Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நவீன கவிதை மூலவர் தா.இராமலிங்கம் காலமானார் [திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2008, 04:46 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] ஈழத்தின் நவீன கவிதை மூலவர்களில் ஒருவரான தா.இராமலிங்கம் காலமானார். நவீன கவிதைகளின் உருவாக்கத்தில் முதன்மையானவராக இருந்த இவர் கிளிநொச்சியில் இயற்கை எய்தியுள்ளார். தமிழ் மக்களின் மீதான சிங்கள அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் முதல் இலக்கியப் பதிவான 'மரணத்துள் வாழ்வோம்' கவிதைத்தொகுதியில் வெளிவந்த இவரது கவிதைகள் ஆழமான வெளிப்பாடாக அமைந்தன. புதினம்

    • 0 replies
    • 1.1k views
  2. சத்தியத்திற்குப் பின்னால் அணி வகுத்து நிற்கும் உலகத் தமிழர்களின் அரசியல் அபிலாஷை நிச்சயம் வெற்றியடையும். புலம்பெயர் மக்கள் வாழும் நாடொன்றில் இயங்கும் தொலைக்காட்சி ஒன்றிற்கு, திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா. சம்பந்தன் வழங்கிய நேர்காணலில் கூறப்பட்ட விடயமே இது. மிகவும் ஆழமான அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்பட்ட இப் போராட்டம், உண்மையின் தரிசனத்தில் வேரூன்றி இருப்பதால் வெற்றிப் பாதையில் பயணிக்குமென்பதே அவரின் உறுதியான நம்பிக்கை. அரசால் முன்னெடுக்கப்படும் கிழக்கு அபிவிருத்தி குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு தெளிவான பதிலையும் அவர் முன்வைத்தார். மூதூர் கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட 2000 குடும்பங்களிற்கு எந்தவ…

  3. அடுத்துவரும் வாரங்களில் வன்னியில் போர் வெடிக்கும்? பெரும் அழிவுகள் நேரலாம் என அச்சம் - ஏ.எவ. பி. கிளிநொச்சியை நோக்கி இராணுவம் நகர்ந்துகொண்டிருப்பதால் எதிர்வரும் நாட்களில் தீவிரமான மோதலையும் இரத்தக்களரியையும் நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்குமென இராணுவ ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி ஏ.எவ. பி. செய்தி வெளியிட்டுள்ளது. அரசபடையினர் தமது முக்கிய இலக்கான கிளிநொச்சியை நெருங்கும் வேளை கடுமையான சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனத் தெரிவித்த இராணுவ ஆய்வாளர்கள் இராாணுவத்தினரின் ஆட்லறி விமான பல்குழல் பீரங்கித் தாக்குதல்களால் வடக்கில் பெரும் அழிவுகள் ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளனர். இராணுவம் கிளிநொச்சியை நெருங்கிவரும் வேளை அவர்கள் அதிகளவு காலாட்படையினரையே நம்பியிக்க…

    • 1 reply
    • 2.1k views
  4. இராணுவத்தினர் கிளிநொச்சியை அண்மித்த பகுதிகளில் நிலைகொண்டுள்ளதால் தமது எதிர்கால இலக்குகள் மிகவும் சவால்கள் நிறைந்ததொன்றாக இருக்குமென இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். துணுக்காய், உயிலங்குளம் மற்றும் அக்கராயன்குளம் ஆகிய பிரதேசங்களை படையினர் கைப்பற்றியதைத் தொடர்ந்து களநிலைவரங்கள் தொடர்பான உண்மை நிலைவரத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா வன்னி படைத் தலைமையகத்துக்கு சென்றதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வன்னிப் படைத் தலைமையகத்துக்கு விஜயம் மேற்கொண்ட இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை வன்னியின் 21ஆம் கட்டளைப் பிரிவு அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய வரவேற்றார்…

