Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. IMF தீர்மானம் நிறைவேற்றம் சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்துக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 25 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக்கட்சி உட்பட அரச பங்காளிக்கட்சிகள் ஆதரவாக வாக்களித்தன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. எனினும், அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பௌசி ஆதரவாக வாக்களித்தார். இந்தநிலையில், பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது என தெரிய…

  2. Published By: RAJEEBAN 28 APR, 2023 | 11:26 AM மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் குறித்து சர்வதேச அளவில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்கா தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் மதிப்பாய்வு செய்துவருகின்றது என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அமெரிக்கா உலகளாவிய ரீதியில் தனது அதிகாரத்தை பயன்படுத்துகின்றது எனவும் தெரிவித்துள்ளது. வசந்தகரணாகொட போன்று எதிர்காலத்தில் இலங்கையின் வேறு அதிகாரிகளும் தடைப்பட்டியலில் சேர்க்கப்படுவார்களா என ஊடகமொன்றின் கேள்விக்கு பதிலளிக்கையில் அமெரிக்கதூதரக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். வெளிநாட்டு அரசாங்க அதிகாரி மிகமோசமான ஊழல் அல்லது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என …

  3. செ.கீதாஞ்சன் முல்லைத்தீவு, சிலாவத்தை பகுதியில் மரணக் கிரியைகள் மற்றும் அந்தியோட்டிக் கிரியைகள் செய்து வரும் 69 வயதுடைய அப்பாதுரை வேலாயுதம் எனப்படும் ஐய்யர் கொலை செய்யப்பட்டு, அவரிடம் இருந்த நகைகள் மற்றும் பணம் ஆகியன கொள்ளையிட்டுள்ளன. இந்தச் சம்பவம், இன்று (28) அதிகாலை இடம்பெற்றுள்ளது. வீட்டில் ஐய்யர், மனைவி மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்த உறவினர் என மூவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளை, கொள்ளையர்கள், வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து, ஐய்யரின் மனைவியையும் வயதான உறவினரையும் கை, கால்களை கட்டி, வாயும் கட்டி வைத்துவிட்டு, ஐய்யர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஐய்யர் விழுந்துள்ளார். வீட்டுக்குள் நுளைந்த இரு சந்தேகநபர்களும…

    • 15 replies
    • 1.1k views
  4. போராட்டங்களின் பின்னணியில் அமெரிக்கா? இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் பின்னணியில் அமெரிக்கா இருந்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மறுத்துள்ளார். ‘ஒன்பது – மறைக்கப்பட்ட கதை’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ‘அரகலய’ ஆர்ப்பாட்டத்தின் பின்னணியுடன் அமெரிக்க தூதுவரை தொடர்புபடுத்தி அவரை விமர்சித்திருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்துள்ள டுவிட்டர் பதிவிலேயே இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தனது மறுப்பினை தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பதிவில், ‘புனைகதை’ என்று முத்திரை குத்தப்பட வேண்டிய புத்தகத்தில் ஒரு எம்.பி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சு…

    • 9 replies
    • 946 views
  5. சுற்றுலா பயணிகள் கப்பல் இன்று கொழும்புதுறைமுகத்தை வந்தடைந்துள்ளது சுற்றுலா பயணிகள் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. மலேசியாவில் இருந்து 900 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு Viking Mass பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 435 பணியாளர்களைக் கொண்ட இக்கப்பலில் சுற்றுலாப் பயணிகள் கொழும்பு, பின்னவல, கண்டி உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த கப்பல் நாளை இந்தியாவுக்கு புறப்பட உள்ளதாக கொழும்பு துறைமுக பயணிகள் முனையத்தின் பேச்சாளர் தெரிவித்துள் ளார். சுற்றுலா பயணிகள் கப்பல் இன்று கொழும்புதுறைமுகத்தை வந்தடைந்துள்ளது (newuthayan.com)

    • 1 reply
    • 561 views
  6. மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தினூடாக இன்று(22) இலங்கையை வந்தடைந்தனர். யாழ். பல்கலைக்கழகத்தில் நாளை (23) நடைபெறவுள்ள சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு ஆய்வு நூலின் வௌியீட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர்கள் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். https://thinakkural.lk/article/250293

