Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமருக்கு இலட்சக்கணக்கில் தந்தி அனுப்புமாறு முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் இடைவிடாது நடக்கும் சிங்கள இராணுவத்தினரின் தாக்குதலில் இருந்து இலங்கை வாழ் தமிழ் இனத்தவரை காத்திட அங்கு உடனடி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சுமூக தீர்வு கண்டு அமைதி காண வேண்டிய தீவிர முயற்சியில் இதுவரை நடந்துள்ள விரும்பத்தகாத நிகழ்வுகளை எல்லாம் இந்தியப் பேரரசு மனதில் கொண்டு தயக்கம் காட்டாமல் இந்த இன வெறி படுகொலை தொடர மேலும், மேலும் இடம் கொடுத்து விடாத அளவுக்கு வ…

    • 7 replies
    • 1.3k views
  2. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 1,419 குடும்பங்கள் காவல்நிலையங்களில் பதிவு [திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2008, 07:00 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் மேல்மாகாணத்தில் வாழும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 1,419 தமிழ்க் குடும்பங்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்துள்ளன. கொழும்பிலும் புறநகர்ப்பகுதிகளிலும் சிறப்பாக அமைக்கப்பட்ட அலுவலகங்களுக்கு இன்று திங்கட்கிழமை காலை சென்ற தமிழ் மக்கள் மேல் மாகாணத்தில் வசிப்பதற்கான காரணங்களை தெரிவித்து தம்மை பதிவு செய்து கொண்டனர். 1,419 குடும்பங்களைச் சேர்ந்த 4,049 பேர் பதிவுசெய்து கொண்டதாக மூத்த காவல்துறை அத்தியட்சகரும் காவல்துறை ஊடக பேச்சாளருமான றஞ்சித் குணசேகர தெரிவித்தார். பதிவு நடவடிக்கைகள் இன்று காலை 8:00 மணி முதல் …

    • 0 replies
    • 553 views
  3. கொழும்பு: கிளிநொச்சியை ராணுவம் சுற்றி வளைத்துள்ள நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் வடக்கிலிருந்து தப்பி ஓடும் வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து இலங்கை அரசின் சன்டே அப்சர்வர் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், கிளிநொச்சியை ராணுவம் சுற்றி வளைத்து விட்டது. நகருக்குள் நுழைய இன்னும் 2 கிலோமீட்டர் தூரமே பாக்கி உள்ளது. எனவே நீண்ட காலத்திற்கு தனது மறைவிடத்தில் பிரபாகரன் பதுங்கியிருக்க முடியாது. தனது போராட்டத்தை பிரபாகரன் இனியாவது கைவிட வேண்டும். ராணுவத்துடன் இனியும் அவர்களால் போரிட முடியாது. இதை அவர் உணர வேண்டும். அவர் தப்பி ஓடக் கூடிய வாய்ப்புகள் இல்லை என்று கூற முடியாது. அவர் தப்பிச் செல…

  4. வன்னியில் விடுதலைப் புலிகளின் பகுதிகளில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு அழைத்துவருவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வன்னியிலிருந்து வெளியேறி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வருமாறு அங்குள்ள மக்களை அரசாங்கம் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்தபோதும், எவரும் அங்கிருந்து வெளியேறாததால், மக்களை வெளியில் அழைத்துவருவதற்கான போக்குவரத்து வசதிகளைச் செய்துகொடுப்பதற்கான திட்டங்களை அரசாங்கம் வகுத்திருப்பதாக அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இடம்பெயர்ந்த மக்கள் வன்னியிலிருந்து வெளியேற விரும்பினாலும், விடுதலைப் புலிகளால் வழங்கப்படும் போரூந்து சேவைகளையே பொதுமக்கள் ந…

    • 5 replies
    • 1.4k views
  5. பாவப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு பாரத மாதாவின் பதில்தான் என்ன? - இந்திய அரசுக்கு எதிராக மிக முக்கிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருக்கின்றார்கள் விடுதலைப் புலிகள். இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும். தமிழரின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.'' என்று இந்திய அரசு விடுக்கும் அறிக்கைகள் வெறும் வாய்ச் சொற்களே தவிர வேறெதுவும் இல்லை என்றுதான் தமிழ்மக்கள் பார்க்கின்றனர். இவ்வாறு நேரடியாகவே இந்தியா மீது குற்றப்பத்திரம் வாசித்துள்ளார்கள் புலிகள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உத்தியோகபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்' சஞ்சிகையின் ஆசிரிய தலையங்கம் இப்படி அப்பட்டமாக இந்தியாவைக் குறை கூறியிருக்கின்றது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் இலங்கையில் போர் நிறுத்தப…

