ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143647 topics in this forum
-
மாமனிதர் திரு குமார் பொன்னம்பலம் அவர்களின் ஒன்பதாவது நினைவு தினம் இன்றாகும் 62 ஆண்டுகள் வாழ்ந்த திரு குமார் பொன்னம்பலமவர்கள் தனது வாழ்நாட் காலத்தில் தனது சட்டவாளர் என்ற பரிணாமத்திற்கப்பால், தமிழின விடுதலைக்காகப் பல்வேறு அரசியல் தலைமைகளோடு இணைந்து பணியாற்றிய போதும் நாடாளுமன்ற முறைமைகள் மூலம் தமிழருக்கு நீதி கிடைக்காது என்பதை ஏற்றுக்கொண்டு நாடளுமன்ற அரசியலுக்கு வெளியே தமிழினத்தின் நீதியானதும், சுதந்திரமானதுமான வாழ்வுக்காகத் தமிழீழ தேசியத் தலைவரின் தீர்க்க தரிசனமான கோட்பாட்டை வரித்தவாறு எதிரியின் கோட்டையிலே நின்று குரல் கொடுத்த ஒரு தலைசிறந்த மாவீரனாவார். இடையறாது கொழும்பிலே ஒலித்ததோர் உரிமைக்குரலாக, அவரது குரல் திகழ்ந்ததென்பதே உண்மையாகும். போர்முனையை விடக் கூர்முனை…
-
- 1 reply
- 748 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் மற்றும் செங்கலடி போன்ற பகுதிகளில் இன்று திங்கட்கிழமை காலை சிறிலங்கா படையினர் ஆயுதமுனையில் முச்சக்கர வாகன சாரதிகளையும், வர்த்தகர்களையும் மிரட்டி, கட்டாயப்படுத்தி சிறிலங்கா தேசியக் கொடியை வாகனங்களிலும் வர்த்தக நிலையங்களிலும் தொங்கவிடுமாறு தெரிவித்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 468 views
-
-
கிளிநொச்சி வீழ்ந்தாலும் இலங்கையின் கிழக்கு காட்டுப் பகுதிகளில் சண்டை தொடரும் என்று ஜப்பான் கருத்து தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 527 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு பகுதியில் நேற்று முன்நாள் இரு இளைஞர்கள் சிறிலங்கா படையினரால் கடத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 532 views
-
-
முல்லைத் தீவுக்கு இந்திய கடற்படையினர்-திருமா திருச்சி: முல்லைத் தீவுக்கு சீருடை அணியாத இந்திய கடற்படையினர் சென்னை விமான நிலையம் வழியாக சென்றிருக்கிறார்கள். இது ஒட்டு மொத்த தமிழ் இனத்துக்கும் இழைக்கப்படும் பச்சை துரோகம் என விடுதலைத் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் ஈவு இரக்கமற்ற இனப் படுகொலைக்கு இந்திய அரசே பொறுப்பு. முப்படைகளும் நேரடியாக இறங்கி, விடுதலைப் புலிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் அப்பாவித் தமிழ் மக்களை கொன்று குவித்து வருகிறார்கள். 6.5 கோடி தமிழ் மக்களின் தலைவரான முதல்வர் கருணாநிதி இலங்கையில் போரை நிறுத்தக்கோரி இந்தியப் பிரதமரை நேரில் போய் சந்தித்து ஒரு மா…
-
- 5 replies
- 4.7k views
-
-
சிறிலங்கா அரசு ஜெனிவா உடன்பாடுகளுக்கு எதிரான போர்க் குற்றங்களை தினமும் தொடர்கின்றது.- த.தே.கூ திங்கள், 05 ஜனவரி 2009, 14:25 மணி தமிழீழம் [] சிறிலங்கா அரசு ஜெனிவா உடன்பாடுகளுக்கு எதிரான போர்க் குற்றங்களை தினமும் தொடர்ந்து செய்து வருகின்றபோதும், சர்வதேச சமூகம் மௌனம் காத்து வருவதுடன் சிறிலங்கா அரசுக்கே இராணுவ உதவிகளையும் வழங்கிவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. வன்னிப் பிரதேசத்தில் உள்ள மக்கள் நத்தார், புதுவருடம், மற்றும் தைப்பொங்கல் ஆகிய விஷேட தினங்களில் பொருளாதார நெருக்கடி, உணவு, மருந்து தட்டுப்பாடு என்பவற்றிற்கு முகங்கொடுத்துள்ளனர். இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் …
-
- 0 replies
- 441 views
-
-
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இலங்கையை விட்டு இந்தியாவுக்கோ அல்லது இந்தோனேசியாவுக்கோ தப்பிச் செல்லலாம் என்று கூறப்படுவது தவறானது. அவர் எந்த சூழ்நிலையிலும் இலங்கையை விட்டு வெளியேற மாட்டார் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை நிறுவியவரும், அதன் எம்.பியுமான கருணா கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கிய தளபதியாக விளங்கியவர் கருணா. பின்னர் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பு தற்போது இலங்கை ராணுவத்தின் பாதுகாப்புடன் புலிகளுக்கு எதிராக உளவு சொல்வது, புலிகள் இயக்கத்தினரின் பலத்தை போட்டுக் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது. கருணா குழுவினரின் உதவிய…
