Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியா விமானப்படை முகாமில் உள்ள ராடர் மையத்தை அழிக்கும் நோக்கில் நேற்று முன்தினம் செயற்பட்ட விடுதலைப்புலிகளின் தற்கொலை தாக்குதல் அணியினர் வன்னி படைத்தலைமையகத்திற்கு அருகில் உள்ள சமனலகுளம் தமிழ் கிராமத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தனர் என பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல் வெளியாகியுள்ளது. வன்னி பாதுகாப்பு தலைமையகத்திற்கு கிழக்கில் காட்டு பகுதியை எல்லையாகக் கொண்ட சமனலகுளத்தில் உள்ள வீடு ஒன்றில் அங்கிருந்தவர்களை வெளியேற்றி விட்டு இவர்கள் தற்காலிகமாக தங்கியிருந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. செய்மதி தொலைபேசியூடாக வன்னியில் உள்ள புலித்தலைவர்களுடன் இந்த கரும்புலிகள் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. கரும்புலிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் செய்ம…

  2. இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஆளில்லாத விமானம் அநுராதபுர விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் ஜானக நாயணக்கார தெரிவித்துள்ளார். விமானம் சிறிது சேதமடைந்திருப்பதாகவும் விசாரணைகள் தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கெனவே இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான மிகப்பெறுமதிவாய்ந்த இவ்வாறான ஆளில்லா விமானம் ஒன்றை அநுராதபுரம் விமானப்படைமுகாமை விடுதலைப்புலிகள் தாக்கியபோது தாக்கியழித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50

  3. ''‌சி‌றில‌ங்கா‌வி‌ல் ஈழத்தமிழர்களுக்கு எதிரான தாக்குதலுக்கு மத்திய அரசு எந்தவித ராணுவ உதவியும் அளிக்கக்கூடாது'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூ‌றியு‌ள்ளா‌ர் நெல்லையில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், ‌சி‌றில‌ங்காவு‌க்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று மத்திய அரசு கூறி வந்தது. ஆனால், வவுனியா தாக்குதலில் இந்திய ரேடார் கருவிகள் சேதம் அடைந்ததுடன் 2 இந்தியப் பொறியாளர்களும் காயமடைந்துள்ளனர். ‌சி‌றில‌ங்க ராணுவத்துக்கு ஆதரவாக மத்திய அரசு ஆட்களை அனுப்பி வைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசு ‌சி‌றில‌ங்காவுக‌்கு எந்தவித ராணுவ உதவியையும் அளிக்கக்கூடாது. அளிக்கமாட்டோம் என்ற உறுதியை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக முதலமைச்சர் கருணாநிதி வலியுறுத…

  4. சிறிலங்கா படையினருக்காக ராடர்களை இயக்கும் இந்தியாவின் "பாரத்" தொழில்நுட்பவியல் நிறுவனம் [வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2008, 09:11 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] இந்தியாவில் உள்ள "பாரத்" தொழில்நுட்பவியல் நிறுவனமே சிறிலங்கா படைத்தரப்புக்கான ராடர் கருவிகளை இயக்கும் பொறியியல் தொழில்நுட்பவியலாளர்களை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய மற்றும் சிறிலங்கா அரசாங்கங்கள் இணங்கிக்கொண்டதற்கு அமைவாக குறித்த இந்த நிறுவனம் பொறியியல் தொழில்நுட்பவியலாளர்களை வழங்கி வருகின்றது என்று கொழும்பில் உள்ள இந்திய துதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரத்துடன் செயற்பட்டு வரும் "பாரத்" தொழில்நுட்ப நிறுவனம் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறிலங்கா படை…

  5. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வவுணதீவு பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரும் பொதுமக்களை அச்சுறுத்தி கொள்ளையடித்து வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

  6. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிரான் பிரதேசத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  7. வவுனியா விமானப்படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் ஆட்டிலறி தாக்குதல்களைமேற்கொண்டுள்ளன