    • 11 replies
    • 2.9k views
  5. ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினரின் கட்சி அலுவலகம் சேதப்படுத்தப்பட்டுள்ளது 8/25/2008 11:53:52 AM - ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினரான ஆணைமடுவில் அமைந்துள்ள பலித்த ரங்க பண்டாரவின் கட்சி அலுவலகம் இனந்தெரியாத நபர்களால் தாக்கியழிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதனால் ரூபா 1 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  6. ஜப்பான் பிரதிநிதிகள் குழு நேற்று கொழும்பு வருகை ஜப்பான் நாட்டு நாடாளுமன்றப் பிரநிதிகள் குழு ஒன்று ஆறுநாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று கொழும்பு வருகை தந்திருக்கிறது. நான்கு பேர் அடங்கிய இந்தக் குழுவிற்கு ஜப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் கோல்சே நொறாட்டோ தலைமை தாங்கினார். இரு நாடுகளுக்குமிடையே உள்ள உறவை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது என்று ஜப்பான் தூதரகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின்போது ஜப்பான் பிரதிநிதிகள், இலங்கை அரசின் முக்கிய தலைவர்களுடன் இரு தரப்பு உறவுகள் குறித்துக் கலந்துரையாடுவர். அத்துடன், இவர்கள் கண்டி தலதாமாளிகை மற்றும் சிகிரியா மலைக்குன்று ஆகிய இடங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்வர் என்று அந…

  7. தேர்தல் முடிவு வாயிலாக யுத்தத்திற்கு தெற்கு அங்கீகாரம் 25.08.2008 தீர்க்கமான தேர்தல் என்று நாம் சுட்டிக்காட்டிய தேர்தல் வாக்களிப்பின் முடிவுகள் வெளியாகிவிட்டன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு காத்திரமான வெற்றியைப் பெற்றிருக்கின்றது. வடமத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாண சபைகளுக்காக நடத்தப்பட்ட இத்தேர்தல் வெறும் பிரதேச மட்டப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் தேசிய மட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது இது என்று சுட்டிக்காட்டியிருந்தோம். பெரும் தேர்தல் வன்முறைகளுக்கு மத்தியில் வாக்களிப்பு மட்டும் ஓரளவு அமைதியாக நடந்தேறத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. தமிழர் தாயகம் மீது தமது அரசு தொடுத்…

  8. இராமேஸ்வரத்தில் இருந்து 5 படகுகளில் தொழிலுக்குச் சென்ற தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, 8 பேர் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 450 படகுகளில் தொழில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் இன்று அதிகாலை கடற்பரப்பில் வைத்து சிறீலங்கா படையினரால் தாக்கப்பட்டதாக, பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளரான 48 அகவையுடைய விஸ்வநாதன் தெரிவித்தார். சிறீலங்கா கடற் படையினரது தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களை தேடும் பணிகளில் இந்திய கரையோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். http://isoorya.blogspot.com/2008/08/8.html

    • 2 replies
    • 1.6k views
  9. சிறிலங்காவை கை கழுவிய யேர்மனி [ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2008, 08:35 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] தமது கோரிக்கைகளையோ அல்லது ஆலோசனைகளையோ சிறிலங்கா அரசு புறக்கணிப்பதனால் இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தாம் மேற்கொண்டு வந்த முயற்சிகளில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சிறிலங்காவுக்கான ஜேர்மனிய தூதுவர் ஜேர்ஜென் வீத் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றுகையில் கூறியதாவது: இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு என ஜேர்மனி தொரிவித்து வரும் கோரிக்கைகளையோ அல்லது ஆலோசனைகளையோ தற்போதைய அரசு செவிமடுப்பதில்லை. இலங்கையில் பெரும்பான்மை சமூகம் சிறுபான்மை சமூகத்திற்கு அதிகாரங்களை வழங்கும் என்பதில் ஜேர்மனி நம்பிக்கை இழந்துள்ளது. எ…

    • 4 replies
    • 1.5k views
  10. யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்களை காணவில்லையென முறைப்பாடு 8/25/2008 11:23:59 AM - யாழ் குடாநாட்டில் இரு இளைஞர்களை காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு செய்யப்படுள்ளது. சண்டிலிப்பாய் மேற்கை சேர்ந்த பொது சுகாதார பரிசோதகராக பணியாற்றும் தேவசேனாபதி சுகந்தன் (வயது 26) மற்றும் வியாபாரியான முருகானந்தன்(வயது 33) ஆகியோரே காணாமல் போயுள்ளதாக உறவினர்களால் மானிப்பாய் பொலிஸில் முறப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் பொன்னாலை வரதராஜ பெருமாள ஆலயத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளநிலையில் இருவரும் இதுவரி வீடு திரும்பவில்லையென முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது

  11. 8 கிலோகிராம் வெடிபொருட்கள் கிராண்ட்பாஸ் பகுதியிலிருந்து மீட்பு வீரகேசரி நாளேடு 8/25/2008 9:14:48 AM - கொழும்பு14, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள அநாதரவான வீடொன்றிலிருந்து சீ4 வகையை சேர்ந்த சுமார் 8 கிலோகிராம் வெடிபொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர். கிராண்ட்பாஸ் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்தே இந்த வெடிபொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. மாதம்பிட்டி ஹேனமுல்ல வீடமைப்பு திட்டத்திலுள்ள வீடொன்றிலிருந்தே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களில் 8 கிலோகிராம் நிறையை கொண்ட சீ4 வகையை சார்ந்த வெடிபொருட்கள்,டெட்டனேட்டர்க

  12. தமிழ் மக்களை அழித்தொழிப்பதற்காகவே அரசு பேரினவாதிகளிடம் ஆதரவைப் பெற்றுள்ளது - தமிழ் தேசிய கூட்டமைப்பு கருத்து ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 24 ஓகஸ்ட் 2008இ 08:39.04 Pஆ புஆவு +05:30 ஸ கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற வடக்கின் நிலப் பரப்புக்களைக் கைப்பற்றி விட்டால் யுத்தத்துக்கு முடிவு காணலாம் என்ற மாயத் தோற்றத்திற்குப் பின்னால் சிங்களவர்கள் இழுத்துச் செல்லப்படுகின்றனர். இது பேரழிவுக்கு வழிவகுக்குமே தவிர யுத்தத்திற்கு முடிவினைத் தராது என்பதை பெரும்பான்மைச் சமூகம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இனவாதக் கருத்துக்களைப் பரப்பிப் புலிகளுக்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் தமிழர்கள…

  13. எதிர்வரும் காலங்கள் எமக்கு சவாலானவை: சரத் பொன்சேகா [ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2008, 08:47 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] வன்னியின் ஆழமான பகுதிகளை நோக்கி சிறிலங்காப் படையினர் நகர்வதால் எதிர்வரும் காலங்கள் தமக்கு சவாலாக அமையப்போகின்றது என்று அந்நாட்டின் தரைப்படைத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள படைத் தலைமையகத்திற்கு நேற்று சனிக்கிழமை சென்றிருந்த சரத் பொன்சேகா மேலும் கூறியதாவது: எல்லாப் படையணிகளும், படையினரும் தன்னலமற்று செயற்பட வேண்டும். படையினரின் தற்போதை நடவடிக்கை தொடர்பாக நான் மகிழ்வடைந்துள்ளேன். தற்போது நாம் கிளிநொச்சியை அண்மித்துள்ளோம். எனவே எமது இலக்கு மிகவும் சவாலானது. அதனை நாம் எதிர்கொள்வோம் என்பதில் எமக்கு நம்…

  14. அம்பாறை வனப்பகுதியில் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் மூன்று படையினர் படுகாயம் [ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2008, 09:28 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை வனப்பகுதியில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற நேரடி மோதலில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக அம்பாறை மாவட்ட விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளை தேடியழிக்கும் சிறிலங்கா படையினரின் வழமையான நடவடிக்கையின்போதே இந்த சம்பவம் இடம்பெற்றதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். புதினம்

    • 0 replies
    • 724 views
  15. பிரபாகரன் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு விடுவாராயின் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராகவுள்ளதாக பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். நிவித்திகலையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது… விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகள் என பல தடவைகள் அரசாங்கத்துடன் வந்தபோதிலும், விடுதலைப்புலிகளின் தலைவரின் நோக்கம் தமிழீழம் என்ற ஒன்றிலேயே அமைந்திருந்தது. இதனாலேயே பல தடவைகள் பேச்சுக்கள் வெற்றியளிக்கும் வாய்ப்புக்கள் இருந்தாலும் கூட விடுதலைப்புலிகள் அவற்றைக்குழப்பி வந்துள்ளனர். எனினும் இனிவரும் காலங்களில் விடுதலைப் புலிகளுடன் நிபந்தனை அற்ற பேச்ச…

