Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: DIGITAL DESK 5 17 APR, 2023 | 12:44 PM முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்துக்கு உட்பட்ட கிழவன்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு அடித்து குற்றுயிராய் கிடந்த பாம்பினை கையினால் தூக்கியதில் பாம்பு கடிக்கு இலக்காகிய நபர் உடனடியாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (16) இரவு உயிரிழந்துள்ளார். மாங்குளம் கிழவன் குளத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பாலசுந்தரம் ஜெகதீஸ்வரன் (வயது-47) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். https://www.virakesari.lk/article/153001

  2. இலங்கை வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிக்கிறது பங்களாதேஷ்!! இலங்கை பெற்றுக்கொண்ட கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை பங்களாதேஷ் அரசாங்கம் மேலும் நீடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை 06 மாதங்களுக்கு நீடிக்க பங்களாதேஷ் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த கடனுக்கான முதல் தவணையை ஓகஸ்ட் மாதத்திலும் மற்றொரு தவணையை செப்டம்பர் மாதத்திலும் செலுத்த இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இலங்கை அதிகாரிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, இந்த ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி, பங்களாதேஷ் மத்த…

    • 4 replies
    • 393 views
  3. தேசிய அரசாங்கத்தை அமைக்க யோசனை! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க அழைப்பு விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 25ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதிய வசதி தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து அவர் இந்த அழைப்பை விடுக்க உள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் அன்றைய தினம் அழைப்பு விடுக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்த…

  4. 27 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் ஒருவரை மோதர பொலிஸார் கைது செய்துள்ளனர். சனிக்கிழமை மோதர, றொக்ஹவுஸ் லேனில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை சோதனையிட்ட போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் இரத்தினபுரியை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் போலி நாணயத்தாள் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இப்பண்டிகைக் காலத்தில் போலி நாணயங்களை சந்தையில் அறிமுகப்படுத்த முயற்சிக்கும் மோசடியாளர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர். https://thinakkural.lk/article/249352

  5. இலங்கையின் வங்குரோத்து நிலைக்கு ஆட்சியாளர்களின் வரம்பில்லா கொள்ளைகளே காரணம் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க Published By: Rajeeban 17 Apr, 2023 | 09:41 AM இலங்கையின் தற்போதைய வங்குரோத்து நிலைக்கு, ஆட்சியாளர்களின் வரம்பில்லா கொள்ளைகள்தான் காரணம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா குற்றம் சாட்டினார். தெற்காசியா அறக்கட்டளை மற்றும் ஏசியன் காலேஜ் ஆஃப் ஜெர்னலிசம் (ஏசிஜே) சார்பில், யுனெஸ்கோ நல்லெண்ணத் தூதர் மதன்ஜீத்சிங் நினைவு சொற்பொழிவு, இணையவழி வாயிலாக நடைபெற்றது. ஏசிஜே தலைவர் சசிகுமார் வரவேற்றார். மதன்ஜீத்சிங் அறக்கட்டளை (எம்எஸ்எஃப்) தலைவர் …

    • 2 replies
    • 615 views
  6. அருந்தவபாலன் ‘….’ சாதி; நீங்கள் எந்த சாதியென கூற முடியுமா?; விக்னேஸ்வரன் எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார்: பொ.ஐங்கரநேசன் அதிர்ச்சி தகவல்! by PagetamilApril 14, 2023 அருந்தவபாலன் “….“ சாதியென சொல்கிறார்கள். உங்களைப்பற்றியும் சொல்கிறார்கள். நீங்கள் என்ன சாதியென குறிப்பிட முடியுமா என க.வி.விக்னேஸ்வரன் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் என, தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஐங்கரநேசன் குறிப்பிடுகையில், விக்னேஸ்வரனை அகற்ற வேண்டுமென தமிழ் அரசு கட்சியின் ஒரு அணி விரும்பியது. விக்னேஸ்வரனை அப்போது கவர்ச்சியான வேட்பாளராகத்தான் அப்போது நினைத்தேன். ஆனால் இப்பொழுது வேறு விதமாக அப்பிராயமுள்ளது. விக்னேஸ்வரனை…