    • 19 replies
    • 5.5k views
  8. வான் பாதுகாப்பு அவதானிப்புக்கள் கட்டுநாயக்க ராடர் நிலையத்துக்கு மாற்றம் [வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2008, 09:32 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] வவுனியாவில் உள்ள பிரதான கட்டளையிடும் சிறிலங்கா படை முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்லறி எறிகணை மற்றும் வானூர்தி தாக்குதல்களிலான மரபு வழி தாக்குதலை அடுத்து சிறிலங்கா தலைநகர் கொழும்பின் வான் மார்க்கமான எல்லை பாதுகாப்பு அவதானிப்புக்கள் கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தில் உள்ள ராடர் கருவிகள் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருவதாக படைத்தரப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த படை முகாமில் பொருத்தப்பட்டிருந்த இந்தியாவின் இந்திரா ராடர் கருவிகள், சிறிலங்கா படைத்தரப்பின் ஆகாய எல்லைக்குள் புலிகளின் வானூர்திகள் உள்நுழ…

  9. இலங்கை அரசாங்கம் தமிழீழக் கோரிக்கையை ஏற்று, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் பாராளுமன்றத்தில் கூறினார். தமிழர்களைக் கொல்வதற்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் யுத்தத்துக்கு இந்தியா ஆயுத உதவிகள் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், இந்தியாவின் உதவியைப் பெற்றுக்கொண்டு இலங்கை அரசாங்கம் தமிழர்களைக் கொன்றொழித்துவருவதாகத் தெரிவித்தார். இதற்காக ‘சொவ்ட் லோன்’ திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு இந்தியா நிதியுதவி வழங்குகிறது என்றார் அவர். மன்னார் பகுதியில் இந்தியாவுக்குச் சொந்தமான நிறுவனம் எண்ணெய் அகழ்வை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட அனுமதி தொடர்பாக இன்று புதன்கிழமை இடம்பெற்ற…

  10. புலிகளின் வானூர்தி தாக்குதலில் காயமடைந்த இந்திய தொழில்நுட்ப நிபுணர்களுக்கு கொழும்பில் தொடர்ந்து சிகிச்சை [வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2008, 08:56 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] வவுனியாவில் உள்ள வன்னிப் பிராந்திய கூட்டு நடவடிக்கைகளுக்கான தலைமையகத்தின் மீது நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய மும்முனைத் தாக்குதலில் காயமடைந்து கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட இரண்டு இந்திய தொழில்நுட்பவியலாளர்களும் தொடர்ந்தும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்கா வான்படையின் ராடர் பிரிவில் பணிபுரிந்த இந்த இந்த இருவரும் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்து உடனடியாகவே கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டனர். …

  11. கரும்புலிப் போர் வடிவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. வீரத்தினதும் - உயிர் ஈகத்தினதும் - மனவுறுதியினதும் அதியுயர் வடிவமாக கரும்புலிப் போர் முறை உள்ளது. தன்னோடு எதிரி இலக்கையும் சேர்த்தழிக்கும் ஓர்மம் நிறைந்த போர்முறையாக அது அமைந்துள்ளது. அதனால்த் தான் உயிராயுதம் என்ற பொருள் பொதிந்த பெயர் சூட்டலுடன் கரும்புலிப் போர் வடிவம் இனங்காணப்பட்டுள்ளது. கடலிலும் - தரையிலும் இந்தப் போர்முறையை புலிகள் இயக்கம் பல்வேறு உத்திகள் வாயிலாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. தமிழரது வீரமரபின் மகுடமாக கரும்புலிகள் திகழ்கின்றனர். கரும்புலிப் போர்முறையின் தேவை என்ன? கரும்புலிகள் எவ்வாறு உருவாகின்றனர்? கரும்புலிப் போர்முறையை சர்வதேசம் எவ்வாறு நோக்…

