Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியா படைத்தளத்தில் இந்திய அதிகாரிகள் பணியாற்றியதனை ஒப்புக்கொண்டது இந்திய தூதரகம் [புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2008, 06:24 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] வவுனியா சிறிலங்கா படைத் தலைமையகம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு படை நடவடிக்கையின் போது இந்திய அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளனர் என்று கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் இந்திய தூதரகத்தின் ஊடகத்துறை பேச்சாளர் தின்கர் அஸ்த்தான தெரிவித்துள்ளதாவது: வவுனியா படைத் தலைமையகம் மீது நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலின் போது இந்திய அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளனர். வவுனியாவில் உள்ள சிறிலங்கா படையினரின் தளத்தில் பொருத்தப்பட்டிருந்த ராடரின் …

  2. வவுனியா நகருக்கு அண்மையாக உள்ள சிறிலங்கா படையினரின் முன்னணி நிலைகள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி இன்று குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூன்று வானூர்திகள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ராடரில் தென்பட்டதாகவும் வவுனியாவுக்கு மேலாக பறந்த வானூர்தி ஒன்று சிறிலங்கா படையினரின் முன்னணி நிலைகள் மீது குண்டுத் தாக்குதலை நடத்திவிட்டுச் சென்றதாகவும் அதனைத் தொடர்ந்து புலிகள் வவுனியாவை நோக்கி ஆட்லறி எறிகணைத்தாக்குதல் நடத்தியதாகவும் சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. -puthinam- அர்ரா சக்கை!!

    • 96 replies
    • 21.1k views
  3. வவுனியா சிறிலங்கா படைத் தலைமையகம் மீது தமிழீழ விடுதலை புலிகள் இன்று அதிகாலை நடத்திய ஆட்லறி மற்றும் வான் தாக்குதல்களினாலான மரபு வழி தாக்குதலில் இந்தியா வழங்கிய இந்திரா ராடர் அதற்கான கட்டுப்பாட்டு அறை ஆகியவை சேதமடைந்தமை தொடர்பில் ஆராய்வதற்காக இந்திய இராணுவ பொறியியல் தொழில்நுட்பவியலாளர் குழு ஓன்று கொழும்புக்கு வரவுள்ளதாக இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, சிறிலங்கா வான்படைக்கு புதிய ராடர் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது குறித்தும் சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளுடன் இக்குழு பேச்சு நடத்தவுள்ளதாகவும் இந்திய தூதரக வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பு தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. வவுனியா படைத் தலைமையகம் அமைந்துள்ள ஜோசப் இராணுவ முகாமின் ராடர் கட்டுப்பாட்டு அற…

  4. வன்னியில் சிறிலங்கா படையினரால் பெருமெடுப்பில் படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டு, பல பிரதேசங்களை புலிகளிடம் இருந்து கைப்பற்றி விட்டோம், புலிகளை ஏறக்குறைய அழித்து விட்டோம் என்று சிறிலங்கா அரசு பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்த நிலையில், மல்லாவியில் ஏறக்குறைய ஐநூறு சிறிலங்கா இராணுவத்தினர் புலிகளினால் யுத்தக் கைதிகள் ஆக்கப்பட்டிருப்பதாக சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமது பல இராணுவத்தினர் காணாமல் போயிருப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு பகிரங்கமாக ஒப்புக்கொண்ட நிலையில், இக்காணாமல் போன சிறிலங்கா இராணுவத்தினர் புலிகளின் கைகளில் வீழ்ந்து இருப்பதாக தெரியவருகிறது. இதேவேளை வன்னியில் படையெடுப்பை சிறிலங்கா இராணுவத்தினர் தொடங்கிய ஆரம்பப் பகுதியை விடுதலைப் புலிகள் ஊடறுத்து துண்டி…

  5. வவுனியாவில் உள்ள வன்னிப் பாதுகாப்புப் படைகளின் தலைமையகம் மீது நேற்று அதிகாலை மூன்று வழிகளில் விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித்தாக்குதல்களில் அந்தத் தளத்துக்குப் பெரும் சேதம் ஏற்பட்டிருகின்றது தமது விமானங்கள் மூலம் குண்டு வீசியும், ஆட்லறிகள் மூலம் ஷெல் குண்டுகளை ஏவியும், கரும்புலிப் படை அணி மூலம் ஊடுருவியும் புலிகள் இந்தத் தாக்குதல்களை நேற்று விடியும்வேளை நடத்தியிருக்கிறார்கள். வன்னியில், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசம் ஒன்றிலிருந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு சற்றுப் பின்னாக புறப்பட்ட புலிகளின் இரண்டு மர்ம விமானங்கள் வன்னிப் படைத்தலையகத்துடன் இருந்த விமானத்தளத்தில் பொருத்தப்பட்டிருந்த ராடர் கட்டமைப்பை இலக்குவைத்து அடுத்தடுத்து நான்கு குண்டுகளை வீசின. புலிக…