    • 11 replies
    • 1.1k views
  7. 97 பில்லியன் டொலர்கள் பற்றாக்குறை – யுனெஸ்கோ Share on FacebookShare on Twitter 2030ஆம் ஆண்டு இலங்கை உட்பட உலக நாடுகளின் கல்வி இலக்குகளை எட்டுவதற்கு 97 பில்லியன் டொலர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2030 ஆம் ஆண்டில் அனைவருக்கும் நியாயமான மற்றும் தரமான கல்வியை வழங்குவதே ஐக்கிய நாடுகள் சபையின் 4 வது இலக்கு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு அல்லது யுனெஸ்கோ இதற்கு 3 டிரில்லியன் டொலர் நிதி தேவை என்று மதிப்பிட்டுள்ளது. …

    • 0 replies
    • 377 views
  8. மின்சார ரயில் பாதையை அமைக்க திட்டம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றலாப் பயணிகளை ஈர்ப்பதற்காகவும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்குடனும் நானுஒயா முதல் நுவரெலியா ஊடாக உடபுஸல்லாவ வரை மின்சார ரயில் பாதையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். நுவரெலியா உள்ளிட்ட மத்திய சுற்றுலாப் பிரதேசத்திலுள்ள இடங்களுக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் மின்சார ரயில் பாதை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் இங்கு குறிப்பிட்டார். அண்மையில் நுவரெலியா பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,…

    • 0 replies
    • 591 views
  9. Published By: NANTHINI 16 APR, 2023 | 01:16 PM இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடற்பரப்பில் பெருமளவான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற மீன்பிடிப் படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்நிலையில், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பாரியளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. மேலும், குறித்த படகு மற்றும் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் கரைக்கு கொண்டுவரப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது. …

  10. தியாகதீபம் அன்னை பூபதியின் 35 ஆவது நினைவு தினம் பொதுக் கட்டமைப்பின் கீழ் நடைபெறும் Vhg ஏப்ரல் 15, 2023 தியாகதீபம் அன்னை பூபதியின் 35 ஆவது நினைவு தினம் பொதுக் கட்டமைப்பின் கீழ் நடைபெறும் என ஏற்பாட்டுக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டு. ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை அறிவித்துள்ளனர். எதிர் வருகின்ற 19ஆம் திகதி இந்த நிகழ்வு நடைபெற இருக்கின்றது. இந்த நிகழ்வானது கடந்த காலங்களில் ஒழுங்கில்லாமல் ஒவ்வொருவருக்கும் ஏற்ற வசதிக்கு ஏற்ற நேரத்திலே, தியாக தீபத்தின் தியாகச்சுடர் ஏற்றப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டது. ஆனால், இம்முறை அதன்படி இல்லாமல் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற பெரியவர்களை கொண்டு கட்டமைப்பு …

  11. இந்தியாவிலிருந்து வழங்கப்பட்ட கட்டளையில் கொலை செய்ய முயற்சி : பருத்தித்துறையைச் சேர்ந்த இருவர் பரபரப்பு வாக்குமூலம் கனடாவிலிருந்து வருகை தந்து அனலைதீவில் தனது வீட்டில் தங்கியிருந்த வயோதிபரை திட்டமிட்டு கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவிலிருந்து பணம் அனுப்பப்பட்டு இந்தியாவிலிருந்து வழங்கப்பட்ட நட்புரீதியான கட்டளையில் இந்த சம்பவத்தை செய்ததாக அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பருத்தித்துறையைச் சேர்ந்த 32 மற்றும் 24 வயதுடைய இருவரே என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி அனலைதீவில் வீடுபுகுந்த வன்முறைக் கும்பல் அங்கு வசித்த வயோதிபர்கள் இருவர…

  12. ஆடுகளை வளர்க்க விரும்பும் இளைஞர் சமூகத்தினருக்கு 70,000 ஆடுகளை இலவசமாக விநியோகம் செய்வதில் விவசாய அமைச்சு கவனம் செலுத்துகிறது. அதன்படி, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு இந்த ஆடுகள் வழங்கப்படும். தேவையான தொழில்நுட்பம் மற்றும் உயர்தர ஆடுகளை வழங்குவதற்கு தனியார் துறையின் ஆதரவைப் பெறுவதற்கு தாங்கள் செயற்பட்டு வருவதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இங்கு ஜம்னாபரி, கொட்டுகச்சி, போயர், சனான் ஆகிய ஆடு இனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. https://thinakkural.lk/article/249229