  6. புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களே! தமிழர் தாயகப் பகுதிகள் மீது முற்று முழுதான இராணுவ, பொருளாதார யுத்தத்தை ஏற்படுத்தி தமிழர் பலத்தை சிதறடித்து அவர்;களை தனக்கு கீழ்படியும் ஒரு இனக்குழுவாக மாற்றுவதற்கான முழுமுயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் மீண்டுமொருமுறை வரிந்து கட்டியிறங்கியுள்ளது. இதன் ஒருகட்டமாக சிங்கள இராணுவ இயந்திரத்தை அப்பாவி தமிழ்பொதுமக்கள்மீது தொடர்ச்சியாக கட்டவிழ்த்துவிட்டு அவர்களை பால், வயது வேறுபாடின்றி கொன்றொழித்து வருகின்றது. அண்மைய செஞ்சோலை, அல்லைப்பிட்டி, மூதூர் மற்றும் மன்னார் படுகொலைகள் சிறிலங்கா அரசின் இந்த இலக்கை அடைவதற்கானதொரு வழிமுறையே. அதன் அடுத்தகட்டமாக தமிழர் வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களை பட்டினிபோட்டு இனப்படுகொலை செய்வதை குறியாகக் கொ…

  7. பாட்டாளி மக்கள் கட்சி, இலங்கை அரசை கண்டித்து, சென்னை இலங்கை தூதரகம் முன் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் விடியோ காட்சி http://www.tamilnewscenter.com/video/tn/ev.../pmkprotest.mpg பிரத்தியேக புகைப்படம் காண... http://www.tamilnewscenter.com/photo/tn/ev.../slprotest.html

    • 0 replies
    • 1.3k views
  8. இலங்கை சிங்கள மக்களுக்கு மட்டுமே சொந்தமான நாடல்ல. இங்கு வாழும் தமிழ், முஸ்லிம், மலாயர், பறங்கியர் அனைவருக்கும் சொந்தமான நாடாகும். இன ரீதியாக சிந்திக்காது இலங்கையர்கள் என நாம் சிந்திக்க வேண்டும். கிளிநொச்சி மீதான படையினரின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் ஆதரவளிக்கின்றன என்று ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார். கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள இலங்கை இஸ்லாமிய மத்திய நிலையத்தில் இடம்பெற்ற, குறைந்த வருமானம் பெறும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்தியர்கள் தாம் எந்த இனம் என்பதை…

  9. பிரத்தியேக ஒளிப்பதிவுக் காட்சி : "நாங்கள் (இலங்கை கடற்படை) தமிழக மீனவர்களை சுட்டுவிட்டு, நாங்கள் விடுதலை புலிகள் மீது பழி போடுவோம்" - இலங்கை சிறையிலிருந்து மனிதம் அமைப்பின் உதவியுடன் மீண்டு வந்த தமிழக மீனவர்கள் http://www.tamilnewscenter.com/video/tn/ev...t/fishermen.mpg