  6. இலங்கையில் இருந்து அமைதி காக்கும் படையினர் 1990 ஆம் ஆண்டில் வெளியேறிய பின்னர், 18 வருடங்களின் பின்னர் புலிகளின் தாக்குதலில், அதுவும் விமானத் தாக்குதலில் இந்தியப் படையினர் இருவர் காயமடைந்துள்ளனர் என்று இந்தியாவின் பிரபல பத்திரிகைகளில் ஒன்றான ஹிந்துஸ்தான் ரைம்ஸ் விமர்சித்துள்ளது. வவுனியாவில் உள்ள இலங்கை விமானப்படை ராடர் தளத்தை இலக்கு வைத்து புலிகள் நேற்று நடத்திய தாக்குதலில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய விமானப் படைத் தொழில்நுட்பவியலாளர்களும் காயமடைந்திருக்கின்றனர். இந்திய விமானப் படையின் சார்ஜண்ட் தர நிலையைச் சேர்ந்த சிந்தாமணி ரவூத் மற்றும் ஏ.கே.தாக்கூர் ஆகியோரே இத்தாக்குதலில் காயமடைந்திருக்கின்றனர். சம்பந்தப்பட்ட இந்திரா II ரக ராடரை இந்தியாவே இலங்கைக…

  7. CNN தொலைக்காட்சியில் சிறுபான்மை இனம் தேசிய இனமாகும் சாத்தியம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பறீட் சக்காரியாவின் (Fareed Zakaria') "GPS" என்ற வாராந்த நிகழ்ச்சியில் கடந்த 7ஆம் நாள் நிகழ்ச்சியின் நிறைவில், உலகில் எந்த சிறுபான்மை இனம் தேசிய இனமாகுவதற்குரிய வாய்ப்பு இருக்கின்றது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேசிய இனமாக ஏற்கனவே இருக்கும் ஈழத்தமிழ் மக்கள் தமது தனிநாட்டுக் கோரிக்கையை அங்கீகரிக்குமாறு கோரி இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பாளருக்கு மின்னஞ்சல் அனுப்பி வருகின்றனர். FareedZakariaGPS@cnn.comThis e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தமிழ் மக்கள் தமது வேணவா…

  8. கிட்டு பீரங்கிப் படையணியின் சூட்டாதரவுடனும், வான்புலிகளின் குண்டு வீச்சுத் தாக்குதல் ஒத்துழைப்புடனும் விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியொன்று இன்று அதிகாலை வவுனியாவில் உள்ள வன்னி கூட்டுப்படைத் தளம் மீது அதிரடித் தாக்குதல் ஒன்றை நடாத்தி படைத் தரப்பிற்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. பத்துப் படையினரும் ஒரு காவல்துறையினனும் கொல்லப்பட்டதாகவும், 15 படையினரும், 5 வான் படையினரும், எட்டு கால்துறையினரும் காயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா படைத்தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பு எந்தத் தவல்களையும் இதுவரை வெளியிடவில்லை.

  9. SLAF bombs Ki'linochchi town [TamilNet, Wednesday, 10 September 2008, 01:46 GMT] Sri Lanka Air Force (SLAF) Kfir bombers attacked Ki'linochchi town Wednesday around 7:00 a.m., destroying 3 houses close to the Pachchilaippa'l'li Divisional Secretariat, which is located in the heart of the town. Casualty details are not known. The SLAF bombardment on Ki'linohchci comes after Gotabhaya Rajapaksa, the Sri Lankan Defence Secretary and the brother of SL President, publicly threatening the foreign NGOs to leave LTTE controlled region of Vanni, which is overcrowded with displaced people, and after the devastating LTTE attack on Sri Lankan forces Vanni HQ. Meanwhile, the…

