ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143624 topics in this forum
-
வரும் மாதங்களில் பத்து நாட்களுக்கு ஒரு கப்பல் என்ற அடிப்படையில் இலங்கைப் படைகளுக்கு தேவையான ஆயுதத் தளபாடங்களைத் தவறாது அனுப்பி வைப்பதற்கு இலங்கைக்கு உறுதியளித்துள்ளது பாகிஸ்தான். கொழும்பு ஆங்கில வார ஏடோன்றில் இவ்வாறு நேற்று தகவல் வெளியிட்டுள்ளது. அந்த வார இதழில் மேலும் தெரிவித்திருக்கும் சில தகவல்கள் வருமாறு :- விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் உறுதியான ஆதரவை வழங்குகின்றது. இராணுவ நடவடிக்கைக்கு அவசியமான பொருட்களுடன் கப்பல்கள் கொழும்பிற்கும் கராச்சிக்கும் இடையில் அடிக்கடிப் பயணிக்கின்றன. பாகிஸ்தான் தனது ஆயுதத் தளபாட தொழிற்சாலைகளிலிருந்தும் தனது இராணுவத்தின் சேமிப்புக் களஞ்சியங்களிலிருந்து இலங்கைக்கு அவசியமானவற்றை வழங்குகின்…
-
- 13 replies
- 2.8k views
-
-
சமஷ்டி முறை பிரச்சினைக்கு தீர்வா? ஒற்றையாட்சி தொடர்பான எமது சிந்தனைகளில் ஏற்பட்ட பிளவு நிலை சந்தர்ப்பத்திலேயே நாம் இனப் பிரச்சினையை நாட்டின் முக்கிய விவகாரமாகப் பேச ஆரம்பித்தோம். தேசியப் பிரச்சினை தொடர்பாக பேசும் போது ஒற்றையாட்சி என்ற சிறைக்குள் சிறைப்பட்டிராமல் மாற்றாக சமஷ்டி தீர்வு குறித்து சிந்தித்துப் பார்க்க முடியாதா? இவ்விடயம் குறித்து பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானக் கல்விப் பிரிவைச் சேர்ந்த கலாநிதி டெஸ்மன் மல்லிகாராய்ச்சி கருத்துத் தெரிவிக்கையில் ‘மாட்டிற்கு தும்பிக்கையைப் பொருத்தியவுடன் மாடு ஒருபோதும் யானையாக முடியாது. அதனால் தும்பிக்கையுடன் யானைக்குரிய இதர அங்கங்களைப் பொருத்தினால் மட்டுமே அது யானையாக முடியும்;" என்றார். சமஷ்டி ப…
-
- 2 replies
- 2.1k views
-
-
புலமைப்பித்தன் புது ஐடியா ''பிரபாகரனோடு ஒப்பந்தம்...'' ஐரோப்பிய நாடுகளுக்கு 26 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கூட்டங்களில் முழங்கிவிட்டு வந்திருக்கிறார் அ.தி.மு.க. முன்னாள் அவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன். இது தவிர, இலங்கைப் பிரச்னை பற்றி புதிய கோணத்தில் 'ஒரு பூகோளமே பலிபீடமாய்...' என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார் புலவர். அவரிடம் உரையாடியதிலிருந்து... ''ஐரோப்பிய நாடுகளுக்கு திடீர் விசிட் ஏன்?'' ''புலம் பெயர்ந்த தமிழர்கள் ஈழத்துக்கு ஆதரவாக கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எழுதியும் பேசியும் வருவதால் என்னை அவர்கள் அழைத்தார்கள். அதனால் நார்வே, சுவீடன், பெல்ஜியம…
-
- 1 reply
- 2.7k views
-
-
அக்கரைப்பற்று கண்ணகிபுரம் படைமுகாம் மீது எறிகணைத் தாக்குதல்: ஒரு படையினர் பலி: நால்வர் காயம் ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] நேற்று இரவு 9.45 மணியளவில் அக்கரைப்பற்று கண்ணகிபுரம் பகுதியில் அமைந்துள்ள சிறீலங்கா படைகளின் இராணுவ முகாம்மீது விடுதலைப்புலிகள் எறிகணை வீச்சு நிகழ்த்தியுள்ளனர். அத்துடன் அப்பகுதியில் அமைந்துள்ள இராணுவ காவலரண் ஒன்றையும் தாக்கியழித்துள்ளதாக தெரியவருகிறது. இதன்போது ஒருபடையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் நால்வர் காயமடைந்தள்ளதாகவும் அறியமுடிகிறது. இதேவேளை நேற்று மாலை கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த இருவர் இன்று இறந்துள்ளதாகவும் மேலும் அறியமுடிகிறது. http://www.pathivu.com/?p=2916