-
- 10 replies
- 4.7k views
-
-
இலங்கை விமானப் படைக்கு இந்தியா உதவி? -ராஜாதிங்கள்கிழமை, ஜனவரி 5, 2009, 12:51 [iST] டெல்லி: இலங்கை விமானப் படைக்கு உதவி செய்வதற்காக இந்திய விமானப்படை அதிகாரிகள் இலங்கை சென்றதாகக் கூறப்படுவது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. அக் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா டெல்லியில் நிருபர்களிடம் பேசுகையி்ல், இலங்கை ராணுவத்துக்கு ஆயுத உதவி வழங்கியதன் மூலம் அங்குள்ள தமிழர்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே துரோகம் விளைவித்தது. இந் நிலையில், தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த அனைத்துக் கட்சி குழுவினரிடம், இலங்கை பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பதற்காக, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அந்த நாட்டிற்கு அனுப்பி வைப்…
-
- 2 replies
- 2.1k views
-
-
தமிழீழம் மலர்ந்தே தீரும் - டாக்டர் ராமதாஸ் பேட்டி தமிழீழம் மலர்ந்தே தீரும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய அந்நாட்டு அரசிடம் வலியுறுத்துமாறு மத்திய அரசிடம் நாங்கள் எத்தனையோ முறை கோரிக்கை வைத்தோம். தமிழகத்தில் இருந்து பல்வேறு தரப்பிடமிருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக எம்பிக்கள் மத்திய அரசை வலியுறுத்தினர். அனைத்துக் கட்சித் தலைவர்களும் முதல்வர் கருணாநிதி தலைமையில் பிரதமரை சந்தித்து பேசினோம். எத்தனையோ முறை போரை நிறுத்தத் சொல்லி வற்புறுத்தியும், மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இது 7 கோடி தமிழர்களின் தலைகுனிவு. இதனால் சுயமரியாதை, தன்…
-
- 0 replies
- 924 views
-
-
கிளிநொச்சியிலும் பரந்தனிலும் கடந்த இரண்டு நாட்களாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற கடும் மோதல்களில் காயமடைந்த நூற்றுக்கும் அதிகமான சிறிலங்கா படையினர் தென்பகுதியில் உள்ள கொழும்பு, கண்டி, அனுராதபுரம், பொலநறுவை மாத்தளை ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 337 views
-
-
இடப்பெயர்வுகளுக்கு மத்தியில் மக்கள் தமது வாழ்வியலை மாற்றியமைத்து தமிழ் தேச விடுதலைக்கு மூச்சுக்கொடுத்து நிற்பது வரலாற்றுப் பெறுமானம் மிக்கது என தமிழீழ விடுதலைப் புலிகளின் புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 399 views
-
-
போரினால் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதால்தான் அரசுடன் இணைகின்றோம் : புளொட் இணைப்பாளர் வீரகேசரி இணையம் 1/5/2009 11:21:40 AM - யுத்தத்தின் மூலமாக அரசியல் தீர்வைக் காணமுடியாது. தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவிடவும் முடியாது என்பதால் தான் அரசுடன் இணைந்துள்ளொம்.இவ்வாறு கூறினார் புளொட் அமைப்பின் நீண்டகால உறுப்பினரும் தேசிய இணைப்பாளருமான எஸ். ஜெகநாதன். புளொட் அமைப்பின் இறம்பைக்குளத்திலுள்ள அரசியற்துறை அலுவலகத்தில் பொறுப்பாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற வவுனியா பத்திரிகையாளர்களுடனான சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது : ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். த…
-
- 7 replies
- 2.2k views
-
-
மணலாறு சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதலில் தந்தை கொல்லப்பட்டுள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 374 views
-
-