    • 0 replies
    • 1.3k views
  10. வன்னியில் மக்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள நிலையில், நேபாளத்திற்கு 25 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவித் தொகையை சிறீலங்கா அரசாங்கம் வழங்கியுள்ளது. நோபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருகில் பாதிக்கப்பட்ட மக்ளுக்கான உதவித் தொகைக்குரிய காசோலையை காத்மண்டுவிலுள்ள சிறீலங்கா தூதுவர் ரணவீர, அந்த நாட்டின் தலைமை அமைச்சர் புஸ்பா கமல் தாலிடம் கையளித்துள்ளார். பருவப்பெயர்ச்சி காலநிலையால் 60 ஆயிரம் மக்கள் இடப்பெயர்வு அவலத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும், அவர்களுக்கே இந்த உதவி வழங்கப்பட்டிருப்பதாகவும் சிறீலங்கா அரசு கூறுகின்றது. வன்னியில் இடம்பெயர்ந்துள்ள இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களுக்குரிய உதவிகளைத் தடை செய்துள்ள சிறீலங்கா அரசாங்கம், அங்குள்ள மனிதநேய …

  11. ஜெனீவா போரியல் விதிகளின் கீழ் பொதுமக்களுக்கும் அவர்களின் வாழிடங்களுக்கும் பாதிப்பை உண்டு பண்ணாத வகையில்.. அல்லது அதைத் தவிர்க்கும் வகையில் இராணுவம் நடந்து கொள்ள வேண்டும் என்பது நியமம். ஆனால் தனது இராணுவத் தேவைகளுக்காக மக்கள் சொந்த இடங்களில் இருந்தே விரட்டி வரும் சிறீலங்கா அரச பயங்கரவாதப்படைகளின் கோரிக்கையை ஏற்று ஐநா சபை உட்பட சர்வதேச தொண்டு அமைப்புக்கள் வன்னியை விட்டு வெளியேற உள்ள இந்த நேரத்தில்.. ஓர் ஆறுதல் தரும் விடயமாக.. சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் எக்கட்டத்திலும் தான் வன்னியை விட்டு வெளியேறப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. இதனால் சிறீலங்கா அரசுடன் முரண்படும் நிலைக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சென்றுள்ளது. இருப்பினும் வன்னி மக்கள் மீதான அதன் மனிதாபிம…

    • 6 replies
    • 2.3k views
  12. ஒரு மாதத்தில் 157 படையினர் பலி, 983 பேர் காயம் வவுனியா நிருபர் 9/9/2008 3:08:12 PM - ஆகஸ்ட் முதலாம் திகதிலிருந்து செப்டெம்பர் முதலாம் திகதி வரையிலான ஒரு மாதத்தில் படைத் தரப்பில் 157 பேர் பலியாகியுள்ளனர் எனவும், 983 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க இன்று பாராளுமன்றில் தெரிவித்தார். அவசர கால சட்டம் தொடர்பான அறிக்கை பாராளுமன்றில் சமர்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவசர கால சட்டத்திற்கு வாக்களிப்பதிலிருந்து விலகியிருப்பது பயங்கரவாதத்திற்கு துணை போகும் செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

    • 6 replies
    • 1.4k views
  13. கல்விப் பொதுத் தராதர உயர்தர விடைத்தாள் திருத்தும் பணியில் கலந்தாராய்வுகளை மேற்கொள்ளாமல் விரிவுரையாளர்களின் புள்ளியியல் திட்டத்தின் அடிப்படையிலே மட்டும் விடைத்தாள்கள் திருத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் தமிழ் மொழி மூல மாணவர்களுக்குப் பதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இலஙகைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கடும் விசனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த ச.சரவணபவானந்தன் கருத்துத் தெரிவிக்கையி;ல், உயர்தரப்பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியின் போது வழமையாக வினாப்பத்திரங்களைத் தயாரித்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் புள்ளியிடும் முறை வழங்கப்படும். இதன் பின்னர் பொறுப்பான உயர் அதிகாரிகளும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்தாலோசித்து புள்ளியியல் தொடர்பான மாற…

