Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: DIGITAL DESK 3 05 MAY, 2023 | 02:03 PM யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர், முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்தி சாரதிகளின் நகை மற்றும் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஒரே நாளில் இரு முச்சக்கர வண்டி சாரதிகளிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, பருத்தித்துறையில் இருந்து நேற்று வியாழக்கிழமை, முச்சக்கர வண்டியொன்றை வாடகைக்கு அமர்த்தி கீரிமலையில் உள்ள காணிகளை பார்க்கவென பெண்ணும், இரண்டு ஆண்களும் கீரிமலை பகுதிக்கு வந்துள்ளனர். கீரிமலையில் முச்சக்கர வண்டி சாரதிக்கு குளிர்பானத்திற்குள் மயக்க மருந்து கலந்து கொடுத்த…

  2. Published By: DIGITAL DESK 3 06 MAY, 2023 | 03:19 PM தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 10 இலங்கை தமிழர்கள் இன்று சனிக்கிழமை காலை தமிழகத்தை சென்றடைந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து 244 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர். இந்நிலையில் இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் 8 ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்த இரண்டு ஆண்கள், நான்கு பெண்கள், மூன்று ஆண்குழந்தை ஒரு பெண் குழந்தை உட்பட 10 பேர் முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து ந…

  3. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளால் அவர்கள் வழமையை விட அதிகமாக நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளதாகவும் இதன் காரணமாக பல்கலைக்கழக அமைப்பு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னேஹக்க தெரிவித்துள்ளார். கடந்த 5 வருடங்களை விட கடந்த சில மாதங்களில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சடுதியாக நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளதாகவும் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு வெளிப்படையாக கலந்துரையாடி இப்பிரச்சினைக்கு தீர்வை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்துள்ளதாலும், அரச சேவைக்கு புதிதாக ஆட்களை இணைத்துக் கொள்ளாத அரசா…

  4. Published By: DIGITAL DESK 5 06 MAY, 2023 | 10:25 AM (எம்.மனோசித்ரா) நாட்டின் மின்சாரத்துறையை மறுசீரமைத்தல் மற்றும் அதன் வினைத்திறனை மேம்படுத்தல் என்பவற்றுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர , ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசனை சபையின் பணிப்பாளர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய மின்சக்தி துறையை மறுசீரமைப்பதற்கான வேலைத்திட்டங்களுக்குத் தேவையான தொழிநுட்ப ஒத்துழைப்புக்கள் , மின் உற்பத்தி நிறுவனங்களாக மேம…

  5. ஈரான் குடியரசு 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட புற்றுநோய் மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகளை இலங்கை அரசாங்கத்திற்கு சுகாதார அமைச்சின் ஊடாக நன்கொடையாக வழங்கியுள்ளது. ஈரானிய தூதுவர் ஹாசிம் அஷிட் இந்த மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். இந்த நன்கொடையின் கீழ், நாட்டில் புற்றுநோய், இதய நோய், தோல் நோய், வைரஸ் தொற்று, உயர் இரத்த அழுத்தம், பார்கின்சன் போன்ற பல நோய்களுக்கான மருந்துகள் உட்பட பல அத்தியாவசிய மருந்துகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது இவ்வாறான அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக் கொள்வது பெரும் நிவாரணம் அளிப்பதாகவும், அதற்காக ஈரான் மக்களுக்கும் ஈரான் …

  6. தையிட்டி விகாரை விவகாரம் : அத்துமீறல்கள் இடம்பெற்றிருந்தால் ஏற்றுக்கொள்ள முடியாது – அமைச்சர் டக்ளஸ் Published By: Digital Desk 5 05 May, 2023 | 10:44 AM தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பான ஆவணங்களை ஆராயவுள்ளதுடன் அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அத்துமீறல்கள் இடம்பெற்றிருக்குமாயின் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். வியாழக்கிழமை (04) இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தினை தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …

  7. பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவிக்கு பசில் ராஜபக்ஷ ?? – கட்சிக்குள் முரண்பாடு மே தினக் கூட்டத்தில் பசில் ராஜபக்ஷவிற்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு அளிக்கப்பட்டதையடுத்து பொதுஜன பெரமுனவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக காட்சிவட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான பதாகையில் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து பசில் ராஜபக்ஷவின் படம் காட்டப்பட்டிருந்தது. இதனை கட்சியின் நன்மதிப்பை குறைக்கும் நடவடிக்கையாக கருதுவதால், இந்த விடயம் குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திடம் ஆட்சேபணைகள் எழுப்பப்பட்டுள்ளன. முன்னதாக, மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து கோட்டாபய ராஜபக்சவின் படம் விளம்பரப்படுத்தப்பட்ட போதும் அவர் …

  8. போலி நாணயத்தாள்களுடன் யாழில் இருவர் கைது. 12 இலட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் நேற்று யாழில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி போலி நாணயத்தாள்களுடன் இருவர் பயணிப்பது தொடர்பாக இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக ஆணையிறவு பகுதியில் மறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த நபர்களிடமிருந்து 5000 ரூபா மற்றும் 500 ரூபா போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் பல்கலைக்கழக மாணவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்ப…

  9. நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு சொத்து கையிருப்பு அதிகரிப்பு! நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு சொத்து கையிருப்பு ஏப்ரல் மாதத்தில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு சொத்து கையிருப்பானது மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.2 வீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஏப்ரல் இறுதியில் 2.75 பில்லியன் அமெரிக்க டொலர்களை இது எட்டியுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. மார்ச் மாதத்தில் வெளிநாட்டு நாணய கையிருப்பு 2.69 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இந்த சொத்து கையிருப்பில் சீன மக்கள் வங்கி பரிவர்த்தனை முறை மூலம் வழங்கிய 1.4 பில்லியன் ட…

  10. Published By: DIGITAL DESK 5 05 MAY, 2023 | 05:06 PM (நா.தனுஜா) நிதிசார் வசதிகளை இலகுவாக அணுகுவதற்கு ஏதுவான முறையில் இலங்கையை மீளவகைப்படுத்துமாறு ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதித்தலைவர் ஷிக்ஸின் சென்னிடம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கோரிக்கைவிடுத்துள்ளார். தென்கொரியாவின் இன்ஸியான் நகரில் கடந்த 2 - 5 ஆம் திகதிவரை நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் 56 ஆவது வருடாந்தக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அங்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் முக்கியஸ்த்தர்கள் பலரையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். அதன் தொடர்ச்சியாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர…

  11. புத்தரின் போதனைகளின்படி அனைவரும் அணிதிரளுவோம் – ஜனாதிபதி! இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப புத்தரின் போதனைகளின்படி அனைவரும் அணிதிரளுவோம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மூவித ரத்தினங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட வெசாக் பெர்ணமி தினம் பௌத்த நாட்காட்டியின் மிக முக்கியமான நாட்களில் ஒன்று என்பதோடு இது புனிதத்துவமான முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. இந்த நாள் கௌதம புத்தரின் பிறப்பு, புத்தத்துவம் மற்றும் சம்புத்த பரிநிர்வாணத்தின் புனித நிகழ்வை நினைவுபடுத்துவதோடு மனிதநேயம் மற்றும் கருணையுடன் கூடிய அறப்பணிக…

    • 7 replies
    • 417 views
  12. Published By: DIGITAL DESK 5 04 MAY, 2023 | 01:41 PM (நா.தனுஜா) இலங்கையால் சுபீட்சத்தை நோக்கிய பாதையில் பயணிக்கமுடியுமென சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய பொருளாதார நிலைவரம் தொடர்பான ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையினால் அனுமதியளிக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டமானது நுண்பாகப்பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்தியிருப்பதுடன், அதன்மூலம் பணவீக்கம் குறைந்த மட்டத்துக…

  13. தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்ட பின்னர் பேச்சுக்கு அழையுங்கள் – விந்தன் கனகரத்தினம் தமிழர்களுக்கு எதிரான அராஜகங்களை புரிந்து கொண்டு பிரச்சனைக்கான தீர்வினை ஏற்படுத்த முடியாது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) ஊடகங்களை சந்தித்த போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “தையிட்டி பகுதியிலே ஒரு பிரமாண்டமான புத்தவிகாரை இராணுவத்தினருடைய உதவியுடன் கட்டப்பட்டிருக்கின்றது. இவ்வாறான பல்வேறு அத்துமீறல்களை அரச படைகளும், அரசும் தொடர்ந்து வண்ணமே உள்ளன. இந்த லட்சணத்திலே இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரம…

