Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொருளாதாரக் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தற்போதுள்ள சட்டங்களே போதுமானது என மீண்டும் வலியுறுத்தியுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, நாட்டில் நிலவும் மோசமான அரசியல் கலாசாரத்தினால் பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஊழல் தடுப்பு சட்டமூலம் மீதான ஒத்திவைப்பு விவாதத்தில் பேசிய அவர், தற்போதுள்ள சட்டங்களான பொதுச் சொத்துச் சட்டம், பணமோசடி தடுப்புச் சட்டம், இலஞ்சம் அல்லது ஊழல் தடுப்புச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் போன்ற சட்டங்களே பொருளாதார குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தடுக்க போதுமானவை எனவும் தெரிவித்துள்ளார். சிறிய குற்றங்களில் ஈடுபடும் சாதாரண …

  2. இலங்கை உயர் ஸ்தானிகர் - லண்டன் பதவி யாருக்கு? இப்போது அந்த பதவியை வைத்திருப்பவர் Saroja Sirisena. அம்மணிக்கு அந்த பதவியை விட்டுப்போக மனமில்லை. காத்திரமான பதவி. லண்டன் பத்திரிகை ஒன்று, ஈழம் என்ற சொல்லை பயன்படுத்தியது என்று தாம், தோம் என்று குதித்து, அதனை இலங்கையில் பெரிய செய்தியாக்கி தனது இருப்பினை உறுதி செய்தவர். ஆனால் இலங்கையின் தமிழ் தேசிய கீதத்தில், ஈழம் என்ற சொல் உள்ளதே என்று பத்திரிகையின் கருத்துக்கு பதில் கொடாமல் நழுவியவர் இந்த அம்மணி. கொழும்பில் பெரும் அரசியல் முயல்வுகள் செய்தார். பலனளிக்க வில்லை. இறுதியாக மலையாள மாந்திரீகர் இருவரை வரவழைத்து பூஜைகள் செய்வித்தார். முதல் கட்ட பூசைகள் முடிந்து, இம்மாதம் இரண்டாம் கட்ட பூசைகள் நடக்க உள்ள நிலையில், பழைய அர…

    • 1 reply
    • 304 views
  3. வடக்கில் பதிவு செய்யப்படாத தனியார் சுகாதார சேவை துறையினரை பதிவு செய்ய அறிவுறுத்தல் adminJuly 6, 2023 தனியார் சுகாதாரத் சேவைகள் ஒழுங்குபடுத்தும் சபை கூட்டமானது (Private Health Services Regulatory Council – PHSRC ) வடமாகாண சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை தனியார் சுகாதாரத் சேவைகள் ஒழுங்குபடுத்தும் சபை செயலாளர் வைத்திய கலாநிதி டிலீப் லியனகே அவர்களின் பங்களிப்புடன் தனியார் சுகாதாரத் சேவைகள் ஒழுங்குபடுத்தும் சபை (PHSRC) சார்ந்த பூரண விளக்கங்களும் அளிக்கப்பட்டது. இக்கூட்டத்துக்கு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர்கள், வைத்தியசாலை பொறுப்பு வைத்தியர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வட மாகாணத்தில் உள்ள தனியார் வைத்திய துறையினர் என பலர் கல…

  4. யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நால்வர் போட்டி adminJune 3, 2023 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு நான்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன என பல்கலை தகவல்கள் ஊடாக அறிய முடிகிறது. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பல்கலைக் கழகப் பேரவையின் பதவி வழிச் செயலாளரான பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கான இறுதித் தினம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமையாகும். அன்றைய தினம் பிற்பகல் 3:00 மணியுடன் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் நிறைவடைந்த வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் மூவரும், கிழக்குப் பல்கலைக்…

  5. வடக்கு மாகாணத்தில் சுமார் 2000 பேருக்கான ஆளணிப் பற்றாக்குறை உள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகளில் மொத்தமாக 8000 பேர் அனுமதிக்கப்பட்ட ஆளணியாக இருந்தாலும் சுமார் 2000 பேருக்கான ஆளணிப் பற்றாக்குறை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். வடக்கில் உள்ள வைத்தியசாலைகளில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது. அதில் குறிப்பாக ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சுகாதார உதவியாளர்களாக பணியாற்றுகின்றார்கள். அதேபோல தாதியர்கள், மருத்துவ மாதுக்கள் என பல்வேறுபட்ட நிலைகளிலும் ஆளணிப் பற்றாக்குறை நிலவுகி…

