Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை வந்தவர் விமானத்தில் உயிரிழப்பு! அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்துகொண்டிருந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். நேற்றிரவு 10.35க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான யூஎல் 605 என்ற விமானத்தில் வருகைத்தந்த 75 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். குறித்த விமானம் தமது பயணத்தை ஆரம்பித்து சிறிது நேரத்தின் பின்னர் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்பதுடன், அவரது சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் கையளிக்கப்பட்டுள்ளதாக…

  2. நாடு திரும்பிய ஜனாதிபதி சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார். மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் ஜனாதிபதி நேற்று (27) இரவு நாட்டை வந்தடைந்ததாக ´அத தெரண´ விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டார். கடந்த செவ்வாய்கிழமை நாட்டில் இருந்து புறப்பட்ட ஜனாதிபதி, சிங்கப்பூருக்கு விஜயம் செய்த பின்னர் ஜப்பான் சென்றிருந்தார். ஜப்பானுக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானிய பிரதமர் மற்றும் நாட்டின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டார். அத்துடன், அந்நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல வர்த்தக சந்திப்புகளில் கல…

    • 5 replies
    • 600 views
  3. சிறைச்சாலை கூரை மேலேறி கைதி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி சிறைக் கைதி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று பகல் வேளையில் ஆரம்பித்த குறித்த நபரின் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு தன்னை மாற்றுமாறு கோரியே குறித்த கைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரியவருகிறது. மாத்தறையைச் சேர்ந்த 41 வயதான புஷ்பகுமார என்பவரே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://tamil.adaderana.lk/news.php?nid=173735

  4. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி ஆரம்பமாகிறது. எனினும், இம்முறை இந்த அமர்வின்போது இலங்கைக்கு அழுத்தம் குறைவாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது. நிகழ்ச்சி நிரல்களின்படி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் வோல்கர் டர்க், 19ஆம் திகதி பிற்பகலில் இலங்கை பற்றிய வாய்மொழி அறிவிப்பை வழங்குவார். அன்றைய தினமே அவர், ஈரான் இஸ்லாமிய குடியரசு மற்றும் நிகரகுவா மற்றும் இலங்கை பற்றிய தனது எழுத்துப்பூர்வ அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார். முன்னதாக 2022 செப்டம்பர் 51/1 தீர்மானத்தின் கீழ், 2023 செப்டம்பர் 2023 இல் நடைபெறவுள்ள 54வது அமர்வில் எழுத்துப்பூர்வ அறிக்கையை வழங்க இலங்கை கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதால், எதிர்வரும் ஜூன் …

  5. Published By: VISHNU 28 MAY, 2023 | 04:58 PM (எம்.வை.எம்.சியாம்) அடுத்த மாதம் முதல் எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க முடியும். எரிபொருள் விலை திருத்தத்துக்கு அமைவாக ஒதுக்கீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். வெலிகம பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் புத்தாண்டின் போது எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்தோம். இருப்பினும் குறித்த எரிபொருள் ஒதுக்கீட்டு அதிகரிப்பு எமது வ…

  6. Published By: VISHNU 28 MAY, 2023 | 04:39 PM திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் காணாமல் போன ஆட்கள் பற்றிய விசாரனை தொடர்பான நடமாடும் சேவை ஞாயிற்றுக்கிழமை (28) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. குறித்த விசாரனையினை காணாமல் போன அலுவலகம் முன்னெடுத்திருந்தது. காணாமல் போனவர்களின் உறவுகள் தங்களது சாட்சியோடு காணாமல் போனோர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர். இதில் கிண்ணியா,கந்தளாய்,தம்பலகாமம் ஆகிய பிரதேச பகுதிகளை உள்ளடக்கியவர்களில் சுமார் 40 க்கும் மேற்போட்டோர்கள் கலந்து கொண்டு சாட்சியங்களை வழங்கினர். இதில் காணாமல் போன அலுவலக உயரதிகாரிகள்,தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிர…