    • 2 replies
    • 497 views
  14. வடக்கில் 3 இடங்களில் முதலீட்டு வலயங்கள் வடக்கு மாகாணத்தில் மூன்று இடங்களில் முதலீட்டு வலயங்கள் அமைப்பதற்கு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதற்குரிய அமைச்சரவைப் பத்திரங்கள் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போது இலங்கை முதலீட்டுச் சபையின் பிரதிநிதியால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. “யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளோம். அங்கே முதலீட்டு வலயம் அமைக்க உத்தேசித்துள்ளோம். கிளிநொச்சியில் இரசாயன தொழிற்சாலை அமைந்துள்ள இடத்திலும், மாங்குளத்தில் 400 ஏக்…

  15. விரைவில் அதிரடி முடிவு எடுப்போம்! – சம்பந்தன் அறிவிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் சில முடிவுகளை அரசுக்கு அறிவிக்கும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசால் ஆரம்பிக்கப்பட்ட சர்வகட்சிப் பேச்சு இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளமை தொடர்பிலும், தீர்வு முயற்சிகள் மந்தகதியில் உள்ளமை குறித்தும் இரா. சம்பந்தனிடம் எழுப்பிய கேள்விக்கே மேற்கண்டவாறு பதிலளித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “தற்போதைய நிலைமையில் அரசின் செயற்பாடுகள் மந்தகதிய…

  16. இலங்கையின் வனவிலங்கு வளங்களை நாட்டுக்கு அந்நிய செலாவணியை கொண்டு வருவதற்கு பயன்படுத்த முடியும் என வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கிரித்தலையில் நேற்று வனவிலங்கு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனங்கள் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தால், நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் வனவிலங்கு வளங்கள் நாட்டுக்கு அந்நிய செலாவணியை கொண்டு வர முடியும். உலகில் மிகச் சிலரே எமது நாட்டைப் பற்றி நன்கு அறிந்திருப்பதாகவும், மிகச் சிலரே எமது நாட்டின் அழகை அறிவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். உலகின் பெரும்பாலான நாடுகளிலுள்ள மக்கள் குளிர் காலநிலையால் க…

  17. மத நல்லிணக்கத்தைப் போற்றுபவர்களே பௌத்தத்தை உண்மையாக பின்பற்றுபவர்கள் – சஜித் மத நல்லிணக்கத்தைப் போற்றுபவர்களே பௌத்தத்தை உண்மையாக பின்பற்றுபவர்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கையர்களுக்கும் உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கும் உலக மக்கள் அனைவருக்கும் வெசாக் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் மற்றும் இறப்பு ஆகியவை பௌத்தத்தின் மிகப்பெரிய பண்டிகையாகும். இது உலகின் பௌத்த மக்களால் மிகுந்த நம்பிக்கையுடன் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நிலை…

    • 1 reply
    • 333 views
  18. Published By: DIGITAL DESK 3 05 MAY, 2023 | 02:49 PM வட மாகாணத்தில் சீனாவின் உதவி திட்டத்தில் கடற் தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்கப்பட உள்ளதாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாண மக்களுக்காக சீன அரசிடம் இருந்து சுமார் 1500 மில்லியன் ரூபாய் கிடைக்கப் பெறவுள்ள நிலையில் குறித்த நிதியுதவியில் அரிசி, கடற்தொழிலாளர்களுக்கு வலை மற்றும் வீடுகள் பெற்றுக…

  19. அனைத்து மாகாணங்களுக்கும் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை ஒன்லைனில் விரைவாக பெற்றுக்கொள்ளும் வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் (ICTA) மற்றும் மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இ-வாகன வருமான உரிமம் (eRL) திட்டத்தின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனம், புதிய வாகன வருமான உரிமத்தைப் பெறுவதுடன், தற்போதுள்ள வருமான உரிமத்தை (ஈஆர்எல்) புதுப்பிக்கும் வசதியும் கொண்டு உள்ளது. திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மற்றும் ஒன்லைன் முறையின் மூலம் உரிமத்தைப் பெறுவதற்கான நிதிக் கொடுப்பனவுகளை கிரெடி…

