ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
புல்மோட்டையில் இந்திய இராணுவம் நிலைகொண்டிருப்பது சிறிலங்காவின் இறைமையை கேள்விக்கிடமாக்கியுள்ளது. 2009. 03.17 அன்று ஜே.வி.பி உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றில் ஆற்றிய உரை. இந்தியப்படை வருகையால் எமது இறைமைக்கு எதுவித ஆபத்துமில்லை. சிறிலங்காவுக்கு நெருக்கடி ஏற்படும் வேளைகளில் இந்தியா உதவிக்குவருவது வழக்கமே. கடந்த சுனாமி நெருக்கடிக் காலத்தில் இந்தியப் படையினர் வந்து உதவிசெய்தததை மறந்துவிட்டீர்களா? நிமால் சிறிபால டி சில்வா அரச தரப்பில் அளித்த பதில். 500 புலிகள் மட்டுமே இருக்கின்றனர். அதுவும் 39 சதுர கிலோ மீற்றர் நிலப்பகுதியில் முடக்கப்பட்டுள்ளனர் என்ற அறிக்கை கடந்த 2009.03.01 அன்று அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவிப்புச் செய்தது. அரசாங்கத்தின் அதிகாரபூர…
-
- 2 replies
- 1.7k views
-
-
அவுஸ்திரேலியாவின் விக்டோறிய மாநிலத்தின் மெல்பேர்ண் நகரில் தமிழர்களின் அமைதியான ஊர்தி பேரணி மீது சிங்கள மக்கள் காத்திருந்து - திட்டமிட்டு - நடத்திய அகோரத் தாக்குதலில் 5 தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர். தமிழர்களின் 7-க்கும் அதிகமான ஊர்திகள் அடித்து நொருக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 398 views
-
-
அலம்பில் கடற்பரப்பில் வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணிமுதல் சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளிற்குமிடையே கடுமையான மோதல்கள் நடைபெற்றுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்புத் தெரிவித்துள்ளது. ஏழு தாக்குதல் படகுகளும் மூன்று கரும்புலிப்படகுகளும் இந்த மோதலில் பங்கெடுத்தாகவும் அவற்றில் இரு படகுகள் அலம்பில் பகுதியில் தரையிறக்க முயற்சியையும் மேற்கொண்டதாகவும் படைத்தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது மூன்று கடற்கலங்கள் சிறு சேதமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பினால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 5 replies
- 1.8k views
-
-
புல்மோட்டைக்கோ அல்லது திருமலைக்கோ கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட மக்களை இதுவரை காலமும் எந்த ஒரு ஊடகமும் சந்தித்து பேட்டி காண முடியாத சூழலில் முதல் முதலில் பிபிசி தமிழ் சேவையினர் இந்திய மருத்துவ குழு இருக்கும் புல்மோட்டையில் இருந்து பேட்டி கண்டு உள்ளனர் எனும் அடை மொழியோடு இதை தொடருகின்றேன்... புல் மோட்டைக்கு கொண்டு வரப்பட்ட மக்களை எத்திராஜ் அன்பரசன் என்பவர் தனது இந்திய தமிழில் மக்களை பேட்டி காணுகிறார்... பேட்டி காணும் போது அவர் மக்கள் சொன்ன பல விடயங்களை விட்டு விட்டு குறிப்பாக புலிகள் மீது குற்றம் சாட்டும் பாணியில் செய்தியை சேகரிக்க முயலுவதை வெளிப்படையாகவே காணலாம்... அங்கே மக்களில் பலரும் செல்வீச்சு கொடுமையாக நடக்கின்றது என்பதை சுட்டி காட்டும் போது அந்த கொடுமையான ச…
-
- 3 replies
- 1.8k views
-
-
ஈழமும் என் இதயமும். டி.ராஜேந்தரின் காணோளி : http://www.kuraltvinfo.com/index.html ஜானா
-
- 1 reply
- 1.3k views
-
-
உள்நாட்டுப் பிரச்சினையில் மீண்டும் அநாவசியமாகத் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை நோர்வே தொடங்கியிருப்பதாக குற்றம் சாட்டியிருக்கும் ஜே.வி.பி., இதனைத் தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அறிவித்திருக்கின்றது. விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கான போரில் இறுதிக் கட்டத்துக்கு நாடு வந்திருக்கும் நிலையில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த நோர்வே முயற்சிகளை மேற்கொள்கின்றது என ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்திருக்கின்றார். நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருப்பதாக வெளியான செய்திகள் தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கர…