  6. யாழ் நயினாதீவு நாகதீப ரஜ மகா விகாரையின் விகாராதிபதிக்கு கௌரவம்! யாழ்ப்பாணம் – நயினாதீவில் அமைந்துள்ள நாகதீப ரஜ மகா விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் நயினாதீவுக்கு வந்து 50வது ஆண்டுகள் நிறைவடைந்தமையை முன்னிட்டு சர்வமதங்களின் பங்கேற்புடன் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. நயினாதீவு மேகலை அரங்கத்தில் இன்று புதன்கிழமை(05) காலை 9 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இலங்கையின் நான்கு பிரதான பௌத்த பீடங்களின் தேரர்கள் மற்றும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய பிரதம குரு உள்ளிட்ட சர்வமத தலைவர்களின் பங்கேற்புடன் நாகதீப ரஜ மகா விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டார். விக…

    • 6 replies
    • 571 views
  7. கலைஞர் கருணாநிதி போற்றுதலுக்குரியவர், ஆனால் அவருக்கான நூற்றாண்டுவிழாவை தமிழர் தாயகத்தில் நடத்துவது பொருத்தமற்றது-பா.அரியநேத்திரன் July 6, 2023 தமிழ்நாட்டு முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நூற்றாண்டுவிழா நடத்த கிழக்கு மாகாணம் பொருத்தமில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில். தமிழ்நாட்டு முதல்வர் அமரர் கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டுவிழா இந்தியாவில் தமிழ்நாடு முழுவதும் தற்போது இடம்பெறுவதற்கான முன் ஆயத்தங்கள் இடம்பெற்று வருகின்றன. அவர் பிறந்த நாட்டில் அவர் ஆட்சிசெய்த தமிழ்நாட்டில் கட்டாயம் அந்த மக்கள் செய்வது நல்லது. அவர் ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவரும், …

  8. இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, வியாழக்கிழமை (06) கொழும்பு செட்டியார் தெருவில் ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை ரூ. 148,000 ஆக குறைந்துள்ளது. இதன் விலை புதன்கிழமை (05) 149,000 ரூபாவாக காணப்பட்டது. இதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை 160,000 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்தது! | Virakesari.lk

  9. யாழ். பல்கலைக்கழக துணைவேந்தருக்கான தெரிவு இடம்பெற உள்ள நிலையில் துணைவேந்தராக வருபவர் பல்கலைக்கழக மற்றும் தமிழ் பாரம்பரியங்களை பாதுகாப்பவராக செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரியுள்ளார். இது தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தனிச் சிறப்புள்ளது. அதாவது பரமேஸ்வராக் கல்லூரியை தானமாக வழங்கி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை உருவாக்கினார்கள். ஒரு கல்விக் கூடத்திற்காக ஒரு கல்விக் கூடத்தை தானம் கொடுத்து உருவாக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர்களாக இருந்த பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் வித்தியானந்தன் மற்றும் பேராசிரியர் துரைராஜா போன்றவர…

  10. இலங்கையை அண்மித்துள்ள பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கங்களால் கொழும்பில் உள்ள பாரிய கட்டிடங்களுக்கு ஆபத்து ஏற்படும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கையில் தென்கிழக்கு கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே பேராசிரியர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “சமீபத்தில், தென்கிழக்கு கடல் பிராந்தியத்தில் ஏற்பட்ட அதிர்வு இலங்கையின் பல பகுதிகளிலும் உணரப்பட்டது. குறிப்பாக கொழும்பு பிரதேசத்தில் அதிர்வு உணரப்பட்டுள்ளது. அதாவது தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்படும் அதிர்வுகளால் மேல் மாகாணத்தில் உள்ள உயரமான கட்டிடங்கள் நிச்சயம் பாதிக்கப்படலாம். இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் நிலநடுக்கம் உணரப்படுவதா…

  11. https://thinakkural.lk/article/261547 இலங்கையில் திருப்பதி கோவிலை நிர்மாணிக்குமாறு ஆந்திர முதல்வரிடம் கிழக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை ஆந்திர மாநில முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும், கரும்பு மற்றும் மிளகாய் விவசாயம் , மருந்துகள் உற்பத்தி நிறுவனம் அமைப்பது தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடியுள்ளனர். BOI ஆடைகள் தொழிற்சாலை குறித்தும் , திருகோணமலை துறைமுகத்தில் உள்ள தொழிற்பூங்காவில் முதலீட்டாளர்களை தொழில் பூங்கா அமைக்க ஊக்குவிப்பது குறித்தும் ஆந்தி…

