Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்நாட்டில் விழுப்புரத்தில் ஈழத் தமிழர் துயரங்களை வெளிப்படுத்தும் காயக்கட்டு ஊர்வலம் இன்று சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு நடைபெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 622 views
  2. வன்னியில் இடம்பெயர்ந்து அல்லலுறும் உறவுகளின் துயர்துடைக்க பிரான்ஸ் வாழ் தமிழ் கலைஞர்களின் பிரமாண்டமான இருநாள் கலைநிகழ்வு "தேசம் காப்போம்" இன்று (நவம்பர் 1ம் திகதி 2008) காலை சிறப்பாகத் தொடங்கி நடந்துவருகிறது. இன்று இரவு 9 மணிவரை இது தொடர்வதோடு, நாளையும் காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணிவரை இந்த கலைநிகழ்ச்சி தொடரும். பிரான்ஸ் தமிழர் கலைப் பண்பாட்டுக்கழகம் தாயக மக்களின் துயர்துடைக்க பிரான்ஸ் வாழ் தமிழ் கலைஞர்களை ஒருங்கிணைத்து இந்நிகழ்வை மிகச் சிறப்பாக வழங்கிவருகிறது. குறிப்பாக புலத்தில் பிறந்து வளர்ந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தாயக உணர்வோடும், தமிழ் உணர்வோடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தாயகப் பாடல்களைப் பாடியும், தாயகப் பாடல்களுக்கு நடனமாடியும் உணர்வை வெளிப்படுத்…

  3. நாளை சுதந்திரம் அமையும்போது தீவிரவாதிகள் தியாகிகள் ஆவர்: நடிகர் கமல்ஹாசன் [சனிக்கிழமை, 01 நவம்பர் 2008, 09:18 பி.ப ஈழம்] [வி.நவராஜன்] நாளை சுதந்திரம் அமையும்போது தீவிரவாதிகள் தியாகிகள் ஆவர். வாஞ்சிநாதன் உட்பட பலரும் அந்த வரிசையில் சேர்ந்தவர்கள்தான். அதனால் போராடுபவர்கள் யார் என்பதைக் காலம்தான் முடிவு செய்யும் என்று பிரபல நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு கமல்ஹாசன் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது உணர்வுகளை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். உணர்ச்சிவசப்பட்டுப் பேசி விடக்கூடாது என்ற கட்டுப்பாட்டுடன் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. உள்ளதைச் சொன்னாலே கோபித்துக்கொள்ளும் இந்த உலகில் …

    • 0 replies
    • 1.3k views
  4. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும் தமிழக திரையுலக நடிகர்- நடிகைகள் ஒருநாள் உண்ணாநிலைப் போராட்டத்தினை இன்று நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 947 views
  5. ரஜனி அஜித் விஜய் பேச்சு விக்ரம் பேச்சு

  6. இலங்கையில் போர் நிறுத்தத்தை அறிவிக்காமல் நாடகம் நடத்தும் அந்நாட்டு அதிபர் ராஜபச்சேவை மத்திய மாநில அரசுகள் தட்டிக்கேட்காதது ஏன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் இன்று ஈழத்தமிழர்களுக்காக நடிகர்கள் நடத்திய உண்ணாவிரதத்தில் பங்கேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக நடிகர்கள் ராதாரவி, சந்திரசேகர், எஸ்.எஸ்.சந்திரன் போன்றவர்களுடன் இணைந்து நான் 1983ம் ஆண்டு முதல் என்னை ஈடுபடுத்தி வந்திருக்கிறேன். ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம், கவர்னர் மாளிகை முன்பு போராட்டம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தலைமையில் சிங்கள தூதரகத்திற்கு சென்றது போன்று பல்வேறு வகைகளில் இலங்கை தமிழர்களுக்காக போராடி இருக்கிறேன். …

  7. வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பும் முக்கிய மையமாக இலங்கை விளங்குகிறது. வெளிநாடுகளுக்கு ஆட்களை சட்டவிரோதமாக அனுப்பும், முக்கிய மையத்தளமாக இலங்கை விளங்குவதாக அமரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அமரிக்க தூதரகத்தின்,உதவி சிரேஸ்ட அதிகாரி, ஜேம்ஸ் ஆர் மூர் இந்த கருத்தை நேற்று வெளியிட்டார். இவ்வாறாக சட்டவிரோத நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது, மனித உரிமைகள் முழுமையாக பாதிக்கப்படவுள்ளன. அத்துடன், பெண்கள் மற்றும் சிறுவர்களின் நலன்களும் முழுமையாக பாதிக்கப்படுவதாக மூர் குறிப்பிட்டுள்ளார். புள்ளிவிரபங்களின் படி இலங்கையில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் நடவடிக்கைகளுக்காக 13 நிறுவனங்கள் இயங்கிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.wtrfm.com/sub1…