-
- 1 reply
- 499 views
-
-
Tamil Diaspora dismayed by UN secretary General’s statement Ban Ki Moon’s stereotype statements, blaming Liberation Tigers, shows his inability to persuade Sri Lanka for ceasefire, and has dismayed the Tamil Diaspora. The Tamil Diaspora, speaking to Tamil National said,his statements are purely based on Sri Lankan government reports; while he is quick to blame Liberation Tigers when independent media has no access for free reporting, he refuses to officially release the casualty figures blaming it on unconfirmed reports. Tamil Diaspora rejects Ban’s statement and said, none of his reports mentioned about the missing and abused people who came into the governmen…
-
- 2 replies
- 1k views
-
-
சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள மாத்தறை மாவட்ட பாடசாலை ஒன்றில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 410 views
-
-
வன்னியில் உள்ள தமிழ் மக்களை சிறிது சிறிதாக கொல்வதற்கு பசி பட்டினியை ஏற்படுத்தியிருக்கும் சிறிலங்கா அரசாங்கம், அந்த மக்களை உடனடியாகக் கொலை செய்ய ஆட்லறி எறிகணை மற்றும் வான்குண்டு வீச்சுகளை நடத்துகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் பரப்புரைப் பேச்சாளர் திலீபன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 475 views
-
-
சிறீலங்கா படையினரின் எறிகணை வீச்சில் தாய் இறந்து கிடப்பதை அறியாத குழந்தை அவரிடமே பால் குடித்துக் கொண்டிருக்கும் பரிதாப நிலையை என் கண்ணால் கண்டேன் என தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர் தெய்வேந்திரன் கண்ணீர் மல்கத் தெரிவித்தார். தாக்குதல்களில் காயமடையும் மக்களை மருத்துவமனையில் பராமரிப்பில் ஈடுபடும் இவர் மேலும் தெரிவிக்கையில் அன்றாடம் எறிகணைத் தாக்குதல்களில் காயமடையும் மக்களை வாகனங்களில் இருந்து இறக்குவது முதற்கொண்டு பராமரிப்பது போன்ற பணிகளும் மற்றும் இறந்தவர்களளை அடக்கம் செய்வது போன்ற பணிகளிலும் நான் ஈடுபட்டுவருகின்றேன். நான் பணிசெய்த நாட்களில் சிறீலங்கா அரச படைகளின் கொடூமான செயல்களை நேரில் பார்த்து பேரதிர்ச்சியடைந்து விட்டேன். என் பணிநாளில் ஒரு முப்பது வயது…
-
- 1 reply
- 1.5k views
-
-
"மனிதாபிமான அடிப்படையிலான போர் நிறுத்தம் உடனடியாக ஏற்படுத்தப்பட்டு வன்னிப் பகுதியில் உள்ள மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படாத வரையில் நாளாந்தம் நாம் ஒரு மனித அனர்த்தத்தை நோக்கியே செல்ல வேண்டியிருக்கும்" என பிரித்தானியாவின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் மைக் போஸ்ட்டர் தெரிவித்திருக்கின்றார். "வன்னிப் பிராந்தியத்தில் தொடரும் போரால் நாளாந்தம் நூறு பேர் வரையில் கொல்லப்படுகின்றார்கள் அல்லது காயமடைகின்றார்கள் என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலும் இவை இடம்பெறுகின்றன" எனவும் அமைச்சர் மைக் போஸ்ட்டர் தெரிவித்ததாக அனைத்துலக ஊடகமான 'ரொய்ட்டர்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வன்னியின் தற்போதைய நிலைமைகள் தொடர்பா…
-
- 1 reply
