Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தேத்தாவாடி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் சிக்கினர் Published By: Vishnu 09 Jun, 2023 | 10:18 AM மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேத்தாவாடி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் நேற்று வியாழக்கிழமை (8) கொழும்பில் இருந்து வருகை தந்த புவிச்சரிதவியல் சுரங்க பணியக திணைக்கள அதிகாரிகளிடம் வசமாக மாட்டிக் கொண்டுள்ளனர். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேத்தாவாடி பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை நேற்றைய தினம் கொழும்பில் இருந்து வருகை தந்த புவிச்சரிதவியல் சுரங்க பணியக திணைக்கள அதிகாரிகள் மற்றும் மன்னார் மாவட்ட புவ…

  2. இலங்கைக்குள் நுழைய முயன்ற சீன நாட்டவர் நாடு கடத்தப்பட்டார்! மே மாத இறுதியில் 2 போலி கடவுச்சீட்டுகளுடன் இலங்கைக்குள் நுழைய முயன்ற சீன நாட்டவர் நேற்று (வியாழக்கிழமை) மீண்டும் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இவ்வாறு 2போலி கடவுச்சீட்டுகளுடன் இலங்கைக்குள் நுழைய முயன்ற சீன நாட்டவர், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நாடு கடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் மே 29 ஆம் திகதி, குறித்த சீன நாட்டவரை கைது செய்ய ஏற்கனவே சீனாவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்ததாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்திருந்தார். இதேவேளை அவரை சீன…

  3. வாகரையில் இயற்கை வளச் சுரண்டல்களை நிறுத்தக் கோரிய கண்டனப் பேரணி Published By: Vishnu 09 Jun, 2023 | 10:43 AM சர்வதேச சுற்றுச் சூழல் தினத்தினை முன்னிட்டு வாகரை பிரதேசத்தில் இடம்பெறும் இயற்கை வளச் சுரண்டல்களை நிறுத்தக் கோரிய கண்டனப் பேரணி வியாழக்கிழமை (8) வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி கண்டனப் பேரணியில் வாகரை பிரதேசத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் கலந்துகொண்டனர். வியாழக்கிழமை (8) காலை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன…

  4. இலங்கையில் பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தில் அரசாங்கமும் RM Parks Incம் கையெழுத்திட்டுள்ளன. அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளை அடுத்து, இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை விற்பனை செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தம் ஒன்றிற்காக ஷெல் நிறுவனத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கத்திற்கும் RM Parks Inc.க்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் கைச்சாத்திடப்பட்டது. அரசாங்கம் ஆர்வத்தை வெளிப்படுத்துமாறு அழைப்பு விடுத்ததையடுத்து, இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்க ஏன…

  5. Published By: VISHNU 08 JUN, 2023 | 05:30 PM (எம்.மனோசித்ரா) இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சிறந்த இருதரப்பு உறவுகளினால், பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு பல ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார். மேலும், கடந்த பத்தாண்டுகளில் இந்திய பாதுகாப்புத் துறையின் முன்னேற்றத்தினால், இந்தியாவிலிருந்து பாதுகாப்பு தொடர்பான வன்பொருள் கொள்முதலானது புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய பாதுகாப்பு ஏற்றுமதி ஊக்குவிப்பு கருத்தரங்கு மற்றும் இருநாட்டு உற்பத்தி பொருட்கள் கண்காட்…

  6. சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே தமிழர்களுக்கான தீர்வை எட்ட முடியும் : கஜேந்திரகுமார்! தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை வழங்குவதற்கு இலங்கை தீவில் இந்த அரசு முன்வராது எனவே சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே தமிழர்களுக்கான தீர்வை எட்ட முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தொடர்ந்து இலங்கையில் கடந்த 70 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் மீது இன வன்முறைகளை பிரயோகித்து வருகின்ற முப்படைகளிலும் இந்த பொலிசாரும் உள்ளடங்குகின்றனர். ஆகவே தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை வழங்குவதற…