  12. Published By: RAJEEBAN 06 JUL, 2023 | 12:47 PM தனது மகன் நாடு கடத்தப்படுவதை அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தலையிட்டு நிறுத்தவேண்டும் என அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணொருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரீட்டா அருள்ரூபன் என்ற இலங்கை பெண்ணே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். ரீட்டா அருள்ரூபன் 2012 இல் படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றுள்ளார். பல வருடங்களாக பாதுகாப்பு விசாவில் வாழ்ந்த அவருக்கு அரசாங்கம் நிரந்தர விசாவை வழங்கியுள்ளது. அவர் தனது மகனை அவுஸ்திரேலியாவிற்கு உரிய நடைமுறைகளை பின்பற்றி அழைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார், எனினும் 2016 இல் அவரது விண்ணப்பத்தை அவுஸ்திரே…

  13. உதயநிதி ஸ்டாலின் – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்திப்பு! தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து, இலங்கை நாட்டின் பொருளாதாரம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இலங்கை தமிழ்நாட்டுக்கு மிக நெருக்கமான அயல் நாடாக இருப்பதால், இருதரப்பு உறவு பல நூற்றாண்டுகளாக தொடர்வதாகவும், தமிழ்நாட்டின் ஆதரவு இலங்கை மக்களால் எப்போதும் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்படுவதாகவும் செந்தில் தொண்டமான் உதயநிதி ஸ்டாலினிடம் தெரிவித்தார். …

  14. ”பணம் செலுத்தாதவர்களின் முகத்தில் வெந்நீரை ஊற்றுங்கள்” ”உணவருந்திவிட்டு அதற்குறிய பணத்தை வழங்க மறுப்பவர்களின் முகத்தில் வெந்நீரை அல்லது கழிவு நீரை ஊற்றுங்கள்” என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் (AICOA) தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். பிரபல பாடகர் சமன் டி சில்வாவுக்கும் பாணந்துறையில் உள்ள உணவகம் ஒன்றின் ஊழியர்களுக்கு இடையிலும் ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து கண்டனம் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள், உணவருந்திவிட்டு கட்டணம் செலுத்தாதவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். இலவச உணவு யாருக்கும் கொடுக்க வேண்…

    • 2 replies
    • 614 views
  15. 500 மில்லியன் டொலர் : உலக வங்கியுடன் ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் 500 மில்லியன் டொலர் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக உலக வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்குத் தேவையான நிதியை வழங்குவது தொடர்பில் இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட உள்ளது. உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் இணையத்தளத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 700 மில்லியன் டொலர்களில் 200 மில்லியன் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் இணையதளம் தெரிவித்திருந்தது. https://athavannews.com/2023/1336431

  16. பட மூலாதாரம்,DISLHA DILRUKSHI FAMILY படக்குறிப்பு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தங்களது மகளை கவனித்து கொள்ள வேண்டிய சூழலால் தனது கணவரால் பணிக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் புஷ்பலதா. கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 17 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால் இன்றும் மக்கள் பல்வேறு விதமான துயரங்களை அனுபவித்து வருகின்றனர். நாட்டிலுள்ள நோயாளிகள் பெரும்பாலும் இவ்வாறான நெருக்கடிகளைச் சந்தித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இல…

  17. Published By: VISHNU 05 JUL, 2023 | 04:21 PM முல்லைத்தீவு - கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தி காணிகளுக்குரிய பொதுமக்கள் புதன்கிழமை (05) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டமானது கேப்பாப்பிலவு இராணுவ முகாமின் ஆரம்ப இடத்திலிருந்து ஆரம்பமாகி, பேரணியாக கேப்பாப்பிலவு இராணுவ முகாமின் பிரதான நுழைவாயிலை வந்தடைந்தது. தொடர்ந்து குறித்த இராணுவ முகாமின் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது காணிகளை விடுவிக்கவும், இராணுவத்தினை வெளியேறுமாறும் வலியுறுத்தி பதாதைகளைத் தாங்கியவாறும், கோசங…

  18. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல் !! யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல் இன்று புதன்கிழமை மதியம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. https://athavannews.com/2023/1337582

  19. 05 JUL, 2023 | 01:26 PM ஜப்பானிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் உத்தேச இலகு ரயில் போக்குவரத்துத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உத்தேச இலகு ரயில் போக்குவரத்துத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு பொருத்தமான உடன்படிக்கையை எட்டுவதற்கு பொருத்தமான காலக்கெடுவை தயாரிப்பதற்காக கொழும்பில் உள்ள ஜப்பானிய இராஜதந்திர தூதரகத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான யோசனையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் முன்வைத்தார். https://www.virakesari.lk/article/159264

