ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142908 topics in this forum
-
இந்திய தொழிலதிபரான எம்.ஆர்.நாராயணமூர்த்தி சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் தொழில்நுட்ப ஆலோசகராக நியமனம் பெறுகின்றார். நாராயணமூர்த்தியின் இந்தச் செயலானது பெரும் அதிர்ச்சி அலைகளை அரசியல், வர்த்தக, நிதித்துறை வட்டாரங்களில் தோற்றுவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 551 views
-
-
முல்லைக் கடற்பரப்பில் கடந்த 8ம் திகதி சிறிலங்கா கடற்படையின் டோறாவை மூழ்கடித்து காவியமான கரும்புலிகள் தமிழீழத் தேசியத் தலைவருடன் நிற்கும் நிழற்படங்களை ஈழநாதம் வெளியிட்டுள்ளது. இச்சம்பவத்தின்போது ஒரு டோறா முற்றாக மூழ்கடிக்கப்பட்டதுடன், இன்னொன்று கடும் சேதமாக்கப்பட்டது. இதன்போது 15 கடற்படையினர் பலியாகியிருந்தார்கள் கடற்கரும்புலி மேஜர் கருணைநாதன்..தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி லெப்.கேணல் வான்மீகி / கனி..தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் இசையரசன்..தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் உலகச்சேந்தன்..தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன்
-
- 11 replies
- 2.1k views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றித்தான் நமக் கெல்லாம் தெரியும். ஆனால், அங்கே 'சிங்கள விடுதலைப்புலி'களும் இருக்கிறார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசும் சிங்கள தலைவர்களுக்குத்தான் இப்படியரு முத்திரை குத்தி அவர்களின் தலைக்கும் விலை வைத்திருக்கிறது சிங்கள அரசு. அப்படி முத்திரை குத்தப்பட்டவர்தான் ஐக்கிய சோஷலிசக் கட்சியின் பொதுச்செயலாளரான சிறீதுங்க ஜெயசூர்ய. இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ஷேவை எதிர்த்துப் பதின்மூன்று பேர் போட்டியிட்டனர். அதில் மூன்றாம் இடத்தைப் பிடித்தவர் சிறீதுங்க. பிறப்பால் சிங்களர் என்றா லும் இலங்கையில் சிங்களர்-தமிழர் ஒற்றுமைக்காக நீண்ட காலமாகப் போராடிவருபவர். இதனாலேயே இவருக்கு 'சிங்களப் புலி' என்று முத்திரை குத…
-
- 0 replies
- 825 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் - பிரித்தானியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையூடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - எட்வர்ட் டாவே: இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட பிரித்தானியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையூடாக நடவடிக்கை எடுக்க முயற்சிக்க வேண்டும் என பிரித்தானியாவின் நிழல் வெளிவிவகார அமைச்சராக கருதப்படும லிபரல் ஜனநாயக கட்சியின் எட்வர்ட் டாவே தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுண் நியமித்த விசேட தூதுவரை இலங்கை நிராகரித்துள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த அரசியல் தர்மசங்கடத்தை தவிர்க்க, பிரவுண் கட்டாயம் தற்போது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எட்வர்ட் டாவே கேட்டுள்ளார். இலங்கையின் அர…
-
- 0 replies