  7. Published By: RAJEEBAN 28 MAY, 2023 | 12:14 PM சர்வதேச நாணய நிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகளவு உதவிகளை வழங்கியுள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகளவு உதவிகளை செய்துள்ளது என வலியுறுத்தியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்திய பெருங்கடலில் உள்ள தீவுகள் வளைகுடா நாடுகள் தென்கிழக்காசியாவில் உள்ள நாடுகளை உள்ளடக்கிய விஸ்தரிக்கப்பட்ட அயலை உருவாக்குவது குறித்து பிரதமர் மோடி அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். பல்கலைகழகமொன்றில் மோடியின் இந்தியா எழுச்சிபெறும் சக்தி என்ற கருப்பொருளில் உரையாற்றுகையில் இந்திய வெளிவி…

  8. சம்பந்தனிடம் சஜித் கூறியது என்ன? வெளியான தகவல்! எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில், இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் தற்பொழுது தகவல்வெளியாகியுள்ளது. இதற்கமைய, இனப்பிரச்சினை விவகாரத்தில் பிளவுபடாத நாட்டுக்குள் நியாயமான முறையில் அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை சகல தரப்பினருடனும் ஒன்றிணைந்து முன்னெடுப்பதற்குத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார். அத்துடன், நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பிலும் விரிவாகக் கலந்த…

    • 8 replies
    • 671 views
  9. நடாஷா எதிரிசூரிய கைது பௌத்தமதம், பௌத்த பாடசாலைகள் மற்றும் அதில் பயிலும் மாணவ, மாணவிகளை அவமதிக்கும் வகையில் “மொடாஹிமானய” எனும் தலைப்பில் வீடியோவை பதிவேற்றினார் என்றக் குற்றச்சாட்டின் கீழே நடாஷா எதிரிசூரிய, கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கபூரை நோக்கி பயணிப்பதற்காக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைந்தபோதே, குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் இவர், கைது செய்யப்பட்டார். அதன்பின்னர், கணினி குற்றவியல் விசாரணைப் பிரிவு அதிகாரிகளிடம் இவர் ஞாயிற்றுக்கிழமை (28) அதிகாலை கையளிக்கப்பட்டார். கல்கிஸை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 31 வயதான இந்தப் பெண், மலேசியா கோலாலம்பூரை நோக்கி சனிக்கிழமை (28) அதிகாலை 12.05க்கு புறப்படவிருந்த மலேசியா விமானச் …

  10. சீனக் குற்றச்செயல்களின் கேந்திரமாகும் இலங்கை? அண்மையில் இலங்கையில் இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட 39 சீன பிரஜைகளை அளுத்கம பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொலிஸ் அறிக்கைகளின்படி, சந்தேக நபர்கள் பல மாதங்களாக இணையம் ஊடாக பல்வேறு நாடுகளில் உள்ள தனிநபர்களிடமிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை சட்டவிரோதமாக பெற்றுள்ளனர். அளுத்கம, களுஅமோதர பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் குறித்த குழுவினர் தங்கியிருந்ததாகவும், பல்வேறு தூதரகங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டபோது, சீனப் பிரஜைகள் பல ஸ்மார்ட்போன்கள் மற்றும் பணத்தை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, அவை பொலிஸாரால் கைப்பற்ற…

  11. சிறையில் பெண் உயிரிழந்த சம்பவம் : வெலிக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம் பெண் ஒருவர் தடுப்புக் காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 11ஆம் திகதி கைது செய்யப்பட்ட பதுளையைச் சேர்ந்த 41 வயதான ராஜகுமாரி என்ற பெண் வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்த போது உயிரிழந்துள்ளார். குறித்த பெண் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் வெலிக்கடை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் காவலில் இருந்தபோது குறித்த பெண் தாக்கப்பட்டதாகக் கூறி, அவரது மரணம் குறித்து உறவினர்கள் சந்தேகம் எழுப்பினர். பின்னர் வெலிக்கடை பொலிஸில் கடமையாற்றிய ஏழு ப…

  12. Published By: DIGITAL DESK 3 28 MAY, 2023 | 09:52 AM (ஆர்.ராம்) வடக்கு, கிழக்கில் உள்ள தொல்பொருள் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத நிர்மாணங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படுமென புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் தொல்பொருளியல் திணைக்களத்தால் அடையாளம் காணப்படும் பகுதிகளில் பௌத்த அடையாளங்கள் நிறுவப்படுதல் மற்றும் தனியார் காணிகளில் பௌத்த விகாரைகள் நிறுவப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கில் போர் நிலைமைகள்…

