ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
நத்தார் நாள் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு இலங்கையின் ஆயர்கள் கூட்டாக விடுத்த வேண்டுகோளை சிறிலங்கா அரசு நிராகரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 489 views
-
-
சிறிலங்காவின் அரச ஒளிபரப்பு நிறுவனமான ரூபவாஹினியில் ஊதிய விவகாரம் தொடர்பாக பணியாளர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அங்கு படையினர் குவிக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 562 views
-
-
வன்னி சமர்களம் ஒரு கண்ணோட்டம்!! இராணுவம் பல முனைகளில் எங்களுடைய பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டு வந்தாலும் - எங்களுடைய போர் வீரர்கள் சகல முனைகளிலும் கடுமையான எதிர்ச்சமர்களைச் புரிந்து இராணுவத்திற்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்திய வண்ணமிருக்கின்றனர். உண்மையில் இராணுவத்தினர் பலத்த இழப்புக்களை எதிர்நோக்கி மிகவும் பலவீனமான நிலையிலேயே சிறிது சிறிதாக நகர்ந்து கொண்டிருக்கின்றனர். கால நேரம் வரும்போது எங்களுடைய மக்களின் பலத்துடன் ஒரு பாரிய வெற்றியை - வரலாற்றில் என்றுமே சாதிக்காதளவு ஒரு பாரிய வெற்றியை - நிச்சயமாக அடைவோம் என்ற நம்பிக்கை. எங்களுடைய தலைவர், தளபதிகள், போர் வீரர்கள் மற்றும் எங்களுடைய மக்கள் என அனைவருக்கும் உள்ளது. வன்னிப் பெருநிலப்பரப்பில் முன்னேறும் இலங்…
-
- 3 replies
- 4k views
-
-
யாழ். கிளாலி களமுனையில் சிறிலங்கா படை கொமாண்டோக்கள் மேற்கொண்ட பெரும் எடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 40 படையினா் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 74 replies
- 9.4k views
- 1 follower
-
-
கிளிநொச்சியைக் கைப்பற்ற கால எல்லை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், விரைவில் கிளிநொச்சியைக் கைப்பற்றுவோம் என்று சிறிலங்கா படைத்தரப்பின் பேச்சாளர் உதய நாணயக்கர தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 1.2k views
-
-
பாகிஸ்தானில் நடைபெறும் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்கேற்பது இல்லை என்று இந்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்ததையடுத்து சிறிலங்காவை பாகிஸ்தான் அழைத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 757 views
-
-
வன்னிக் களமுனையில் கால் நோய்களால் பாதிக்கப்படும் சிறிலங்கா படையினருக்கு தேவையான மருந்துகளை புலம்பெயர் சிங்களவர்கள் அனுப்ப வேண்டும் என்று தூதரகங்கள் மூலமாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 642 views
-
-
தமிழக மண்ணில் இன்னுமொரு பிரபாகரன் பிறக்கும் வரை இந்த இனம் மீளாது எனவும் மொத்த தமிழனத்தையே அழிக்க அமைதிப்படை என்ற பெயரில் 2 லட்சம் பேரை ராஜிவ் அனுப்பினாரே இது சர்வதேச தீவிரவாதம் இல்லையா என தமிழ் திரைப்பட இயக்குனர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் 'தமிழர் எழுச்சி உரைவீச்சு'என்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ராமேஸ்வரத்தில் பேசியதற்காக தன்னை கைதுசெய்தனர் எனவும் தான் எண்ண பேசினார் என்பது எவருக்கும் தெரியவில்லை எனவும் சீமான் குறிப்பிட்டுள்ளனர். தன்னை எதற்கு கைதுசெய்கிறீர்கள் என காவற்துறை அதிகாரியிடம் கேட்ட போது, 'நல்ல பேசினீங்க சார் எல்லாம் எங்க தலையெழுத்து' என தன்னை கைதுசெய்த காவற்துறை அத…
-
- 1 reply
- 2.6k views
-
-
கிளாலிக் களமுனையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் நூற்றுக் கணக்கான படையினர் படுகாயமடைந்துள்ள நிலையில், படையினர் காங்கேசன்துறை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளிடம் வலுக்கட்டாயமாகத் இரத்தம் பெற்றுள்ளனர். இதேவேளை கிளாலிப் பகுதியில் இடம்பெற்ற மோதல சம்பவத்தில் காயமடைந்த படையினர் 200ற்கும் மேற்பட்டோர் விமானங்கள் மூலம் தென்பகுதி மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/
-
- 0 replies
- 967 views
-
-
குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த செய்தி இலங்கைப் போரில் அப்பாவி ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்கவேண்டும்' என்று தமிழகத்திலிருந்து முதலில் குரல் கொடுத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான். இந்நிலையில், 'என்னை பாலியல் மோசடி செய்து எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறார்' என்று அந்தக் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர் மீது பகீர் குற்றச்சாட்டைக் கிளப்பியிருக்கிறார் ஈழத்துத் தமிழ்ப்பெண் ஒருவர். அவர் விரல் நீட்டிக் குற்றம் சாட்டியிருப்பது சி.மகேந்திரனை நோக்கி. தகவல் கிடைத்ததும் விசாரணையில் இறங்கினோம். தர்மகுமாரி... இலங்கையில் பிறந்த ஈழத்துத் தமிழ்ப்பெண். திருமணத்திற்குப் பிறகு புலம்பெயர்ந்து தென் ஆப்பிரிக்காவில் செட்டில் ஆனவர். இவர்தான் இந்திய கம்யூன…
-
- 17 replies
- 2.9k views
-
-
சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்த்துப் போரிட்டு எதிரிக்கு இழப்புகளைக் கொடுத்துவரும் விழுப்புண்ணடைந்த போராளிகளுக்காக உலருணவு வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. கண்டாவளைக் கோட்ட ஆசிரியர் சமூகம், தருமபுரம் வர்த்தகர் சங்கம் கோட்ட போரெழுச்சிக்குழு கண்டாவளை புளியம்பொக்கணை கிராமங்களின் மக்கள் கூட்டுறவுப் பகுதியினர் ஆகியோர் இணைந்து இவ் உலருணவுப் பொருட்களை வழங்கியுள்ளனர். இவர்கள் வன்னிமேற்கு, வடபோர்முனை ஆகியவற்றில் களப்பணிலீடுபடும் மக்களுக்குமான உலருணவுப்பொருட்களை வழங்கினர் இந்நிகழ்வுகள் நேற்றுப் பிற்பகல் கண்டாவளைக் கோட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் சி.சீராளனின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றது. http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51
-
- 0 replies
- 1.5k views
-
-
-
நத்தார் பண்டிகை மற்றம் புத்தாண்டு காலத்தில் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என அங்கலிக்கன் மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இவ்வாறு போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டால் அதன் மூலம் சர்வதேச ரீதியில் இலங்கையின் நன்மதிப்பு அதிகரிக்கும் என ஆயாகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்த இது தக்க தருணம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். போர் நிறுத்தம் மிகவும் அவதானமாகவும் திட்டமிட்ட வகையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அங்கலிக்கன் திருச்சபையின் ஆயர் துலிப் சிக்கேரா தெரிவித்துள்ளார். தற்காலிக போர் நிறுத்தத்தின் மூலம் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் பெரும் நன்மைகளை …
-
- 2 replies
- 887 views
-
-
யாழ் குடாநாட்டில் தினமும் மூன்று தடவைகள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. இரவுவேளையில் இரண்டு தடவைகளும், பகலில் ஒரு தடவையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் ஏற்பட்ட நிஷா சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்குக் காரணமாக சுன்னாகத்திலிருந்த இலங்கை மின்சாரசபைக்குக் சொந்தமான இரண்டு மின்பிறப்பாக்கிகளும், அக்ரிகோ தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு மின்பிறப்பாக்கிகளும் பழுதடைந்திருப்பதாக பெயர் குறிப்பிடவிரும்பாத மின்சாரசபை அதிகாரி ஒருவர் கூறினார். இதனால், மின் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்பட்டு, குடாநாட்டில் நாளாந்தம் மூன்று தடவைகள் மின்விநியோகத்தைத் தடைசெய்யவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக அந்த அதிகாரி தெரிவித்தார். யாழ் குடாநாட்டில் …
-
- 0 replies
- 761 views
-
-
கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி, கட்சன் வீதிப் பகுதியில் சிறிலங்கா விமானப்படையின் வைற்றர் ஜெற் விமானங்கள் தாக்குதல் நடாத்தியதில் ஒரு வயது குழந்தை உட்பட 6 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதல் சம்பவம் இன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவில் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று கிளிநொச்சியிலும், கிளாலி களமுனைகளிலும் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்களை ஈடுசெய்ய முடியாமல் அப்பாவி பொதுமக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து குண்டுகளை வீசுகின்றனர் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அத்துடன் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் செறிவாக வாழ்கின்ற வட்டக்கச்சி, ஒட்டுசுட்டான், முள்ளியவளை பகுதிகளை இலக்குவைத்து சிறிலங்கா இராணுவத்தினர் ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலை…