  7. (எம்.ஆர்.எம்.வசீ்ம்.இராஜதுரை ஹஷான்) சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்காக பாராளுமன்றத்தின் அனுமதி கோரி அரசினால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் வெள்ளிக்கிழமை (28) மாலை வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது 95மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது, சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுமார் 3 பில்லியன் டொலர் பெறுமதியான 48 மாத கால நீடிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான ஏற்பாடு கடந்த மார்ச் 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்குத் தேவைப்படுகின்ற சகல அங்கீகாரமும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுக்கு வழங்கப்பட வேண்டுமென முன…

  8. யாழ்ப்பாணம், புத்தூர் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதுடன், வைத்தியரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் மூவர் அச்சுவேலி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, நேற்று (27) வியாழக்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: கடந்த 10ஆம் திகதி புத்தூர் சந்தியில் உள்ள ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்துக்கு அருகில் தண்ணீர்ப் பந்தல் அமைத்த இளைஞர்கள் ஒலிபெருக்கியை அதிக சத்தத்தில் ஒலிக்கவிட்டுள்ளனர். இதனையடுத்து, தண்ணீர்ப் பந்தல் அமைக்கப்பட்டிருந்த இடத்துக்குச் சென்றிருந்த வைத்தியரொருவர் ஒலிபெருக்கியின் சத்தத்தை குறைக்கும்படி கேட்டுள்ளார். …

  9. பிரச்சினைகளை சபையில் எடுத்துரைக்கும் போது புலிகள் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – சுமந்திரன் காட்டம்! பிரச்சினைகளை சபையில் எடுத்துரைக்கும் போது புலிகள் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான வேளையின் போது உரையாற்றிய இரா.சாணக்கியன், “மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுவான்கரை மற்றும் படுவான்கரை ஆகிய பகுதிகளில் பாலம் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள். கிழக்கு மாகாண ஆளுநர் ஒரு இனவாதி, கிழக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் பாதுகாவலனாக…

  10. சிகிரியா ஓவிய குகைக்கு செல்லும் படிகளை சீரமைக்க 04 கோடி ரூபா நிதியுதவி வழங்க யுனெஸ்கோ தீர்மானித்துள்ளது. இந்த நிதி அடுத்த மாதமளவில் கிடைக்குமென மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது. அதனூடாக தற்போது சேதமடைந்த நிலையில் காணப்படும் படிக்கட்டுகள் விரைவில் புனரமைக்கப்படும் என மத்திய கலாசார நிதியம் குறிப்பிடுகின்றது. இதேவேளை, சிகிரியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் விசேட திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தை ஒழுங்குபடுத்தவும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுவதற்கும் கட்டண முறைமையை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/251158

  11. முகநூலில் நினைவேந்திய ஊடகவியலாளர் விடுவிப்பு ஆர்.ஜெயஸ்ரீராம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கிண்ணையடி வாழைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் முருகுபிள்ளை கோகிலதாசன் குறித்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (27) தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தின் ஊடாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வான மாவீரர் நிகழ்வு தொடர்பான பதிவினை முகநூலில் பதிவிட்டமை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 28.11.2020 ஆம் திகதி அன்று வாழைச்சேனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். ஒரு வருடமும் 5 மாதங்கள் மட்டக்களப்பு சிறையில் தடுத்து…

  12. கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் இடைநிறுத்தப்பட்ட இலகுரக ரயில் செயற்றிட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த விசேட நிபுணர்களின் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த செயற்றிட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான யோசனை நிதியமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அமைச்சின் தேசிய செயற்பாட்டு மையத்தினால் இந்த விடயம் தொடர்பாக அறிக்கை கோரப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கிடைத்த பின்னர் செயற்றிட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ் சத்யானந்த தெரிவித்துள்ளார். ஜப்பான் நிதியுதவியின் கீழ் செயற்படுத்தப்படும் இந்த திட்டத்திற்காக ஆ…

  13. மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத் துறையிலுள்ள ஏனைய நிபுணர்களின் இடம்பெயர்வு தொடர்பில் ஆராய்ந்து அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தனியான குழுவொன்று நியமிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அண்மைக்காலமாக சில தொழில் வல்லுநர்கள் குறிப்பாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு காணப்படுவதாக தெரிவித்தார். இருப்பினும், ஓய்வு என்பது ஒரு தேசிய கொள்கை. அந்த தேசிய கொள்கையை எதிர்த்து தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இடைக்காலத் தடையுத்தரவு வழங்கப்பட்டது ஆனால் தற்போது அந்த இடைக்காலத் தடை நீக்கப்பட்டுள்ளது…