  14. அம்பாறை வக்குமுட்டியாவ பகுதியில் சுற்றுக்காவல் கடமையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித்தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைநதவர்களில் மூவர் ஆபத்தான நிலையில் உள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 754 views
  15. தமிழக மீனவர்களின் மீதான தாக்குதல்: புதுடில்லி இராஜதந்திரத்துக்குத் தோல்வி! 09.09.2008 தமிழர் விவகாரத்தில் எடுத்ததற்கெல்லாம் பலாத்காரத்தையும் அடக்குமுறையையும் பிரயோகித்து, துப்பாக்கி முனையில் பதில் கூறிப் பழகிக் கொண்டுவிட்ட இலங்கைப் படைகளுக்கு அந்தப் போக்கை மாற்றிக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் தமிழக மீனவர்களைக் கையாளும் விடயத்திலும் அதே திமிர்த்தனம் தொடர்கின்றது. இதை சகிக்கமுடியாமல் இப்போதாவது சற்று சீறிப் பாயும் கட்டத்துக்குத் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி வந்திருக்கின்றமை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கடலில் இறங்கும் தமிழக மீனவர்களுக்கு சற்று ஆறுதல் தரும் விடயம்தான். "சார்க்' மாநாட்டுக்காகக் கொழும்புக்கு வந்திருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், இலங்க…

  16. இன்று வவுனியா இராணுவத் தலைமையத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் ரடர்கள் ஒழிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ன இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கூறினார். வடபகுதியில் இடம்பெறும் யுத்தம் தொடர்பான பொய்யான தகவல்களே வெளியில் வருவதாகவும், உண்மைத் தகவல்கள் வெளியாவதில்லையெனவும் அவர் குறிப்பிட்டார். அங்கு இடம்பெற்ற மோதல்களில் பாதுகாப்புத் தரப்பில் பலர் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார். “உதாரணமாக, 2006ஆம் ஆண்டு முதல் இதுவரை 1851 படையினர் கொல்லப்பட்டதுடன், 9901 பேர் காயமடைந்துள்ளனர். இவை உத்தியோகப்பற்றற்ற தகவல். இதுவே இவ்வாறாயின் உத்தியோகபூர்வ தகவல் இதனைவிட அதிகமாகவே இருக்கும்” என்றார் அவர…

  17. மட்டக்களப்பில் துணை இராணுவக்குழுவின் முன்னாள் ஊடக இணைப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு [திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2008, 08:50 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் பிள்ளையான் துணை இராணுவக்குழுவின் முன்னாள் ஊடக இணைப்பாளர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை இரவு 7:45 மணியளவில் மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ராதிகா தேவகுமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகளே துப்பாக்கிச் …

  18. இலங்கையில் வசிக்கும் தமிழர்களும் சர்வதேச தமிழர்களும் ஏன் சர்வதேசமும் இன்று வன்னிப் பெருநிலப் பரப்பின் மீதே தமது பார்வையைச் செலுத்துகின்றன. இலங்கையில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக யுத்தம் நடைபெற்று வருகின்றபோதிலும் இந்த யுத்தமானது தமிழர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகும். இதனைவிடச் சிங்களவர்கள் மத்தியில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்கான யுத்தமாகும். எனவே இந்த யுத்தத்தைத் தமிழர்களும் சர்வதேசமும் விழிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன. வன்னியில் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ள போதும் அதனையும் பொருட்படுத்தாது அங்கு இலங்கை அரசாங்கதினால் வலிந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மன்னாரில் இருந்து முன்னேறிய படையினர் இப்போது தமிழீழ விடுதலைப் புல…

  19. புதுக்குடியிருப்பு நகர் மீது சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: 5 கடைகள் முற்றாக அழிவு [செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2008, 06:13 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு நகர் மற்றும் பாடசாலை ஆகியனவற்றின் மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இன்று அதிகாலை குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன. புதுக்குடியிருப்பு நகரப்பகுதி மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:30 முதல் 5:00 மணிவரை சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தின. மூன்று தடவைகள் அடுத்தடுத்து வீசப்பட்ட குண்டுகளில் புதுக்குடியிருப்பு நகரில் உள்ள சிறீ சுப்பிரமணிய வித்தியாசாலை சேதமடைந்துள்ளது. நகரில் உள்ள ஐந்து கடைகள் முற்றாக அழிந்துள்ள…

