ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
சுனாமி எச்சரிக்கைக்காக கட்டப்பட்ட சுனாமி கோபுரங்களில் 40% செயல்படவில்லை என தெரியவந்துள்ளது. சுனாமி பற்றி எச்சரிப்பதற்காக 77 சுனாமி கோபுரங்கள் நாடு முழுவதும் அரசு பேரிடர் மேலாண்மை துறைகளால் நிறுவப்பட்டுள்ளன. இந்த சுனாமி கோபுரங்கள் தற்போது 15 வருடங்கள் பழமையானவை என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். . இந்த கோபுரங்கள் பல இயங்கவில்லை என்றும், சுனாமி கோபுரங்களுடன் இணைக்கப்பட்ட செயற்கைக்கோள் அமைப்பும் செயல்படவில்லை என்றும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். வேலை செய்யாத சுனாமி கோபுரங்களை கையால் இயக்கக்கூடிய வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார். …
-
- 1 reply
- 292 views
- 1 follower
-
-
எரிபொருள் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 07 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 340 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 333 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 375 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 365 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 325 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 3…
-
- 0 replies
- 406 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 30 APR, 2023 | 06:25 PM வவுனியாவில் 6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தை இல்லாத நிலையில், சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகின்றார். வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள முச்சக்கரவண்டி சாரதி ஒருவரின் வீட்டில் மாதாந்த கொடுப்பனவின் அடிப்படையில் குறித்த சிறுமி தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், காய்ச்சல் காரணமாக பூவரசன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் அந்தரங்க உறுப்பில் இருந்து அசாதாரண இரத்தப்போக்கை அவதானித்த வைத்தியர்கள் பூவரசன்குளம் …
-
- 3 replies
- 731 views
- 1 follower
-
-
இலங்கையின் வரலாற்றை ஆய்வு செய்வதற்காக புதிய நிறுவனம் ஒன்று விரைவில் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய அருங்காட்சியகம், ஆவணக் காப்பகத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், கலாசார முக்கோணம், பல்கலைக்கழகங்கள் மற்றும் றோயல் ஆசிய சங்கம் என்பனவற்றை இணைத்து நிறுவி, அதற்கான சட்ட வரைவை நிறைவு செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். மகாவலி கேந்திர நிலையத்தில் 27ஆம் திகதி நடைபெற்ற றோயல் ஆசிய சங்கத்தின் 178 ஆவது கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார் றோயல் ஆசிய சங்கத்தின் சில வெளியீடுகளின் மூலப்பிரதிகளை ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டது. அங்கு மேலும் கரு…
-
- 3 replies
- 622 views
- 1 follower
-
-
தற்போதுள்ள மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மிக பழமையானது – சீன தூதுவர் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை நாட்டில் ஸ்தாபிக்கவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார். சீன முதலீடாக நாளாந்தம் 4 டொன் மசகு எண்ணெய் சுத்திகரிக்கக்கூடிய அதி நவீன தொழில்நுட்பத்துடனான சுத்திகரிப்பு மத்திய நிலையம் ஒன்று நாட்டில் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் ச்சீ சென்ஹொங் தெரிவித்துள்ளார். மல்வத்த மகாநாயக்கர்களை சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தற்போதுள்ள மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மிக பழமையானது என சீன தூதுவர…
-
- 9 replies
- 799 views
- 1 follower
-
-
யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் விபத்தில் உயிரிழப்பு யாழ் .பருத்தித்துறை வீதியில், சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் சிகிச்சை பயணின்றி உயிரிழந்துள்ளார். கடந்த புதன்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, வீதியின் குறுக்கே நாய் ஒன்றுடன் மோதி விபத்திற்கு உள்ளானதில், தலைக் கவசம் கழன்றமையினால் தலையில் பலத்த காயத்திற்கு இலக்காகி, யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1323855
-
- 53 replies
- 4.2k views
- 2 followers
-
-