  14. மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்த ஒரேவொரு சிங்கள மொழி பாடசாலை 33 வருடங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று (27) மாலை மீண்டும் திறக்கப்படவுள்ளது. நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையால் 1990ஆம் ஆண்டு இந்த பாடசாலை மூடப்பட்டது. மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட பாடசாலையை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் திறந்து வைக்கவுள்ளார். https://thinakkural.lk/article/250955

  15. 06 முஸ்லிம் அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கு நடவடிக்கை பாதுகாப்பு அமைச்சின் தடைப் பட்டியலில் உள்ள 11 முஸ்லிம் அமைப்புகளில் 6 அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கு தேவையான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி தம்மிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார். விரைவில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவது தொடர்பில் ஜனாதிபதி, சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து முஸ்லிம் அமைப்புக்களின் தடை நீக்கம் குறித்து கலந்துரையாடிய போது, ஜனாதிபதி இதனை கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹர…

    • 2 replies
    • 664 views
  16. எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து – ஒரு தரப்பினர் கையூட்டல் பெற்றுள்ளதாக தகவல்! கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் விபத்துக்குள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பாக இலங்கைக்கு பெருந்தொகை நட்டஈடு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குறித்த நட்டஈடு தொடர்பாக தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கலந்துரையாடல்களில் பங்குகொண்ட குறித்த தரப்பொன்று 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை கையூட்டாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த டொலர் தொகை பிரித்தானிய வங்கியொன்றிலுள்ள கணக்கொன்றுக்கு அனுப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவை தான் கோரியுள்ளதாக நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜ…

  17. இலங்கை அதிபர் சேவையின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அமைச்சின் ஆலோசகராக இருந்த பேராசிரியர் குணபால நாணயக்கார உட்பட கல்வி மற்றும் நிர்வாகத் துறைகளில் ஐந்து நிபுணர்களைக் கொண்ட குழு ஏற்கனவே தனது பணிகளை ஆரம்பித்துள்ளது. அனைத்து அதிபர்கள் சங்கங்களும் தங்களது முன்மொழிவுகளை முன்வைக்க மே 9ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மே 15 முதல் தொழிற்சங்க அமைப்புகளுடன் நேர்காணல் நடத்தி நிபுணர்களிடமிருந்து தகவல்களை சேகரிக்கவும், மாகாண வலய அலுவலகங்கள் மற்றும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்குச் சென்ற…

  18. Published By: RAJEEBAN 27 APR, 2023 | 03:31 PM இலங்கையின் பொருளாதாரத்திற்கு தசாப்தகாலமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள விடயங்களிற்கு தீர்வைகாண்பதற்கான சீர்திருத்தங்களிற்கு ஆதரவு வழங்கவேண்டும் என இலங்கையின் மத்திய வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. 2022ம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையிலேயே இலங்கை மத்திய வங்கியின் இந்த வேண்டுகோள் இடம்பெற்றுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை கடந்த ஏழு தசாப்தகாலமாக பாதித்துள்ள கட்டமைப்பு இடையூறுகளிற்கு தீர்வை காண்பதற்கு அவசியமான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஆதரவை இலங்கை அரசாங்கமும் மத்திய வங்கியும் அனைத்து பங்குதாரர்களும் வழங்கவேண்டும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சீர்திருத…

  19. Published By: NANTHINI 27 APR, 2023 | 02:47 PM (எம்.வை.எம்.சியாம்) கடந்த வருடத்தை விட இவ்வருடம் கடந்த சில மாதங்களில் காட்டு யானைகளின் மரணம் அதிகரித்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த வருடத்தின் கடந்த நான்கு மாதங்களில் மனித நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 143 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவற்றுள் 37 மரணங்கள் துப்பாக்கிச் சூடு காரணமாகவும், 27 மரணங்கள் மின்சாரம் தாக்கியதாலும், 6 மரணங்கள் உணவு விஷமாகியமை உள்ளிட்ட காரணங்களாலும் யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ள…