- 856 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை ஊடாக முயற்சிக்க வேண்டும் - எட்வர்ட் பிரித்தானியாவின் நிழல் வெளிவிவகார அமைச்சராக கருதப்படும லிபரல் ஜனநாயக கட்சியின் எட்வர்ட் டாவே தெரிவித்துள்ளார். அரசியல் தர்மசங்கடத்தை தவிர்க்கஇ பிரவுண் கட்டாயம் தற்போது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு நம்பகத்தன்மையற்றது இதனால் பிரித்தானிய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஊடக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த உடனடியான முயற்சிக்க வேண்டும் எனவும் எட்வர்ட் டாவே கேட்டுள்ளார். பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுண் நியமித்த விசேட தூதுவரை இலங்கை நிராகரித்துள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்…
-
- 0 replies
- 583 views
-
-
14ஃ02ஃ2009இ 15:16 ஜ கொழும்பு நிருபர் மயூரன் ஸ இலங்கையில் வன்முறைகளை விசாரிக்க அமெரிக்காவின் வெளியுறவுத்துறைஇ செனட்குழு இலங்கையில் குறிப்பாக வன்னி பகுதியில் இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் படுகொலைகள் மற்றும் வன்முறைகளை விசாரிக்க அமெரிக்காவின் வெளியுறவுத்துறைஇ செனட்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது பிராந்திய ரீதியிலான துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் ஊடாக எதிர்வரும் 24ம் திகதி இலங்கை விவகாரம் குறித்த விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய பிராந்திய வலயங்களுக்கு பொறுப்பான செனட்டர் ரொபர்ட் கெர்ஸி தெரிவித்துள்ளார். முதலில் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உ…
-
- 0 replies
- 685 views
-
-
களத்துக்கு வெளியே காத்திருக்கும் பணி - நி. பாலதரணி - 'ஹமாஸ் ஒரு சமூக அரசியல் இயக்கம், அவர்கள் காசா மக்களிடையே ஆழ வேருன்றிப் போயுள்ளார்கள். அத்தகைய தன்மை வாய்ந்த ஒரு அமைப்பின் இராணுவப் பிரிவையோ அல்லது அரசியல் பிரிவையோ முற்று முழுதாக அழிப்பதென்பது சாத்தியமான ஒரு விடயம் அல்ல அத்துடன் அது ஒரு தவறான கணிப்பீடும் ஆகும்" எனக் கூறியிருக்கிறார் நியூயோர்க்கை தளமாகக் கொண்ட வெளிநாட்டு உறவுகளுக்கான சபையைச் சார்ந்த கலாநிதி றிச்சாட் ஹாஸ் அவர்கள். யார் கூறியிருக்கிறர் என்பதை விட என்ன விடயம் கூறப்பட்டுள்ளது என்பதுவே இங்கு மிக முக்கியமானது. அடுத்து, அவருடைய கருத்தென்பது தனித்து ஹமாஸ் இயக்கத்திற்கு மட்டும் பொருத்தமானதல்ல, இது இன விட…
-
- 6 replies
- 1.6k views
-
-
சிறிலாங்காவின் ஊடக துறையை தோலுரிக்கும் அல்சசீறா ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.3k views
-
-
ஈழத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே உள்ளது. ராஜபக்சே அரசு தமிழர்களை பூண்டோடு அழிக்க பல கொடூர உத்திகளை சர்வதேச அங்கீகாரத்தோடு நடைமுறைப்படுத்தி வருகிறார். ஹிட்லரையும் மிஞ்சும் வகையில் பல கொலையரங்குகளை கட்டி வருவதாக தகவல்கள் வருகின்றன. அதுபற்றி விகடன் குழுமத்தின் ஒரு செய்திக் கட்டுரை… முல்லைத் தீவில் இருக்கும் தமிழர்களை யெல்லாம் கடலில் தள்ளுகிற நாளில் நீங்கள் உங்கள் வீடுகளில் சிங்கக் கொடிகளை ஏற்றுங்கள்!” என்று ராஜபக்சே சிங்களர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த நாளுக்கான ஏற்பாடுகளை இப்போது சிங்கள அரசு செய்து கொண்டிருக்கிறது. முல்லைத்தீவில் உள்ள தமிழர்களில், படுகொலை செய்ததுபோக மிச்சம் மீதி இருப்பவர்களை வதை முகாம்களில் நிரந்தரமாகத் தங்க வைப்பதற்கு சி…
-
- 1 reply
- 889 views
-
-
திருமாவளவன் பேச்சு - காணொளியில் இங்கே அழுத்தவும்.