Published By: NANTHINI 30 APR, 2023 | 03:51 PM அமெரிக்காவின் ஸ்ட்ராட்ஃபோர்ட் நகரில் மருத்துவ நிலையம் ஒன்றை நடத்தி வந்த இலங்கை மருத்துவர் ஒருவர், சுகாதார சேவைகளை வழங்குவதாக தெரிவித்து அந்நாட்டு அரசாங்கத்திடமிருந்து சுமார் 840,000 அமெரிக்க டொலர்களை பெற்று, மோசடி செய்த குற்றத்துக்காக அவருக்கு பிரிட்ஜ்போர்ட் நீதிமன்றமொன்று நான்கு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த குறித்த மருத்துவர் கடந்த நவம்பரில் மோசடி குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால் தண்டனை நிலுவையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். மெடிகெயார் என்ற மருத்துவ கிளினிக்கின் உரிமையாளரும் தலைவருமான இவர், தனது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மன…
-
- 6 replies
- 1k views
- 1 follower
-
-
Published By: T. SARANYA 29 APR, 2023 | 09:14 PM (நா.தனுஜா) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்பு, தொல்பொருள் வளச்சுரண்டல் என்பன தொடரும் பட்சத்தில் அங்கு மீண்டுமொரு மோதல் உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், எனவே இத்தகைய முறையற்ற செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தும்படி ஐ.நா அதிகாரிகளிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார். இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆலோசகர் எட்வேர்ட் ரீஸ், ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச்செயற்திட்டத்தின் விசேட பிரதிநி…
-
- 3 replies
- 708 views
- 1 follower
-
-
ஏறக்குறைய 2,000 அரச ஊழியர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்வதற்காக ஐந்தாண்டு காலத்திற்கு நீடிக்கப்பட்ட விடுமுறையைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும், அரசின் செலவினங்களைக் குறைக்கவும் இந்தத் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அரச அதிகாரிகள் இந்த ஊதியமில்லாத விடுப்பை வெளிநாட்டில் பணிபுரியவோ, தொழில் பயிற்சி பெறவோ அல்லது அவர்களின் மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தவோ பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இந்த சுற்றறிக்கை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, மொத்தம் 1988 ஊழியர்கள் ஏற்கனவே வெளிநாட்டு வேலைவாய்ப்பை தொடர அனுமதி பெற்றுள்ளதாக பொது நிர்வாக அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. …
-
- 0 replies
- 585 views
- 1 follower
-
-
யாழில். விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு – வைத்தியசாலையில் அனுமதிக்க முதல் நகைகள் மாயம்! யாழ்ப்பாணத்தில் விபத்துக்கு உள்ளாகிய பெண்மணியின் தங்க ஆபரணங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் உரும்பிராய் வடக்கை சேர்ந்த கனகநாயகம் உமாதேவி (வயது 72) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த பெண் மணி வீட்டில் இருந்து துவிச்சக்கர வண்டியில் வெளியில் சென்று, மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை உரும்பிராய் பகுதியில் அவருக்கு பின்னால் வேகமாக வந்த கப் ரக வாகனம் மோதி விபத்து…
-
- 2 replies
- 520 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 30 APR, 2023 | 11:24 AM இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து இரண்டு நாட்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக கொலன்னாவ மரண விசாரணை அதிகாரி காஞ்சனா விஜேநாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறை ஹமந்துவ பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய பெண்ணும், யட்டியந்தோட்டை பனாவத்தையில் வசிக்கும் 73 வயதுடைய ஆணும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த பெண் கடந்த 27ஆம் திகதி IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் வெள்ளிக்கிழமை (28) உயிரிழந்துள்ளார். மற்றைய நபர் 28ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சனிக்கிழமை (29) உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொவி…
-
- 0 replies
- 567 views
- 1 follower
-
-
நாட்டின் 15 மாவட்டங்களுக்குட்பட்ட 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்கள் இவ்வாறு டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், குருணாகலை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களும் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மேல் மாகாணத்தின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி, கடந்த 26 ஆம் திகதி முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 2 ஆம் திகதி வரை இந்த…
-
- 1 reply
- 536 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 29 APR, 2023 | 09:13 PM (இராஜதுரை ஹஷான்) எமது மக்கள் பலத்தை வெளிப்படுத்துவோம். மக்களாணையுடன் ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவார்கள். மே தின கூட்டத்தில் இருந்து செயற்பாட்டு ரீதியான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மே தின கூட்டம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர்; மேலும் குறிப்பிட்டதாவது, 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தினால் மே தின கூட்டத்தை நடத்த முடியாமல் போனது.2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் கூட்டத்தை நடத…