- 462 views
-
-
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்” - என்று சொல்லி பெருமைப்பட்டோம். தமிழ் செம்மொழியாக்கப்பட்டது என்று மார்தட்டிக் கொண்டோம். ‘தைப்பிறந்தால் வழி பிறக்கும்’ தை மாதத்தை புத்தாண்டாக அறிவித்ததில் அளவில்லா மகிழ்வடைந்தோம். ஆனால் நம் உதிரத்தின் உறவுகளின் வாழ்வில் ‘வலி’ மட்டுமே பிறந்ததைக் கண்டு வழியறியாது உள்ளோம். நம் தலைவர்கள் எல்லாம் “தமிழ் வாழ்க” “தமிழ் வெல்க”, “வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்றெல்லாம் உணர்ச்சி பொங்க பேசியவர்கள். இவற்றையெல்லாம் ஏன் எதற்காக பேசினார்கள் பேசுகிறார்கள் என்று எண்ணிப்பாருங்கள்! ஒரு புறம் ஈழத்தில் நம் உறவுகள் காட்டு விலங்குகளைப் போல நம் கண்ணெதிரே நாளுக்கு நாள் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருப்பதும் மறுபுற…
-
- 0 replies
- 934 views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணை, தொலைதூர துப்பாக்கிச் சூடு மற்றும் எம்ஐ-24 ரக உலங்குவானூர்தி தாக்குதல்களில் 28 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 41 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 357 views
-
-
ஏப்ரல் 1 ந்திகதி புதன்கிழமை மாலை 4. 30 மணிக்கு மார்க்கமும் கிங்ஸ்டனும் இணையும் பிரதான சந்திப்பில் தாயகத்தில் சிங்கள இனவெறி அரசின் இனப்படுகொலைகளைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையைக் கனடிய அரசு அகற்றவேண்டும் என்று கோரியும், தமிழீழ விடுதலைப்புலிகளே தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று வலியுறுத்தியும், தமிழர்களின் தாயகமான தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் கனடாத் தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோ வளாகத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு 6 மணியளவில் கிட்டத்தட்ட 2 கிலோமீற்றர் தூரத்தைப் பாதையோர நடைபவனியாக அணிவகுத்து மார்க்கம் பிரதான வீதியும், கிங்ஸ்டன் பிரதான வீதியும் சந்திக்கும் இடத்திற்கு அருகாமையிலிருந்து நகர்ந்து இக்கிளிங்டன் பிரதான வீதியும் கிங்ஸ்டன் பிரதா…
-
- 7 replies
- 1.1k views
-
-
அம்பாறை பாணமை பகுதியில் 13 தமிழ் இளைஞர்கள் விசேட அதிரடிப்படையினரால் சுட்டுக் கொலை அம்பாறை மாவட்டம் பொத்துவில் பகுதியிலுள்ள பாணமையில் லவுக்கல பகுதியில் 13 தமிழ் இளைஞர்கள் விசேட அதிரடிப்படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக நேரில் கண்ட சாட்சியகள் தெரிவிக்கின்றன. இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 13 இளைஞர்கள் உயிரிழந்துள்ளார்கள். இப்படுகொலைகளை சிறிலங்காவின் பாதுகாப்பு தரப்பினர் 13 விடுதலை புலிகளை சுற்றிவளைப்பு தேடுதலின் போது சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கின்றனர். இம்மோதலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது விடுதலை புலிகளின் ஆயுதங்கள் பல மீட்கப்பட்டதாகவும், தாக்குதலின் போது விசேட அதிர…
-
- 1 reply
- 872 views
-
-
இந்த தேர்த்தலில் சாராயம் வேண்டாம் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1k views
-
-
என் அன்புக்குரிய சூரியாவிற்கு மனம் வருந்தி எழுதும் புலம்பெயர் ஈழத்தமிழனின் கடிதம் இது. நீங்கள் நடித்த படம் அனைத்தையுமே தவறாமல் பார்க்கும் ரசிகன் நான். எனது வீட்டில் நான் மட்டும் அல்ல எனது மனைவி பிள்ளைகள் அனைவருமே உங்கள் திரைப்படங்களை தவறாது பார்த்து வருகின்றோம். உங்களது புன்முறுவலும் சாந்தமான கண்களும் எம்மை மிகவும் கவர்ந்த விடையங்மளாகும். உங்களது குடும்பமே ஒரு உன்னதமான கலைக்குடும்பம். ஈழத்தமிழனாகிய நான் உங்களது தந்தையின் மேல் மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்திரக்கின்றேன். தமிழ்படங்களில் மட்டுமே நடித்து தமிழன் என்ற சொல்லுக்கே பெருமை சேர்த்தவர் உங்கள் தந்தையார். எனக்கு இன்றும் நல்ல ஞாபகம் இருக்கின்னது நான் சிறுவனாக இருக்கும் போது எனது தந்தை தாயுடன் உங்கள் அப்பாவின் …
