ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142908 topics in this forum
-
பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவுண் இலங்கை;கென நியமித்த விசேட பிரதிநிதியை, இலங்கை அரசாங்கம் நிராகரித்தமை குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகமவை நேற்று வெள்ளிக்கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டேவிட் மிலிபான்ட், தமது விசேட பிரதிநிதியை நிராகரித்தமைக்கான காரணத்தை விளக்குமாறு கோரியுள்ளார். இது ஒரு தலைப்பட்சமான நியனம் என ஏற்கனவே வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையை போகல்லாகம, மிலிபானுக்கு விளக்கிக் கூறியுள்ளார். எனினும், இரு நாடுகளும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு இணக்கம் காணப்பட்டதாகத் தெரியவருகிறது. இலங்கையில் தற்பொழுது நடைபெற்றுவரும் மோதல்களை நிறுத்தி, இ…
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 0 replies
- 718 views
-
-
இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் இனஅழிப்பு, மனித அவலங்கள் குறித்து கவனம் செலுத்துமாறு, பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளரான டெஸ் பிறவுணை இலங்கைக்கான சிறப்பு பிரதிநிதியாக பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுண் நியமித்ததை விடுதலைப் புலிகள் வரவேற்கின்றோம். இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிநிதி எஸ்.பத்மநாதன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான விசேட பிரதிநிதி டெஸ் பிறவுணுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: இலங்கையின் தற்போதைய நிலைமைகளை ஆராய்வதுடன், அங்கு நிலவும் மனித அவலங்கள் குறித்து கவனம் செலுத்தி சிறிலங்கா அரசின் இனஅழிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்தவேண்டிய தார்மீகப் பொறுப்பு பிரித்தானிய அரசாங்கத்திற்கு உள…
-
- 0 replies
- 776 views
-
-
வன்னியில் சுமார் 150 சதுர கி.மீ பரப்பளவுள்ள பிரதேசத்துக்குள் இலட்சக்கணக்கான மக்கள் முடங்கிப் போயிருப்பதும்- அங்கு வரலாறு காணாத மனிதப் பேரழிவுகளும், அவலங்களும் நிகழ்ந்து கொண்டிருப்பதும் உலகம் அறிந்த விடயம். சிறிய நிலப்பரப்புக்குள் பெருந்தொகையான மக்கள் போருக்குள் வாழும் நிலை ஒரு புறமும், தினமும் பீரங்கித் தாக்குதல்கள், வான் தாக்குதல்களால் கொல்லப்படுகின்ற அவலங்கள் இன்னொரு புறமும், சரியான உணவு, வசிப்பிடம், நித்திரையின்றி மக்கள் நடைப்பிணமாக வாழும் நிலையை அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. வன்னியில் ‘மனிதாபிமானப் போரை’ முடுக்கி விட்ட படைத்தரப்பும், அரசாங்கமும் அங்கு நிகழ்ந்து வருகின்ற மனிதப் பேரழிவுகள் தொடர்பாக- சர்வதேசத்தின் முன்பாகப் பதில் சொல்லும் நிலை வந…
-
- 0 replies
- 1.9k views
-
-
சுவிற்சர்லாந்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் தமிழ் இளையோரினால் குறுகிய காலத்துக்குள் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் நேற்று முன்நாள் தீக்குளித்து மரணமான முருகதாசனுக்கு அங்கு திரண்டிருந்த தமிழ் மக்கள் வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 503 views
-
-
மலேசியாவில் நடைபெற்ற தைப்பபூச திருவிழாவில் உலக தமிழர் நிவாரண நிதிய செயற்பாட்டாளர்களால் ஈழத் தமிழர் அனுபவித்து வரும் மனிதப் பேரவலங்கள் குறித்த பரப்புரை பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 644 views
-
-
ஈழத்தில் உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னை மத்திய தொடருந்து நிலையத்தில் தொடருந்துகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய நூற்றுக்கும் அதிகமான வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கறிஞர்களின் போராட்டம் காரணமாக தொடருந்து போக்குவரத்தும் பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 366 views