-
- 0 replies
- 481 views
- 1 follower
-
-
ஆசியாவிலேயே அதிக நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளது. ஆசிய நாடுகளில் அதிக நீரிழிவு நோயைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளது. மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், சுகாதார கொள்கை நிறுவனம் மற்றும் ரஜரட்ட ருஹுனு கொழும்பு பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு நான்கு பெரியவர்களில் ஒருவருக்கு, அதாவது 23% பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில், அந்த எண்ணிக்கை 31% ஆக அதிகரித்துள்ளது, அதாவது மூன்று பெரியவர்களில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். https://thinakkural.lk/article/250356
-
- 7 replies
- 947 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான விகாரைக்கு கலசம் வைப்பு Share on FacebookShare on Twitter யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, தையிட்டிப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விகாரை ஒன்றிற்கு கலசம் வைக்கும் நிகழ்வுகள் மிக இரகசியமாக இன்றைய தினம்(வியாழக்கிழமை) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை முன்னிட்டு அப்பகுதியில் பெருமளவான இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை தையிட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த விகாரையே யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான விகாரை எனவும் த…
-
- 31 replies
- 1.8k views
- 1 follower
-
-
மக்களுக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதை ஊட்டுகின்றனர் April 28, 2023 சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்குகளை அபகரிக்க கூடிய வகையில் கருத்துக்களை கூறி, தமிழ் மக்களுக்கு ஒரு போதையை ஊட்டுகின்றனர். அவர்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் யாழ்ப்பாணம் வேலனை பிரதேச செயலகத்தில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இலவச அரிசிப்பொதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வறிய மக்களுக்கு உதவும் முகமாக நாடு முழுவதும் 20 லட்சம் குடும்பங்களை தெரிவு செய்து, ஒரு குடும்பத்திற்கும் தலா 10 கிலோ அரிசி வீதம் வழங்…
-
- 3 replies
- 467 views
-
-
புலம்பெயர் அமைப்புகளுக்கு மீண்டும் அழைப்பு விடுத்தது இலங்கை அரசாங்கம்! புலம்பெயர் அமைப்புகள் இலங்கையில் முதலீடு செய்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுமாறு அனைவரும் ஒன்றிணைந்து கோரிக்கை விடுப்பதாக ஐனாதிபதி செயலக பணிக்குழாமின் தலைவரும் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசகரமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வேலணை பிரதேச செயலகத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வறிய மக்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கை இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதோடு பெரும்பாலான இடங்களில் நெல் உற்பத்தியிலும் ஈடுபடுகின்றார்க…
-
- 15 replies
- 1.1k views
-
-
நாட்டின் மக்கள் தொகையில் 25 வீதமானோர் விற்றமின் D குறைபாட்டுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. சிறுவர்கள், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணித் தாய்மாரை உள்ளடக்கி நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொரளை வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து தொடர்பான பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். விற்றமின் D குறைபாட்டைக் குறைப்பதற்கு முடியுமான அளவு சூரிய ஒளி உடலில் படும்படி செயற்படுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார். சூரிய ஒளியின் மூலமே மனித உடலுக்கு அவசியமான விற்றமின் D ஊட்டச்சத்து அதிக அளவில் கிடைப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையிலான காலப்பகுதியில் சூ…
-
- 0 replies
- 701 views
- 1 follower
-
-