-
- 3 replies
- 1.7k views
-
-
நாற்காலி மனிதர்களின் நாடக மேடை தான் தமிழக அரசியல் என்பது மிண்டும் நிரூபணமாகியிருக்கிறது. சமூகக் கூச்சம் என்பது எள்ளளவும் இல்லாத மலினமான மனிதர்கள், மக்களின் விதியை எழுதும் தலைவர்களாக வாய்த்தது தமிழினத்தின் சாபம். நம் சமகால அரசியல்வாதிகளின் பேச்சும் எழுத்தும், தங்கள் நேர்மைக் குறைவை நியாயப்படுத்தும் முயற்சிகளாகவே இருக்கின்றன. இந்த நடிப்பு சுதேசிகளை இன்னும் எத்தனை காலம் தான் சகித்துக்கொள்வது? ‘வெற்றிக்கான வாய்ப்பிருந்தால், கோழைகூடக் களத்தில் நிற்பான். நிச்சயம் தோற்றுவிடுவோம் என்ற நிலையிலும் போராடத் துணியும் வீரர்களுக்குத் தலைமை தாங்கவே நான் விரும்புவேன். பல மோசமான வெற்றிகளைவிட ஒரு நேர்மையான தோல்வியே மேன்மையானது’ என்றார் ஜார்ஜ் எலியட். ஆனல், நம் அரசியல் தலைவர்களுக்க…
-
- 4 replies
- 833 views
-
-
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு நகரில் பலத்த பாதுகாப்பு : ரஞ்சித் குணசேகர வீரகேசரி இணையம் 4/3/2009 4:47:56 PM - "சித்திரைப் புத்தாண்டுக் காலத்தை முன்னிட்டு கொழும்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸாரும் முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். அதேவேளை புத்தாண்டுக் காலத்தை முன்னிட்டு பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்படும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பொலிஸாரின் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அவர் இது குறித்து மேலும் தெரிவிப்பதாவது : "வன்னியில் படையினரின் போர் முன்னெடுப்புக்களினால் ஆயுதம் மற்றும் ஆள் பலத்தை இழந்துள்…
-
- 0 replies
- 652 views
-
-
03/04/2009, 16:38 [ சிறப்புச் செய்தியாளர்] சாந்த பெர்னான்டோவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – விக்கிரமபாகு கருணாரத்ன மனித உரிமைவாதியும், சமூக சேவையாளரும், தேசிய கிறிஸ்தவ சபையின் செயலருமான சாந்த பெர்னான்டோவை சிறீலங்கா அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும என, இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன கோரிக்கை விடுத்துள்ளார். 63 அகவையுடைய சாந்த பெர்னான்டோ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர் என்ற குற்றச்சாட்டுடன் கடந்த மார்ச் மாதம் 27ஆம் நாள் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்தியத் தலைநகர் நியூ டெல்லியில் “தி அதர் மீடியா” (The Other Media) அமைப்பு நடத்…
-
- 0 replies
- 583 views
-
-
சுவிஸ் நாட்டுப் பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் விஜயம் [ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2009, 08:42.41 AM GMT +05:30 ] சுவிட்சர்லாந்து நாட்டின் இரண்டு விசேட பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இவர்களின் விஜயம் சுவிட்சர்லாந்து அபிவிருத்தி ஒத்துழைப்பு அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்வையிடும் பொருட்டு அமையவுள்ளது. இந்த அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசாங்கத்திற்கு இவர்கள் இருவரும் அறிக்கை சமர்ப்பிப்பர் என தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் வடமராட்சியில் இராணுவத்தின் அதியுச்ச பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் வைத்து இந்த அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடுவர…