  12. சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் யுத்த பிரதேசங்களிலிருந்து வெளியேற வேண்டும் என்ற அரசாங்கத்தின் உத்தரவு வன்னி மக்களை மேலும் அவல நிலைக்கு உட்படுத்தியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களை வெளியேறுமாறு விடுக்கப்பட்ட உத்தரவின் மூலம் குறித்த பிரதேசத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் இரு சாராரினதும் நெருக்கடிகளுக்கு ஆளாக நேரிடும் என சுட்டிக்காட்டப்படுகிறது. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னி சிவிலியன்களை தடுத்து வைக்கக் கூடிய ஓர் நிலை தோன்றும் என மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. மிகவும் இன்றியமையாத உணவு உள்ளிட்ட உதவிகளை பெற்றுக் கொள்ள முடியாது இடம்பெயர்ந்த மக்கள் எதிர்வரும் காலங்களில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கக் கூ…

  13. முழங்காவிலை நோக்கிச் செல்லும் வழி நெடுகிலும் மக்கள் இடம்பெயர்ந்து செல்லும் ஊர்திகள் எதிராக வந்து கொண்டிருந்தன. மக்கள் செல்லும் திசைக்கு எதிராக களமுனைப் போராளிகள் சென்று கொண்டிருந்தனர். எதிரிகள் துரத்தியடிக்கும் எறிகணைகளுக்கு அஞ்சி மக்கள் அவை எட்டாத தூரத்துக்குச் சென்று கொண்டிருந்தனர். நேற்று முழங்காவில் இன்று ஜெயபுரம் நாளை வன்னேரி பின்னர் அக்கராயன் அதையடுத்து கோணாவில் கிளிநொச்சியென்று அவர்கள் ஊரோடிக் கொண்டிருந்தனர். இந்த ஓட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்று நினைத்த தமிழர்கள் போராளிகளாகிக் களமுனையில் நிற்கின்றார்கள். முழங்காவிலில் புதிதாக அமைக்கப்பட்ட முன்னணிக் காப்பரண் கோட்டில் 2ஆம் லெப்.மாலதி படையணிப் போராளிகள் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். கா…

  14. "போர் தான் தீர்வு என்றால் நாங்களும் தயார்" - இலங்கை எம்.பி பேட்டி குண்டு மழை பொழியும் போர் மேகம் நிரந்தரமாகச் சூழ்ந்திருக்கிறது இலங்கையில். போரின் விளைவாக சொந்த பந்தங்கள், வீடு வாசல், உடைமைகளை இழந்து தவிக்கிறார்கள், ஈழத் தமிழர்கள். சலிக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள், தமிழீழ விடுதலைப் புலிகள். இலங்கையின் வடபகுதியான கிளிநொச்சியில் முன்னேறி வரும் இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகள் வசம் இருந்த மல்லாவி என்ற கிராமத்தைக் கைப்பற்றிவிட்டதாக மார்தட்டுகிறது. ஆனால், ராணுவத்தின் முயற்சியை முறியடித்து இலங்கை வீரர்கள் 75 பேரைக் கொன்றுவிட்டதாக அறிவித்துள்ளனர், விடுதலைப் புலிகள். உண்மையில் இலங்கையில் என்ன நடக்கிறது? ஈழப் பிரச்னைக்குத் தீர்வே இல்லையா என்பன உள்ளிட்ட நம் சந்தேகங்களுக்க…

    • 1 reply
    • 2.5k views
  15. தமிழர் வாழ் பிரதேசங்களில் சிறிலங்கா அரச படைகளின் தாக்குதல்களானது நாளுக்கு நாள் அப்பாவி தமிழ் மக்களின் குடிமனைகளையும், அவர்தம் வாழ்வாதாரங்களையும் இலக்கு வைத்து அழித்தொழிக்கும் செயலில் மட்டுமல்லாது அப்பாவி தமிழ் மக்களின் உயிரையும் பறித்தெடுக்கும் நோக்கில் நடத்திக் கொண்டிருக்கிறது. இதேவேளை தமிழர் பிரதேசங்கள் முழுமையான பொருளாதார தடைகளுக்கு உட்பட்டிருக்கும் நிலையில், உணவு, மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. சிறிலங்கா அரச படைகளின் விமானத்தாக்குதல்கள், எறிகணை வீச்சுக்கள், ஆழ ஊடுருவும் படையினரின் கண்ணிவெடித் தாக்குதல்களில் படுகாயமடையும் அப்பாவி பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை செய்யவும் இயலாத நிலை காணப்படுகிறது. அப்பகுதிகளில் கடமையாற்றிய ஐக்கிய நாடுகள் அ…