  8. இல‌‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌யி‌ல் த‌மிழக முத‌ல்வ‌ரி‌ன் போ‌க்‌கி‌‌ல் மா‌‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாக பா.ம.க. ‌நிறுவன‌‌ர் மரு‌த்துவ‌ர் ராமதா‌ஸ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர??. இது கு‌றி‌த்து செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌‌ய்‌‌தியாள‌ர்களை‌ச் ச‌‌ந்‌தி‌த்த அவ‌ர் கூ‌றியதாவது: இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களை‌க் கா‌ப்பா‌‌ற்று‌ம் முய‌ற்‌சி‌யி‌ல் நா‌ம் இ‌ன்னு‌ம் வெ‌ற்‌றிபெற முடிய‌வி‌ல்லை. அ‌ங்க த‌மிழ‌ர்க‌ள் கொ‌ல்ல‌‌ப்படு‌ம்போது‌ம், த‌மி‌‌ழ்‌ப் பெ‌ண்க‌ள் பலா‌த்கார‌ம் செ‌ய்ய‌ப்படு‌ம்போது‌ம் பொ‌ங்‌கி எழு‌ம் நமது உண‌ர்வுக‌ள் உடனே அட‌ங்‌கி ‌விடு‌கி‌ன்றன. கட‌ந்த மாத‌ம் நட‌ந்து‌ள்ள ‌நிக‌ழ்வுகளு‌ம் அ‌ப்படி‌த்தா‌ன். 14ஆ‌ம் தே‌தி கோ‌ட்டை‌யி‌ல் நட‌ந்த அனை‌த்து‌‌க் க‌ட்‌சி‌க் கூ‌ட்ட‌த்‌த…

  9. ஆயித்தியமலையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது கிளைமோர் தாக்குதல் [சனிக்கிழமை, 01 நவம்பர் 2008, 06:30 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆயித்தியமலைப் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் படையினருக்கு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: ஆயித்தியமலை ஆறாம் கட்டைப் பகுதி மருத்துவமனையில் முகாம் அமைத்திருக்கும் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளால் இன்று சனிக்கிழமை காலை 8:30 நிமிடமளவில் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் முகாமில…

    • 0 replies
    • 758 views
  10. சென்னை அப்பாவித் தமிழர்கள் மீதான தாக்குதலை ராணுவம் உடனடியாக நிறுத்த வேண்டும்.அதுதான் அந்நாட்டுக்கும் நல்லது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் இன்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: இலங்கைத் தமிழர்களுக்காக நடிகர் சங்கம் நடத்தும் இந்த போராட்டம் உணர்வு பூர்வமானது; உணர்ச்சிபூர்வமானது. இலங்கைத் தமிழர்களுக்காக திரையுலகம் நடத்தும் 3ஆவது போராட்டம். இது இலங்கையின் காதுகளுக்கு எட்ட வேண்டும். இங்கே பேச சில கட்டுப்பாடுகள் விதித்திருப்பதாகச் சொன்னார்கள். கட்டுப்பாடு இருந்தால் தான் மனம் சொன்னதை கேட்கும். அப்போது தான் எதையும் சாதிக்க முடியும். வெற்றி கிடைக்கும். இலங்…

  11. தமிழீழம் சிவக்கிறது!!! நெடுமாறன் அய்யாவின் நூல் தடைகள் தாண்டி வெளியீடு. தமிழீழத்தின் வரலாற்றுப் பதிவாய் விளங்கும் இந்நூல் 1993-ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. பழ. நெடுமாறன் தடா-வில் கைது செய்யப்பட்ட போது இந்நூலின் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவ்வழக்கு முடிந்த பிறகு, 2002-ஆம் ஆண்டு அந்நூலை வெளியிடுவதற்கான தயார் நிலையில் இருந்த போது, 2002 ஏப்ரலில் அந்நூல் மீண்டும் பறிமுதல் செய்யப்பட்டு, சட்டவிரோதமான நூல் என வழக்கு தொடரப்பட்டது. அந்நூலை ஏற்றுமதி செய்யவிருந்ததாக சாகுல் அமீது கைது செய்யப்பட்டார். அண்மையில் நூல் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில்; தீர்ப்பு வெளிவந்துள்ளது. இந்நூல் சட்டத்திற்கு புறம்பான நூல் அல்ல என நீதிபதிகள் தீர்ப்புரைத்துள்ளனர். http://keetru.c…