-
-
பிரித்தானியாவின் இலங்கைக்கானா சமாதான தூதுவரை, இலங்கை எதிர்க்காது எனும் பெரு நம்பிக்கையுடன் அமைந்த பிரித்தானிய தலைமை அமைச்சு இலங்கை தெரிவித்த கண்டனத்தால் அவமானத்தால் முகம் சிவந்ததாக பிரித்தானிய முன்னணி நாளேடு செய்தி வெளியிட்டு உள்ளது... மேலும் தெரிவிக்கையில் இலங்கை அரசு பிரித்தானியாவை இதனால் இருநாடுகளுக்குமான உறவில் விரிசல் ஏற்படும் எண்றும் அச்சுறுத்தி உள்ளது... ஆனால் அமைச்சக வெளிவிவகார பிரிவின் தலைமை அமைச்சர் டேவிற் மில்பாண் இலங்கை ஜனாதிபதியுடன் பேசிய பின்னர்தான் இந்த முடிவுக்கு தான் பச்சை கொடி காட்டினார் எண்றும் தெரிவிக்க படுகிறது... Downing Street red-faced after Sri Lanka condemns 'envoy' (Khalid Mohammed/Pool/EPA) Des Browne's role was meant t…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினை நாடாளுமன்றத்திலும் மேல் சபையிலும் எழுந்தது. இந்த பிரச்சினை மீது உரையாற்றிய தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசின் போக்குக்கு கண்டனம் தெரிவித்து உரையாற்றினர். நாடாளுமன்றத்தில், கேள்வி நேரத்தின் போது இலங்கை பிரச்சினை எழுந்தது. அப்போது, பாரதீய ஜனதா தலைவர் சந்தோஷ் கங்வார் உரையாற்றுகையில், "இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். போர்க்களத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும்'' என குறிப்பிட்டார். பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பர்துஹாரி நாடாளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகையில், "இந்தியா-இலங்கை இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை நிறைவேற்ற மத்திய அரசு தவறி விட்டது. இலங்கை தமிழர் நலம் காக்…
-
- 1 reply
- 645 views
-
-
கடந்த 31ம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள். ருவண்டாவில், உகண்டாவில், ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததை விட கொடூரமானவை இனப்படுகொலைகளை சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்
-
- 28 replies
- 8k views
- 1 follower
-
-
கிழக்கில் உதயம்:-காகிதத் தொழிற்சாலை ஊழியர்கள் சம்பளங்கள் வழங்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் : வாழைச்சேனை காகிதாதி தொழிற்சாலை ஊழியர்கள் தமக்கான சம்பளங்கள் வழங்கப்படவில்லை என இன்று வாழைச்சேனையில் உள்ள காகிதத் தொழிற்சாலையில் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். நிறுவனத்திலிருந்து விலகிச் செல்லவிருந்த தாம் நிறுவனத்தை முன்னேற்ற தனக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நிறுவனத்தின் தலைவர் கேட்டதாலேயே தொடர்ந்தும் வேலை செய்வதாகத் தெரிவித்துள்ளனர். சம்பளங்கள் ஒழுங்காக வழங்காப்படாமையினால் தாம் பெரும்பிரச்சினையை எதிர்நோக்குவதாகவும் தமது அன்றாட வாழ்க்கையை நடாத்துவதில் பெரும் கஸ்ரங்களை எதிர்நோக்குவதாகவும் தொழிலாளர் தெரிவித்துள்ளனர். 3 மாதங்களுக்கொரு முறையே திறைசேரியில…
-
- 0 replies
- 666 views
-
-
டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஈழத்தமிழர் தோழமைக்குரல் அமைப்பினர் 28 பேர் கைது செய்யப்படுள்ளனர். டெல்லியின் மத்திய பகுதியான ஜந்தர் மந்தர் இடத்தில் நேற்று முதல் ஈழத்தமிழர் தோழமைக்குரல் அமைப்பினர் ஈழப்பிரச்சனைக்காக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, ஏ.கே.மூர்த்தி எம்.பி., பாண்டிச்சேரி பாமக எம்.பி. ராமதாஸ், பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார், நீதிபதி சச்சார், இலங்கை தமிழ் எம்.பி.சிவாஜிலிங்கம் உட்பட பலர் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு நேரில் வந்து வாழ்த்தினர். இந்நிலையில் இன்று மாலை 4.30 மணியளவில் உண்ணாவிரதம் இருந்தவர்களில் சில பேர் டெல்லிய…
-
- 0 replies