-
- 0 replies
- 683 views
-
-
இலங்கைப் பிரச்சினையில் 2கால கட்டங்கள் உள்ளன. கி.மு. மற்றும் கி.பி. என்பது போல் ராஜீவுக்கு முன் ராஜீவுக்குப் பின் என்று ஒரு காலகட்டம் ஏற்பட்டு விட்டது. ராஜீவ் மட்டும் கொலை செய்யப்படாமல் இருந்தால் இந்த இலங்கைப் பிரச்சனை என்றோ தீர்ந்திருக்கும். 1989ல் ராஜீவ் மரியாதை நிமித்தம் டில்லியில் தமிழக முதல்வர் டில்லியில் சந்தித்தார். அப்போது ராஜீவ், தாங்கள் இரு நாட்கள் தங்கியிருக்க முடியுமா என்று கேட்டார். அப்போது முரசோலி மாறனும் உடன் இருந்தார். இலங்கைப் பிரச்சனையில் தீர்வு காண முடியுமானால் அது கருணாநிதியால் தான் முடியும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தங்களுக்கு செய்வேன் என்று கூறிய ராஜீவ், மறுநாள் காலை வெளியுறவுத் துறை செயலாளர் நட்வர் சிங்கை சந்திக்க ஏற்பாடு செய்தார…
-
- 22 replies
- 2.7k views
-
-
இலங்கைக்கு தாம் மேற்கொண்ட ஒரு தலைப்பட்ச முடிவின் ஊடாக சிறப்பு பிரதிநிதியை நியமிக்கவில்லை. அதற்கான விவாதங்கள் சிறிலங்காவுடன் நடைபெற்றிருந்தன என பிரித்தானியா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் டெஸ் பிறவுணை நேற்று முன்நாள் வியாழக்கிழமை இலங்கைக்கான சிறப்பு பிரதிநிதியாக அறிவித்திருந்தது. இதனை பிரித்தானியா ஒரு தலைப்பட்சமாக தெரிவு செய்யவில்லை. அதற்கான விவாதங்கள் நடைபெற்றிருந்தன. பிரித்தானியாவில் வெளிவிவகார செயலாளர் மில்லிபான்ட் நேற்று காலை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார். இதன்போது பிரித்தானியா சிறப்பு பிர…
-
- 1 reply
- 557 views
-
-
சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சத்தியமூத்தி மரணமடைந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தாயகத்தில் இருந்து தாயகத்து நிலைமைகளை புலம்பெயர் ஊடகங்களுக்கு தொலைக்காட்சிகள் வழியாகவும் வானொலிகள் வழியாகவும் அச்சு ஊடகங்கள் வழியாகவும் இணைய ஊடகங்கள் வழியாகவும் வெளியிட்டு வந்தவர் சத்தியமூர்த்தி ஆவார். வன்னியில் உள்ள ஊடக இல்லத்தில் இருந்து ஊடகப் பணியை இவர் ஆற்றி வந்த இவர், யாழ். மண்டைதீவை தாய் மண்ணாகக் கொ…
-
- 37 replies
- 2.8k views
-
-
காக்கும் தெய்வம் காட்டிக் கொடுத்துவிட்டது! -நக்கீரன்- சென்ற கிழமைம எழுதும் போது தமிழக முதல்வர் பதவி சுகமா? அல்லது இனமானமா? இதில் இரண்டில் ஒரு முடிவு எடுக்கும் நிலைக்கு முதல்வர் கருணாநிதி தள்ளப்பட்டுள்ளார் என எழுதியிருந்தேன். முதல்வர் கருணாநிதி சரியான முடிவு எடுத்தால் வரலாற்றில் இடம் பிடிப்பார் இல்லையென்றால் வரலாறு அவரை மன்னிக்காது என்றும் எழுதியிருந்தேன். இதற்கான விடை இந்தக் கிழமை கிடைத்திருக்கிறது. இனமானம், தன்மானத்தை விட பதவி சுகமே பெரிதென்று கருணாநிதி சொல்லிவிட்டார். இலங்கைத் தமிழர் சிக்கல் தொடர்பாக கடந்த பெப்ரவரி 3 இல் அண்ணா அறிவாலயத்தில் முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில் கூடிய திமுக மூன்று நீண்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. தமிழ் உண…
-
- 1 reply
- 1.3k views
-
-
பிரான்ஸ் இந்தியத் தூதுவராலயம் முன்பாக தன்னெழுச்சியான ஆர்ப்பாட்டம். இந்தியத் தூதரகத்தின் முன்னால் இன்று நடைபெற்ற போராட்டத்தில் தமிழ் மக்கள் உண்ணர்சிக் கொந்தளிப்பில் காவல்துறையினருடன் முரண்பட்டதாக தெரியவருகின்றது. சிறிலங்காவில் நடைபெற்று வரும் இனச்சுத்திகரிப்பிற்குத் துணை போக வேண்டாம் எனக் கோரியும், இலங்கையில் நடைபெற்று வரும் படுகொலைகளை தடுத்து நிறுத்த இந்தியா இலங்கைப் பிரச்சனையில் தலையிட வேண்டும் எனக் கோரியும் இன்று (13.02.09) மாலை மூன்று மணி முதல் இந்தியத் தூதரகம் முன்னிலையில் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கூடி ஆர்ப்பாட்ட கண்டன ஒன்று கூடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இந்தியத் தூதரகத்திற்கு சுமார் 200 மீற்றர் தூரத்தில் வீதி முனையில் கூடியிருந்த மக்கள…
-
- 2 replies
- 805 views
-
-
தமிழின அழிப்பு உச்சநிலை அடைந்து தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய தலைமையகம் முன்பாகத்தன்னைத்தீக்கிரையா
-
- 0 replies
- 765 views
-
-