-
- 8 replies
- 4.8k views
-
-
இலங்கை இராணுவம் சுமார் 170,000 படைவீரர்களுடன் மிகவும் வலுவான நிலையில் இருப்பதாக இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தாம் இராணுவத் தளபதியாக பதவியேற்ற போது 116000 படைவீரர்களே இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த எண்ணிக்கையை 170,000 மாக உயர்த்தி புதிதாக 50 படையணிகளை உருவாக்கி இராணுவத்தை பலம் மிக்க ஓர் படையாக மாற்றியமைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்னமும் 2500 தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளே எஞ்சியிருப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளினால் பொருத்தப்பட்ட கண்ணி வெடிகளில் சிக்கி 500க்கும் மேற்பட்ட படைவீரர்கள் பாதங்களை இழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் என திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. நன்றி தமிழ்வின் இணையம்
-
- 8 replies
- 2.2k views
-
-
சித்தார்த்தன் தலைமையிலான புளொட், வீ ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஈழம் புரட்சிகர விடுதலை முன்னணியின் பத்மநாபா அணி ஆகியமூன்று தமிழ்கட்சிகள் இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை அமைத்துள்ளன. இக்கட்சி தேர்தல்கள் செயலகத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியின் செயலாளராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி கடமையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஹரித கட்சி என்ற பெயரிலும் புதிய கட்சியொன்று தேர்தல் செயலகத்தினால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. இதன் படி இதுவரை தேர்தல்கள் செயலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அரசியற் கட்சிகளின் எண்ணிக்கை 62 ஆகும். இவற்றில் 20 கட்சிகள் வரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக தேர்…
-
- 16 replies
- 3k views
- 1 follower
-
-
சிறிலங்காவின் தலைமை நீதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா அமைச்சரவை ஆலோசனை நடத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 559 views
-
-
சீசெல்ஸ் நாட்டின் அரச தலைவர் அடுத்த ஆண்டு சிறிலங்காவுக்கு வருகை தர உள்ளதாக அந்நாட்டுக்கான சிறிலங்கா தூதுவர் அனுர இராஜகருண கூறியுளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 439 views
-
-
கொழும்பு, கொள்ளுப்பிட்டி லக்கி பிளாஸா கட்டடத் தொகுதியில் இன்று (18) பகல் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாகப் பல கடைகள் முற்றாக எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீயணைப்புப் படையினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இதன் காரணமாகப் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான செய்திகள் விரைவில்.... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கையிலும் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 418 views
-
-
நத்தார் நாள் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு போர் நிறுத்தத்தை மேற்கொள்ள இலங்கை ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 324 views
-
-
சிறிலங்கா படையினரின் போர் நடவடிக்கை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்ந்து வெள்ள இடரை எதிர்கொள்கின்ற போதும் உதவி ஏதும் கிடைக்கப்பெறாமல் அவதிப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 418 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் கடந்த மூன்று நாட்களாக அடை மழை பெய்து வருகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 571 views
-
-
வீரகேசரி இணையம் - யாழ். குடாநாட்டில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை ஏற்படுத்திய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சீனா 10 ஆயிரம் டெலர்களை வழங்கியுள்ளது. இந்த நிதித்தொகையினை இலங்கைக்கான சீனத் தூதுவர் ஈ தாபோ, சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளித்துள்ளார். சீன அரசு வழங்கியுள்ள இந்த நிதித் தொகை யாழ். குடாநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செலவிடப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அடேயப்பா ..... எவ்வளவு பெரிய நாடு சீனா , எவ்வளவு பெரிய தொகையை கொடுத்துள்ளது .
-
- 1 reply
- 946 views
-