-
- 1 reply
- 1.1k views
-
-
விடுவிக்கப்படாத பிரதேச மக்களை அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருமாறு விமானம் மூலம் துண்டுப் பிரசுரம் [ ஞாயிற்றுக்கிழமை, 17 ஓகஸ்ட் 2008, 09:21.53 AM GMT +05:30 ] கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தங்கியிருக்கும் பொதுமக்களை அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி நகருமாறு கோரப்படும் துண்டுப் பிரசுரங்கள் விமானம் மூலம் வீசப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி நகர் நோக்கி முன்னேறி வரும் படையினருக்கு எதிராகப் பிரதேச பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தப் புலிகள் உத்தேசித்துள்ளதாக இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. தமிழ் மொழி மூலமான இந்தத் துண்டுப் பிரசுரங்களில் தமிழீழ விடுதலைப் புலி உற…
-
- 14 replies
- 2.4k views
-
-
காலத்தின் தேவை அறிந்து மீண்டும் இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது. தமிழீழச் சிக்கலைத் தீர்ப்பதற்கான திறவுகோல் தமிழகத்திலேயே உள்ளது "சாமானியர்களின் சகாப்தம்" என்ற கூற்றை தமிழக மக்களிடம் எடுத்துக்காட்டிய அறிஞர் அண்ணா அதன் மூலம் தமிழக மக்களை ஓர் அரசியற் சக்தியாய் 1960களில் திரட்டி எடுத்தார். மக்கள் திரள் அரசியற் சக்தியான போது எதிரிகளின் கொடி, குடை, ஆலவட்டங்கள் சரிந்து விழுந்தன. இதன் வழியே தமிழகமானது மக்கள் திரள் அரசியலுக்கு பழக்கப்பட்ட களமாகியது. அப்படி மக்கள் திரளாக்கப்பட்ட தமிழக அரசியலின் பலம் தான் தமிழீழ மக்களின் பலமும் கூட. இதனை உலகலாவிய அரசியல் யதார்த்தத்தில் வைத்துப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். தமிழக மக்களை ஜனநாயக அலைக்குள் இழுத்து விட்டதில…
-
- 1 reply
- 1.8k views
-
-
பின்வாங்கி முன்னேறும் தந்திரோபாயம்-அன்பரசு- 'ஓரடி பின்னே ஈரடி முன்னே" என்று சீனப் புரட்சித் தலைவர் மாவோ சொன்னார். சுனாமி அலை போல் பின்னுக்குச் சென்று முன்னேறி வந்து தாக்குதல் தொடுக்கும் இராணுவத் தந்திரோபாயத்தை அவர் இப்படிப் புலப்படுத்தினார். எதிரியின் எதிர்பார்ப்புக்கு இணங்க நாம் எமது உத்திகளை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. எமது வசதிதான் எமக்கு முக்கியம். எதற்காகப் பின்னோக்கி வரவேண்டும் என்பதற்கு முக்கிய காரணங்கள் உண்டு. சண்டைக்குப் பொருத்தமில்லாத களச் சூழலிலிருந்து தந்திரோபாயமாக விலகிவிட வேண்டும். எதிரியை உள்வரவிட்டுத் தாக்குதல் நடத்துவதால் கிடைக்கும் அனுகூலம் பற்றிக் கணிப்பிட வேண்டும். தனது அணிக்கு வரவிருந்த இழப்பைத் தவிர்த்து அணியின் …
-
- 10 replies
- 3.9k views
-
-
