Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பில் துணை இராணுவக்குழுவின் முன்னாள் ஊடக இணைப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு [திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2008, 08:50 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் பிள்ளையான் துணை இராணுவக்குழுவின் முன்னாள் ஊடக இணைப்பாளர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை இரவு 7:45 மணியளவில் மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ராதிகா தேவகுமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகளே துப்பாக்கிச் …

  2. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து அரச சார்பற்ற நிறுவனங்களை வெளியேறுமாறு சிறிலங்கா அரசு உத்தரவு [திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2008, 11:47 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பணிபுரியும் உள்ளுர் மற்றும் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களை உடனடியாக வெளியேறுமாறு சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான கடிதங்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச சகல அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் இன்று திங்கட்கிழமை பிற்பகல் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த உத்தரவை அடுத்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் அரச சார்பற்ற நிறுவனங்கள் …

    • 3 replies
    • 1.2k views
  3. ஐவர் காயம்! - டயலொக் குறுந்தொலைநகல் செய்தி

  4. மட்டக்களப்பில் பெண் ஊடகவியலாளர் மீது துப்பாக்கிச் சூடு [திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2008, 08:50 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பில் சுதந்திர ஊடகவியலாளரான ராதிகா தேவகுமாரி அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு நகரில் உள்ள அவரது வீட்டுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் ராதிகா தேவகுமாரி அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு சிறிலங்கா காவல்துறையினர் விசாரனைகளை தொடங்கியுள்ளனர். புதினம்

    • 0 replies
    • 693 views
  5. அம்பாறை கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பொறிவெடித் தாக்குதலில் மூன்று படையினர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 819 views
  6. இலங்கையில் வசிக்கும் தமிழர்களும் சர்வதேச தமிழர்களும் ஏன் சர்வதேசமும் இன்று வன்னிப் பெருநிலப் பரப்பின் மீதே தமது பார்வையைச் செலுத்துகின்றன. இலங்கையில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக யுத்தம் நடைபெற்று வருகின்றபோதிலும் இந்த யுத்தமானது தமிழர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகும். இதனைவிடச் சிங்களவர்கள் மத்தியில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்கான யுத்தமாகும். எனவே இந்த யுத்தத்தைத் தமிழர்களும் சர்வதேசமும் விழிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன. வன்னியில் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ள போதும் அதனையும் பொருட்படுத்தாது அங்கு இலங்கை அரசாங்கதினால் வலிந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மன்னாரில் இருந்து முன்னேறிய படையினர் இப்போது தமிழீழ விடுதலைப் புல…

  7. இராணுவப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கும் யுத்தத்தை இராணுவ வெற்றிகளின் மூலம் முடிவுக் கொண்டுவர முடியாதென ரொய்டர்ஸ் செய்தி சேவையின் ஆய்வறிக்கையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று வாரங்களாக இலங்கை அரச படையினர் மிகவும் வேகமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் முன்னேறி வருவதாக அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், மரபு ரீதியான இராணுவ வெற்றிகளின் மூலம் ஒருபோதும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நான்கு வழிகளில் அரச படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், வான் மற்றும் தரை மார்க்கமாக படையினர் தாக்குதல்களை மேற்கொண்டு வருவத…

  8. மணலாறில் இருந்து சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை தாக்குதலில் வயலில் சூடடித்துக்கொண்டிருந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றொருவர் காயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  9. விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்திருக்கும் நிலையில் எதிர்வரும் வாரங்களில் இரண்டு தரப்பும் அருகருகே நெருக்கமாக நின்று மோதவிருப்பதாக இராணுவ ஆய்வாளர் இக்பால் அதாஸ் தனது பத்தியில் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக மோதல்களில் ஈடுபட்டுவந்த விடுதலைப் புலிகள், பாரிய சக்திவாய்ந்த இராணுவத்தினருடன் அண்மையிலிருந்து மோதி, இழப்புக்களை ஏற்படுத்த விரும்பாமல் சற்றுப் பின்வாங்கியிருந்ததாகச் சுட்டிக்காட்டும் அவர், அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் இராணுவத்தினருக்கு இழப்புக்கள் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இராணுவத்தினரின் முன்நகர்வுகளை தாமதப்படுத்தும் நோக்கில் விடுதலைப் புலிகள் தமது பலம்வாய்ந்த போராளி குழுக்களை இரண்…