  7. Published By: VISHNU 08 JUN, 2023 | 12:43 PM வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வியாழக்கிழமை (08) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்றுடன் 2300 ஆவது நாட்களாக வவுனியாவில் சுழற்சி முறையிலான போராட்டத்தினை மேற்கொண்டு வரும் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட பந்தலிற்கு முன்பாக குறித்த போராட்டமானது இடம்பெற்றுள்ளது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் படங்களினை ஏந்தியவாறும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தியவாறும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். …

  8. ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) சலுகை நிதியுதவியை அணுகுவதற்கான இலங்கையின் தகுதியை அங்கீகரித்துள்ளது. குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படும் சலுகை உதவிகள், பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் அத்தியாவசிய சேவைகளை குறிப்பாக ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு வழங்குவதற்கும் இலங்கையின் அவசர அபிவிருத்தி நிதியுதவி தேவைகளை விரிவுபடுத்துகிறது என ADB தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/257423

  9. புத்தளம் நகரில் பல காகங்கள் இறந்து கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காகங்கள் உயிரிழந்தமை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. புத்தளம் நகரின் வானா வீதி ஏரிக்கு அருகில் நேற்று (07) காலை முதல் காகங்கள் இறந்து வருகின்றன. இது தொடர்பில் புத்தளம் மாநகர சபைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இறந்த காக்கைகளின் உடல் உறுப்புகளை பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி அறிக்கையை பெற்றுக்கொள்ள புத்தளம் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. https://thinakkural.lk/article/257442

  10. Published By: DIGITAL DESK 3 08 JUN, 2023 | 04:07 PM யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் வாள் செய்து கொண்டிருந்த நால்வரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றில் வைத்து வாள் செய்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டினை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தினர். அதன் போது வாள் செய்து கொண்டிருந்த நால்வரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/157278

  11. சூரிய சக்தியில் இயங்கும் இயந்திர படகு written by adminJune 4, 2023 சூரிய மின்னாற்றலில் (சோலார்) இயங்கும் இயந்திரபடகு வல்வெட்டித்துறைக் கடற்கரையில் வெள்ளோட்டம் விடப்பட்டது. சூரிய சக்தியிலிருந்து கிடைக்கும் சக்தியை கொண்டு, மின்சாரத்தை பெற்றுக்கொண்டு 13 குதிரைவலுக் கொண்ட அதி உச்ச வேக இயந்திரத்தினைக் கொண்டு இயங்கும் மீன்பிடிப்படகு வல்வெட்டித்துறையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வெள்ளோட்டம் விடப்பட்டது. அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மணிவாசகம் என்பவரது முயற்சியால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையானது கடல் தொழிலாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எரி…

  12. தேசிய மக்கள் சக்தியின் பேரணிக்கு நீதிமன்றம் தடை உத்தரவு! தேசிய மக்கள் சக்தியால் இன்று (வியாழக்கிழமை) நடத்த திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வெலிக்கடை பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி இன்று ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்துள்ளதாக முன்னர் அறிவித்திருந்தது. இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் மேற்படி தடை உத்தரவைப் பிறப…

  13. மிக மோசமான வறுமையின் பிடியில் இலங்கை - 6 வீதமான பெற்றோர் அவர்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாத நிலையில் - அதிர்ச்சி தகவல் 08 Jun, 2023 | 10:31 AM இலங்கையில் வறியவர்களின் எண்ணிக்கை நான்கு முதல் ஏழு மில்லியனாக அதிகரித்துள்ளமை கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. 2019 முதல் 2023 ம் ஆண்டிற்குள் நான்கு முதல் ஏழு மில்லியன் மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் இலங்கையில் வறுமையின் பிடியில் சிக்குண்டுள்ள மக்களின் எண்ணிக்கை இந்த காலப்பகுதிக்குள் 31 வீதமாக அதிகரித்துள்ளது என்பதும் இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. லிர்னே ஏசியா என்ற …