  13. தனியார் பல்கலைக்கழக கல்விக்காக வட்டியில்லா கடனுதவியை வழங்கும் யோசனையை அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். ருவான்வெல்ல பகுதியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த போதிலும் அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்படும் வாய்ப்பைப் பெறத் தவறிய ஐயாயிரம் மாணவர்களுக்கு வருடாந்தம் குறித்த வட்டியில்லா கடனுதவி வழங்கப்படவுள்ளது. குறித்த வட்டியில்லாக் கடனுதவி தொடர்பான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இந்தக் கடன் திட்டத்தின் கீழ் படிப்பதற்க…

  14. Published By: DIGITAL DESK 3 27 MAY, 2023 | 03:31 PM (எம்.மனோசித்ரா) வீட்டுப்பணிப் பெண்கள், தூய்மைப்படுத்தல் தொழிலாளர்கள், கட்டட நிர்மானப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களையும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதிக்குள் உள்வாங்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த சட்ட திருத்தங்களின் போது தொழிலாளர்கள் உரிமைகள் , சலுகைகள் என்பன இரத்து செய்யப்படவுள்ளதாக போலியான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சில் இடம்பெ…

  15. Published By: NANTHINI 27 MAY, 2023 | 05:32 PM மலையக மக்களது இலங்கை வருகையின் 200ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கிராமிய உழைப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வானது இன்று (27) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் காலை 10 மணியளவில் இடம்பெற்றது. கிராமிய உழைப்பாளர் சங்க தலைவர் இன்பநாயகம் தலைமையேற்று நடத்திய இந்த நிகழ்வில் பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலர் பங்கேற்று மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக உரையாற்றினர். இதன்போது தொழிற்சங்க அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட மலையக மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தனர். htt…

  16. Published By: DIGITAL DESK 3 27 MAY, 2023 | 03:13 PM (நா.தனுஜா) ஓமானிலுள்ள இலங்கைத்தூதரகம் முன்பாக சுமார் இருவாரகாலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இலங்கைப்பணிப்பெண்கள் உள்ளிட்ட 72 பேர் அந்நாட்டுப்பொலிஸாரால் அழைத்துச்செல்லப்பட்டிருக்கும் நிலையில், விசாரணைகளின் பின்னர் அவர்கள் நாட்டுக்குத் திருப்பியனுப்பிவைக்கப்படுவார்கள் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓமானில் பணிபுரியும் இலங்கைப்பெண்கள், தாம் மீண்டும் நாடு திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கடந்த 8 ஆம் திகதி முதல் சுமார் இருவாரகாலமாக ஓமானில் உள்ள இலங்கைத்தூதரகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். கடந்த 8 ஆம் திகதி சுமார் 10 பே…

  17. Published By: RAJEEBAN 27 MAY, 2023 | 02:23 PM இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பிரிட்டன் தடைவிதிக்கவேண்டும் என கோரும் மனுவிற்கு ஆதரவாக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை சர்வதேச அமைப்பொன்று ஆரம்பித்துள்ளது. இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் வழக்கு தொடருதலுக்கான சர்வதேச நிலையம் என்ற அமைப்பு கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை இணையத்தளத்தில் ஆரம்பித்துள்ளது.இலங்கை அரசாங்கத்தினால் தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் ஆதரவாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கையின் மிகமோசமான யுத்த குற்றவாளியான சவேந்திரசில்வாவிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும் என கோரும் இந்த மனுவை சமர்ப்பிக்கின்றோம் என…

  18. இலங்கை அரசாங்கம் தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபை கவலை பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதாக தொடர்ச்சியாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கவலை வெளியிட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபை விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என விடுக்கப்படும் வேண்டுகோள்களையும் அரசாங்கம் புறக்கணித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் நியாயமற்ற முறையிலும் பாதுகாப்பற்ற முறையிலும் சிறுபான்மையினத்தவர்களை இலக்கு வைத்து பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் குறித்த அறிக்கைய…