    • 0 replies
    • 2.4k views
  10. அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட பொறிவெடித் தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 642 views
  11. இந்திய - சிறிலங்கா அரசுகளின் கூட்டுச்சதியில் வீரச்சாவைத்தழுவிய லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சுடரேற்றி, வணக்கம் செலுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 915 views
  12. 'சிறிலங்கா சிங்களபவுத்தநாடு, தமிழர்களே உங்களுக்கு இங்கு உரிமை இல்லை' என்று அண்மையில் சிங்கள இராணுவத்தளபதியும், சிங்கள பிரதம மந்திரியும் கூறிய கருத்தால் சிங்களத்துடன் ஒட்டி இருந்து கொண்டு, சிங்களம் தமிழர்களுக்கான உரிமைகளை வழங்கப் போகிறது என்ற பசப்பு வார்த்தைகளை வீசியபடி, தமிழின ஒழிப்பிற்கு சிங்களத்துக்கு துணை போகும் தமிழ் ஒட்டுக்குழுக்கள், தங்களை "மெள்ளவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்" தர்மசங்கடமான நிலைக்கு தள்ளி இருப்பதாக தெரிவித்திருக்கின்றன. சிங்கள இராணுவத்தளபதியும், சிங்கள பிரதம மந்திரியும் கூறிய கருத்துக்கள் எந்த ஒரு மானமுள்ள ஈழத்தமிழனையும் அதிர்ச்சிக்கோ அல்லது ஆச்சரியத்திற்கோ கொண்டு செல்லவில்லை. கடந்த 60 ஆண்டுகளாக ஈழத்தமிழன் சிங்கள இனவெறி மிருகங்களிடமிருந்…

  13. வன்னியில் தொடர்ச்சியாக மனிதாபிமான பணிகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தினால் ஐக்கிய நாடுகள் அமைப்பின் இரண்டு முகவர் நிறுவனங்களுக்கு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. உலக உணவுத் திட்டம் மற்றும் யூ.என்.எச்.சீ.ஆர். ஆகிய அமைப்புக்களிடமே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. வன்னியில் தொடர்ச்சியாக பணியாற்றுவதனால் தமது பணியாளர்கள் அதிக சிரமங்களை எதிர்நோக்கக் கூடும் என குறித்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஆரம்பத்தில் வன்னியிலிருந்து இடம் நகருமாறு அரசாங்கம் கடுமையான உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது இடம்பெயர் மக்களின் உணவு விநியோகத்தை சீராக மேற்கொள்ள உலக உணவுத் திட்டம் மற்றும் யூ.என்.எச்.சீ.ஆர். ஆகிய அமைப்புக்கள் வன்னியில் தங…

  14. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராமங்களில் சிறிலங்கா இராணுவத்தினரும், அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரும் இணைந்து அப்பாவி பொதுமக்களை கடத்துவதுடன் விசாரணை என்ற பேரில் அவர்களை கைது செய்து அழைத்துச் செல்லும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிரித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 552 views
  15. இலங்கையின் தலைநகர் கொழும்பை பாதுகாப்பதற்காக விசேட படைப் பிரிவொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை கட்டுப்படுத்தவும், விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்வதற்கும் இந்த விசேட பிரிவு பயன்படுத்தப்படவுள்ளது. குறித்த விசேட படைப் பிரிவில் சுமார் 800 பேர் ஆரம்ப கட்டமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் ஆலோசனைப்படி இந்த விசேட படைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விசேட படைப்பிரிவு எட்டு கிளைகளைக் கொண்டு இயங்க உள்ளதாகவும் சிலாபம், நீர்கொழும்பு, வத்தளை, மருதானை, களனிய, வெதமுல்ல, பம்பலப்பிட்டிய, பாணந்துறை மலலசேகர மாவத்தை மற்றும் மெக்லாம் வ…

  16. "கிளிநொச்சி நகர எல்லையில் இருந்து மிகக் குறுகிய தூரத்திலேயே நிற்கிறோம். அங்குள்ள கட்டடங்களைக் கூட எம்மால் பார்க்க முடிகிறது. கிளிநொச்சி மீதான முதல்தாக்குதல் அடுத்தவாரம் ஆரம்பிக்கும்' என்று இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா அறிவித்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டன. இதன்பின்னர் கடந்த வாரத்தில் கிளிநொச்சி நகர மையப் பகுதிகளைக் குறிவைத்துவிமானப்படையின் கிபிர், மிக்27 போர் விமானங்களும் பல்குழல் பீரங்கிகள்மற்றும் ஆட்டிலறிகளும் குண்டுகளைக் கொட்டித் தீர்த்தன. இப்பத்தி எழுதப்பட்டுக் கொண்டிருந்த போது கூட, கிளிநொச்சியை அதிர வைக்கும்வகையிலான ஷெல் தாக்குல்கள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும், நூற்றுக்கணக்கான ஷெல்கள் வீழ்ந்து வெடிப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள…