-
- 0 replies
- 549 views
-
-
"துக்ளக்" கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினை; வக்கீல் - போலீசார் மோதல்; கலைஞரின் ஹிந்து மத துவேஷம் போன்றவற்றில் துணிந்து கருத்துகளைச் சொல்லி வருகிறீர்களே! இந்த அசா தாரண தைரியம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது? பதில்: தேவதைகளும் கால்வைக்கத் தயங்கும் இடத்தில் முட்டாள்கள் நுழைவார்கள் என்பது ஒரு ஆங்கில வாசகம். ("துக்ளக்", 25.3.2009). http://www.tamilseythi.com/vaasakar/visito...2009-04-02.html
-
- 2 replies
- 2.3k views
-
-
இராணுவ இணையத்தளத்தில் மீட்ட புலிகளின் சடலங்கள் என இராணுவ சடலங்களின் புகைப்படங்கள் வெளியாகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் மீட்ட சடலங்கள் என கூறி கொல்லப்பட்ட சிங்கள இராணுவத்தினரின் சடலங்களை கொண்ட புகைப்படங்களை பிரசுரிக்கப்பட்டு வந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கடந்த ஒருவாரமாக இராணுவ செய்தி இணையத்தளம் தமது ஆக்கங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை கட்டுப்படுத்தியுள்ளது ஏற்கனவே பிரயோகிக்கப்பட்ட புகைப்படங்களையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வருவதால் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உயர் அதிகாரிகள் பார்வையிட்டு அனுமதிப்பதற்கு முன்னர் எவ்வித புகைப்படங்களையும் பிரசுரிப்பதற்கு அனுமதியளிக்கப்படுவதில்லை என இந்த இணையத்தளத்தின் இரகசிய தகவல்கள் தெ…
-
- 3 replies
- 2.4k views
-
-
ஹார்ன் தீவு (ஆஸ்திரேலியா): இலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலியா நோக்கி வந்த 50 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இலங்கையில் நடந்து வரும் கடும் சண்டையைத் தொடர்ந்து அங்கிருந்து பல தமிழர்கள் அகதிகளாக இந்தியா வருகின்றனர். இந்த நிலையில் 50 தமிழர்கள் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்குப் போயுள்ளனர். அவர்கள் சென்ற படகு இந்தோனேஷியா அருகே ஹார்ன் தீவு அருகே தரை தட்டியது. இதையடுத்து அங்கு விரைந்த அந்தத் தீவின் பாதுகாப்புப் படையினர் அவர்களை சுங்கத்துறை படகு மூலம் கிறிஸ்துமஸ் தீவுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பாப் டெபுஸ் கூறுகையில், படகில் வந்த 50 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. அவர்களை சுங்கத்துறை படகு மூலம் …
-
- 0 replies
- 887 views
-
-
சென்னை: தமிழக அரசு அனுப்பி வைத்த உணவுப் பொருட்கள் வன்னிப் பகுதிக்கு இதுவரை போகவே இல்லையாம். இலங்கை அரசு இந்த உணவுப் பொருட்களை பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இதுவரை அனுப்பவே இல்லை என்று ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இந்த உணவுப் பொருட்கள் என்ன ஆயின, எங்கே போயின என்று யாரிடமும் பதில் இல்லை. இதுகுறித்து மக்கள் சிவில் உரிமைக் கழக தலைவர் வி.சுரேஷ் கூறுகையில், இப்போது கூட இலங்கையில் தமிழர்கள் பட்டினிச் சாவை சந்தித்து வருகின்றனர். இடம் பெயர்ந்து அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கும் 1.9 லட்சம் தமிழர்களுக்காக தமிழகத்திலிருந்து உணவு உள்ளிட்டவை அனுப்பப்பட்டன. ஆனால் இவை இதுவரை அங்கு போய்ச் சேரவில்லை. அவை என்ன ஆயின, எங்கு போயின என்று கூட யாருக்கும் தெரியவில்லை. இதை…
-
- 0 replies
- 932 views
-