  12. உரிமைகள் மறுக்கப்படும் போது தீவிரவாதம் தோன்றியே தீரும். -கமல் முப்படைகளையும் வைத்திருந்தும் தமிழர்கள் போராட்டத்தை நசுக்க முடியாத மகிந்த - உன்னால முடியாது என்பதை ஒத்துக்கொள். தமிழர்கள் அவங்க இடத்தை அடையணும்- ரசினி சத்யராச் மேடையில் வைத்து ரசினியை பாராட்டினார்

  13. மெல்பேன் நகரில் இன்று பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை கவன ஈர்ப்பு ஊர்வலம் நடைபெற்றது இதில் ஏறத்தாள 700-800 வரையிலான மக்கள் பங்கு பற்றினர்.இந்த ஊர்வலத்தை அவுஸ் இளையோர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. நகரின் இதயத்தில் இருக்கும் பெடரேசன் சதுக்க்கத்தில் இருந்து விக்ரோரியா பாராளமன்று வரை ஊர்வலமாக சென்ற மக்கள் பாராள மன்றுக்கு முன்னர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் மீண்டும் பெடரேசன் சதுக்கத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.பின் அங்கு சிறப்பு உரைகள் ஆற்றப்பட்டன. இளையோர் அமைப்பினரின் தொண்டர்களால் சனக்கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டு நகரின் வழமையான செயற்பாட்டுக்கு பங்கம் விளைவிக்காமலும் எமது மக்களின் பாதுகாப்பும் உறுதிபடுத்தப்பட்டது தமிழ் இளையோர் அமைப்பினரால் தமிழகத்தில் வெ…

  14. ஈழத்தமிழினத்தை இந்திய அரசு வழங்கி வரும் கொடிய ஆயுதங்களின் உதவியுடன் சிங்களம் அழித்தொழிப்பதற்கு எதிராக அண்மையில் கிளர்ந்தெழுந்த தமிழக முதல்வர் கருணாநிதி, பின் இந்திய மத்திய அரசின் சூழ்ச்சிக்கு பலியாகி, ஈழத்தமிழினத்தை சிங்களம் அழித்தொழிப்பதற்கு முழு ஆதரவையும் வழங்க முன் வந்ததற்காக நன்றி தெரிவித்து தமிழர் விடுதலை கூட்டணியுன் ஒரே உறுப்பினரும், தலைவருமான ஆனந்தசங்கரியார் கடிதம் எழுத உள்ளார். http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1&

    • 4 replies
    • 2.1k views
  15. தமிழக முதல்வர் டாக்டர் திரு.மு.கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம்! கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது தமிழகத்தில், ஈழம் பேசு பொரு ளாகியிருக்கிறது. எண்பதுகளில் தொடங்கிய உணர் வலைகள், இடையில் போடப்பட்ட அணையை உடைத்து மீண்டும் கிளர்ந்திருக்கிறது. ஈழத்தில் அன்றாடம் குண்டுவீச்சில் சின்னாபின்னமாகும் மக்களின் துயர் பற்றிப் பேசினாலே, அது புலிகளைப் பற்றிய பேச்சாக மாற்றப்பட்டு, ஈழம் குறித்த பேச் சையே தடுத்துவிட வேண்டும் என்ற உங்கள் கூட்டணி நண்பர்களான காங்கிரஸ்காரர்களின் கவலை புரிகிறது. ஈழத்தமிழர் படுகொலைகளுக்கு இந்தியாவே மௌனசாட்சியாக இருக்கிறது என்ற ஜெயலலிதாவின் அறிக்கையின் விளைவாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினீர்கள். 'இரு வார காலத்துக்குள் போர் …