  10. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் புதல்வர் நாமல் ராஜபக்ஸ நேற்று திடீரென கண்டி தலைமையக காவற்துறை பணியகத்திற்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவர்களின் கடமை குறித்து ஆலோசனை வழங்க முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாமல் ராஜபக்ஸவின் திடீர் வருகையை அடுத்து குழப்பமடைந்த காவற்துறை அதிகாரிகள், அவர் முறைப்பாடு எதனையும் பதிவுசெய்யச் சென்றிருக்கலாம் எனக் கருதி பதிவேடுகளுடன் முறைப்பாட்டைப் பதிவு செய்ய தயாராகியுள்ளனர். அதனைத் தடுத்த நாமால் ராஜபக்ஸ, காவல்துறையினர் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருக்க வேண்டும் எனவும் நியாயமாகவும் திறமையாகவும் செயற்படுவதன் மூலம் நாட்டில் குற்றச்செயல்களை தடுக்க முடியும் எனக் கூறிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டதாகவும் தெரிவிக்கப…

  11. போர் முனையில் சிறிதளவு காயமடைந்த படைச் சிப்பாய்களைக்; கொண்டு வன்னியை வலுப்படுத்தும் படையணி என்ற இந்தப் படைப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்தப் படையணியினர் நேரடியாகச் சண்டையில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். வன்னிக் களமுனையில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளைத் தக்கவைப்பதற்கு அதிகளவிலான படையினர் தேவைப்படுவதால் இராணுவத்தை விட்டு விலகியவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அது எதிர்பார்த்தளவு வெற்றியை அளிக்கவி;ல்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே களமுனையில் காயமடைந்து நேரடியாகப் போரில் ஈடுபட முடியாத படையினரைக் கொண்டு இந்தப் பதிய படையணி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், கைப்ப்றப்பட்ட பகுதிகளில் இவர்கள் நடவடிக்…

  12. இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இராணுவ வழிமுறைகளின் மீது தாம் நம்பிக்கை கொள்ளவில்லை எனத்தெரிவித்திருக்கும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜேர்கன் வீர்த், அரசியல் வழிமுறைகளூடாகவும், மனித உரிமைகளைப் பேணுவதன் மூலமுமே இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்ட முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற 'சமாதானத்தைக் கட்டியெழுப்புவதிலும், பொருளாதார வளர்ச்சியிலும் சமநிலையைப் பேணுதல்' எனும் தலைப்பிலான இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் மாநாட்டில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யுத்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டே அரசியல் சிந்தனைகள் வகுக்கப்பட்டுள்ளதன் காரணமாக, யுத்தம் இன்று பிரபல்யமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர்,…

  13. யாழ்ப்பாணத்தில் இரண்டு வருடங்களின் பின்னர் இம்முறை உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தும் நிலையம் ஒன்றை ஆரம்பிக்க இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் பரீட்சை வினாதாள் திருத்தும் மையம் ஒன்றை ஆரம்பிக்குமாறு எழுந்த கோரிக்கைகளுக்கு கல்வியமைச்சர் அனுமதி வழங்கியதை அடுத்து யாழ்ப்பாணத்தில் வினாத்தாள் திருத்தும் மையம் ஒன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார். தமிழ்மொழி மூல ஆசிரியர்கள் வினாத்தாள் திருத்தும் பணிகளை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் எதிரிசிங்க குறிப்பிட்டுள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50