மஹிந்த ராஜபக்ஷவின் சர்வதேச தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் நாரயணமூர்த்தி செய்யப்பட்டுள்ளார். சர்வதேச ரீதியில் புகழ் பூத்த இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவராக என்.ஆர். நாராயணமூர்த்தி செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 2009ம் ஆண்டை தகவல் தொழில்நுட்ப மற்றும் ஆங்கில கல்வியாண்டாக பிரகடனப்படுத்தும் வைபவத்தில் கலந்து கொள்வதற்காக நாராயணமூர்த்தி இலங்கை விஜயம் செய்திருந்த போது இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசுக்கு எதிராக செயல்படும் இணையங்களை கண்காணிக்கவும் அவற்றை அழிப்பதற்காகவும், ஈழத்தமிழர்களின் இணையங்களை கண்காணிக்கவும் ,சிங்கள கிராமபுறத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தும்…
-
- 3 replies
- 1.7k views
-
-
ஈழத்தில் போர் தொடருகின்றது. முல்லைத்தீவு பகுதியிலிருந்து செஞ்சிலுவைச் சங்கமும் இறுதியாய் வெளியேறிவிட்டது. இனி செத்து விழும் மக்களைக் கணக்கு காட்டுவதற்குக் கூட அங்கு நாதியில்லை. கேள்வி கேட்பாரின்றி ராஜபக்க்ஷே அரசு புலிகளை ஒடுக்குவது என்ற பெயரில் ஈழத் தமிழ் மக்களின் மீது ஒரு இனப்படுகொலையையே கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் மக்களெல்லாம் இந்தக் கொடுமைகளைக் கண்டும் கையறு நிலையில் இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. எல்லா ஓட்டுக்கட்சிகளும் இந்தப் பிரச்சினையை அரசியலற்ற மனிதாபிமானப் பிரச்சினையாக மாற்றி யார் கிழித்தார்கள் என்பதில் போட்டி போடுகிறார்கள். தனது வாரிசுகளுக்கு கட்சியையும் ஆட்சியையும் எழுதிவைத்து விட்டு பாகப்பிரிவினை வேலைகளை மட்டும் முக்கியமாக செய…
-
- 1 reply
- 1.7k views
-
-
பிரிட்டன் பிரதமர் சிறீலங்கா இனப்படுகொலை விவகாரங்களை கையாண்டு அங்கு அமைதியை கொண்டு வர இன்று நியமித்த விசேட தூதுவரை சிறீலங்கா அமைச்சரவை நிராகரித்து விட்டுள்ளது. அதுமட்டுமன்றி மனிதாபிமான உதவிகளை வன்னி மக்களுக்கு வழங்ககும் கோரிக்கையையும் சிறீலங்காவின் மனித உரிமைகள் தொடர்பில் தான் கொண்டிருக்கும் ஆழ்ந்த வருதத்தையும் ஐநா செயலர் வெளியிட்டதை சிறீலங்கா எள்ளி நகையாடியுள்ளது. இந்திய ஜனாதிபதியும் சிறீலங்கா போரை நிறுத்தி புலிகளுடன் பேச வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். அனைத்துலகெங்கும் தமிழ் மக்கள் ஒலிக்கும் குரலுக்கு உலகம் செவி சாய்க்க முற்பட்டதாகவே இந்த நகர்வுகளை கவனிக்க வேண்டி இருக்கிறது. இந்த நகர்வுகள் சிங்களப் பேரினவாதிகளின் வயிற்றில் புளியை வார்த்துள்…
-
- 23 replies
- 2.2k views
-
-
சிறிலங்கா படையினர் இன்று சனிக்கிழமை வன்னி மீது நிகழ்த்திய வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் நான்கு மூதாதையர்கள் உட்பட 79 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 172 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 448 views
-
-
சிறிலங்கா படையினர் இன்று சனிக்கிழமை வன்னி மீது நிகழ்த்திய வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் நான்கு மூதாதையர்கள் உட்பட 55 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 109 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 545 views
-
-
சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான பு.சத்தியமூர்த்தி படுகொலை செய்யப்பட்டதனை கண்டித்து கனடாவில் கண்டனக்கூட்டமும் பகிரங்க நினைவு வணக்க நிகழ்வும் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 439 views
-
-
சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி நாட்டுப்பற்றாளராக தமிழீழ விடுதலைப் புலிகளால் மதிப்பளிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 659 views
-
-
பிரான்சில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை பல நூற்றுக்கணக்கான பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 406 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குடும்பிமலை பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நேற்றிரவு (13) இடம்பெற்றது. வழமையான ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த படையினர் மீதான இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக படைதரப்பில் தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/
-
- 0 replies
- 806 views
-