  20. Published By: T. SARANYA 27 APR, 2023 | 01:35 PM நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அனைவரும் பொதுவான தீர்வுகளை காண வேண்டும், இல்லையேல் நாட்டை மூடிவிட்டு வெளிநாடு செல்வதே நல்லது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். நூல் ஒன்றின் வெளியீட்டு விழா முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் கொழும்பில் நடைபெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/153910

  21. வடக்கு-கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட முழுமுடக்கப் போராட்டம் வெற்றி - தமிழ் அரசியல் கட்சிகள் Published By: T. Saranya 26 Apr, 2023 | 10:08 AM இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் செவ்வாய்க்கிழமை (25) முன்னெடுக்கப்பட்ட முழுமுடக்கப் போராட்டம் முழுமையான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் இந்தப் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்த, தமிழ்த் தேசியப் பரப்பில் அரசியல் பணியாற்றிவரும் ஏழு கட்சிகளும் கூட்டாக தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் விபரம் வருமாறு, இலங்கை அரசாங்கம் தமிழ் மக…

  22. குருந்தூர் மலை வழக்கு இன்று நீதிமன்றில் ; சட்டத்தரணிகள் அரசியல் வாதிகளுக்கு அகத்தி அடிகளார் கோரிக்கை! Published By: T. Saranya 27 Apr, 2023 | 10:45 AM குருந்தூர் மலை ஆதி சிவன் கோவில் வழக்கு இன்று வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றுக்கு வரும் சமயம் கடந்த காலத்தில் காட்டிய அர்ப்பணிப்பு போன்று சட்டதரணிகள் சிறப்பான சமர்ப்பணங்களை மேற்கொள்ள வேண்டுகின்றோம் என தென்கயிலை ஆதீன குரு முதல்வர் அகத்தி அடிகளார் தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவித்ததாவது, 1.பிடுங்ககப்பட்ட திரி…

  23. Published By: DIGITAL DESK 5 25 APR, 2023 | 11:12 AM கொழும்பு, பேலியகொடயிலுள்ள களஞ்சியம் ஒன்றில் பணிபுரியும் சுங்க அதிகாரிகள் குழுவொன்று 'குஷ்' என அழைக்கப்படும் அமெரிக்க கஞ்சாவை இன்று (25) கைப்பற்றியுள்ளது. இந்தக் கஞ்சா இரண்டு மரப்பெட்டிகளில் மறைத்து கனடாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக அந்த அதிகாரிகள் கூறினர். குறித்த மரப்பெட்டிகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முகவரியிடப்படடிருந்த இந்தப் பெட்டிகளைத் திறந்து பார்த்தபோது அவற்றில் அமெரிக்க கஞ்சா காணப்பட்டதகையடுத்து அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் சந்தேகத்…

  24. அரச உத்தியோகத்தர்கள் குறுகிய காலத்திற்கு துயரங்களை சகித்துக் கொண்டேனும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – பந்துல! அரச உத்தியோகத்தர்கள் குறுகிய காலத்திற்கு துயரங்களை சகித்துக் கொண்டேனும் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “நாணய நிதியத்தின் ஆரம்ப நிபந்தனைகளில் நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்கள் பல உள்ளன. அவற்றில் பிரதானமானது சர்வதேச கடன்களுக்கான வட்டியை செலுத்தக் கூடிய திட்டமிடலை சமர்ப்பிப்பதாகும். இதன் மூலம் பொருளாதாரத்தில் …

    • 1 reply
    • 511 views
  25. 50 இலட்சம் ரூபாய் பணக் கட்டு காணாமல் போனமை தொடர்பிலான மேலதிக விசாரணைகள் C.I.T யிடம்! இலங்கை மத்திய வங்கியின் விநியோக பெட்டகத்தில் வைப்பிலிடப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபாய் பணக் கட்டு காணாமல் போனமை தொடர்பிலான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பணிப்புரையின் பேரில், விசாரணை கோட்டை பொலிஸாரிடமிருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் மத்திய வங்கியின் நிதியியல் திணைக்கள அத்தியட்சகர் ஏ.ஆர். தயானந்தா, கடந்த 11ஆம் திகதி கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கினார். நவீன தொழில்நுட்ப ப…

    • 3 replies
    • 718 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.