  16. புதுடில்லியின் வார்த்தையை நம்பி ஈழத்தமிழரைக் கைவிட்ட கலைஞர் [01 நவம்பர் 2008, சனிக்கிழமை 7:20 மு.ப இலங்கை] இந்திராகாந்தி இருந்த காலத்தின் நிலை இன்று மாறிவிட்டது. இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா அவ்வளவு அக்கறை கொள்ளமுடியாது என்றும் சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல், ஈரான் போன்ற நாடுகளின் உதவியுடனும் படை பலத்துடனம் இலங்கை இயங்குவதைத் தடுக்கும் முறையில் ஆயுதங்கள் வழங்குவதையோ, அரச படைகளுக்குப் பயிற்சி வழங்குவதையோ அல்லது இலங்கையின் பாதுகாப்பு நலனுக்காக குறைந்த வட்டியில் நிதி வழங்குவதையோ எவரும் குறைகூற முடியாதென்று அவர் கூறியமை மட்டுமல்ல, இலங்கையை வெளிநாட்டவர்களுக்கு ஒரு விளையாட்டுத் தளமாக ஆக்குவதற்கு இடமளிக்கவும் ஆகாது…

  17. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்: ஒரு இராசதந்திரப் போராளி நவம்பர் 2, 2007. ஈழத் தமிழர் வாழ்வில் மறக்க முடியாத நாட்களுள் அதுவும் ஒன்று. அன்றுதான் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் சிறிலங்கா விமானப்படையின் கோழைத்தனமான தாக்குதலுக்குப் பலியான நாள். சமாதானம் என தான் பேசுவது உதட்டளவில் மாத்திரமே என்பதை சிங்கள தேசம் மீண்டுமொருமுறை நிரூபித்த நாள். அப்படி நடந்திருக்காது. இது பொய்யான செய்தியாகவே இருக்கும் என நினைத்து தமிழ்ச்செல்வன் எம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்பதை உலகெங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழ் உறவுகள் நம்ப மறுத்த நாள். அன்றைய நாள் உலகெங்கும் வழக்கம் போலவே விடிந்தது. ஆனால், ஈழத் தமிழர்களுக்கு மாத்திரமே துயரத்தோடு விடிந்தது. தமிழ்ச்ச…

  18. இலங்கைத் தமிழர்கள் மீது ராணுவம் நடத்தும் தாக்குதலைக் கண்டித்து நடிகர், நடிகைகள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் இன்று சற்று முன்னர் தொடங்கியது. நடிகர்,நடிகையர் குவியத் தொடங்கி உள்ளனர். இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. கடந்த 19-ம் தேதி ராமேஸ்வரத்தில் தமிழ்த் திரையுலகினர் பங்கேற்ற கண்டனப் பேரணியும் பொதுக் கூட்டமும் நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள இயலாதவர்கள், தங்களுடைய உணர்வை வெளிப்படுத்தும் வகையில் நவம்பர் 1-ம் தேதி சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் சரத்குமார் தெரிவித்தார். கமல், ரஜினி: அதன்படி …

    • 15 replies
    • 4.8k views
  19. தலையாட்டிகளின் உதவியுடன் திருமலையில் ஏழு இளைஞர்கள் கைது [சனிக்கிழமை, 01 நவம்பர் 2008, 09:13 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் திருகோணமலை கலாச்சார மண்டபத்தில் நடத்தப்பட்ட தேடுதலில் ஏழு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தரைப்படையினரும் கடற்படையினரும் இணைந்து நடத்திய பாரிய சுற்றிவளைப்பு தேடுதலில் முகமூடி அணிந்த தலையாட்டிகளின் உதவியுடன் இந்த ஏழு இளைஞர்களும் கைது செய்யப்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற தேடுதல் சோதனை நடவடிக்கையில் நூற்றுக்கும் அதிகமானனோர் மீது விசாரணைகள் இடம்பெற்றன. அதேவேளை, திருகோணமலை மாவட்டம் திருக்கோவிலில் கடந்த இரண்டு நாட்களில் மூன்று தமிழ் இளைஞர்கள் சிறிலங்கா …

    • 0 replies
    • 563 views
  20. இன்று தமிழீழ மக்களை சிங்களம் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்து பெரிய இராணுவ பலம் கொண்டு அழித்து வருகின்றது. இதை தமிழினமும் தன் தலமையின் கீழ் அணி கொண்டு தன்னைத்தானே காப்பாற்றி வருகிறது. எம்மக்களை அழிக்கும் சிங்களத்தின் பொருளாதார வலு குறைக்கப்படின், அதன் படை பலம் குறைக்கப்படின் எம்மவர்களின் உயிர்கள் காப்பற்றப்படும். கடந்த மூன்று வருடங்களாக சிங்களம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆடை வகைக்களுக்கான ஏற்றுமதி வரிச்சலுகையை கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இந்த வருட டிசம்பர் மாதம் இதை மேலும் மூன்று வருடங்களுக்கு நீடிப்பதா இல்லையா என முடிவெடுக்கவுள்ளது. சிங்களம் விண்ணப்பத்தை இம்மாதம் சமர்பித்துள்ளது. ஆயினும், சிங்கள அரச பயங்கரவாதத்தின் தமிழருக்கெதிரான திட்டமிட்ட இன அழிப…