- 677 views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினை நாடாளுமன்றத்திலும் மேல் சபையிலும் எழுந்தது. இந்த பிரச்சினை மீது உரையாற்றிய தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசின் போக்குக்கு கண்டனம் தெரிவித்து உரையாற்றினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 537 views
-
-
ஐ.நா. சபை முன் தீக்குளித்த முருகதாசனுக்கு சுவிஸ் தமிழர்கள் மலர் அஞ்சலி! - படங்கள் ஈழத்தமிழர் பிரச்சனையில் ஐ.நா.சபையின் கவனத்தை ஈர்க்கவும், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கவும் தீக்குளித்து மரணமடைந்த லண்டன் வாழ் இலங்கைத் தமிழரான முருகதாசனுக்கு சுவிஸ் தமிழர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். முருகதாசன் தீக்குளித்த இடத்திற்கு சென்று சுவிட்சர்லாந்து நாட்டில் வசிக்கும் தமிழர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முருகதாசனின் தீக்குளிப்பு பற்றிய செய்தி அறிந்து கூடிய தமிழ் மக்கள் மத்தியில் அவர் எழுதிய கடைசி கடிதம் வாசிக்கப் பட்டது http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=3458
-
- 0 replies
- 808 views
-
-
குண்டு மழைக்கு மத்தியில் நின்றுகொண்டு உலகிற்கு உண்மைகளை எடுத்துக்கூறிவந்த ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி அவர்களின் சாவு எங்களுக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது என ஈழமுரசு இதழ் வெளியிட்டுள்ள அஞ்சலி அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஈழமுரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, குண்டு மழைக்கு மத்தியில் நின்றுகொண்டு உலகிற்கு உண்மைகளை எடுத்துக்கூறிவந்த ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி அவர்களின் சாவு எங்களுக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது. சாவிற்குள் வாழ்ந்துகொண்டு தாயக மண்ணில் நடக்கின்ற நிகழ்வுகளை மிகவும் திறமையாக எடுத்துக்கூறியும், எழுதியும் புலம்பெயர்ந்து வாழுகின்ற மக்கள் மனங்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டவர் சத்தியமூர்த்தி. புலம் பெயர் மக்களால் நன…
-
- 0 replies
- 480 views
-
-
எதிர்வரும் 15.02.2009 ஞாயிறு பகல் 11.00 மணி முதல் மதியம் 12.00 மணிவரை இங்கிலாந்தில் உள்ள சகல இந்து ஆலயங்களிலும் மதியம் 12.00 மணிமுதல் பிற்பகல் 13:00 மணிவரை அனைத்து ஐரோப்பிய இந்து ஆலயங்களிலும் ஈழத்தமிழ் மக்களின் நல்வாழ்வு வேண்டி பிரார்த்தனை வழிபாடு நடைபெற இருக்கிறது. அனைத்துத் தமிழ் பேசும் மக்களையும் இப்பிரார்த்தனையில் பங்குபற்றுமாறு ஏற்பாட்டாளர்களால் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.
-
- 0 replies
- 622 views
-
-
தமிழீழ தேசிய தொலைக்காட்சி செய்மதி மூலம் தனது ஒளிபரப்பை 2005 ஆரம்பித்த பொழுது மாமனிதர் சிவராம் டெயிலிமிரரிற்கு எழுதிய கட்டுரை. TV images: LTTE's next strategic dimension? -Daily Mirror - 30 March 2005 http://www.tamilnation.org/forum/sivaram/050330.htm அவரது கட்டுரை CNN effect ஓடு ஒப்பீடு செய்து அடுத்த கட்ட ஈழப்போரில் (4 இல்) இது ஒரு தந்திரோபாய பரிமாணத்தை (strategic dimension அய்) உருவாக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்றும் அதை NTT effect ஆக பெயர் சூட்டி முடித்திருந்தார். CNN effect என்ற சொற்பதம் ஏன் உருவானது அது எங்கு எப்படியான தாக்கங்களை உருவாக்கியது என்று விக்கிபீடியாவில்: http://en.wikipedia.org/wiki/CNN_effect 2005 இல் நிழல் யுத்தம் என ஆரம்பித்து ம…
-
- 6 replies
- 2.3k views
-
-
நாளை லன்டனில்........... நடக்கவிருக்கும் போருக்கு ஆதரவான லன்டன்வாழ் சிங்கள மக்களின் கூட்டத்திற்க்கு எதிரில் போரினால் பாதிக்கபட்ட லன்டன்வாழ் தமிழ் மக்களினது கூட்டத்தை நடத்த மெட்ரொபொலிடன் போலீஸ் அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவருகிறது... அவசரமாக விபரங்கள் தேவை......................................
