ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143643 topics in this forum
-
கிளிநொச்சி புதுமுறிப்பு நோக்கி இரு முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெரும் எடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 40 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 75-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் 12 உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 16 replies
- 3.9k views
- 1 follower
-
-
ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்துக்கொண்டும், ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழக அரசியல் தலைவர்களை கோமாளிகள் என்று இழிவுபடுத்தி வரும் சிங்கள கொடுங்கோலன் மகிந்த ராஜபக்ச மற்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரின் திமிர் பேச்சை கண்டித்து கொடும்பாவியை புரட்சிகர இளைஞர் முன்னணியினர் எரித்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 465 views
-
-
சரத் பொன்சேகாவின் கூற்றுக்கு சிறீலங்கா மன்னிப்புக் கோரியதாக இந்தியா தெரிவிப்பு புதன், 10 டிசம்பர் 2008, 01:19 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன்] சரத்பொன்சேகாவின் கூற்றுக்கு இந்தியாவிடம் இலங்கை மன்னிப்புக் கோரியுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் விஸ்ணு பிரகாஸ் தெரிவிக்கையில்: சிறீலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை 'கோமாளிகள்' என்று தெரிவித்த கருத்துக்கு சிறீலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கோரியுள்ளது. சரத்பொன்சேகாவின் கருத்துத் தொடர்பில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் இலங்கை பாதுகாப்பு அமைச்சரிடம் தமது கடுமையான விசனத்தைத் தெரிவிக்கப்பட்டது. இதற்காக இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் மன்னிப்பு…
-
- 6 replies
- 1.5k views
-
-
வீரகேசரி நாளேடு - இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நோர்வேயின் அனுசரணையுடன் தீர்வு ஏற்பட வேண்டும். இலங்கையில் ஒரு வருடத்துக்குள் இனப்பிரச்சினை விவகாரத்தில் மாற்றம் ஏற்படும் என்று சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றுள்ள முன்னாள் பின்லாந்து ஜனாதிபதியும் சமாதான தூதுவருமான மாரீப் அதிசாரி தெரிவித்துள்ளார். சமாதானத்துக்கான நோபல் பரிசு இவருக்கு நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் நேற்று வழங்கப்பட்டது. இதனையடுத்து செய்தியாளரிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கொசோவா இனப்பிரச்சினை விவகாரத்தில் சமாதான தூதுவராக செயற்பட்ட மாரீப் அதிசாரி மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கை இனப்பிரச்சினை தீர்வில் பங்களிப்பு வழங்குமாறு அங்குள்ள பல நண்பர்கள் கோரிக்கை …
-
- 7 replies
- 2.1k views
-
-
டிசம்பர் 10ந்திகதி சர்வதேச மனிதஉரிமைகள் தினம். உலகிற் பெருகிவரும் போர் சூழலில், அது ஒரு அடையாளப்படுத்தப்பட்ட தினம் என்றளவில் மட்டுமே அதன் அர்த்தப்பாடு முடிந்து போய்விடுகிறது போல் தெரிகிறது. சிங்கள பெளத்தப் பேரினவாதத்தின் மனித உரிமை மீறல்கள் பலவும் நீரூபிக்கப்பட்ட நிலையிலும் நீர்ந்துபோய்விட்ட நிலையில், பாவப்பட்ட மக்களுக்கு இத்தகைய அமைப்புக்கள் மீதான நம்பிக்கையும் அற்றுப் போய்விடுகின்றது. மனித உரிமைகள் கடனுக்கும் இல்லை மனித உரிமைகள் கடனுக்கும் இல்லை மனித உரிமங்களின் அத்தியாயங்கள் கிழிசல்களாக தெருவோரங்களில் சிவப்புகளில் நனைந்தும் கறுப்புக்களாய் உறைந்தும் சிவப்புகளில் நனைந்தும் கறுப்புக்களாய் உறைந்தும் அவயவங்கள் து…
-
- 7 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா படையினர் அடைந்து வரும் வெற்றியை திசை திருப்புவதற்காகவே கரு ஜெயசூரிய ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்ததாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் விரவன்ச குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 684 views
-
-
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் பொது நிர்வாக அமைச்சர் பதவியை வகித்த கரு ஜயசூரிய, அந்தப் பதவியிலிருந்து விலகிவிட்டு மீண்டும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து பிரதித் தலைவர் பதவியையும் பெற்றுக்கொண்டிருப்பதையடுத்து, கரு ஜயசூரியவுடன் வந்து அரசாங்கத்தில் இணைந்துகொண்ட ஏனைய 16 பேரையும் தக்க வைக்கும் முயற்சியில் ஆளும் கட்சி ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 525 views
-
-
சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளரும், அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரருமான கோதாபாய ராஜபக்ச யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான திடீர் பயணத்தினை நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டு அங்கு சென்றிருந்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 729 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவும் இன்று புதன்கிழமை முற்பகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக அரச தலைவர் செயலகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 522 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் காவல்துறையினரின் புதுவிதமான சோதனை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 619 views
-
-
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மிகவும் வேகமாக அதிகரித்துச் செல்வதாக அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் கொண்டலீசா றைஸ் கவலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 19 replies
- 2.2k views
-
-
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி எதிர்வரும் வருடம் நான்கு வீதமாக குறைவடையலாம். எனவே, நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம் என உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.1k views
-
-
சிறீலங்கா அரசின் போர் நடவடிக்கையாலும் சமீபத்திய மழையாலும் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் இன்றி வன்னிமக்கள் சோமாலியாவில் மக்களின் நிலைக்கு ஒத்த வகையில் வாழ்வதாக வன்னியில் இயங்கி வரும் ஒரு சில சர்வதேச உதவிநிறுவனங்களில் ஒன்றானதும் ஐநாவின் அங்கமானதுமான உலக உணவுத்திட்டத்தின் (WFP) அதிகாரி கிளிநொச்சி தர்மபுரத்தில் இருந்து பிபிசி சிங்கள சேவைக்கு தகவல் வழங்கியுள்ளார். வன்னி மக்களுக்கு உணவு கிடைக்கின்ற போதும் இதர அடிப்படை வசதிகள் சோமாலியாவுக்குரிய நிலையில் மிகக் கீழ்மட்டமாக இருப்பதாக அவர் கூறிருப்பதோடு சிறீலங்கா அரசு செய்தியாளர்களை போர் நடக்கும் பகுதிகளுக்கு அனுப்ப மறுத்து வருவதையும் பிபிசி சுட்டிக்காட்டியுள்ளது..! S Lanka's 'Somalia conditions' A UN official i…
-
- 11 replies
- 2.4k views
-
-
-
போரா அல்லது போர் நிறுத்தமா? கலாநிதி குமார் ரூபசிங்க வன்னிக் களமுனையில் இரு தரப்பினருக்கும் இடையிலான போர் இரக்கமற்ற வகையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அத்துடன் பரஸ்பரம் இரு தரப்பிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. அண்மைக் காலமாக இடம்பெற்ற மோதல்கள் அனைத்தும் பலத்த மழைக்கு மத்தியிலேயே இடம்பெற்று வருகின்றன. அரசாங்கம் கிளிநொச்சியில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு விருப்பம் கொண்டுள்ளது. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் படையினரால் கைப்பற்றப்பட்டு விட்டது என்ற செய்தியினையும் உலகத்துக்கு அறிவிக்க அரசாங்கம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. இதேவேளை, கிளிநொச்சி பிரதேசமானது ஒருபோதும் தங்களிடமிருந்து வீழ்ந்து விடாது என தமிழீழ விடுதல…
-
- 0 replies
- 1.7k views
-
-
யாழ் நகர கட்டளைத் தளபதி பிரிகேடியர் மார்க் ஊரெழுப் படைமுகாமிற்கு நேற்று மாலை பலத்த பாதுகாப்பின் மத்தியில் சென்ற இறங்கியபோது இவரை படையினரால் வளக்கப்பட்ட நாய் ஒன்று கடித்துக் குதறியதாம். இதனையடுத்து பாதுகாவலர்களால் குறிப்பிட்ட நாய் சுடப்பட்டதுடன், பிரிகேடியர் மார்க்கும் சிகிச்சைக்காக பலாலி தள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/
-
- 14 replies
- 3.8k views
-
-
இலங்கையின் கிழக்கு கரையோரப்பகுதி பொத்துவலிலிருந்து வடக்கு நோக்கியும் இலங்கையின் வடக்கிலிருந்து மேற்கு கரையோரமாக நீர் கொழும்பு வரையிலான கடலோர பிரதேசத்திலும், பெரும்பகுதி கடல்பிரதேசத்திலும் எண்ணை வளம் இருப்பதற்கான உறுதியான தரவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதும் கடந்த இரண்டு வருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளாகும். இதில் செறிவான எண்ணை வளத்தை கொண்டபகுதியானது, மன்னாரும் மன்னாரிலிருந்து வடக்கு நோக்கி இந்தியா வரையிலான பிரதேசத்தில் இருப்பதும், இதன் இந்திய காவேரி பிரதேசத்தில் எண்ணை வளம் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதும் தெரிந்த விடயமே. இந்த மன்னார் படுக்கையில் உள்ள எண்ணை வளத்தை பிரித்தெடுப்பதற்கான உரிமையை இலங்கை அரசு இந்திய எண்ணை எரிபொருள் நிறுவனத்திற்கு கொடுத்த…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் தமிழக அரசியல் கட்சி தலைவர்களை கோமாளிகள் என்றும், புலிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு அரசியல் செய்பவர்கள் என்றும் இழிவாக பேசிய இலங்கை இராணுவ தளபதி பொன்சேகாவின் பேச்சுக்கு இலங்கை அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. பொன்சேகா மன்னிப்பு கேட்க வேண்டும், இலங்கை அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி, ராமதாஸ், வைகோ, திருமாவளவன், பாண்டியன் உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்ததால், இலங்கை அரசு அந்நாட்டு இராணுவத்தளபதி பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. எனினும் இன்னும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மன்னிப்பு கேட்கவில்லை. http://www.tamilwin.com/view.php?20IWnz20e...d43oQH3b02PLS3e