  13. தமிழர்களின் நிலங்களை பெரும்பான்மையினர் ஆக்கிரமிப்பு செய்வதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள் வரவழைக்கப்பட வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் முன்னெடுத்து வரும் போராட்டம் இரண்டாயிரத்து 246 நாட்களை கடந்தும் தொடர்கின்றது. அதன் செயலாளர் கோ.ராஜ்குமார் விடுத்துள்ள அறிக்கையில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் அழிக்கப்பட்டதாக அல்லது ஆக்கிரமிக்கபட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. வரலாற்று மற்றும் இனம் சாராத தொல்பொருள் ஆராய்ச்சியுடன் மட்டுமே நாம் செல்ல முடியும். அமெரிக்காவில் மட்டுமே மேம்பட்ட தடயவியல் ஆராய்ச்சி சாதனம் மற்றும் உபகரண…

  14. Published By: VISHNU 16 APR, 2023 | 10:51 AM “தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் “ என்ற தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்புப் போராட்டமும் தமிழர் தாயகம் தழுவிய மாபெரும் கையெழுத்துப்போரும் இன்று (16.04.2023) ஞாயிற்றுக்கிழமை நல்லூர் நல்லை ஆதீன முன்றலில் இடம்பெறுகின்றது. 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சமயத்தலைவர்கள், தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் என பலருடைய பாரிய ஒத்துழைப்புடன் இந்த அடையாள உண்ணாநோன்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தமிழர் மரபுரிமைகளை அழியவிடாது பாதுக்காக குறித்த எழுச்சிப்போராட்டத்தில் பேதங்களை கடந்து தமிழராக அனைவரும் ஒன்றுபட்டு த…

  15. Published By: VISHNU 16 APR, 2023 | 10:12 AM யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாகபூசணி அம்மனை குறிக்கும் நாகபூசணி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்றுவதற்கு பொலிஸார் தீவிரம் காட்டியுள்ளனர். நீதிமன்றின் கட்டளை என யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் ஒப்பமிடப்பட்ட அறிவித்தல் உருவச்சிலைக்கு அருகாமையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீதிமன்ற வழக்கு இலக்கம் குறிப்பிட்டு பொலிஸாரின் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் பரிசோதகரினா…

  16. மறுசீரமைப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை: சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் கடன் மறுசீரமைப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. 2023 முதல் 2027 வரையிலான நிதி இடைவெளியை நிரப்புவதற்கு இலங்கையின் கடன் மறுசீரமைப்பு சுமார் 17 பில்லியன் டொலர்களை பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் தெரிவித்தார், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு இந்த கடன் மறுசீரமைப்புக்கள், கொள்கை கடன் ரத்துக்கள், முதிர்வு நீடிப்பு மற்றும் வட்டி விகிதக் குறைப்பு போன்ற வடிவங்களில் மேற்கொள்ளப்படலாம். …

    • 0 replies
    • 405 views
  17. முட்டை தொகையின் மாதிரிகள் திங்கட் கிழமை… இலங்கைக்கு இன்று கொண்டுவரப்படவுள்ள முட்டை இருப்புக்களின் மாதிரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் இருந்து சுமார் 4 மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மேலும், எதிர்வரும் வாரத்தில் மேலும் இரண்டு மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/249183

    • 0 replies
    • 297 views
  18. இலங்கை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள உலக வங்கி பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்கள் உட்பட அனைத்து விஷயங்களும் வெற்றிபெற வெளிப்படையான முறையில் செய்யப்பட வேண்டும் என தெற்காசியாவுக்கான உலக வங்கியின் துணைத் தலைவர் மார்ட்டின் ரேஸர் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் சந்திப்புகளுக்கு இடையில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும் மார்ட்டின் ரேஸருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. …

    • 0 replies
    • 360 views
  19. தமிழர் தாயகத்தில் பெரும் போராட்டம் 22 இல் ஆரம்பம்! தமிழ்மாறன் தமிழ் மக்களின் மீதான நில, தொல்லியல் ஆக்கிரமிப்பு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்க் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள வடக்கு – கிழக்கு தழுவிய போராட்டத்தின் முதற்கட்டமாக யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை போராட்டம் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத்திலே தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் கடந்த முதலாம் திகதி ஏழு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளும் 22 இற்கும் மேற்பட்ட மத, சமூக மற்றும் தொழிற்சங்க அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றிருந்தது. அந்தக் கூட்டத்தில், தமிழ் மக்களின் தொன்மையையும் தேசியத்தையும் …