ஆகஸ்ட் 12, 2008 ரொறன்ரோ திரு. கலைஞர் டாக்டர் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு! உருசிய ஆட்சித் தலைவரின் இனவுணர்வு, மாண்புமிகு முதல்வருக்கு, வணக்கம். உண்மையைச் சொன்னால் இந்த மடல் எழுதுவதால் ஏதாவது பயன் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு அடியோடு இல்லை. உங்களுடைய அண்மைக் காலப் பேச்சும் செயலும் அவ்வாறுதான் எம்மை எண்ண வைக்கிறது. இருந்தும் 1990 இல் தமிழீழ மக்களை கண்டபடி சுட்டும், வெட்டியும் கொன்றும் குருதிக் கறைபடிந்த கையோடு வந்த இந்திய அமைதிப்படையை வரவேற்க மறுத்த முதல்வர் கருணாநிதியின் தமிழின உணர்வு எங்கோயாவது ஒளிந்திருக்கலாம் என்ற நப்பாசையில் இந்த மடலை வரைகிறோம். கடந்த ஆகஸ்ட் 7 ஆம் நாள் 1990 களில் பிரிந்து போன தென் ஒசெட்டியாவைத் (South Osse…
-
- 3 replies
- 2.8k views
-
-
தாய் மண்ணை காப்பதற்கும் மீட்பதற்கும் முன்னாள் போர் வீரர்களுக்கு அவசரமானதும் அவசியமானதுமான அழைப்பை தமிழீழ அரசியற்துறை விடுத்துள்ளது. முன்னாள் விடுதலை வீரர்களான நீங்கள் உங்கள் தாய் தேசம் முகம் கொடுத்திருக்கும் போர் நெருக்கடிக்கிடையில் தாய் நாட்டிற்கு நீங்கள் புரிய வேண்டிய கடமைக்கு முன்னுரிமை அளித்து விரைந்து வருவீர்கள் என்று நம்புகின்றோம். இந்த தேசத்தின் மைந்தர்களான நீங்கள் எமது மக்களும் மண்ணும் எதிரியின் பேரவலத்துக்குள்ளளாவதை ஒரு போதும் விரும்பமாட்டீர்கள் மானமுள்ள வீரமுள்ள எந்த தூய வீரனும் இதை விரும்பமாட்டான் உங்கள் உள்ளத்தில் நிறைந்திருக்கும் உணர்வும் குருதியில் ஓடும் ஓர்மமும் தேச விடுதலையை நோக்கி தள்ளவே செய்யும் இதன் முலம் நீங்கள் உயிரினும் மேலாக அன்பு செய்யும் தாய்…
-
- 18 replies
- 5.8k views
-
-
கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்பதையே கடந்த வாரம் ரஷ்யா மேற்கொண்ட நடவடிக்கை கோடிட்டு காட்டியுள்ளது. அண்மைக்காலமாக மேற்குலகம் வரைந்து கொண்ட எழுந்தமானமான வரைவிலக்கணங்களுக்கு எல்லாம் இது ஆச்சரியக்குறி வைத்துள்ளது. சீனாவில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் ஆரம்பமான போது, கருங்கடலுக்கு அண்மையாக அமைந்துள்ள ஜோர்ஜியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் மோதல் களும் ஆரம்பமாகியிருந்தன. ஜோர்ஜியா வின் பிடியில் இருந்த போதும் சுதந்திர பிரகடனம் செய்த தென் ஒசேஷிய மற்றும் அப்காசியா (South Ossetia and Abkhazia) ஆகிய மாநிலங்கள் ஜோர்ஜிய படைகளின் தாக்குதல்களுக்கு தொடர்ச் சியாக உட்பட்டுவருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்த நிலையில் கடந்த வாரம் மோதல்கள் மூண்டிருந்தன. …
-
- 6 replies
- 3.7k views
-
-
உலகத் தமிழர் பேரமைப்பின் ஆறாம் ஆண்டின் நிறைவு விழா, உலகத் தமிழ் எழுத்தாளர் சிறப்பு மாநாடாக நேற்று சனிக்கிழமை தமிழ்நாட்டின் மதுரையில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 697 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போதைய யுத்தத்தில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவார்களா? என்பது குறித்து இன்றைய “லக்பிம’ நாளேடு ஆராய்ந்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், முன்னர் இந்த இரசாயன ஆயுதங்கள் தொடர்பாகக் கருத்துரைத்திருந்ததாக “லக்பிம” குறிப்பிட்டுள்ளது. அத்துடன், தாம் இயக்கத்தில் இருந்தபோது “அமோனியம் நைதரேட்” டை அடிப்படையாகக் கொண்ட இரசாயன ஆயுதங்களை இறக்குமதி செய்யப்பட்டதாகவும் எனினும் அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்துத் தனக்கு தெரியாது என்றும் கருணா தெரிவித்துள்ளதாக “லக்பிம” கூறியுள்ளது. அவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினால் அது படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு…