    • 4 replies
    • 287 views
  19. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள பிரமுகர் பயணிகள் முனையத்தில் உயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் பரிசோதனை இயந்திரங்களை நிறுவுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, அதியுயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் கருவிகளை பிரமுகர் முனையத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். விமான நிலையத்தின் பொது பயணிகள் முனையத்தில் ஸ்கேனிங் சாதனங்கள் நிறுவப்பட்டிருந்தாலும், விஐபி முனையத்தைப் பயன்படுத்துபவர்களின் பொருட்கள் மற்றும் பைகளை ஆய்வு செய்ய அத்தகைய இயந்திரங்கள் எதுவும் இல்லை. சுங்கத்துறை அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய இது நிறுவப்படவுள்ளது. https://thina…

  20. கிழக்கு மாகாணத்துக்கு விரைவில் விமான சேவைகள் ஆரம்பம் - செந்தில் தொண்டமான் 27 May, 2023 | 11:23 AM கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் காணப்படும் இரண்டு விமான நிலையங்கள் மற்றும் பல கடல் விமானங்கள் இறங்கும் தளங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளமை குறித்து அமைச்சரின் கவனத்துக்கு ஆளுநர் கொண்டுவந்ததையடுத்து விமான சேவ…

    • 2 replies
    • 475 views
  21. Published By: DIGITAL DESK 3 27 MAY, 2023 | 09:50 AM கலாநேசன் ஹர்சித் என்ற 5 வயது சிறுவன் உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களையும் அவற்றின் தலை நகரங்களையும் 4 நிமிடங்கள் மற்றும் 16 நொடிகளுக்குள் கூறி சாதனை படைத்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தின் பீற்று தோட்ட லவர் ஸ்லிப் பிரிவில் விநாயக புரம் பகுதியில் வசித்து வரும் கலாநேசன் மற்றும் லலிதாம்பிகை தம்பதியினரின் மகன் 5 வயதான ஹர்சித் என்ற குழந்தை உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களையும் அவற்றின் தலை நகரங்களையும் 4 நிமிடங்கள் மற்றும் 16 நொடிகளுக்குள் ஆங்கில மொழியில் கூறி புதிய சோழன் உலக…

  22. பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் பயன்படுத்துகின்றது – 18ம் திகதி நால்வர் கைது – மன்னிப்புச்சபை கவலை 27 May, 2023 | 11:43 AM பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதாக தொடர்ச்சியாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கரிசனை வெளியிட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என விடுக்கப்படும் வேண்டுகோள்களையும் இலங்கை அரசாங்கம் புறக்கணிக்கின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. முகமட் அஸ்வர் முகமட் அனாஸ் முகமட் ஹபீர் ஜபீர் முகமட் சித்தீக்…

  23. உடையார்கட்டு வெள்ளப்பள்ளம் குளம் அடாத்தாகாக ஆக்கிரமிப்பு ; சம்பவ இடத்திற்கு சாள்ஸ் எம்.பி விஜயம்! Published By: Digital Desk 3 27 May, 2023 | 11:55 AM முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட உடையார்கட்டு பகுதியில் வெள்ளப்பள்ளம் குளம் அடாத்தாகாக ஆக்கிரமிப்பு செய்வதை இன்று சனிக்கிழமை (26) பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நேரில் சென்று பார்வையிட்டார். வெள்ளப்பள்ளம் குளம் தனியார் ஒருவரினால் ஆக்கிரமிக்கப்பட்டு எல்லையிடப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு அக்கிராம மக்களினால் தெரிவிக்கப்பட்டதன் பிரகாரம் சம்பவ இடத்…

  24. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள தாயார் – சீ.வீ.கே.சிவஞானம் சமகால நிலைமைகள் தொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அனைவரும் ஏகமனதாக தன்னை தெரிவு செய்தால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையினை ஏற்கத் தயாராக இருப்பதாக அந்த கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அத்துடன் பதவிக்காக கட்சிக்குள் போகவில்லை எனவும் போட்டியில்லாமல் அனைவரினதும் ஒத்துழைப்போடும் இணக்கப்பாட்டோடும் தான் தெரிவு செய்யபட்டால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள தாயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.samakalam.com/இலங்கைத்-தமிழரசுக்-கட…

  25. மூன்று மாணவர்களை தாக்கிய விவகாரம் : யாழில் ஆசிரியர் கைது யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். தெல்லிப்பழை மகாஐனா கல்லூரியில் ஆசிரியர் ஒருவரால் மூன்று மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலையில் ஆசிரியர் தெல்லிப்பழை பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2023/1332889

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.