  14. வன்னி மற்றும் யாழ். களமுனைகளில் சிறிலங்கா படையினருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் மூன்று படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பத்து பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 757 views
  15. தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு வன்னியை நோக்கிய பார்வை அதிகரித்துள்ளது.( வாராந்த ஆய்வு) லங்கையில் வசிக்கும் தமிழர்களும் சர்வதேச தமிழர்களும் ஏன் சர்வதேசமும் இன்று வன்னிப் பெருநிலப் பரப்பின் மீதே தமது பார்வையைச் செலுத்துகின்றன. இலங்கையில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக யுத்தம் நடைபெற்று வருகின்றபோதிலும் இந்த யுத்தமானது தமிழர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகும். இதனைவிடச் சிங்களவர்கள் மத்தியில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்கான யுத்தமாகும். எனவே இந்த யுத்தத்தைத் தமிழர்களும் சர்வதேசமும் விழிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன. வன்னியில் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ள போதும் அதனையும் பொருட்படுத்தாது அங்கு இலங்கை அரசாங்கதினால் …

    • 0 replies
    • 1.4k views
  16. இலங்கையின் உள்விவகாரத்தில் சில வெளிநாடுகள் தலையிட முனைகின்றன. அதற்கு ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை என பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா தெரிவித்துள்ளார். காலியில் வெள்ளிக்கிழமை தென் மாகாண சபையின் புதிய கட்டிடத் தொகுதியை திறந்து வைத்துப் பேசுகையிலேயே பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் விக்கிரமநாயக்கா கூறியதாவது; நாம் எந்தவொரு நாட்டினதும் உள்விவகாரத்திலும் தலையிட்டது கிடையாது. எங்கள் பிரச்சினையை நாம் தீர்த்துக் கொள்வோம். எமது நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடமுனையும் நாடுகளுக்குஇ "உங்கள் வேலையை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் எமது பிரச்சினையை நாம் பார்த்துக் கொள்வோம்' எனக் கூறவிரும்புவதாகவும் தெரிவி…

  17. யாழ்ப்பாணக் குடாநாட்டில் யுத்தத்தில் உயிரிழந்த முப்படையினர் மற்றும் பொலிஸாரை நினைவு கூரும் வகையில் விசேட ஞாபகார்த்தத் தூபியொன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பலாலி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள குறித்த ஞாபகார்த்தத் தூபியை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று முன்தினம் திறந்து வைத்துள்ளார். யாழ்ப்பாணம் நகரின் பாதுகாப்பு நிலைமைகளை நேரில் கண்டறியும் நோக்கில் அண்மையில் மேற்கொண்ட விஜயத்தின் போது இராணுவத் தளபதி இந்த ஞாபகார்த்தத் தூபியைத் திறந்து வைத்துள்ளார். இதேவேளை, யாழ் குடாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இராணுவ உயர் அதிகாரிகள் இராணுவத் தளபதிக்கு விளக்கம் அளித்ததாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

  18. சிறிலங்காவின் மாத்தளை மாவட்டத்தில் உள்ள நாவுல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையில் 12 தமிழ் இளைஞர்கள் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 657 views
  19. அந்த இரவு, விடியவே இல்லை! கடந்த வெள்ளிக்கிழமை விடியலை உற்சாகமாக எதிர்கொண்டார் நளினி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் நளினிக்கு, வேலூர் பெண்கள் சிறையே பளிச்செனத் தெரிந்தது. சிறையில் இருந்து விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனு மீது அன்றுதான் விசாரணை. தமிழக அரசு தனக்குச் சாதகமான முடிவை நிச்சயம் அறிவிக்கும் என்று எதிர்பார்த்தார் நளினி! சகோதரர் பாக்கியநாதனின் இரண்டு வயது மகளை வேலூர் சிறைக்கு அழைத்து வரச் சொல்லிஇருந்தார். குட்டி மருமகளின் மழலைக் குழைவை அதிகமாகவே ரசித்தார். ''அரித்ராவைத்தான் (நளினியின் மகள்) பார்த்து ரெண்டரை வருஷமாச்சு. ஆனா, சீக்கிரமே அவகூடவே இருக்கிற மாதிரி தீர்ப்பு வந்துரும்'' என்றவரின் கண்களில் ஒளி! ஆனால், அந…