சமுர்த்தியைப் பெறும் குடும்பங்களில் சுமார் 33 வீதமான குடும்பங்கள், சமுர்த்தியின் பயனைப் பெற தகுதியற்ற குடும்பங்கள் என அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவான கோபா குழுவில் கண்டறியப்பட்டுள்ளது. அதே அளவான குடும்பங்கள் சமுர்த்தியைப் பெறவேண்டியிருக்கின்ற போதும், அவற்றுக்கு சமுர்த்தி கிடைப்பதில்லை என்றும் கோபா குழுவில் புலப்பட்டுள்ளது. 2015 ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் நாடு முழுவதையும் உள்ளடக்கும் விதத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் ஊடாக இது தெரியவந்திருப்பதாகவும், 4 இலட்சத்து 49 ஆயிரத்து 979 குடும்பங்கள் சமுர்த்தி பயனாளிகளிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், சமுர்த்தி பயனாளிகளைத் த…
-
- 0 replies
- 237 views
- 1 follower
-
-
மூத்த கலைஞர் கே.சந்திரசேகரன் காலமானார் இலங்கையின் மூத்த வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகக் கலைஞர் கலாபூஷணம் கே.சந்திரசேகரன் மதுரையில் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(சனிக்கிழமை) காலமானார். அன்னார் நீண்ட காலமாக இலங்கை தமிழ் நாடகத்துறைக்கு அளப்பரிய பங்களிப்பு செய்தவர். அவரது மறைவிற்கு இலங்கையின் மூத்த கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். https://athavannews.com/2023/1331057
-
- 1 reply
- 636 views
- 1 follower
-
-
13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் – இந்தியா அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இந்;த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், வேந்தன் உள்ளிட்ட தமிழ் அரசியல் தலைவர்கள் இந்திய உயர்ஸ்தானிகளை சந்தித்துள்ளனர். புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டதுடன் இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்தும் கலந்துரையாடியிருந்தனர். இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பாகவும் …
-
- 3 replies
- 651 views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் சர்வதேச வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்? அமெரிக்காவில் செயற்பட்டு வரும் ஆறு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் சர்வதேச வாக்கெடுப்பை எதிர்வரும் 18ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் என்ற செயற்குழு உருவாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தமிழீழ அரசாங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்திருந்தார். இலங்கையின் இனப்பிரச்சினையை சர்வதேச சமூகத்திற்கு முன்வைக்கும் மற்றுமொரு வேலைத்திட்டமாக இந்த திட்டம் முன்வைக்கப்படுவதாகவும், எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த வாக்கெடுப்பில் அமெரிக்காவில் வாழும் புலம்பெயர் த…
-
- 1 reply
- 505 views
-
-
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் 29 Apr, 2023 | 12:52 PM அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கிளிநொச்சியில் இன்று (29) ஊடகவியலாளர்கள் சிவில் அமைப்புக்கள் இணைந்து போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வடக்கு மற்றும் தெற்கு ஊடக அமைப்புக்களின் பங்குபற்றுதலுடனும் சிவில் அமைப்புக்களின் பங்குபற்றுதலுடனும் இன்று காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி மத்திய பேரூந்து வளாகத்தில் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த சட்டமூலம் சட்டமாக்கப்பட்டு நிறைவேற்றப…
-
- 0 replies
- 457 views
-
-
இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கினால் வட – கிழக்கை பொருளாதார கேந்திர மையங்களாக்குவோம் – சாணக்கியன் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பால் பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண முடியாது. நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கினால் புலம்பெயர்ந்து வாழும் தமிர்களின் முதலீடுகளை பெற்றுக்கொள்ள முடியும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பொருளாதார கேந்திர மையமாக எம்மால் மாற்றியமைக்க முடியும்.அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் மீதான மூன்றாவது நாள் விவாதத்தில் உரை…
-
- 0 replies
- 303 views
-
-
கோட்டாவிற்கு மாதாந்தம் 13 இலட்சத்து 29 ஆயிரத்து 387 ரூபாவை அரசாங்கம் செலவிடுகின்றது? ஓய்வு பெற்ற ஜனாதிபதி என்ற வகையில் கோட்டாபாய ராஜபக்ஷவிற்கு மாதாந்தம் 13 இலட்சத்து 29 ஆயிரத்து 387 ரூபாவை அரசாங்கம் செலவிடுவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இலங்கை செய்தித்தாள்கள் நடத்திய விசாரணையில் ஜனாதிபதி அலுவலகம் இந்தத் தகவலைக் குறிப்பிட்டுள்ளது. கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செலவுகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. அதற்கமைய, செய்தி நிறுவனம் இந்த தகவல் கோரிக்கையை ஜனாதிபதி செயலகத்தின் தகவல் அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளது. ஜனா…
-
- 0 replies
- 437 views
-