-
- 12 replies
- 3.4k views
- 1 follower
-
-
சிறிலங்கா அரசை அனைத்துலக சமூகம் தனிப்படுத்த வேண்டும்: யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் [ஞாயிற்றுக்கிழமை, 17 ஓகஸ்ட் 2008, 09:43 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா அரசாங்கத்தை தனிமைப்படுத்தி- தமிழ் மக்கள் மீதான இன அழிப்புப் போரை தடுத்து நிறுத்தி- தமிழ் மக்களின் உண்மையான அபிலாசைகளை தீர்க்க அனைத்துலக நாடுகள் முன்வர வேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: யாழ். குடாநாட்டை ஆக்கிரமித்து படைமயப்படுத்தி ஆயுதமுனையில் தமிழ் மக்களை அடக்கி- ஒடுக்கி குடாநாட்டு திறந்தவெளிச் சிறைச்சாலையில் ஆட்கடத்தல்கள், மக்கள் மீதான படுகொலைகள், கைதுகள…
-
- 0 replies
- 491 views
-
-
கொசோவா தனிநாட்டுப் பிரகடன காலத்தில் சிறியளவில் பேசப்பட்ட ஜோர்ஜியாவின் இரு மாநிலங்கள், இன்று உலகளவில் பேசப்படும் விவகாரத்திற்குரிய பிரதேசங்களாக மாறியுள்ளன. கடந்த 7ஆம் திகதி ஜோர்ஜியாவில் சுயமாக இயங்கும் 70,000 மக்கள் தொகை கொண்ட தென் ஒசேஷியா (South Ossetia) மாநிலத்தில் பெரும் படை நகர்வொன்றை மேற்கொண்டு ஏறத்தாழ 1400 பேரை கொன்று குவித்தது ஜோர்ஜிய இராணுவம். அங்கு பெரும்பான்மையாக வாழும் ஒசேஷியர்கள், தனி நாட்டிற்குரிய தனித்தன்மையுடன் எடுவார்ட் கொகொய்டி (Eduard Kokoity) தலைமையில் சுயமாக இயங்கி வருகின்றனர். 1992 ஆம் ஆண்டில் அன்றைய ரஷ்ய அதிபர் பொரிஸ் யெஸ்சின் , ஜோர்ஜிய அதிபர் எட்வேட், செவாட்னாட்சே கொண்ட உடன்பாட்டின் பிரகாரம் அமைதிப்படையொன்று தென் ஒசேஷியாவில் நிறுவப்பட்…
-
- 1 reply
- 959 views
-
-
வவுனியா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை உடனடியாக படையினரிடம் ஒப்படைக்குமாறு வவனியா வைத்தியசாலை பணிப்பாளருக்கு அரசால் நேற்று சனிக்கிழமை அவசர பணிப்புரை விடுக்கபட்டுள்ளது. இதற்கமைய வவுனியா பொதுவைத்திசாலையின் வெளிநோயாளர் பிரிவு இன்று முதல் படையினருக்கான சிகிகிச்சைப் பிரிவாக மாற்றப்படுவதுடன் படையினர் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான அனைத்து வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு இன்று முதல் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படவுள்ளது. பொதுமக்களுக்கான சிகிச்சசைகள் புதிய கட்டிடத்திலுள்ள வெளிநோயாளர் பிரிவிலேயே இன்று முதல் நடைபெறும். வன்னியில் நடைபெற்றுவரும் கடும் மோதல்களில் பெருமளவு படையினர் காயமடைந்து வருவதால் வவ…
-
- 2 replies
- 1.2k views
-
-
'சிறிலங்கா இராணுவத்தினர் புலிகளின் மைய நகரமாகவும், அவர்களின் தற்போதைய தள நகரமாகவுமுள்ள கிளிநொச்சியை நான்கு மாதத்திற்குள் கைப்பற்றிவிடுவர் எனத்தான் முழுமையாக நம்புகிறேன்" சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கோத்தபாய ராஜபக்சவின் இந்நம்பிக்கையானது அவரின் தனிப்பட்ட மதிப்பீடாகவோ அன்றி ஊகமாகவோ கொள்வதற்கில்லை. சிறிலங்கா இராணுவத் தலைமைப்பீடத்தின் மதிப்பீடும் அது என்றே கொள்ளமுடியும். அண்மையில் இதனைச் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவும் உறுதிப்படுத்தியிருந்தார். அண்மையில் அவர் வழங்கியிருந்த செவ்வி ஒன்றில் 'விடுதலைப் புலிகள் அடுத்த மாவீரர் தினத்தைப் பதுங்கு குழிகளிலேயே கொண்டாடுவர்" என்றார். இதற்கு அவர் …