  14. மகாநாயக்க தேரர்களுடனான சந்திப்புகளை ஏற்படுத்தி வேலைத்திட்டம் கனடாவிலுள்ள புலம்பெயர் அமைப்பின் முக்கியஸ்தரான ரோய் சமாதானத்துடன் அமைச்சர் விஜேயதாச மற்றும் மகாநாயக்க தேரர்கள் சந்தித்துரையாடி முன்னோடி வேலைத்திட்டம் முன்னெடுப்பு தமிழ் புலம்பெயர்ந்தோர் அமைப்புக்கள் மற்றும் மகாநாயக்க தேரர்களுக்கிடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ மேற்கொண்டுள்ளார். கனடாவில் வசிக்கும் தமிழ் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளரான ரோய் சமாதானம், அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ ஆகியோர் அட்டமஸ்தானாதிபதி மகாநாயக்க தேரர் பல்லேகம ஹேமரத்ன தேரரைச் சந்தித்து தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் விரிவா…

  15. கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமனம் பெற்றுள்ள இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். தனது சேவைக் காலத்தில் மக்களின் தேவைகளை அறிந்து எண்ணற்ற சேவைகளை மக்களுக்குச் செய்ய வாழ்த்துத் தெரிவிப்பதாக கமல்ஹாசன் மேலும் தெரிவித்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கமல்ஹாசனை கிழக்கு மாகாணத்திற்கு வருகை தருமாறு அழைப்பும் விடுத்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து! | Virakesari.lk

    • 8 replies
    • 765 views
  16. Published By: VISHNU 06 JUN, 2023 | 05:11 PM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) அரசாங்கத்துக்கு சாதகமான போராட்டத்தை ஜனநாயகம் என்றும்,அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை பயங்கரவாதம் என்றும் எவ்வாறு அடையாளப்படுத்துவது. தேசிய மக்கள் சக்தியினரே வியாழக்கிழமை (8) கொழும்பில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். எமது போராட்டத்தை கண்டு அரசாங்கம் அச்சமடைய தேவையில்லை. அரசாங்கமே பயங்கரவாதமாக செயற்படுகிறது என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்ற துறைமுகங்கள்,கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின் போத…

  17. Published By: DIGITAL DESK 3 01 JUN, 2023 | 02:46 PM யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாடசாலை இடைவிலகல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில் 355 பேர் பாடசாலை இடைவிலகியுள்ள நிலையில் இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களிலேயே 200 பேர் பாடசாலைகளிலிருந்து இடைவிலகியுள்ளனர். அதேபோன்று வரவு ஒழுங்கற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. தீவக கல்வி வலயத்தில் கடந்த ஆண்டில் 46 பேர் இடைவிலகியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 4 பேர் இடைவிலகியுள்ளனர். வரவு ஒழுங்கற்ற மாணவர்களாக கடந்த ஆண்டு 109 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 4 மாதங்களிலேயே அது…

  18. பொருட்கள் சிலவற்றின் இறக்குமதி தடை, இந்த வார இறுதியில் நீக்கப்படவுள்ளதாக இன்றைய தினம் பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளது. இதற்கமைய 300 பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருட்களின் எண்ணிக்கை 1216 வரை குறைந்துள்ளது. நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு அரசாங்க முன்னெடுத்த தீர்மானங்களால், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டனர். அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் அதேவேளை, அந்நிய செலாவணியை தக்கவைத்துக்கொள்ள புதிய வரி அறிமுகம், வட்டி வீதங்களை உய…

  19. 2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கை – இந்திய மின் விநியோக கட்டமைப்பை ஒன்றிணைப்பதற்கு முன்னுரிமையளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான தொழில்நுட்ப அறிவு மற்றும் வணிகக் கட்டமைப்பை தயாரிப்பதற்கு உலக வங்கியினால் இலங்கை மின்சார சபைக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் தொடர்பில் உலக வங்கியின் பிராந்திய வலையமைப்புத் திட்டத்தின் பணிப்பாளர் பெசில் ப்ரூமன் மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் சியோ கென்டா ஆகியோர் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று(06) கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். https://thinakkural.lk/article/257209