-
- 12 replies
- 3.3k views
-
-
அவுஷ்ரேலியா:http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=1408:--10-------&catid=39:2008-09-25-16-35-23&Itemid=56 நோர்வே:http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=1461:2008-12-09-12-10-07&catid=39:2008-09-25-16-35-23&Itemid=56 பிரான்ஷ்:http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=1458:2008-12-09-10-04-38&catid=39:2008-09-25-16-35-23&Itemid=56 ஜேர்மனி:http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=1457:2008-12-09-10-03-05&catid=39:2008-09-25-16-35-23&Itemid=56
-
- 0 replies
- 1.7k views
-
-
பயங்கரவாதத்திற்கு எதிரான போரை முன்னெடுத்துச் செல்வதற்காகவே மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு 17 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சென்று ஆதரவு வழங்கியிருந்தேன் என்று அமைச்சுப் பதவியிலிருந்து விலகிய கரு ஜெயசூர்ய வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 546 views
-
-
யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்தில் சிறிலங்காப் படையினருக்கென தென்னிலங்கையிலிருந்து அவர்களது உறவினர்களால் அனுப்பப்படும் பொதிகள் குவிந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பதவுத் தபாலில் அனுப்பப்படுவதால் உரிய படையினரால் கையொப்பமிட்டு மட்டுமே பொறுப்பேற்கப்படவேண்டிய இப்பொதிகள், முகவரிக்குரியவர்கள் படை நடவடிக்கைகளிற் கொல்லப்பட்டுவிட்ட நிலையில் பொறுப்பளிக்கப்படமுடியாத நிலையில் தபாலகத்திற் தேங்கிக்கிடக்கின்றன. குறித்த படைவீரர்கள் கொல்லப்பட்டுவிட்ட செய்தி அவர்களது குடும்பங்களுக்கு முற்றாக மறைக்கப்பட்டுவிட்டது என்பதையே இந்தத் தொடர்நிகழ்வு வெளிப்படுத்தப்படுகிறது. அதாவது சம்பந்தப்பட்ட படையினர்கள் கொல்லப்பட்ட நிலையில் அவர்களது உடல்கள் குடும்பத்தவர்களிடம் ஒப்படைக்கப்படா விட்டாலுங்கூட…
-
- 0 replies
- 2.1k views
-
-
முல்லைத்தீவில் உள்ள மாணவர் விடுதி மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் அந்த விடுதி சேதமடைந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 491 views
-
-
கிழக்கு மாகாணத்தில் ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 549 views
-
-
வன்னியில் இன்னும் 15 ஆயிரம் விடுதலைப்புலிகளின் வீரர்கள் உள்ளதாக இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியிருக்கிறார். கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் 53வது ஆண்டு மாநாட்டில் அவர் பேசியது: விடுதலைப்புலிகளை அழித்து வருவதாக இந்த அரசு சொல்வது உண்மையல்ல. கிளிநொச்சி கைப்பற்றப்படவில்லை. வன்னியில் இன்னும் 15 ஆயிரம் புலிகள் இருக்கின்றனர். போர் பகுதிகளில் ஊடகங்கள் சுதந்திரமாக அனுமதிக்கப்படாதது மிகப் பெரிய குறைபாடு. அதிபர் ராஜபக்சேவும் புலிகள் தலைவர் வேலு பிள்ளை பிரபாகரன் இடையேயான போர் முறை வித்தியாசமாகவுள்ளது. பிரபாகரன் இரவு நேரங்களில் கொழும்பில் தாக்குதல் நடத்துகிறார். ராஜபக்சேவின் தாக்குதலால் அப்பாவி மக்கள் பலியாகின்றனர் என்று ரண…
-
- 0 replies
- 3.1k views
-
-
மட்டக்களப்பு லேக் வீதியில் அமைந்திருக்கும் விசேட அதிரடிப்படை முகாமிலுள்ள கரன் என்ற விசேட அதிரடிப்படை உத்தியோகத்தரே மட்டக்களப்பில் கடந்த 4,5 வருடங்களாக இடம்பெற்று வரும் கடத்தல்களுக்கும் கொலைகளுக்கும் பிரதான காரணமாக இருப்பதாக புலனாய்வு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவை சேர்ந்த சில்வெஸ்டர் என்பவரும் இவருடன் இணைந்து படுகொலை வேட்டையில் இறங்கியுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் கோத்தபாயா மற்றும் பஸில் ராஜபக்ஸவுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிவருவதாகவும் துணை ஆயுதக் குழுவினரை மேற்கோள் காட்டிய செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. மக்ஸ்டா ரக வெள்ளை நிற வானொன்றையே இவர்கள் கடத்தலுக்காக பயன்படுத்துகின்ற…
-
- 0 replies
- 1.5k views
-