புலிகளின் வானொலி அறிவிப்பாளர் சந்தேகத்தில் கைது வீரகேசரி இணையம் 1/5/2009 10:44:35 AM - புத்தளம் சாயிரா முகாமில் வைத்து சந்தேகத்தின் பேரில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்திலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார் . தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒளிபரப்புச் சேவையின் சிங்கள அறிவிப்பாளராகக் கடமையாற்றியதாகக் கூறியே இவரைக் கைது செய்துள்ளதாக அவர் கூறினார். கைது செய்யப்பட்ட 20 வயதான யுவதியிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அ…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கிளிநொச்சியை கைப்பற்றும் போரில் உயிரிழந்த படையினருக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று சிறிலங்காவில் நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 458 views
-
-
தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து கிளிநொச்சி மீட்கப்பட்டமை தொடர்பாக பாடசாலைகளில் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்குமாறு மகிந்த அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 403 views
-
-
கிளிநொச்சியில் "மாடுகளும் தெரு நாய்களும்" மட்டுமே உள்ளன: சிங்கள ஊடகம் [திங்கட்கிழமை, 05 சனவரி 2009, 06:48 மு.ப ஈழம்] [சி.கனகரத்தினம்] கிளிநொச்சி நகரில் தற்போது "தெரு நாய்களும் மாடுகளும்" மட்டுமே உள்ளன என்று சிங்கள ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிங்கள ஆங்கில ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா படைத்தரப்பால் ஆக்கிரமிக்கப்பட்ட கிளிநொச்சி நகருக்கு ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். கொழும்பிலிருந்து அனுராதபுரம் வான்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் உலங்குவானூர்தி மூலம் மாங்குளம் சென்றடைந்தனர். அதன் பின்னர் ஏ-9 வீதி வழியாக கிளிநொச்சி சென்றடைந்தனர். கிளிநொச்சி நகரானது கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளது. சற்று தொ…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஆனையிறவை ஆக்கிரமித்து விட்டதாக இந்திய ஊடகங்களுக்கு செய்தி வழங்கிய "றோ" [திங்கட்கிழமை, 05 சனவரி 2009, 07:11 மு.ப ஈழம்] [செ.விசுவநாதன்] ஆனையிறவை சிறிலங்கா படைத்தரப்பு ஆக்கிரமித்து விட்டதாக இந்திய செய்தி முகாமைகளுக்கு இந்திய கொள்கை வகுப்பு அமைப்பான "றோ" செய்தி அளித்ததாக இந்தியத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனையிறவை இனிமேல்தான் கைப்பற்றப் போகிறோம் என்று சிறிலங்கா படைத்தரப்பு மற்றும் சிறிலங்கா அரச தரப்பு ஊடகங்கள் இன்றும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், ஆனையிறவையும் படைத்தரப்பு நேற்றே ஆக்கிரமித்து விட்டதாக இந்திய செய்தி முகாமைகளான பி.ரி.ஐ. மற்றும் யூ.என்.ஐ. ஆகியவற்றுக்கு இந்தியாவின் கொள்கை வகுப்பு அமைப்பான "றோ" பிரிவினர் தகவல் வழங்கியதாக கூறப்படுகிறது…
-
- 0 replies
- 1.4k views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் நாளும் தொடரும் திட்டமிட்ட சிறிலங்காவின் இனப்படுகொலை: த.தே.கூ. [திங்கட்கிழமை, 05 சனவரி 2009, 07:19 மு.ப ஈழம்] [ப.தயாளினி] வன்னிப்பெரு நிலப்பரப்பில் சிறிலங்காவின் திட்டமிட்ட இனப்படுகொலை நாள்தோறும் தொடர்கின்றபோதும் அனைத்துலக சமூகம் மௌனம் காத்து வருவதுடன் சிறிலங்காவுக்கே படைத்தரப்பு உதவிகளையும் வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு வெளியிட்டுள்ள அறிக்கை: - டிசம்பர் 17 இல் வட்டக்ககச்சி பகுதியில் 4 முறை சிறிலங்கா வான்படை நடத்திய தாக்குதலில் 5 மாத குழந்தை மற்றும் 25 வயது இளைஞர் கொல்லப்பட்டனர். 3 குழந்தைகள் உட்பட 13 பேர் ஏதிலிகளாயினர். - டிசம…
-
- 0 replies
- 409 views
-
-