  16. புலிகளுக்கு நிதி வழங்கும் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களைத் திருப்பதிப்படுத்தவே புலிகள் வவுனியாவில் விமானத் தாக்குதலை நடத்தியுள்ளார்கள் என தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற, நாட்டின் பாதுகாப்பு நிலைவரங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் புலிகளுக்கு நிதி உதவி வழங்குதில் இப்போது தயக்கம் காட்டுகின்றனர். இதன் காரணமாக புலிகளின் வெளிநாட்டு வருவாய் வெகுவாகக் குறைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். புலிகள் தமது நிலப்பரப்புக்களை இழந்துவரும் நிலையிலும் நாளுக்கு நாள் படையினரால் புலிகள்…

  17. புலிகளின் விமானம் வீழ்த்தப்பட்டது உண்மை எங்கே, எப்படி என்று எவரும் கேட்கக் கூடாது! இது அமைச்சர் கெஹலியவின் விளக்கம் வுவனியா இராணுவ முகாமைத் தாக்க வந்த புலிகளின் இரண்டு விமானங்களில் ஒன்று தாக்கியழிக்கப்பட்டமை உண்மை என்றும் அது எப்படித் தாக்கியழிக்கப்பட்டது, எங்கு வைத்துத் தாக்கியழிக்கப்பட்டது என்ற கேள்வியெல்லாம் எவரும் கேட்கக்கூடாது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று நாடாளுமன்றில் கூறினார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உøயாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: வவுனியா இராணுவ முகாம்மீது புலிகளால் நடத்தப்பட்ட விமானத்தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. புலிகளின் இரண்டு விம…

  18. இந்திய அரசின் நேரடி உதவியினை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் [புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2008, 10:00 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழர்களுக்கு எதிராக இந்தியா அரசாங்கம் நேரடியாக உதவி வருவதனை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சிங்கள படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய வான்குண்டுத் தாக்குதலில் பலர் பலியாகியிருப்பதுடன் ஏராளமான சிங்கள படையினர் படுகாயங்களும் அடைந்துள்ளனர். அவ்வாறு படுகாயம் அடைந்தவர்களில் இந்திய பொறியியலாளர்கள் மூவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரிய வருகிறது. …

    • 0 replies
    • 1.2k views
  19. தமிழின அழிப்புக்கு இந்தியா துணை போவது அம்பலமாகியுள்ளது: சுப.வீரபாண்டியன் [புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2008, 07:32 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஆயுதங்கள் வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்திய அரசு அதிகாரிகளையும் அங்கு அனுப்பி பயிற்சி கொடுத்து தமிழின அழிப்புக்கு துணைபோவது வெட்டவெளிச்சமாகி உள்ளது என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: வவுனியாவில் நேற்று செவ்வாய்க்கிழமை (09.09.08) நடைபெற்றுள்ள வான் புலிகளின் தாக்குதலில் இரண்டு இந்திய அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதனை கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதிசெய்து…