  17. நிறைவேற்று அதிகாரத்திற்கும் நீதிமன்றத்திற்கும் இடையிலான மோதல்கள் கடும் அரசியல் பிரச்சினையாக உருவெடுத்து வருவதாகவும் இந்த நிலைமையில் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை அரசாங்கம் கவனத்தில் கொள்ளாத நிலையில் இருந்து வருவதாகவும் சிங்கள வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. காலி வீதியின் தடைகளை அகற்றுமாறு கடந்த வாரம் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்குமாறு திகதி குறிப்பிட்டு, வழங்கப்பட்ட தீர்ப்பு, முன்னாள் நிதியமைச்சின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு உள்ளிட்ட உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மற்றும் அதற்கு அரசாங்கத்தின் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைளின் விதம், இந்தமோதல் உக்கிரமடைய காரணமாக…

  18. இராணுவத்தினர் கிளிநொச்சியைக் கைப்பற்றியதன் பின்னர் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் இரகசியத் திட்டமொன்றை சர்வதேச சமூகம் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சியைக் கைப்பற்றியவுடன் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு அரசாங்கம் உத்தரவாதமளித்துள்ளதாக இருதின வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தின் போது இணைத் தலைமை நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் இரகசியமாக இந்த உத்தரவாதத்தை அளித்துள்ளது. வன்னியில் இடம்பெயர்ந்து அல்லலுறும் சிவிலியன்களுக்கு உரிய வகையில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என இந்திய மத்திய அரசு இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் த…

  19. கிளிநொச்சிக்கான இறுதி யுத்தம் [05 - October - 2008] விதுரன் கிளிநொச்சி நகர் மீது படையினர் எவ்வேளையிலும் இறுதித் தாக்குதலை ஆரம்பிக்கக்கூடும். கடந்த ஒரு வாரமாக அங்கு அகோர ஷெல் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் இரவு பகலாக நடைபெற்று வருகையில் குண்டு வீச்சு விமானங்களும் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன. மிகப்பெரும் படைநகர்வொன்றுக்கு முன்னதாக இறுதிக் கட்டத் தயாரிப்புகளாகவே இவையிருப்பது போல் தெரிகிறது. இதனால் அடுத்து வரும் நாட்களில் கிளிநொச்சி நோக்கி படையினர் மீண்டுமொரு முறை பாரிய முன்நகர்வு முயற்சியை மேற்கொள்ளலாமென்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கிளிநொச்சி நோக்கிய முன்நகர்வு முயற்சி கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக மேற்கொள்ளப்படுகிறது. மன்னார…

  20. யுத்தய (யுத்தம்) சிங்கள மக்களுக்குச் சொல்லப்படுபவை [05 - October - 2008] பீஷ்மர் சிங்கள ஊடகங்களை கேட்கும் போதும் வாசிக்கும் பொழுதும் வடக்கு, கிழக்கில், இப்பொழுது வடக்கில் மாத்திரம் நடைபெறுவது ஒரு யுத்தம் என்றும் அந்த யுத்தம் பயங்கரவாதத்திற்கெதிராக நடாத்தப்படும் போர் என்றும் கூறப்படுவதை அவதானிக்கலாம். இந்த யுத்தத்தில் இலங்கைப்படையின் போர் வீரர்கள் தாய்நாட்டை காப்பதற்காகவும் மீட்பதற்காகவும் போராடுகிறார்கள் என்று கூறப்படுகின்றது. போர் வீரர்களை "ரணவிறு" என்ற மரியாதை பன்மை பயன்பாடே பேசப்படுகிறது. அதுவும் கிளிநொச்சி தாக்குதல் தொடங்கியதன் பின்னர் நடப்பது மனிதாபிமானப் போர் என்றும் தமிழ் மக்களை விடுவிப்பதற்காக நடைபெறும் போர் என்றுமே சுட்டிக்காட்டப்படுகிறது. …