  20. முன்னறிவிப்பு இன்றி வெளிநாடு சென்ற 50 வைத்தியர்களை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார். இதேவேளை பலாங்கொடை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நிபுணர்கள் இன்மையால் சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டதால் நேற்று பதற்றமான சூழல் காணப்பட்டது. ஆறு வைத்தியர்கள் கடமையாற்றியிருந்த போதிலும் நேற்று இரண்டு வைத்தியர்கள் மாத்திரமே கடமையாற்றியிருந்தமையினால் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மறு அறிவிப்பு வரும் வரை மருத்துவமனையில் அவசர அறுவை சிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் என மருத்துவமனையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/25…

  21. Published By: T. SARANYA 05 MAY, 2023 | 12:57 PM வவுனியா பூவரசங்குளம் பகுதியில் தன்னால் தந்தை அவமானப்படுவதை தாங்க முடியாமல் மாணவன் தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வவுனியா பூவரசங்குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டு போட்டிக்கான இல்ல அலங்கார செயற்பாட்டினை குறித்த மாணவன் சக மாணவர்களுடன் இணைந்து மேற்கொண்டதாகவும், அதற்கான ஒவியம் வரைவதற்காக அன்றையதினம் இரவு பாடசாலைக்கு தொலைபேசியினை கொண்டு சென்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். இவ்வாறு தொலைபேசியினை பாடசாலையினுள் குறித்த மாணவன் பாவிப்பதை கண்ட அதிபர் தொலைபே…

  22. இலங்கையில் குழந்தைகளைக் கைவிடும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம், குழந்தைப் பெட்டிகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. புதிதாக பிறந்த குழந்தைகளை வளர்க்க முடியாத அல்லது அந்த குழந்தைகளில் விருப்பமில்லாத பெற்றோர்கள், குழந்தைகளை அரசின் பொறுப்பில் விட்டுச்செல்லும் நோக்கியிலேயே குழந்தை பெட்டிகளை அறிமுகப்படுத்த இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அண்மைய வருடங்களில் 60க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தமது குழந்தைகளை வீதியில் கைவிட்டச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குழந்தை பெட்டிகள் அத்துடன் கடந்த ஆறு வருடங்களில் பல்வேறு காரணங்களால் குறைந்தது 80 சிறுவர்கள் அவநம்பிக்கையான பெற்றோரால் கொல்லப்பட்டுள்ளதாகவும் நன்னடத்தை மற்றும் சிறுவர்…

  23. தமிழர் தாயகத்தை கூறுபோடும் திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் – ஒரு தேசமாக பொங்கியெழ அழைப்பு ‘திட்டமிட்ட சிங்கள மயமாக்கல்களுக்கு ஒரு தேசமாக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்காத வரையில் எங்கள் நிலங்கள் பறிபோய்க்கொண்டே இருக்கும்’ என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அப்பகுதி மக்களின் அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செ. கஜேந்திரன் ஆகியோர் நேற்று(30) நேரில் சென்று பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்தவை வருமாறு,…

    • 7 replies
    • 796 views
  24. பூநகரி கௌதாரிமுனையில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்னுற்பத்திக்கு மாவட்ட அபித்திக் குழு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. இன்று புதன்கிழமை இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கான அனுமதிக்காக கோரப்பட்டது. அதன் முழுமையான சாதக பாதக நிலை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் தீர்மானிக்க முடிவு எடுக்கப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் தாம் இதுவரை அறியவில்லை எனவும், இன்றே அறிய முடிந்ததாகவும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கயன் இராமநாதன், எஸ்.சிறிதரன், எஸ்.கஜேந்திரன், இது தொடர்பில் ஆராய்ந்தே அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தனர். மன்னார், புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் அதானி குடும்பத்தின் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள்…

    • 1 reply
    • 630 views
  25. Published By: T. SARANYA 03 MAY, 2023 | 09:26 PM (நா.தனுஜா) பொருளாதார நெருக்கடியை உரியவாறு கையாள்வதற்கும், பொருளாதார மீட்சியைத் துரிதப்படுத்துவதை முன்னிறுத்தியும் இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர், பல்வேறு துறைகளிலும் இலங்கையுடன் ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார். தென்கொரியாவின் இன்ஸியான் நகரில் நடைபெறும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்ஸுகு அஸகவாவுக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்கிழமை (2) நடைப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.