  20. சிறிலங்க ராணுவத்திற்கு பயிற்சி அளிக்க இந்திய ராணுவ வீரர்களை மறைமுகமாக அனு‌ப்‌பி‌யிரு‌ப்பது இ‌ந்‌திய அர‌சி‌ன் த‌‌மிழன‌ ‌விரோத போ‌க்காகு‌ம் எ‌ன்று தெரிவித்துள்ள தொல். திருமாவளவன், அவர்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்! இந்த அரசின் இப்படிப்பட்ட மறைமுக நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று திருமாவளவன் கூறியுள்ளார். சிறிலங்காவின் வவுனியாவில் உள்ள படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் விமானம் மற்றும் தரை வழித் தாக்குதல்களை நடத்தி இரண்டு ராடார்களை அழித்தனர். இதில், ராடார்களை இயக்கிய இந்திய வீரர்கள் இருவ‌ர் காயமடைந்துள்ளனர். இதனைக் குறிப்பிட்டு இன்று அறிக்கை வெளியிட்டுள்ள திருமாவளவன், சிங்கள படையினருக்கு எதிராக விடுதலைப…

    • 2 replies
    • 1.7k views
  21. வடபகுதி போர் நிலைமைகளை தொடர்பில் சிறீலங்கா இராணுவத் தமையகம் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்ப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை சிறீலங்கா பாராளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனவிரத்ன உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடபகுதி போர் நிலைமைகளை தொடர்பில் சிறீலங்கா இராணுவத் தமையகம் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுகின்றது. உண்மையான தகவல்கள் மக்ளைச் சென்றடைவதில்லை. வவுனியா இராணுவக் கூட்டுப்படைத் தளத்தில் ராடார் கருவிகள் தாக்கியழிக்கப்பட்டுள்ளன. கடந்த 2006ம் ஆண்டு முதல் ஆரம்பமாகிய யுத்தத்தில் சிறீல்ஙகாப் படையினர் தரப்பில் 1851 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 9…

  22. இந்திய அரசாங்கத்தின் இரட்டை வேடத்தினை தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதல் அம்பலப்படுத்தியுள்ளது என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: வவுனியாவில் உள்ள சிங்கள இராணுவத் தலைமையகத்தின் மீது வான் புலிகளும் கரும்புலிகளும் நடத்திய தாக்குதல்களின் விளைவாக இந்தியா வழங்கியிருந்த ராடர் கருவி முற்றிலுமாக அழிக்கப்பட்டதுடன் அதனை இயக்கிய இந்திய இராணுவ அதிகாரிகள் இருவர் காயமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி இந்திய அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திவிட்டது. சிங்கள அரசுக்கு ஆயுத உதவி மட்டுமல்ல ஆள் உதவியையும்…

  23. பட்டினிச்சாவை பரிசளி்த்துச்செல்லும் தொண்டு நிறுவனங்கள்: கிளி. பொது அமைப்புக்களின் ஒன்றியம் [புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2008, 07:45 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னியிலிருந்து தொண்டு நிறுவனங்களை வெளியேற்றுதல் பட்டினிச்சாவையும், காப்பகழி வாழ்கையையும், தமிழ் மக்களுக்கு பரிசளிப்பதற்கு சமனானது என்று கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கு அனுப்பிய மனுவில் தெரிவித்துள்ளது. அம்மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: உதவி அமைப்புக்களை வன்னியில் இருந்து வெளியேறுமாறு சிறிலங்கா அரசு வெளியிட்டுள்ள செய்தி அச்சம் தருவதாகவும், பட்டினிச்சாவையும், காப்பகழி வாழ்கையையும், தமிழ் மக்களுக்கு பரிசளிக்கவும், அரசு…

  24. அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒரு மாணவர் உயிரிழந்துடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள டி.எம்.வி.பியினரின் அலுவலகத்திற்கு முன்னால் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 18வயதான முருகப்பன் கேதீஸ் என்ற மாணவரே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்தவர் 19வயதான அல்லிராஜ் காமராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கேதீஸ் என்பவர் சாதாரண தரப்பரீட்சையை எழுதிவிட்டு, கட்டிடத் தொழிலாளியாக வேலைசெய்து வந்துள்ளார். கமராஜ் என்ற இளைஞர் பரீட்சை ஒன்றுக்காக தயாராகி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆலையடிவேம்பு முருகன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டு விட்டு திரும்பி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.