-
- 5 replies
- 2.3k views
-
-
யொங்கிபூர் முற்றுகையும், வன்னி முற்றுகையும் ஒரு ஒப்பு நோக்கு - புலிகளின் குரல் - இறைவன் http://kuma.lunarservers.com/~pulik3/Pulik.../Newsveech.smil
-
- 0 replies
- 2.4k views
-
-
வன்னி கட்டுபாடற்ற பகுதிகளை மீட்டு முன்னேறி வரும் படையினருக்கு எதிராக இறுதி போராட்டத்தை நடத்தும் நோக்கில் ஆயிரம் விடுதலைப்புலிகள் முல்லைத்தீவு விஸ்வமடு பிரதேசத்தில் உள்ள காட்டு பகுதி ஒன்றில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த இறுதி பேராட்டத்தை தீபனிடம் விடுதலைப்புலிகளின் தலைவர் ஒப்படைத்துள்ளதாகவும் தீபனின் தலைமையின் கீழ் இந்த பயிற்சிகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மணலாறு பிரதேசத்தின் ஊடாக முல்லைத்தீவு நகரை நோக்கி செல்லும் படையினருக்கு எதிரான தாக்குதல்களை நடத்தும் பொறுப்பு சொர்ணத்திடம் வழங்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் இருந்து முன்னேறி செல்லும் படையினரை எதிர்கொள்ளும் பொறுப்பு பானு…
-
- 1 reply
- 3k views
-
-
அம்பாறை கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் விடுதலைப்புலிகளை தேடியழிக்கும் நோக்குடன் வந்த அரச படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சிறிலங்கா அரச படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 651 views
-
-
எந்த ஆவணங்களுமின்றி வீதியில் நடந்து சென்ற நாராயணனை வெள்ளை வான் கடத்தவில்லை என்றால் அது அவரது அதிஷ்டம்: மனோ கணேசன் [சனிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2008, 09:02 பி.ப ஈழம்] [க.நித்தியா] தேசிய அடையாள அட்டை மற்றும் சிறிலங்கா காவல்துறை பதிவு பத்திரம் எதுவும் இல்லாமல் கொழும்பு வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே. நாராயணனை வெள்ளை வான் குழுவினர் கடத்தவில்லை என்றால் அதற்கு அவர் தனது குலதெய்வம் சிவபெருமானுக்கு நன்றி சொல்லவேண்டும் என்று மேல் மாகாண மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே. நாராயணன் சார்க் மாநாட்டு மண்…
-
- 4 replies
- 1.2k views
-
-
இனப்பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்ற போதும், விடுதலைப் புலிகளுக்குப் புரியும் பாசையிலேயே பதிலளிக்க வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். “ஜனாதிபதி மோதல்களை விரும்பவில்லை. எனினும், அப்பாவிப் பொதுமக்களை விடுதலைப் புலிகள் கொன்றுவருவதால், அவர்களுக்குப் புரியும் பாசையிலேயே பதிலளிக்கவேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். பேச்சுக்களை ஆரம்பிக்க நாங்கள் தொடர்ந்தும் தயாராகவே உள்ளோம். ஆனால், இரகசியமாக அந்தப் பேச்சுக்கள் இடம்பெறாது. கடந்த காலங்களில் படித்த பாடங்களுக்கமைய நாங்கள் கடுமையாக இருப்போம்” என கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் பச…
-
- 3 replies
- 2k views
-
-