-
- 28 replies
- 3.2k views
-
-
புலம் பெயர் உறவுகள் தாங்கள் வசிக்கும் நாட்டின் மக்களுக்கு நமது அவலத்தை புரிய வையுங்கள்....இதை போல்.... http://www.tamilsource.ca/eelam_newspaper/pdf/page1.html
-
- 0 replies
- 1k views
-
-
டெல்லி: இலங்கையில் போர் நிறுத்தம் கோரியும், இலங்கை ராணுவத்துக்கு இந்தியா செய்து வரும் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வைகோ தலைமையில் அக் கட்சியினர் இன்று டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தனர். டெல்லி ஜந்தர் மந்திர் பகுதியில் நாடாளுமன்றம் அருகே இன்று காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மதிமுக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். அத்வானி வாழ்த்திப் பேச்சு: உண்ணாவிரத மேடைக்கு வந்த பாஜக தலைவர் அத்வானி பேசுகையில், இலங்கை தமிழர்களின் நலம் காக்கப்பட வேண்டும். அங்கு போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதற்காக இங்கு உண்ணாவிரதம் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டில் இருந்து வந்து கலந்து கொண்டிருப்பதை காணும்போது உங…
-
- 0 replies
- 632 views
-
-
பொதுமக்களின் படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு ஐ.நா அமைதி படை செல்ல வேண்டும் - ரொபர்ட் ஏவன்ஸ் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையொன்றை உடனடியாக இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலளார் பான் கீ மூனிடம் கோரிக்கை விடுத்துள்ளார் ரொபர்ட் ஏவன்ஸ் இலங்கையில் பெருக்கெடுத்து ஓடும் இரத்த வெள்ளத்தை தடுத்து நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினரால் மட்டுமே முடியும் எனவே உடனடியாக இலங்கைக்கு அமைதிப் படைஅனுப்பி வைக்கப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் உறுப்பினராகவும் தெற்காசிய விவகார தலைவராகவுமுள்ள ரொபர்ட் ஏவன்ஸ் தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் சரணடையுமாறு இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள அ…
-
- 0 replies
- 775 views
-
-
அன்பார்ந்த தமிழ் உறவுகளே, வன்னிப் பிரதேசத்தில் இருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை உடனடியாக வெளியேறுமாறு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது . சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வன்னியை விட்டு வெளியேறினால் வன்னிப் பிரதேசம் ஒரு மாபெரும் சவக்குழியாக மாறிவிடும் . ஆகவே தமிழ் மக்களே இதை உடனடியாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் அவர்கள் வன்னியை விட்டு வெளியேறாமல் அங்கே தங்கள் பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டும். தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் மக்களைக் காக்க வேண்டுமாய் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அளுத்தம் கொடுக்கும் பொருட்டு தொலைபேசி, பேக்ஸ் ,இ மெயில் ஆகியவற்றின் ஊடாக ஒவ்வொரு தமிழ் உறவுகளும் அவசர வேண்டுகோள் விடுக்க வேண்டுமாய் கேட்…
-
- 6 replies
- 1k views
-
-
சிறிலங்கா அரசு பயங்கரவாத பிடிக்குள் சிக்கித்தவிக்கும் எமது மக்களின் நிலையை எடுத்துக்கூறுவோம் வாரீர்.
-
- 0 replies
- 797 views
-
-
தமிழகத்தின் கன்னியாக்குமரியில் 5 சடலங்களுடன் ஒரு படகு கரையொதுங்கியுள்ளது. கன்னியாக்குமரி கடற்கரையில் உள்ள விவேகானந்தா பாறை பின்புறம் படகொன்று கரையொதுங்கி இருந்தது. அதில் 5 சடலங்கள் காணப்பட்டதை அடுத்து அது குறித்து காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை மீட்டுள்ளனர். சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் தமிழக மீனவர்களா? அல்லது இலங்கையில் கடுமையான போர் நடந்து வரும் நிலையில், இலங்கை தமிழர்களா என்பது குறித்து காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 5 சடலங்களுடன் படகு ஒன்று கரை ஒதுங்கிய சம்பவம் கன்னியாக்குமரியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http…
-
- 0 replies
- 965 views
-
-
3ம் இணைப்பு - படங்கள் இணைக்கப்பட்டுள்ளன - சுவிஸ் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்றலில் கவன ஈர்ப்பு ஒன்று கூடல் சற்று முன்னர் ஆரம்பமாகி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது 3 மணியிலிருந்து ஆரம்பமாகியதாகவும் சுமார் 2000 மக்கள் ஒன்றுகூடியுள்ளனர் எனவும் அங்கிருந்த எமது செய்தியாளர் தெரிவித்தார். நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன் நேற்று தீக்குளிப்பு நடைபெற்ற இடத்தில் மக்கள் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் இன்றைய நிகழ்வுக்கு பொலிஸாரால் எந்தவித தடைகளும் அறிவிக்கப்படாத போதும் வழமைக்கு மாறாக அதிகமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே 4 மணி அளவில் முக்கிய விடயங்களுக்கு தங்களின் நிலைப்பாடு பற்றி அறிவிப்பதாக ஐ.நா அதிகாரிகள் சொல்லி இருந்த போதும் இதுவரை அவர்களிடமிருந்து எந்த விதமான…
-
- 0 replies
- 832 views
-