  21. சென்னை: இலங்கையில் தமிழர்கள் இனபடுகொலை செய்யப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த பிரதமர் தலையிட வேண்டும் என்ற வாசகத்துடன் லட்சக்கணக்கில் பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் இடைவிடாது நடக்கும் ராணுவத்தினரின் தாக்குதலில் இருந்து இலங்கை வாழ் தமிழர்களை காத்திட அங்கு உடனடி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும். இலங்கை தமிழர் பிரச்சனையில் சுமூக தீர்வு கண்டு அமைதி காண வேண்டிய தீவிர முயற்சியில், இதுவரை நடந்துள்ள விரும்பத்தகாத நிகழ்வுகளை எல்லாம் இந்திய பேரரசு மனதில் கொண்டு தயக்கம் காட்டாமல் இந்த இன வெறி படுகொலை தொடர மேலும் இடம் கொடுத்து விடாத அளவுக்கு வழிகாண வேண்டும். …

  22. கடந்த மாதம் வான்புலிகள் வவுனியா படைத்தலைமையகம் மீது மேற்கொண்ட தாக்குதல் இந்திய மத்திய அரசின் இரட்டை நிலைப்பாடு தொடர்பில் ஓர் அழுத்தமான நெருக்கடியை தென்னிந்தியாவில் ஏற்படுத்தி உள்ளது. இந்திய அரசு மறைமுகமாக மேற்கொண்டு வந்த படைத்துறை உதவிகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை விடுதலைப்புலிகளின் இந்த தாக்குதல் ஆதாரபூர்வமாக நிரூபித்ததால் இந்திய மத்திய அரசு பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளதுடன், இலங்கையில் துன்பப்படும் தமிழ் மக்கள் தொடர்பான தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் தமிழக கட்சிகளும் உள்ளன. இந்திய படைத்துறை பொறியியலாளர்க ளான (ஏ.கே.தாகூர், சிந்தாமணி ரான்ட்ற் ஆகியோர் காயமடைந்தது, ஆயுத உதவிகளுக்கு அப்பால் இந்திய மத்திய அரசு ஆளணி உதவிகளையும் வழங்கி…

  23. கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அனைத்து உபகரணங்கள் மற்றும் நோயாளர்களுடன் பிறிதொரு இடத்திற்கு இடம்மாற்றப்படுவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். தர்மபுரம் மற்றும் உருத்திரபுரம் ஆகிய இடங்களிலுள்ள இரண்டு பாடசாலைகள், விஸ்வமடு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளிலுள்ள இரண்டு சிறிய வைத்தியசாலைகளுக்கும் கிளிநொச்சி வைத்தியசாலை இடம்மாற்றப்படுவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிடம் அவர் கூறியுள்ளார். கிளிநொச்சி நகரிலிருந்து தொடர்ந்தும் செயற்படுவதில் காணப்படும் சிக்கல் நிலைகளை சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் மென்டிசுக்கு விளக்கிக் கூறி வைத்தியசாலையைப் பிறிதொரு இடத்துக்கு மாற்றுவதற்கான அனுமதியைப் பெற…

  24. மட்டக்களப்பில் இடம்பெற்ற சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ள, தன்னை அனுமதிக்காமைக்கு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். நேற்று (ஒக்04) மட்டக்களப்பு நகரிற்கு விஜயம் செய்த பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உள்ளிட்ட நீதி அமைச்சின் முக்கியஸ்த்தர்கள் நீதிமன்றக் கட்டடத் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். இதன்போது தமது சமய சடங்குகளுக்காக கொழும்பில் இருந்து பௌத்த பிக்கு ஒருவரை அழைத்துச் சென்றுள்ளனர். எனினும் மட்டக்களப்பில் நீண்ட காலமாக மங்களராமய விஹாரையின் பிரதம குருவாக உள்ள சுமணரத்ன தேரருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அத்துடன் நிகழ்வை பார்வையிடச் சென்ற அ…

  25. அடுத்தவருடம் தேர்தலொன்றுக்குத் தயாராகுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்களுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். எனினும், ஜனாதிபதித் தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா என்பது பற்றி அவர் எதுவும் கூறவில்லையெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2009ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் தேர்தல் திணைக்களத்துக்கு 1098 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இந்த வருடம் தேர்தல் திணைக்களத்துக்கு 284.5 மில்லியன் ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. அடுத்தவருடம் தேர்தலொன்றை நடத்துவது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டபோதும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லையென சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான, அமைச்சர் ஏ.எச்.எம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.