    • 2 replies
    • 2.3k views
  20. கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசத்தில் உள்ள கெளதாரிமுனை பகுதியில் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் முக்கிய தளம் ஒன்றின் மீது இன்று அதிகாலை 4.15 மணியளவில் விமானப்படையினர் நடத்திய தாக்குதல் ஒன்றில் அந்த முகாம் அழிக்கப்பட்டுள்ளதாக விமான்பபடை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளார். 'கடல்' என்று பெயரிடப்பட்டுள்ள கடற்புலிகளின் இந்தத் தளத்தின்மீது - விமானப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இந்த வான் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்தத் தாக்குதலின் பின்னர் இன்று காலை அந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது அவதானிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilsey…

  21. இரவு முழுவதும் "பிரித் ஓதி தமது எதிர்ப்பை காட்ட பிக்குகள் முயற்சி. உயர் நீதிமண்றத்தின் தடை உததர்வையும் மீறி , இரவுமுழுவதும் பிரித் ஓதி தமது எதிர்பை காட்ட புத்த பிக்குகள் முனைவதாக அறியப்படுகிறது. உயர் நீதிமண்றம் விதித்திருக்கும் நேரக்கட்டுப்பாட்டையும் மீறி, இரவுவெளைகளில் ஒலிபெருக்கி மூலம் பிரித் ஓதி நீதித்துறைக்கு எதிராக தமது எதிர்பை வெளிபடுத்த போவதாக பிக்குகள் அறிவித்துள்ளனர். இன்று இலங்கையில் யாரும் தூங்க முடியாது என மக்கள் இந்த தேரர்களை ஏசிக்கொண்டு இருப்பதாக தகவல் http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50

    • 15 replies
    • 4k views
  22. இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள படையினர் மீண்டும் போர்க்களம் திரும்பினால் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் எனவும், அவர்கள் இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படமாட்டார்கள் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது இந்த சலுகை நாடளாவிய ரீதியில் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள 3,600 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் மீளத் திரும்பினால், அவர்களுக்கு அவர்கள் வகித்துவந்த அதே பதவி வழங்கப்படும் எனவும், அவர்கள் இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படமாட்டார்கள் எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இவ்வாறு தப்பிச் சென்ற இராணுவ வீரர்களில் 2,500 பேர் ஓகஸ்ட் 1 ஆம்…

  23. நான் வீரத்தையும் மானத்தையும் மதிப்பவன் அதனால்தான் பிரபாகரனை நேசிக்கிறேன் * வைகோ தெரிவிப்பு தூத்துக்குடி: ""நான் வீரத்தையும், மானத்தையும் மதிப்பவன் என்பதால் தான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நேசிக்கிறேன்' என ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சிங்கலிபட்டி கல்குமி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடந்த கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் வைகோ பேசியதாவது; தென்மாவட்டங்களில் வீழ்த்த முடியாத கூட்டணியாக அ.தி.மு.க. ம.தி.மு.க. கூட்டணி விளங்குகிறது. நான் வீரத்தையும், மானத்தையும் மதிப்பவன். எனக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களான வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், மருது சகோதரர்கள், வாஞ்சிநாதன் ப…

    • 3 replies
    • 4.3k views
  24. சிங்கப்பூரில் இலங்கை யுவதி கொலை இந்திய இளைஞன் சந்தேகத்தில் கைது சிங்கப்பூரில் 21 வயது இலங்கை யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 20 வயது இந்திய இளைஞனை சிங்கப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர் இங்குள்ள கேலங் பகுதி ஹோட்டல் ஒன்றில் வியாழக்கிழமை இந்தக் கொலைச்சம்பவம் இடம்பெற்றதாக சிங்கப்பூர் பொலிஸார் தெரிவித்தனர். இவர் நேற்று சனிக்கிழமை நிதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். சிங்கப்பூரில் கேலங் பகுதி விபசாரத் தொழிலுக்கு பெயர் பெற்ற இடமாகும்.இங்கு விபசாரத்தொழில் சுதந்திரமாக நடைபெற்று வருகிறது. சிவப்பு வெளிச்சப்பகுதி என்று கூறப்படும் இங்கு விபசாரத் தொழிலில் இலங்கைப் பெண்கள் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.