  20. இலங்கையின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி தனது ஆட்சேபனையை வெளியிடவேண்டும் - சர்வதேச மன்னிப்புச்சபை Published By: Rajeeban 15 Apr, 2023 | 11:36 AM இலங்கையின் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தனது எதிர்ப்பை வெளியிடவேண்டும் என சர்வதேச மன்னி;ப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை மக்களின் உரிமைகளை முக்கியமானவையாக பெறுமதிமிக்கவையாக பைடன் நிர்வாகம் கருதினால் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நிர்வாகத்திற்கு பைடன் நிர்வாகம் தெளிவான செய்தியை தெரிவிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இல…

  21. எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து – ஒரு தரப்பினர் கையூட்டல் பெற்றுள்ளதாக தகவல்! கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் விபத்துக்குள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பாக இலங்கைக்கு பெருந்தொகை நட்டஈடு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குறித்த நட்டஈடு தொடர்பாக தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கலந்துரையாடல்களில் பங்குகொண்ட குறித்த தரப்பொன்று 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை கையூட்டாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த டொலர் தொகை பிரித்தானிய வங்கியொன்றிலுள்ள கணக்கொன்றுக்கு அனுப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவை தான் கோரியுள்ளதாக நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜ…

  22. கீரிமலை கடற்கரையில் நாவலரின் உருவச்சிலை திறந்து வைப்பு! நேற்று மாலை 5மணிக்கு கீரிமலை கடற்கரையில் நாவலர் பெருமான் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் முயற்சியால், கீரிமலை கடற்கரையில் நாவலர் பெருமான் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது. நாவலர் பெருமான் சைவநெறி தழைத்தோங்கவும், தமிழ் மொழி செழித்து வளரவும் பெரும் பணியாற்றியவராவார். அவர் யாழ்ப்பாணம், நல்லூர் கந்தப்பிள்ளை, சிவகாமி அம்மையார் ஆகிய இருவருக்கும் புதல்வனாக 1822ம் ஆண்டு அவதரித்தார். இலங்கையும், இந்தியாவும் அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்த போது சைவமும், தமிழும் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கிய காலப் பகுதியிலே தோன்றியவர் தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர். …

    • 12 replies
    • 1.5k views
  23. 14 APR, 2023 | 12:23 PM மிரிஹான பத்தேகன பிரதேசத்தில் இருவரை தாக்கி ஐந்து இலட்சம் ரூபாவை கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் நுகேகொட பிரிவு போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் மற்றுமொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கொள்ளையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் இருவரான நுகேகொடை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரையும் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கைதுசெய்யப்பட வேண்டிய பொலிஸ் சார்ஜன்ட் தலைமறைவாக உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.v…

  24. 14 APR, 2023 | 10:08 AM யாழ். பருத்தித்துறை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அப்பெண்ணுக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் போது , எழுமாற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனை அடுத்து அப்பெண்ணை விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று குறைவடைந்தமையை அடுத்து , வைத்தியசாலைகளில் இருந்த தனிமைப்படுத்தல் விடுதிகள் அகற்றப்பட்டுள்ளமையால் , குறித்த பெண்ணை சாதாரண விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. …

  25. Published By: DIGITAL DESK 5 14 APR, 2023 | 03:27 PM வடக்கில் உள்ள தீவுகளை இலக்கு வைத்து உருவாக்கப்படவுள்ள தீவக அதிகார சபையை தடுத்து நிறுத்தாவிட்டால் பல மோசமான பின் விளைவுகளை வடபகுதி மக்கள் எதிர்நோக்க வேண்டி வரும் என தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.நிஷாந்தன் எச்சரிக்கை விடுத்தார். யாழ். ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடபகுதி தீவுகளை கையகப்படுத்தும் நோக்கில் இலங்கையில் உள்ள தீவுகளை ஒரு அதிகார சபையின் கீழ் கொண்டு வருவதாக தெரிவித்து ஓர் அதிகார சபையை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.