  20. Published By: DIGITAL DESK 3 07 JUN, 2023 | 03:43 PM இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார ரீதியான சவால்களை முறியடிப்பதற்கும், கட்டமைப்பு ரீதியிலான மறுசீரமைப்புக்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்குமென அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவிச்செயலாளர் ரொபர்ட் கப்ரொத் உறுதியளித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த 5 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்திருந்த அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவிச்செயலாளர் ரொபர்ட் கப்ரொத், நேற்று செவ்வாய்க்கிழமை (6) வரை நாட்டில் தங்கியிருந்தார். இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மின்சக்தி…

  21. Published By: DIGITAL DESK 3 07 JUN, 2023 | 04:13 PM யாழ். சென்னை விமான சேவை 100 நாட்களை நிறைவு செய்யும் நிலையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மக்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என யாழ் இந்திய துணை தூதர் ராகேஷ் நடராஜ் ஜெபாஸ்கர் தெரிவித்தார். இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான இந்தியன் ஏர்லைன்ஸ் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டு 100 நாட்கள் நிறைவடையும் நிகழ்வை கொண்டாடிய நிலையில் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த விமான சேவையானது இரு நாட்டு இணைப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பது மட்டுமன்றி சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க…

  22. தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் அருள்மதி கைது Published By: Rajeeban 05 Jun, 2023 | 07:53 AM தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் அருள்மதி கைதுசெய்யப்பட்டுள்ளார் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. ஜுன் இரண்டாம் திகதி மருதங்ககேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பு தொடர்பில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்ததாக அருள்மதியின் கணவர் தெரிவித்துள்ளார். மருதங்கேணி பொலீசாரினால்‌ அருள்மதிகைது செய்யப்பட்டுள்ளார்.. தையிட்டிய…

  23. உலக உணவு பாதுகாப்பு தினம் இன்று(07) அனுஷ்டிக்கப்படுகின்றது. “உணவின் தரம் வாழ்க்கையை பாதுகாக்கும்” என்பது இந்த ஆண்டின் தொனிப்பொருளாகும். உணவினால் ஏற்படும் ஆபத்துகளை தடுத்தல், அடையாளம் காணுதல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் உள்ளிட்ட விடயங்களில் அவதானம் செலுத்துதல் உலக உணவு பாதுகாப்பு தினத்தின் நோக்கமாகும். மக்களுக்கு நஞ்சற்ற உணவை வழங்குவதற்கு உற்பத்தியாளர்கள், பொதி செய்பவர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்கள் கடமைப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இரேஷா மென்டிஸ் தெரிவித்துள்ளார். எனினும், அந்த பொறுப்புகள் உரிய முறையில் நிறைவேற்றப்படாத நிலையில் உணவின் தரம் தொடர்பாக பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளதாக இரேஷா மெண்டிஸ் குறிப்பிட்டுள்ளார்…

  24. ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2048ஆம் ஆண்டு அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதே தமது போராட்டமாகும் என்றும் தெரிவித்தார். “தேசிய நிலைமாற்றத்திற்கான திட்டவரைபடத்தை” நாட்டுக்கு முன்வைத்து விசேட உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக கடந்த 09 மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி இதன் போது விரிவாக விளக்கினார். அத்துடன், எதிர்பார்க்கும் இலக்குகளை அடைவதற்கான ச…

  25. Published By: VISHNU 07 JUN, 2023 | 11:35 AM (எம்.மனோசித்ரா) யுத்தத்தின் போது அங்கவீனமுற்று ஓய்வு பெற்ற முப்படையினர் மற்றும் உயிரிழந்தவர்களுக்கான கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக அங்கவீனமுற்ற தற்போதும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்ற முப்படையினர் மற்றும் யுத்தத்தின் போது உயிர் நீத்த வீரர்களுக்காக வழங்கப்படும் கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கொடுப்பனவு இடை நிறுத்தப்படும் என எவரும் வீண் அச்சமடையத் தேவையில்லை என்று பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.