    • 4 replies
    • 1.2k views
  20. நாச்சிக்குடா மற்றும் வன்னேரிப்பகுதிகளில் மேற்கொண்ட பாரிய படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது விடுதலைப் புலிகள் பெருமளவான படையப் பொருட்களை படையினரிடமிருந்து கைப்பற்றியிருந்தனர். மக்களின் பார்வைக்காக இந்த ஆயுதங்கள் வைக்கப்பட்டபோதும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் விபரங்களை புலிகள் வெளியிடவில்லை. எனினும் இந்த ஆயுதங்களின் படங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. படங்களில் இருந்தவற்றை வைத்து ஊடங்கள் சில கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் எண்ணிக்கையும் வெளியிட்டிருந்தன. தமிழ்நெட் உட்பட சில இணையத் தளங்கள் இரு லோ ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றியதாக படத்துடன் எழுதியிருந்தன. ஆனால் உண்மையில் அது லோ ஆயுதமல்ல. ஆர்.பி.ஓ. ஸ்மெல் (பம்பிள்பீ) என்ற ரஸ்சியத் தயாரிப்பா…

  21. தமிழக மீனவர்களை காக்க பிரதமருக்கு முதல்வர் மீண்டும் கடிதம் சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தொடர் தாக்குதலுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி நேரடியாகவும் கடிதம் மூலமாகவும் பலமுறை தான் வலியுறுத்தி இருப்பதை குறிப்பிட்டுள்ளார். முதல்வர் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 27 முறை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் தமிழக மீனவர்கள் 8 பேர் பலியாகி உள்ளனர்; மேலும் 24 பேர் படுகாயம் அடைந்துள்ளன…

    • 12 replies
    • 1.7k views
  22. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து அரச சார்பற்ற நிறுவனங்களை வெளியேறுமாறு சிறிலங்கா அரசு உத்தரவு [திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2008, 11:47 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பணிபுரியும் உள்ளுர் மற்றும் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களை உடனடியாக வெளியேறுமாறு சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான கடிதங்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச சகல அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் இன்று திங்கட்கிழமை பிற்பகல் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த உத்தரவை அடுத்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் அரச சார்பற்ற நிறுவனங்கள் …

    • 3 replies
    • 1.2k views
  23. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் புதல்வர் நாமல் ராஜபக்ஸ நேற்று திடீரென கண்டி தலைமையக காவற்துறை பணியகத்திற்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவர்களின் கடமை குறித்து ஆலோசனை வழங்க முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாமல் ராஜபக்ஸவின் திடீர் வருகையை அடுத்து குழப்பமடைந்த காவற்துறை அதிகாரிகள், அவர் முறைப்பாடு எதனையும் பதிவுசெய்யச் சென்றிருக்கலாம் எனக் கருதி பதிவேடுகளுடன் முறைப்பாட்டைப் பதிவு செய்ய தயாராகியுள்ளனர். அதனைத் தடுத்த நாமால் ராஜபக்ஸ, காவல்துறையினர் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருக்க வேண்டும் எனவும் நியாயமாகவும் திறமையாகவும் செயற்படுவதன் மூலம் நாட்டில் குற்றச்செயல்களை தடுக்க முடியும் எனக் கூறிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டதாகவும் தெரிவிக்கப…

  24. கிராண்ட்பாஸ் டி மெல் மாவத்தை ஸ்ரீ முத்துமாரியம் தேவஸ்தானத்தில் புகுந்து அங்கிருந்த தெய்வ உருவச்சிலைகளை உடைத்து சேதமாக்கிய பிக்கு ஒருவர் உட்பட மூவரை கிராண்ட்பாஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலை 2 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இந்நிலையில் அருகிலுள்ள விகாரையைச் சேர்ந்த பிக்கு உள்ளிட்ட மூவர் தேவஸ்தானத்தின் கோபுரத்தில் ஏறி சிலைகளை உடைத்துள்ளனர் என கிராண்ட்பாஸ் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிக்கு உள்ளிட்ட மூவரிடம் கிராண்ட்பாஸ் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆதாரம் வீரகேசரி இணையம்

  25. மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி எரிவில் பகுதியில் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் ராம் அவர்களுடைய சகோதரியின் கணவர் ஒட்டுகுழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று இரவு 7.45 மணியளவில் களுவாஞ்சிக்குடி பழைய காவல் நிலைய வீதியில் அமைந்திருக்கும் வீட்டிற்கு சென்ற இனிய பாரதியின் தலைமையிலான குழுவினர் இவரை சுட்டுக்விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது. கொல்லப்பட்டவர் 60 அகவையுடைய 5 பிள்ளைகளின் தந்தையான சாமித்தம்பி கந்தபோடி என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். சடலம் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் காவல்துறையினரால் ஒப்படைக்கப்பட்ட பின்னர் உறவினர்களினடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி காவல்து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.