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அண்மையில் மன்னார் அரிப்பு பிரதேசத்தில் தரையிறக்கப்பட்ட எம்.ஜ.17 உலங்குவானூர்தியில் சென்ற 11 இந்தியப்படையினரை அரசாங்கம் ரகசியமான முறையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த தகவலை ஊடகங்களுக்கு மறைக்க அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. வானூர்தி தரையிறக்கப்பட்டதும் அது இந்தியாவிற்கு சொந்தமான உலங்குவானூர்தி என தெரிவித்த அரசாங்கம் சில மணி நேரங்களின் பின்னர் அது இலங்கைக்கு சொந்மானது என கூறியது. திருத்தப்பணிக்காக இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மீண்டும் திரும்பி வரும் போது இந்த தொழிற்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும் அரசாங்கம் கூறியது. இதனை ஊடங்களுக்கு அரசாங்கம் மறைக்க மு…
-
- 4 replies
- 3k views
-
-
வவுனியா இரணை இலுப்பைக்குளம் பகுதியில் கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் 2 இராணுவத்தினர் பலி வீரகேசரி இணையம் 8ஃ16ஃ2008 5:24:40 Pஆ - வவுனியா இரணைஇலுப்பைக்குளம் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 2 இராணுவத்தினர் பலியாகியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. விடுமுறையில் சென்ற இராணுவத்தினர் பயணம் செய்த பஸ்வண்டி மீதே இந்த கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=5921 http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=5921 மோதலில் காயமடைந்த 16 இராணுவத்தினர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதி வீரகேசரி இணையம்…
-
- 1 reply
- 1k views
-
-
1. இலங்கை-பாகிஸ்தானிடையே சீபா உடன்படிக்கை குறித்து ஆராய்வு 2. இலங்கையுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்த சீனா இணக்கம் இலங்கையுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்த சீனா இணக்கம் ஆசிய பசுபிக் பொருளாதார உடன்படிக்கையின் கீழ் இலங்கையினுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து, அண்மையில் ஒலிம்பிக் போட்டிகளைப் பார்வையிடச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீன ஜனாதிபதியுடனும், சீன வர்த்தக அமைச்சருடனும் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். ஆசிய பசுபிக் பொருளாதார உடன்படிக்கையின் கீழ் இலங்கையின் ஏற்றுமதி வரிகளை குறைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளை தான் கவனத்தில் கொள்வதாகவும் சீன ஜனாதிபதி கு ஜிந்தாவோ தெரிவித்துள்ளார். இதேவேளை, சீனாவிலுள்ள இலங்கைத்…
-
- 1 reply
- 1.8k views
-
-
களமுனைகளில் தமது படையினருக்கு நேற்று முன்தினம் ஏற்பட்ட இழப்புக்களின் விபரங்களை சிறிலங்கா படைத்தரப்பு வெளியிட்டுள்ளது. மட்டக்களப்பு மாவடிவேம்பில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் சிறிலங்காப் படையினர் ஒருவர் ஏனைய இரண்டு படையினரை சுட்டுக்கொன்றுள்ளார். குறிப்பிட்ட படையினர் ஏறாவூர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவருகின்றனர். இதேவேளை யாழ்ப்பாணம் நாகர்கோவில் முன்னரங்க நிலைகளில் விடுதலைப்புலிகளின் எறிகணையில் சிக்கி நேற்று முன்தினம் 9.30 மணியளவில் படைத்தரப்பில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கல்விளானில் காலை 9.00 மணியளவில் பொறிவெடியில் சிக்கி சிறிலங்காப் படையினர் ஒருவர் காயமடைந்துள்ளார். மல்லாவியை அண்மித்த பகுதியில் நண்பகல் 12.15 மணிய…
-
- 0 replies
- 2.3k views
-