  20. Published By: VISHNU 05 JUL, 2023 | 12:39 PM யாழ்ப்பாண மாவட்டம் வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் (J/07) உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, வெலுசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில், எதிருவரும் 2023.07.12 ஆம் திகதி அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இவ் அளவீட்டுப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக, மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் அன்றைய தினம் (12) காலை.7.30 மணியளவில் மண்டைத…

  21. இலங்கையில் அணுமின் நிலையத்தை அமைக்க விரும்பும் ரஷ்யா இலங்கையில் அணுமின் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான முன்மொழிவுடன் கூடிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை ரஷ்யா முன்வைத்துள்ளதாக இலங்கை அணுசக்தி சபை தெரிவித்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டம் என இலங்கை அணுசக்தி சபையின் தலைவர் பேராசிரியர் S.R.D. ரோஸா கூறியுள்ளார். அணுசக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வது தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக நடவடிக்கை குழுவொன்றையும், 9 செயற்பாட்டுக் குழுக்களையும் நியமிக்க அமைச்சரவை கடந்த வாரம் தீர்மானித்தது. அணு மின் நிலையத்தை நிலப்பரப்பில் அமைப்பதா அல்லது கப்பலில் பொருத்தி கடற்ப…

  22. குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனாருக்கு பொங்கல் வழிபாடு ; அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ரவிகரன் அழைப்பு 05 Jul, 2023 | 09:54 AM முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை, ஆதிசிவன் ஐயனாருக்கு இம்மாதம் 14ஆம் திகதி பொங்கல்வழிபாடுகள் மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இந்த பொங்கல் வழிபாடுகளில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் ரவிகரன் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எங்களுடைய குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் தொடர்பில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தாலும், ஏற்கனவே நீதிமன்றக் கட்டளையின்படி சைவவழிப…

  23. 04 JUL, 2023 | 08:05 PM தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடனேயே குருந்தூர்மலையில் பௌத்தலோக நற்பணிமன்றம் கல்வெட்டை நிறுவியதாக பௌத்தலோக நற்பணிமன்றம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார். எனவே அவ்வாறு கல்வெட்டு அமைக்கப்பட்ட செயற்பாடு சட்டவிரோதமான செயற்பாடு அல்லவெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இந்த இடத்தில் புனரமைப்பு விடயங்களை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொல்பொருள் திணைக்களம், தொல்பொருள் சட்டங்களின் கீழ் இந்த விடயங்களை மேற்கொண்டுள்ளது. தொல்பொருள் சட்டத்தின் விதிமுறைகளை மீறிச் செயற்பட்டிருந்தால் இவற்றை அகற்றுவ…

  24. ஜனாதிபதி தேர்தலில் பசில் போட்டி! Digital News Team ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை முன்னிறுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவின் தலைவரிடம் கடுமையாக கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எவ்வாறாயினும், அந்தத் தேர்தலில் பசில் ரபக்ஷ போட்டியிட்டால், அவர் தனது அமெரிக்கக் குடியுரிமையை விலக்கிக்கொள்ள வேண்டும் என்பதுடன், பசில் ராஜபக்ஷவும் அந்த விடயத்தை தற்போது பரிசீலித்து வருவதாகவும் அறியமுடிகிறது.இதன்படி, பசில் ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமையை துறந்து தேசியப்பட்டியல் எம்பியாக பாராளுமன்றத்திற்கு வந்து அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்ப…

    • 5 replies
    • 405 views
  25. Published By: DIGITAL DESK 3 03 JUL, 2023 | 04:12 PM நாசா விஞ்ஞானிகள் குழுவொன்று கற்பாறைகள் தொடர்பான ஆய்வுக்காக இலங்கை வந்துள்ளது. நாசாவின் மூத்த விஞ்ஞானி சுனிதி கருணாதிலக தலைமையிலான நிபுணர்கள் குழு, இலங்கையில் உள்ள சில பாறை அமைப்புகளுக்கும் செவ்வாய் கிரகத்தில் காணப்படும் பாறை அமைப்புகளுக்கும் இடையிலான ஒற்றுமைகள் குறித்து ஆராய்வதற்காக தற்போது இலங்கைக்கு வந்துள்ளது. இலங்கையில் நாசா விஞ்ஞானிகள் தமது ஆய்வுப் பயணத்தை முதலில் கினிகல்பலஸ்ஸ மற்றும் இந்திகொலபெலஸ்ஸ ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தென் மாகாணத்தில் உள்ள உஸ்ஸங்கொட பிரதேசத்துக்கு பயணிக்கவுள்ளனர். குறி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.