  16. நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழாவிற்குச் செல்லவேண்டாமென பெற்றோர் தடுத்ததால் மனமுடைந்த சிறுமி சுருக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். நுணாவில் தெற்கைச் சேர்ந்த சாந்தகுமார் ரேணுகா என்ற 11 வயதுச் சிறுமியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். கடந்த இரு தினங்களாக தனது பேத்தியாருடன் நல்லூர் உற்சவத்துக்குச் சென்றுவந்த இச்சிறுமி நேற்றைய தினமும் செல்ல முற்பட்டபோது பெற்றோர் தடுத்ததுடன் இனி தேர்த்திருவிழாவிற்குச் செல்லுமாறும் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மனமுடைந்த சிறுமி தனது வீட்டிலேயே சுருக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இச் சிறுமியின் உறவினரான 16 வயதுடைய பெண் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்றபோது அயலவர்கள்…

  17. கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகள் Saturday, 23 August 2008 நடந்து முடிந்த வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இதன்படி ரத்தினபுரி மாவட்ட அஞ்சல் வாக்குமுடிவுகள் முதலில் வெளியாகியுள்ளன. இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, 4 ஆயிரத்து 213 வாக்குகளையும், ஐக்கிய தேசிய கட்சி, ஆயிரத்து 810 வாக்குகளையும், ஜே வி பி 290 வாக்குகளையும் பெற்றுள்ளன. அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 34 வாக்குகளை பெற்றுள்ளது. மலையக மக்கள் முன்னணி, 2 வாக்குகளையும் பெற்றுள்ளது http://www.ajeevan.ch/content/view/5251/1/

  18. கிளிநொச்சியில் மக்கள் படைக்கட்டுமான பயிற்சி: முதற்கட்டமாக ஆயிரம் பேர் இணைவு [திங்கட்கிழமை, 18 ஓகஸ்ட் 2008, 07:18 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சியில் ஆயிரம் பேருக்கான மக்கள் படைக்கட்டுமான போர்ப் பயிற்சி இன்று திங்கட்கிழமை தொடங்கியுள்ளது. தமிழர் தாயக நிலங்களை வல்வளைப்புச் செய்து தமிழ் மக்களை துயரநிலைக்கு ஆளாக்கிக்கொண்டிருக்கும் சிறிலங்காப் படைகளிடமிருந்து தாய்நிலத்தை காக்கவும் மீட்கவும் மக்கள் படை தயாராகி கொண்டிருக்கின்றது. இதன் முதற்கட்டமாக இன்று திங்கட்கிழமை கிளிநொச்சியில் ஆயிரம் பேருக்கான மக்கள் கட்டுமானப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதில் அரச, அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள், வணிகர்கள், கூட்டுறவாளர்கள் எனப் பெருமளவான மக்கள் ஈடு…

    • 8 replies
    • 2.8k views
  19. இராணுவ நடவடிக்கைளால் மக்கள் அவலப்பட்டு அகதிகளாக்கப்பட்ட இக்கட்டான காலகட்டங்களில் எல்லாம் உறுதுணையாக நின்று தோழோடு தோழ் கொடுத்த வன்னிப் பகுதி மக்கள் இன்று பெரும் அவலத்தை சந்திதுக் கொண்டிருக்கின்றனர். சத்ஜெய இராணுவ நடவடிக்கை தெடரச்சியாக இரணைமடுவின் கீழான பயிர்ச் செய்கை நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட போதும், ஜெயசிக்குறு ராணுவ நடவடிக்கையின் தொடர்ச்சியாக ஓமந்தை ஈறாக பெருமளவிலான சிறு குளங்களும் பயிர்ச்செய்கை நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்ட போதும் இம் மண்ணும் மக்களும் அத்தனை இடம்பெயர்ந்த மக்களையும் தாங்கி நின்றனர். தற்போதும் மடுவை அண்டியிருந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களும் மன்னார் மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்களும் மல்லாவியை நோக்கி இடம் பெயர்ந்து சி…

  20. ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனநயாக் குழுத்தலைவர் கரு ஜயசூரியவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவதூறு செய்துள்ளார். குறிப்பாக அமைச்சர் கரு ஜயசூரியவினால் முன்வைக்கப்பட்ட இரண்டு யோசனைகளை ஜனாதிபதி உதாசீனம் செய்ததாகக் குறிப்பிடப்படுகிறது. விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு தொலைபேசி இணைப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார். எனினும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே தொலைபேசி இணைப்புக்களை கோரி நிற்பதாக நேரடி நிகழ்ச்சியொன்றின் போது கரு ஜயசூரியவை, ஜனாதிபதி சாடியுள்ளார். http://isoorya.blogspot.com/2008/08/blog-post_24.html