    • 0 replies
    • 793 views
  21. நாகர்கோவில் கடலில் கடற்சமர் இடம்பெற்றுள்ளது. SLN Dvora, hoover craft sunk in major naval clash - Sea Tigers [TamilNet, Saturday, 01 November 2008, 02:53 GMT] Naval flotillas of the Sea Tigers of the Liberation Tigers of Tamileelam (LTTE) engaged in a major clash with the Sri Lanka Navy (SLN) gunships in the seas off Naakarkoayil in Vadamaraadchi East Saturday morning from 5:15 a.m. to 7:00 a.m., sinking an SLN Dvora Fast Attack Craft (FAC) and a hoover craft, and causing damage to another vessel. Sea Tiger officials told TamilNet that 20 attack crafts took part in the mission and seven Black Sea Tigers laid down their lives in the operation. The SLN was forc…

  22. எதிரிகள் மீதான வான் தாக்குதலில் சிறப்பாகச் செயற்பட்ட வான் புலிகளின் வானோடிகளுக்கும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் போராளிகளுக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் விருதுகள் வழங்கி மதிப்பளித்துள்ளார். பிரத்தியேகமான இடமொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் வவுனியா சிறிலங்கா கூட்டுப் படைத்தளத்தின் மீதான தாக்குதலில் வீரவரலாறான கரும்புலி மாவீரர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சுடரேற்றி, மாலை சூட்டி வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் விடுதலைப் புலிகளின் வான் புலிகளில் சிறப்பாகச் செயற்பட்ட குறிப்பாக சிறிலங்காவில் உள்ள களனிதிச அனல் மின…

  23. இலங்கை தமிழர் நிவாரணத்திற்கு ஷூ பாலிஷ் செய்யும் இளைஞர் திருநெல்வேலி: இலங்கைத் தமிழர் நிவாரணத்திற்காக, இளைஞர் ஒருவர் பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்து ஷூ பாலிஷ் செய்து, நிதி திரட்டி வருகிறார். நெல்லையை சேர்ந்தவர் பாபுராஜ் (30). சமூக சேவைகள் செய்து வருகிறார். அண்மையில் சென்னை அருகே திருக்கழுக்குன்றத்தில் இதயேந்திரன் என்ற மாணவர் விபத்தில் சிக்கி இறந்தபோது அவரது இதயம், கண்கள் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்ததற்காக அவரது தந்தை டாக்டர் அசோகனுக்கு, நெல்லையில் பாராட்டி விருது வழங்கினார். இவர் நேற்று காலையில் பாளையங்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்து அங்கு வருகிற பயணிகளின் ஷூக்களுக்கு பாலிஷ் செய்தார். அதற்கு கட்டணம் என்றில்லாமல் நன்கொடையாக எவ்வளவு தந்தாலும் வாங்கிக் …

    • 20 replies
    • 3.6k views
  24. இந்தியாவுக்கு எதிராக பிரிவினையைத் தூண்டியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து கைதாகி பிணையில் விடுதலையான இயக்குநர்களான சீமான் மற்றும் அமீர் ஆகியோரை மதுரை சிறை வாசலில் பாரதிராஜா தலைமையிலான திரையுலகத்தினர் வரவேற்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 8 replies
    • 1.4k views
  25. கொழும்பு: இலங்கையில், அந்நாட்டு ராணுவம் மீது விடுதலைப்புலிகள் நடத்திய பீரங்கி தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து, அந்தப்பகுதியில் இருந்து ராணுவம் பின்வாங்கியது. இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும்மோதல்கள் நடைபெற்று வருகின்றன. புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியை ராணுவம் சுற்றி வளைத்து மும்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. வன்னி பகுதியில் உள்ள விளாங்குளத்தில் ராணுவத்தினர் பீரங்கி மற்றும் ராக்கெட் தாக்குதலை நடத்திபடியே முன்னேறினர். அப்போது, புலிகளும், ராணுவத்தினருக்கு எதிராக பீரங்கி தாக்குதலை நடத்தினர். இதில், 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில், ராணுவத்திடம் இருந்து ஏராளமான ஆயுதங்களை புலிகள் கைப்பற்றினர…

    • 0 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.