முல்லைத்தீவிலும் படையினர் பாரிய எதிர்ப்பை எதிர்நோக்குவர்: இக்பால் அத்தாஸ் [ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2009, 10:48.59 AM GMT +05:30 ] கிளிநொச்சியை படையினர் கைப்பற்றியுள்ள நிலையில் முல்லைத்தீவை கைப்பற்ற படையினர் முயலும்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரிய எதிர்ப்பை படையினர் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் எதிர்வு கூறியுள்ளார். கிளிநொச்சியை இழந்தமையானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவான விடயம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இதன் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆழ்கடல் ஆயுத கடத்தல்களுக்கும் பாதிப்பு ஏற்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் 12.30 க்கு பின்னர் வன்னி கட்டளைத் தளபதி ஜகத்…
-
- 0 replies
- 1.2k views
-
-
உயிர்க் குழிகள்! ஈழத்தின் காட்டுப் பகுதி ஒன்றில் சில கூடாரங்கள். ஊர் ஊராக இடம் பெயர்ந்து இறுதியில் அந்தப் பகுதிக்கு வந்து கூடாரங்கள் அமைத்துச் சில குடும்பங்கள் தங்கியிருக்கின்றன. அந்த மக்கள் சொந்த தேசத்திலேயே அகதிகளாக வாழும் அவல நிலைக்கு ஆளாகிப்போனவர்கள். அங்கே அந்த இலங்கை அரசு தமிழீழ மக்கள் வாழும் குடியிருப்புகளின் மீது குண்டு மழை பொழிவது வழக்கம். வீடுகள்தான் என்றில்லை, வயல்வெளிகள் எரிகின்றன. வழிபாட்டுத் தலங்கள் சிதைகின்றன. பள்ளிக்கூடத்திலும், மருத்துவமனையிலும்கூட குண்டுகள் விழுந்துள்ளன. எனவே, காட்டுப் பகுதிதான் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கும் என்று கருதி, அந்தக் குடும்பங்கள் அங்கே கூடாரங்கள் அமைத்துள்ளன. ஆனாலும், உணவுக்கு என்ன செய்வது? கனிகளே உணவு. மழை…
-
- 3 replies
- 1.9k views
-
-
'எப்போது போவார் பிரணாப் முகர்ஜி?' 'இலங்கை இனப்பிரச்னைக்கு உரிய தீர்வு காணும் வகையில் ஒரு வடிவமைப்பை நாங்கள் ஏற்படுத்தி னோம். தனிச்சிறப்பு மிக்க இனப்பிரிவாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற தமிழர்களின் போராட்டத்தின் அடிப்படை ஆவலை நிறைவேற்றுவது; அவர்களுடைய அரசியல் எதிர்காலத்தை நிர்வகிக்கும் வகையில் அரசியல் சுயாட்சி; இந்தக் குறிக்கோள்களை நிறைவேற்றத் தேவையான அரசு சக்தி; இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளைத் தமிழர்களின் வரலாற்றுப் பெருமை வாய்ந்த இடமாக அறிவித்தல்; இலங்கை ஜனநாயக சோஷலிஸக் குடியரசில் தமிழை ஒருஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றை உள்ள டக்கிய ஒப்பந்தம் இது.' - இவை இந்திய இலங்கை ஒப்பந்தம் குறித்து 1987 ஜூலை 31-ம் நாள், அன்றைய பிரதமரான ராஜீவ்காந்தி மாநிலங்கள…
-
- 9 replies
- 1.7k views
-
-
இராணுவத்தில் புலிகளின் முகவராக செயற்பட்டவர் கிளாலி முன்னரங்கில் கைதாம் சிங்கள விடுதலைப் புலி புலனாய்வு உறுப்பினர்கள் இராணுவப் படையில் ஊடுருவியுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.இராணுவத்தில
-
- 1 reply
- 1.4k views
-
-
முல்லைத்தீவை கைப்பற்றியதும் வடக்கில் தேர்தல்: டலஸ் அழகப்பெருமா [திங்கட்கிழமை, 05 சனவரி 2009, 06:10 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு நகரினை சிறிலங்கா படையினர் கைப்பற்றியதும் வடபகுதியில் தேர்தல் நடத்தப்படும் என்று அந்நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: யாழ். குடநாட்டில் உள்ளூராட்சி தேர்தல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் வடபகுதியில் முல்லைத்தீவை படையினர் கைப்பற்றிய பின்னர் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. முல்லைத்தீவை கைப்பற்றிய பின்னரான ஆறு மாதங்களில் வடக்கில் தேர்தல் நடத்தப்படும். வவுனியா மற்றும் கிளிந…
-
- 1 reply
- 621 views
-
-
பேச்சுவார்த்தை மூலம் புலிகளை பலவீனப்படுத்திய எங்களுக்கே கிளிநொச்சி வெற்றி சொந்தம்: ஐ.தே.க. [திங்கட்கிழமை, 05 சனவரி 2009, 06:21 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பலவீனப்படுத்திய எங்களுக்கே கிளிநொச்சி வெற்றி சொந்தம் என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திசநாயக்க பேசியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சியை கைப்பற்றிய படையினர் மற்றும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றோம். படையினர் பெற்ற…
-
- 1 reply
- 794 views
-