  21. வன்னிப்பகுதிகளை நோக்கி இரவு வேளைகளில் படையினரின் எறிகணை வீச்சுக்கள் தீவிரம் இரவு வேளைகளில் வன்னிப்பகுதிகளை நோக்கி படையினர் கடும் எறிகணை வீச்சுக்களை நடத்திவருகின்றனர். கடந்த சில தினங்களாக இவ்வெறிகணை வீச்சுக்கள் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முகமாலைப்பகுதிகளிலிருந்து பளைஇ பச்சிலைப்பள்ளிப் பகுதிகளை நோக்கியும்இ கிளாலியிலிருந்து புனகரிப்பகுதிகளை நோக்கியும் முழங்காவில் பகுதிகளிலிருந்து வன்னேரிக்களம் ஆனைவிழுந்தான் அம்பலப்பெருமாள்குளம் அக்கராயன்குளம் ஸ்கந்தபுரம் ஆகியபகுதிகளை நோக்கியும் இந்த எறிகணைகள் வந்து விழுகின்றன. இவ்வெறிகணை வீச்சுக்கள் கிளிநொச்சி மையப்பகுதிகளையும் அதிரச்செயகின்றன. இதே வேளை வவுனியாவிலிருந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசம…

  22. வன்னி மக்களின் உளவுரணைக் குழப்பும் விதமான படைத்தரப்பின் பரப்புரைகள். வன்னி மக்களுக்காக வவுனியாவில் முட்கம்பி வேலிகளுடனான முகாம்! வன்னியில் பல பகுதிகளிலும் எறிகணை வீச்சுக்களை நடத்தி ஆயிரக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்துள்ளது தற்போதைய படை நடவடிக்கை. மேலும் மக்களுக்கான உதவிப்பொருட்களை தடைசெய்து அவர்களை பட்டினி நிலைக்குளாக்கியும் மரநிழல்களில் தங்கியுள்ள மக்களுக்கான கூரை விரிப்புக்களைக்கூட அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்கள் கொண்டு செல்வதைத் தடுத்தும் வருகின்ற சிறிலங்காப்படைத்துறை பாதிக்கப்பட்டுள்ள வன்னி மக்களின் உளவுரணை சிதைத்து அம்மக்களை தங்கள் பொறிகளுக்குள் வரச்செய்வதே நோக்கம் என தெரியவந்துள்ளது. இதற்கான பரப்புரைகளையும் படைத்தரப்பு தற்போது முடுக்கிவிட்டுள்ளது. மக்கள…

  23. வடமராட்சியில் புலிகளின் கொமாண்டோத் தாக்குதலில் படையினர் இருவர் பலி [ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2008, 08:58 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] யாழ். வடமராட்சிப் பகுதியில் நிலைகொண்டிருந்த சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு கொமாண்டோக்கள் நடத்திய தாக்குதலில் இரண்டுக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். வடமராட்சி கலிகைப் பகுதியில் நிலைகொண்டிருந்த சிறிலங்காப் படையினர் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12:00 மணியளவில் விடுதலைப் புலிகளின் சிறப்பு கொமாண்டோக்கள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலிலேயே இரண்டுக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். புதினம்

  24. வவுனியா அரசாங்க அதிபர் திடீர் இடமாற்றம்: இமெல்டாவுக்கு மேலதிக பொறுப்பு வவுனியா அரசாங்க அதிபர் சின்னத்தம்பி சண்முகம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொது நிருவாக அமைச்சுக்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவித்தல் இன்று மாலை வவுனியா அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்விடமாற்றத்தை திரு எஸ்.சண்முகம் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார். இவர் இன்னும் ஒருமாத காலப்பகுதியில் ஓய்வுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை வவுனியா அரசாங்க அதிபராக முல்லைத்தீவு அரசாங்க அதிபராகப் பணியாற்றிவரும் திருமதி இமெல்டா சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வவுனியா மாவட்டத்துடன் முல்லைத்தீவு மாவட்டப் பொறுப்புக்களையும் பதில் கடமையாக மேற்கொள்வார் …

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.