைவில் பிரித்தானியாவில் வெளியிட இருப்பதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏனைய ஜரோப்பிய நாடுகளிலும் தமது சொந்த நகரங்களிலும் இதனை வெளியிட விரும்புவோர் கீழ் காணும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும். கருதரங்குடன் கூடிய ஒரு விவரண படமாக இதை நீங…

  18. கலைஞரைத் திட்டாதீர்கள் என்றார் பிரபாகரன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் ஈழத்துக்கும் தி.மு.க. கூட்டணிக்கும் ஆதரவான நிலை வகிப்பது, தமிழகத்தில் மட்டுமல்லாது உலகத் தமிழர்கள் மத்தியிலும் கொந்தளிப்பைக் கிளப்பி இருக்கிறது. லண்டனில் உள்ள தமிழ் நண்பர்கள் சிலர் நம்மிடம், ''பிரிட்டன்வாழ் 'பொங்கிடு தீவு நண்பர்கள்' அமைப்பு ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்துகொள்ள சிறப்பு விருந்தினர்களாக திருமாவளவனும், தமிழருவி மணியனும் லண்டனுக்கு வந்தார்கள். தமிழ் ஈழத்துக்காக உயிர்நீத்த திலீபன், சங்கர் ஆகியோருக்கு வீர வணக்கம் செலுத்துவதும் விழாவின் திட்டம். சிறப்பான வரவேற்பு அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அதேசமயம், 'ஈழத்தை அழிக்க உதவிய கருணாநிதியுடன் ஏன் கூட்டு வைத…

    • 7 replies
    • 3.1k views
  19. தமிழீழ மக்கள் விடுதலை பெற்று பாதுகாப்போடும், மானத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழும் நிலை ஏற்படும் வரை முதல்வர் கருணாநிதி நடத்த இருக்கும் உலகத் தமிழ் மாநாட்டை தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என தமிழ் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை எடுக்க தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்தானாம். அதைத்தான் முதல்வர் கருணாநிதி இப்போது செய்ய நினைக்கிறார். வன்னிப் பெருநிலப்பரப்பில் ஆறாக ஓடிய தமிழ்மக்களின் குருதி காயுமுன்னர், அவர்கள் சொரிந்த கண்ணீர் வற்ற முன்னர், முதல்வர் கருணாநிதி ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை…

  20. ஐரோப்பிய நாடுகளில் துணை இராணுவக் குழுவின் தலைவர் கருணா சிறீலங்கா துணை இராணுவக் குழுக்களின் தலைவர்களில் ஒருவரான கருணா ஐரோப்பிய நாடுகளில் தங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த திங்கட்கிழமை ஆயுததாரி கருணா பிராங்போட் வானூர்தி நிலையத்தில் வைத்து பொதுமகன் ஒருவர் அவதானித்துள்ளார். இவர் சிறீலங்கா தூதரக அதிகாரிகள் மகிழுந்து ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். http://www.meenagam.org/?p=12077

  21. வவுனியா பூந்தோட்டம் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் சந்தேக நபர் ஒருவர் கைவிலங்குடன் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 21 வயதான கணேஸ் காளிதாசன் என்ற இளைஞரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். வவுனியா பூந்தோட்டம் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த இவர் வயிற்றில் உபாதை ஏற்பட்டுள்ளதாகக் கூறியதை அடுத்து அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சந்தேகநபர் மூன்று காவல்துறையினரின் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்ததாகவும், கடந்த 25ம் திகதி எவருக்கும் தெரியாமல் கைவிலங்குடன் தப்பிச் சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்…

  22. நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொல்லப்படடிருப்பது இந்திய அரசுக்கு கேவலமாக இல்லையா? ஈழத் தமிழர்களை கொன்று குவித்தது போதாதென்று சர்வதேச எல்லையிலும், இந்திய கடல் எல்லையிலும் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களையும் சிங்கள கடற்படை அடித்து உதைத்து, நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்வது இந்திய அரசுக்கு கேவலமல்லவா என்று வைகோ கேள்வியெழுப்பியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் இன்று மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து வைகோ பேசுகையில், தமிழர்களின் உரிமை காவு கொடுக்கப்படுகிறது. பல முனைகளில் இருந்து தமிழர்கள் மீது தாக்குதல் நடைபெறுகிறது. முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை மத்திய அரசு மதிக்கவில்ல…

  23. 2008 ஆம் ஆண்டின் முதல் வார நாட்கள். தீவிர மோதல்களால் மன்னார் களமுனை அதிர்ந்துகொண்டிருந்த காலம். தளபதி பாணு அவர்களைச் சந்திக்க விரும்பியிருந்தேன். மன்னாரில் எமது வழமையான பணிகளுடன், போகுமிடத்தில் பாணுவையும், களநிலவரத்தையும் கண்டு வரலாம் என்ற விருப்புடனான பயணம். பயணத்திட்டத்தை முறைப்படி தலைவருக்கு முன்வைக்கும் சந்திப்பு. தலைவரின் புருவம் உயர்கின்றது. ~இப்ப மன்னாருக்கு ஏன் போகவேண்டும்? ” நீ இப்போது அங்கு போய் என்ன செய்யப்போகின்றாய்?” தனது வழமையான கேள்விகளுக்கான பதில்களுடன் எமது தயார் நிலையைக் கண்ணுற்ற தலைவர் கூறுகின்றார். மன்னார் களமுனையின் பின்னணியில் எதிரியின் சிறப்பு அணிகள் நிலையெடுத்துள்ளன. பிரதான வீதிகளினூடான பயணம் பாதுகாப்பானதல்ல. இவை எதிரியின் வழமையான நகர்வுகள் என…

  24. இந்தியத் துரோகத்தால் நாம் இழந்தது போதும்! – பாரிஸ் ஈழநாடு தன்னிடம் ஒடுங்க மறுத்த சிறீலங்காவை அடிபணிய வைக்கும் மந்திரக் கோலாகவே ஈழத் தமிழர்களது பிரச்சினையை இந்தியா பயன்படுத்தியுள்ளது. இந்தியாவின் துரோகத்தால் நாம் இழந்தது போதும். இந்தியாவை நம்பி நாம் அழிந்தது போதும். இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. ‘எதிரிகளிலும் பார்க்க துரோகிகளே அதிக ஆபத்தானவர்கள்’ என்பது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது தீர்க்கமான கருத்து. தமிழீழ விடுதலைப் போராட்டம் எதிரிகளால் பலவீனமுற்றது என்பதிலும் பார்க்க, துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டு சிதைவுற்றது என்பதே உண்மை. இப்போது ஈழத் தமிழர்களுக்கு இருக்கும் ஒரே தேர்வு எதிரிகளு…

  25. தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் பத்மநாபா பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. அதிகாரப் பகிர்வு, அகதிகள் நிவாரணம் போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமை மிகவும் இன்றியமையாததென கட்சியின் தலைவர் ஆர்.சிறிதரன் தெரிவித்துள்ளார். கட்சிகளின் தனித்துத்தைப் பேணிக்கொள்ளும் அதேவேளை, ஒரே கூட்டணியாக சகல கட்சிகளும் இணைந்து கொள்ளவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகள் களையப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். கட்சி கொள்கைகளுக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.